Jump to content

நாங்கள் பட்டினியால் சாகமாட்டோம் 👩‍👩‍👧‍👦

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நாங்கள்பட்டினியால்சாகமாட்டோம்.‼️👍👍

இலங்கைவாழ் சகோதர மொழி நண்பர்களே, நாங்கள் சாகவே மாட்டோம்.
 👉விலை இன்னும் ஒருமடங்கு அதிகரித்தாலும் நாங்கள் சாகவே மாட்டோம்.

எங்கள் அனுபவங்களை விசாரித்துப்பாருங்கள்.

ஆயிரம் இடம்பெயர்வுகளை சந்தித்தோம் நாங்கள் சாகவே இல்லை.

பலவருடம் மின்சாரமின்றி வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை.

எரிவாயு என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை.

எரிபொருள் இன்றியும் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. தொலைபேசி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை.

தம்புள்ளை மரக்கறி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை.

சீனி இன்றி பனங்கட்டியுடன் பிளேன்ரீ குடித்தோம் நாங்கள் சாகவே இல்லை.
டெல்டா_ரெபி)

அங்கர் இன்றியும் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை.
பசளை இன்றியிம் விவசாயம் செய்தோம் நாங்கள் சாகவே இல்லை.
இதையும் சொல்லலாமே சவர்க்காரமின்றி வாழ்ந்தோம்  பனங்கழி கொண்டு துவைத்தோம் 
அப்பவும் சாகவில்லை  

இனவாதப்படுகொலையால்மட்டும்அதிகமாகச்_செத்தோம் 

வயலுண்டு, தோட்டமுண்டு, பனையுண்டு, தென்னையுண்டு, கடலுண்டு, குளமுண்டு, மீனுண்டு உப்புண்டு 
பகிர்ந்துண்டுபல்லுயிரோம்பும் பண்புண்டு. 
நாம் சாகப்போவதே இல்லை. 

நெருப்பிலும் நீந்திக் கரை சேர்வோம். உங்களால் இவ்வளவும் தாண்டி நீந்திக் கரைசேர முடியுமானால் மனம் மாறாதிருங்கள்.

**********

இலங்கையில் மக்கள் தற்போது அதியாவசிய பொருட்களுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை தோன்றியுள்ளது.

இந்நிலையில் அன்று முள்ளிவாய்க்காலில் நம்மவர்கள் செத்துமடிகையில் வேடிக்கை பார்த்தவர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைகண்டு கவிதையொன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது. அந்தக் கவிதை பின்வருமாறு,

முள்ளி வாய்க்காலில்

கஞ்சிக்காக கோப்பையுடன் நீண்ட வரிசையில்

பிஞ்சுகளெல்லாம் நின்ற போது

நெஞ்சை நிமிர்த்தியே வேடிக்கை பார்தீர்கள்

அக்கினியின் குஞ்சொன்று

விசுக்கோத்து சாப்பிட்டபின்

மார்துளைத்து செத்து கிடந்தபோதும்

வேடிக்கை தானே பார்த்தீர்கள்

பிடிபட்ட பெண்டிர்களை நிர்மூலம் ஆக்கிவிட்டு

சிரித்து நின்ற போதும் வேடிக்கை தானே பார்த்தீர்கள்

சாலையோரம் போனவர்கள்

காணாமல் போனபோது

வேடிக்கை தானே பார்த்தீர்கள்

வைத்தியசாலைகள் மீது குண்டுகள் பொழிந்த போது

வேடிக்கை தானே பார்த்தீர்கள்

பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும்

கந்தக குண்டை வீசும் போது

வேடிக்கை தானே பார்த்தீர்கள்

கிழங்குக்காக வரிசையில் நின்றவர்களை

கிளஸ்ரர் குண்டு போட்டு அவிந்த போதும்

வேடிக்கை தானே பார்த்தீர்கள்

மருந்தும், மாத்திரையும் உணவும் ,

உடுப்பும் அங்கு அனுப்பாமல் விட்ட போதும்

வேடிக்கை தானே பார்த்தீர்கள்

குண்டடிபட்டு இறந்தவள் மார்பில்

குழந்தை முலை சூப்பியபோது

வேடிக்கை தானே பார்த்தீர்கள்

வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தோர்

எங்கென்று கேட்டபோதும்

வேடிக்கை தானே பார்த்தீர்கள்

முட்கம்பி வேலிகளுக்குள்

முன்னூறாயிரம் பேர் அடக்கி வைக்கயிலும்

வேடிக்கை தானே பார்த்தீர்கள்

அத்தியாவசியம் அனைத்துக்குமாய் இப்போது

நீண்ட வரிசையில் நீங்கள் நிற்கும் போது

எம்மால் உமைப்போல வேடிக்கை பார்க்க முடியவில்லை, ஏனென்றால் நாங்கள் தமிழர்கள்

மனம் கொதிக்கிறோம்

வேடிக்கை என்னவென்றால்

மேல்சொன்ன எல்லாவற்றையும்

எமக்கு தந்தவர்களால் தான் உமக்கும் தரப்படுகிறது

காலம் எவ்வளவு விரைவாக காட்டும் என்பது இதுதானா! 

