Jump to content

மிசோஜினி (Misogyny) எனும் ‘பெண்வெறுப்பு’!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மிசோஜினி (Misogyny) எனும் ‘பெண்வெறுப்பு’!

 

உலக சுகாதாரமைப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறை ஒரு தொற்றுநோயாகவும், உலகலாவிய பிரச்சனையாகவும் உள்ளது என கருத்துதெரிவித்துள்ளது. அத்துடன் மூன்றில் ஒரு பகுதி பெண்கள் தமது நெருங்கிய partner-ஆல் உடல் ரீதியான மற்றும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்ற தகவலையும் தெரிவிக்கிறது. இதனை பலரும் பெண்வெறுப்பு என்றே பதிவிடுகிறார்கள்.

இந்த பெண்வெறுப்பு என்பதைக் குறிக்கும் ஆங்கில பதமான மிசோஜினி (misogyny) என்ற சொல்லானது, கிரேக்க மொழியை தனது வேராக கொண்டுள்ளது. Misos – (hate) வெறுப்பு என்பதாகவும் Gyny – (woman) பெண் என்பதாகவும் கருதி பெண்வெறுப்பு என அர்த்தம் கொள்ளப்பட்டது. இந்த பெண்வெறுப்பு எனும் அர்த்தமானது கோட்பாட்டு மட்டத்தில் பொருத்தமானதுதானா? என்று கேள்வி எழுப்பப்படுகிறது. ஏனெனில் இப்படிப்பட்ட ஆண்கள் எல்லா பெண்களையும் வெறுப்பதில்லை. அவர்களுக்கு தாய், மகள், தங்கை, துணைவி என உறவுகள் உண்டு. அத்துடன் பாதிக்கப்படும் நபரின் பாதிப்புகளை போதுமானளவு வெளிப்படுத்தவில்லை என்ற அங்கலாயிப்பையும் தெரிவிக்கின்றனர். ஆதலால் இந்த மிசோஜினி என்ற பதத்தின் விரிவான அர்த்தத்தை தேடுவதாகவே இக்கட்டுரை அமைகிறது. கிரேக்க இலக்கியத்தில் மிசோஜினி என்பது ஒரு நோயாகவும், சமூக விரோத செயற்பாடாகவுமே கருதப்பட்டு வந்துள்ளது. வரலாறு முழுவதும் பெண்வெறுப்பு. கருத்துக்களும், செயற்பாடுகளும் தொடர்நிகழ்வாகவே இருப்பதை நாம் காணலாம்.

வரலாற்று நோக்கில் மிசோஜினி எனும் கருத்து ஒரு சித்தாந்தம் போல் செயற்பட்டு வந்துள்ளது. இதனை கிரேக்க தத்துவஞானிகளின் கருத்துக்களிலும் காணலாம். கிரேக்கத்தின் சிறந்த தத்துவவாதிகளில் அரிஸ்டாட்டில், பிளேட்டோ போன்றோர் முக்கியமானவர்கள் எனலாம். பிளேட்டோ கி.மு 427 – 347 காலப்பகுதியிலும், அரிஸ்டாட்டில் கி.மு 384 – 322 காலப்பகுதியிலும் வாழ்ந்தவர்கள் ஆவர். இவர்களில் பின்னரே யேசுநாதர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. அதேசமயம் இன்றைய 19ம், 20 ம் நூற்றாண்டு சமூகவியலாளர்கள் மிசோஜினி குறித்து வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பதையும் காணக்கூடியதாகவே உள்ளது. இவ்வாறு காலகட்டங்களை அவதானிக்கும்போது பெண் வெறுப்பு(Misogyny) என்ற செயற்பாடு எவ்வளவு ஆழமாக புரையோடிப்போய் இருந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

