Jump to content

தலைநகரில் போராட்டத்துக்கு தயாராகும் வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள்!

Recommended Posts

தலைநகரில் போராட்டத்துக்கு தயாராகும் வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள்!

இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக தலைநகர் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கிறோம் என வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள் கூட்டாக  அறிவித்துள்ளன.
20220108_125444-720x375.jpg

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்துடன் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்துடன் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டது. இது தொடர்பில் இரண்டு மீனவ அமைப்புகளும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “அத்துமீறிய இந்திய இழுவைப் படகுகளின் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் காரணமாக வடபகுதி மீனவர்களின் கடல் வளமும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

2500 இந்திய இழுவைப் படகுகளை தடை செய்து இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் தலைநகர் கொழும்பில் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம். அத்துடன் அகில இலங்கை ரீதியாக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பாகவும் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எட்டப்படும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியவாறு நாம் போராட்டத்தை கைவிட்டிருந்தோம். ஆனால் இந்திய மீனவர்கள் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. வடமராட்சிப் பகுதியில் மீண்டும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் இடம்பெற்றுள்ளது.இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்றனர்.

https://athavannews.com/2022/1260773

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சீனர்கள்.. சிங்களவர்கள் தெற்கில் இருந்து வந்து அள்ளிட்டுப் போகலாம்... என்றீங்கள். சிங்களவனட்ட வாங்கிக் கட்டியும் திருந்தேல்லை என்றால்...?! உங்களை கடவுள் தான் காக்கனும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nedukkalapoovan said:

அப்ப சீனர்கள்.. சிங்களவர்கள் தெற்கில் இருந்து வந்து அள்ளிட்டுப் போகலாம்... என்றீங்கள். சிங்களவனட்ட வாங்கிக் கட்டியும் திருந்தேல்லை என்றால்...?! உங்களை கடவுள் தான் காக்கனும். 

இது… டக்கியின் ஏற்பாட்டில் நடக்கும் போராட்டம். 🤣 🐕‍🦺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nedukkalapoovan said:

அப்ப சீனர்கள்.. சிங்களவர்கள் தெற்கில் இருந்து வந்து அள்ளிட்டுப் போகலாம்... என்றீங்கள். சிங்களவனட்ட வாங்கிக் கட்டியும் திருந்தேல்லை என்றால்...?! உங்களை கடவுள் தான் காக்கனும். 

போராட்டம் வேண்டாம் என்கிறீர்களா அல்லது போராட்டத்திற்கான தேவை / காரணங்கள் இல்லை என்கிறீர்களா? 

இந்திய மீனவர்கள் இலங்கை, குறிப்பாக வட கடலில் மேற்கொள்ளும் அழித்தொழிப்பை எவ்வாறு தடுப்பது?  இதற்கு உங்கள் ஆலோசனை என்ன ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தென்னிலங்கையில் விரைவில் விவாசாயிகள் போராட்டம் வெடிக்கும் போலபடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

 தென்னிலங்கையில் விரைவில் விவாசாயிகள் போராட்டம் வெடிக்கும் போலபடுகிறது.

அந்தப் போராட்டத்துடன்…. இரண்டு துப்பாக்கி சூடு நடக்க, 
மகிந்த சகோதரர்களின் ஆட்சிக்கு, முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்று…
பட்சி சொல்லுது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

அந்தப் போராட்டத்துடன்…. இரண்டு துப்பாக்கி சூடு நடக்க, 
மகிந்த சகோதரர்களின் ஆட்சிக்கு, முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்று…
பட்சி சொல்லுது. 🤣

அதுவே இலங்கையில் (பெயரளவு) ஜனநாயகத்துக்கான முற்றுபுள்ளியாகவும் இருக்க கூடும்.

பிக்குகள், சீன ஆதரவுடன் பர்மா போன்ற ஒரு ஒரு இராணுவ ஆட்சி நோக்கி நாடு நகர்வதாக எனக்குப்படுகிறது.

அப்படி நடந்தால் இந்தியா, மேற்கின் பிடி முற்று முழுதாக இலங்கையில் அற்று விடும்.

அப்படி ஒரு ஆட்சி 10 வருடம் நீடித்தாலே இலங்கையில் தமிழ் பெரும்பான்மை மாவட்டம் என ஒன்று கூட இராது.

Be careful what you wish for, lest it come true. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

பிக்குகள், சீன ஆதரவுடன் பர்மா போன்ற ஒரு ஒரு இராணுவ ஆட்சி நோக்கி நாடு நகர்வதாக எனக்குப்படுகிறது.

