Jump to content

மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவிலுக்குக் குண்டெறிந்தது எனது தந்தையே, நல்லூர் முருகன் ஆலயத்தை இடித்து மலசலகூடம் கட்டுவேன் - அருண் சித்தார்த்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

ලංකාවම කළඹමින් යාපනේ ද්‍රවිඩ තරුණයෙක් කළ හෙළිදරව්ව | Exclusive Interview  With Arun Siddharth - YouTube

சிரச தொலைக்காட்சியின் அரசியல் நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் முடித்தவுடன் அருண் சித்தார்த் எனும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளரின் செவ்வியொன்றினை நேற்றுப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அச்செவ்வியினை இங்கே ஊர்ப்புதினத்தில் பேசலாமா என்று தெரியவில்லை. நிர்வாகம் இடம் மாற்றினாலும் எனக்கு ஆட்சேபணை ஏதுமில்லை என்று கூறிக்கொண்டு அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில விடயங்களை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

இந்நிகழ்ச்சி பேட்டியாக நடந்திருந்தாலும்கூட, இதில் பேசப்பட்ட விடயங்களைச் சாராம்சமாகத் தொகுத்துத் தருகிறேன். 

குறிப்பு : அருண் சித்தார்த் எனும் நபரே யாழ்ப்பாணத்தில் அவ்வபோது இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாகவும், புலிகளை வன்மையாக விமர்சித்தும் தடாலடியாக கூட்டங்களை வீதியோரங்களில் நடத்தி வருபவர். 

அருண் சித்தார்த் எனும் இந்த நபரை முதலில் அரசியல் மேடையில் ஏற்றியது யாழ்ப்பாண சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அங்கஜன் ராமனாதனும் அவரது மாமனாரான ராஜன் எனும் செல்வந்த வியாபாரியும்தான் என்று குறிப்பிடத் தக்கது. யாழ்ப்பாணத்தில் பெளத்த சமயத்தை நிறுவுவதும், பெளத்த கோயில்களைக் கட்டுவதுமே தனது குறிக்கோள் என்று கூறிய அருண், அங்கஜன் வெல்லவேண்டும் என்பதற்காகவே தான் யாழ்ப்பாணத் தேர்தல் கூட்டங்களில் சுதந்திரக் கட்சிக்குச் சார்பாகவும் அங்கஜனுக்குச் சார்பாகவும் பிரச்சாரம் செய்ததாகவும் கூறினார். அத்துடன் , யாழ்ப்பாணத்தில் சுதந்திரக் கட்சிக்கு 48,000 வாக்குகளைத் தான் பெற்றுக்கொடுக்க உதவியதாகக் கூறிய அருண், சிங்கள பெளத்த கட்சியொன்றிற்கு யாழ்ப்பாணத்து மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்று நிலவிய சூழ்நிலையினை உடைத்து, அங்கிருந்து 48,000 வாக்குகளை அள்ளீயது பெளத்த சிங்களவர்களுக்கு கிடைத்த வெற்றிதான் என்று இறுமாப்புடன் கூறினார்.

நல்லூர்க் கந்தன் கோயிலை இடித்து மலசலகூடம் கட்டுவேன் என்று எதற்காகக் கூறினீர்கள் என்று முடித்த அவரிடம் கேட்டபோது, "1956 ஆம் ஆண்டு நல்லூர்க் கோயிலுக்கு எனது பாட்டனார் செல்ல முயன்றபோது அங்கிருந்தோர் நாம் பனையேறும் சாதியினர் என்பதால் உள்நுழைய விடவில்லை. அந்த நடவடிக்கைக்குப் பழிவாங்கவே எனது தகப்பனார் மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோயிலுக்குள் குண்டெறிந்தார். என்னைப்பொறுத்தவரை இது ஒரு பெருமையான நிகழ்வு. குறைந்த சாதியினர் என்று எம்மை அன்று மறித்தனர். ஆனால் நான் இன்று நல்லூருக்குள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது. அன்று எமக்கு நடந்த அவமானத்திற்காக நல்லூர்க் கோயிலை இடித்து மலசல கூடங்களைக் கட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று அவர் கூறினார். 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் சாதிவேற்றுமைகள் இன்றும் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா என்று கேட்டபோது, ஆம், இருக்கின்றது, அவ்வப்போது கிராமம் கிராமமாக கொலை, குத்து வெட்டு என்று செய்கிறார்கள். அதானாலேயே நான் பெளத்தனாக மாறினேன். இந்தியாவின் அம்பேத்காரைப் போன்று யாழ்ப்பாணத்தில் பெளத்த மதத்தினைப் பரப்பி, புத்த விகாரைகளைக் கட்டுவதே எனது நோக்கம் என்று அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் புத்த விகாரைகளைக் கட்டுவது சாத்தியமா, மிகப் பெரும்பான்மையினராக தமிழ் இந்துக்கள் வாழும் யாழ்ப்பாணத்தில் பெளத்த விகாரைகளைக் கட்டுவது சாத்தியமா என்று முடித்த கேட்டபோது, "அவர்கள் நாட்டின் எல்லாவிடங்களிலும் இந்துக் கோயில்களைக் கட்டமுடியும் என்றால், நான் யாழ்ப்பாணத்தில் பெளத்த விகாரைகளைக் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது. இது எல்லோருக்குமான நாடு, இங்கே ஒரு மக்கள் கூட்டத்தினர் தமக்கென்று ஒரு பகுதியைக் கேட்பதை இந்த நாட்டையும், மக்களையும் விரும்பும் ஒருவன் என்கிற வகையில் ஏற்றுக்கொள்ளமுடியாது" என்று அவர் கூறினார்.

புலிகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறீர்கள். அவர்கள் இன்று இல்லாத நிலையிலும், யாழ்ப்பாணத்திற்குச் சென்று புலிகளை கடுமையாக விமர்சித்து உங்களால் அரசியலில் வெல்ல முடியுமா என்று கேட்டபோது, "ஆம், அங்கஜனுக்குக் கிடைத்த வாக்குகள் புலிகளுக்கெதிரான வாக்குகள், கெளரவ டக்கிளஸ் அவர்களுக்குக் கிடைத்த வாக்குகள் புலிகளுக்கெதிரான வாக்குகள். இது இனியும் தொடரும்" என்று கூறினார்.

Edited by ரஞ்சித்
புலிகளை
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஓட்டுக்காகத்தான்.. தமிழ்நாட்டிலை பாக்கேல்லயா ஓட்டுக்காக என்ன கூத்து எல்லாம் செய்ய்கிறார்கள் எண்டு… அதுமாதிரி இனி இங்கயும் வரும்.. சுமந்திரன் உழுதது.. 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

அம்பேத்காருக்கும் பௌத்தருக்கும் என்ன தொடர்பு?

அதென்ன சைவ பௌத்த சங்கம்?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

சுமந்திரன் உழுதது.. 

நிற்கிறார், வெளிப்புறங்கள், மரம் மற்றும் , ’நான்காவது படத்துக்கு லொக்கேசன் தேடும் போது’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

வடலிக்க...  😂

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேற ஒன்றுமில்ல

குளிர்  விட்டுப்போச்சு???

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கெதிராக போதைப்பொருள் கடத்தல், இந்தியாவிலிருந்து ஹெரோயினைக் கொண்டுவந்தது என்று பல வழக்குகள் இருக்கின்றனவே என்று கேட்டபோது, "என்மீது கூட்டமைப்பு, கஜேந்திரன் அணி, விக்னேஸ்வரன் அணியென்று தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகப் பேசும் எல்லோருமே எதிராகச் செயற்படுகிறார்கள். தவறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி எனது பேச்சுச் சுதந்திரத்தினைப் பறிப்பதே இவர்களின் நோக்கம். இதற்கு யாழ்ப்பானத்துப் பொலீஸாரும் உதவுகின்றனர்" என்று கூறினார்.

யாழ்ப்பாணத்துப் பொலீஸாரா? அவர்கள் தமிழ்த்தேசியவாதிகளுக்கு உதவுவது எங்கணம் என்று கேட்கப்பட்டபோது, "இப்போது பல தமிழர்கள் பொலீஸில் இணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மூளையெல்லாம் பிரபாகரனிடமே இருக்கின்றது. வெறும் சீருடையினை மட்டுமே அணிந்துகொள்வதால் அவர்கள் நாட்டிற்கு விசுவாசமான பொலீஸாராக மாறப்போவதில்லை. அவர்கள் மனதளவில் இன்னமும் புலிகளை ஆதரிக்கிறார்கள்" என்று கூறினார்.

அப்படியானால், பிரிவினைவாதமும், தீவிரவாதமும் இன்னமும் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது என்கிறீர்களா? என்று கேட்டதற்கு, "நிச்சயமாக. அவர்களின் மனதில் அது இன்னமும் இருக்கிறது. ஆனால் அதனை நான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. நான் இருக்கும்வரை பயங்கரவாதிகள் மீளத் தலைதூக்குவது சாத்தியமில்லை. எனது மகன் உயர்தரத்தில் படித்து வருகிறான். பொலீஸ் விசேட அதிரடிப்படையில் இணைய விரும்புகிறான். அவனை நானே சென்று இணைக்கவிருக்கிறேன். எனது தாய் நாட்டின் பாதுகாப்பிற்கு தமிழ்ப் பயங்கரவாதிகள் குந்தககம் விளைவிக்க நினைத்தால் அவர்களை எதிர்த்து ஆயுதம் தூக்கும் முதலவாது இலங்கையின் மகனாக நானிருப்பேன்.  அவர்களின் நோக்கம் ஈடேற நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை" என்று கூறினார்.

இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையினருக்கும் உங்களுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக பத்திரிக்கைச் செய்திகள் வந்தனவே? உங்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? ராணுவம் உங்களுக்கு சம்பளம் தருவதில்லையென்றால், உங்களின் செயற்பாடுகளுக்கு எங்கிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்கிறீர்கள்? இரு வருடங்களாக உங்களுக்கென்று வழங்கப்பட்ட டிபென்டர் ரக ராணுவ வாகனமும், மெய்ப்பாதுகாவலர்களும் யாரால் எதற்காக வழங்கப்பட்டார்கள்? என்று கேட்டபோது, "எனக்கு ராணுவம் சம்பளம் தருகிறதென்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா? எனக்கு பனம் தருபவர்கள் குறித்து நான் கூறவேண்டிய அவசியமில்லை. நான் இன்றும் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவையினையே பாவித்துவருகிறேன், அரசாலோ ராணூவத்தாலோ வாகனமோ, பாதுகாப்போ எனக்கு வழங்கப்பட்டால் நான் வேண்டாம் என்று கூறப்போவதில்லை. நிச்சயமாக எனக்கு ராணுவ புலநாய்வுத்துறையினருடன் தொடர்பிருக்கிறது. இந்த நாட்டிற்கு வரும் சகல ஆபத்துக்களையும் இல்லாதொழிப்பதற்கு நான் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்கிறேன். நான் மட்டுமல்ல, இந்த நாட்டின் அனைவருமே புலநாய்வுத்துறைக்கு உதவினால்த்தான் எமது தாய்நாட்டினைப் பாதுகாக்க முடியும்" என்று கூறினார். 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஊத்தை வாளி  தனது அலுவலகத்தை பகலிலேயே படுக்கையறையாக்கியவர்.

சொன்னதை செய்தாலும் ஆச்சரியம் இல்லை.

😏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் தீவிரவாதம் மீளவும் தலைதூக்குகிறது என்கிறீர்களா? என்று கேட்டபோது, "ஆம். அப்படித்தான் நினைக்கிறேன்" என்று கூறினார்.
அப்படியானால், ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் அங்கே நடமாடுகிறார்கள் என்று கூறுகிறீர்களா? என்று கேட்டபோது, "ஆயுதங்களுடன் வெளிப்படையாக அவர்கள் உலாவுவதாக நான் நினைக்கவில்லை. இன்றிருக்கும் வாள்வெட்டுக் குழுக்கள், முன்னாள் ராணுவ அமைப்புக்களான டெலோ, ஈ பி ஆர் எல் எப் ஆகியனவற்றின் உறுப்பினர்கள் மற்றும் சமூக விரோதிகளை இதற்காக ஒரு சக்தி பாவிக்க ஆரம்பித்திருக்கிறது" என்று கூறினார். 