  • தத்துவவியலாளர் அரிஸ்டாட்டில் பெண்கள் இயற்கையான குறைபாடு உடையவர்கள், பூரணமற்ற ஆண் (inperfect male) என குறிப்பிடுகிறார்.
  • ஆண்களின் ஆதிக்கத்திற்காகவே பெண்கள் உருவாக்கப்பட்டவர்கள். பெண்கள் ஒரு பகுதி ஆன்மாவையே கொண்டுள்ளார்கள். அது முழுமை அற்றது. குடிமக்கள் மற்ற குடிமக்களை ஆள்வது போன்று பெண்கள் அரசியலமைப்பு ரீதியில் ஆண்களால் ஆளப்படுவதற்கு பிறந்தவர்கள். இயற்கையில் பெண் உடலானது குழந்தைவளர்ப்பு, மறுஉற்பத்தி என்பவற்றிற்காகவே வடிவமைந்துள்ளது என்கிறார்.
  • பிளேட்டோ ‘குடியரசு’ எனும் நூலில் அரசியல் பாதுகாப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரேமாதிரி தன்மையை கொண்டுள்ளது. ஆனால் ஆண் பலமானவர், பெண் பலவீனமானவர் என்ற கருத்தை கொண்டிருந்தார்.
  • பெண்கள் ஆண்களைப்போல வேலைகள் செய்வார்கள் என எதிர்பாக்கப்பட்டால் அவர்களுக்கு அதை கற்பிக்க வேண்டும் என கூறுகிறார்.
  • ஹெகல் கூறுகையில் பெண்கள் கல்விக்கு தகுதியானவர்கள். ஆனால் அறிவியல் துறையில் தத்துவம், விஞ்ஞானம் போன்ற சில துறைகள் பெண்களுக்கு பொருத்தமற்றது என கூறுகிறார்.
  • கிரேக்க ஐதீகத்தில் பண்டோரா பெட்டியின் (Pandora Box) கதையுள்ளது. பண்டோரா என்பவர் கடவுளால் உருவாக்கப்பட்ட முதல் பெண். கடவுள், அவரிடம் ஒரு ஒரு பெட்டியை பரிசாக கொடுத்து அனுப்புகிறார். பெட்டியினை திறக்கவேண்டாம் என கூறப்பட்டது. அவர் ஆசையினால் பெட்டியை திறக்க, உள்ளே இருந்த எல்லா தீமைகளுக்கான ஆவிகள் வெளியேறிவிட்டது. இதன் அர்த்தம் எல்லா தீமைகளுக்கும் பெண்ணே காரணமானவர் என்பதாகும்.
  • மதங்களில் கூட பெண்கள் இரண்டாம் தரமாகவே உள்ளார்கள். பைபிளில் மனிதனின் படைப்பு பற்றி கூறுகையில், கடவுள் முதலில் ஆதாமை படைத்தார். பின்னரே ஆதாமுக்காக அவருடைய விலா எலும்பில் இருந்து ஏவாளை படைத்தார். கடவுளின் கட்டளையை மீறி சொர்க்கத்திலுள்ள அப்பிள் பழத்தை பிசாசின் கதையை கேட்டு தானும் உண்டு, ஆதாமையும் உண்ணச் செய்ததனால் அவர்கள் இருவரும் சொர்க்கத்தில் இருந்த வெளியேற்றப்பட்டு பூமியில் வாழுமாறு சபிக்கப்பட்டார்கள். கடவுள் பெண்களை “நீங்கள் குழந்தைப்பேறு கஸ்டத்தினையும், ஆணின் பிரிவுத் துன்பத்தையும் பெறுவதுடன் ஆணின் ஆளுகைக்கு கீழ் இருப்பீர்கள்” என சாபம் இடப்பட்டதாக கூறப்படுகிறது.
  • Allan G. Jhonson எனும் சமூகவியலாளர் misogyny ஐ பெண்கள் மீதான வெறுப்பாக வெளிப்படுத்தப்படும் கலாச்சார அணுகுமுறை என்கிறார். ஆணாதிக்க சமூகங்களில் பெண்களை ஒடுக்குவதற்கு மிசோஜினி பயன்படுத்தப்படுகிறது. இந்த மிசோஜினி பாலியல் தப்பெண்ணத்திலும், சித்தாந்தத்திலும் மையப்பகுதியாக உள்ளது. இது பல வழிகளில் பெண்கள் மீது நகைச்சுவை, ஆபாசம், வன்முறை என அவர்களை அவமதிப்பதற்கு நிகழ்த்தப்படுகிறது என்கிறார்.
  • Michael Flood எனும் சமூகவியலாளர் மிசோஜினி பெரும்பாலும் ஆண்களில் காணப்படும். எனினும் பெண்களிடம் இருந்து பிற பெண்களுக்கு எதிராகவும் நடைமுறையில் உள்ளது என்கிறார். ஆணாதிக்க சமூக்கட்டமைப்பில் செயற்படும் ஒரு சித்தாந்தமாக அல்லது நம்பிக்கையாக பல்லாயிரம் ஆண்டுகளாக பெண்களின் கீழ்படிவு நிலையை தொடர்ந்து வைத்திருப்பதற்கு மிசோஜினி பயன்படுத்தப்படும். இது பெண்களுக்கான அதிகாரம், முடிவெடுக்கும் உரிமை போன்றவற்றை மட்டுப்படுத்தும் அணுகுமுறையுடன் தொடர்புடையது என்கிறார்.

மேற்கூறப்பட்ட கருத்துகள் வரலாற்று ரீதியாக மேலைநாடுகளில் மிசோஜினி எனப்படுவது பெண்கள் மீதான வெறுப்பாகவும், அதன் நடைமுறை அர்த்தமாகவும், நம்பிக்கையாகவும் கொள்ளப்பட்டதை எடுத்துக் காட்டுபவையாகும். இந்திய தமிழ் புராண, இலக்கியங்களில் கூட பெண்வெறுப்பு கருத்துக்கள் வெளிப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பெண்ணிய ஆய்வாளர் செல்வி திருச்சந்திரன் தமது நூலில் நாலடியாரில் வரும் பாடல் ஒன்றை குறிப்பிடுகிறார்.

எறி என்றுஎதிர் நிற்பாள் கூற்றம் அதிகாலை

அட்டில் புகாதாள் அரும்பிணி- அட்டதளை

உண்டி உதவாதாள் இல்வாழ் பேய் இம்மூவர்

கொண்டானை கொல்லும் படை

இதன் அர்த்தமாக கணவனை எதிர்த்து நிற்பவள் எமன் எனவும், அதிகாலையில் சமையல் அறைக்கு போகாதவள் பெரும்நோய் போன்றவள் எனவும், சமைத்த உணவை உண்பதற்கு உதவாதவள் வீட்டில் வாழும் பேய் எனவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட பெண்கள் கொண்டவனை கொல்லும் தன்மை உடையவர் என அர்த்தம் கொள்ளப்படுகிறது.

spacer.png

 

இதேபோல் கீழே உள்ள திருக்குறளில்

“பெண் ஏவல் செய்தொழுகும் ஆண்மையில் நாணுடைப்

பெண்ணே பெருமை தரும்”

எனக் கூறப்படுகிறது. இதன் பொருள் மனைவிக்கு பணிவிடை செய்வது ஆணுக்கு அவமானம். அத்தகைய ஆணைவிட நாணமுடைய பெண்ணே பெருமையானவள் எனப் பொருள் படுகிறது.

