Jump to content

மீள முடியாத மரண அடியாக அமையப் போகிறது! இலங்கைக்கு பகிரங்க எச்சரிக்கை

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார கொள்கைகள் காரணமாக ஏதோ ஒரு வகையில் நாடு வங்குரோத்து நிலைமைக்கு சென்றால், நாட்டில் முதலீடுகளை செய்துள்ள வெளிநாட்டவர்கள், தமது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைப் பிரிவின் பேராசிரியர் ஆனந்த (Prof.Ananda) தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்றால், அதுவும் நாட்டின் பொருளாதாரத்தின் மீதான மரண அடியாக இருக்கும் எனறும் அவர் எச்சரித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பேராசிரியர் ஆனந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு மொத்தமாக 7 ஆயிரம் மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது. ஜனவரி மாதத்தில் மாத்திரம் 699 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும்.

இந்த கடன் செலுத்துதலை பிற்போட முடியாது. இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லுமாறு பலர் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

 எனினும் அரசாங்கம் தற்போதும் சீனாவிடமே கடனை பெற்று வருகிறது. சீனாவிடம் பெறப்படும் கடன் நிதியை பயன்படுத்தி, அந்நாட்டிடம் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் அல்லது நாட்டின் சொத்து ஒன்றை எழுதிக்கொடுக்க வேண்டும்.

இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் கடனை பெற போகின்றனர். இந்த பணத்தில் மூலம் இந்தியாவில் இருந்து 500 சிறிய பேருந்துகள் மற்றும் பொலிஸாருக்கு தேவையான 750 ஜீப் வண்டிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு இவை தேவையா?. இது நாட்டு மக்களை வாழ வைக்க வேண்டிய நேரம். நாடு தற்போது ஏல விற்பனை நிலையம் போல் காணப்படுகிறது.

இவ்வாறான நிலைமையில் எமக்கு சில மாற்று வழிகள் உள்ளன. பிணை முறி கடன்களை பெற்றுள்ள நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவற்றை செலுத்துவதற்கு சிறிய காலத்தை அவகாசமாக கோரலாம். அதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும்.

எமக்கு நெருக்கமான நாடுகள் அப்படியில்லை என்றால், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி அல்லது வேறு சர்வதேச நிறுவனங்களிடம் நிவாரண முறையின் கீழ் கடனை பெற வேண்டும். எனினும் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுமாறு இந்த நிறுவனங்கள் கூறுகின்றன.

சர்வதேச நாணய நிதியத்தை கண்டு ஏன் அரசாங்கம் இந்தளவுக்கு பயப்படுகிறது என்று புரியவில்லை. ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவே அந்த நிறுவனம் கடனை வழங்குகிறது.

மறைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து டொலர்களையும் மீண்டும் வெளியில் கொண்டு வர நேரிடும். இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ள தொழிலாளர்கள் தமது டொலர்களை அனுப்புவதில்லை.

இதன் காரணமாக நாட்டுக்கு கிடைக்க வேண்டிய டொலர்களில் 500 மில்லியன் டொலர் வரை குறைந்துள்ளது. நாட்டின் நிதியில் காணப்படும் நிச்சயமற்ற நிலைமை இதற்கு காரணம்.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை பெறும் போது, அவர்களின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும். சீனா, இந்தியா போன்ற நாடுகளில் பெறப்படும் கடனை போன்று சர்வதேச நாணய நிதியத்திடம் பெறும் கடனை பயன்படுத்த முடியாது.

நிதியை வெளிப்படை தன்மையுடன் பயன்படுத்த வேண்டும். சர்வதேச நாணய நிதியம் வழங்கும் கடனில் தரகு பணம் பெற முடியாது. கடனை வழங்கிய பின்னர், நாணய நிதியம் முழுமையான கண்காணிப்பை மேற்கொள்ளும்.

எனினும் அரசாங்கம் குறுகிய கால இலாபங்களுக்காக முற்றாக திரிபுப்பட்ட பொருளாதார கொள்கையை அரசாங்கம் பின்பற்றுவதை காண முடிகிறது எனவும் பேராசிரியர் ஆனந்த குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/the-death-blow-going-to-fall-on-country-s-economy-1641791683

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எல்லா இடமும் இறுக வேறு வழியில்லாமல் சர்வதேச நிதியத்திடம் கையேந்துவினம் ஆனால் அதுவரை இந்த ஆட்சி நிலைக்குமோ என்பது சந்தேகமே.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நிதியத்தின் முதல் நிபந்தனையே, யுத்தமில்லா நிலையில் பாதுகாப்பு படை எண்ணிக்கை, செலவை குறை....

