Jump to content

இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்!

spacer.png

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும்  தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரே இவ்வாறு  கையொப்பமிட்டுள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர்  குறித்த ஆவணத்தில் கையொப்பமிடவில்லை.

எனினும், வெளியிலிருந்து கொண்டு இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இன்று(வெள்ளிக்கிழமை) குறித்த ஆவணத்தில் கையொப்பமிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

https://athavannews.com/2022/1260480

 

Link to comment
Share on other sites

மோடியின் மலசலக் கூடத்து குப்பைத் தொட்டிக்குள் போகப் போகும் கடிதத்துக்கு எத்தை பேர் தான் கையொப்பம் இடுவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

மோடியின் மலசலக் கூடத்து குப்பைத் தொட்டிக்குள் போகப் போகும் கடிதத்துக்கு எத்தை பேர் தான் கையொப்பம் இடுவது?

என்ன செய்வது?

இந்தியா சொல்லுது

நாங்க செய்யிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

மோடியின் மலசலக் கூடத்து குப்பைத் தொட்டிக்குள் போகப் போகும் கடிதத்துக்கு எத்தை பேர் தான் கையொப்பம் இடுவது?

Taken for a fine ride என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு.

தமிழர்களை இப்படிதான் இந்தியா நடத்துகின்றது. இன்று நேற்று அல்ல, 1977ல் ஜேஆர், சிறப்பான, திறந்த பொருளாதார கொள்கையுடன் ஆட்சிக்கு வந்தபின்னர், இனவெறி, கண்ணை மறைத்ததால், இந்தியாவுக்கு ஒரு சந்தர்ப்பத்தினை கொடுத்து, தமிழர்களை மிக நீண்டகாலமாகவே Taken for a fine ride செய்து கொண்டு இருக்கிறது.

சம்பந்தனுக்கும், மாவைக்கும், செல்வத்துக்கும் மேலும் பல அரசியவாதிகளுக்கும், சென்னையில் குடும்பமும், வியாபார தொடர்புகளும் உள்ளது.

ஆகவே, அவர்களும், தமக்கு வாக்களித்த தமிழர்களை இழுத்துக் கொண்டு இந்தியா என்று ஓடிப் போய் நிக்கிறார்கள். இவர்களுக்கு பட்டறிவு இன்னும் வரவில்லை. பேரம் பேசும் திறனும் இல்லை.

நல்ல வேலையாக, இவர்களுக்கு முழு எம்பிக்கள் ஆசனமும் கிடைக்கவில்லை.

இந்தியாவை நம்புவதிலும் பார்க்க, சீனன் நம்பக்கூடியவன் என்பதை, இந்தியாவே உறுதி செய்கிறது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இந்தியாவை நம்புவதிலும் பார்க்க, சீனன் நம்பக்கூடியவன் என்பதை, இந்தியாவே உறுதி செய்கிறது.
 

அதை இந்தியா உணரும்வரை, உறுதி செய்யும் வரை பின்தொடர்ந்து தூக்கியெறிந்து விட்டு இந்தியாவை, தொடருவோம் சீனனை. தானாகவே இலங்கையை விட்டு விலகி  தன்னைக் காப்பாற்ற  இந்தியா தவிக்கும் காலம் சூழுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடிக்கான ஆவணம் செவ்வாயன்று இந்திய உயர்ஸ்தானிகரிடத்தில் கையளிப்பு

(ஆர்.ராம்)

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆவணம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடத்தில் கையளிக்கப்படவுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் - பிரதமர் சந்திப்பு - Newsfirst

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ரொலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என் சிறீகாந்தா ஆகியோரும் ரெலோ ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் ஆகியோரும் பங்கேற்பார்கள் என்று நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ஆவணம், டிசம்பர் மாதம் 29ஆம் திகதியிடப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கையொப்பமிட்டிருந்தார். அனைத்தொடர்ந்து ஏனைய தலைவர்களும் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

https://www.virakesari.lk/article/120476

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.