மகிந்தா, கோத்தாவை தூக்கி ஜனாதிபதி கதிரையில் வைத்ததும் அவர் ஞான சேரரை தூக்கி வைத்து கொண்டாடுவதும், அந்த தேரருக்கும், உலகப் புகழ் பர்மா கில்லர் மொட்டயருக்கும் உள்ள தொடர்பும், இருநாடுகளுக்கிடையே, சீனாவின் தொடர்பும் நீங்கள் சொல்வது தான் நடக்கப்போகிறது என கட்டியம் கூறி நிக்கிறது.

நான், முன்னரே சொல்லவிட்டேன்.... இந்த டெல்லி கோமாளிகளும், டெல்லிக்கு 13+ என்று காவடி தூக்கும் கோமாளிகளும் ஒன்றுமே உருப்படியாக செய்யப்போவதில்லை.

கையெழுத்து போட இருந்த இஸ்லாமிய கட்சிகளுக்கு பயமுறுத்தல்கள்வந்ததாக சொல்கிறார்கள். அதனாலேயே தவிர்த்தர்களாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

போராட்டம் வேண்டாம் என்கிறீர்களா அல்லது போராட்டத்திற்கான தேவை / காரணங்கள் இல்லை என்கிறீர்களா? 

இந்திய மீனவர்கள் இலங்கை, குறிப்பாக வட கடலில் மேற்கொள்ளும் அழித்தொழிப்பை எவ்வாறு தடுப்பது?  இதற்கு உங்கள் ஆலோசனை என்ன ? 

35 வருட கால போராட்ட காலத்தில் இல்லாத பிரச்சனை கடந்த 10 வருடமா வருகுது.. குறிப்பா கச்சதீவில் இருந்து சீனனைக் கிளப்பினதும் வருகுது..??!

அங்கால கரையில் இருப்பவன் தமிழன். மருந்து தொடங்கி அகதி வரைக்கும் சிங்களவன் தமிழை அடித்த போது..அக்கரைக்கும் இக்கரைக்கும் காவித் திரிந்தவன்.. உயிரைப் பணயம் வைத்து.

1987 இல் நடந்ததை மறந்திட்டினம் பலர். ஒப்பரேசன் லிபரேசனோடு தமிழர் வாழ்வே முடியுது என்ற தருணத்தில்.. இதே தமிழக மீனவர்கள் தான் செஞ்சிலுவையோடு பொருள் கொண்டு ஓடிவந்தார்கள்.. அப்பவும் இப்ப கூடி இருக்கும் இந்தச் சிங்களவன் தமிழனுக்காக ஒரு துளி கண்ணீரும் சிந்தவில்லை.

ஆனால்.. இன்று அதே தமிழக மீனவனை சிறைப்பிடிச்சு.. வளத்தைச் சுரண்டுறான் என்று வதைப்பதில் சந்தோசம்.. காண்கிறது.. கொலைகாரனுக்கு வாக்குப் போட்ட கூட்டம்.

தமிழக மீனவர்கள் மட்டுமல்ல.. டைனமைட் வெடி வைச்சு மீன்பிடிப்பதில் இருந்து எல்லா மீனவர்களும் இலாபத்தை நோக்கைக் கொண்டு கடல் வளத்தை அழித்தே வருகின்றனர். இது ஒரு பொதுப் பிரச்சனை. இதில் எதற்கு சிங்களவன்.

தமிழகத்தில் இருப்பது தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி. ஈழத்தாயகத்தில் இருப்பவன் தமிழன். நேரடியாக தமிழக மீனவர்களும்.. அரசும்.. ஈழத்தமிழர் பிரதிநிதிகளும்.. முக்கிய தமிழ் கட்சிகளும் கூடிப் பேசி ஒரு பொது உடன்படிக்கைக்கு வருவதற்கு எந்த தமிழர் தரப்பும் தடையில்லை.

இதனை தடுப்பது யார்..? சிங்கள அரசும் அதன் கூலித் தமிழர்களும். ஹிந்திய அரசும் அதன் கூலிகளும்..?!

இவர்களின் பொது நோக்கம் என்ன.. பகை முடிவது தான். இரண்டு தமிழர் நிலத்தையும் மனங்களால் துண்டாடுவது தான்..?! அதற்கு எதற்கு நீங்கள் வக்காளத்து வாங்குகிறீர்கள்..???!

