Jump to content

மதிப்புக்குரிய கடற்தொழில் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு! 


Recommended Posts

மதிப்புக்குரிய கடற்தொழில் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு! 

நாடு பூராவும் தாங்கள் செயலாற்றிவரும் கடற்தொழில் அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கையின் வரலாற்றில் எக்காலமும் இல்லாத மிகப் பாரிய திட்டங்களாகும். 

இலங்கைத் தீவின் கடல்சார் பொருளாதார வருவாய்கள் மிகப்பாரியளவு இருந்தபோதும் கடந்தகாலங்களில் இவற்றை நாம் சரியாக அறுவடை செய்யவில்லை. இப்போ தாங்கள் அதிகாரத்துக்கு வந்தபின் புதிய பண்ணைமுறைத் திட்டங்களை அறிமுகப் படுத்தியும், உருவாக்கியும் வருகிறீர்கள். 

இயற்கைவள கடற்தொழில் முறைகள் இருந்தாலும், பண்ணைமுறைகளையும் உலக நாடுகள் நடைமுறைப் படுத்தித்தான் வருகின்றன. 
நாங்கள் இப்போதுதான் பண்ணைமுறை அபிவிருத்தியைக் கையில் எடுத்திருக்கின்றோம். நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு இவை மிகவும் தேவைப்பாடனதுமாகும்.  

இதில் எனக்கு ஏற்படும் விசனம் என்னவெனில், 
இந்தப் பண்ணைமுறைத் திட்டங்களை நாம் சரியான, தோதான இடங்களில் அமைக்க வேண்டும் என்பதுதான். 
உதாரணமாக வடக்கில் அட்டைப் பண்ணைகளை அமைக்கும் இடங்கள் சரியாகத் தேர்வு செய்யப் பட வேண்டும். 
ஏனெனில் வடக்கிலுள்ள கடல் நிலப்பரப்பானது பல ஆயிரம் களக்கடல் மீனவர்களின் ஆதாரங்களாகும். 
இந்தக் களக்கடலை நம்பித்தான் பல்லாயிரம் கரையோரக் குடும்பங்கள் வாழ்கின்றன. 

உதாரணத்துக்கு, 
எனது கிராமத்தை மட்டும் நான் இங்கே தரவுகளோடு முன் வைக்க நினைக்கின்றேன். 
மெலிஞ்சிமுனைக் கிராமத்தில் அட்டைவளர்ப்பு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு தேர்வு செய்யப் பட்டுள்ள களக்கடற் பரப்பானது முற்றிலும் தவறானது. 

பன்நெடுங்காலமாக இந்தப் "புறவாய்" என்று சொல்லப் படுகின்ற களக்கடலை நம்பித்தான் துறையூர், சுருவில், மெலிஞ்சிமுனை, ஊறுண்டி, பருத்தியடைப்பு ஆகிய கிராமங்களின் மீனவர்கள் வாழ்கிறார்கள். 
அதாவது நரையாம்பிட்டியிலிருந்து கிழக்காக வேலணை-புங்குடுதீவு வீதி வரை உள்ள பிரண்டையாற்றுச் சரிவு, மற்றும் நரையாம்பிட்டியிலிருந்து தெற்காக பல்லதீவு வரையுமுள்ள களக்கடல்கள். 

இந்த இடங்கள் தீவகக் குடாக்கடலின் உயிரினங்கள் மேய்ச்சலுக்காகவும், இனவிருத்திக்காகவும் விளங்கும் இடங்களாகும். 
இத்தகைய இயற்கை வளம் மிக்க சிறப்பான இடங்களை அடைத்து நாம் அட்டைப் பண்ணைகள் அமைப்போமானால் மேலே சொல்லப்பட்ட அத்தனை இயற்கை அம்சங்களும் தடைப்பட்டு, அற்றுப் போய்விடும். 

