கருத்துக்கள உறவுகள் கிருபன் பதியப்பட்டது January 16 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது January 16 சந்திரிகா, வெல்கம, அர்ஜுண, சுசில், அநுரவின் பங்கேற்பில் உருவாகின்றது புதிய அரசியல் அணி (ஆர்.ராம்) தென்னிலங்கை அரசியல் களத்தில் புதிய அரசியல் அணியொன்று எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த அரசியல் அணியில் மையப்புள்ளியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநயக்க குமாரதுங்க இருக்கவுள்ளதோடு, குமார் வெல்கம, அர்ஜுண ரணதுங்க, சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் ஒருங்கிணையவுள்ளனர். இந்த அணியானது குமார வெல்கம தலைமையில் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய அரசியல் கட்சியான புதிய லங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்தி பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைக்கும் வகையில் இந்த அணி செயற்படவுள்ளது. இதுதொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம வீரகேசரியிடத்தில் தெரிவிக்கையில், எமது கட்சியின் தலைமைக்காரியாலயத்தினை எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதி பத்தரமுல்லையில் திறப்பதற்கு தீர்மானித்துள்ளோம். குறித்த நிகழ்வில் எமது கட்சியை மையப்படுத்திய பரந்து பட்ட அணியொன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். ஜனநாயகம், மனிதாபிமான பண்புகள் நிறைந்த அரசியல் கலாசாரமொன்றையும் அனைவரும் சமத்துவமாக வழும் அமைதியான சூழல் ஒன்றையும் கட்டியெழுப்புவதற்கு சமூகத்தினை வழிநடத்தக்கூடிய அரசியல் கட்சியொன்று அவசியமாகின்றது. அந்த வெற்றிடத்தினைப் பூர்த்தி செய்யும் நோக்கத்திற்காகவே இப்புதிய அரசியல் கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு தீர்மானித்துள்ளோம். இந்தக் கட்சியின் போசகராகவும் எம்மை வழிநடத்துபவராகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க செயற்படவுள்ளார். அத்துடன் அவருடைய வழிகாட்டலில் மாற்றத்தினை ஏற்படுத்துவதை நோக்கி நகரவுள்ளோம். இந்த நிகழ்விற்கு அனைத்து தலைவர்களையும் அழைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். மேலும், எமது கொள்கைகளையும், இலக்குகளையும் ஏற்றுக்கொள்பவர்கள் எம்முடன் இணைந்து பயணிப்பதற்கு முடியும். அவ்விதமானவர்களுக்காக எமது கதவுகள் திறந்தே இருக்கும். அண்மையில் சுசில் பிரேமஜயந்தவுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளேன். அதேநேரம், ஏனைய தலைவர்களையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதில் எமக்கு தயக்கங்கள் இல்லை. மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் பங்காளியாக இருக்கின்றார். அவர் அதிலிருந்து வெளியேறி எம்முடன் இணைந்து கொள்வது பற்றி தீர்மானித்தால் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளோம் ஏனைய எதிரணிகளையும் இணைத்துப் பயணிப்பதற்கும் தயாரகவே உள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/120810 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் வாலி Posted January 16 கருத்துக்கள உறவுகள் Share Posted January 16 அடித் தட்டு மக்கள் ராஜபக்ச்கவினருக்கு எதிராக இறங்கினால் மட்டுமே மாற்றம் உருவாகக்கூடிய வாய்ப்பு உண்டு. அது இலங்கை திவால் ஆனால் மட்டுமே சாத்தியமாகும். அந்த ஒரு நிலைக்கு இலங்கையை சைனாவும் இந்தியாவும் ஒருபோதும் விடமாட்டார்கள். இப்ப ஒரு தேர்தல் வந்தாலும் ராஜபக்ஷவினரே வெல்வார்கள். Link to comment Share on other sites More sharing options...
nunavilan Posted January 16 Share Posted January 16 ஒரு வலுவான எதிர்க்கட்சி இல்லாத வரை மகிந்த காட்டில் மழை தான். Link to comment Share on other sites More sharing options...
