Jump to content

யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கில் சித்தர் பாடல்களின் செல்வாக்கு


Recommended Posts

 

யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கில்
சித்தர் பாடல்களின் செல்வாக்கு
 
யாழ்ப்பாணத்து மக்கள் இனம், மதம், மொழி கடந்த ஆன்மீகச் செல்வங்களான சித்தர் சரித்திரங்களைப் படித்தறிந்து தமது சித்தத்தை பண்படுத்தி வந்தவர்கள். வெளியே அறியப்படாத சித்தர்களாகவும் பலர் விளங்கியிருக்கிறார்கள்.
செத்தாரைப்போல் திரிவது எப்படி? நடைப்பிணங்களாக உலவுவது எப்படி? என்றெல்லாம் தெரிந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். சித்தர் பாடல்களின் உள்ளார்ந்த அர்த்தங்களை தெளிவாகத் தெரிந்து “சித்தம் போக்கு சிவன் போக்கு” என அவர்கள் சொல்வர்.
சித்தர்கள் போலவே மனதை அடக்கி, ஒடுக்கி நீர் மேற் குமிழி போலான வாழ்க்கையை தாமரை இலைத் தண்ணீர் போல் அல்லது புளியம்பழமும் ஓடும் போல் வாழ்ந்து வந்த எமது முன்னோர்களின் வார்த்தைப் பிரயோகங்களில் சித்தர் பாடல்களில் இடம்பெற்ற பதங்கள் பட்டுத்தெறித்த பான்மையினை பேச்சுத் தமிழை நேசிக்கும் ஒரு ஒலிபரப்பாளர் என்ற முறையில் அவதானித்து வந்த நான் என் மனப்பதிவுகளாக அவற்றை சற்று தொட்டுக் காட்டுகிறேன்.
கொங்கு நாட்டில் பிறந்த சித்தர் கொங்கணவர். இல்லற வாழ்க்கையைத் துறந்து, சந்நியாசியாகி, கற்ப மூலிகைகளை கண்டு அவற்றை உண்டு காய சித்தி பெற்றவர். சித்தராய் மாறியபின் அவர் ஒரு நாள் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது ஆகாயத்தில் பறந்து சென்ற ஒரு கொக்கு எச்சமிட, அது கொங்கணவர் மீது வீழ்ந்தது. தியானத்தில் இருந்து இதனால் விடுபட்ட கொங்கணவர் சட்டென அந்தக் கொக்கைப் பார்க்க அடுத்த கணமே அது எரிந்து சாம்பராகியது.
பசி எடுக்கிறது கொங்கணவருக்கு. சிறிது உணவு உட்கொள்ள எண்ணிய கொங்கணவர் ஒரு வீட்டின் முன் சென்று இரந்தார். இல்லத்தரசி பதி சேவையில் இருந்தார். பணிவிடைகளை கணவருக்கு செய்து முடித்தபின் கொங்கணவருக்கு உணவை எடுத்துவரத் தாமதமானது. கடும் பசியுடன் இருந்த கொங்கணவர் கோபத்துடன் அவளைப் பார்த்தார். ஆனால் அந்தப் பெண்ணோ சற்றும் பொருட்படுத்தாது புன்முறுவலுடன் கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? என்று கேட்டாள். கொங்கணவர் வெட்கிப் போனார்.
திருமூலர் ஒரு தடவை கொங்கணவரிடம் தர்க்கித்தபோது அவரை அடக்கப் பார்த்தார் இவ்வாறு –
சபித்தாய் நீ கொக்கை அன்று
தனிக்கோபம் பெண்ணின் மேலே
எபித்தாய் நீ ஏறாததேனா
விதமென்ன ஊனிப்பாரு
கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? துணிவுடன் சவால் விடும் ஒரு கேள்வி. யாழ்ப்பாணத்து கிராமங்களில் இப்படிக் கேட்டவர்கள் பலர் இருந்தார்கள்.
கோரக்கர் என்ற சித்தர் பிராமண குலத்தில் பிறந்தவர். கூடு விட்டு கூடு பாய்ந்து இடையனாகியவர். அவருக்கு கொங்கணவர் மீது விருப்பம் அதிகம்.
கோரக்கர் பாடல்.
அருள் பெற்ற நந்தி ஆசான் எனக்கு
பொருள் பெற்ற மூலர் போகர் எனக்குத்
தருவொத்த தோழர் சட்டை முனியும்
பரமுள கொங்கணர் பச்சம் மிகுதியே
நந்தீசர் எனது ஆசான். திருமூலர் வழிவந்த போகர் என்னுடைய தோழர். சட்டைமுனி, கொங்கணவர் முதலானவர்கள் மீது எனக்குப் பாசம் அதிகம்.
பாசம் என்ற பதத்துக்குப் பதிலாக யாழ்ப்பாணத்தவர்கள் “பச்சம்” என்ற சொல்லையே கூடுதலாக பயன்படுத்தி வருகிறார்கள்.
எனது கிராமத்தில் ஒருவர் வயல் வரப்புகளில் நடந்து செல்லும்போது உரக்கப் பாடிடுவார் இப்படி –
நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாற்றியே
சுற்றிவந்து மொண மொண என்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சருவம் கறிச்சுவை அறியுமோ?
சிவவாக்கியர் என்ற சித்தரின் பாடல் இது.
தரையில் நட்டு வைத்திருக்கும் உணர்ச்சிகள் ஏதுமற்ற கருங்கல்லை தெய்வ வடிவங்களாக வடித்து அதன்மீத பூக்களைச் சாத்தியும், மந்திரங்களை முணு முணுத்தவாறும் அதைச் சுற்றிவந்து வணங்குவதை அந்தத் தெய்வ வடிவம் அறிந்திடுமா? அல்லது அந்தத் தெய்வ வடிவம் உன்னிடம் பேசிடுமா? எப்படி கறி சமைக்கப் பயன்படு;ம் சட்டி, சட்டுவம் கறியின் சுவையை அறியாதோ அது போன்றேதான் நீ செய்யும் வழிபாடும் என்பது இந்தப் பாடலின் அர்த்தம். சிவவாக்கியர் சொல்வது நாத்திகம் என எடுத்த எடுப்பில் பொருள் கொள்ளக்கூடாது. “நாதன் உள்ளிருக்கையில் “ என அவர் பாடலில் வருகிறது. எல்லாம் வல்ல இறைவன் உன்னுள்ளே இருக்கிறான் என்பதை அவர் எடுத்துக் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்து மக்கள் தமது சமையல் பாத்திரங்களை சட்டி, சருவம், சருவச்சட்டி எனக் கூறுவதை நாம் கவனி;திருக்கிறோம் அல்லவா?
அவர்களின் வாயில் இருந்து அடிக்கடி வெளிப்படும் வார்த்தைகள் - “சும்மா இரு”
தாயுமானவரின் “தேஜாமயானந்தம்” பதிகத்தின் எட்டாவது பாடல் -
“சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறம் அரிது, சத்தாகி என்ன
சித்தமிசை குடிகொண்ட அறிவான்
தெய்வமே தேஜாமயானந்தமே”
சும்மா இருப்பது சிவநிலை. சித்தர்கள், ஞானிகள் யோகிகள் சும்மா இருக்கும் சிவநிலையில் தங்கி வாழ்ந்தனர். செல்லப்பா சுவாமிகளின் சீடரான யோகர் சுவாமிகள் சொல்வார்.
தன்னை அறிந்தால் தவம் வேறில்லை. சும்மா இருக்கும் சுகமறியவேண்டும். சிந்தை அடக்கியே சும்மா இருக்கின்ற திறனரிது.
சும்மா இருந்து பாருங்கள் அமைதி கிட்டும். ஆனந்தம் பெருகும். பிரச்சனைகள் தோன்றா.
ஆனால் பட்டினத்தார் ஒரு தடவை சும்மா, கைதட்டி பிரச்சனைக்குள்ளான ஒரு கதையும் உண்டு. அவர் இறைவழிபாட்டில் ஈடுபட்டு வந்த காலத்தில் பிச்சை எடுத்தே உண்டு வந்தார். ஒரு நாள் பிச்சை கேட்க ஒரு ஒரு வீட்டின் முன் நின்றார். அம்மா பிச்சை எனக் கேட்காமல் சும்மா கைகளைத் தட்டினார். வீட்டுக்காரன் வெளியே வந்து பட்டினத்தாரை தடி எடுத்து அடித்துவிட்டான், தனது மனைவியை யாரோ கைதட்டிக் கூப்பிடுவதாக எண்ணி. பட்டினத்தார் பாடினார் ஒரு பாடல் -
இருக்கும் இடம்தேடி என்பசிக்கே அன்னம்
உருக்கமுடன் கொண்டு வந்தால் உண்பேன்
பெருக்க அழைத்தாலும் போகேன் அரனே என் தேகம்
இளைத்தாலும் போகேன் இனி.
எல்லாவற்றிலும் சும்மா ஒரு கவனம் தேவை!
யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கில் மட்டுமல்ல நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இந்த சும்மாவுக்குத்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்.
உவன் என்ற சொல் பரிபாடல் ஒன்றில் இருந்திருக்கிறது.
எழுத்தாளர் சுஜாத்தா சொல்லுவார். உவன் இப்போது தமிழ்நாட்டில் வழக்கொழிந்து விட்டது. ஒரு அருமையான வார்த்தை இது. யாழ்ப்பாணத்தில் இன்றும் இதை பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறார்கள்.
இங்கே இருப்பான் - அவன்
இங்கே இருப்பான் - இவன்
எதிரே இருப்பான் - உவன்
யாழ்ப்பாணத்தில் பாமர மக்களும் பயன்படுத்தும் வார்த்தையன்றோ உவன்.
271446867_1214925712331399_8751009885689
 
