Jump to content

சூரியனுக்கு பொங்கல் படைத்து நன்றிக்கு தலை வணங்கும் பண்பாட்டு நாளாக தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் – டக்ளஸ்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சூரியனுக்கு பொங்கல் படைத்து நன்றிக்கு தலை வணங்கும் பண்பாட்டு நாளாக தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் – டக்ளஸ்!

spacer.png

சூரியனுக்கு பொங்கல் படைத்து நன்றிக்கு தலை வணங்கும் பண்பாட்டு நாளாக தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “”நன்றிக்கு தலை வணங்குதல் என்பது தொன்று தொட்டு நிலவி வரும் தமிழர் பண்பாட்டு வழிமுறையாகும். உழுதுண்டு வாழும் உழவர் மக்களின் விளை நிலங்கள் யாவும் செழித்து வளர உதவிய சூரியனுக்கு நன்றிக்கடன் செலுத்துவதோடு மட்டுமன்றி, எமது மக்கள் தம் வாழ்வெங்கும் தம்மோடு கூடவே இருந்து தம் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து வருவோர்க்கும், அறம் சார்ந்த, அவலங்கள் இல்லாத யதார்த்த வழிமுறையில் தம்மை வழி நடத்தி செல்வோருக்கும் நன்றி செலுத்தும் பண்பாட்டையும் இன்னமும் அதிகமாக நேசிக்க வேண்டும்.

தை பிறந்தால் வழி பிறக்கும்,.. வழி பிறந்தால் தம் வாழ்வு செழிக்கும்,..இதுவே எமது மக்களின் ஆழ்மன நம்பிக்கை. ஆனாலும், நம்பிக்கைகளும் அதற்கான வேண்டுதல்களும் மட்டும் இருந்தால் போதாது.

குறையிலா உயிர்கள் வாழும் மகிழ் காலத்தையும் தமது எதிர் காலத்தையும் எமது மக்கள் தாமே உருவாக்கும் தீர்மானங்களை தம் கைகளில் எடுக்க வேண்டும். உங்கள் இலட்சியத்தில் தோற்றீரானால் சூட்சுமத்தை மாற்றுங்கள், இலட்சியத்தை அல்ல என்ற கீத தர்ம உபதேசங்களை ஏற்று, எமது மக்கள் தமது கனவுகளை எட்டுவதற்கு இதுவரை முயன்று தோற்றுப்போன வழிமுறைகளை கைவிட்டு,

நாம் சொல்லும் நடை முறை சாத்தியமான நற்சிந்தனைகளை இன்னமும் ஏற்று நடந்தால், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ நீதியின் உரிமை நோக்கி வெற்றியின் நம்பிக்கையோடு நடக்க முடியும்.

உலக நாடுகளெங்கும் சூழ்ந்திருக்கும் கொடிய நோயின் தாக்கங்கள் இலங்கை தீவையும் சூழ்ந்திருக்கிறது. சூழ்ந்து வரும் துயர்களை உடைத்து சுபீட்சமான சுதந்திர வாழ்வை சகலரும் பூரணமாக அனுபவிக்கும் மகிழ் காலத்தை விரைவில் வென்றெடுப்போம். அறம் காப்போரை அறம் காக்கும். அறம் வெல்லும்,. அநீதி தோற்கும்! எமது மக்களின் நம்பிக்கைகள் வெல்லட்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

https://athavannews.com/2022/1261828

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தை பொங்கல் நல்ல நாள் பெருநாளா இவர் தமிழ்மக்களுக்கு வாழ்த்து சொல்றார் விளங்கினமாதிரித்தான் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

அறம் சார்ந்த, அவலங்கள் இல்லாத யதார்த்த வழிமுறையில் தம்மை வழி நடத்தி செல்வோருக்கும் நன்றி செலுத்தும் பண்பாட்டையும் இன்னமும் அதிகமாக நேசிக்க வேண்டும்.

இவரது குழு செய்யாத அவலமா............

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

அறம் காப்போரை அறம் காக்கும். அறம் வெல்லும்,. அநீதி தோற்கும்!