கற்பகதரு Posted January 16 Share Posted January 16 (edited) 1 hour ago, வாலி said: அடித் தட்டு மக்கள் ராஜபக்ச்கவினருக்கு எதிராக இறங்கினால் மட்டுமே மாற்றம் உருவாகக்கூடிய வாய்ப்பு உண்டு. உண்மை. அதனை சாத்தியமாக்கி மக்களை ஊக்குவித்து வழிநடத்தும் தலைமை தேவை. 1 hour ago, வாலி said: அது இலங்கை திவால் ஆனால் மட்டுமே சாத்தியமாகும். மாற்றம் ஏற்பட திவாலாவது மட்டுமே ஒரே வழியல்ல. திவாலாவது மாற்றத்தை கொண்டுவரக்கூடியது, ஆனால் மாற்றம் உண்டாகாமால் திவாலாகி வாழும் நாடுகளாக, சோமாலியா, சியரா லியோன் ஆகிய இருக்கின்றன. இலங்கையும் அவ்வாறாக தொடரக்கூடும். 1 hour ago, வாலி said: அந்த ஒரு நிலைக்கு இலங்கையை சைனாவும் இந்தியாவும் ஒருபோதும் விடமாட்டார்கள். தமக்கு இலாபம் இல்லாத இடத்தில் இந்தியா, சீனா உட்பட எந்த நாடும் நேரத்தையும் பணத்தையும் செலவிடுவதில்லை. திவாலான இலங்கை பயனற்ற நாடாக மாறும் போது, எல்லா நாடுகளும் கைவிடும் சாத்தியமே அதிகம். 1 hour ago, வாலி said: இப்ப ஒரு தேர்தல் வந்தாலும் ராஜபக்ஷவினரே வெல்வார்கள். உண்மையல்ல. அமைச்சர்களே பகிரங்கமாக அரசை விமரிசித்து பதவி இழக்கும் அளவுக்கு இராஜபக்ஷ அரசு செல்வாக்கு இழந்துவிட்டது. கூட்டம் கூடி கோத்தபாயவை வரவேற்ற மக்கள் இப்போது இராணுவம் நிற்க கூடியதாக கூக்காட்டி எதிர்ப்பு தெரிவிக்க கூடும் அளவுக்கு நிலமை மாறிவிட்டது. அரச அடக்குமுறைக்கு மத்தியிலும் எதிர்க்கட்சி அழைக்க கொழும்பை முடக்கும் அளவுக்கு மக்கள் கூடும் காட்சிகளை காணக்கிடைக்கிறது. நாமல் இராஜபக்ஷ தாம் செல்வாக்கு இழந்துவிட்டதாக பகிரங்மாகவே ஏற்றுக்கொண்டுள்ளார். Edited January 16 by கற்பகதரு 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் satan Posted January 16 கருத்துக்கள உறவுகள் Share Posted January 16 3 hours ago, கிருபன் said: ஜனநாயகம், மனிதாபிமான பண்புகள் நிறைந்த அரசியல் கலாசாரமொன்றையும் அனைவரும் சமத்துவமாக வழும் அமைதியான சூழல் ஒன்றையும் கட்டியெழுப்புவதற்கு சமூகத்தினை வழிநடத்தக்கூடிய அரசியல் கட்சியொன்று அவசியமாகின்றது. 3 hours ago, கிருபன் said: இந்தக் கட்சியின் போசகராகவும் எம்மை வழிநடத்துபவராகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க செயற்படவுள்ளார். அதை நிறைவேற்றுவதற்கு ஏற்கெனவே உங்களுக்கு இருந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டீர்களே! புதிய மொத்தையில் பழைய கள். 3 hours ago, கிருபன் said: மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் பங்காளியாக இருக்கின்றார். அவர் அதிலிருந்து வெளியேறி எம்முடன் இணைந்து கொள்வது பற்றி தீர்மானித்தால் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளோம் ஐயோ! மீண்டும் இவரா? பட்டது போதாதா? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் nedukkalapoovan Posted January 16 கருத்துக்கள உறவுகள் Share Posted January 16 சமந்தர் கும்பலுடன் இலவச இணைப்பாக போய் இணைந்து கொள்வார். ஆனால் கஜன் மாட்டார். ஏன்னா அவர் அப்பாவை போட்டதே இவா தானே. ஒரு கொலைகாரனை.. ஒரு கொலைகாரி பிரதியீடு செய்யலாம் என்று தமிழர்கள் நினைக்க வேண்டிய நிலை. சரத்தையும் மைதிரியையும்.. அப்படித்தான் நினைத்தார்கள். நடந்தது... என்ன..?! Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts