Jump to content

இந்திய - சீன வல்லரசுகளின் சதுரங்க ஆட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய - சீன வல்லரசுகளின் சதுரங்க ஆட்டம்

image_d0882b8dfd.jpg- டெசா  

இலங்கை அரசியலில் பல திருப்புமுனைகள் ஏற்பட்டுக்கொண்டுள்ள காலகட்டம் இது. இலங்கையின் தேசிய அரசியலிலும் சரி,  இலங்கை சார்ந்த  சர்வதேச அரசியலிலும் சதுரங்க ஆட்டங்கள் மிகக் கச்சிதமாக இடம்பெற்றுக்கொண்டுள்ளன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தேசிய அரசியலை ஒரு பக்கம் வைத்துவிட்டு சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் சார்ந்த சர்வதேச நகர்வுகள் மீதே பார்வையை திருப்ப வேண்டியுள்ளது. இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீ  இலங்கை வந்துள்ளார்.ஆனால் இது அவரது இலங்கைக்கான தனிப்பட்ட விஜயம் அல்ல. அவரது விஜயத்தில் இலங்கையும் ஒரு தரிப்பிடம் அவ்வளவுதான்.

இம்முறை சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீயின் பயணமானது எரித்திரியாவில் ஆரம்பிக்கின்றது. அதன் பின்னர் கென்யா, கொமொரோ தீவுகள் சென்று அப்படியே இலங்கை வந்து இறுதியாக  மாலைதீவுகள் செல்கின்றார். இம்முறை அவர் விஜயம் மேற்கொண்டுள்ள நாடுகளை அவதானித்துப்பார்த்தல் முதலில் எரித்திரியாவை எடுத்துக்கொள்வோம், எரித்திரியா இறுக்கமான இராணுவ ஆட்சியை கொண்ட நாடு மட்டுமல்ல, சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள கிழக்கு ஆபிரிக்க நாடாகும். எரித்திரியாவின் மனித உரிமை மீறல்கள் அனைத்தையும் சீனாவே மூடி மறைப்பதுடன் சர்வதேச தரப்பில் அவர்களை பாதுகாத்தும் வருகின்றது. அதேபோல் கென்னியாவை எடுத்துக்கொண்டால் பாரிய கடன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள நாடாகும். கென்னியாவின் கடன்களில் முக்கால்வாசியை சீனா தள்ளுபடி செய்வதாக கூட ஒரு அறிவிப்பு அண்மையில் வெளிவந்துள்ளது, அப்படியென்றால் கென்னியாவை முழுமையாக அவர்களின் பொறிக்குள் சிக்க வைக்துவிட்டனர் என்பதே அதன் அர்த்தமாகும்.

அடுத்ததாக கொமொரோ தீவுகள் பற்றி சற்று ஆழமாக சகலராலும் அவதானிக்கப்படுகின்றது. கொமொரோ தீவுகள் சீனாவுக்கு மிக முக்கியமான தீவாகும். இந்தத்தீவும் முற்று முழுதாக சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதுமட்டுமல்ல நீர்முழ்கிக்கப்பல் தொடர்புகள் முதற்கொண்டு சீனா கொமொரோ தீவுகளின் ஊடாகவே கையாண்டு வருகின்றது என்பது அத்தீவின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. தற்போது அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், அடுத்ததாக மாலைதீவுகள் சென்று அங்கும் தமது திட்டங்களுக்கான கண்காணிப்புகளை மேற்கொண்டுவிட்டு வோங் யீ சீனாவுக்கு செல்வார் என்றே தெரிவிக்கப்படுகின்றது.

சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீயின் இலங்கை விஜயத்தின் போது அரச மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளதுடன், இலங்கை சீன அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், இலங்கையின் கடன் நெருக்கடிகளுக்கான நிவாரண சலுகைகள் அல்லது மேலதிக கடன்களை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இது பொதுவான நிகழ்ச்சி நிரலும் கூட,  அதில் என்ன இருக்கப்போகின்றது என்பது சாதாரணமாக எழுப்பப்படும் கேள்வியாக இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டிய பல நகர்வுகள் இந்த விஜயத்தின் பின்னணியில் உள்ளது. அந்த நகர்வுகளையும் தாண்டி  இந்தியாவிற்கு சீனா வழங்கும் மிக முக்கியமான செய்தியொன்றும் உள்ளது. அது வேறு ஒன்றும் அல்ல  தமிழர் விவகாரத்தில் சீனாவின் புதிய கரிசனையேயாகும்.

