Jump to content

Recommended Posts

 

large.banyan-tree-clipart-hindi-banyan-tree-in-cartoo-11563120950oaah9etjza.png.21cff84e4b391c31fb4b350312d5c7a0.png

மரங்கள்.! (குறுங்கதை)

பலாமரம் ஒன்று வேலிக்கு அப்பால் நின்ற புளியமரத்தை ஏளனமாகப் பார்த்து என்னைபோல் இனிமையான  பழம் உன்னால் தரமுடியுமா என்றது. இதைக்கேட்ட புளிய மரம் இயற்கையோடு நாம் வாழ்ந்த காலத்தில் இப்படி எந்தமரமும் கேட்டதில்லையே என மனதுக்குள் யோசித்தது. பின் சிரித்துவிட்டு சொன்னது என்னைப் போல புளிக்கின்ற பழமும் உன்னாலும் கொடுக்க முடியாது.ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்குதென்று ஏற்றுக்கொள். பழங்களில் நீதான் பெரியவன் இனிப்பானவன் என்று எண்ணிக்கொண்டு  பெருமை பேசாதே என்றது. மனிதர்கள் போல் உயர்வு தாழ்வு போட்டி பொறாமை இருக்கக் கூடாதென்று எட்டத்தில் நின்ற வேப்பமரம் பிசின் வடிய கத்தியது. எங்கள் காலம் என்ன ஆகுமோ என ஏங்கி அசைந்தன சுற்றிநின்ற சிறுமரக்கூட்டம்.மரபணு மாற்றம் செய்யப்பட்ட பலாமரம் என்பது அந்த அப்பாவி மரங்களுக்கு தெரியவில்லை.

-பசுவூர்க்கோபி.

  • Like 2
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.