யாழ்ப்பாணத்தில் தீவிரவாதத்தினை உசுப்பும் சக்தி யார் என்ற கேள்விக்கு, "வேறு யார், எல்லாமே இந்தியாதான். அவர்களுக்கு இலங்கையினை மீளவும் சுடுகாடாக்க இங்கே தமிழ்ப் பயங்கரவாதம் தேவைப்படுகிறது. அதனாலேயே இதனைச் செய்கிறார்கள். உதாரனத்திற்கு அண்மையில் மாவீரர் தினத்திற்கு அமைவாக கந்தர்பமடத்தில் இருக்கும் கிட்டுப் பூங்காவின் சிரமதான நிகழ்வுக்கு யாழ்ப்பாண இந்தியத் தூதர் சென்றிருந்தார். புலிப்பயங்கரவாதிகளின் மலரினை அணிந்துகொண்டு சிரமதானத்திலும் பங்கெடுத்தார். இதிலிருந்து என்ன புரிகிறது உங்களுக்கு? இந்தியா முலிகளின் மீளுருவாக்கத்திற்கு தன்னை ஆயத்தப்படுத்துகிறது என்பதைத்தானே? 1980 இலிருந்து இலங்கையினை அழிக்க இந்தியா தமிழ்ப் பயங்கரவாதிகளைப் பாவித்து வருகிரது. 1987 இல் தானே முன்னின்று இந்நாட்டு மக்களைக் கொன்றது. ஆனால், தமிழர்கள் யாரும் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட தமது மக்கள் பற்றிப் பேசுவதில்லை, அடக்கியே வாசிக்கிறார்கள். ஆனால், புலிப்பயங்கரவாதிகளை அழிக்க எமது ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையினை மட்டும் விமர்சிக்கிறார்கள். போர்க்குற்றம், இனவழிப்பென்று சர்வதேசத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள்" என்று கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பேசுறத பாத்தா… என்ன இவன் என்னயவிட பெரிய இனவெறியனா இருக்கிறான்.. என்ர பதவிக்கே ஆப்படிச்சுடுவான் எண்டு… கோத்தபாயவே இவர புடிச்சு எதிர்காலத்தில ஜெயில்ல போட சந்தர்ப்பம் இருக்கு..

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இந்துசமயத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, பெளத்தனாக மாறிவிட்டதாகக் கூறுகிறீர்கள், அப்படியானால் உங்களின் அரசியல் வழி எது என்று கேட்டபோது, "நான் ரஷ்ஷியாவில் படித்தகாலத்திலிருந்தே மார்க்ஸியவாதியாக மாறிவிட்டேன். நான் இன்றும் ஒரு மார்க்ஸியவாதிதான். அதேவேளை யாழ்ப்பாணத்திலும் ஏனைய தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் சைவசமயத்தை அழித்து பெளத்த மதத்தினைப் பரப்புவதே எனது நோக்கம்" என்று கூறினார்.

கொழும்பில் உங்களுக்கெதிராகப் பிடிவிறாந்துகள் இதுவரையில் குறைந்தது 5 முறையாவது பிறப்பிக்கப்பட்டிருந்தன. ஆனாலும், இதுவரையில் உங்களுக்கெதிராக எவருமே நடவடிக்கையெடுக்கவில்லை. இதனை எப்படி விளக்குவீர்கள் என்று கேட்டதற்கு, "இவை எல்லாமே தவறான குற்றச்சாட்டில் என்மீது சுமத்தப்பட்டவை. விவாகரத்தான எனது முன்னாள் மனைவி, எனது மகளிற்கான மாதாந்தக் கொடுப்பனவு தாமதமாகிவிட்டதனால் என்மீது பொய்யான வழக்கொன்றினைத் தாக்கல் செய்திருந்தார். இப்படித்தான் எல்லாமே சோடிக்கப்பட்ட வழக்குகள். அதனாலேயே, என்னை எவரும் கைதுசெய்ய நினைக்கவில்லை" என்று கூறினார்.

அப்படியானால், பெண்களைக் கடத்தியது, விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது, போதைப்பொருட்களைக் கடத்தியது, அதீத போதைப்பொருள் பாவனை ஆகியவற்றிற்காக வழக்குகள் பதியப்பட்டனவே என்று கேட்டபோது, " நான் போதைப்பொருள் பாவிப்பதில்லை, ஆனால் மது அருந்துவேன், யார்தான் மது அருந்துவதில்லை? பெண்களைக் கடத்திச்சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக என்மீது பொய்யாகவே வழக்குகள் போடப்பட்டன. நான் போதைப்பொருள் கடத்துவதாக உங்களால் நிரூபிக்க முடியுமா?" என்று அவர் மேலும் கேட்டர்.

