Jump to content

உத்தர பிரதேச தேர்தல்: நரேந்திர மோதி, யோகியின் பாஜகவில் அதிகரிக்கும் அதிருப்தி தலைவர்கள் - மவுசு குறைகிறதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உத்தர பிரதேச தேர்தல்: நரேந்திர மோதி, யோகியின் பாஜகவில் அதிகரிக்கும் அதிருப்தி தலைவர்கள் - மவுசு குறைகிறதா?

  • தில்நவாஸ் பாஷா
  • பிபிசி செய்தியாளர்
6 மணி நேரங்களுக்கு முன்னர்
 

உத்தர பிரதேச தேர்தல்

பட மூலாதாரம்,@YADAVAKHILESH

 

படக்குறிப்பு,

சுவாமி பிரசாத் மெளரியா ராஜிநாமா செய்தவுடன், அகிலேஷ் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மௌரியா இன்னும் அதிகாரபூர்வமாக சமாஜ்வாதி கட்சியில் சேரவில்லை.

கடந்த 48 மணி நேரத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி அரசின் இரண்டு பெரிய தலைவர்கள் ராஜிநாமா செய்துள்ளனர். முதலில் சுவாமி பிரசாத் மௌரியா, பிறகு தாரா சிங் செளஹான். விவசாயிகள், தாழ்த்தப்பட்டோர், மற்றும் பிற்படுத்தப்பட்டோரை அரசு புறக்கணித்து வருவதாக இரு தலைவர்களும் தங்களது ராஜிநாமாவில் தெரிவித்தனர்.

அதேபோல,உத்தர பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஷிகோஹாபாத் தொகுதி எம்எல்ஏ முகேஷ் வர்மாவும் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

சுவாமி பிரசாத் மெளரியாவே தனது தலைவர் என்றும் அவர் எங்கு சென்றாலும் அவருடன் தாமும் செல்லப்போவதாக, பதவி விலகிய முகேஷ் வர்மா தெரிவித்திருக்கிறார்.

இவர்கள் தவிர, பாஜகவில் இருந்து வெளியேறும் அல்லது வெளியேறத் தயாராகும் பல தலைவர்களின் பெயர்கள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் அடிபடுகின்றன.

என்ன காரணம்?

ஷாஜஹான்பூரில் உள்ள தில்ஹர் தொகுதியின் எம்எல்ஏ ரோஷன்லால் வர்மா, பில்ஹோர் எம்எல்ஏ பகவதி பிரசாத் மற்றும் திந்த்வாரி எம்எல்ஏ பிரஜேஷ் பிரஜாபதி ஆகியோர் ராஜிநாமா செய்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் புறக்கணிக்கப்படுவதாகவே இந்தத் தலைவர்களும் தங்கள் ராஜிநாமா கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளனர்.

அடுத்த சில நாட்களில் பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளதாக எதிர்கட்சியான சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் சமூக வலைதளங்களில் எழுதி செய்தியாளர்களுக்கு தகவல்களைக் கசிய விடுகின்றன.

இந்நிலையில் "பாஜகவில் இருந்து விலக விரும்பும் பல தலைவர்களுடன் சமாஜ்வாதி கட்சி தொடர்பில் உள்ளது. இவர்கள் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம். வரும் நாட்களில் மேலும் பலர் பாஜகவை விட்டு சமாஜ்வாதி கட்சியில் சேருவார்கள்," என்று சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் அப்துல் ஹஃபீஸ் காந்தி குறிப்பிட்டுள்ளதும் கவனம் பெறுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், "பாஜகவில் இருந்து தலைவர்கள் வெளியேறும் நடவடிக்கை தொடருமா?", "இது குறித்து பாஜக கவலை கொண்டுள்ளதா?" என்பது பற்றிய ஊகங்கள் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளன.

 

உத்தர பிரதேச தேர்தல்

பட மூலாதாரம்,SWAMIPMAURYA

 

படக்குறிப்பு,

கேசவ் பிரசாத் மெளரியா

பாஜகவில் இருந்து ராஜிநாமா செய்த சுவாமி பிரசாத் மெளரியா ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி. 2017 தேர்தலுக்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து அமைச்சரானார். இவர் யாதவர்கள் அல்லாத பிற பிற்படுத்தப்பட்ட சமூக வாக்குகளை ஈர்க்கும் செல்வாக்கு மிக்கவராக கருதப்படுகிறார்.