இந்த வளங்களை மட்டுமே நம்பியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் பட்டினிச் சாவுக்குள் தள்ளப் படுவார்கள். 
மேற்படி அட்டைப் பண்ணை அமைப்பதற்கான மாற்றுத் திட்டங்களும் எம்மிடம் இல்லாமலில்லை. இருக்கிறது. 
கடந்த காலங்களில் தாணையமுறைத் தொழில், வாடிமுறை மீன்பிடி என தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கின்றன. 
குறிப்பாக, மெலிஞ்சிமுனைத் தொழிலாளர்கள் கடலட்டைத் தொழிலுக்காக கல்முனை, கவுதாரிமுனை, வலைப்பாடு, பள்ளிக்குடா, நாச்சிக்குடா, தேவன்பிட்டி, மண்டைக்கல்லாறு, குமுழமுனை, அரிப்புத்துறை, சிலாவத்துறை, பளுக்காத்துறை என பருவகாலத் தாணையங்கள் அமைத்துத் தொழில் செய்தவர்கள்தான். 

மேற்படி அட்டைப் பண்ணைகளை பாலைதீவு, கற்கடதீவு போன்ற ஆழ்கடலுக்கு நகர்த்துங்கள். அட்டையின் வளர்ச்சியும், நிறையும், தரமும்கூட இந்த இடங்களில் பண்ணைகள் அமைப்பதால் மிகவும் அதிகமானதாகவும் இருக்கும். 
மெலிஞ்சிமுனைக் களக்கடலில் வளர்த்தெடுக்கப்படும் அதே அட்டைகள் மேற்சொல்லப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்வோமானால் வருவாய் மூன்று மடங்காக ஆகுவதற்கான முழுச் சாத்தியங்களும் உண்டு. 

ஏனெனில், கடலட்டையின் உணவு மண்தான். மெலிஞ்சிமுனைக் களக்கடலில் காணப்படுவது சதுப்பு நிலமும், கறுப்புச் சேறுமாகும். 
அதேவேளை, பாலைதீவு, கற்கடதீவு நிலப்பரப்பானது பெருமணலைக் கொண்டவையாகும். எப்போதும் பெருமணற்பரப்பில் காணப்படும் அட்டைகள் வைரமானதும், நிறையானதும், முதலாம் (SFO)தரமானதுமாகும். 

எனவே எனது மதிப்புக்குரி தோழரே, 
எமது மெலிஞ்சிமுனைக் கிராமத்தில் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளை ஆழ்கடல் நோக்கி நகர்த்துங்கள். 
இந்தக் குடாக்கடல் அட்டைப் பண்ணைகள் அமைப்பதற்கு முற்றிலும் தோதானதல்ல. 
20தனிநபர்கள் சம்பாதிப்பதற்காக ஆயிரக்கணக்கான குடும்பங்களைப் பட்டினிச் சாவுக்குள் தள்ள முடியாது. 

தோழமையோடு இதனைப் புரிந்து கொண்டு, தகுந்த நடவடிக்கையை மேற்கொள்வீர்களென நம்புகின்றேன். 

என்றும் நாம் மக்களுக்கே! 
தோழமையுடன் தமயந்தி (குட்டி)

https://www.facebook.com/1319608745/posts/10221485697914732/?d=n

Link to comment
Share on other sites

தமயந்தி (குட்டி) அவர்கள் அத்தியடி குத்தியனை வரிக்கு வரி  தோழர் என அழைக்கின்றார், இவர் என்ன முன்னாள் ஈபீஆர்எல் உறுப்பினரா?.
டக்ளஸ் தேவானந்தா பற்றி தெரியாமல் கதைக்கின்றாரா அல்லது தெரிந்தும் அவருக்கு முட்டு கொடுக்கின்றாரா?. 

Link to comment
Share on other sites

47 minutes ago, zuma said:

தமயந்தி (குட்டி) அவர்கள் அத்தியடி குத்தியனை வரிக்கு வரி  தோழர் என அழைக்கின்றார், இவர் என்ன முன்னாள் ஈபீஆர்எல் உறுப்பினரா?.
டக்ளஸ் தேவானந்தா பற்றி தெரியாமல் கதைக்கின்றாரா அல்லது தெரிந்தும் அவருக்கு முட்டு கொடுக்கின்றாரா?. 