அதேபோன்று தொல்காப்பியத்தில்

“தன்னுறு வேட்கை கிழவன்முன் கிளர்த்தல்

எண்ணுங்கானா கிழத்திக்கில்லை”

தலைவன் முன் தன்னைப்பற்றி புகழ்ந்து பேசும் உரிமை பெண்ணுக்கு இல்லை எனக் கூறப்படுகிறது.

பட்டினத்தார் பாடல் ஒன்று

பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம் பிடித்திட்டென்னை.                                                                            
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கி கடிதடத்து
புண்ணாங் குழியிடைத் தள்ளி என் போத பொருள் பறிக்க
எண்ணாதுனை மறந்தேன் இறைவா கச்சி ஏகம்பனே
இதில் பெண் என்பவள் மாயப்பிசாசு எனவும், கண்ணால் வெருட்பவள், முலையால் மயக்குபவள், புண்ணாங்குழி யோனியில் தள்ளுபவள் என அருவெருப்பாகவே கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

சித்தர் பாடல் ஒன்றில்

“வட்டமுலை யென்றுமிக வற்றுந்தோலை
  மாமேரு என்றுவமை வைத்து கூறுவர்
  கெட்டநாற்ற முள்ளயோனிக் கேணியில் வீழ்ந்தோர்
  கெடுவரென்றே நீ துணிந் தாடாய் பாம்பே”

இதன் பொருளானது வற்றிப்போகும் தோலையுடைய முலைகளை மேன்மையான, உயர்ந்த மாமேரு என உவமை கொள்வதும், கெட்ட நாற்றமுள்ள யோனிக்குழிக்குள் வீழ்ந்துபோவதால் அழிந்துபோவாய் என கூறுகிறது.

இதுபோன்று பெண் வெறுப்பை வெளிப்படுத்தும் நூற்றுக்கணக்கான ஐதீகமும் பழமொழிகளும் நடைமுறையில் இருப்பதையும் காணலாம். அவற்றில் சிலவற்றை கீழே கிறுப்பிடுகிறேன்.

  • “பெண் பேய்க்கு சமன்”
  • “பெட்டைக்கோழி கூவி பொழுது விடியாது”
  • “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு”
  • “ஆணுக்கு அடங்கி நடப்பதே பெண்ணுக்கு அழகு”
  • “ஆண் கெட்டால் சம்பவம் பெண் கெட்டால் சரித்திரம்”
  • “அழகான பெண் ஆனந்தப்பட ஆரம்பித்தால் பணப்பை கண்ணீர் விட ஆரம்பிக்கும்”
  • கெண்டைக்கால் சிறுத்தவளும் கொண்டை பெருத்தவளும் கொண்டவனுக்கு ஆகாள்”
  • “உறுதியான செருப்பு வேண்டுமானால் ஒரு பெண்ணின் நாக்கை அடித்தோலாக வைத்து தைக்க வேண்டும்”

இவ்வாறு புராண இதிகாசங்களிலும், இலக்கியங்களிலும்,சித்தர் பாடல்களிலும் பெண்கள் குறித்து அவர்களை மிக மோசமாக கீழ்படுத்தும் வகையிலும்,ஆணாதிக்க சமூக விழுமியங்களை தொடர்ந்து தக்க வைக்கும் வகையிலும் இதை செய்யவேண்டும், இதை செய்யக்கூடாது என்பதாக வலியுறுத்தும் வகையிலுமே இந்த பெண்வெறுப்புக் கருத்துக்கள் இருப்பதைக் காணலாம்.

spacer.png

 

பொதுவாக பெண்களுக்கு எதிராக குற்றங்கள், வன்முறைகள் நிகழும்போது பாதிக்கப்பட்டவரை குறைகூறுவதை காணலாம். அதாவது பெண்கள் மீது பழியை மாற்றும் கேள்விகள் கேட்கப்படுகின்றது.

  • அவள் என்ன உடை அணிந்திருந்தாள்?
  • அவள் ஏன் இவ்வளவு தாமதமாக வெளியே சென்றாள்?
  • அவள் ஏன் தனியாக சென்றாள்?

ஆண்களை பொறுப்பு கூற வைப்பதற்கு பதிலாக எல்லாப் பழிகளும் பெண்கள் மீதே சுமத்தப்படுகிறது. பெண்கள் புறக்கணிக்கப்படும் ஆண்மைய சமூகமானது தொடர்ந்து பெண்களை கீழ்நிலைப்படுத்தி வைத்திருப்பதில் முன்னிற்கிறது. சில சமயங்களில் ஆண்மைய சித்தாந்தங்களை உள்வாக்கிய பெண்களிலும் இவ்வாறு பெண்களையே குறைகூறுவதைக் காணலாம். ஆனால் உண்மையில் மிசோஜினியின் மூலவேர் ஆண்மைய சமூகத்திலேயே ஆழமாக பதிந்துள்ளது.