பார்றா .......! அறம்பற்றி கதைக்கும் பிரபுவை, மக்களை அறணை என்று நினைத்து போதிக்கிறாரோ? இவருக்கு இன்னும் தண்டனை கிடைக்காதபடியால் அறமே இல்லையென்று நினைத்து விட்டார் போலுள்ளது. இவர் அதன் கண்ணில் பட  முதல், இவரின் உதவியாளர்கள் அழிக்கப்பட்டு, உதவிகள் நிறுத்தப்படவேண்டும். அதன்பின் இவரது முடிவு நெருங்குவதை இவரே உணர்வார். அதுவரை ஆடட்டும்.....

ஆமா ....  நம்ம தலைவரின் வாழ்த்துச் செய்திக்கு என்ன ஆனது? கண்டதெல்லாம் வாழ்த்து சொல்லுது! சிறியர்!   ஒருக்கால் விசாரிக்க வேண்டியது, தலைவர் நலந்தானா? என்று.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பிசாசு வேதம் ஓதுது??

தமிழரின்  தலைவிதி???

Link to comment
Share on other sites

3 hours ago, விசுகு said:

பிசாசு வேதம் ஓதுது??

தமிழரின்  தலைவிதி???

சனநாயக ரீதியில் தாயக மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நிழலி said:

சனநாயக ரீதியில் தாயக மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ஐனநாயகத்தின் குறைப்பிரசவம் இவர்

15000 மக்களில் 5பேர் வாக்களித்து  தேர்வாவதும் ஐனநாயகமே...

பெரும்பான்மையே???

அப்படியே  அதை  இதைக்காட்டி???

அடுத்த தேர்தலில்.....???

இப்ப அவரை  விட்டால்  வேறு வழியில்லை  என்ற  நிலைக்கு  கொண்டு  வந்தாச்சு???

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 14/1/2022 at 06:32, கிருபன் said:

அறம் காப்போரை அறம் காக்கும். அறம் வெல்லும்,. அநீதி தோற்கும்! எமது மக்களின் நம்பிக்கைகள் வெல்லட்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கொலைகாரன் இதைச் சொல்லக் கூடாது. என்ன இப்ப எல்லாம் அறம் வீழுது.. அநீதிதான் வாழுது. உலக ஒழுங்கு அப்படியாக் கெட்டுக்கிடக்குது. 

Link to comment
Share on other sites

5 minutes ago, விசுகு said:

 

இப்ப அவரை  விட்டால்  வேறு வழியில்லை  என்ற  நிலைக்கு  கொண்டு  வந்தாச்சு???

இந்த நிலையை அவர் ஏற்படுத்தவில்லை. போரின் பின்னரான காலத்தில் தேர்தலில் நின்று தமக்கு அபிவிருத்தியும் நிம்மதியான தீர்வும் பெற்றுத் தருவர் என்று தமிழ் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஏனையவர்கள் எதுவும் செய்யாத போது, அரசுடன் சேர்ந்து ஏதாவது தமக்கு இவராவது சிறு உதவிகளையாவது செய்வார் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இருந்து பாருங்கள், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஈபிடிபி வடக்கில் இரண்டு ஆசனங்களை பெறும்.

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

இந்த நிலையை அவர் ஏற்படுத்தவில்லை. போரின் பின்னரான காலத்தில் தேர்தலில் நின்று தமக்கு அபிவிருத்தியும் நிம்மதியான தீர்வும் பெற்றுத் தருவர் என்று தமிழ் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஏனையவர்கள் எதுவும் செய்யாத போது, அரசுடன் சேர்ந்து ஏதாவது தமக்கு இவராவது சிறு உதவிகளையாவது செய்வார் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இருந்து பாருங்கள், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஈபிடிபி வடக்கில் இரண்டு ஆசனங்களை பெறும்.

 

இப்பவே இரண்டு தானே. 

11 வாக்குகளோடு 11 ஆசனங்களை வென்ற காலமும் உண்டு. அப்பவும் மக்கள் தான் வாக்குப் போட்டவையாக்கும்..??!

