Jump to content

இந்தியாவில் 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியவர் ; விசாரணை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியவர் ; விசாரணை

இந்தியாவில் 84 வயது நிரம்பிய முதியவர் 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பீகார் மாநிலம் மதிபுரா மாவட்டம் ஓரை கிராமத்தை சேர்ந்த 84 வயதான முதலியவர் அஞ்சல் துறையில் வேலை செய்து ஒய்வு பெற்றவர் ஆவார். 

இவர் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் தற்போது வரை 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்.

மார்ச், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என அடுத்தடுத்து இவர் தடுப்பூசி செலுத்திகொண்டுள்ளார். 

பல முறை இவர் தனது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். 

வெவ்வேறு தருணங்களில் தனது செல்போன் எண், மனைவி, உறவினர்களின் செல்போன் எண்களை கொண்டு தடுப்பூசி செலுத்த பதிவு செய்துள்ளார்.

கடந்த டிசம்பர் 30-ம் திகதி 11-வது முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக முதியவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதியவர் 12-வது முறையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள தனது கிராமத்திற்கு அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று சென்றுள்ளார். அப்போது, அவரது ஆவணங்களை சோதித்த சுகாதாரத்துறை ஊழியர்கள் மண்டல் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியுள்ளார் என்பதை கண்டுபிடித்தனர்.

இது குறித்து சுகாதாரத்துறையினர் அவரிடம் கேட்டபோது, 

தான் ஏற்கனவே 11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாகவும், இது தனக்கு 12-வது கொரோனா தடுப்பூசி எனவும் கூறு சுகாதாரத்துறை பணியாளர்கள் அதிர்ச்சியளித்துள்ளார். மேலும், ஒவ்வொரு முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்போதும் ‘சிறப்பாக உணருகிறேன்’ என்றும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அவருக்கு தடுப்பூசி செலுத்த மறுத்த சுகாதாரப்பணியாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின்னர் 84 வயதான முதியவர் 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது உண்மைதானா? என்பது குறித்து விசாரிக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். 

முதியவர் 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது உண்மை என்பது உறுதியானால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மாநில சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

 

https://www.virakesari.lk/article/120336

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முதியவர்…. “ஓசி” என்றால், “பொலிடோலும்” குடிப்பார் போலுள்ளது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

இந்த முதியவர்…. “ஓசி” என்றால், “பொலிடோலும்” குடிப்பார் போலுள்ளது. 🤣

அவருக்கு தடுப்பூசி போதையைக் கொடுக்குது.....அதுதான் ஐயா எல்லோருடைய தடுப்பூசிகளை வாங்கி தான் போட்டுக்கொள்கிறார்.......!  😂

 

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

மேலும், ஒவ்வொரு முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்போதும் ‘சிறப்பாக உணருகிறேன்’ என்றும் கூறியுள்ளார்.

 

 

இரண்டாவது தடவையே தடுப்பூசி போடுபவரை மார்றியிருந்தால் 11 தடவை வந்திருக்க மாட்டார் 😀

nurs2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2022 at 06:16, தமிழ் சிறி said:

இந்த முதியவர்…. “ஓசி” என்றால், “பொலிடோலும்” குடிப்பார் போலுள்ளது. 🤣

பைசர் தான் வயாகிறா செய்றது எண்டு ஆரும் சொல்லியிருப்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர் சொல்லும் காரணம்!

spacer.png

 

பீகாரில் 11 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டதாக கூறியவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 1.59 லட்சமாக உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதுவரை 150 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இன்னும் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படவுள்ளது.

ஒருபக்கம் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டி வரும் நிலையில், மற்றொரு பக்கத்தில் ஒருவர் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

பீகார் மாநிலம், மாதேபுரா மாவட்டத்தில் உள்ள ஓரை கிராமத்தில் பிரம்மதேவ் மண்டல் என்பவர் வசித்து வருகிறார். இவர் போஸ்ட்மாஸ்டராக வேலைபார்த்து ஓய்வுபெற்றவர். இவர் கடந்த ஜனவரி 2ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொள்ள சென்றபோது அங்குள்ள சுகாதாரத் துறையினர் சந்தேகத்தின்பேரில் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அவர், தான் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டதாகவும், தொடர்ந்து மார்ச், மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தலா ஒரு டோஸ் எடுத்துக்கொண்டதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மேலும், செப்டம்பர் மாதம் மட்டுமே மூன்று முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். அவருடைய அடையாள அட்டைகளுடன், அவரின் நெருங்கிய உறவினர்களின் அடையாள அட்டை மற்றும் செல்போன் எண்களை வைத்து தடுப்பூசி செலுத்தி வந்துள்ளார். டிசம்பர் 30, 2021க்குள் 11 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும், 12 வது முறையாக செலுத்த முற்படும்போதுதான் சுகாதாரத் துறையினர் கண்டுபிடித்துவிட்டனர் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த செய்தி சமூகவலைதளங்களில் வைரலானது. ஒருவர் எப்படி 11 முறை தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும் என்ற அதிர்ச்சியில் இதுகுறித்து பீகார் சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, சுகாதாரத் துறையின் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது எஃப்ஆர்ஐ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு முறையும் கொரோனா தடுப்பூசி போடும்போது, மிகவும் நன்றாக உணர்ந்ததாக அவர் கூறுகிறார். தடுப்பூசி நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, தனக்கு பல பிரச்சனைகள் இருந்ததாக கூறும் அவர், குறிப்பாக முழங்கால்களில் வலி அதிகமாக இருந்ததாகவும், ஒவ்வொரு தடுப்பூசிக்குப் பிறகும், எந்தவகையான வலியையும் உணரவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இந்த தடுப்பூசியை கொண்டு வந்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார் என்று ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

பதினொரு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டது தவறு என்றாலும், அதன்மூலம் மக்களுக்கு அவர் சொல்லும் செய்தி நன்மையானதாக உள்ளது. பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்பும், தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உயிருக்கு ஆபத்து வரும் என்ற வதந்தியை நம்பி பலரும் தயக்கத்தில் உள்ளனர். ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், தன் உடம்பில் இருந்த வலி அனைத்தும் நீங்கிவிட்டதாக அவர் கூறும் செய்தி தயக்கம் காட்டும் மக்களுக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது.

 

 

https://minnambalam.com/public/2022/01/09/31/person-took-vaccination-for-11-times-in-bihar

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.