Jump to content

""வியத்மக"" சிங்கள சிந்தனையாளர் குழாத்தை எதிர்கொள்ளவல்ல தமிழர் சிந்தனையாளர் குழாம் வேண்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Courtesy: திபாகரன்
 

சிங்கள பௌத்த மேலாதிக்க இனவாதம் அறிஞர் கட்டமைப்பை உருவாக்குவதிலிருந்து எழுச்சி பெறத் தொடங்கியது. இத்தகைய அறிவியல் எழுச்சிக்கான தொடக்கத்தை 1880களில் இருந்து தெளிவான அடையாளம் காணலாம். இதில் அநகாரிக தர்மபால முதன்மையானவர்.

இத்தகைய அறிவியல் பாரம்பரியத்தின் உச்சமாக ராஜபக்சக்கள் "வியதமக"  என்கின்ற ஓர் அறிவியல் மற்றும் நிபுணத்துவ குழாம் ஒன்றை 2015ஆம் ஆண்டின் பின் உருவாக்கி இருக்கிறார்கள்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச தோல்வியைத் தொடர்ந்து இனவாதத்தை மறுகட்டமைப்பு செய்து அதன்மூலம் தம்மைத் தக்கவைத்து தமிழ் இன அழிப்பை முழு அளவில் முன்னெடுப்பதற்காக இவ்வாறு "வியத்மக" என்கின்ற ஒரு சிந்தனையாளர் குழாத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

""எதை மாற்ற முடியுமோ அதன் மீது செயற்படு; எதை மாற்ற முடியாதோ அதனைப் புரிந்துகொள்"" என்ற தமிழ் பழமொழி இங்கு கவனத்திற்குரியது. மனிதக்குலம் தோன்றியதிலிருந்து மனிதனுக்கும் இயற்கைக்குமான போராட்டமும், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான போராட்டமும் ஓய்வின்றி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்தத் தொடர் போராட்டத்தில் மனிதன் தன் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ளவற்றைச் சிலவேளை வெல்கிறான். சில வேளைகளில் அதனைக் கட்டுப்படுகிறேன். சில வேளைகளில் அதனைப் புரிந்துகொண்டு புதிய பாதையைத் தேடி முன்னேற்றம் அடைகிறான். இந்த வரலாற்றறிவை ஈழத் தமிழர்களுடைய விடுதலைக்கான போராட்டத்திலும் பிரதியீடு செய்து பார்க்க வேண்டும்.

மனிதன் எங்கு விடப்பட்டு இருக்கின்றானோ அங்கிருந்துதான் அடுத்த கட்ட பயணத்தைத் தொடர வேண்டும். வெறுமனே தூய இலட்சியவாதங்களுக்கும், கனவுகளுக்கும் , கற்பனைகளுக்கும் உட்பட்டு சமூக முன்னேற்றத்தை ஒரு நொடிப் பொழுதில் உயரப் பாய்ந்து கடந்துதிட முடியாது.

முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட பேரவலத்தின் பின்னர் கடந்த 12 ஆண்டு காலமாக ஈழத் தமிழினம் எழுந்து நிற்கமுடியாமல், தன்னை முன் நகர்த்த முடியாமல் சரிந்து கிடக்கிறது. வெள்ளத்தில் அகப்பட்ட நாணல் புற்கள்கூட வெள்ளப் பெருக்கு நீங்கியவுடன் மீண்டும் நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் எம்மால் நிமிர்ந்து இருக்க முடியவில்லை.

இதனைப் பற்றி அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யவும், சிந்திக்கவும் முடியாத நிலை தோன்றியிருக்கிறது. இத்தகைய மந்த நிலையைப் போக்குவதற்குத் தமிழினம் தன்னை தயார்ப்படுத்த வேண்டியிருக்கிறது.

அந்தத் தயார்ப்படுத்தலின் போது சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, அறிவியல் ரீதியாக, கலை இலக்கிய பண்பாட்டு ரீதியாக ஈழத்தமிழ் தேசியமானது காலகட்ட சூழலுக்கும் தேவைக்கும் பொருத்தமாகத் தன்னை மீள் கட்டுமானத்துக்கு உட்படுத்த வேண்டும். அதற்கேற்ற தெளிவான சிந்தனை போக்கு இன்னும் எம்மவர் மத்தியில் வளரவில்லை.