என்ன ஒன்றுமே செய்யாதவர்களைக் காட்டிலும்.. ஏதோ செய்யுறவன் பறுவாயில்லை என்று ஒரு தொகுதி மக்கள் வறுமையின் ஆற்றாமையில் அளிக்கும் வாக்குகளில்.. வாழ்கிறது ஆயுத சன நாய் அகம். 

அந்த நாய் வெறிபிடிச்சு வாக்குப் போட்டவையே கடிச்சுக் குதறின காலங்களும் வரலாறும் உண்டு. அது மீளாது என்று நம்புவோமாக..?!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிழலி said:

இந்த நிலையை அவர் ஏற்படுத்தவில்லை. போரின் பின்னரான காலத்தில் தேர்தலில் நின்று தமக்கு அபிவிருத்தியும் நிம்மதியான தீர்வும் பெற்றுத் தருவர் என்று தமிழ் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஏனையவர்கள் எதுவும் செய்யாத போது, அரசுடன் சேர்ந்து ஏதாவது தமக்கு இவராவது சிறு உதவிகளையாவது செய்வார் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இருந்து பாருங்கள், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஈபிடிபி வடக்கில் இரண்டு ஆசனங்களை பெறும்.

 

 

இதில்  எனக்கு கருத்து வேறுபாடு  இல்லை சகோ

எனது  ஊரே இதற்கு  சாட்சி?

கூட்டமைப்பின் அதிதீவிரஆதரவாளனான  நானே இன்று  எதிராக  நிற்பது  இதனால் தானே.

ஆனால்  

அறம்

நன்றி

பண்பாடு

சூரியன் பற்றியெல்லாம் சிங்களம்  ஏவிய அனைத்தையும்  செய்து  முடித்த   இந்தப்பிசாசு  சொல்வது  தான்  கொடுமை.....

Edited by விசுகு
Link to comment
Share on other sites

7 minutes ago, nedukkalapoovan said:

இப்பவே இரண்டு தானே. 

 

ஓம் நெடுக்கு, இரண்டு சீட் தான். நான் பிழையாக எழுதிவிட்டேன். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

சனநாயக ரீதியில் தாயக மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மக்கள் ஏமாற்றத்தினால் அறத்தை விட்டு வெளியேறி, அடித்து, கொன்று தின்ன துணிந்து  விட்டார்கள் என்றும் கொள்ளலாம்.  எல்லாம் ஜனநாயக ரீதியாகத்தான் நாட்டில் நடக்கிறது என நம்புவோருக்கானது. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு எதிரி தன் எதிரியை அடக்குவதன் உச்சக்கட்டம், அவர்களை ஏதிலிகளாக்கி, அடக்கி, அடிமையாக்கி, எதற்கும் தம்மை எதிர்பார்த்திருக்க வைத்து,  தான் சொல்வதை கேள்வியில்லாமல் செய்ய வைப்பது. அதை  அவர்கள் மொழியில் ஜனநாயகம் என்றும் சொல்வார்கள். நாமும் இதுதான் ஜனநாயகம் என்று போற்றுவோம்.  

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

சனநாயக ரீதியில் தாயக மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இவனை மக்களின் உண்மையான பிரதிநிதி என்று நீங்கள் மனச்சாட்சியோடு ஏற்க்கொள்கிறீர்களா? மக்கள் வாக்களித்துத்தானே இவன் பதவிக்கு வந்தான் என்று அதே வியாக்கியானம் வேண்டாம்.

யாழ் தீவகத்திலும், குடாநாட்டிலும் அரச கொலைப்படையோடு சேர்ந்து ஆடிய நரவேட்டையும், இன்றுவரை இனக்கொலையாளிகளுக்கு இவன் கொடுத்துவரும் ஆதரவும், தமிழினத்தின் விடுதலைக்கெதிராக இவன் தொடர்ச்சியாகச் செய்துவரும் அட்டூழியங்களும் தெரிந்தபின்னருமா இவனை மக்கள் பிரதிநிதி என்று உங்களால் அழைக்க முடிகிறது?