2018ம் ஆண்டு ஆண் ஒருவர் ரொரன்டோ நகரில் கனடாவில் வாகனம் ஒன்றினால் பாதசாரிகளை மோதி பத்துப்பேரை கொன்றதுடன் பலரை காயப்படுத்தியும் உள்ளார். இச்சம்பவத்தை விபரிப்பதற்கு Misogyny பெண்வெறுப்பு என்ற பதம் பயன்படுத்தப்பட்டது. அதேபோல் இச்செயற்பாட்டை செய்தவர் ஒரு Involuntary Celibates (Incel) (அ-து தனது விருப்பததிற்கு மாறாக பிரமச்சாரியத்திற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்) எனவும் கூறப்படுகிறது. பெண்கள் மீதான காதல் முயற்சிகளில் ஒருபோதும் வெற்றி பெறாத ஒருவர், பெண்கள் மீது தீவிர வெறுப்பு உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும், அது வன்முறையாக, கொலை செய்யுமளவிற்கு தீவிரமாகவும் வெளிப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. இத்தகைய நிகழ்வுகள் ஆபத்தானவை என சமூகவியலாளரும், குற்றவியல் ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வெறுப்பு நிமித்தமாக பல வன்முறைகள் உலகெங்கும் நிகழ்வதைக் காணக்கூடியதாக உள்ளது. 1989 டிசம்பர் 6 ல் முதன்முதலில் Marc Lepine என்பவரால் கனடா மொன்ரியல் பல்கலைக்கழகத்தில் 14 பெண்கள் சுட்டு கொலை செய்யப்பட்டும், 10 பேரை காயப்படுத்தியதுமான கொடூர நிகழ்வு யாவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இவர், “நான் பெண்களை வெறுக்கிறேன்” என கத்திய வண்ணமே இந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளார். இன்று கனடாவில் டிசம்பர் 6இல் பெண்களுக்கு எதிரான வன்முறையின் தேசிய ஞாபகார்த்தமாக நினைவு கூறப்படுகிறது. “Nationalday of Remembrance and Action on Violance Againts Womem”. பொதுவாக சமூக வெளித்தளங்களில் பெண்கள் மீதான வெறுப்பு உணர்வுகளுடன் தொடர்புடையதாகவே மிசோஜினி பொருள் கொள்ளப்படுகிறது. எனினும் (Cornell University) கோனல் பல்கலைக்கழக தத்துவ பேராசிரியர் கேட் மன்னே (Kate Manne) என்பவர் கோட்பாட்டுரீதியாக பெண்ணிய பகுப்பாய்வினை மேற்கொண்டு தமது கருத்துக்களை ‘Down girl’ (The logic of Misogyny) எனும் நூலில் வெளியிட்டுள்ளார். மிசோஜினி (Misogyny) என்பதற்கு கொடுக்கப்படும் ‘பெண்வெறுப்பு’ என்ற வரையரையானது போதுமானகாக இல்லை என கேட் மன்னே (Kate Manne) வாதிடுகிறார்.

எலியட் ரோட்ஜர் (Elliot Rodger) என்பவர் கல்போனியாவில் Santa Barbara College கல்வி கற்றவர். அவர், தன்னை நிராகரித்த அனைத்து பெண்களையும் பழிவாங்கும் விதத்தில் வன்முறையாக துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றை நிகழ்த்தினார். இச்சம்பவத்தில் பெண்களும், ஆண்களும் என ஆறு பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயங்களுக்கும் உள்ளானார்கள். அவர்களை சுட்டுக் கொன்ற பின்னர் எலியட் ரோட்ஜர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்கிறார். இந்த சம்பவத்தை எழுத்தாளர்கள் விவரிக்கும்போது அவரது உளவியல் உறுதியற்றது. அவர் பெண்களை வெறுக்கவில்லை. அதிகமாக விரும்பினார் என்ற கருத்துக்களை தெரிவித்தனர். 2014 ல் இந்த எதிர்வினைகளை படித்தபோது கேட் மன்னே மிசோஜினியின் அர்த்தமாக கொள்ளப்படும் பெண்வெறுப்பானது கருத்தியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் குறைபாடு கொண்டிருப்பதை உணர்ந்தார். மிசோஜினியின் நடைமுறை அர்த்தமானது அப்பாவித்தனமான கருத்தாக (naive conception) உள்ளது என்றார். இப்படிப்பட்ட ஆண்களை சரிவர அடையாளம் காணும் விதத்தில் ஒரு சோதனை (litmus test) செய்தால், இந்த ஆண்கள் எல்லா பெண்களையும் வெறுக்கவில்லை என்பதை அறியலாம். மிகக் குறைந்தளவான ஆண்களே பொதுவில் பெண்களை வெறுப்பவர்களாக இருப்பர். பெரும்பாலான ஆண்களுக்கு தாய், சகோதரி, மகள், மனைவி உள்ளனர். எனவே மிசோஜினி என்பது உளவியல், கட்டமைப்பு மற்றும் நிறுவன வெளிப்பாடுகள் கொண்ட ஒரு சமூக மற்றும் அரசியல் நிகழ்வாகும். பாதிக்கப்பட்டவரின் கண்ணோட்டத்தில் இருந்தே அந்த வெளிப்பாடுகளை மதிப்பீடு செய்தல் வேண்டும் என கேட் மன்னே குறிப்பிடுகிறார்.

Kate Manne தமது கோட்பாட்டுரீதியான ஆய்வில் வரலாற்று கண்ணோட்டத்தில் இருந்த மிசோஜினிக்கான(பெண்வெறுப்பு) வரையறையை கேள்விக்குட்படுத்தி, விரிவான விளக்கத்தினை முன்வைக்கிறார்.

  • மிசோஜினி(misogyny) என்றால் என்ன?
  • பால்வாதம்(sexism) என்றால் என்ன?
  • மிசோஜினி பால்வாத உணர்வில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
  • பால்வாதம் மற்றும் மிசோஜினிற்கு இடையிலான வேறுபாடுகள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
  • ஆணாதிக்கம் ஏன் தொடர்ந்து காணப்படுகிறது?