விஜயத்தின் பின்னணி பற்றி பார்க்க முன்னர் இந்தியாவுடன் சீனாவின் சீண்டல் என்ன என்பதை பார்த்தாக வேண்டும். இதற்கு முன்னர் இலங்கைக்குள் எவ்வாறு இந்தியா தனது இராஜதந்திர நகர்வுகளை கையாள எத்தநித்ததோ அதே பாணியில் தான் சீனாவும் அடி எடுத்து வைத்துக்கொண்டுள்ளது. ஆனால் இந்தியாவின் நகர்வுகள் தூர நோக்கில்லாது, இந்தியாவின் நலன்களில் எது சாதகமாய அமையும் என்பதை சரியாக விளங்கிக்கொள்ளாது பயணித்தமையே தற்போது இந்தியாவிற்கு பாரிய தலையிடியாக அமைந்துள்ளது என்றே கூற வேண்டும். குறிப்பாக தமிழர் விடயத்தில், தமிழ் மக்களின் அரசியல் நலன்களை கையாள்வதில் இந்தியாவிற்கு முழு ஈடுபாடு இருக்கவில்லை என்பது அவர்களின் இத்தனை கால உறவில் வெளிப்பட்டு நிற்கின்றது. ஈழத் தமிழர்களின் நீண்டகால கோரிக்கைகளை இந்தியா முழுமையாக செவி மடுக்கவில்லையா அல்லது இதுவரை காலமாக இந்தியாவிற்கு அது அவசியமாக இருக்கவில்லையா என்பது கேள்விக்குறியாக நிற்கட்டும். ஆனால் இனியும் அதே பாதையில் இந்தியா பயணிக்க முடியாது.

சீனா இப்போது தனது கவனத்தை வடக்கு கிழக்கு பக்கம் திருப்ப ஆரம்பித்துவிட்டது,  சீன தூதுவரின் வடக்கிற்கான திடீர் விஜயம் சாதாரணமான ஒன்றாக அமையவில்லை. அது அவசியமான நேரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள விஜயமாகும், குறிப்பாக சொல்லப்போனால் தற்போதைய சதுரங்க ஆட்டத்தில் சீனா எடுத்து வைத்த கச்சிதமான நகர்வு என்றே கூற வேண்டும். நிதி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ இந்தியாவிற்கு பரந்தவுடன் அடுத்த கட்டமாக சீனத் தூதுவர் வடக்குக்கு விஜயம் செய்கின்றார், ஆனால் இந்த திட்டம் அதாவது  வடக்குக்கான சீன தூதுவரின் விஜயம் கொழும்பில் இருந்து தீர்மானிக்கப்பட்டதல்ல. இது பீஜிங்கின்  திட்டமிட்ட நகர்வாகவே அமைந்தது. குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளை  ஹொங்கொங் போன்று உருவாக்கி சீனாவின் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் திட்டத்தின் ஆரம்பமே இந்த விஜயம் என்பது ஒரு கருத்தோட்டமாக உள்ளது.

சீன தூதுவரின் வடக்கு  விஜயம் குறித்து இந்திய உயர் மட்டத்தில் தீவிர ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சீனாவின் தற்போதைய நகர்வானது வெறுமனே ஆக்கிரமிப்பு என்ற எண்ணக்கருவை தாண்டி இலங்கையின் அரசியலுக்குள் ஒரு காய் நகர்த்தலை  முன்னெடுப்பதாகவே இந்தியா அவதானித்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. ஆகவே சீனா ஒருபுறம் காய்களை நகர்த்திக்கொண்டு தமது திட்டம் இரண்டை நடைமுறைப்படுத்த எத்தனிக்கும் அதே வேளையில் இந்தியாவும் இதனை சாதாரண விடயமாக கருதாது தமது அவதானிப்பை சீன தூதுவரின் வடக்கு விஜயத்தில் திருப்பியுள்ளனர். எனவே இந்தியாவும் தனது காய்களை சரியாகத்தான் நகர்த்தியிருக்க வேண்டும்.

இந்தியா- சீனா ஆகிய இரு பெரும் பலவான்கள் தமக்குள்ள பூகோள அரசியலை இவ்வாறு நகர்த்திக்கொண்டுள்ள வேளையில் இலங்கைக்குள் திடீரென 13 ஆம் திருத்தத்திற்கான பேச்சுக்கள் மீண்டும் வலுப்பெற ஆரம்பித்துள்ளன. 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்த கோரி தமிழ் பேசும் கட்சிகள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்தியாவின் தலையீட்டுடன் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அவர்கள் கூறியிருப்பதும் நிச்சயமாக இந்தியாவின் அழுத்தங்கள் இதன் பின்னால் இல்லாமலிருக்க வாய்ப்பில்லை. ஆகவே இப்போது இலங்கைக்குள் சர்வதேச சதுரங்க ஆடம் ஆரம்பித்துவிட்டது என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.

சீன வெளியுறவு அமைச்சரின்  விஜயம் வெறுமனே பொருளாதாரம் சார்ந்ததாக இருக்குமென வெளிப்படையாக கூறினாலும், வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கத்தை எவ்வாறு விரிவு படுத்தலாம் என்பது குறித்து நிச்சயமாக பேசப்படும். இலங்கை தங்களை விட்டு சென்றுவிடக்கூடாது என்பதில் சீனா மிக உறுதியாக உள்ளது. இலங்கை இந்தியாவின் பக்கம் சாய்ந்துவிடக்கூடாது என்பதும் சீன வெளியுறவு அமைச்சரின் இந்த விஜயத்தின் நோக்கமாக வெளிப்படுகின்றது.

அதுமட்டுமல்ல ஒட்டுமொத்தமாக இந்தியா சார்ந்த பகுதிகளில் எல்லாம் தம்முடைய ஆதிக்கத்தை செலுத்தும் விதமாக சீனாவின் பயணங்கள் இருக்கின்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா அக்கறை செலுத்துவதன்  மூலமாக மட்டுமே இலங்கையில் வடக்கு கிழக்கில் இந்தியாவின் முழுமையாக ஆதிக்கத்தை கொண்டு செல்ல முடியும் என்ற கருத்தை இந்தியாவிற்கு பலர் எடுத்துக்கூற ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் இதனையே ஒரு பிரதான விடயமாக இந்தியாவிற்கு தொடர்ச்சியாக வலியுறுத்திக்கொண்டுள்ளது.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் தமது அரசியல் செயற்பாடுகளில் ஈழம் சார்ந்த இந்தியாவின் ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக தெரிவிப்பதானது தமிழர்  சீனாவின் பக்கம் சாரப்போவதில்லை என்பது வெளிப்படுகின்றது. இந்தியா ஈழத் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்குமேயானால்  தமிழர் பகுதியில் இந்தியாவை தவிர வேறு எவரையும் கால்வைக்க அனுமதிக்க மாட்டோம் என்பதே தமிழர் தரப்பின் நிலைப்பாடாகும். தமிழர் பூமிக்கான விடிவுகளை இந்தியா எழுதுகின்ற பட்சத்தில் வடக்கு கிழக்கு பகுதிக்குள் வேறு எவருக்கும் இடம் கொடுக்காத விதத்தில் இந்தியாவை நாம் பாதுகாப்போம் என தமிழர் தப்பு கூறுகின்றது.