அதை செய்ய விருப்பம் இல்லை.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

(இராமாயணத்தில் ஆரியப்பொய்களுக்கு எதிராக நான் இராவணன் பக்கம் என்பதை சொல்லிக்கொண்டு.. இன்றைய இலங்கை நிலையின் உவமைக்காக )

இராவணன் ராமனுடனான யுத்தத்தில் தனது ஆயுதங்களை இழந்து நிராயுத பாணியாக ராமன் முன் தலைகுனிந்து நிற்கிறான்.. அப்பொழுது எவ்வளவோ ஆயிரம் உவமானங்கள் இருக்க இராவணனின் நிலையை,வேதனையை எதற்கு கம்பன் ஒப்பிடுகிறான் எண்றால் கடன்பட்டவன் நிலைக்கு ஒப்பிடுகிறான்.. அப்படி ஒரு கொடிய வேதனையான நிலமை கடன்பட்டு அதை அடைக்க முடியாமல் தடுமாறி நிற்பது

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்- கம்பன்

ஆனால் சிங்கள அரசோ அதைப்பற்றிய எந்த வெக்கமோ துக்கமோ இன்றி கடன் மேல் கடன் வாங்கி குவிப்பதில் முனைப்பாக இருக்கிறது.. இது எங்க போய் முடியுமோ..??

 • Like 4
 • Thanks 2
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது எங்க போய் முடியுமோ..??

உங்களுக்கு தனி நாடு கிடைப்பதில் முடியும்.

அசைக்க முடியாத பேரரசு என்று மார் தட்டி, எக்காளம் செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் பேரரசுக்கு, இடியாக வந்தது ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனியின் அதிகாரத்துக்கு வந்த ஹிட்லர்.

அடுத்தவன் சுதந்திரத்தை துப்பாக்கி முனையில் பறிப்பது அறமன்று என்ற போதனை கிடைத்தது, பேரரசுக்கு.

அதே போல, புலிகளை ஒழித்த கோத்தாவுக்கு, அரியணை கொடுத்த சிங்களத்துக்கு, பசி என்றால் என்ன என்று போதிக்கும் காலமிது.

அடுத்தவன் சுதந்திரத்தை துப்பாக்கி முனையில் பறிப்பது அறமன்று என்ற போதனை கிடைக்கும், சிங்களத்துக்கு.

 • Like 4
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்- கம்பன்

இராவணனனும், பிரபா போல தனித்து நின்றதால், ராமன் வானங்களையும் துணைக்கு கூட்டி வந்தும்.

இப்போதாதைய நிலை, கடன் கொடுத்தார் நெஞ்சம் போல என்பதே.

அநேகமானவை பணக் கடன்

 இதில் கிந்தியவும் அடங்கும்; கிந்தியாவின் கடன் பணம் மட்டும் அல்ல; பூகோள, அரசியல், பிராந்திய ராணுவக் கடன் கொடுத்தது; அதாவது கிந்திவை கண்னை இமை காப்பது போல காத்து நின்ற ஈழத்து தமிழர்களை அழித்து. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆனால் சிங்கள அரசோ அதைப்பற்றிய எந்த வெக்கமோ துக்கமோ இன்றி கடன் மேல் கடன் வாங்கி குவிப்பதில் முனைப்பாக இருக்கிறது.. இது எங்க போய் முடியுமோ..??

£100, £1000, £10, 000, £100, 000 தனிபட்டவரின் கடன், அந்த தனிநபருக்கு பிரச்சனை.

மில்லியன் அல்லது அதற்கு மேல் கடன், கடன் கொடுத்தவரின் பிரச்னை.

நாடுகள், அரசுகளுக்கும் இது பொருந்தும். 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆனால் சிங்கள அரசோ அதைப்பற்றிய எந்த வெக்கமோ துக்கமோ இன்றி கடன் மேல் கடன் வாங்கி குவிப்பதில் முனைப்பாக இருக்கிறது.. இது எங்க போய் முடியுமோ..??