இதற்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு வெளியேறியபோது, தமது கட்சிக்கு மெளரியா மிகப்பெரிய நன்மை செய்துவிட்டார் என்று மாயாவதி கூறியிருந்தார்.

மௌரியா பாஜகவுக்கு வந்தபோது பல தலைவர்களை தம்முடன் அழைத்து வந்தார். இப்போது அவர் பாஜகவை விட்டுச்சென்றபோதும், பல தலைவர்களை தன்னுடன் அழைத்து செல்வார் என்று தோன்றுகிறது.

இதன் அடிப்படையில், தங்கள் சாதிக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்ற உணர்வு கட்சியில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவர்களுக்கு ஏற்படுகிறது என்பதன் தெளிவான அறிகுறிதான் மௌரியா மற்றும் இதர தலைவர்கள் பாஜகவை விட்டு வெளியேறுவது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பாஜகவில் பீதி?

இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ஷரத் பிரதான் பேசியபோது "பாஜக உயர்சாதி (ஆதிக்க சாதி) கட்சியாக மாறியிருப்பதை இவர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர் என்பதை மெளரியா மற்றும் பிற தலைவர்களின் ராஜிநாமாக்கள் காட்டுகின்றன.

 

உத்தர பிரதேச தேர்தல்

பட மூலாதாரம்,BJP

குறிப்பாக கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் யோகி ஆதித்யநாத், தாக்கூர் வகுப்பினருக்கு முக்கியத்துவம் கொடுத்தது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது உருவாகி வரும் சூழ்நிலையும், கட்சியை விட்டு தலைவர்கள் வெளியேறுவதும் ஓபிசி தலைவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Twitterவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Twitter பதிவின் முடிவு, 1

அவர்கள் பா.ஜ.க மற்றும் யோகி ஆதித்யநாத்தை விட்டுச்செல்கிறார்கள். பாஜகவின் வகுப்புவாத அரசியல் தோல்வியடைந்து வருகிறது என்றே தோன்றுகிறது" என்று ஷரத் பிரதான் குறிப்பிட்டார்.

 

உத்தர பிரதேச தேர்தல்

பட மூலாதாரம்,BJP

 

படக்குறிப்பு,

ராகேஷ் திரிபாதி

மறுபுறம், பாஜகவில் பீதி எதுவும் இல்லை என்றும் கட்சியின் நிலை முன்பை விட வலுப்பெற்றுள்ளதாகவும் பா.ஜ.க.கூறுகிறது.

"பாஜகவில் யாரும் பீதி அடையவில்லை. புதன்கிழமை இரண்டு எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். காங்கிரஸில் இருந்து நரேஷ் சைனியும், சமாஜ்வாதி கட்சியில் இருந்து முலாயம் சிங்கின் சம்மந்தி ஹரிஓம் யாதவும் கட்சியில் இணைந்துள்ளனர். ஹரி ஓம் யாதவ், ஃபிரோஸாபாதின், சிர்சாகஞ்ச் எம்எல்ஏ.ஆவார். சமாஜ்வாதியின் கோட்டையிலிருந்து எம்எல்ஏக்கள் பா.ஜ.க.விற்குள் வருகின்றனர். பாஜகவில் ஒரு வித பீதி நிலவுகிறது என்று கூறுவது முற்றிலும் தவறு," என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி குறிப்பிட்டார்.

அதாவது, கட்சியை விட்டு வெளியேறும் தலைவர்களை விட கட்சிக்குள் வரும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று பாஜக கூறுகிறது. "ஒரு மாதத்துக்குள் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் பல எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க சேர்த்துள்ளது. மக்களின் பேராதரவு ,சுத்தமான இமேஜ் உள்ள தலைவர்கள் கட்சியை நோக்கி வருகிறார்கள். எங்கள் கட்சியில் சேர விரும்பும் பல தலைவர்களின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. நாங்கள் அவற்றை பரிசீலனை செய்து வருகிறோம். மக்கள் ஆதரவு கொண்ட தலைவர்களை கட்சி தொடர்ந்து சேர்த்து வருகிறது," என்று திரிபாதி கூறினார்.