 
271483201_1214926318998005_8342051079138
 
 
 
  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2022 at 12:20, nunavilan said:

யாழ்ப்பாணத்து கிராமங்களில் இப்படிக் கேட்டவர்கள் பலர் இருந்தார்கள்.

 

On 9/1/2022 at 12:20, nunavilan said:

யாழ்ப்பாணத்து மக்கள் தமது சமையல் பாத்திரங்களை சட்டி, சருவம், சருவச்சட்டி எனக் கூறுவதை நாம் கவனி;திருக்கிறோம் அல்லவா?

 

On 9/1/2022 at 12:20, nunavilan said:

யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கில்,

இந்தப் பதிவினுடைய தலைப்பு சற்று வித்தியாசமானதாக உணர வைக்கிறது.சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்திலுள்ள ராகல வித்தியாலயத்தில் அதிபராக இருந்த நண்பர் ஒருவருடன் ்அங்கு  சென்று கதைத்துக் கொண்டிருந்த போது சற்று தொலைவில் அவரது பாடசாலை ஆசிரியர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.அவரை இதற்கு முன்னர் எங்கோ பார்த்த நினைவு.எனவே அவரையே பார்த்தபடி நான் நிற்க அருகில் வந்த அவ் ஆசிரியர் சிரித்தபடி”கொக்கெண்று நினைத்தாயோ கொங்கணவா’என்று கேட்டார்.மலையகத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர் இந்த வார்த்தைப்பிரயோகத்தை அன்றே பயன்படுத்தி இருந்தார்.

சட்டி,சருவச்சட்டி என்ற வார்த்தைகள் கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலும் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப் படுகிறது.

சும்மா இருக்கிறது எவ்வளவு கஷ்டம் என்று தெரியமா என வடிவேல் தனது நகைச்சுவை காட்சியிலேயே சொல்லி இருப்பார்.

இப்படி இருக்கும் போது,

“யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கில்” என இங்கு குறிப்பிடுவதன் மூலம் எதனையோ இவர் விதந்துரைக்க முற்படுவதாகத் தெரிகிறது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.