UNITY MARCH'' final day speech by Arun Siddharth in Tamil at Veerasingam  hall in Jaffna.05/03/2021 - YouTube

பி டு பி  எனும் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாட்டிற்கெதிராக நீங்கள் யுனிட்டி மாச் என்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஒரு யாத்திரிகை ஒன்றினைச் செய்தீர்கள். அதற்கு குறைந்தது 10 பேரூந்துகளாவது பாவிக்கப்பட்டிருந்தன. இவற்றிற்கான பணத்தினையும், பாதுகாப்பினையும் எப்பிடிப் பெற்றீர்கள்? என்று கேட்டபோது, " நாட்டினை நேசிக்கும் மக்களும், அரசாங்கத்தில் சில அமைச்சர்களும் ராணுவமுமே எனக்கு உதவினார்கள். அதனாலேயே அந்த பவணி வெற்றியாக அமைந்தது" என்று கூறினார்.

ஆனால், உங்களின் யுனிட்டி மாச் படுதோல்வியில் முடிவுற்றதாகவும், குறைந்தது 3 பேரூந்துகளாவது வவுனியாவிற்கு போகும் முன்னரே மீளவும் யாழ்நோக்கித் திரும்பிவிட்டதாகவும். இன்னொரு பேரூந்தில் சில குண்டர்கள் இருந்ததாகவும், பலரை நீங்கள் பணம்கொடுத்தே அழைத்து வந்திருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது. இறுதியாகச் சென்ற பேரூந்தில் நீங்கள் போதைப்பொருட்களைக் கடத்திவந்ததாக பவணியில் கலந்துகொண்டோர் கூறியிருந்தார்கள். ஈற்றில், பவணிக்கென்று அழைத்து வரப்பட்டவர்கள் எல்லோருமே திரும்பிச் சென்றநிலையில் அநுராதபுரத்தோடு உங்களின் பவணி கைவிடப்பட்டதாக நாம் அறிந்துகொண்டோமே? என்று கேட்டபோது,
 "மூன்று பேரூந்துகள் வேண்டுமென்று திரும்பவில்லை. இயந்திரக் கோளாறு காரணமாகவே அவை யாழ் திரும்பவேண்டியேற்பட்டது. மக்கள் எல்லோரும் திரும்பிச் சென்றதால் எமது பவணி கைவிடப்படவில்லை. மாறாக நாமே பவணியை மாத்தறை நோக்கிச் செலுத்தாமல்  அநுராதபுரத்துடன் முடித்துக்கொண்டோம். அங்கே நான் ஆற்றிய உரையினைக் கேட்டிருப்பீர்கள், அது ஒரு பாரிய வெற்றி" என்று கூறினார். 

மக்களற்ற பவணி எப்படி வெற்றியாகும் என்று கேட்டபோது, "கூட்டமைப்பின் செயற்பாட்டிற்குப் பதிலடியாக இந்நாட்டு மக்கள் செயற்படவேண்டும் என்பதற்காகவே அதனைச் செய்தேன்" என்று கூறினார்.

புலிகளுக்கெதிராகக் கடுமையான , மிகவும் காரசாரமான விமர்சனத்தை முன்வைத்து வருகிறீர்கள். அதுவும் அவர்களின் கோட்டையான யாழ்ப்பானத்தில் இதனைச் செய்கிறீர்கள். இதனால் உங்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து வரும் என்று நினைக்கவில்லையா? என்று கேட்டதற்கு, " புலிகள் மிகவும் மிலேச்சத்தனமான பயங்கரவாதிகள், பெளத்தர்களையும், குருமாரையும் கொன்றவர்கள். அரந்தலாவை, அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் பெளத்தர்களைக் கொன்றவர்கள் அவர்கள். சிங்கள பெளத்தர்களை அழிப்பதே அவர்களின் நோக்கம். அதுமட்டுமல்லாமல், தங்களை எதிர்த்தவர்களையும் அவர்கள் அழித்தார்கள். எனது மனைவியின் தகப்பனாரையும் இன்னும் நான்கு சகோதரர்களையும் தங்களுக்கெதிராகச் செயற்பட்டத்தற்காக அவர்கள் கொன்றார்கள். எனது குடும்பத்தில் இதுவரை 16 உறுப்பினர்கள் ஒன்றில் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமலாக்கப்பட்டார்கள். ஆகவே, நான் சாகும்வரை புலிகளை அழிப்பதும், விமர்சிப்பதும், அவர்கள் மீள எழுவதை தடுப்பதுமே எனது வேலையாகும். நான் எவருக்குமே அஞ்சப்போவதில்லை. எனது பாதுகாப்புக் குறித்து எனக்குக் கவலையில்லை." என்று கூறினார்.