ஏதோ முன்னால் அமைப்பு ஒன்றின் உறுப்பினர் என்றுதான் நானும் நினைக்கிறேன்.. அவர் அவ்வளவு வாஞ்சையாக அழைப்பதிலையே தெரிகிறது.. நமக்கு எல்லாம் வாய்கூசும் அந்தாள எல்லாம் அப்படி கூப்பிட.. இவரது அமைப்பால் சுட்டு செத்துப்போன என் நண்பர்கள்தான் என் கண்முன்னே எப்போதும் வருகிறார்கள் இவரை பற்றி பேசும்போதெல்லாம்.. ஆறாவடுக்கள்.. விடயத்தில் உள்ள எம் தொழிலாளர் மக்களின் நலன்கருதி இணைத்தேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமயந்தி…  5 லட்ச ரூபாய் செலவில்… 20 நாளில், டக்ளஸ் கட்டும்….
பிரமாண்ட வெளிச்ச வீட்டைப் பற்றி, பாராட்டி எழுதாதது கவலையாக உள்ளது.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

தமயந்தி…  5 லட்ச ரூபாய் செலவில்… 20 நாளில், டக்ளஸ் கட்டும்….
பிரமாண்ட வெளிச்ச வீட்டைப் பற்றி, பாராட்டி எழுதாதது கவலையாக உள்ளது.

இது வெளிச்ச வீட்டுக்கு முதலே எழுதியதால்த் தான் தவறவிடப்பட்டுள்ளது.

7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்றும் நாம் மக்களுக்கே! 
தோழமையுடன் தமயந்தி (குட்டி)

இந்தக்குட்டி ஆணா?பெண்ணா?

ஏதோ ஓமணகுட்டி மாதிரி இருக்கே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

இது வெளிச்ச வீட்டுக்கு முதலே எழுதியதால்த் தான் தவறவிடப்பட்டுள்ளது.

இந்தக்குட்டி ஆணா?பெண்ணா?

ஏதோ ஓமணகுட்டி மாதிரி இருக்கே?

உங்களுக்கு இப்படி சந்தேகம் வரக்கூடாது என்றுதான் முன்னுக்கு தமயந்தி இருக்கு. குட்டி பெட்டிக்குள் இருக்கு.......குட்டி என்றவுடன் நீங்கள் முன்னுக்கு பார்க்க தவறி விட்டீர்கள்.......!  😁

  • Haha 2
Link to comment
Share on other sites

21 minutes ago, ஈழப்பிரியன் said:

இது வெளிச்ச வீட்டுக்கு முதலே எழுதியதால்த் தான் தவறவிடப்பட்டுள்ளது.

இந்தக்குட்டி ஆணா?பெண்ணா?

ஏதோ ஓமணகுட்டி மாதிரி இருக்கே?

271630739_10221485694434645_774275751450

Quote

ஓமணகுட்டி 

சில எழுத்துக்கள் குழம்பி உள்ளது அண்ணா  🤣

Northern fishermen switch to China-backed sea cucumber boom

ECONOMYNEXT – Over 600 fishermen in Sri Lanka’s former northern war zone have switched to sea cucumber farming, a booming trade, in the coastal belt of Jaffna and Kilinochchi where a Chinese firm started a hatchery five years ago.

China’s joint venture Gui Lan hatchery in Jaffna’s coastal village of Ariyalai was started when many northern fishermen were finding it harder to catch large fish which is blamed on outlawed bottom trawling employed by Indian vessels.

The fishermen were given one-month-old small sea cucumbers from the hatchery, which were grown in their usual fishing spots in the sea.

N Dhivakaran, president of Jaffna District Sea Cucumber Association, told EconomyNext that over 600 fishermen have now started sea cucumber farming after they saw the potential for a steady income in the new venture.

“There are investors for sea cucumber farming. Now the fisheries ministry also promotes sea cucumber farming through incentives,” said Dhivakaran.

Dhivakaran maintains a 10-acre farm near the Gui Lan hatchery in Ariyalai. He now sells between 2,000 and 3,000 sea cucumbers a month, earning between 60,000 and 90,000 rupees in revenue.

“We sell a sea cucumber once it reaches 300 grams in weight,” he said. “I started the farm with 40,000 small sea cucumbers and now the hatchery’s production is not enough. So I try to get additional sea cucumbers from other sea areas.”

A 300 gram sea cucumber is sold for around 400 rupees to local agents who export them to countries like Singapore and Hong Kong.