ஆகிய கேள்விகளுக்கு விடை காணும் வகையில் நடைமுறை அனுபவங்களை ஆய்வுக்கு உட்படுத்தினார். மிசோஜினி பற்றி பாரம்பரியமான கண்ணோட்டத்திற்கு மாறாக புதிய வரையறையை கேட் மன்னே முன்வைக்கிறார். தனிநபர்களின் மனோபாவம் என்பதற்கு மாறாக, ஆணாதிக்க ஒடுக்குமுறையின் கீழ் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையினை ஒழுங்குபடுத்தும் சமூகநெறிகள் குறித்தும், அவற்றின் எதிர்பார்ப்புகள் குறித்தும், அவற்றை நிறைவேற்றத் தவறும்போது ஏற்படும் விளைவுகள் பற்றியதாகவுமே மிசோஜினி என்பது அமைகிறது என்கிறார். இந்த ஆணாதிக்க சமூக ஒழுங்குகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றாத பெண்கள் மீது அளிக்கப்படும் தண்டனையாகவே மிசோஜினி செயற்படுகிறதுஅதாவது பெண்களை ஆணாதிக்க சமூகஒழுங்குகளை பின்பற்றும்படி கட்டுப்படுத்துவதாகவே மிசோஜினி செயற்படுகிறது. இவ்வாறு மிசோஜினியால் பாதிப்பிற்கு உள்ளாகுபவர்கள் பெண்களே ஆவர். ஆனால் பாதிப்பிற்கு உள்ளானவருக்கு என்ன தாக்கத்தை உருவாக்கிறது என்பதை ‘பெண்வெறுப்பு’ என்ற விளக்கம் சுட்டிக்காட்ட தவறிவிட்டது. குற்றவாளியின் மனதில் நிலவும் உளவியல் சிக்கலாக இந்த கருத்தாக்கம் கருதுகிறது. மிசோஜினி என்ற கருத்தாக்கமானது யதார்த்த நிலைமைகளில் இருந்து குற்றவாளிகளின் உளவியல் நோக்கி கவனத்தை திரும்புகிறது. இதன் மூலம் அவரை மன்னே ‘ஆண்மீதான அனுதாபம்’ (Himpathy) என அழைக்கிறார். இது பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவரைக் காட்டிலும் குற்றவாளியான ஆணுக்கு அளிக்கும் அதிகப்படியான அனுதாபத்தைக் குறிக்கின்றது. இது பழிவாங்களின் கதைகளை மாற்றியமைத்து அநீதிக்கு வழிவகுக்கிறது என கேட் மன்னே குறிப்பிடுகிறார்.

ஆணாதிக்க சமூக கட்டமைப்பில் பெண்களுக்கான பாத்திரம் அடிபணிதலாகவே உள்ளது. பெண்களது சமூக பாத்திரங்களாக கருதப்படும் வீட்டுவேலைகள், ஆண்களின் பாலியல் தேவையை நிறைவு செய்தல், குழந்தைவளர்ப்பு போன்றவற்றை மறுக்கும் பெண்கள், அதாவது ஆணாதிக்க ஒழுங்கை சீர்குலைக்கும் பெண்களை கட்டுக்கடங்காதவர்கள், கீழ்படியாதவர்கள் அடங்காபிடாரிகள் என்று இழிவு செய்வதை காணலாம். இப்படிப் பட்டவர்களை சூனியக்காரிகள் (witches), விபச்சாரிகள்( bitches,sluts) என்றும் அழைக்கின்றனர். மிசோஜினியானது பெண்ணை கீழ்படுத்துவதன் ( Down girl) வாயிலாக தண்டிக்கிறது என்றும் அவற்றில் பெண்களை வெகுளிப்பெண்ணாக பார்த்தல், ஏளனம்செய்தல், பரிகாசம் செய்தல், அவமானப்படுத்தல், அவமதிப்பு செய்தல், குற்றம் சாட்டல், விலக்குதல், வெறும் பாலியலாக குறுக்குதல் (sexualisation) என பல்வேறு வழிமுறைகளில் கீழ்படுத்துவதைக் காணலாம். எனவே எந்தவொரு பெண்ணும் மிசோஜினிக்கு இலக்காக இருக்க முடியும்.

spacer.png

கேட் மன்னே, ஆணாதிக்க ஒழுங்கின் சட்ட அமுலாக்க கிளையாகவே மிசோஜினி செயற்படுகிறது என்கிறார். அதாவது ஆணாதிக்க சமூக விதிகளை கண்காணிக்கும் காவல் துறையாக சேவையாற்றுவதன் மூலம் மிசோஜினி தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. பொதுவாக சமூகத்தில் சட்ட ஒழுங்கு விதிகளை பாதுகாப்பவராக காவல்துறையே செயற்படுகிறது. அதை ஒத்ததாகவே மிசோஜினி செயற்படுகிறது என மன்னே குறிப்பிடுகிறார். பால்வாதம் (Sexism) ஆனது ஒரு சித்தாந்தமாக உள்ளது. இது ஆணாதிக்க சமூக விதிமுறைகளை நியாயப்படுத்த உதவுகிறது. இந்த ஆணாதிக்க அமைப்பிற்கு அச்சுறுத்தல் வரும்போது மிசோஜினி அவற்றை கட்டுப்படுத்துவதாக, அல்லது தண்டனை அளிப்பதாக வெளிப்படுகிறது. இதனை கேட் மன்னே ஆணாதிக்க அமைப்பில் ‘பால்வாதமானது ஒரு ஆடையாக இருக்கிறது. மிசோஜினியானது சூனியவேட்டையில் இறங்குகிறது’ என்கிறார்.(Sexism wears a lab coat, Misogyny goes to witch hunts). பால்வாதமும், மிசோஜினியும் ஒன்றுடனொன்று வேறுபட்டாலும் நடைமுறையில் பெரும்பாலும் இரண்டும் கைகோர்த்து செல்வதும் ஆணாதிக்கத்தை தர்க்கரீதியாக பின்பற்றுவதுமாகவே உள்ளது. அத்துடன் அவை (பால்வாதமும், மிசோஜினியும்) சுதந்திரமாகவும் தனித்தும் வெளிப்பட முடியும் எனவும் அவரது நூலில் ‘Down Girl’ குறிப்பிடுகிறார்.