வரவேற்கும் சமாஜ்வாதி கட்சி

பாஜகவில் இருந்து வெளியேறும் தலைவர்கள் சமாஜ்வாதி பக்கம் செல்கின்றனர்.

"அவர்களை தங்களுடைய கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மனதார வரவேற்கிறார். சமூக நீதிக்காக போராடும் எந்த ஒரு தலைவரும், நபரும் கட்சியில் அங்கம் வகிக்க வேண்டும் என்பதே கட்சியின் முதல் முயற்சி. பா.ஜ.க, மீது கோபப்பட்டு வெளியேறும் தலைவர்களை சமாஜ்வாதி கட்சி மனமார வரவேற்கிறது. இதனால் சமூக நீதிக்கான போராட்டம் வலுப்பெறும்," என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அப்துல் ஹஃபீஸ் காந்தி தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ஐந்தாண்டு ஆட்சியில் பாஜகவுடன் கூடவே தனக்கும் ஒரு சமமான பிம்பத்தை உருவாக்கியுள்ளார். மாநில அரசு, பாஜக அரசு என்பதைவிட யோகி அரசு என்றே பெரும்பாலும் அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில், கட்சியை விட்டு வெளியேறும் தலைவர்கள், குறிப்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கோபம் கொண்டுள்ளார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதில் சந்தேகமேயில்லை என்று ஷரத் பிரதான் கூறுகிறார்.

"கடந்த 5 ஆண்டு ஆட்சிக் காலத்தைப் பார்த்தால், உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ள முயன்றார். உத்தர பிரதேசத்தில் யோகி தான் எல்லாம் என்று மீண்டும் மீண்டும் செய்தி கொடுக்கப்பட்டு வருகிறது. யோகி தனது கட்சி தலைவர்களைக்கூட எளிதில் சந்திக்கமாட்டார் என லக்னெள அரசியல் வட்டாரத்தில் செய்தி அடிபடுகிறது. கட்சியை விட்டுச் செல்பவர்களும் இதை உணர்ந்திருக்கக்கூடும். யோகி ஆதித்யநாத்தை சந்திப்பது எளிதல்ல என அதிகாரப்பூர்வமற்ற முறையில் பல அமைச்சர்கள் புகார் கூறுகின்றனர்,"என்கிறார் அவர்.

 

உத்தர பிரதேச தேர்தல்

பட மூலாதாரம்,SWAMIPMAURYA

 

படக்குறிப்பு,

இந்தப் படத்தில், சுவாமி பிரசாத் மௌரியா, உ.பி., பாஜக தலைவர் சுதந்திர தேவ் சிங் மற்றும் கட்சித் தலைவர் பிரஜேஷ் பதக் ஆகியோருடன் காணப்படுகிறார்

இது யோகி ஆதித்யநாத்தின் பிம்பத்தை பாதிக்குமா? என கேட்டதற்கு, "யோகி ஆதித்யநாத் தனக்கென ஒரு பெரிய பிம்பத்தை உருவாக்கி இருக்கலாம், ஆனால் உண்மை என்னவெனில், பாஜகவில் அங்கம் வகித்ததன் மூலம் மட்டுமே அவரால் முதல்வராக முடிந்தது.

கட்சியை விட தான் பெரியவர் என்று யோகி ஆதித்யநாத் நினைத்தால், இது முதிர்ச்சியற்ற சிந்தனை. கட்சியை விட்டு வெளியேறும் தலைவர்கள் யோகி ஆதித்யநாத் மீது கோபத்தில் இருந்தாலும், இதன் தாக்கத்தை பா.ஜ.க.சந்திக்க நேர்ந்துள்ளது," என்று ஷரத் பிரதான் கூறினார்.

பாஜக குடும்ப கட்சியல்ல, கட்சியே குடும்பம்

 

உத்தர பிரதேச தேர்தல்

பட மூலாதாரம்,YADAVAKHILESH

 

படக்குறிப்பு,

அமைச்சர்களின் ராஜிநாமாவால் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கு பாதிக்கப்படும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தப் படத்தை எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ட்வீட் செய்துள்ளார்.