அதுக்கு மானம்,ரோசம் , சூடு ,சொரணை இருக்க வேணும் அவையளுக்கு அது எதுவுமே இல்லைத்தானே

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

உங்களுக்கு தனி நாடு கிடைப்பதில் முடியும்.

அசைக்க முடியாத பேரரசு என்று மார் தட்டி, எக்காளம் செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் பேரரசுக்கு, இடியாக வந்தது ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனியின் அதிகாரத்துக்கு வந்த ஹிட்லர்.

அடுத்தவன் சுதந்திரத்தை துப்பாக்கி முனையில் பறிப்பது அறமன்று என்ற போதனை கிடைத்தது, பேரரசுக்கு.

அதே போல, புலிகளை ஒழித்த கோத்தாவுக்கு, அரியணை கொடுத்த சிங்களத்துக்கு, பசி என்றால் என்ன என்று போதிக்கும் காலமிது.

அடுத்தவன் சுதந்திரத்தை துப்பாக்கி முனையில் பறிப்பது அறமன்று என்ற போதனை கிடைக்கும், சிங்களத்துக்கு.

நான் நினைக்ககவில்லை .அது மேற்கு - இது கீழ்த் திசையின் நனைந்த சிங்க(ள)ம். பட்டினியை எதிர்கொண்டாலும் நாம் போரை நடாத்துவதை விடக்கூடாதெனப் பேசியவாறு ஏறக்குறைய எல்லா அரசுகளும் நடந்துகொண்டமையை நாம் கண்டுவந்திருக்கின்றோம். சிங்களவருக்கு கஞ்சி கிடைக்கும்போது எமது மக்களுக்கு நீர் கூடக்கிடைக்காதவாறு செய்யக்கூடுமேயன்றி ஒரு சிறு உரிமையைக்கூடக் கொடுக்கப்போவதில்லை. யாரின் காலிலும் விழுந்தாவது (எப்படிப் போரை வென்றதோ)  தன்னைப் பலப்படுத்திக்கொள்ளும். அப்போதும் இந்த உலகு எப்படிப் பயங்கரவாதத்துக்கெதிரான போரென வரிசைகட்டியதுபோல், இப்போது கொரேனா வீழ்ச்சியிலிருந்து காக்கவென வரிசைகட்டிக்காக்குமேயன்றி வேறெதையும் செய்யாது.  சிங்களமும் நிதியுதவி தருவதானால் தாருங்கள். எமது பிரச்சினையை நாம் தீர்ப்போமென்று கூறுமேயன்றி வேறெதையும் சிந்திக்காது. 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, nochchi said:

கொடுக்க வேண்டிய நிலையில் சிங்களம் இருக்காது....!

எடுக்க வேண்டிய நிலைக்கு எமது நாடும் வந்து விடும்...!

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

கொடுக்க வேண்டிய நிலையில் சிங்களம் இருக்காது....!

எடுக்க வேண்டிய நிலைக்கு எமது நாடும் வந்து விடும்...!

அப்படிவந்தால் மகிழ்ச்சியே. ஆனால் அதற்கான எந்த மிதப்பையும் காணமுடியவில்லை. ஆயுதபலமிருந்தபோதாவது இந்தா அந்தா என்று ஒரு துடிப்பாவது இருந்தது. கடந்த 12ஆண்டில் ஒரு துகளளவுகூட நகரதாநிலை. எங்கள் இராசதந்திரயளும் குண்டுச்சட்டிக்கை குதிரையோடுகினம். கால, நேர, சூழலை வைத்து ஒன்றையும் நகர்த்தாதநிலையில்....

 • Like 3
 • Thanks 2
 • Sad 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

சர்வதேச நிதியத்தின் முதல் நிபந்தனையே, யுத்தமில்லா நிலையில் பாதுகாப்பு படை எண்ணிக்கை, செலவை குறை....

அதை செய்ய விருப்பம் இல்லை.

அது மட்டும் அல்ல தரகுப்பணம்  கிடையாது ஒவ்வொரு பென்னியும்  எதற்கு சிலவாகுது என்பதில் குறியாக இருப்பார்கள் ஆனால் எந்த நிதியத்திடமும் கடன் வாங்கினால் மீள்வதுக்கு சாத்தியம் இல்லை .

13 hours ago, Nathamuni said:

உங்களுக்கு தனி நாடு கிடைப்பதில் முடியும்.

அதுக்கு பிறகு தான் ரிங் ரிங் ரிங்கா  விளையாட்டு இருக்கும் இந்தியாவை தவிர்த்து வேறு எவரிடமும் கதைக்க முடியாத குமர் பிள்ளையாட்டம் எமது அரசியல்வாதிகள் இருக்கையில் ஈழம் கிடைத்தாலும் சுமத்திரன் போன்றவர்கள் டெல்லியில் கொண்டு போய் அடவு வைத்து விடுவார்கள் .

Edited by பெருமாள்
 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

அரசியல்வாதிகள் இருக்கையில் ஈழம் கிடைத்தாலும் சுமத்திரன் போன்றவர்கள் டெல்லியில் கொண்டு போய் அடவு வைத்து விடுவார்கள் .

காகத்திற்குக் கனவிலும் இதே நினைப்பு. 🤦🏼‍♂️

உலகில் நாம் மட்டுமே புத்திசாலிகள் என்னும் நினைப்பில் நாம் இருக்கும்வரை, சிங்களம் 2500 வருடங்கள் அல்ல,  இன்னும் 5000 வருடங்களுக்கு எங்களை மட்டுமல்ல இந்தியாவயும் சேர்த்தே வெட்டியாடும்.. 

தயவுசெய்து வித்தியாசமாகச்   சிந்தியுங்கள். 

Edited by Kapithan
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, வாதவூரான் said:

அதுக்கு மானம்,ரோசம் , சூடு ,சொரணை இருக்க வேணும் அவையளுக்கு அது எதுவுமே இல்லைத்தானே

இலங்கை மீளக்கொடுக்கும் எண்ணத்தோடு கடன் வாங்கவில்லை, அப்படியொரு எண்ணமிருந்தால் கொடுக்கிற வழியை உணர்ந்து சிக்கனமாக செலவு செய்து, கடன் அழிக்கிற வழியை கண்டுபிடித்திருக்கும். அதுவோ மீண்டும் மீண்டும் கடன் வாங்குவதிலேயே காலத்தை கழிக்கிறது. அடுத்து எந்த நாட்டிடம், என்ன சொல்லி கையேந்துவது என்று ஒரு நீண்ட திட்டமே வைத்திருக்கிறது. கொடுக்கிற நாடுகளும் மீளகிடைக்கும் என்கிற எண்ணத்தில் கொடுக்கவில்லை, தங்களின் சுய தேவைக்காக கொடுக்கின்றன. ஆனால் பிரச்சனை நாட்டு மக்களுக்கே. எப்படி இனப்பிரச்சனையை தீர்ப்பதில் சர்வதேசத்துக்கு புலுடா விடுகுதோ, அவ்வாறே கடன் கொடுத்த நாடுகளுக்கும் நடக்கும். சில நாட்களுக்கு முன் ஒரு அரசியல்வாதி சீனாவுக்கு ஒரு எச்சரிக்கை அனுப்பியது அறிந்திலரோ? அரசு மாறும்போது அதனுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளும் ரத்தாகும் என்று. அவன் சுழிச்சுப்போடுவான்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 11/1/2022 at 07:35, satan said:

அரசு மாறும்போது அதனுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளும் ரத்தாகும் என்று. அவன் சுழிச்சுப்போடுவான்.

சிங்களத்தின் முழுமையான நிலையைப் பதிவுசெய்துள்ளீர்கள். இந்தக் கடைசிச் சொல்லியம்தான் நடக்கும். சிங்களத் தலைமைகள் நாட்டுநலனுக்காக வெளியே தாம் எதிரெதிர் என்று காட்டுவார்கள். ஆனால் இதுபோன்ற பாரிய விடயங்களில் ஒருவரையொருவர் அனுசரித்துக் காத்துக்கொள்வர். அதுதான் அவர்களது இராசதந்திரம். எம்மைப்போல் 'தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப் பிழை'  என்ற கோதாவில் திரிபவர்களல்ல. தமிழருக்கு எதுவுமே இல்லாத, இந்திய நலன் பேணும் இந்தோ - சிறிலங்கா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரும் வெற்றுக்கடிதத்தில் கையோப்பமிடவே பலமாதங்கள். இதுதான் தமிழரின் இராயதந்திரம். இந்த லட்சணத்தில் தமிழ்விண்ணர் மரணஅடியாம்! 

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்ட்சேகாவுக்கு இறுதி யுத்ததில் இந்தியா கொடுத்த அசைன்ட்மென் கிளிநொச்சிவரை பிடி அப்புறம் பாக்கலாம் என்பதே ஆனால் இதை மணந்து பிடித்த சீனா கொத்தாவுக்குச் சொல்ல சரத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி சவேந்திர டி சில்வாவை முன்னிறுத்தி போரை முடிவுக்குக் கொண்டுவந்து இன அழிப்பில் முடித்தது. அப்போதே சவேந்திர சில்வாவுக்கு மிதப்புக்கூடிவிட்டது ஆட்சிக்கனவு கனியும் நேரமிது.

சரத் பொன்சேகாவுக்கு வராத கனா அதுபோல சவேந்திராவுக்கும் வரும் அப்போது கொத்தாவுக்குப் பக்கத்தில் சவேந்திர டி சில்வா இருந்தான் இப்போது அவனே குறிபார்த்துச் சுட எத்தனிக்கும்போது கொத்தாவுக்குப் பக்கத்தில் யாரும் இல்லை என்றாகிவிட்டது.

இந்த நாடகத்தில் அடுத்த காட்சிக்குப் படுதா விலகப்போகிறது.

 • Like 1
Link to comment
Share on other sites

அந்த மாணிக்கக் கல்லை விற்றாலே கடனை அடைத்துவிடலாம் என்றார்களே.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்த மாணிக்கக் கல்லை விற்றாலே கடனை அடைத்துவிடலாம் என்றார்களே.

ட்ரில்லியன் கணக்கான எண்ணெய் வளம் மன்னாரில் கிண்டினால் வரும் என்று சொல்கிறார்கள் அதைவைத்து ஜுஜுப்பி  இந்த கடனை  பூ ....என்று ஊதி அடைத்துவிடலாம் 😃

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உலகில் எண்ணெய் வளம் அதிகமான நாடு வெனிசுலா ஆனால் ஒரு புரொய்லர் கோழி வாங்க பத்துக்கட்டுக் காசை தோழில் சுமந்து வரவேண்டும் காரணம் எண்ணெயை உறிஞ்சி எடுக்கும் தொழில்நுட்பத்தை அமெரிக்காவும் இங்கிலாந்தும் தமது உரிமையாக்கி வைத்திருக்கிறார்கள் இணங்கிப்போனால் சரி இல்லையெனில் சவூதிக்கும் இதே நிலைதான் மற்றப்படி மன்னார் வளைகுடாவில் அவ்வளவு சொல்லிக்கொள்ளும்படியான வளம் இல்லை. 

மற்றப்படி இவர்கள் எண்ணெயை உறிஞ்ச வெளிக்கிடும்போது மின்சாரக்காரின் பயன்பாடு பட்டிதொட்டி எல்லாம் வந்துவிடும் அந்த அளவுக்கு மந்தகதியில் எல்லாம் நடக்கும் நாடு. 

ஏதாவது தகிடுதித்தம் பண்ணி தற்காலிகமாக ஏதாவதொரு தீர்வைக் கண்டுபிடிப்பாங்கள்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?! 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 11/1/2022 at 02:43, Kapithan said:

தயவுசெய்து வித்தியாசமாகச்   சிந்தியுங்கள். 

விக்ரமன் திரைப்படங்கள் பார்த்து இருந்தால் புரியும் அவரின் படங்களில் வில்லன் கூட இருக்கமாட்டார் இருந்தாலும் ஆட்டுக்குட்டி ரேஞ்சில் இருப்பார்  உலகில் வாழும் மனிதர்களுக்கு அநேகருக்கு வாழ்வு அப்படித்தான்  இருக்கவேணும் என்பது நினைப்பு  விருப்பு ஆனால் யாதார்த்ததில் பிரச்சனை பிடித்த உலகமாக  அதுவும் குடும்ப தலைவனா  இருந்தால் இலகுவாக புரியும் மேலதிகாரியில் இருந்து சக கூட்டாளி  வேலை செய்பவர்கள் வேலைக்கான பயணம் முதலாளி இப்படி பலரையும் பலரின் கசடுத்தன்மைகளில் இருந்து வீட்டுக்கு தேவையான பணத்தை கொண்டுவந்து சேர்ப்பதில் உள்ள பிரச்சனையே ஒரு போராட்டமாக இருக்கும் இதில் கூகிள் சுந்தர் பிச்சை கூட தினம் தினம் பிரச்சனையை சந்தித்துக்கொண்டுதான் இருப்பார் விதி விலக்கு  கிடையாது . இப்படி இருக்கையில் அரசியல்வாதி விக்ரமன் போல் பாலும் தேனும் இந்தா ஓடவைப்பன் என்று பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வருவது வழமையான ஒன்று .........................ஆனால் சுமத்திரன் சொந்த இனத்தின் மீது நடாத்தப்பட்ட  போர்க்குற்றம் நிறுவ  முடியாது இனஅழிப்பு நிறுவ முடியாது காணி விடுவிப்பு அதுவும் முடியாது அரசியல்கைதிகள் விடுவிப்பு இன்னும் நாலு தமிழரை தனக்கு குண்டுவைக்க வந்தவர்கள் என்று எண்ணிக்கையை கூட்டி உள்ளார் . காணாமல் போனோர் அதுபற்றி கதைக்க கூடாது என்கிறார் தீர்வு 13 திருத்தம் அதுவும் கூடாது ......................அப்ப  உங்கள் சுமத்திரன்  என்னதான்யா கடந்த 12 வருடத்தில் செய்தார் ?

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்த மாணிக்கக் கல்லை விற்றாலே கடனை அடைத்துவிடலாம் என்றார்களே.

இந்த திரியில் கருத்து எழுதிய ஒரே பெண்மணி.அதுவும் மானிக்க கல் இருந்தபடியால்.அதகப் பட்டது......😄

Edited by சுவைப்பிரியன்
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பெருமாள் said:

விக்ரமன் திரைப்படங்கள் பார்த்து இருந்தால் புரியும் அவரின் படங்களில் வில்லன் கூட இருக்கமாட்டார் இருந்தாலும் ஆட்டுக்குட்டி ரேஞ்சில் இருப்பார்  உலகில் வாழும் மனிதர்களுக்கு அநேகருக்கு வாழ்வு அப்படித்தான்  இருக்கவேணும் என்பது நினைப்பு  விருப்பு ஆனால் யாதார்த்ததில் பிரச்சனை பிடித்த உலகமாக  அதுவும் குடும்ப தலைவனா  இருந்தால் இலகுவாக புரியும் மேலதிகாரியில் இருந்து சக கூட்டாளி  வேலை செய்பவர்கள் வேலைக்கான பயணம் முதலாளி இப்படி பலரையும் பலரின் கசடுத்தன்மைகளில் இருந்து வீட்டுக்கு தேவையான பணத்தை கொண்டுவந்து சேர்ப்பதில் உள்ள பிரச்சனையே ஒரு போராட்டமாக இருக்கும் இதில் கூகிள் சுந்தர் பிச்சை கூட தினம் தினம் பிரச்சனையை சந்தித்துக்கொண்டுதான் இருப்பார் விதி விலக்கு  கிடையாது . இப்படி இருக்கையில் அரசியல்வாதி விக்ரமன் போல் பாலும் தேனும் இந்தா ஓடவைப்பன் என்று பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வருவது வழமையான ஒன்று .........................ஆனால் சுமத்திரன் சொந்த இனத்தின் மீது நடாத்தப்பட்ட  போர்க்குற்றம் நிறுவ  முடியாது இனஅழிப்பு நிறுவ முடியாது காணி விடுவிப்பு அதுவும் முடியாது அரசியல்கைதிகள் விடுவிப்பு இன்னும் நாலு தமிழரை தனக்கு குண்டுவைக்க வந்தவர்கள் என்று எண்ணிக்கையை கூட்டி உள்ளார் . காணாமல் போனோர் அதுபற்றி கதைக்க கூடாது என்கிறார் தீர்வு 13 திருத்தம் அதுவும் கூடாது ......................அப்ப  உங்கள் சுமத்திரன்  என்னதான்யா கடந்த 12 வருடத்தில் செய்தார் ?

பெருஸ், எப்பவும் ஆட்டுக்குள்ள மாட்டை விட்டுத்தான் பழக்கம் போல. 

சுமந்திரனைத் திட்டுவதற்கு தனித்திரி தொடங்குங்கள். நானும் வருகிறேன்,  சேர்ந்து திட்டுவோம்.