வெளிநாடுகளில் தாயகத் தமிழன் பிடித்த மீனையோ தமிழகத் தமிழன் பிடிக்கிற மீனையோ வாங்கிறதில்லை. எங்களை அழிக்க துணை போன கேரளக்காரனின் மீனை வாங்கி அவனை பொருண்மிய ரீதியில் பலப்படுத்துகிற நீங்கள் எல்லாம்.. சிங்களவனுக்கு பரிந்து பேசிக் கொண்டு தமிழக மீனவனுக்கு பகை காட்டுவது வேடிக்கையிலும் வேடிக்கை.

நீங்கள் உண்மையில் தமிழர்கள் தானா..??! தமிழர் நலனில் அக்கறையுள்ளவர்கள் தானா..??!

கூட வாழ்ந்த தமிழனை கொழுத்தி தாரில் போட்டவனோடு கடலில் வைச்சு வெட்டிப் போட்டவனோடு குந்தி இருந்து.. கூட மருந்து தந்தவனையும் கடல் தாண்டி பத்திரமாக கரை சேர்ந்தவனையும் தண்டிக்க நிற்கும்.. ஈனத்தமிழனாக இருப்பதற்கு நீங்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, nedukkalapoovan said:

எல்லாவற்றிற்கும் நெடுக்காலதான் போகவேண்டும் என்றில்லை. சில சந்தர்ப்பங்களில் குறுக்காலயும் போகலாம்  பிறதர் 😚

மூக்கை நேராகத் தொடுங்கள், ஏன் தலையைச் சுற்றுவான். 

மீனவர்களின் அடிப்படைப்  பிரச்சனையைத் தீர்ப்பதற்கு  உங்கள் முன்மொழிவுகளை கூறுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kapithan said:

மீனவர்களின் அடிப்படைப்  பிரச்சனையைத் தீர்ப்பதற்கு  உங்கள் முன்மொழிவுகளை கூறுங்கள் .

இரு தரப்பு மீனவர்களும்  அவர்களின் நம்பிக்கைக்குரிய அரச பிரதிநிதிகளும் கட்சிப் பிரதிநிதிகளும் கூடி இருந்து பேச வேண்டும்.

வளப் பயன்பாட்டில்.. இயற்கைக்கும் மீன்வளத்துக்கும் பாதிப்பில்லாத மீன்பிடி முறையை தவிர மற்ற எல்லா முறைக்கும் எல்லாத் தரப்பிடமும் தடை வாங்க வேண்டும். அதற்கு ஒப்புதல் வாங்க வேண்டும்.

போதைப்பொருள் கடத்தல்.. மற்றும் வேறு சட்டவிரோத செயற்பாடுகள் தடுப்பது தவிர மீனவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையை பேசித் தீர்க்க ஒரு பொது ஒன்றியமும் உடனடித் தொடர்பாடல்களுக்கான வழிமுறைகளும் அமைக்கப்படுதல் வேண்டும்.

தமிழக மீனவர்களுக்கு ஈழ எல்லைக்குள் குறித்த எல்லை வரை அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீன்பிடிக்க உத்தரவாதம் அளிப்பது போல்.. ஈழ மீனவர்களுக்கும் தமிழக கடற்பிரதேசத்தில் குறிப்பிட்ட காலம் குறித்த அளவுக்கு மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்.

தமிழக - ஈழ மீனவர்கள் வருடத்திற்கு குறைந்தது இரண்டு தடவைகளாவது நேரடிச் சந்திப்பு நிகழ்த்தி.. தமக்கிடையே நிலவும் கருத்து முரண்பாடுகள்.. ஒற்றுமைகளை சிநேகித பூர்வமாகப் பேசி கலந்துரையாடுவதோடு தேவையான தீர்க்கமான முடிவுகளை எடுக்கவும் கட்டுப்படவும் வேண்டும்.

அநாவசியமாக வெளியார் மற்றும் அரச தலையீடுகளுக்கு இடமளிக்கக் கூடாது.

எல்லா நடவடிக்கைகளும் சட்ட வலுவுடையதாக்கப்படுதல் வேண்டும்.

சர்வதேச மீன்பிடி அமைப்புக்களுடன் நேரடித் தொடர்பும் கலந்தாலோசனைகளும் செய்யப்படுவதோடு.. சர்வதேச அளவில் மீன்வளப் பாதுகாப்பில் நடைமுறைப்படுத்தடும் நல்ல திட்டங்களை செயற்படுத்துவதோடு மீன்வள அதிகரிப்புக்கு இரு தரப்பும் உறுதியாக இணங்கிச் செயற்படுதல் அவசியம் என்ற பொதுப் புரிதல் உருவாக்கப்பட வேண்டும்.