“We do not have the proper certification process to export them directly to China. Our sea cucumbers go through that certification process in Singapore and Hong Kong before they are exported to China. So we are losing some foreign exchange because we do not have the certification process.”

China had been long awaiting an entry into Sri Lanka’s former northern war zone to strengthen its foothold in Sri Lanka, analysts and government officials have said.

Gui Lan Hatchery was its first project in the North, a project that’s being touted as assistance to revive the livelihoods of northern fishermen. Some legislators in the North, however, have raised concern over growing Chinese presence in the former war zones where India has historically had held more sway given in strong cultural and religious ties.

But fishermen now appreciate the Chinese move mainly because of a lingering Indian bottom trawling issue that has hit their livelihoods hard.

“We have provided over 170,000 small sea cucumbers to fishermen in both Jaffna and Kilinochchi district,” Sri Ganeshan, the officer in charge at the Gui Lan hatchery told EconomyNext.

“There is a huge demand now and many people are waiting to register companies and start sea cucumber farming. The Chinese have been educating us on the technology to produce sea cucumbers and it has been helping a lot of people now.”

Sea cucumbers are considered a delicacy in the Far East, with a majority of consumers in markets like China, Hong Kong, Taiwan, Singapore, Korea, Japan and Malaysia. In China, high quality specimens can occasionally fetch over 3,000 US dollars per kilogram after being cooked.

Demand for sea cucumber in the international market is growing even though it is only now being popularized among the Sri Lankan community. The price of one kilogram of sea cucumber in the international market garners a value of Rs 20,000 to 30,000.

Gui Lan is the first hatchery in Sri Lanka to mass-produce high value sandfish sea cucumber for commercial farming. Most sandfish sea cucumbers are depleting due to overexploitation, and hatchery bred juveniles are given to farmers to grow in their respective farms.

These factors have boosted the drive to grow more sea cucumbers and people like Dhivakaran want to expand their farming because of the return.

“I am going to start breeding sea cucumbers separately from next month,” he said.

https://island.lk/northern-fishermen-switch-to-china-backed-sea-cucumber-boom/?fbclid=IwAR0-nFSLieQf0zvEgSO1Yct100qvGYacO3Z97LRjqqfQvdVKzl_C9X81UXw

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கடல்வளங்களையும், மக்களையும் 
உண்மையாக நேசிக்கும் மனிதர்களுக்கு மட்டும்! 
==================== 

இலங்கைத் தீவின் மொத்த கடற்பரப்பில் 74.3வீதமான கடற்பிரதேசங்களானது வடக்கு கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களிலேயே அமைந்துள்ளது. 
அதாவது இலங்கைத்தீவின் முக்கால்வாசிக் கடல்வளங்கள் தமிழ்ப் பிரதேசங்களில்தான் உள்ளடக்கி இருக்கின்றது. 

போருக்கு முன்னைய காலகட்டங்களில் யாழ்ப்பாணம் மன்னார் பகுதிகளிலிருந்து கருவாடாகவும், பச்சைமீனாகவும் வருடத்துக்கு பல்லாயிரம் மெற்றிக் தொன் கடலுணவுகள் தென்னிலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பதெல்லாம் நாங்கள் அறிந்ததுதான்.
தவிரவும், கடலட்டை, சங்கு, நாவடம், சிங்கி, தாமரை, அலங்கார வண்ண மீன்கள் என ஏற்றுமதி கடற்திரவியங்களாலும் பெரும் வருமானத்தை எமது கடல்வளங்களிலிருந்து அறுவடை செய்திருக்கின்றோம். 

யுத்தத்திற்குப் பின்னான காலங்களில் மேற்படி தொழில்முறைகள் முற்றாக அற்றுப்போயின. 
கால்நூற்றாண்டுக்கும் மேலாக நடந்த யுத்த நெருக்கு வாரங்கள் காரணமாகவும், இடப்பெயர்வுகள் காரணமாகவும் ஒட்டுமொத்த தமிழ்ப் பிரதேசங்களிலும் கடலுடனான நெருங்கிய உறவு எமது மக்களுக்கு இல்லாமல் ஆக்கப்பட்டது மட்டுமல்லாது, ஒரு தலைமுறையினரே கடல் பற்றிய பூரணமான அறிதல் அற்றவர்களாகவும், பாரம்பரியத் தொழில்சார் நுட்பங்கள் அறியப் படாதவர்களாகவும் ஆக்கப் பட்டுக் காணப் படுகிறார்கள்.  