Edited by ரஞ்சித்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 மஹிந்தா ஜனாதிபதியாக இருந்தபோது, ஒருதடவை அல்ஜெஸீரா தொலைக்காட்சி என நினைக்கிறேன், நிருபர், மஹிந்தவிடம் உங்கள் ஆட்சியில் எப்படி உங்கள் சகோதரர்கள் அதிக பதவி வகிக்கிறார்கள் என கேட்டபோது,  எந்தவொரு வெட்கமோ, நெருடலோ இல்லாமல் சிரித்துக்கொண்டே மக்கள் தானே தெரிந்தெடுத்தார்கள் என்று வாய்கூசாமல் ஒரு பொய் சொன்னார் பாருங்கள். அதே சமயம் இறுதிப்போர் பற்றி சணல் நான்கு கோத்தாவை பேட்டி கண்டபோது, உண்மைக்கு புறம்பான செய்தியை கோத்தா சொன்ன போது கோபமடைந்த நிருபர் திருப்பி அவரை எதிர்கேள்வி கேட்டபோது, பிடிபட்டுபோனோமே என்கிற   எந்தப் பதற்றமுமில்லாமல் கேள்வி கேட்ட நிருபரிடம்   கோத்தா சொன்ன பதில், பதற்றப்படாதீர்கள் அமைதியாய் இருங்கள், பதற்றமடைய வேண்டியவன் நான், நீங்கள் எதற்கு பதற்றமடைகிறீர்கள் என்றார். குற்றங்கள் செய்து பழக்கப்பட்டவனுக்கு அது தவறாகவே தோன்றாது, அது ஒரு சர்வாதிகாரம்.  இவர்கள் கையில் ஜனநாயகம் சிக்கித் தவிக்குது தப்ப வழியில்லாமல். 

 அதை விடுங்கோ .....  சிவநேசதுரை சந்திரகாந்தன் சொல்லுகிறார், தான் நிரபராதி இத்தனை ஆண்டுகள் குற்றம் ஏதும் செய்யாமலேயே சிறை அனுபவித்தேன் என்கிறார். தன்னை காப்பாற்ற வழியில்லாதவர், எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதவர், சிறையில் இருந்தவாறு தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளார். அது எல்லாவற்றையும் விட மிக பெரிய பகிடி. நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்குது என்று சொல்பவர்களை நினைத்தால் சிரிப்புதான் வருகுது. மக்கள் பயத்தில் வாய் பேசாமல், குரல்வளை நெரிக்கப்பட்டு, எல்லாவகையிலும் அடக்கப்பட்டு  இருப்பதால் மக்கள் குறையின்றி அமைதியாக வாழ்கிறார்கள் என்று அர்த்தமில்லை.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எப்படி இழுத்து இழுத்து மூடினாலும், சில வேளைகளில் அவர்களையும் அறியாமல்  போர்வை விலகி அவர்களை காட்டிக்கொடுத்து விடுகிறது. சந்தர்ப்பம் ........

Link to comment
Share on other sites

2 hours ago, ரஞ்சித் said:

இவனை மக்களின் உண்மையான பிரதிநிதி என்று நீங்கள் மனச்சாட்சியோடு ஏற்க்கொள்கிறீர்களா? மக்கள் வாக்களித்துத்தானே இவன் பதவிக்கு வந்தான் என்று அதே வியாக்கியானம் வேண்டாம்.

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலைக்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற ஆர்பாட்டங்களில் நேரடியாக கலந்துகொண்டவன் நான் ரஞ்சித். என்னால் ஒரு போதுமே இவரை மட்டுமல்ல இவர் போன்ற எவரையும் ஏற்றுக் கொள்ள முடியாது.  

ஆனால் தாயக மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். முப்பது வருடம் போரினால் இழுபட்டு சிதையுற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். படுகொலைகளை நேரில் அனுபவித்தவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். 

