Jump to content

சத்தமின்றி சுற்றுச்சூழலைப் பாழாக்கும் `Fast Fashion' ஆடைக் கலாசாரம்; ஆய்வுகள் கூறும் நிதர்சனம் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சத்தமின்றி சுற்றுச்சூழலைப் பாழாக்கும் `Fast Fashion' ஆடைக் கலாசாரம்; ஆய்வுகள் கூறும் நிதர்சனம் என்ன?Wastes (Representational Image)

தனியொரு மனிதன் மூன்று ஆண்டுகளுக்குக் குடிக்கும் சராசரி தண்ணீர் அளவான 3,781 லிட்டர்கள் (வயலில் பருத்தி விளைச்சல் தொடங்கி, தொழிற்சாலையில் தயாராகி, சில்லறைக் கடைக்கு விற்பனைக்குச்செல்லும்வரை) ஒரேயொரு ஜோடி ஜீன்ஸ் மட்டுமே தயாரிக்கச் செலவாகும்.

புத்துணர்வு தோற்றத்தைத் தரும் என்னும் போலியான தேவையை உருவாக்கும் எண்ணமுடன் பரவுகிறது குறைந்த விலையில் வேகமாகத் தயாரிக்கப்படும் நவநாகரிக ஆடைக் கலாசாரம். இதன் காரணமாக அதிக அளவில் உற்பத்தியாகும் ஆடைகள் காலப்போக்கில் கழிவுகளாக மாறிச், சுற்றுச்சூழல் பாதிப்பை அதிகப்படுத்துகின்றன.

ஒவ்வொரு புடவையும் சராசரி 6 - 7 மீட்டர் நீளம். புடவை கட்டுவதை நிறுத்திவிட்டாலோ, அதன் மீதான ஆர்வம் குறைந்து போனாலோ பயனற்றதாகிவிடும். ஆனால், அதைக் குப்பையாகிக் கருதி எறியாமல் அதன் வடிவமைப்பை மாற்றிப் பயன்படுத்தலாம். பழைய புடவைகளை வீணாக்காமல் மறுசுழற்சி செய்து புதிய புடவைகளைத் தயாரிக்கலாம். ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் 1 மில்லியன் டன் ஆடைகள் குப்பையாக வீசி எறியப்படுகின்றன.   

குறைந்த விலையில், அதிக அளவில், வேகமாக நவநாகரிக ஆடைகளை உற்பத்தி செய்யும், உலகில் முன்னணி வகிக்கும் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு இவ்வகை ஆடைகள் ஏற்றுமதியாவதால் இந்தியாவுக்கு இது முக்கியமாகும்.

கப்பல் மற்றும் பன்னாட்டு விமானப் போக்குவரத்துத் துறையின் இணைந்த பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைவிட ஜவுளித் துறையின் பங்களிப்பு அதிகமாகும். ஃபேஷன் துறை ஒவ்வோர் ஆண்டும் 53 மில்லியன் டன் இழைகளைத் தயாரிக்கிறது. இவற்றில் 70% குப்பைக் கிடங்குகளுக்குச் செல்கின்றன அல்லது எரிக்கப்படுகின்றன.

Clothes (Representational Image)
 

2050-க்குள் இழை உற்பத்தி 160 மில்லியன் டன்களாக அதிகரிக்கும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த எல்லென் மேக் ஆர்தர் ஃபௌண்டேஷன் கணித்துள்ளது. 1%-க்கும் குறைவான இழைகளே ஆடைகள் தயாரிக்க மறுபடியும் பயன்படுத்தப்படுவதால், பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆடைகள் பயன்படுத்தப்படாமல் குப்பையாக வீணாகிச் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன.

உலக அளவில் நாவநாகரிக ஆடைகளைத் தயாரிக்கும் துறையே அதிக அளவிலான தண்ணீரை நுகரும் இரண்டாவது பெரிய துறை என்கிறது ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்பு. தனியொரு மனிதன் மூன்று ஆண்டுகளுக்குக் குடிக்கும் சராசரி தண்ணீர் அளவான 3,781 லிட்டர்கள் (வயலில் பருத்தி விளைச்சல் தொடங்கி, தொழிற்சாலையில் தயாராகி, சில்லறைக் கடைக்கு விற்பனைக்குச் செல்லும் வரை) ஒரேயொரு ஜோடி ஜீன்ஸ் மட்டுமே தயாரிக்கச் செலவாகும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்ளூர் ஜவுளி மற்றும் ஆடைத் துறையின் பங்களிப்பு 2% மற்றும் தொழிற்துறை உற்பத்தியில் 14% ஆகும் என்கிறது இந்தியத் தொழில் வர்த்கக் கூட்டமைப்பு.

ஃபேஷன் ஆடைகளின் ஏற்றுமதிகளும், உள்ளூர் தேவைகளும் தொடர்ந்து அதிகரிக்கின்றன. ஆடைகளுக்கான தனிநபர் செலவுகள் 2018-ல் ரூ.3,900/-லிருந்து 2023-ல் ரூ.6400/- ஆக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா கவர்ச்சிகரமான நுகர்வுச் சந்தையாக மாறி வருவதைத் தொடர்ந்து 2022-23-ல் சுமார் 300 பன்னாட்டு ஃபேஷன் பிராண்டுகள் இந்தியாவில் தங்கள் கடைகளைத் திறக்க உள்ளன என மெக்கன்ஸி அறிக்கை கூறுகிறது.

ஆண்டுக்கு 1 மில்லியன் டன் ஜவுளிகள், பெரும்பாலும் வீடுகளிலிருந்தே, தேவையற்றதாகத் தூக்கி எறியப்படுகின்றன. வீட்டின் தேவையற்ற பொருள்களைப் போடும் தொட்டியில், பயன்படுத்தாத ஆடைகளின் எடை மொத்த எடையில் 3% ஆகும். இந்தியாவின் மொத்த திடக் கழிவுகளில் ஜவுளிகளின் கழிவு மூன்றாம் இடம் வகிக்கிறது.

Wastes (Representational Image)
 
சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருக்க ஜவுளித்துறை உறுதிபூணும் நோக்கத்துடன் மத்திய அரசு 2019-ல் புதிய திட்டத்தை அறிவித்தது. லைஃப் ஸ்டைல், ஷாப்பர்ஸ் ஸ்டாப், ஃப்யூசர் குழுமம், ஆதித்ய பிர்லா உள்ளிட்ட நாட்டின் 16 முக்கிய பிராண்ட்கள் 2025-க்குள் தங்களது மொத்த நுகர்வில் கணிசமான பகுதியை சுற்றுச்சூழலைப் பாதிக்காத பொருள்களைக் கொள்முதல் செய்ய / பயன்படுத்த உறுதி பூண்டன. ஆனால், இது இந்தியாவில் குறைந்த விலையில் வேகமாகத் தயாரிக்கப்படும் நவநாகரிக ஆடைகள் ஜவுளிக் கழிவுகளை இன்னும் அதிகரிக்கவே உதவும்.

நவநாகரிக ஆடைகள் துறை வழக்கமாக ஆண்டுக்கு மழை மற்றும் கோடை என இரு பருவங்களில் மட்டுமே புதிய கலெக்ஷன்களை அறிமுகப்படுத்தும். எனவே, இரு பருவங்களுக்கும் தேவையான ஆடைகளை வடிவமைக்கவும், தயாரிக்கவும், வாடிக்கையாளர்கள் விரும்பும் ஸ்டைல்களை முன்கணித்துக் கலெக்ஷன்களைத் திட்டமிட்டுச் சந்தைப் படுத்தவும் பல மாதங்கள் உழைப்பார்கள். ஆனால், வருடத்துக்கு இரு பருவங்களில் மட்டுமே புது ஃபேஷன்கள் அறிமுகம் என்றிருந்த நிலையைப் பன்னாட்டு ஃபேஷன் பிராண்ட்களான ஜாரா மற்றும் ஹெச்&எம் ஆகியவை, 2000-களில் வாரம் ஒரு புது ஃபேஷன் என 52 வாரங்களை 52 `மைக்ரோ சீஸன்களாக’ மாற்றி அறிமுகப்படுத்தினர். இதைத் தொடர்ந்து குறைந்த விலையில் வேகமாகத் தயாரிக்கப்படும் நவநாகரிக ஆடைகள் அதாவது `ஃபாஸ்ட் ஃபேஷன்’ என்னும் புதிய சொற்றொடர் உருவானது.

 
 

குறைந்த விலையில் வேகமாகத் தயாரிக்கப்படும் நவநாகரிக ஃபாஸ்ட் ஃபேஷன் ஆடைகள் புத்துணர்ச்சியைத் தரும் என்னும் போலியான எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அதிக விற்பனையாகும் என்னும் நோக்கத்துடன் உற்பத்தியாகும் இவ்வகைத் தரமற்ற ஆடைகள் எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகாவிட்டால் மிகப் பெரிய அளவில் தேங்கிவிடும். இவ்வகை ஆடைகள் விற்பனையாகாமல் தேங்கும் பட்சத்தில் குப்பைகளாக எறியப்பட்டும், எரிக்கப்பட்டும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் அபாயம் உள்ளது.

50 - 80 முறை தேய்த்து, துவைத்து, காய வைத்து அணியும் வகையில் நீண்ட காலம் உழைக்கும் தரமான ஆடைகளை நுகர்வோர் முன்னர் வாங்கிப் பயன்படுத்தினார். ஆனால், நாளுக்கு நாள் ஆடைக் கலாசாரம் மாறும் சூழலில், விலை குறைந்த, தரமற்ற, குறுகிய காலமே உழைக்கும் ஆடைகளையே மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

Clothes (Representational Image)
 
நைலான், அக்ரிலிக், பாலியஸ்டர் உள்ளிட்ட சிந்தெடிக் இழைகளால் தயாராகும் இவ்வகை ஆடைகள் விரைவில் குப்பைகளாகிச் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன ஃபாஸ்ட் ஃபேஷன் ஆடைகளைத் தயாரிக்கும் சுமார் 165 நிறுவங்களே சுற்றுச்சூழலை மாசடைய முக்கியக் காரணமாக விளங்குகின்றன. இவற்றின் பங்களிப்பு மொத்த ஜவுளித் துறையில் 24% ஆகும்.

கோவிட்-19 கொள்ளை நோய்க் காலத்தில் விற்பனை சரிவடைந்த காரணத்தால் 140 – 160 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ஆடைகள் உலக அளவில் தேங்கிக் கிடந்தன என்கிறது மெக்கன்ஸி அறிக்கை.

பெண்களுக்கான ஆடை விற்பனையில் பாரம்பர்ய உடுப்பான `புடவை’ 70% பங்களிக்கிறது. மேற்கத்திய ஆடைகள் மீதான மோகம் பெண்களுக்கு அதிகரித்தாலும், பாரம்பர்ய உடையின் பங்களிப்பு நிச்சயம் 65% இருக்கின்றது என்கிறது ஆய்வு. புடவைகளுக்கு உள்ள கலாசார மற்றும் உணர்வு ரீதியான மதிப்பு காரணமாக எத்தனை நவநாகரிக ஆடைகள் வந்தாலும் புடவை மீதான ஈர்ப்பு பெண்களுக்குக் குறையவே குறையாது.

சத்தமின்றி சுற்றுச்சூழலைப் பாழாக்கும் `Fast Fashion' ஆடைக் கலாசாரம்; ஆய்வுகள் கூறும் நிதர்சனம் என்ன? | is fast fashion culture of textile industry severely affecting the environment - Vikatan

Link to comment
Share on other sites

Please sign in to comment

You will be able to leave a comment after signing inSign In Now
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.