இத்தகைய தமிழ்த்தேசிய மீள் கட்டுமானத்திற்கு உட்படாவிட்டால் தமிழினம் வளர்ச்சிக்கும், விடுதலைக்கும் தகுதியற்றதாகிவிடும். ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனம் ஒடுக்கப்பட்ட நிலையில் இன்னும் தொடர்ந்து ஒடுங்கிக் கிடக்கிறது.

ஆனால் ஒடுக்கிய சிங்கள பௌத்த பேரினவாதம் ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தை மேன்மேலும் ஒடுக்குவதற்கும், தமிழினம் மீண்டெழுவதைத் தடுப்பதற்கும், மேலும் முடக்குவதற்கும் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் அறிவியல் ரீதியாகவும் விஞ்ஞான பூர்வமாகவும் சிந்தித்துச் செயலாற்ற முற்படுகிறது.

அதன் வெளிப்பாடுதான் சிங்கள தேசியவாதம் தனக்குள் ஏற்படுத்தியிருக்கும் ""வியத்மக"" எனப்படும் சிந்தனையாளர், மற்றும் நிபுணர்கள் அடங்கிய சிந்தனைக் குழாம் ஒன்றை உருவாக்கி உள்ளமையாகும். அது நீண்ட தூரப் பார்வையுடன் எதிர்கால நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கவல்ல செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறு இங்கே ஒடுக்குவோன் தன்னை பெரியதம்பி புத்தி பூர்வமாகத் தகவமைத்துக் கொண்டிருக்கிறான். ஏனைய மதங்களையும் இனத்தவர்களையும் அடக்கி ஒடுக்கி அழித்து சிங்கள பௌத்தத்தை முன் நிலைப்படுத்துவதற்காக 1954 ஆம் ஆண்டு பௌத்த ஆணைக் குழு உருவாக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவில் சிங்கள அறிஞர்களும் கலாநிதிப் பட்டம் பெற்ற பேராசிரியர்களும் உள்ளடங்கி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அது பௌத்தத்தை அரச மதமாக்க வேண்டும் என்றும், பௌத்த சாசன அமைச்சு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும், சிங்கள மொழியை அரச மொழியாக ஆக்க வேண்டும் என்றும் இலங்கை அரசை நிர்ப்பந்தித்தது.

அதற்கமைய அடுத்த 10 ஆண்டுகளில் இலங்கையில் பௌத்தத்தையும் சிங்கள மொழியையும் முதன்மைப்படுத்தி சிங்கள பௌத்த மேலாதிக்க வாதம் தன்னை அறிவியல்பூர்வமாக அரசியலில் முன்னிலைப்படுத்தி ஸ்தாபிம் அடைந்துவிட்டது.

இவற்றுக்கு1953 ஆம் ஆண்டில் டி .சி விஜயவர்த்தன என்பவரால் எழுதப்பட்ட ""விகாரையில் புரட்சி"" என்ற நூல் ஆதாரமாகவும், தூண்டுதலாகவும் இருந்தது.

1962 ஆம் ஆண்டு எஸ் யூ கொடிகார எழுதிய “” Indo -- Ceylon Relations Since Independence "" என்ற நூல் தெளிவாகத் தமிழின எதிர்ப்பு வாதத்தையும் இந்திய எதிர்ப்பு வார்த்தையும் கொண்ட நூலாக அமைந்தது.

இது பிரித்தானியாவின் பல்கலைக்கழகம் ஒன்றின் கலாநிதி பட்ட ஆய்வுக்கான ஆய்வுக் கட்டுரை நூல் ஆகும். இந்நூல் சிங்கள பௌத்த அறிஞர்களும், கல்விமான்களும், பத்திரிக்கையாளர்களும், புத்திஜீவிகளும், அரசியல் வாதிகளும் தெளிவாகத் தமிழ் இன ஒடுக்கு முறையையும், இந்திய எதிர்ப்பு வாதத்தையும் முதற் கட்டமாகக் கையில் எடுத்து விட்டார்கள் என்பதையும் இனவாதம் திரட்சி பெற்றுவிட்டது என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது.