இந்த நிலையில், புதிய தொழில்முறைகள் அறிமுகமாகி வந்திருக்கின்றன. இவற்றிற் பல கடல்வளங்களுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் மிகவும் பாதகமானவை என்ற புரிதலோடு அரசு தடை செய்திருந்தாலும்கூட, அவ்வகைத் தொழில்கள் நடக்கத்தான் செய்கின்றன. 

இவை எல்லாவற்றுக்கும் ஒரு மிகப் பெரிய தீர்வு ஏற்பட்டதாக, இன்றைய கடற்தொழில் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது  முன்னெடுப்பில் பண்ணைமுறை அபிவிருத்தி பொருளாதாரத் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் ஏற்படுத்தப் பட்டு வருகின்றது. 

இந்தத் திட்டங்கள் எமது மக்களுக்கும், தேசத்துக்கும் இன்று மிகவும் பெரும் நன்மைகளைத் தரவல்லன. 
மேற்படி இத்தகைய பண்ணைமுறைத் திட்டங்களை நாம் வரவேற்கின்றோம். 

கடற்தொழில் அமைச்சர் மிகவும் நிதானத்தோடும், திட்டவட்டமான முறையிலும்தான் இதனை நடைமுறைப் படுத்த விரும்புகின்றார் என்பதை அவர் தொடர்ந்து பல ஊடகங்கள் மூலியமாக முன்வைத்து வருகின்றார். 
அதில் முக்கியமாக அவர் மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுவது என்னவென்றால்;- 

"பாரம்பரிய தொழில்முறை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ, 
சுற்றுப்புறச் சூழலுக்குப் பாதகம் ஏற்படும் வகையிலோ இந்தப் பண்ணைகள் செயற்படுத்தப்பட மாட்டாது" 

ஆனால், மெலிஞ்சிமுனை போன்ற சில இடங்களில் மேற்படி திட்டத்தை பொருத்தமற்ற இடங்களில் செயற்படுத்த முடிவெடுக்கப் பட்டிருக்கின்றது. 

மீண்டும் மீண்டும் கடற்தொழில் அமைச்சர் வலியுறுத்தும் விடையங்களுக்கு நேர் எதிர்மாறாகச் செயற் படுத்தப் படுகின்றது. 
இது தெரிந்தோ தெரியாமலோ கூட நிகழ்ந்ததாக இருக்கலாம். 
அதேவேளை விபரம் தெரிய வரும்போது நாம் அதில் அக்கறையுடன் செயற்பட வேண்டியது கடமையாகும்.  

இங்கே இணைத்துள்ள வரைபடத்தை சற்று நேரம் அர்ப்பணித்துப் பாருங்கள் உறவுகளே!   
---------------------- 

எமது அன்பார்ந்த உறவுகளே! 

தொன்றுதொட்ட காலங்களிலிருந்து எமது கிராமத்து மக்கள் கடற்தொழிலையே அதிபிரதான வாழ்வாதரமாகக் கொண்டு வாழ்கிறார்கள். 
அதிலும், எமது கடல்வளப் பிரதேசமானது சூழவும் ஏழு தீவுகள் அமையப்பெற்ற மிகவும் குறுகிய கடற்பரப்பாகும். 
இந்த மிகச்சிறிய கடற்பரப்பிலேயேதான் நாங்கள் உட்பட சூழவுமுள்ள தீவக சிறுதொழில், களக்கடல் மீனவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதரமும் அடங்கியுள்ளது.

யுத்தகாலங்களுக்கு முன்னைய காலங்களில் எமது கிராமத்திலிருந்து அட்டைத் தாணையங்கள் அமைத்துத் தொழில் செய்வதற்காக வன்னிப் பிரதேசக் கரைகளுக்குச் செல்லும் பாரம்பரியம் இருந்து வந்தது. இப்போ, கரையோரப் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப் பட்டபின் அந்தத் தொழில்முறைகளும் இல்லாமல்ப் போய் விட்டன. 