Edited by ரஞ்சித்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அண்மையில் கொழும்பிலிருக்கும் ஐ நா மனிதவுரிமை செயலகத்திற்குச் சென்று அவர்களிடம் மனுவொன்றினைக் கையளித்ததை பத்திரிக்கையில் கண்டோம், எதற்காக அங்கே சென்றீர்கள்? 

Arun Siddharthan arrested for trying to attack police in Sri Lanka -  time.news - Time News

"நான் உள்ளே செல்லவில்லை. அவர்களின் வாசலுக்குச் சென்று எனது மனுவைக் கையளித்தேன். நாட்டைக் காக்கும் புனிதப் போரில் ஈடுபட்ட எமது பெளத்த ராணுவத்திற்கெதிராக புலம்பெயர்ந்த தேசங்களில் வசிக்கும் புலி ஆதரவாளர்களும், அரசியல் செயற்பாட்டாளர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். எமது ராணுவத்தினை போர்க்குற்றங்களிலும், மனித நேயத்திற்கெதிரான குற்றங்களிலும் ஈடுபட்டதாக பொய்களைப் பரப்பி, மேற்குநாட்டு அரசுகளை நம்பவைத்து வருகிறார்கள். இதனாலேயே இந்த நாடுகள் எமக்கெதிராக நடவடிக்கை எடுக்க முனைகின்றன.  முக்கியமாக மனிதவுரிமை பற்றிப் பேசும் யஸ்மின் சூக்கா போன்றவர்கள் புலிகளிடமிருந்து பெருமளவு பணத்தினைப் பெற்றுக்கொண்டே எமது ராணுவத்திற்கெதிரான பாரிய புனைகதைகளை வெளியிட்டு வருகிறார். புலம்பெயர் புலிகளின் அமைப்புக்களிடமிருந்து வருடம்தோறும் சுமார் 50,000 டொலர்களை இந்த முக்கியஸ்த்தர்கள் பெற்றுவருகிறார்கள் என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. புலிப்பயங்கரவாதிகளின் முகவர்கள் இந்த மனிதவுரிமை அமைப்புக்களை விலைக்கு வாங்கிவைத்திருக்கிறார்கள். ஆகவேதான், இதனைத் தடுத்து நிறுத்துவதற்கும், புலிகளால் கொல்லப்பட்ட பெளத்தர்களுக்கு நீதிகேட்டும், எமது ராணுவத்திற்கெதிரான போர்க்குற்ற விசாரணைகளை சர்வதேசம் கைவிடவேண்டும் என்று கோரியுமே எனது மனுவைக் கையளித்தேன்" என்று கூறினார். 

இந்தியாவை எதிர்ப்பதாகக் கூறும் நீங்கள், இலங்கைப் புலநாய்வுத்துறையினரிடம் வைத்திருக்கும் தொடர்புகளைப்போல், இந்திய உளவுத்துறையினரிடமும் நெருக்கமான தொடர்பிலிருப்பதாக அறிகிறோம். இந்தியாவை விமர்சித்துக்கொண்டு, அவர்களின் புலநாய்வுத்துறையினருடன் தொடர்பில் இருப்பது எப்படி? உங்களுக்கு இந்திய புலநாய்வு அதிகாரி ஜெகந்நாத்திற்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? இரு தரப்பினரிடமிருந்தும் பெருமளவு பணத்தினை நீங்கள் பெற்றுக்கொள்வதாகக் கூறப்பட்டிருக்கிறது, இதுபற்றி விளக்குவீர்களா?

"நான் எல்லோருடனும் பேசவே விரும்புகிறேன். எனக்கு எவருமே விதிவிலக்கல்ல. அந்தவகையில் சில இந்திய அதிகாரிகளுடன் நான் பேசியிருக்கலாம். எனக்குப் பணம் தருபவர்களை நான் வேண்டாம் என்று சொல்வதில்லை. இந்த நாட்டிற்குச் சேவை செய்வதற்கு எனக்குப் பணம் தேவைப்படுகிறது. ஆனால், நான் பணத்திற்காக மட்டுமே செயற்படுபவன் அல்ல" என்று கூறினார்.

வெளிநாட்டில் வசிக்கும் பல சிங்களவர்களிடம் உங்களுக்குத் தொடர்பிருக்கிறது. பல அரச அமைச்சர்கள், அரச அதிகாரிகளுடன் உங்களுக்குத் தொடர்பிருக்கிறது. பல புலம்பெயர்ந்த சிங்களவர்கள் உங்களுக்குப் பணம் அனுப்பிவருகின்றனர், தமது முகப்புத்தகம் மற்றும் கீச்சகப் பதிவுகளில் உங்களை ஒரு வீரராகப் போற்றுகின்றனர், இதுபற்றிய உங்கள் கருத்தென்ன? பின்வரும் பெயருடைய சிங்களவர்கள் (புலம்பெயர் சிங்களவரின் பெயர்ப் பட்டியல் வாசித்துக் காட்டப்படுகிறது) உங்களுக்குப் பாரிய உதவிகளை செய்துவருகிறார்கள் என்று கூறப்படுகிறதே?

"எனது பெளத்த செயற்பாடுகளுக்கும், தமிழ்த்தேசியவாதிகளுக்கெதிரான செயற்பாடுகளுக்கும் உள்ளூர் அமைச்சர்கள் முதல், புலம்பெயர் சிங்களவர்கள்வரை பாரிய உதவியினையும், எனது அமைப்பிற்கான பிரச்சாரத்தையும் செய்துதருகிறார்கள். இந்நாட்டில் நான் நடத்தும் போராட்டங்களுக்கான உதவிகள் பாதுகாப்பு முதல் பல விடயங்களில் அமைச்சர்களும், ஜனாதிபதியும் தமது ஆசீரையும், உதவியினையும் அவ்வப்போது வழங்கிவருகிறார்கள். நீங்கள் கூறிய பெயர்ப் பட்டியலில் இருக்கும் சிங்களவர்கள் தொடர்பாக நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை. அவர்கள் எனக்கு பெருமளவு பணத்தினை வழங்கினார்கள் என்பதை உங்களால் நிரூபிக்க இயலாது."

"நான் கெளரவ ஜனாதிபதி கோட்டாபயவையும், கெளரவ பிரத மந்திரி மகிந்தவையும் நேசிக்கிறேன். இந்தநாட்டினை தமிழ்ப் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்து, அமைதிப் பூங்காவாக மாற்றியதற்கு நான் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். அவர்களின் ஆசீருடன் எனது பயணம் தொடரும்" என்றும் கூறினார். 

Edited by ரஞ்சித்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

Bild

அம்பேத்காருக்கும் பௌத்தருக்கும் என்ன தொடர்பு?

அதென்ன சைவ பௌத்த சங்கம்?

இந்தியாவில் இந்துமதவாதிகளால் கீழ்ச்சாதியினர் ஒதுக்கப்பட்டபோது கீழ்ச்சாதியில் இருந்துவந்து, படித்த மேதையான அம்பேத்கார் தன்னை பெளத்தத்தில் இணைத்துக்கொண்டார். அவரைத் தொடர்ந்து பல கீழ்ச்சாதி இந்துக்களும் பெளத்த மதத்தினைத் தழுவினர். 

அங்கே அம்பேத்கார் செய்தது பாரிய புரட்சி. ஆனால் அரச ராணுவத்தின் கைக்கூலியான அருண் சித்தார்த் செய்வது சுத்த புலியெதிர்ப்பு, யாழ் விரோத அரசியல். அவனைக் களமிறக்கியவர்கள் சிங்கள அடிமைகளான அங்கஜனும், அவனது மாமனும். 

யாழ்ப்பாணத்தில் தம்மை பெளத்தர்களாக அடையாளப்படுத்தும் நோயொன்று சில சைவர்களிடையே ஆரம்பித்திருக்கிறது. சமய நல்லிணக்கம், தமிழ் பெளத்தர்கள் என்கிற பெயரில் இந்தக் குழு செயற்பட்டுவருகிறது. சுரேன் ராகவன் எனும் படித்த முன்னாள் இந்துவும், இந்நாள் பெளத்தனுமானவன் வட மாகாண ஆளுநராக பேரினவாதிகளால் நியமிக்கப்பட்ட காலத்தில் வடக்கிலேயே பெளத்த மாநாட்டினை நடத்திக் காட்டினான்.

