Jump to content

முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இந்தியா உறுதி!


Recommended Posts

 

முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இந்தியா உறுதி!

 
jayshankar-750x375.png

முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை ஏனைய சர்வதேச சகாக்களுடன் இணைந்து இந்தியா முன்னெடுக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த, நாட்டில் முதலீடு செய்வது தொடர்பான திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதன்போது, இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வளர்ச்சி திட்டங்களை செயற்படுத்துவது பற்றியும் முதலீடு செய்வது பற்றியும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தைக் குறித்து ருவிட்டரில் தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தியா தன்னால் முடிந்த உதவிகளை செய்யும் என தெரிவித்துள்ளார்.

மேலும் சிறை பிடித்துள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படியும் இதன்போது வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இலங்கையின் உறுதியான நம்பகத்தன்மை மிக்க சகாவாக விளங்கும் என உறுதியளித்தாக தெரிவித்துள்ள அவர், 400 மில்லியன் டொலர் பணப்புழக்கத்தினை பரிமாறிக்கொள்வது குறித்து சாதகமாக ஆராய்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களுக்கான ஒரு மில்லியன் டொலர் கடன் மற்றும் எரிபொருள் கொள்வனவிற்கான 500 மில்லியன் டொலர் உட்பட எல்ஓஐசி குறித்தும் ஆராய்ந்தோம் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை ஏனைய சர்வதேச சகாக்களுடன் இணைந்து இந்தியா முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்தியாவிடம் 73 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவியை கோர திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 15, 2022

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இது சிங்களத்தை குறைத்து மதிப்பிடுபவர்களுக்கான செய்தி.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kapithan said:

இது சிங்களத்தை குறைத்து மதிப்பிடுபவர்களுக்கான செய்தி.

இல்லை, இது இன்னும் இந்தியா தமிழர்களுக்கு தீர்வை வாங்கித்தரும் என்று நம்பி இந்திய Proxy க்களின் பின் கூத்தாடுபவர்களுக்கு சொல்லப்படும் செய்தி, 
கடன் தருவதென்றால் இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கொடு ...கேஸ் குளோஸ் 
சொல்லுமா இந்தியா, விடுமா RAW, வேண்டுகோள் விடுப்பார்களா  Proxyகள்   

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

கடன் தருவதென்றால் இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கொடு ...கேஸ் குளோஸ் 
சொல்லுமா இந்தியா, விடுமா RAW, வேண்டுகோள் விடுப்பார்களா  Proxyகள்   

கேஸைக் குளோஸ் பண்ணியதன் பிறகு எப்படித் தலையிடுவதாம்? பிச்சைக்காரன் புண் போல எமது அவலம் நீடிப்பதே இந்தியாவுக்குத் தேவையானது. அது ஒருபோதுமே எமது அவலங்கள் தீர்வதை விரும்பப்போவதில்லை. எம்மைச் சாட்டியே இலங்கையில் தனது மூக்கினை நுழைக்க இந்தியாவால் முடிகிறது.

 • Like 5
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இவர்களை விட்டால் அவர்களுக்கு வழி இல்லை
அவர்களை விட்டால் இவர்களுக்கு வழி இல்லை
 

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

டெல்லி பொத்திக்கொண்டு இருந்தாலே காணும் எமக்கான விடியல் உருவாகும் ஆனால் அவர்களுக்கு ரஞ்சித் சொன்னதுபோல் எம்மை  வைத்தே அறுவடை பண்ணுகிறர்கள் இலங்கையில்.

 • Like 5
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nunavilan said:

முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இந்தியா உறுதி!

இவரொன்றும் புதிதாகச் சொல்லவில்லையே. கடந்த மூன்று தசாப்பதங்களுக்கு மேலாக அதனைத்தானே செய்துகொண்டிருக்கிறீர்கள். அழிப்புப் படையாக வந்து அவலத்தை செய்ததோடு... தொடர்ந்து 2009இல் இனஅழிப்பிலும் பங்கெடுத்து இன்று ஆப்பிழுத்த குரங்காட்டம் நின்றவாறு, தொடர்ந்தும் சிங்களத்துக்கு முண்டுகொடுப்பதிலேயே கவனம் செலுத்துகிறீர்கள். ஆனால் சிங்களமோ சீனாவென்ற பொண்டாட்டியோடு கூடிக்குலவி தன்னை வாழ்விக்க, ****டியாக பின்னால் அலைந்துகொண்டிருக்கிறது. இதில் பிராந்திய வல்லரசாம். 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2022 at 00:37, nunavilan said:

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தியா தன்னால் முடிந்த உதவிகளை செய்யும் என தெரிவித்துள்ளார்.

