Jump to content

அரசாங்கத்தின் IFSL திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளை வழங்கும் Saegis கம்பஸ்


Recommended Posts

அரசாங்கத்தின் IFSL திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளை வழங்கும் Saegis கம்பஸ்

 

அதிகளவு போட்டிகரத்தன்மை வாய்ந்த பணியிடங்களில் சிறப்பாக செயலாற்றக்கூடிய திறன்கள் படைத்த பட்டதாரிகளை உருவாக்குவதில் பங்களிப்பு வழங்கும் வகையில், வட்டியில்லாத மாணவர் கடன் (IFSL) திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்ட பட்டப் படிப்புகளை வழங்கவும், கற்கை பூர்த்தி செய்த பின் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளவும் உதவ Saegis கம்பஸ் முன்வந்துள்ளது.

image_ae0f55f9b6.jpg

கொழும்பின் மையப்பகுதியில் அமைந்துள்ள உயர் கல்விச் சேவைகளை வழங்கும் நிலையமாக அறியப்படும் Saegis கம்பஸ், பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச தொழில் வழங்குநர்களின் கருத்துக் கணிப்புகளினூடாக இந்த விடயத்தின் முக்கியத்துவம் பற்றி நன்கு அறிந்துள்ளது. பணியாற்றும் உலகில் முதல் தர அனுபவத்தைப் பெற்றுக் கொள்வது என்பதிலிருந்து, பட்டதாரிகளுக்கு தமக்கு பிடித்தமான தொழில்கள் பற்றி சிறந்த புரிந்துணர்வை கொண்டிருப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும் நிறுவனங்களில் SLT-Mobitel, DirectPay, PayMedia, Epic Technology Group, Royal Ceramic Lanka PLC, Prosoft, Manjari, Revo போன்ற பல அடங்கியுள்ளன.

பட்டம் பெறுவதற்கு முன்னதாக மாணவர்கள் பெற்றுக் கொள்ளும் அனுகூலங்கள் பெறுமதி வாய்ந்தனவாக அமைந்துள்ளன. நிபுணத்துவ தொடர்புகள் மற்றும் வலையமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள உதவியாக அமைந்திருப்பதுடன், சிறந்த மக்கள் திறன்களை கட்டியெழுப்பவும், பல்வேறு சவால்கள் மற்றும் சூழ்நிலைகளை அனுபவிப்பது, அவர்களின் பலம் மற்றும் பலவீனம் பற்றி அறிந்திருப்பது மற்றும் எதிர்காலத்தில் பின்தொடர்வதற்கு சரியான தொழில் நிலை என்பதை உறுதி செய்வது போன்றவற்றை எய்த உதவியாக அமைந்துள்ளது. தொழில் வழங்குநர்களுக்கும் தமது நிறுவனத்தில் தொழிலாற்றுவதற்கு பொருத்தமானவர்களை இனங்கண்டு கொள்ளவும் உதவியாக அமைந்திருக்கும்.

2018 முதல் 2020 வருடம் வரையான காலப்பகுதியில் தமது க.பொ.த உயர் தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு உயர் கல்வியைத் தொடர வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தை வழங்கும் இலங்கை அரசாங்கத்தின் திட்டத்தின் பிரகாரம், Saegis கம்பஸினால் வழங்கப்படும் பட்டப் படிப்புகளில் சந்தைப்படுத்தல், மனித வளங்கள் முகாமைத்துவம் மற்றும் கணக்கீடு மற்றும் நிதியியல் போன்ற பிரிவுகளில் Bachelor of Business Management (Hons)பட்டக் கற்கைகள், Bachelor of Business Administration (BBA), BSc Honours (BSc (Hons)) in Computer Science, Software Engineering, and IT மற்றும் Bachelor of Information Technology (BIT) போன்ற கற்கைகளும் வழங்கப்படுகின்றன.

வளர்ந்து வரும் மற்றும் சம காலத்துக்கான பாடவிதானங்களுடன் சிறந்த பயிலல் அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதை உறுதி செய்து கொள்ள முடியும் என்பதுடன், புகழ்பெற்ற, அனுபவம் வாய்ந்த மற்றும் பரந்த விரிவுரையாளர் குழுவினால் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இலவச Wi-Fi வசதி, நவீன IT ஆய்வுகூடம், மொழி ஆய்வுகூடம், நூலகம், ஓய்வெடுக்கும் பகுதி, இடவசதிகள் நிறைந்த குளிரூட்டப்பட்ட டிஜிட்டல் விரிவுரைப் பகுதிகள், உணவகங்கள், விளையாட்டு மற்றும் பொழுது போக்கு செயற்பாடுகள் போன்ற பல வசதிகளும் வழங்கப்படுகின்றன.

Saegis கம்பஸினால் தொடர்ந்தும் மாணவர்களுக்கு தொழில்நிலை வழிகாட்டல்கள் வழங்கப்படுவதுடன், பல சுய ஆளுமை விருத்தி செயற்பாடுக்ள, இலவச ஆங்கில மொழி வகுப்புகள், லியோ கழகம் மற்றும் ரொட்ராக்ட் கழகம் போன்றவற்றுடன் மேலதிக கல்விசார் உதவிகளும் வழங்கப்படுகின்றது.

பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது தொடர்பில் மாணவர்களுக்கு அவசியமான வழிகாட்டல்கள் மற்றும் உதவிகளை Saegis கம்பஸ் வழங்கும். கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் காணப்படும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 2022 பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் வகையில் சமர்ப்பிக்க வேண்டும். 6ஆவது மாணவர் சேர்ப்பு ஆண்டுக்குரிய கல்விச் செயற்பாடுகள் 2022 ஜுன் மாதத்தில் ஆரம்பமாகும்.

Tamilmirror Online || அரசாங்கத்தின் IFSL திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளை வழங்கும் Saegis கம்பஸ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.