மிசோஜினி எனப்படும் செயற்பாடானது எப்பொழுதும் பெண்களுக்கு மனிதநேயமற்று துன்பத்தினை அளிப்பதாகவே உள்ளது, ஆனால் பெண்களை மனிதநேயம் கொண்ட சேவைகளை வழங்குபவர்களாகவே எதிர்பார்க்கிறது. கேட் மன்னே, மிசோஜினியை அமுல்படுத்தும் விதிமுறைகளை விவரிக்கும்போது பெண்கள் ஆண்களுக்கு கடமைப்பட்டிருப்பதாக சொல்லப்படும் ஆணாதிக்க சமூக அமைப்பில் இருக்கிறார்கள். இங்கு அறிவார்ந்த முயற்சிகள், விளையாட்டு, வணிகம், அரசியல் போன்றவை ஆண்களுக்குரியதாகவும், வீட்டுவேலைகள், குழந்தை பராமரிப்பு, வீட்டில் உள்ளவர்களை கவனித்தல் போன்றவை பெண்களுக்குரியதாகவும் நம்பும் கருத்தியல் நடைமுறையில் காணப்படுகிறது. முதலில் பெண்கள் பாலியல் சேவை, கவனிப்பு, ஊதியமற்ற வீட்டுவேகள் போன்றவற்றை வழங்க வேண்டும். பெண்களால் வழங்கப்படும் சேவைகள் குறித்து பேசக்கூடாது. இறுதியாக ஆண்கள் பெறும் சலுகைகள் எதனையும் பெண்கள் பெற்று விடக்கூடாது. அதாவது வரலாற்று ரீதியாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய அரசியல், கல்வி, விளையாட்டு (sports) போன்ற விடயங்களில் பெண்கள் நுழையும்போது அவர்களை கட்டுப்படுத்துவதாக மிசோஜினி செயற்படுகிறது. அவ்வாறு நுழையும் பெண்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப பாத்திரங்களை பூர்த்தி செய்யாவிடின் ஆண்கள் தமது சகாக்களுடன் சேர்ந்து வெகுளி, தகுதிக்கு மிஞ்சிய வேலை என கேலி செய்யப்பட்டு அலட்சியம் செய்யப்டுத்தப்படுவதையும் காணலாம். 1967இல் பொஸ்டன் நகரில் இடம்பெற்ற மரதன் (Boston marathon) ஓட்டத்தில் முதன்முறையாக பங்குபற்றிய கத்ரின் ஸ்விட்சர்(Kathrine Switzer) என்னும் பெண் உடல்ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகினார். அதேபோல் 2010 இல் அவுஸ்திரேலிய அரசியலில் Liberal party ல் Julia Gillard தெரிவு செய்யப்பட்டபோது உளரீதியான தாக்கத்திற்கு உள்ளானார். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த Donal Trump இடமும் இத்தகைய செயற்பாடுகள் காணப்பட்டது. இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகளானது ஆண்களின் அதிகாரம், அதிகாரத்திற்கு சவால்விடும் பெண்களை நோக்கியதாகவே இருப்பதை அவதானிக்க முடிகிறது.

spacer.png

 

மிசோஜினி பெண்களை கட்டுப்படுத்துவதோடு பால்வாத விதிமுறைகளை மீறுவதில் இருந்து அவர்களை தண்டிப்பது மட்டுமன்றி, பால்வாத விதிகளை பின்பற்றும் பெண்களுக்கு வெகுமதியும் ( அன்பான மனைவி, நல்ல நண்பி, விசுவாசமான செயலாளர் ) அளிக்கிறது. இதனால் மிசோஜினி பெண்களை நல்லபெண்கள், கெட்டபெண்கள் என வேறுபடுத்துவதுடன் பெண்களையே பெண்களுக்கு எதிராக திருப்ப முடிகிறது. ‘I am not like other girl’ , other girls are to much drama. பெண்களைக்ககொண்டே மற்றைய பெண்களின் நடத்தைகளையும் கட்டுப்படுத்த முடியும். இதனால் ஆணாதிக்க மதிப்பீடுகளின் அடிப்படையில் தன்னை உயர்த்திக் கொள்ளலாம். அல்லது ஆணாதிக்க நபர்களிடம் தங்கள் விசுவாசத்தை அடையாளம் காட்டலாம் என்ற விதத்தில் பெண்களை ஊக்குவிக்கிறது.