இந்த சந்தர்ப்பம் இந்தியாவிற்கு நல்லதொரு வாய்ப்பாகும். ஆகவே இதனையேனும் இந்தியா சரியாக கையாண்டால் மட்டுமே ஈழத் தமிழர்கள் இந்தியாவை ஆதரிப்பார்கள். இல்லையேல் தவிர்க்க முடியாமலேனும்  தமது வாழ்வாதாரம், அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க சீனாவின் பக்கம் தமிழர்கள் நாடும் நிலை ஏற்படும். இது நடந்தால் புவியியல் சார் அரசியல் மாற்றங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

இதன்போது நன்றாக ஒன்றை கவனிக்க வேண்டும், சீனாவியன் தூதுவர் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட வேளையில் அங்கு நல்லூர் கந்தன் ஆலையத்திற்கு தமிழர் பாரம்பரிய முறைப்படி சென்ற போதும், வடக்கில் கடலட்டை பண்ணைகளை பார்வையிட்டபோதும், வடக்கு மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்த போதும், வடக்கு முனையில் இருந்து இந்தியாவை நோட்டமிட்ட போதும் தமிழர்களோ அல்லது தமிழ் மகளுக்காக குரல் கொடுக்கும் அரசியல் தலைமைகளோ தமது எதிர்ப்பையேனும் பதிவு செய்யவில்லை.  

இந்தியா பலமான நாடாக இருந்தாலும் அதன் வெளியுறவுக்கொள்கை மிகப் பலவீனமானதாகும். இதனை மறுக்கவே முடியாது. ஆகவே இலங்கை விடயத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை செய்தே ஆகவேண்டும். தமிழர் நலன்களில் இந்தியா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது, தமிழர் பூமியில் தமிழர்களுக்கான சுய நிர்ணய ஆட்சியை உருவாக்கிக் கொடுப்பதில் துணை நிக்காது போனால், இதுவரை காலமாக கையாண்ட அதே பிற்போக்கான இராஜதந்திர கொள்கையை இனியும் கையாண்டால் நிச்சயமாக இந்தியாவிற்கே தாக்கத்தை செலுத்தும். சீனாவின் நகர்வுகள் என்னவென்பதை தெரியாது வடக்கில் சீனாவின் ஆதிக்கத்திற்கு இடம் வழங்கப்படும் என்றால் அது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2015ஆம் ஆண்டில் இந்தியாவினதும் நேரடி தலையீட்டில் ஆட்சி மாற்றமொன்று இலங்கையில் ஏற்பட்ட போது தமிழ் மக்களுக்கு இந்தியாவினால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இந்தியா தமிழர்கள் விடயத்தில் இதய சுத்தியுடன் செயற்படவில்லை. இது இந்தியாவின் வெளியுறவு கொள்கையின் பலவீனமான போக்காகும். உண்மையில் இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் அண்டைய நாடுகளுடன் அவர்களின் நீண்ட கால வேலைத்திட்டம் ஒன்று இல்லாததன் காரணத்தினால் தான் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சிறிய நாடுகள் அனைத்தும் இன்று சீனாவை சாரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்தியா தனது அண்டைய நாடுகளுடன் கையாளப்போகும் நீண்டகால மற்றும் குறுகியகால வேலைத்திட்டங்கள் என்ன என்பதை இப்போதாவது வகுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக இலங்கையின் விவகாரத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து இந்தியாவின் நம்பிக்கையை தமிழர்கள் மத்தியில் உறுதிப்படுத்தினால் மட்டுமே தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயமானது நிச்சயமாக சாதாரண அல்லது வழமையான, நட்புறவை மேம்படுத்தும் விஜயமாக அமையவில்லை. முன்னரே சுட்டிக்காட்டியதை போன்று சீனத் தூதுவர் தனது வடக்கு விஜயத்தின் போது கச்சத்தீவுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து ட்ரோன் கெமரா மூலமாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆகவே சீனத் தூதுவரின் வடக்கு விஜயம் மற்றும் சீன வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயம் ஆகிய இந்த இரண்டு சம்பவங்களுக்குமான பதில் வேறொரு இடத்தில் உள்ளது.

அது என்னவென்றால், அண்மையில் ஐக்கிய அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பெண்டகன் அமெரிக்க பாராளுமன்றத்திற்கு ஒரு முக்கிய ஆவணத்தை சமர்பித்துள்ளது. மக்கள் சீன குடியரசின் 2021 ஆம் ஆண்டுக்கான இராணுவ மற்றும் பாதுகாப்பு அபிவிருத்தி தலையீடுகள் என்ற தலைப்பில் இந்த ஆவணம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான காரணி என்னவென்றால், சீனா தனது இராணுவ தளம் ஒன்றினை இலங்கையில் நிறுவ முயற்சி செய்து வருவதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகவே இலங்கையின் கச்சத்தீவில் சீனாவுக்கான இராணுவ தளம் ஒன்றினை அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாகவும், சீன தூதுவரின் வடக்கு விஜயத்தின் உள்நோக்கம் இது ஒன்று மட்டுமே எனவும் ஆய்வாளர்களின் கருத்தாக அமைந்துள்ளது.