மீனவர்களின் பிரச்சனையை சமூகப் பிரச்சனை தொழில்சார் பிரச்சனை என்ற வகைக்குள் வைப்பதோடு அரசியல் மற்றும் நாடுகளுக்கிடையேயான அனுகூலங்களுக்கு பாவிக்கப்படும் பிரச்சனை ஆக்குவதை இரு தரப்பும் முழுமையாக எதிர்க்க வேண்டும்.

தமிழக மற்றும் ஈழ மீனவர்களுக்கு பொருண்மிய நெருக்கடிகள் தோன்றும் போது வங்கிசார் உதவிகள் வழங்கப்படுவதை ஈழ மற்றும் தமிழக வங்கிகள் இரு தரப்புக்கும் வேறுபாடு காட்டாமல்.. உதவியின் தேவையின் உண்மைத் தன்மை அடிப்படையில் சாத்தியமான உதவிகளைப் புரிதல் வேண்டும்.

கால நிலைமாற்றம்.. மற்றும் கடல் கோள் பாதிப்புக்குள் நிகழும் போது இரு தரப்புக்கும் உதவக் கூடிய பொது வழிமுறைகளும் எச்சரிக்கைகளும் முன்கூட்டி வழங்கப்படுதல் அவசியமாகும். 

எத்தரப்பு மீனவர்கள் என்ன காரணத்துக்காக சம்பந்தப்பட்ட நாட்டு கடற்படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டலோ அவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டாலோ.. மீனவர்கள் சர்வதேச நீதிமன்ற நடைமுறைகளின் கீழ் முறைப்பாடுகளை செய்யவும் நீதி கோரவும் இடமளிக்க வேண்டும். 

மீன்பிடித் துறை அபிவிருத்தி.. சந்தைப்படுத்தல் இவற்றில் கூட்டுணைவும் ஏற்றுமதியில் சம வளப் பயன்படுத்தலும் இருப்பதை உறுதி செய்வதோடு சர்வதேசச் சந்தைக்கு தமது மீன்பிடிகளை ஏற்றுமதி செய்ய இரு தரப்பு மீனவர்களும் ஒருங்கிணைந்து செயற்படுவதோடு பரஸ்பரம் தகவல்களை தொடர்புகளை ஒப்பந்தங்களை விரிவாக்கிக் கொள்வது அவசியமாகும். 

வருடாந்தம்.. இரு தரப்பு மீனவர்களும் ஒன்றுகூடி மீனவ விழாக்களை ஒழுங்குபடுத்தி தமிழகத்திலும் ஈழத்தாயகத்திலும் நடாத்துவதோடு தமக்கிடையேயான துருவமயமாக்கலை முற்றாகக் களைய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

மகிந்தா, கோத்தாவை தூக்கி ஜனாதிபதி கதிரையில் வைத்ததும் அவர் ஞான சேரரை தூக்கி வைத்து கொண்டாடுவதும், அந்த தேரருக்கும், உலகப் புகழ் பர்மா கில்லர் மொட்டயருக்கும் உள்ள தொடர்பும், இருநாடுகளுக்கிடையே, சீனாவின் தொடர்பும் நீங்கள் சொல்வது தான் நடக்கப்போகிறது என கட்டியம் கூறி நிக்கிறது.

நான், முன்னரே சொல்லவிட்டேன்.... இந்த டெல்லி கோமாளிகளும், டெல்லிக்கு 13+ என்று காவடி தூக்கும் கோமாளிகளும் ஒன்றுமே உருப்படியாக செய்யப்போவதில்லை.

கையெழுத்து போட இருந்த இஸ்லாமிய கட்சிகளுக்கு பயமுறுத்தல்கள்வந்ததாக சொல்கிறார்கள். அதனாலேயே தவிர்த்தர்களாம். 

நான் வித்தியாசமாக யோசிக்க்கிறேன். இதில் ராஜபக்சர்களும் பகடை காய்களே.

ராஜபக்சகள், சந்திரிகா, ரணில், மைத்திரி, சஜித், பொன்சேக்கா, என சகல அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கையீனம், வெறுப்பு ஏற்படும் வகையில் நாட்டை முற்று முழுதாக போட்டடிக்க வைப்பது.

அதன் பின் ராணுவத்தில் இருந்து ஒரு “மீட்பர்” சதி புரட்சி மூலம் ஆட்சிக்கு வருவார்.

ஜனநாயகத்தில் நம்பிக்கை இழந்து, அழிவின் விழிம்பில் நிற்கும் மக்கள் அவருக்கு ஆதரவு கொடுப்பர். பிக்குகள், சீனாவின் கைப்பொம்மையாக அவர் ஒரு ஆட்சியை நடத்தக்கூடும்.

வெறும் எதிர்வுகூறல் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பிக்குகள், சீன ஆதரவுடன் பர்மா போன்ற ஒரு ஒரு இராணுவ ஆட்சி நோக்கி நாடு நகர்வதாக எனக்குப்படுகிறது.

ஞானசார தேரர் ஏற்கெனவே ஆட்சியை இராணுவத்திடம் ஒப்படைப்பது சிறந்தது, இது தனிப்பட்ட கருத்து எனக்கூறி வெள்ளோட்டம் விட்டுள்ளார். அவரின் இந்தக்கருத்துக்கு நாட்டில் எந்த உணர்வோ,  எதிர்ப்போ  காட்டப்படவில்லை. ஒருவேளை  யாரும் கவனிக்கவில்லையா? அல்லது பயந்துவிட்டார்களா? சம்மதிக்கிறார்களா? என்பது தெரியவில்லை. இனிமேல் கோத்தாவின் திட்டங்களை நாட்டு மக்களுக்கு இந்த தேரர் தான் வெளிப்படுத்துவார் போல் தெரிகிறது. எதிர்காலத்தில்  இராணுவமும், பிக்குகளும் பெரும் பங்காற்றுவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, satan said:

யாரும் கவனிக்கவில்லையா? அல்லது பயந்துவிட்டார்களா? சம்மதிக்கிறார்களா?

எல்லாரும் கவனிக்கிறார்கள். 

அதில் ஒரு பகுதி பயப்படுகிறது. மிகுதி சம்மதிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

இரு தரப்பு மீனவர்களும்  அவர்களின் நம்பிக்கைக்குரிய அரச பிரதிநிதிகளும் கட்சிப் பிரதிநிதிகளும் கூடி இருந்து பேச வேண்டும்.

வளப் பயன்பாட்டில்.. இயற்கைக்கும் மீன்வளத்துக்கும் பாதிப்பில்லாத மீன்பிடி முறையை தவிர மற்ற எல்லா முறைக்கும் எல்லாத் தரப்பிடமும் தடை வாங்க வேண்டும். அதற்கு ஒப்புதல் வாங்க வேண்டும்.

போதைப்பொருள் கடத்தல்.. மற்றும் வேறு சட்டவிரோத செயற்பாடுகள் தடுப்பது தவிர மீனவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையை பேசித் தீர்க்க ஒரு பொது ஒன்றியமும் உடனடித் தொடர்பாடல்களுக்கான வழிமுறைகளும் அமைக்கப்படுதல் வேண்டும்.

தமிழக மீனவர்களுக்கு ஈழ எல்லைக்குள் குறித்த எல்லை வரை அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீன்பிடிக்க உத்தரவாதம் அளிப்பது போல்.. ஈழ மீனவர்களுக்கும் தமிழக கடற்பிரதேசத்தில் குறிப்பிட்ட காலம் குறித்த அளவுக்கு மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்.

தமிழக - ஈழ மீனவர்கள் வருடத்திற்கு குறைந்தது இரண்டு தடவைகளாவது நேரடிச் சந்திப்பு நிகழ்த்தி.. தமக்கிடையே நிலவும் கருத்து முரண்பாடுகள்.. ஒற்றுமைகளை சிநேகித பூர்வமாகப் பேசி கலந்துரையாடுவதோடு தேவையான தீர்க்கமான முடிவுகளை எடுக்கவும் கட்டுப்படவும் வேண்டும்.

அநாவசியமாக வெளியார் மற்றும் அரச தலையீடுகளுக்கு இடமளிக்கக் கூடாது.

எல்லா நடவடிக்கைகளும் சட்ட வலுவுடையதாக்கப்படுதல் வேண்டும்.

சர்வதேச மீன்பிடி அமைப்புக்களுடன் நேரடித் தொடர்பும் கலந்தாலோசனைகளும் செய்யப்படுவதோடு.. சர்வதேச அளவில் மீன்வளப் பாதுகாப்பில் நடைமுறைப்படுத்தடும் நல்ல திட்டங்களை செயற்படுத்துவதோடு மீன்வள அதிகரிப்புக்கு இரு தரப்பும் உறுதியாக இணங்கிச் செயற்படுதல் அவசியம் என்ற பொதுப் புரிதல் உருவாக்கப்பட வேண்டும்.

மீனவர்களின் பிரச்சனையை சமூகப் பிரச்சனை தொழில்சார் பிரச்சனை என்ற வகைக்குள் வைப்பதோடு அரசியல் மற்றும் நாடுகளுக்கிடையேயான அனுகூலங்களுக்கு பாவிக்கப்படும் பிரச்சனை ஆக்குவதை இரு தரப்பும் முழுமையாக எதிர்க்க வேண்டும்.

தமிழக மற்றும் ஈழ மீனவர்களுக்கு பொருண்மிய நெருக்கடிகள் தோன்றும் போது வங்கிசார் உதவிகள் வழங்கப்படுவதை ஈழ மற்றும் தமிழக வங்கிகள் இரு தரப்புக்கும் வேறுபாடு காட்டாமல்.. உதவியின் தேவையின் உண்மைத் தன்மை அடிப்படையில் சாத்தியமான உதவிகளைப் புரிதல் வேண்டும்.

கால நிலைமாற்றம்.. மற்றும் கடல் கோள் பாதிப்புக்குள் நிகழும் போது இரு தரப்புக்கும் உதவக் கூடிய பொது வழிமுறைகளும் எச்சரிக்கைகளும் முன்கூட்டி வழங்கப்படுதல் அவசியமாகும். 

எத்தரப்பு மீனவர்கள் என்ன காரணத்துக்காக சம்பந்தப்பட்ட நாட்டு கடற்படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டலோ அவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டாலோ.. மீனவர்கள் சர்வதேச நீதிமன்ற நடைமுறைகளின் கீழ் முறைப்பாடுகளை செய்யவும் நீதி கோரவும் இடமளிக்க வேண்டும். 

மீன்பிடித் துறை அபிவிருத்தி.. சந்தைப்படுத்தல் இவற்றில் கூட்டுணைவும் ஏற்றுமதியில் சம வளப் பயன்படுத்தலும் இருப்பதை உறுதி செய்வதோடு சர்வதேசச் சந்தைக்கு தமது மீன்பிடிகளை ஏற்றுமதி செய்ய இரு தரப்பு மீனவர்களும் ஒருங்கிணைந்து செயற்படுவதோடு பரஸ்பரம் தகவல்களை தொடர்புகளை ஒப்பந்தங்களை விரிவாக்கிக் கொள்வது அவசியமாகும். 

வருடாந்தம்.. இரு தரப்பு மீனவர்களும் ஒன்றுகூடி மீனவ விழாக்களை ஒழுங்குபடுத்தி தமிழகத்திலும் ஈழத்தாயகத்திலும் நடாத்துவதோடு தமக்கிடையேயான துருவமயமாக்கலை முற்றாகக் களைய வேண்டும்.

நெடுக்ஸ் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்ட சனநாயகவாதி என்கிறீர்கள்.

🤪🤣🤣🤣🤣

ஏம்பா நெடுக்ஸ் இவ்வளவு நாளும் எங்கே ஐயா இருந்தீர்கள்? 🤣🤣

எல்லாவற்றிற்கும் முதலில் நிஜ உலகிற்கு வாருங்கள்…. உங்களுக்கு புண்ணியமாகப்  போகும். 

🙏🏼

2 hours ago, goshan_che said:

நான் வித்தியாசமாக யோசிக்க்கிறேன். இதில் ராஜபக்சர்களும் பகடை காய்களே.

ராஜபக்சகள், சந்திரிகா, ரணில், மைத்திரி, சஜித், பொன்சேக்கா, என சகல அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கையீனம், வெறுப்பு ஏற்படும் வகையில் நாட்டை முற்று முழுதாக போட்டடிக்க வைப்பது.

அதன் பின் ராணுவத்தில் இருந்து ஒரு “மீட்பர்” சதி புரட்சி மூலம் ஆட்சிக்கு வருவார்.

ஜனநாயகத்தில் நம்பிக்கை இழந்து, அழிவின் விழிம்பில் நிற்கும் மக்கள் அவருக்கு ஆதரவு கொடுப்பர். பிக்குகள், சீனாவின் கைப்பொம்மையாக அவர் ஒரு ஆட்சியை நடத்தக்கூடும்.

வெறும் எதிர்வுகூறல் மட்டுமே.

நீங்கள் கூறுவதில் பாதி உண்மை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.