நான் இன்னும் விட்டுட்டு வந்த மண்ணின் நினைவுகளுடன் இருக்கின்றேன. அவர்கள் அதில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அதனால் தான் என்னால் / புலம்பெயர்ந்த எம்மால் அவர்களை போன்று சிந்திக்க கூட முடியாமல், அவர்களின் தெரிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் அந்நியப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

 • Like 2
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அற்புதராஜ், அவரின் சாரதி,  மகேஸ்வரன் .......... யாழில் ஒவ்வொரு நாளும் எழுந்த மரண ஓலங்கள் வரை. சுயநலவாதிகள் இவரை ஏற்றுக்கொள்கின்றனரேயொழிய எல்லோருமல்ல!

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவையே ஏற்று கொள்கிறோம் நம்ம ஆளை ஏற்காமல் விடுவோமா? 😀

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2022 at 03:04, நிழலி said:

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலைக்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற ஆர்பாட்டங்களில் நேரடியாக கலந்துகொண்டவன் நான் ரஞ்சித். என்னால் ஒரு போதுமே இவரை மட்டுமல்ல இவர் போன்ற எவரையும் ஏற்றுக் கொள்ள முடியாது.  

ஆனால் தாயக மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். முப்பது வருடம் போரினால் இழுபட்டு சிதையுற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். படுகொலைகளை நேரில் அனுபவித்தவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். 

நான் இன்னும் விட்டுட்டு வந்த மண்ணின் நினைவுகளுடன் இருக்கின்றேன. அவர்கள் அதில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அதனால் தான் என்னால் / புலம்பெயர்ந்த எம்மால் அவர்களை போன்று சிந்திக்க கூட முடியாமல், அவர்களின் தெரிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் அந்நியப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

அவர்களின் தெரிவு வேறை வழியில்லாததால் தான் (உங்களிட்டை இருக்கிற எல்லாத்தையும் உருவிப்போட்டு சாப்பாட்டுக்கே என்னைநம்பித்தான் இருக்க வேணுமென்டால்நீங்களும் என்ன செய்வீங்கள் வேறை வழியில்லாமல் எனக்குத்தான் வாக்களிப்பீங்கள் ஆனால் என்ன என்னைப் பழிவாங்க சந்தர்ப்பம் பாத்துக்கொண்டிருப்பியள் அவ்வளவும் தான் அது உண்மையான மாற்றம் இல்லை)

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழ் புஸ்வாக்களை  ஒழித்து ஒரு புரட்சிகர சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் டக்கிளஸ் செய்தவர் என நான் சொன்னா நீங்கள் என்னை திட்ட மாட்டியள் தானே,,,,,மாவோ செய்தவர் தானே....ஏன் டக்கிளஸ் செய்ய கூடாது....

Link to comment
Share on other sites

இவரை பலர் ஏசுகின்றார்கள் இவருக்கு உறவினரான மகேஸ்வரி என்னும் பெண்னையும் கொலை செய்தார்கள் தானே

 

"ஒன்று சேர்ந்து இந்த மரணங்களை எதிர்ப்போம்" - சையட் பஷீர்

சையட் பஷீர் : ஸ்ரீ லங்கா முஸ்லிம் தகவல் மையம் (லண்டன்)
ஒன்று சேர்ந்து இந்த மரணங்களை எதிர்ப்போம்

மகேஸ்வரியை எனக்குத் தெரியாது .ஆனால் வழக்கறிஞர் என்ற முறையில் அவர் மனித உரிமைகளுக்காக எடுத்துக் கொண்ட சிரமங்களும் வேலைப்பாடுகளும் எனக்குத் தெரியும். அவரின் சேவையைப் பாராட்டி புலிகளின் ஊடகமான லண்டனைச் சேர்ந்த ஐபீசீ வானொலி மகேஸ்வரியைப்  புகழ்ந்து பேட்டி  எடுத்தது. அப்போது புலிகளுக்கு மகேஸ்வரி எதிரியாகத் தெரியவில்லை . மகேஸ்வரி ஈ பீ டி பியுடன் இணைந்து மக்களுக்கு வேலை செய்யத் தொடங்கியதும் எதிரியாக்கி கொலை செய்து விட்டார்கள்.புலிகளால் தமிழர்  மட்டுமல்லாமல் முஸ்லிம் சிங்கள மக்களும் நூற்றுக்கணக்கில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.சமூக நலவாதியான ஒரு பெண் என்பதால் மகேஸ்வரி கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.இவரும் புலிகளாற் கொலை செய்யப்பட்ட சரோஜினி யோகேஸ்வரன் மாதிரிப் புலிகளுக்கு ஒரு சவாலாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