இக்காலப் பகுதியினை ""பண்டாரநாயக்கா மறுமலர்ச்சி யுகம்"" எனச் சிங்கள பௌத்த அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இது அறிவியல் பூர்வமாக, கலை இலக்கிய ரீதியாக, வெளியுறவுக் கொள்கை ரீதியாக, சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறை அறிவியல் பூர்வமாகவும் செயல் பூர்வமாகவும் திரட்சி பெற்ற காலம் எனலாம்.

இந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகத்தான் தமிழர்களை முள்ளி வாய்களில் கொடூரமாக இனப்படுகொலை செய்த இனவாதிகளை உலகளாவிய மனிதக் குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து பாதுகாத்து அரசு கட்டில் அமர்த்தவும் அவர்களைத் தொடர்ந்து பாதுகாக்கவும் மேன்மேலும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை இல்லாதொழிப்பதற்கான இனப்படுகொலை கலாச்சாரத்தைக் கொண்ட அறிவியல் பூர்வமான சிங்கள அறிஞர் குழு ""வியத்மக"" என்ற ஒரு கட்டமைப்பைச் சிங்கள தேசம் உருவாக்கியிருக்கிறது.

“”ஈ இருக்கும் இடங்கூட தமிழனுக்கு இல்லை”” என்ற உணர்வோடு இந்திய எதிர்ப்பு வாதத்தினூடாக தமிழர்களை இல்லாதொழிக்கின்ற இலக்கை குறிக்கோளாகக் கொண்டு சிங்கள அறிஞர் குழாம் வேகமாகச் செயற்படத் தொடங்கிவிட்டது.

இந்தப் பின்னணியில் இன்று இனவாத ராஜபக்சகளைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்குச் சிங்கள பேராசிரியர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள், கலை இலக்கியப் படைப்பாளர்கள் என்பவர்களை உள்ளடக்கிய ""வியத்மக "" வுக்கு பக்கபலமாகச் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு (ராணுவ) பல்கலைக்கழகமும் செய்யப்படுகிறது.

பௌத்த வளர்ச்சிக்குக் கிராமப்புற பேராதனைப் பல்கலைக்கழகம் துணைநின்ற காலம் மாறி இன்று இனவழிப்புக்கும் இந்திய எதிர்ப்பு வாதத்திற்கும் முன்னுரிமை கொடுத்து நகரப்புற சேர் ஜோன் கொத்தலாவல ராணுவப் பல்கலைக்கழகம் தலைமை தாங்கி வழி நடத்தும் அடித்தளமாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டது.

இவ்வாறு ஒரு பல்கலைக்கழகத்தை இனவழிப்புக்கும், இனவாதத்திற்கும், இந்திய எதிர்ப்பு வாதத்துக்கும் தலைமை தாங்கும் ஒரு அபாயகரமான சிங்கள சிந்தனையாளர் குழாம் தோன்றி வீரியமாக வளர்ச்சி பெறுவதைக் காணமுடிகிறது. ஆனால் இவற்றுக்கு மாறாக ஒடுக்கப்பட்ட, அழிக்கப்பட்ட தமிழினம் எழுந்திருக்க முடியாமல், தன்னை மறு சீரமைக்க முடியாமல் தத்தளிக்கிறது.

தம்மை நிலைப் படுத்துவதற்கான அறிஞர் படையையோ, சிந்தனையாளர் குழத்தையோ ஈழத்தமிழர் பக்கம் காணமுடியவில்லை. அறிவியலின் பால் சிந்திக்கவல்ல ஒரு தொகுதியினர்கூட இன்னும் முன்வரவில்லை என்பதுவே வேதனையானது. தொன்மையான தமிழ்ப் பண்பாட்டு நாகரீகத்திற்கு இது அழகல்ல.

