Jump to content

ஜப்பானிடம் இருந்து 3.5 பில்லியன் டொலர்கள் கடனை கோரும் இலங்கை !!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானிடம் இருந்து 3.5 பில்லியன் டொலர்கள் கடனை கோரும் இலங்கை !!

கடனில் மூழ்கியுள்ள இலங்கை அரசாங்கம் ஜப்பானிடம் இருந்து நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் 3.5 பில்லியன் டொலர் நிதியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடனை டொலராக மாற்றுவதற்கான சரியான அளவு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து தீர்மானம் எட்டப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

வரலாற்று ரீதியாக இலங்கைக்கு அபிவிருத்தி உதவிகளை வழங்கும் ஜப்பான், நிதி உதவி மட்டுமல்லாமல் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குகிறது.

ஜப்பானில் இருந்து பெறப்படும் கடன் ஜப்பானிய யெனில் வழங்கப்படும் என்பதோடு 0.05 சதவீத வட்டி விகிதத்தைக் கொண்டிருக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு கையிருப்பு 3.1 பில்லியன் டொலர்கள் மட்டுமே உள்ள நிலையில் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கைக்கு இந்த தொகை சில மாத இறக்குமதிக்கு போதுமானதாக காணப்படுகின்றது.

அத்தோடு ஜனவரி 18ல் 500 மில்லியன் டொலர் மற்றும் ஜூலையில் 1 பில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்துவது உட்பட, இந்த ஆண்டு 6 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

பணப்புழக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடன் வழங்கும் முகவர்களிடமிருந்து குறிப்பாக உலக வங்கி, இந்தியா மற்றும் சீனாவில் இருந்து மேலும் கடன்களை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
https://athavannews.com/2022/1262238

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலஙகை தனது தங்க இருப்பில் அரைவாசிக்கு மேல் விற்று விட்டதாகக்கூறுகிறார்கள், இது கடன் கொடுப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தலாம், யாழ் களத்தில் 6 மாதங்களுக்கு முன்பு JP Morgan அமெரிக்க நெருக்கடியை சாமாளிக்க தங்க இருப்பை விற்றார் என்பதை குறிப்பிட்டு இலஙகை நிலையுடன் ஒப்பிட்டிருந்தேன், அப்போது  அதனை செய்திருந்தால் ஓரளவு நன்மை ஏற்பட்டிருக்கலாம் எனநினைக்கிறேன்.

ஆனால் இலஙகை காலம் தாழ்த்தி எடுத்திருக்கும் தங்க விறபனை முயற்சி, கடன் வழங்கும் நாடுகளிடையே அச்சத்தை உருவாக்கி, கடன் வழங்கலை தவிர்க்கும் நிலை ஏற்படதா?

யப்பான் கடன் வழங்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாரம் பொக்கற் மணி ..கை செலவுக்கு..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து சோமாலியாவிடம் கடன் கேட்பினமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா கோட்டயும் அழிச்சுட்டு மொதல்ல  இருந்து வாங்குங்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஶ்ரீலங்கா… சளைக்காமல், எல்லா நாடுகளிடமும் கடன் வாங்கிக் கொண்டு…
மற்றப் பக்கம்.. சீனாவிடம், ஒரு பகுதி கடனை… தள்ளுபடி செய்யச் சொல்லி,
வேண்டுகோளும் விடுத்து இருக்குது. 😂
பயங்கர கில்லாடியாய் இருக்கு. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்ட கடனுக்கு வட்டி கட்டவே கடன் வாங்கினா.. இப்படியே போனா சோமாலியாவிட்டையும் கடன் கேட்டால் ஆச்சரியமில்லை. 

சொறீலங்காவின் கோத்தா.. எவ்வளவு பெரிய மாதனமுத்தான்னு இப்பவாச்சு விளங்கினால் சரி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

ஶ்ரீலங்கா… சளைக்காமல், எல்லா நாடுகளிடமும் கடன் வாங்கிக் கொண்டு…
மற்றப் பக்கம்.. சீனாவிடம், ஒரு பகுதி கடனை… தள்ளுபடி செய்யச் சொல்லி,
வேண்டுகோளும் விடுத்து இருக்குது. 😂
பயங்கர கில்லாடியாய் இருக்கு. 🤣

ரோசம் கெட்டவன்

ராசாவில் பெரியவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்றாவது இருந்து பாருங்கள் ஜப்பான் சிறிலங்காவை தூக்கி விடும். இது நிச்சயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

என்றாவது இருந்து பாருங்கள் ஜப்பான் சிறிலங்காவை தூக்கி விடும். இது நிச்சயம்.

அப்படி யாரும் தூக்கக்கூடாது என்றுதானே ஒருவர் பக்கத்திலேயே இருந்துகொண்டு வாங்கோ, வாங்கோ தருகிறோம் உங்களுக்கு தேவையானதை என்று கூவுகிறார். ஆனால் இலங்கைக்கு தெரியும் இந்தியாவால் தன்னை ஒண்டும் செய்ய முடியாது அப்படியேதும் செய்தா தான் விழுகிற குழிக்கு இந்தியாவையும் சேர்த்தே இழுத்துக்கொண்டு போவேன் என்று,  ஆகையால் வாங்கு மட்டும் வாங்கிக்கொண்டே இருப்போம், அவர்களும் கொடுக்குமட்டும் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டியான். சீனாவுக்கு தெரியும் தனது வீட்டோ அதிகாரம் இருக்கும்வரையும் இலங்கையின் குடுமி தன் கையிற் தானென்று. ஏமாறப்போவது கடன் கொடுத்தார் நெஞ்சம். ஆத்தில போட்டுட்டோம் என்று மறக்க வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

நல்லகாலம் சகுனிக்கு வீட்டோ பவர் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

சொறீலங்காவின் கோத்தா.. எவ்வளவு பெரிய மாதனமுத்தான்னு இப்பவாச்சு விளங்கினால் சரி. 

சிங்களவனையோ கோத்தாவையோ மதனமுத்தா என்றால் இங்குள்ள சிலருக்கு கோபம் வரும் பாஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

நல்லகாலம் சகுனிக்கு வீட்டோ பவர் இல்லை.

குதிரையின்ரை குணத்தை அறிஞ்சுதான் கடவுள் குதிரைக்கு கொம்பு குடுக்கேல்லை.

Link to comment
Share on other sites

On 19/1/2022 at 06:10, satan said:

ஆனால் இலங்கைக்கு தெரியும் இந்தியாவால் தன்னை ஒண்டும் செய்ய முடியாது அப்படியேதும் செய்தா தான் விழுகிற குழிக்கு இந்தியாவையும் சேர்த்தே இழுத்துக்கொண்டு போவேன் என்று, 

இந்த இந்தியப் பெரிசுகளும், சிறீலங்கப் பெரிசுகளும் அடிக்கடி ஏன் யாழ்ப்பாணம் போய்வருகினம்....?? நண்டுப் பயிற்சிபெறுவதற்குத்தான் என்று இப்போது புரிந்தது.!!!😜 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/1/2022 at 12:28, குமாரசாமி said:

நல்லகாலம் சகுனிக்கு வீட்டோ பவர் இல்லை.

வல்லரசாகிறமென்றும், பிராந்திய வல்லரசென்றும் ஆடுற ஆட்டம் காணாதா ஐயா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nochchi said:

வல்லரசாகிறமென்றும், பிராந்திய வல்லரசென்றும் ஆடுற ஆட்டம் காணாதா ஐயா!

தங்களுக்கு தாங்களே பீத்தி பினாத்திக்கிறதை சங்கம் கவனத்திலை எடுக்காது.😂

இவையின்ரை கூத்துக்களை பாத்து சீனா கொடுப்புக்குள்ளை சிரிச்சுக்கொண்டு திரியிறதை நீங்கள் கவனிக்கேல்லை போல கிடக்கு 🤣

Link to comment
Share on other sites

On 18/1/2022 at 16:04, தமிழ் சிறி said:

ஶ்ரீலங்கா… சளைக்காமல், எல்லா நாடுகளிடமும் கடன் வாங்கிக் கொண்டு…
மற்றப் பக்கம்.. சீனாவிடம், ஒரு பகுதி கடனை… தள்ளுபடி செய்யச் சொல்லி,
வேண்டுகோளும் விடுத்து இருக்குது. 😂
பயங்கர கில்லாடியாய் இருக்கு. 🤣

நக்குகிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன என்ற பழமொழி சரியாக இவர்களுக்கு பொருந்துகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.