※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※

எனக்கு வாட்ஸ் அப்பில் வந்தது....

 எழுதியவர் பல சூழ்நிலைகளை அனுபவித்தவர் போல் இருக்கின்றது.நிதர்சனமான வார்த்தைகளை பகிர்ந்துள்ளார்.

அந்த உறவிற்கு மனமார்ந்த நன்றிகள்.

Edited by குமாரசாமி
எழுத்துப்பிழை.
 • Like 12
 • Thanks 4
Link to comment
Share on other sites

 • குமாரசாமி changed the title to நாங்கள் பட்டினியால் சாகமாட்டோம் 👩‍👩‍👧‍👦
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நாங்கள்பட்டினியால்சாகமாட்டோம்.‼️👍👍

இலங்கைவாழ் சகோதர மொழி நண்பர்களே, நாங்கள் சாகவே மாட்டோம்.
 👉விலை இன்னும் ஒருமடங்கு அதிகரித்தாலும் நாங்கள் சாகவே மாட்டோம்.

எங்கள் அனுபவங்களை விசாரித்துப்பாருங்கள்.

ஆயிரம் இடம்பெயர்வுகளை சந்தித்தோம் நாங்கள் சாகவே இல்லை.

பலவருடம் மின்சாரமின்றி வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை.

எரிவாயு என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை.

எரிபொருள் இன்றியும் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. தொலைபேசி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை.

தம்புள்ளை மரக்கறி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை.

சீனி இன்றி பனங்கட்டியுடன் பிளேன்ரீ குடித்தோம் நாங்கள் சாகவே இல்லை.
டெல்டா_ரெபி)

அங்கர் இன்றியும் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை.
பசளை இன்றியிம் விவசாயம் செய்தோம் நாங்கள் சாகவே இல்லை.
இதையும் சொல்லலாமே சவர்க்காரமின்றி வாழ்ந்தோம்  பனங்கழி கொண்டு துவைத்தோம் 
அப்பவும் சாகவில்லை  

இனவாதப்படுகொலையால்மட்டும்அதிகமாகச்_செத்தோம் 

வயலுண்டு, தோட்டமுண்டு, பனையுண்டு, தென்னையுண்டு, கடலுண்டு, குளமுண்டு, மீனுண்டு உப்புண்டு 
பகிர்ந்துண்டுபல்லுயிரோம்பும் பண்புண்டு. 
நாம் சாகப்போவதே இல்லை. 

ஆனாலும் எல்லாம் கிடைத்த பின் கொஞ்சம் கொஞ்சமா செத்துக் கொண்டிருக்கிறோம்.

 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆனாலும் எல்லாம் கிடைத்த பின் கொஞ்சம் கொஞ்சமா செத்துக் கொண்டிருக்கிறோம்.

பிரித்து விடுங்கள் நாங்கள் பிழைத்து கொள்கிரோம் மலேயில் இருந்து சிங்கை பிறந்தது போல் .

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

பிரித்து விடுங்கள் நாங்கள் பிழைத்து கொள்கிரோம் மலேயில் இருந்து சிங்கை பிறந்தது போல் .

பிரிக்கிறதுக்கு எங்கடை ஆக்கள் விடமாட்டினம் எண்டு தெரியாதோ.....இறைமை மிச்சம் கூடின ஆக்கள் எல்லோ.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

பிரிக்கிறதுக்கு எங்கடை ஆக்கள் விடமாட்டினம் எண்டு தெரியாதோ.....இறைமை மிச்சம் கூடின ஆக்கள் எல்லோ.

ஓமோம்! தமிழன்ரை *** த்தை     உருவினாலும் அவை இறைமையை விடமாட்டினம். ஏனென்றால் அவைக்கு இறைமையென்றால் இந்தியா- இந்தியா என்றால் இறைமை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அருமையான பகிர்வு .......நன்றி கு. சா....!  👍

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.