ஆகவே சீனா தனது சதுரங்க ஆட்டத்தை கட்சிதமாக முன்னெடுத்து மிகச் சரியாக தனது காய்களை நகர்த்திக்கொண்டுள்ளது, நேரடியாக இந்தியாவை சீண்டுவது சர்வதேசத்தின் பார்வையில் மிகப்பெரிய முரண்பாட்டை ஏற்படுத்தும் என்பது சீனாவுக்கு தெரியாமல் அல்ல. ஆனால் இந்தியாவின் பலம் என்ன என்பதை போலவே இலங்கை ஈழத் தமிழர்களின் பலவீனம் என்ன என்பதையும் சீனா தெரிந்து வைத்துள்ளது. ஆகவே தான் இதுவரை காலமாக யுத்தத்தின் போதும் சரி யுத்தத்திற்கு பின்னரும் சரி இலங்கையின் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் ஒரு சொற்பிரயோகத்தில் கூட எதிர்ப்பை வெளிப்படுத்தாத சீனா, தமிழர்களின் நலன்கள் குறித்து சிறிதும் கவனத்தில் கொள்ளாத சீனா, முதல் தடவையாக தமிழர்கள் நலன்கள் சார்ந்து தனது பார்வையை திருப்பியுள்ளது. கண்டிப்பாக இது உளமார்ந்த கரிசனை அல்ல. மாறாக இந்தியாவை சீண்டிப்பார்க்க வேண்டும் என்ற சீனாவின் ஆசை மட்டுமேயாகும்.

ஆகவே இலங்கை தமிழர்களின் அரசியல் அபிலாசைகள், தீர்வுகளை இந்தியா பெற்றுக்கொடுக்க முனைப்பாக செயற்படும் என்றால், தமிழர்களின் கரங்கள் அரசியல் ரீதியில் பலமடையும் என்றால் நிச்சயமாக ஈழத் தமிழர்கள் இந்தியாவை பாதுகாப்பார்கள். ஆகவே சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு  தமிழர்கள் இடம் கொடுப்பதும்,  தடுத்து நிறுத்துவதும் இந்தியாவின் கையிலேயே உள்ளது.
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்திய-சீன-வல்லரசுகளின்-சதுரங்க-ஆட்டம்/91-288894

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வல்லரசுதான் பாத்துகுங்க, பாத்துகுங்க🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவே, 

உனக்கும் பெப்பே உன் அப்பனுக்கும் பெப்பே..🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர வர எங்கட பந்தி எழுத்தாளர்கள் கண்ணாபின்னான்னு ஹிந்தியாவை தலையில தூக்கி வைச்சு வல்லரசாக்கினம்...?!

சீனா.. பொருண்மிய ரீதியாவும் படைப்பல ரீதியாவும் அமெரிக்காவுக்கே சவால் விடத்தக்க அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. 

ஹிந்தியா...?! சொந்தமா ஒரு போர் விமானத்தைக் கூட தயாரிக்க வக்கற்ற நாடு. இதில வல்லரசு..???!

ஹிந்தியா புலிகளை சமாளிக்கவே.. சொறீலங்காவோடும்.. இன்னும் 23 நாடுகளையும் கூட்டிக்கொண்டு வந்த நாடு.. அதுவும் சீனாவும் ஒன்றா..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

வர வர எங்கட பந்தி எழுத்தாளர்கள் கண்ணாபின்னான்னு ஹிந்தியாவை தலையில தூக்கி வைச்சு வல்லரசாக்கினம்...?!

சீனா.. பொருண்மிய ரீதியாவும் படைப்பல ரீதியாவும் அமெரிக்காவுக்கே சவால் விடத்தக்க அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. 

ஹிந்தியா...?! சொந்தமா ஒரு போர் விமானத்தைக் கூட தயாரிக்க வக்கற்ற நாடு. இதில வல்லரசு..???!

ஹிந்தியா புலிகளை சமாளிக்கவே.. சொறீலங்காவோடும்.. இன்னும் 23 நாடுகளையும் கூட்டிக்கொண்டு வந்த நாடு.. அதுவும் சீனாவும் ஒன்றா..??!

தமிழில்தான் இப்படி மாங்கு  மாங்கு என்று  குத்தி  முறிந்து எழுதி  இந்தியாவை தூக்கி பிடிக்கினம் CNN effect போல் நினைப்பாக்கும்  சிங்களவர்கள் இந்தியாவுடனும்  சீனாவுடனும் அரசியல் செய்யலாம் தமிழர்கள் இந்தியாவை மட்டுமே நம்பி இருக்கனும் எனும் கருத்தியலை விதைக்கினம் அதனால் பல நன்மைகளை இழக்கிறோம் இதே கட்டுரை வந்த டெய்லி மெயிலில் மகிந்த ஒரு அறிக்கை விடுகிறார்"சீனா எமது உயிர்த் தோழன்: பிரதமர் மஹிந்த"https://www.tamilmirror.lk/செய்திகள்/சன-எமத-உயரத-தழன-பரதமர-மஹநத/175-288936

சீனா எமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 65 ஆண்டு பூர்த்தி மற்றும் புகழ்பெற்ற இரப்பர் அரிசி ஒப்பந்தத்திற்கு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமையை முன்னிட்டு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீயின் பங்கேற்புடன் கொழும்பு துறைமுக நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ ஆகியோர் இதன்போது இலகுரக படகு முற்றத்தின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை பொதுமக்கள் பாவனைக்காக திறந்துவைத்தனர்.

இந்நடைபாதையில் பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபடக் கூடியதுடன், காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலக அலுவலகத்திற்கு முன்னால் இதற்கான தற்காலிக நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

நடைபாதையின் நிறைவில் வளைவான வடிவத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலோக தொங்கு பாலம் வரை பொதுமக்கள் பயணிக்கக்கூடியதுடன், தினமும் முற்பகல் 9.00 மணிமுதல் பிற்பகல் 6.00 மணிவரை அங்கு தங்கியிருக்கலாம்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 'இலங்கை – சீன நட்புறவு படகோட்டப் போட்டி' இதன் ஒரு அங்கமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கைக்கான சீன தூதுவர் அலுவலகத்துடன் இணைந்து ஆரம்பித்து வைக்கப்பட்ட போட்டிக்கான வெற்றிக் கிண்ணம் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கௌரவ வாங்க் யீ யினால் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் வழங்கிவைக்கப்பட்டது.

அமைச்சர் நாமல் இதன்போது 65 எனக் குறிப்பிடப்பட்ட 'இலங்கை-சீன நட்புறவு படகோட்டப் போட்டி'க்கான நினைவு டீ-சேர்ட் ஒன்றினை வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பரிசளித்தார்.

கொழும்பு துறைமுக நகரில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் விளையாட்டுத்திறன் இணைக்கப்பட்டமை இருநாட்டு பிரதிநிதிகளதும் பாராட்டிற்கு உட்பட்டது.