இன்று  புலிகளாற் தொடக்கிவைக்கப்பட்ட" துரோகி" என்ற வார்த்தை சிங்கள. முஸ்லிம், அரசியல்வாதிகளாலும் பாவிக்கப்படுகிறது..ஒருத்தரை அழித்தொழிக்க முதல் "துரோகி" என்ற பதம் பாவிக்கப்படுகிறது. கொலைகளுக்குக் கண்டனம் தெரிவிக்க முடியாத அளவு தமிழ்த் தலைவர்களின் நிலை இருக்கிறது.

ஒரு தடவை டக்லஸ் தேவானந்தாவைப் புலிகள் கொலை செய்ய முயற்சித்து தோல்வியடைந்த காலகட்டத்தில் லண்டனுக்கு வந்திருந்த சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் ஏன்  நீங்கள் இதுபற்றி கண்டனம் தெரிவிக்கவில்லை என்று நான் கேட்ட போது எங்கள்  தலைவர் சம்பந்தர்   அமெரிக்காவில் இருக்கிறார். அவர் வந்தபின் அதுபற்றி யோசிப்போம் என்றார். இந்த நிலையில்தான் இன்றைய தலைமைகள் இருக்கின்றன.

சிலரால் சில மரணங்களுக்கு அஞ்சலி   நடத்தப்படும் அதே நேரம் அதே மரணங்கள் சிலரால் கொண்டாடப்படும் நிலையும்  இருக்கிறது. கொலையையும் மரனத்தையும் கொண்டாடும் கூட்டமாக சமுதாயம் பின்னடைந்து போய்விட்டது. சமூகம் மரணங்களைத் தடுக்க முடியவில்லை தைரியமாக வந்து புலிகளின் கொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்காத வரைக்கும் இவை தொடரும் 

எதிர்வரும் சில தினங்களில் லண்டனுக்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப் புலிகளும் முற்போக்குவாதிகள் என்று சொல்வோரும் முன் வருகிறார்கள் .இலங்கையில் குழந்தைகளையும் அப்பாவிப் பொதுமக்களையும் கொலை செய்யும் புலிகள் பேச்சுவார்த்தை என்று வெளிநாட்டுக்கு வந்த காலகட்டத்தில் புலிகளுக்கு எதிராக யாரும் ஏன் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை ,

நன்றி : மகேஸ்வரி வேலாயுதத்தை  புலிகள் கொலை செய்ததையிட்டு   தேசம் சஞ்சிகை இலண்டனில் நடத்திய கண்டனக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி 
 
தேசம்  2008

http://www.bazeerlanka.com/2013/02/blog-post_4.html?m=1

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, colomban said:

இலங்கையில் குழந்தைகளையும் அப்பாவிப் பொதுமக்களையும் கொலை செய்யும் புலிகள்

இந்த வார்த்தைகள் ஒரு மனித மனம்கொண்ட மனிதனிடமிருந்து வரவே வராது. மிருக மனம் கொண்ட மனிதனிடமிருந்து வரும், தொடர்ந்து வரும். அதில் ஆச்சரியமில்லை.   

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Paanch said:

இந்த வார்த்தைகள் ஒரு மனித மனம்கொண்ட மனிதனிடமிருந்து வரவே வராது. மிருக மனம் கொண்ட மனிதனிடமிருந்து வரும், தொடர்ந்து வரும். அதில் ஆச்சரியமில்லை.   

 

ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஒரு  இனத்தின் விடுதலை உணர்வை  புரிந்து  கொள்ள

சில பொது நலமான சிந்தனைகள் பொறுப்புக்கள் சுயநலமற்ற பார்வைகள்  வெண்டும் காண்.

எழுத்துக்களில் வருபவை எம்மை எமது சுயநலம்  மட்டுமே  சார்ந்த  வாழ்வை  காட்டிக்கொடுத்து விடும்

 

 

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.