இதேன் இவர் நாண்டுகொண்டு நிக்கிறார்? இதெல்லாம் உதவி செய்து நிமிர்த்தக்கூடிய நிலையிலா இருக்கிறது? எவ்வளவு கொட்டினாலும் விழுங்கி விட்டு கொட்டாவி விட்டுக்கொண்டே இருக்கும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இதேன் இவர் நாண்டுகொண்டு நிக்கிறார்? இதெல்லாம் உதவி செய்து நிமிர்த்தக்கூடிய நிலையிலா இருக்கிறது? எவ்வளவு கொட்டினாலும் விழுங்கி விட்டு கொட்டாவி விட்டுக்கொண்டே இருக்கும்.

இந்தியாவின் திட்டம் இலங்கைக்கு உதவி செய்வதல்ல, இலங்கையை வங்குரோத்தாக்குவதும், இடையில் மற்றவர்கள் புகுந்து அவர்களது நலனை பெறுவதை தடுப்பதும்தான் இந்தியாவின் நோக்கம்.

இலங்கை நிலமை மிக மோசமாகிவிட்டது. 6 மாதங்களுக்கு முன்னர் இலங்கை வங்குரோத்தாவதற்கு 27 % சாத்தியம் உள்ளதாகக்கூறினார்கள் தற்போது அதன் நிலை அதிகரித்து 50% இற்கும் அதிகமாகிவிட்டது என கூறுகிறார்கள், இதனால் கடன் பெறுவது கடினம் அவ்வாறு கடன் பெறுவதானாலும் வட்டி அதிகரிக்கும் அது மேலும் மேலும் கடன் அழுத்தத்தத்தை இலங்கை மீது பிரயோகிக்கும்.

இலஙகை இருப்பிலுள்ள தஙத்தை விற்கும் நிலைக்கு வந்துவிட்டது.

இந்த ஆண்டு நடுப்பகுதியில் இலங்கை வங்குரோத்தாகும் என கணிப்பிட்டுள்ளார்கள், அப்போது Dollar Bond விலை தாறுமாறாக இறங்கும் அதனை கழிவு விலையில் வாங்கினால் அவர்களுக்கு இலாபம் ஏற்படும் (Recovery rate).

ஏற்கனவே இலங்கையின் Dollar bond இன் விலையை விட Recovery rate விலை அதிகரித்துவிட்டமையால் நிதிநிறுவனங்கள் இலங்கை வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும் பல வளங்களைக்கொண்ட மேற்கு ஆபிரிக்க நாடுகளையே யாரும் கண்டு கொள்ளவில்லை, பூகோள ரீதியாக இலங்கை, இந்தியாவிற்கான கப்பல் வழங்கல் புள்ளியாக மட்டுமுள்ள இலங்கை, இந்தியாவிற்கு ஓரளவு முக்கியத்துவம் ஆனால் சீனாவிற்கோ மேற்குலகிற்கோ இலங்கை முக்கியமல்ல என நினைக்கிறேன்.

இந்தியா இதுவரை எதற்காகப்பொறுத்துகொண்டிருக்கிறது, நிலமை மோசமாகுவதற்காகவா? காலம் தாழ்த்த உதவி வர தாமதமாக மீட்சியடைய முடியாத நிலை  ஏற்படப்போகிறது.

Edited by vasee
 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மழை கொடுக்கும் கொடையுமொரு
இரண்டு மாதம்...
வயல் கொடுக்கும் கொடையுமொரு
மூன்று மாதம்...
பசு வழங்கும் கொடையுமொரு
நான்கு மாதம்...
பார்த்திபனாம் கர்ணனுக்கோ
நாளும் மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ
நாளும் மாதம்...

....

பொன்னும் கொடுப்பான் பொருள் கொடுப்பான்
போதாது போதாது என்றால் 
இன்னும் கொடுப்பான்
இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன் 
தன்னைக் கொடுப்பான்
தன் உயிரும் தான் கொடுப்பான்
தயாநிதியே... 

டிஸ்கி

கொடுத்து கொடுத்து சிவந்த கைடா ..எங்கட வடக்கு விநாயகம் ☺️

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மழை கொடுக்கும் கொடையுமொரு
இரண்டு மாதம்...
வயல் கொடுக்கும் கொடையுமொரு
மூன்று மாதம்...
பசு வழங்கும் கொடையுமொரு
நான்கு மாதம்...
பார்த்திபனாம் கர்ணனுக்கோ
நாளும் மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ
நாளும் மாதம்...

....

பொன்னும் கொடுப்பான் பொருள் கொடுப்பான்
போதாது போதாது என்றால் 
இன்னும் கொடுப்பான்
இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன் 
தன்னைக் கொடுப்பான்
தன் உயிரும் தான் கொடுப்பான்
தயாநிதியே... 

