Jump to content

200 மில்லியன் ஆண்டுகளில் இலங்கை என்னவாகும்? - ஆய்வுகளில் வெளியான அதிர்ச்சி தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

200 மில்லியன் ஆண்டுகளில் இலங்கை மறைந்து புதிய இந்திய துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாக மாறும் என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

Sri Lanka Shape Animated On Stock Footage Video (100% Royalty-free)  16112128 | Shutterstock

அமெரிக்கன் ஜெர்னல் ஆப் சயின்ஸ் இதழில் உட்ரெக்ட் பல்கலைக்கழக புவியியலாளர் பேராசிரியர் டூவே வான் ஹின்ஸ்பெர்கன் ஒரு ஆய்வுகட்டுரை எழுதி உள்ளார். 

அந்த கட்டுரையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

நமது பூமிக்கு  கீழே உள்ள டெக்டோனிக் தகடுகள்  தொடர்ந்து நகர்ந்து வருவதால் . அனைத்து கண்டங்களும் தொடர்ச்சியாக நகர்ந்து வருகின்றன. 

டெக்டோனிக் தகடுகள்  மெதுவாக ஆனால் நிச்சயமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து வருகின்றன.  இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில்,  கிழக்கு ஆப்பிரிக்கா (நவீன சோமாலியா, கென்யா, தான்சானியா மற்றும் மொசாம்பிக் உட்பட) மற்றும் மடகாஸ்கர் ஆகியவை இந்தியாவின் மேல் எழும்பும் இது ‘இந்தியாவின் நவீன மேற்குக் கடற்கரையில் நீண்ட மலைத்தொடரை உருவாக்குவதற்கும்’ வழிவகுக்கும்.

இந்தியாவின் மேற்கு கடற்கரை சோமாலய மலைகளால் மாற்றப்படும்.மும்பையில் கடல் இல்லாமல் போகும். கடல் இல்லாவிட்டாலும் மும்பை நன்றாக இருக்கும்.

டெல்லி "சோமாலயா மலைகள்" என்று அழைக்கப்படுவதன் அடிவாரத்தில் அமைந்திருக்கும். சீஷெல்ஸ் மற்றும் மொரிஷியஸ் தீவுகள் அனைத்தும் மேலே தள்ளப்பட்டு மும்பை சோமாலயா மலைத்தொடரின் அடிவாரத்தில் இருக்கும் என்று ஆய்வுக் குழு குறிப்பிட்டது. 

அது முழு கடலோரக் கோட்டையும் மாற்றும். மொகடிசுவும் மும்பையும் இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில் அண்டை நாடுகளாக மாறும். கொல்கத்தாவும் மொரீஷியஸும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருக்கும்.

இன்று இருக்கும் இலங்கை மறைந்து புதிய இந்திய துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாக மாறும்.

இதுகுறித்து டாக்டர் வான் ஹின்ஸ்பர்கன்  கூறியதாவது:-

எதிர்கால மலைகள் மற்றும் கண்டங்கள் எப்படி இருக்கும் என்பதற்கான விடை தற்போது எங்களிடம் உள்ளது. மத்திய தரைக்கடல் பகுதியில் காணாமல் போன ஒரு கண்டம், தென்கிழக்கு ஆசியாவில் காணாமல் போன மற்றொரு பெரிய கண்டம், அதன் நினைவுச்சின்னங்கள் இந்தோனேசியா முழுவதும் காணப்படுகின்றன

தென்மேற்கு இந்தியா  திருவனந்தபுரத்திலிருந்து கராச்சி வரை ஒரு அழுத்தம் ஏற்படும். சோமாலியாவை உள்ளடக்கிய ஆப்பிரிக்காவின் மேல் பகுதி தென்மேற்கு இந்தியாவின் மீது மேலெழுந்து  பெரிய மலைப் பகுதியை உருவாக்கும் என்றார்.

200 மில்லியன் ஆண்டுகளில் இலங்கை என்னவாகும்? - ஆய்வுகளில் வெளியான அதிர்ச்சி தகவல் | Virakesari.lk

Link to comment
Share on other sites

அப்பவும் அடுத்த தைமாதத்துக்குள் தமிழர்களுக்கு தீர்வு பெற்றுத்தருவோம் என்று தமிழ் தலைமைகள் சொல்லிக் கொண்டு இருக்கும்.

அநேகமாக சம்பந்தர் தான் தலைவராக இருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

அப்பவும் அடுத்த தைமாதத்துக்குள் தமிழர்களுக்கு தீர்வு பெற்றுத்தருவோம் என்று தமிழ் தலைமைகள் சொல்லிக் கொண்டு இருக்கும்.

அநேகமாக சம்பந்தர் தான் தலைவராக இருப்பார்.

அப்ப சுமந்திரன் ஐயா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில் இன்று இருக்கும் இலங்கை மறைந்து புதிய இந்திய துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாக மாறும்.

 

பாதி இலங்கை மறைந்து சைனாகூட சேர்ந்துட்டு.. மக்கள் மாண்டரின் படிக்கிறதுல பிசியா இருக்கிறார்கள்..இந்தியா ங்கே ன்னு  விட்டத்த பாத்துட்டு உக்காந்துருக்கு.. இவரு என்னடான்னா.. 200 மில்லியன் ஆண்டு எண்டு கத உடுராரு..😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதுகளை பாக்காமல் இந்தக்கட்டை வேகாது 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அவரும் தான்... 

தமிழினம் என்ன பாவம் செய்ததோ...... இறைவா!  இறைவனாலும் காப்பற்ற முடியாதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.