இப்படி சிங்களவர்கள்  அரசியல் செய்து பலத்த அறுவடையை பெறுகிறார்கள்  சீனாக்காரன் வலிய  யாழ் வரும்போது நம்ம அரசியல்வாதிகள் அனைத்தும் பிடரியில் கால் முட்ட ஓடி  ஒளிந்து விட்டினம் தமிழ்   அரசியல் கோமாளி சிவாஜிலிங்கம் கூட வாய்க்குள் கொழுக்கட்டையை வைத்துக்கொண்டு இருந்தவர்.இப்படி இருந்தால் இன்னும் 50 வருடங்கள் போனாலும் இதே கதைதான் எந்த மாற்றமும் வரப்போவதில்லை .சுமத்திரனின் மகன் லெட்டர் எழுதி கையெழுத்து    2072ல் போட்டு டெல்லிக்கு அனுப்பிக்கொண்டு இருப்பார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CNN effect என்ன  என்பவர்களுக்கு அமெரிக்க கொள்கை  வகுப்பாளர்கள் வகுத்த கொள்கையை இலகுவாக செயற்படுத்த செய்தி ஊடகங்கள் மூலம் வகுத்த கொள்கைக்கு ஆதரவான செய்திகளை உருவாக்கி மக்களிடையே பரவ விட்டு உருவாக்கப்பட்ட கொள்கைக்கு சாதகமான சூழலை  செயற்கையாக உருவாக்குதல் .மேலும் விளக்கமாக என்றால் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை நச்சு குண்டுகளை உருவாக்கி உள்ளார் அதனால் மனித குலத்துக்கு பேராபத்து என்பது போல் CNN முதல்கொண்டு மேற்குலக செய்தி ஊடகங்கள் 24 மணிநேரமும் செய்தியை ஓடாவிட்டார்கள் அதன்பின் நடந்தது உங்கள் எல்லோருக்கும் தெரியும் ஈராக்கின்  உள்ளே போன மேற்குலக படைகளின் கண்களில் ஒரு நச்சு குண்டு கூட மாட்டுப்படவில்லை ஆனால் உண்மையான காரணம் சதாம் அமெரிக்காவுடன் முறுக்கி கொண்டு ஐரோப்பிய நாணயத்தில் எண்ணெய் வியபாரத்தை முன்னெடுத்ததே முக்கிய காரணம்களில் ஒன்று .இந்த விடயத்தை பற்றி மேற்கு ஊடகங்கள் சொல்லாமல் அமைதி காத்தனர் .

இதே CNN effect விளைவை நம்ம பாரம்பரிய திராவிட கட்சிகள் அப்பவே தொடங்கி விட்டன சமீபத்தில் மதுவிலக்கு எதிராக கொடி  பிடித்தவர்கள் ஆட்சிக்கு வந்ததும் நடந்து கொள்ளும் முறை இதை சுட்டி காட்ட தமிழ்நாட்டு ஊடகங்கள் பின்னிற்கும் காரணம் தேடினால் விளங்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாதான் இப்போது வல்லரசு. இந்தியா மாட்டு மூத்திரத்தைக் குடிக்கத்தான் லாயக்கு. அமரிக்காஇ மற்றும் மேற்குலக நாடுகள் ஏதாவது உசுப்பி விட்டால் ஒழிய இந்தியா தமிழர் சார்பாக சிந்திக்கும் என்று நம்புவது பகற்கனவே.அவர்கள் சிங்களவர்களைத் திருப்திபடுத்துவதன் மூலம் தங்கள் பிடியை இறுக்கலாம் என்று நினைக்கிறார்கள். காலம் கடந்து விடடது. சிறிலங்கா எல்லோருக்கும் மாறி மாறித்தண்ணி காட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நான் மாண்டரின் படிக்கிறேன் 😁

நல்ல விசயம் பிழை விடாமல் படியுங்கோ.....🤣

மாண்டரின் குடிகொள்ளும் அழகிய தருணம்...😎
சிங்களமுமில்லை தமிழுமில்லை....:cool:

Bild

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நான் மாண்டரின் படிக்கிறேன் 😁

நீங்க ஒரு வளர்ந்து வரும் சைனாக்காரன்..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

நல்ல விசயம் பிழை விடாமல் படியுங்கோ.....🤣

மாண்டரின் குடிகொள்ளும் அழகிய தருணம்...😎
சிங்களமுமில்லை தமிழுமில்லை....:cool:

Bild

Bild

இதுவே… தமிழ்ப் பகுதியில், சிங்களத்தை புறக்கணித்திருந்தால்….
பத்திரிகை, சிங்கள அரசியல் வாதிகள், பிக்குகள் எல்லாரும் சேர்ந்து…
விஷம், விஷமாக… கக்கி இருப்பாங்கள், நாறல் பயலுகள்.
சீனன் செய்தவுடன்… நவ தூவாரங்களையும் மூடி கொண்டு,
தண்ணீரில் விட்ட “குசு” மாதிரி… சத்தம் இல்லாமல் இருக்கிறார்கள். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்க ஒரு வளர்ந்து வரும் சைனாக்காரன்..🤣

தமிழ் சிறியரோடை ஒரு பிளான் போட்டு, ஊரிலை திரியிற கட்டா காலி நாயலுக்கு ஒரு அலுவல் பார்க்க எண்டு.... 

