Jump to content

சனசமூக, ஆலய நிர்வாகங்களில் பெண்களை இணைக்க கோரி நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சனசமூக, ஆலய நிர்வாகங்களில் பெண்களை இணைக்க கோரி நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்

January 11, 2022

spacer.png

 

சனசமூக நிலையங்கள் மற்றும் கோவில் நிர்வாகங்களில் பெண்களை இணைத்துக்கொள்வதனை கட்டாயமாக்க வேண்டும் என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் 46ஆவது மாதாந்த சபை அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது சபை உறுப்பினர் சி.கௌசலா , ” சனசமூக நிலையங்கள் மற்றும் கோவில் நிர்வாகங்களில் பெண்களை இணைத்துக்கொள்வதனை கட்டாயமாக்க வேண்டும்” என சபையில் பிரேரணையை முன் வைத்தார். அதனை சபை உறுப்பினர்கள் ஆதரித்ததை அடுத்து சபையில் அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

https://globaltamilnews.net/2022/171676

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டம்போட்டுத்தான் பெண்களை சனசமூக நிலையங்கள் மற்றும் கோவில் நிர்வாகங்களில் சேர்க்கவேண்டும் என்ற நிலை தமிழர்களும் தலிபான்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்றுதான் சொல்கின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீர்மானம் ஆதரவுடன் நிறைவேறியதே பெரிது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

சட்டம்போட்டுத்தான் பெண்களை சனசமூக நிலையங்கள் மற்றும் கோவில் நிர்வாகங்களில் சேர்க்கவேண்டும் என்ற நிலை தமிழர்களும் தலிபான்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்றுதான் சொல்கின்றது!

வெளி/வெள்ளைக்கார நாடுகளில் சட்டங்கள் மூலம் சம உரிமை மற்றும் மனித உரிமைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துகின்றார்கள்.
எனவே சட்டங்கள் மனித இனத்திற்கு இன்றியமையாதது. சாட்டை மனிதனுக்கும் தேவை மிருக இனங்களுக்கும் தேவை.

இருப்பினும் தலிபான்களை இங்கே புகுத்தியது மிகத்தவறு.😀


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

சட்டம்போட்டுத்தான் பெண்களை சனசமூக நிலையங்கள் மற்றும் கோவில் நிர்வாகங்களில் சேர்க்கவேண்டும் என்ற நிலை தமிழர்களும் தலிபான்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்றுதான் சொல்கின்றது!

புலிகளின் காலத்தில் சன சமூக நிலையங்களில்  குறிப்பிட்ட நேரம் பெண்கள் நேரம் வீட்டு வேலைகள் முடிந்த நேரம்பின்னேரம் இரண்டில் இருந்து  அவர்கள்தான் அவர்களின் நேரம்தான் 6 மணிக்கு பின்தான் ஆண் பிறவிகளுக்கு செய்தி பார்க்கும் வரம் கிடைக்கும். இப்ப இந்த அரசுகளின் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை யாக்கும் அதான் தீர்மானம் போட்டு நிறைவேற்றுகிறார்கள் ஆக்கும் .

ஆனால் அந்த நேரம் வாசல் படிகள் கட்டப்பட்டதே பெண்கள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக இருந்து  பேன்  பார்க்கத்தான் என்பது போல் நேரத்தை வீணாக்கியபடியால் சில இடங்களில் பின்னேரம் 4 ல் இருந்து ஆறு ஆக்கினவர்கள் என்ற உபரி கதையும் உண்டு .

😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.