பெண்கள் ஆண்களை விட குறைந்தவர்கள் என்ற நம்பிக்கை இன்றைய சமூக அரசியல் அமைப்புகளில் காணப்படுகிறது. ஏன் சில மார்க்சிய அரசியலமைப்புகளில் கூட பெண்கள் தமது பங்களிப்பை இன்றுவரை செலுத்தியபோதிலும், இடதுசாரி மார்க்சியவாதிகள் பலர் இன்னும் வர்க்கப் போராட்டத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு பால்வாதத்தை புரிந்து கொள்வதில்லை. பால்வாத்தின் சார்பளவிலான சுயாதீனமான தன்மை, அதற்கெதிராக குறிப்பாக நடத்தப்பட வேண்டிய போராட்டங்கள், அவை வர்க்கப் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டியதன் அவசியம் என்பவற்றை இப்படிப்பட்டவர்கள் மறுக்கிறார்கள். மார்க்சிய அமைப்பினுள்ளும் பெண்கள் குறிப்பெடுக்கும், வரவேற்கும், தேனீர் தயாரிக்கும் பணிகளையே, அதாவது ஆணாதிக்க சமுதாயம் வெளியில் பெண்களை பணிக்கும் அதேவிதமான பணிகளையே பெண்கள் தமது அமைப்பினுள்ளும் எப்பொழுதும் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றைவிட மிகவும் முக்கியமான பிரச்சனைகளிலும் மார்க்சிய அமைப்புகள் மற்றும் போராட்ட அணிகள் சிக்கிக்கொள்கின்றன. இது இப்படிப்பட்ட அமைப்புகளினுள்ளேயே இழைக்கப்படும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை பற்றியதாகும். குறிப்பாக அமெரிக்காவில் முதலாளித்துவத்திற்கு எதிராக நடத்தப்பட்ட Occupy Wall Street இயக்கத்தின்போது நடைபெற்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், அந்த இயக்கத்தை பலவீனப்படுத்திய ஒரு முக்கியமான அம்சமாக மாறியது. இவ்வாறே அமெரிக்காவில் உள்ள முக்கிய இடதுசாரி அமைப்பான ‘சர்வதேச சோசலிய அமைப்பு’ இனுள் நடைபெற்ற பாலியல் அத்துமீறல்களையும் குறிப்பிடலாம்.

2019 ல் அமெரிக்காவில் சர்வதேச சோசலிச அமைப்பில் lSO (International Socialist Organization) பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு அமைப்பு களைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். மிசோஜினி கலாச்சாரத்தில் பல ஆண்கள் பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனர். இன்னும் பல ஆண்கள் தாம் பெண்களை விட உயர்ந்தவர்களாகவும், பாதுகாப்பவர்களாகவும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதிகமான ஆண்கள் அமைதியாக இருக்கிறார்கள். இது தவறு என்பதை புரிந்துகொள்ளாத காரணத்தினால் அல்ல. தங்கள் சலுகைகளை விட்டுக் கொடுக்க விரும்பாததால் ஆகும்.

சில்வியா பெடிரீச்சி( Silvia Federici)யின் சூனியக்காரிகளின் வேட்டை (Witches Witch-Hunting and Woman) நூலில் குழந்தைப்பேறு, கருக்கலைப்பு, மற்றும் இயற்கை மருத்துவத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை சூனியக்காரிகள் என தண்டிப்பதன் மூலம் அவர்களை கட்டுப்படுத்துவதாக கூறுகிறார். இதன் வெளிப்படையான அர்த்தம் பெண்களை மருத்துவ துறையில் இருந்து ஒதுக்கி வீட்டுக்குள் முடக்குவதே ஆகும். ஆனால் இன்று பெண்கள் கல்வித்துறையில் மிக முன்னேற்றம் கொண்டிருந்தபோதிலும் மருத்துவதில் அறுவைசிகிச்சை செய்வதற்கு பொருத்தமானவர்கள் அல்ல என்ற வாதம் சில ஆண் வைத்தியர்களாலேயே முன்வைக் படுகிறது. இவ்வாறு ஆண்மையதிகார சமூகஅமைப்பில் அதிகாரம் கொண்டவர்கள் பெண்களை என்றும் விளிம்புநிலைக்கு தள்ளுவதன் மூலம் தமது நலன்களையும், சலுகைகளையும் தொடர்ந்து பேணுவதையே வெளிப்படுத்துகிறது எனலாம். எனவே இத்தகைய சமூக அமைப்பில் நிலையாக ஆதிக்கம் செலுத்தும் சித்தாந்த கருத்துக்களை வலியுறுத்தும் இதிகாச புராண இலக்கிய சித்தர் பாடல் யாவும் மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்படுவது இன்றியமையாத தேவையாக உள்ளது எனலாம்.

மிசோஜினி என்பது ஆரம்ப காலத்தில் பெண்வெறுப்பாக அர்த்தம் கொண்டிருந்த போதிலும், அது பாதிக்கப்பட்டவரை விளங்கிக் கொள்வதற்கு போதுமானளவு விபரிப்பை கொண்டிருக்கவில்லை என தத்துவ பேராசிரியர் கேட் மன்னே குறிப்பிடுகிறார். அவர் தமது ஆய்வில் நடைமுறை சம்பவங்களை விபரிப்பதாகவும் அதிலிருந்து தீர்வு காண்பதுமாகவே (from description to prescription) ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். கேட் மன்னேயின் தீர்மானமாக கூறப்படுவதாவது, ஆணாதிக்க சமூகமைப்பின் ஒழுங்கு நெறிகளை மீறும் பெண்களுக்கு எதிராக மிசோஜினி அவர்களை கட்டுப்படுத்தவும், தண்டனையாகவும் செயற்படுகிறது என்பதாகும். இங்கு பெண்களை பொறுத்தவரை முதலாளித்துவ உற்பத்திமுறையும், ஆணாதிக்க உறவுமுறைமே (System, power, Control) அவர்களை ஒடுக்குவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது எனலாம்.

 

https://solvanam.com/2022/01/09/மிசோஜினி-misogyny-எனும்-பெண்வெ/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பிரான்ஸ் ......பெண்களுக்கு முக்கியத்துவம் குடுக்கிற நாடு.......இங்கு பெண்கள் வீட்டிலும் வெளியிலும் அடக்குற முறையோடு வாழ்ந்து வருகிறார்கள்.......அதைவிட ஒரு அம்மா ஜெர்மனியில் பல வருடங்கள் பெரும் பதவி வகித்து உலகின் பலநாட்டுத் தலைவர்களையும் சிப்பிலியாட்டி விட்டுப்  போயிருக்கிறா......!  😎

நன்றி கிருபன்.......!    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு கட்டுரை. நன்றி கிருபன் ஜீ.
ஏதோ… ஒரு வகையில், பெண் அடக்குமுறை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
அதே நேரம்… ஆண்கள் செய்த வேலைகள் பலவற்றையும் பெண்கள்….
சம நீதி என்று போராடி…. தமதாக்கிக் கொண்டதையும், மறந்து விட முடியாது.

நெடுக்கால போவானை…. மேடைக்கு வரும்படி, அழைக்கின்றோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நெடுக்கால போவானை…. மேடைக்கு வரும்படி, அழைக்கின்றோம். 

அடிப்படையில் நெடுக்ஸ் பெண்களை வெறுத்தார் என்ற பொத்தாம் பொதுவான பார்வை முதலில் தவறு.

பெண்களை மையப்படுத்தி பெண்களின் சமூகத் தவறுகளை மறைத்து பொறுப்புக்களை இனங்காட்டாமல்.. எல்லாம் ஆணாதிக்கம்.. என்ற அடிப்படையில் அமைந்த கருத்துருவாக்கங்களை வெறுத்தோம்.. இப்பவும் தான்.

காரணம்.. பெண்களுக்கு உள்ள அவ்வளவு சவால்களும் இந்த உலகில் ஆண்களுக்கும் உண்டு. அவை மாறுபட்ட அளவுகளில் அமைந்தாலும்.

இன்று அவையும் பேசப்படுகின்றன. ஆண்கள் தினம் கூட இப்ப உலகில் வந்திட்டுது... ஆண்களின் பிரச்சனைகளை.. உரிமைகளைப் பற்றி கதைக்க. 

உலக சுகாதார ஸ்தாபனம்.. பெருமெடுப்பில் தான் சில காரியங்களை பார்க்கிறது.. நுண் அணுகுமுறை அதற்கு சரிவராது என்பதற்கு அது கொவிட் விடயத்தில் கண்ட மிகப் பெரிய தோல்வி உதாரணமாகும். 

ஆண்கள் தினம் இருக்கனுன்னு ஒரு கருத்தியல் யாழில் உருவாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது பழைய யாழ் கருத்துக்களத்தில். இன்றும் இருக்கும் அவை. அப்போது அந்தக் கருத்தியலை பெரிதாக நோக்காமல்.. அல்லது பெண்கள் தினத்துக்கான போட்டிக்கருத்தியல் என்று எதிர் சண்டை போட்டோர் இங்கு யாழில் இப்பவும் இருக்கினம். 

ஆனால்.. அன்று தேவை என்று சொல்லப்பட்ட ஆண்கள் தினம்..இன்று.. அது நிஜமாகி விட்டது.

 

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

நெடுக்கால போவானை…. மேடைக்கு வரும்படி, அழைக்கின்றோம். 

நீங்கள் நெடுக்கின் ஞாயிறு விடுமுறையை அநியாயம் பண்ண நிக்கிறியள்.😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, shanthy said:

நீங்கள் நெடுக்கின் ஞாயிறு விடுமுறையை அநியாயம் பண்ண நிக்கிறியள்.😊

சாந்தி… நெடுக்கருக்கு, முந்தி இப்பிடியான திரி என்றால்…
அல்வா சாப்பிடுற மாதிரி. 😁
கலியாணம் கட்டினாப் பிறகு…. அவரின் நிலைப்பாடு,
எப்பிடி இருக்கு என்று… நாடி பிடிச்சுப் பார்க்க கூப்பிட்டனான். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

அடிப்படையில் நெடுக்ஸ் பெண்களை வெறுத்தார் என்ற பொத்தாம் பொதுவான பார்வை முதலில் தவறு.

 

இந்த கட்டுரையை வாசித்தபோது நெடுக்ஸின் நினைவு வந்தது உண்மைதான்😁

👇🏾

Quote

இப்படிப்பட்ட ஆண்கள் எல்லா பெண்களையும் வெறுப்பதில்லை. அவர்களுக்கு தாய், மகள், தங்கை, துணைவி என உறவுகள் உண்டு.

Quote

ஆணாதிக்க சமூக கட்டமைப்பில் பெண்களுக்கான பாத்திரம் அடிபணிதலாகவே உள்ளது. பெண்களது சமூக பாத்திரங்களாக கருதப்படும் வீட்டுவேலைகள், ஆண்களின் பாலியல் தேவையை நிறைவு செய்தல், குழந்தைவளர்ப்பு போன்றவற்றை மறுக்கும் பெண்கள், அதாவது ஆணாதிக்க ஒழுங்கை சீர்குலைக்கும் பெண்களை கட்டுக்கடங்காதவர்கள், கீழ்படியாதவர்கள் அடங்காபிடாரிகள் என்று இழிவு செய்வதை காணலாம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.