இப்ப மண்டரின் படிக்கிறேன்..... உங்களுக்கும் ஐடியா இருந்தால் சொல்லுங்கோ...

பிறகு.... சீனத்து கவிதை எல்லாம் எழுதலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

தமிழ் சிறியரோடை ஒரு பிளான் போட்டு, ஊரிலை திரியிற கட்டா காலி நாயலுக்கு ஒரு அலுவல் பார்க்க எண்டு.... 

இப்ப மண்டரின் படிக்கிறேன்..... உங்களுக்கும் ஐடியா இருந்தால் சொல்லுங்கோ...

பிறகு.... சீனத்து கவிதை எல்லாம் எழுதலாம். 

முதல்லை… தடியாலை, 🥢 சோறை சாப்பிடுறதுதான்…..
பெரிய சிக்கலை கொண்டு வரும் போலை இருக்கு. 🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளை  ஹொங்கொங் போன்று உருவாக்கி சீனாவின் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் திட்டத்தின் ஆரம்பமே இந்த விஜயம் என்பது ஒரு கருத்தோட்டமாக உள்ளது.

இப்போது தான் இந்த கட்டுரை படித்து முடித்தேன். மேலே போல்ட் பண்ணியது, நாம் இங்கே விவாதித்ததே...

எப்படி? 🤔

இந்த டெல்லி கோமாளிகளை ஏதோ பெரிய வல்லரசு நடாத்தும் ஆட்கள் போல.... அடித்துவிட்டு கொண்டு எழுதுகிறார்.

நன்னி இன்னோரு திரியில் சொன்னது போல.... இவர்கள் இந்தியாவுக்காக எழுதும் ஊடகவியலாளர்கள். 

எப்படி எழுதினாலும், நாம் நம்பப்போவதில்லை. 13+ குறித்து கடிதம் அனுப்பும் அரசியல் வாதிகள் கூட, அது விழலுக்கு இறைத்த நீர் என்று தெரிந்தே எழுதினார்கள் என்பது வெள்ளிடை மலை.

இந்தியா குறித்து, சிங்களவன் பழம் தின்று கொட்டை போட்டு இருக்கிறான். 

முஸ்லீம் கட்சிகள் கையெழுத்து போடாமல், கடைசி நேரத்தில், எஸ் ஆனதுக்கு காரணம் சிங்கள எச்சரிக்கை.

ஆக இந்தியாவிலும் பார்க்க, பொருளாதார, ராணுவ பலமிக்க சீனா, இலங்கையில் முழுமையாக காலூன்றப் போவது உறுதி.

கட்டுரையாளர் சொல்வது போல, புலம் பெயர் தமிழர்கள் பலமானது, சிங்களவர்கள் பலத்திலும் பார்க்க அதிகம் என்பதால், சீனா, தமிழர் சார்ந்து இலங்கையில் வேலை செய்வது, அதன் சர்வதேச நலன்களுக்கு முக்கியமானது. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியாவின் சுயநல அரசியலுக்காக மீண்டும் ஒரு முறை நாம் அரசியல் ரீதியில் அழிக்கப்படப் போகிறோம். எதிர்க்க வேண்டிய காலம் உறவுகளே.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வாம்.தமிழும் இல்லை சிங்களமும் இல்லை. எல்லோரும் மாண்டரின் படிக்க வேண்டியதுதான்.சீனாக்காரன் ஆட்சியையே நடத்துகிறான்.நம்மாக்கள் 13ஐ அமுல்படுத்தச் சொல்லி கடிதம் எழுதிக் கொண்டிருக்கினம்.இந்தியாவுக்கு கடிதம் படிக்க எங்க நேரம்இருக்கு.அவர்களுக்கு மாட்டு மூத்திரத்தைக் குடிக்கவே நேரம்காணாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.