டிஸ்கி

கொடுத்து கொடுத்து சிவந்த கைடா ..எங்கட வடக்கு விநாயகம் ☺️

இத்தனையும் சிங்களத்துக்கு போதாததென்றால்

தமிழனின் உயிரையும் எடுத்து கொடுப்பான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மிக அண்மையில் அரசியல் மற்றும் பாதுகாப்புத்துறையில் பேராசிரியராகக் கடமையாற்றும் ஒரு தமிழரின் செவ்வியொன்றினைக் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

எம்மில் பலர் நினைப்பதைப் போல அல்லாமல் , இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தினால் இந்தியா பெரிதாகக் கவலையடைவதாகத் தான் கருதவில்லை என்று கூறுகிறார். இலங்கையில் சீனாவின் பிரசன்னம் வர்த்தக ரீதியிலானது மட்டுமே என்பதை இந்தியா நம்புவதாகவும், இதுகுறித்து இப்போதைக்கு தாம் பெரிதாக அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என்று இந்திய வெளியுறவு  மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் நினைப்பதாகவும் தெரிகிறது. அவர்களைப் பொறுத்தவரை இலங்கையில் தாமும் கால்பதித்திருக்க சந்தர்ப்பம் இருக்கும்வரை தாம் எதுவுமே செய்யத்தேவையில்லை என்று இந்தியா நினைக்கிறது. அதாவது, சீனாவும் இருக்கட்டும், எங்களையும் இருக்கவிடுங்கள் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு.

அதேவேளை, வெளியில் பார்க்கும்போது இந்தியாவுக்கும் மேற்குலகிற்கும் இடையே நெருங்கிய (சீனாவின் ஆக்கிரமிப்பு மனோபாவம் தொடர்பாக) உறவு இருப்பது போலத் தோன்றினாலும், இந்தியா சீனாவைக் காட்டிலும் மேற்குலகு தனது பிராந்தியத்தில் தலையிடுவதை விரும்பவில்லையென்று தெரிவதாகவும் கூறுகிறார். இன்னொரு வகையில் சொல்லப்போனால், இந்தியா சீனாவை நம்புமளவிற்கு மேற்குலகை நம்பத் தயாரில்லையென்றும் தெரிகிறது, அவரது கூற்றுப்படி.

ஆகவேதான், இந்தியா நோக்கி முன்வைக்கப்படும் சீனப் பூச்சாண்டிகளை இந்தியா கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், சீனாவைக் காரணம் காட்டி ஈழத்தமிழர்கள் இந்திய அரசுமீது முன்வைத்துவரும் கோரிக்கைகளையோ அல்லது தற்போது தீர்வு ஒன்று அவசியம் எனும் கோரிக்கையினையோ இந்தியா ஏறெடுத்தும் பார்க்க நினைக்கவில்லையென்றும் கூறுகிறார்.

இவர் கூறுவதைப் பார்க்கும்போது இந்தியா இன்று மட்டுமல்ல, என்றுமே தமிழர் தொடர்பான தீர்வொன்றினை (தமிழருக்குச் சார்பான) முன்வைக்கப்போவதில்லை என்பது தெளிவாகிறது. இதனை அறிந்துதான் என்னவோ சுமந்திரன் கூட அண்மையில் இந்தியாவிடம் உன்வைக்கப்பட்ட தமிழ்க் கட்சிகளின் தீர்வினை "ஏன் அவசரப்படவேண்டும்? இது சரியான தருணமில்லை. இப்போது இதுதொடர்பாக அவசரப்பட என்ன தேவை இருக்கிறது?' என்று கேள்வியெழுப்பியிருக்கிறார். சிலவேளை இந்தியா இவரிடமும் வயோதிபரிடமும் தனது நிலைப்பாட்டினை உறுதியாகக் கூறியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

சீனாவைக் காரணம் காட்டி ஈழத்தமிழர்கள் இந்திய அரசுமீது முன்வைத்துவரும் கோரிக்கைகளையோ அல்லது தற்போது தீர்வு ஒன்று அவசியம் எனும் கோரிக்கையினையோ இந்தியா ஏறெடுத்தும் பார்க்க நினைக்கவில்லையென்றும் கூறுகிறார்.

இது உண்மையாக இருக்கலாம்

 

3 hours ago, ரஞ்சித் said:

இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தினால் இந்தியா பெரிதாகக் கவலையடைவதாகத் தான் கருதவில்லை என்று கூறுகிறார். இலங்கையில் சீனாவின் பிரசன்னம் வர்த்தக ரீதியிலானது மட்டுமே என்பதை இந்தியா நம்புவதாகவும், இதுகுறித்து இப்போதைக்கு தாம் பெரிதாக அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என்று இந்திய வெளியுறவு  மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் நினைப்பதாகவும் தெரிகிறது.

ஒருவேளை தமிழர் சீனாவுடன் சேர்ந்து தனக்கு எதிராக கிளம்பாமல் இருப்பதை தடுப்பதற்காக போடும் நாடகமாய் இருக்கலாம்.. இல்லையெனில் சீனாக்காரன் வந்து போனவுடன் இவர்கள் இங்கு வந்திறங்குவதும், கூப்பிட்டு கதைப்பதும், உதவிகளை அறிவிப்பதும் எதற்காம்?

Link to comment
Share on other sites

Please sign in to comment

You will be able to leave a comment after signing inSign In Now
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.