எனவே எதிரி எத்தகைய அறிவியல் முன்னேற்பாடுகளுடன் தொழிற்படுகிறான் என்பதை கற்றுக் கொண்டு அதனூடாக தமிழினம் எதிர்காலத்தில் தன்னை தகவமைத்துக் கொள்ளக்கூடிய வீதி வரைபடத்தை வரைந்து கொள்ளவேண்டிய உடனடி அவசியம் எழுந்துள்ளது.

எனவே உடனடியாக தமிழினம் பல்துறை சார்ந்த நிபுணர்களை ஒருங்கிணைத்து ஒரு பலம் பொருந்திய சிந்தனையாளர் குழாம் ஒன்றை உருவாக்க வேண்டும்.

தமிழ் மக்களின் போராட்டத்தை உலகம் அங்கீகரிக்க வேண்டுமாயின், எம்மை நாம் கௌரவம் மிக்க ஒரு தேசிய இனமாகக் காட்ட வேண்டுமாயின், எங்களிடம் ஒரு சிறந்த அறிஞர் குழாம் இருக்க வேண்டியது அவசியம்.

இன்று ஒரு வளம் பொருந்திய அறிஞர் குழாம் ஒன்றை உருவாக்கிச் செயற்படுவது தமிழினத்துக்கு உடனடித் தேவையாக உள்ளது. அதனையே வரலாறு வேண்டி நிற்கிறது.

ஈழத்தமிழினத்தின் விடுதலையில் அக்கறை கொண்ட , தமிழினத்தின் எதிர்காலத்திற்கான சுபிட்சமான வாழ்வில் விருப்பு கொண்ட, நல்லுள்ளம் கொண்ட அறிஞர்களைத் தமிழ்த் தேசிய இனம் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறது. 

-திபாகரன்-

 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

தமிழ் மக்களின் போராட்டத்தை உலகம் அங்கீகரிக்க வேண்டுமாயின், எம்மை நாம் கௌரவம் மிக்க ஒரு தேசிய இனமாகக் காட்ட வேண்டுமாயின், எங்களிடம் ஒரு சிறந்த அறிஞர் குழாம் இருக்க வேண்டியது அவசியம்.

ஆம் நீங்கள் சொன்னது போல் ஒரு சிறந்த அறிஞர் குழாம்  அமைத்து விட்டால்........தமிழ்ஈழம்   உருவாகி விடுமா?.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அவங்களிட்ட நாடிருக்கு, எங்களிட்ட!

தமிழ் ஈழம் உருவாகுதோ  இல்லையோ கீழே பாருங்க அவநம்பிக்கையுடன் கோத்தாவுக்கு  தெரிந்தே இருந்தது பொருளாதார வீழ்ச்சி பற்றி புலிகளுக்கு சுனாமி போல் கோத்தாவுக்கு கொரனோ 

3 minutes ago, Kandiah57 said:

ஆம் நீங்கள் சொன்னது போல் ஒரு சிறந்த அறிஞர் குழாம்  அமைத்து விட்டால்........தமிழ்ஈழம்   உருவாகி விடுமா?.   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் தமிழ் நின்று பிடிச்சிருக்கல்லோ....இனியும் நிற்கும்.....
அதாவது தமிழனும் இனவாத குழுவை உருவாக்க வேணும் என்று சொல்லுறாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கையில் இலங்கை வாழ் தமிழர்கள் விரும்பினால் பிரிந்து தனிநாடு அமைக்கா ஆதரவு அளிப்போம் என்று மாற்றினால் மற்றைய அனைத்தும் இலங்கை தமிழர்கள் சிறப்பாக செய்வார்கள் எனவே இந்தியாவின் வெளியுறவுக்கொளகையை மாற்றுவதற்கு  என்ன செய்யலாம் என்று ஆராய்வது நல்லது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

அவங்களிட்ட நாடிருக்கு, எங்களிட்ட!

நா.களிருக்கு

☹️

5 hours ago, Kandiah57 said:

இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கையில் இலங்கை வாழ் தமிழர்கள் விரும்பினால் பிரிந்து தனிநாடு அமைக்கா ஆதரவு அளிப்போம் என்று மாற்றினால் மற்றைய அனைத்தும் இலங்கை தமிழர்கள் சிறப்பாக செய்வார்கள் எனவே இந்தியாவின் வெளியுறவுக்கொளகையை மாற்றுவதற்கு  என்ன செய்யலாம் என்று ஆராய்வது நல்லது 

தென்னாசியாவின் தொழுநோயே இந்தியாதான். இதில் இந்தியாக் சுகதேகியாவது எப்போது, மற்றைய நாடுகள் வாழ்வது எப்போது. 

தென்னாசியா உருப்பட வேண்டுமாயின் இந்தியா உடைந்து சிதற வேண்டும்.

Link to comment
Share on other sites

அமைக்கப்படுகின்ற அறிஞர் குழாம் எல்லாம் தொடக்கத்தில் சரியான குறிக்கோளோடு தொடங்கினாலும் பின்னர் வெளிநாடுகளின் தலையீடினால் அவர்கள் சொல்வதுதான் சரியென நினைத்து தங்கள் கொள்கைகளில் சிற்றுந்து விலகுகிறார்கள். இதற்கு ஒரு காரணம் வெளிநாடடவர்களை எம்மை விட எல்லாம் உயர்ந்தவர்கள் என்று நினைப்பது அல்லது  அவர்களோடு இணைந்து பேசுவதெல்லாம் பெருமை என நினைத்து அதற்காக அனுசரித்து எங்களுக்கு எது தேவை என்று நினைத்தமோ அதை விட்டு அவர்களின் நலன்களுக்காக அவர்கள் போடும் பொறியில் விழுந்து விடுகிறோம். எங்களுக்கு கொள்கையில் உறுதியாக இருப்பது கொஞ்சம் கஷ்டம் .(சிலவேளை இதுக்கு பெயர் ராஜ தந்திரம் என்றும் சொல்லிக்கொள்வார்கள். அடிக்கடி வெளிநாடு மந்திரிகளை சந்திப்பது ஒரு பெயர் தானே )- எல்லா தனி அறிஞ்சர்களையும் சொல்லவில்லை. தனியே சிந்திக்கும் போது சரியாகத்தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Kapithan said:

நா.களிருக்கு

☹️

தென்னாசியாவின் நோய்க்கூறே இந்தியாதான். இதில் இந்தியாக் சுகதேகியாவது எப்போது, மற்றைய நாடுகள் வாழ்வது எப்போது. 

தென்னாசியா உருப்பட வேண்டுமாயின் இந்தியா உடைந்து சிதற வேண்டும்.

இந்தியா உடைவாதால். இலஙகைத்தமிழருக்கு என்ன நன்மை உணடு? தமிழ்ஈழம் மலருமா ?. தமிழ்நாடு தவிர்த்து எததனை மாநிலங்கள் எஙகளுக்கு ஆதரவாகப் இருப்பார்கள்? பெரும்பாலான மாநிலங்கள் இலங்கைக்குத் ஆதரவு அளிப்பார்கள்.அந்தவகையில் இலங்கை பிரியக்கூடாது என்ற இந்தியாவின் கொள்கையை பின்பற்றலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kandiah57 said:

இந்தியா உடைவாதால். இலஙகைத்தமிழருக்கு என்ன நன்மை உணடு? தமிழ்ஈழம் மலருமா ?.

தமிழீழம் மலருது மலராமல் விடுது. அது இரண்டாம் பட்சம்.
ஆனால் ஈழத்தமிழருக்கு இருந்த சகுனியும் கெட்ட சகுனமும் தொலைந்த நிம்மதி இருக்கும்.

Link to comment
Share on other sites

இந்த வியத்கமவை நம்பித்தான் 69 இலட்சம் வாக்கு போட்டு, இலங்கையின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பொருளாதார மற்றும் வாழ்வியல் நெருக்கடியை கொண்டு வந்து இருக்கின்றனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தமிழீழம் மலருது மலராமல் விடுது. அது இரண்டாம் பட்சம்.
ஆனால் ஈழத்தமிழருக்கு இருந்த சகுனியும் கெட்ட சகுனமும் தொலைந்த நிம்மதி இருக்கும்.

இந்தியா சகுனியும் கெட்ட சகுனமும் என்பது பெரும்பாலான ஈழத்தமிழரின் நிலைப்பாடு தான்  ஆனால் அது இரண்டாம் பட்சம். என்னைப் பெறுத்தளவில். முதலாவது பட்சம்தமிழீழம்அல்லது உறுதியான.  தீர்வு உங்கள் கோபம் எனக்கு புரிகிறது அதை நாங்கள் ஒரு தீர்வை பெறுவதான்  மூலம் தான் தணிக்கவேண்டும். அது தான் மாவீரர்களுக்கு நாங்கள் செய்யும் வணக்கமும்  நன்றிக்கடனுமாகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

இந்தியா சகுனியும் கெட்ட சகுனமும் என்பது பெரும்பாலான ஈழத்தமிழரின் நிலைப்பாடு தான்  ஆனால் அது இரண்டாம் பட்சம். என்னைப் பெறுத்தளவில். முதலாவது பட்சம்தமிழீழம்அல்லது உறுதியான.  தீர்வு உங்கள் கோபம் எனக்கு புரிகிறது அதை நாங்கள் ஒரு தீர்வை பெறுவதான்  மூலம் தான் தணிக்கவேண்டும். அது தான் மாவீரர்களுக்கு நாங்கள் செய்யும் வணக்கமும்  நன்றிக்கடனுமாகும்

இந்த கோபமும் கவலையும் என்றும் ஆறாது.

அடி வாங்கி அடி வாங்கி அடித்தவனின் காலையே சுற்றிவர ஈழத்தமிழினம் ஒன்றும் கிந்தியன் அல்ல....

Sri Lanka probes plot by Rajiv Gandhi's attacker to kill president Sirisena

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kandiah57 said:

இந்தியா சகுனியும் கெட்ட சகுனமும் என்பது பெரும்பாலான ஈழத்தமிழரின் நிலைப்பாடு தான்  ஆனால் அது இரண்டாம் பட்சம். என்னைப் பெறுத்தளவில். முதலாவது பட்சம்தமிழீழம்அல்லது உறுதியான.  தீர்வு உங்கள் கோபம் எனக்கு புரிகிறது அதை நாங்கள் ஒரு தீர்வை பெறுவதான்  மூலம் தான் தணிக்கவேண்டும். அது தான் மாவீரர்களுக்கு நாங்கள் செய்யும் வணக்கமும்  நன்றிக்கடனுமாகும்

அதற்கான வழிகுறித்து எந்த அரசியல்வாதியும் சிந்திப்பதாகத் தெரியவில்லையே. யார் சிறிலங்கா விசுவாசி. யார் இந்திய விசுவாசி. யார் அமெரிக்க விசுவாசி என்று காட்டும் போட்டியல்லவா போகிறது.

15 hours ago, நிழலி said:

இந்த வியத்கமவை நம்பித்தான் 69 இலட்சம் வாக்கு போட்டு, இலங்கையின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பொருளாதார மற்றும் வாழ்வியல் நெருக்கடியை கொண்டு வந்து இருக்கின்றனர். 

மக்கள் பட்டினியோடும் வாழப்பழகவேண்டும் என்று சொல்லி,  அதையும் இந்த 'வியத்கம' வைத்தே கடக்கிறார்கள்போலல்லவா தெரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

இந்த கோபமும் கவலையும் என்றும் ஆறாது.

அடி வாங்கி அடி வாங்கி அடித்தவனின் காலையே சுற்றிவர ஈழத்தமிழினம் ஒன்றும் கிந்தியன் அல்ல....

Sri Lanka probes plot by Rajiv Gandhi's attacker to kill president Sirisena


 சிங்களத் தீவிரவாதமும் இந்தியாவை வெறுக்கிறது. தமிழ்த் தீவிரவாதமும்(சிங்களம் - இந்தியம் சொல்வதுபோல்) இந்தியாவை வெறுக்கிறது. ஆனால் தமிழரை அழித்தவாறு சிங்களத்தைக் இந்தியம் காக்கிறது. இது இவர்களது வெளியுறவுக் கொள்கையா? அல்லது கொள்கை வகுப்பாளர்கள் சிறிலங்காவின் கைக்கூலிகளா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.