சோளகக் காலங்களில் எமது கிராமத்திலிருந்து அனலைதீவில் பல தோணிகள் சென்று தங்கித் தொழில் செய்து வந்த முறைமைகளும் இருந்தன. மேற்படி சட்டத்தின் அடிப்படையில் இப்போ அந்த வழிகளும் அடைபட்டுப்போய் விட்டன. 
அதேவேளை 50ஆண்டுகளுக்குமுன் இந்தக் கடற்பரப்பில் தொழில் செய்துவந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை இப்போ நான்கு மடங்காகப் பெருக்கமடைந்தும் காணப் படுகின்றது. 

இந்தக் கடற்பரப்பு மிகவும் சிறியதாக இருந்தபோதும் இதன் வளங்களும், சிறப்புக்களும் தான் காலகாலமாக எம்மைக் காப்பாற்றி வருகின்றது. 

இந்தச் சுற்றாடலில் காணப்படும் களக்கடல் உயிரிகளான நிலமீன்கள் என்று சொல்லப்படுகின்ற கிளக்கன், திரளி, சல்லி, விளை, ஓரா கலவாய், கெடுத்தல், திருக்கை, சுங்கன், கிளிமீன் போன்ற இன்னும் பல இனங்களும்,  மேல்தள உயிரிகளான சிறையா, கயல், திருவன், அகழி, முரலினம், பாரையினம், பாலை போன்றவையும், கணவாய், நண்டு வகைகளும் தமது இனப்பெருக்கத்தை மேற்கொள்வதோடு, முட்டுவெள்ள நேரங்களில் மேய்ச்சலுக்காக ஏறியிறங்கும் இடங்களாகக் கருதப் படுபவை "புறவாய்" என்று சொல்லப் படுகின்ற நரையாம்பிட்டி மேற்குமுனங்கு, சுரிப் பாடுகளிலிருந்து, பெரியபிட்டி பெரியமுனங்கு, பல்லதீவு வரையுள்ள கடற்பரப்புகளாகும்.  

இவை தவிர, மேற்குத் தீவுகளை எடுத்துக் கொண்டால், எழுவைதீவு, பருத்தீவு, அனலைதீவு, புளியந்தீவுக் கிழக்குக் கரைகளான தாழங் கடற்பரப்புக்களாகும். 

தெற்கே குறிகாட்டுவான், நளவகளமும், வடக்கே கண்ணகைக்குடாவும் இந்த வளங்களை உள்ளடக்கிய கடல்களாகும். 

கெட்டில், சுருவில், மெலிஞ்சிமுனை, ஊறுண்டி, பருத்தியடைப்பு, எழுவைதீவு, அனலைதீவு, குறிகாட்டுவான், பல்லதீவு, ஊரதீவு ஆகிய இடங்களில் வாழும் அத்தனை மீனவர்களுக்குமான வாழ்வாதரமும் இந்தக் கரைகளை நம்பித்தான் இருக்கின்றன. 

தவிரவும், புறவாய்ப்பகுதியிலிருந்து பெரியபிட்டி முனங்குவரை சுமார் 42களங்கண்டிப் பாடுகள் உள்ளன. அத்தனை தொழிலாளர்களும் தொழில்களை அகற்றியாக வேண்டும். இவர்களுடைய வாழ்வாதாரத்தினை பலாத்காரமாக முற்றுமுழுதாகப் பறித்தெடுக்கும் நிலைக்கு ஆளாவோம். 

தவிரவும், 
தற்போது தேர்வு செய்யப் பட்டுள்ள மேற்படி கடற்பரப்பானதில் அட்டைப் பட்டிகள் அமைக்கப் படுமானால்..., எதிர்காலத்தில் எத்தகைய பாதகங்களும், இழப்புக்களும், அனர்த்தங்களும் ஏற்படும் என்பதைப்பற்றி நாம் சிந்திக்கத் தவறுபவர்களாக இருக்கிறோம். 
இந்த நடவடிக்கையை  நாம் நீண்டகாலச் சிந்தனையை முன் நிறுத்திப் பார்க்க வேண்டிய பொறுப்புள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை மறந்து விடக் கூடாது.  