ஆனால் இந்தத் திரி சுமந்திரன் தொடர்பானது அல்ல. 🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Elugnajiru said:

சரத் பொன்ட்சேகாவுக்கு இறுதி யுத்ததில் இந்தியா கொடுத்த அசைன்ட்மென் கிளிநொச்சிவரை பிடி அப்புறம் பாக்கலாம் என்பதே ஆனால் இதை மணந்து பிடித்த சீனா கொத்தாவுக்குச் சொல்ல சரத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி சவேந்திர டி சில்வாவை முன்னிறுத்தி போரை முடிவுக்குக் கொண்டுவந்து இன அழிப்பில் முடித்தது. அப்போதே சவேந்திர சில்வாவுக்கு மிதப்புக்கூடிவிட்டது ஆட்சிக்கனவு கனியும் நேரமிது.

சரத் பொன்சேகாவுக்கு வராத கனா அதுபோல சவேந்திராவுக்கும் வரும் அப்போது கொத்தாவுக்குப் பக்கத்தில் சவேந்திர டி சில்வா இருந்தான் இப்போது அவனே குறிபார்த்துச் சுட எத்தனிக்கும்போது கொத்தாவுக்குப் பக்கத்தில் யாரும் இல்லை என்றாகிவிட்டது.

இந்த நாடகத்தில் அடுத்த காட்சிக்குப் படுதா விலகப்போகிறது.

கிளிநொச்சியுடன் நிறுத்த முடிவெடுத்தது மகிந்த.

மக்கள்  அழிந்தாலும் பிரச்சனை இல்லை. புலிகளை முற்றுமுழுதாக அழித்தாக வேண்டும் எனக் கட்டளை இட்டது இந்தியா. இதனை நான் எனது தொடர்புகளூடாக உறுதிப்படுத்திக் கொண்டுள்ளேன். 

வடக்கை புலிகளிடம் கொடுத்துவிட்டு (நிர்வாகத்தை ) நாடு முழுவதும் தனது குடும்ப ஆட்சியை கொண்டு நடாத்த மகிந்த விரும்பினார். இதனால்தான் போரின் இறுதி நாட்களில் மகிந்தவும் சரத்தும் நாட்டில் நிற்கவில்லை. நின்றிருந்தால் போர்க் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடும்  என அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. 

புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என்பதில் எமது பக்கத்திலும் பலர் வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருந்தார்கள். இவர்களே இறுதிவரை புலிகளை யுத்தம் புரிய நம்பிக்கையூட்டியவர்கள்.  புலிகளின் கையில் ஆட்சி அதிகாரம் போய்ச் சேரக்கூடாது என்பதில் இவர்கள்  மிகத் தெளிவாக இருந்தார்கள். 

யுத்தம் முடிந்தவுடன் நாட்டைக் கைப்பற்றுவதற்கு சரத் பொன்சேகா முனைந்தார். யுத்தம் முடிந்தவுடன் காலிமுகத்திடலில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் இதனை செயற்படுத்த சரத் திட்டமிட்டிருந்தார். இவருக்குப்பின்னால் வட அமெரிக்கா இருந்தது.

ஆனால் இதனை மோப்பம் பிடித்த இந்தியா, மகிந்தவிற்கு அறிவிக்க, வடபகுதியில் இருந்து கொழும்பிற்கு வரவழைக்கப்பட ஏற்பாடாகியிருந்த முன்னணிப் போரிடும் படைப் பிரிவுகளை, அனுராதபுரத்துடன் வழிமறித்து ஆட்சியைக் காப்பாற்றிக்கொண்டது அரசாங்கம். 

இதற்கு சரத்திற்கு வழங்கப்பட்ட பரிசுதான் அவரது கைதும் சிறைவாசமும். 

போரை ஒரு கட்டத்துடன் நிறைவுசெய்ய விரும்பிய, ஆட்சிக்கவிழ்ப்பை மேற்கொள்ள முனைந்த மேற்கின் இரு திட்டமும் தோல்வியில் முடிவடைந்தது. 

Edited by Kapithan
 • Confused 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

வடக்கை புலிகளிடம் கொடுத்துவிட்டு (நிர்வாகத்தை ) நாடு முழுவதும் தனது குடும்ப ஆட்சியை கொண்டு நடாத்த மகிந்த விரும்பினார்.

அப்போ இது இரண்டாவது சந்தர்ப்பமாக இருந்திருக்குமா?

Link to comment
Share on other sites

Please sign in to comment

You will be able to leave a comment after signing inSign In Now
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.