கட்சியில் இருந்து சுவாமி பிரசாத் மெளரியா ராஜிநாமா செய்ததை அடுத்து, அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேசவ் பிரசாத் மெளரியா வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் திரும்பி வர விரும்பினால் அவரை மீண்டும் வரவேற்க பாஜக தயாராக உள்ளது.

"மாநிலத்தில் அமைச்சராக சுவாமி பிரசாத் மெளரியா சிறப்பாக பணியாற்றியிருக்கிறார் என்று பாஜக நம்புகிறது. கட்சியை விட்டு வெளியே சென்ற பிறகும் இந்தப்பணியை தனது சாதனையாக அவர் கூறிக்கொள்கிறார். கட்சியுடன் அவர் பேச விரும்பினால் அது வரவேற்கப்படுகிறது. அவர் கட்சியில் நீடிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஆனால் அவர் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தால், அது அவரது விருப்பம்," என்கிறார் திரிபாதி.

"பாஜக என்பது குடும்ப கட்சியல்ல, கட்சியே குடும்பம். குடும்பத்திற்குள் ஏதேனும் மனக்கசப்பு அல்லது பிளவு ஏற்பட்டால், கட்சியினருடன் வந்து , தொடர்பு கொண்டு, பிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்யவேண்டும். கட்சிக்குள் அமர்ந்துதான் தீர்வு காண வேண்டும். இருந்தாலும், கட்சியை விட்டு வெளியேறும் அளவுக்கு ஒருவரின் மனக்கசப்பு இருந்தால், அவர் தன் வழியை தேர்வு செய்யும் சுதந்திரம் அவருக்கு உள்ளது. யாரையும் கட்டிப்போட முடியாது. கட்சி, பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஏதாவது பிரச்னை என்றால் கட்சியை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்றார் அவர்.

சுவாரஸ்யமாகும் அரசியல் களம்

சுவாமி பிரசாத் மெளரியா, பிற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா காரணமாக உத்திர பிரதேச அரசியலில் சூடு பிடித்துள்ளது. சிக்கலை சீர்செய்யும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளது. மறுபுறம், பாஜக பலவீனமடைந்து வருவதாகக்கூறி சமாஜ்வாதி கட்சி இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. கண்ணுக்குப் புலப்படுவதை விட அதிகமான நிகழ்வுகள் திரைக்குப் பின்னால் நடக்கின்றன.

"கடந்த இரண்டு நாட்களாக நடந்த சம்பவங்கள் தேர்தலை சுவாரசியமாக்கியுள்ளன. மூத்த பாஜக தலைவர்கள், அமைச்சர்கள் வெளியேறியதால், தேர்தலில் பாஜக பலவீனமாக இருக்கலாம் என்ற சிமிஞ்சை சென்றுள்ளது. உண்மை என்னவாக இருந்தாலும் சரி, இதுபோன்ற சிமிஞ்சைகள் தேர்தலில் முக்கியமானவை. அவை தேர்தல் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று இதுகுறித்து ஷரத் பிரதான் குறிப்பிட்டார்.

கட்சிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எப்படி சரிசெய்வது என்பதுதான் பாஜகவின் முன் உள்ள சவால். ஆனால் பாஜகவால் இதை செய்ய முடியுமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

https://www.bbc.com/tamil/india-59988158

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசியல் செய்யலாம். இலங்கையை மூர்கமாக எதிர்க்கலாம். எமது மக்கள் உரிமைக்காக போராடலாம். லாம் இல்லை. செய்ய வேண்டும். ஆனால் குரோதம் - அதன் பால் வரும் சிறுபிள்ளைத்தனம் நல்லதல்ல. அட்வைஸ் என எடுக்க வேண்டாம், பழகிய தோஷத்துகாக சொல்கிறேன். இதே அட்டிடியூட்டுடன் எந்த விசயத்தில் இருக்கும் எவருக்கும்.
    • ஹையா .....வெய்யில் பிடிக்காத இடம் வெள்ளையாய் இருக்கு........!  😂  
    • இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும். உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி. இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.
    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.