Nara (தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) -The National Aquatic Resources Research and Development Agency- மேற்படி கடலட்டை வளர்ப்புக்குத் தகுந்த இடங்களெனத் தேர்வு செய்த இடங்கள் சில தவறான இடங்களாகும். 
அதிலொன்றுதான் எமது இந்த புறவாய்ப்பகுதி. 

இந்த Nara ஏஜென்சியானது, களக்கடல் இருக்கும் இடங்களை மட்டுமே கூகிள் படங்களை வைத்துப் பார்த்தார்களோ என்னவோ, இந்தப் பிரதேசங்களின் இயற்கை வளம், சூழற்பாதுகாப்பு, பின்விளைவுகள் போன்றவற்றைக் கொஞ்சம்கூட ஆய்வுக்கு உட்படுத்தவுமில்லை, கருத்திற் கொள்ளவுமில்லை என்பதே உண்மை. இதனை தெளிவான ஆய்வுரீதியாகவே நிரூபிக்க முடியும். 
(இவர்கள் எங்கிருந்து ஆய்வு செய்தார்கள்...? வானத்தில் இருந்தா, அல்லது கூகிள் வரைபடங்களைச் சுட்டெடுத்தா?)  

மேலே குறிப்பிட்டதுபோல, மேற்படி கடற்பரப்பினை அடைத்து ஏற்படுத்தப்படும் கடலட்டைப் பட்டிகளால் கடல்வாழ் உயிரினங்களின் உற்பத்தி தடைபட்டு அழிந்து, மீன் வளங்கள் இல்லாமற் போவது மட்டுமல்லாது, எதிர்காலத்தில் எதிர் நோக்கக்கூடிய அனர்த்தங்கள், அழிவுகளும் பல உண்டு. அவற்றில் ஒருசிலவற்றையேனும் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். 

குறிப்பிட்ட கடற்பிரதேசங்கள் இயற்கையாகவே அதிக கடற்தாவரங்களைக் கொண்ட வளம் மிக்கதாக அமைந்து விளங்குகின்றது. இதற்கான காரணம், மேற்குத் திசைகளிலிருக்கும் தீவுகளுக்கூடாக பிரண்டையாற்றை வந்தடையும் பன்முக புறங்கடல் நீரோட்டங்களானது புறவாய்ப்பகுதியை என்நேரமும் சதுப்பு நிலமாக வைத்திருப்பதாலும், இந்த நிலங்கள் களக்கடலாக இருப்பதால் சூரியவெப்பம் நேரடியாகவே நிலத்தடியைச் சென்று சூடாக வைத்திருப்பதாலும் அதிக விளைச்சலை உருவாக்குகின்றது. 

உணவுச்சங்கிலி. 
===========
இவ்வகை இயற்கை விளைசலால் வளரும் தாவரங்களின் இலைகளை உண்பதற்காக பூச்சி புழுக்கள் வந்து சேர்கின்றன. இந்தப் பூச்சி புழுக்களானவை அதிகமாகக் காணப் படுவதால்தான் அவற்றை வேட்டையாடுவதற்காக மீன்கள் இந்தப் பிரதேசங்களுக்கு அன்றாடம் வந்து செல்கின்றன.  இப்படி வந்து செல்லும் கடல்வாழ் உயிரிகளின் உறைவிடமாகவும், இனப்பெருக்கத்துக்கான திடலாகவும் இவை சிறப்புப் பெற்று விளங்குகின்றது. (மழைக்காலங்களில் கழிமுகத்து ஓடையால் பிரண்டையாற்றை வந்துசேரும் மழை நீரோடு நுண்ணுயிர்களும் கடலுக்குக் கடத்தப் படுகின்றன. இவை கடல்வாழ் உயிரினங்களுக்கான மேலதிக தீவனங்களாகும்.  

