Jump to content

1.5 பில்லியன் டொலர் குறித்து பேசிய பசில்… சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க வலியுறுத்திய ஜெய்சங்கர்…!


Recommended Posts

1.5 பில்லியன் டொலர் குறித்து பேசிய பசில்… சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க வலியுறுத்திய ஜெய்சங்கர்…!

Jaishankar-basil-700x375.jpg

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு இடையில் இணையவளியில் சந்திப்பொன்று இடமபெற்றுள்ளது.

இதன்போது மனிதாபிமான நடவடிக்கையாக இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

400 மில்லியன் அமெரிக்க டொலர் பரஸ்பர நாணய பரிமாற்றம் மற்றும் ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியத்தின் ஊடக 515.2 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசியப் பொருட்களுக்கான 1 பில்லியன் கடன் மற்றும் எரிபொருள் வாங்குவதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிஉதவி குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சந்திப்பின்போது இலங்கையின் உறுதியான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா இருக்கும் என்பதை ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தினார்.

https://athavannews.com/2022/1262031

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த டீல் நல்லா இருக்கே..👌 இதை இலங்கை கப் என்டு பிடித்து கொண்டால் மாசா மாசம் பணம் கறக்கலாம்..😊

Link to comment
Share on other sites

43 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்த டீல் நல்லா இருக்கே..👌 இதை இலங்கை கப் என்டு பிடித்து கொண்டால் மாசா மாசம் பணம் கறக்கலாம்..😊

உண்மைதான்.இந்திய மீனவர்களைப் பிடித்து வந்து இந்திய அரசுக்கு விற்று பணம் உழைக்கும் அரிய உத்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்த டீல் நல்லா இருக்கே..👌 இதை இலங்கை கப் என்டு பிடித்து கொண்டால் மாசா மாசம் பணம் கறக்கலாம்..😊

 

46 minutes ago, நந்தி said:

உண்மைதான்.இந்திய மீனவர்களைப் பிடித்து வந்து இந்திய அரசுக்கு விற்று பணம் உழைக்கும் அரிய உத்தி.

அங்கேயும்…. தமிழக மீனவர் மூலம் தான், ஶ்ரீலங்கா பணம் கறக்கின்றது. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

எரிபொருள் வாங்குவதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிஉதவி குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.

சொகுசு ரயில் கொடுத்தா எரிபொருள் சீனாவா கொடுப்பது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 புலி சந்தேகநபர்கள் என்று  பிடிபட்டு வருடக்கணக்கில் கிடந்த சொந்த நாட்டு குடிமகன்களே அல்லாடுகிறார்கள் தமிழர் எனும் காரணத்தினால் இந்த செய்தியை படித்தபின்னும் இந்த கேட்டில் டெல்லி தீர்வு தரும் என்று எப்படி நம்புகிறார்கள் எங்கடை அரசியல் அறிவுக்கொழுந்துகள் ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஈழத்தீவிலே தமிழர்பகுதிகளிலே கலவரத்தையும் காடைத்தனத்தையும் அரங்கேற்றிச் சொத்துகளைச் சூறையாடி உயிர்களைபலியெடுத்துப் பணம் பார்த்தது. இன்று அக்கரையிலே இருக்கும் தமிழரைப் பிடித்துப் பணயம் வைத்துப் பணம் பார்க்கிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.