கடலட்டையின் உணவு மண்தான் என்பது எல்லோருமே அறிந்து வைத்திருக்கின்றோம். 
குறிப்பிட்ட, மிகக் குறுகிய நிலப்பரப்பில் அமைக்கப்படும் பட்டியில் இயற்கைக்கு மாறாக பல லட்சக்கணக்கான அட்டைகள் வளர்க்கப்படுவகின்றன, இதனால் அளவுக்கதிகமான மண்வளம் அட்டைக்கான தீனியாகி, அந்த நிலப்பரப்பின் மண்வளம் விரைவில் பலமிழந்து போகும். நிலவளம் பலமிழந்து போவதால் அதிலுள்ள இயற்கைத் தாவரங்கள் வேர்கள் மடிந்து காலக்கிரமத்தில் அழிந்துபோகும். 

தவிரவும், இந்த இடங்களை அட்டைப்பட்டிகளால் மறித்து அடைக்கும்போது, மேற்படி தாவரங்களை உண்ணும் பூச்சி புழுக்களை மீன்கள் வேட்டையாட முடியாமல் உணவு வலையம் தடைப்படும் நிலை உருவாகின்றது. இப்படியான நிலை உருவாகும்போது தாவரங்களின் இலைகளைக் காலக்கிரமத்தில் பூச்சி புழுக்கள் அரித்துத் தீர்த்துவிடும். 
ஆக, இந்த இயற்கைத் தாவரங்களின் வேரடியும் பட்டுப்போவதோடு, இலைகளும் அழிந்து போகின்றது. 

கடற்பாறை வளங்கள்:-
================= 
இந்த வரைபடத்தில் றோஸ்நிறத்தில் காணப்படும் பகுதிகளின் மத்தியில்தான் மிகப்பெரும் வளங்கள் உள்ளன. அதாவது;- 
கலவாய்க்கல், ஆமைப்பார், புளியம்பார், நாவட்டக்கல், சீராம்பார், சாட்டி, நடுவகல்  போன்ற மிகப்பெரிய ஏழு கடற்பாறைகளும், கோயிலுக்கல், கரைக்கல், பூண்டிவெள்ளைக்கல், கெட்டிலான்கல் போன்ற பாறைகளும், கண்ணகைக்குடாவுக்குள் பட்டசாட்டாமாறு என்ற அடர்த்தியான கற்தாவரங்களும் அமைந்துள்ளன.  
இவை தவிர புட்டியாறு, பிரண்டையாறு நீளத்துக்கும் உயர்ந்த பறைகளும், நிலப்பாறைகளும் தொடராக அமைந்திருக்கின்றன. 
இத்தனை வளங்களும் கல்மீன்களின் நிரந்தர உறைவிடமாகத் திகழ்பவை. 
இறுதியில் எஞ்சப் போவது எந்த வளங்களுமே அற்ற, அழிந்து உருக்குலைந்த வெறும் கட்டாந்தரை மட்டுமேயாகும். 

இந்த விளக்கங்களை இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மூத்த கடலோடிகளிடம் கேட்டாலே சாதாரணமாக விளக்கம் தருவார்கள்.

எனவே எமது அன்பு உறவுகளே! 

எமது மூதாதையர் இந்த வளங்களைப் பாதுகாத்து எமக்குத் தந்ததுபோல், எமது அடுத்தடுத்த தலைமுறையின் கைகளில் இவற்றை பவுத்திரமாக ஒப்படைக்கும் கட்டாயமான கடமை எமது தலைமுறைக்கு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.  

எமது அடுத்த சந்ததிக்கு நாம் எதைக் கொடுத்து விட்டுப் போகப்போகிறோம் என்ற கேள்விக்கு அப்பால், இருக்கின்ற இயற்கை வரப்பிரசாதங்களையும் இல்லாமல் அழித்துக் கெடுத்துவிட்டுப் போகும் தலைமுறயாக நாம் இருக்கக்கூடாது.  

சிந்தியுங்கள் எமது நேசத்துக்குரிய உறவுகளே! 
-தமயந்தி.

//தவறான தீர்மானங்களினால் எமது மக்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அதற்கு எதிராக தேவையான நடவடிக்கைகள் எடுக்கத் தயங்கப் போவதில்லை// -கடற்தொழில் அமைச்சர்-

large.50B69186-805C-41F2-9CC5-C62E9A23781A.jpeg.d8d3a41eb9d7f7090ca8637deaf2ce8e.jpeg

 

https://www.facebook.com/1319608745/posts/10221572299039706/

 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.