பெளத்த இனக்கொலையாளிகளின் ஆசீரோடும், பாரிய நிதியுதவியோடும் வடக்கில் பெளத்தமயமாக்கல் நடைபெற்று வருகிரது.

இதன் ஒரு அங்கமே இந்த கோடரிக் காம்பின் செயற்பாடுகள். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் இதை தொகுத்து எழுதியமைக்கு மிக்க நன்றி.

காலாகாலமாக காக்கைவன்னியனில் இருந்து இவன்வரை காட்டிக் கொடுப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
சில சமயங்களில்  வெற்றியும் அடைகிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் உங்களை தமது அரசியல் நலனுக்காகத் தேர்தலில் பாவித்த அங்கஜனும், அவரது மாமனாரும் இபோது தூக்கியெறிந்துவிட்டார்களே?

"உண்மைதான். நானும் இது நடக்கும் என்று தெரிந்துதான் அதனைச் செய்தேன். எனக்கு எனது கொள்கையினை முன்னெடுக்க மேடையொன்று தேவைப்பட்டது. அவர்களுக்குத் தமது தேர்தல் பிரச்சார மேடையில் பேசுவதற்கு ஆள் தேவைப்பட்டது. ஆகவே, அவர்கள் என்னைப் பாவித்ததுபோல, நானும் அவர்களது பணத்தில் எனது செயற்பாடுகளை முன்னெடுத்தேன். அவர்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் எனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. சிங்கள பெளத்த கட்சியின் ஆதரவாளனும், பெளத்த மதத்தினை வடக்கில் முன்னெடுக்க விரும்புவனுமான  எனக்கு யாழ்ப்பாண இந்துக்களில் 48,000 பேர் வாக்களித்தனர்".

உங்களுக்கு யாழ்மக்கள் வாக்களித்தனரா? கொழும்பு மட்டக்குளியில் வாழ்ந்துவரும் உங்களை, யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதிலும் குறிப்பாக யாழ் இந்துக்களை எதிர்த்து, தமிழ்த் தேசியத்தை எதிர்த்து நீங்கள்  செய்யும் அரசியலை அவர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அப்படியிருக்க உங்களுக்கு அவர்களில் 48,000 மக்கள் வாக்களித்தனர் என்று சொல்வது, அங்கஜனிற்குக் கிடைத்த வாக்குகளை நீங்கள் உரிமை கோறுவது போன்றதாகி விடுகிறதே?

"எனக்கு நேரடியாக வாக்களிக்காவிட்டாலும்கூட, அங்கஜனுக்குக் கிடைத்த வாக்குகள் எனக்குக் கிடைத்த வாக்குகளாகவே நான் பார்க்கிறேன். எனது பேச்சு வல்லமையினாலேயே அங்கஜனுக்கு மக்கள் வாக்களித்தார்கள். நான் மட்டக்குளியைச் சேர்ந்தவன் இல்லை. எனது தந்தையார் கொழும்பில் வசித்தவர். தினகரன் பத்திரிக்கையில் வேலை பார்த்தவர். நானும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவன் தான். புலம்பெயர் புலிப் பயங்கரவாதிகளும், தமிழ்த்  தேசியவாதிகளும் பேசுவதுபோல நீங்களும் பேசுகிறீர்கள்". 

யாழ் இந்துக்கள் மீதான உங்களின் வெறுப்பு எதனால் ஏற்பட்டது? இன்றும் அதேவெறுப்பும் ஆத்திரமும் இருக்கிறதா?

"எனது குடும்பத்திற்கு அவர்கள் செய்த அநீதியை ஒருநாளும் மறக்கமாட்டேன். அவர்கள் மீதான வெறுப்பு ஒருபோதும் என்னை விட்டு அகலாது. அவர்களைப் பழிவாங்கும் எண்ணம் முன்னைய காலத்தைப் போலல்லாமல் சற்றுக் குறைந்திருக்கிறது. எல்லோருடனும் பேசி, எமது நாட்டினை பெளத்த சமய ரீதியில் வளர்த்தெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன், இதனால் எனது பழிவாங்கும் உணர்வை தற்போதைக்கு கட்டுப்படுத்தியிருக்கிறேன், ஆனால் எனது கோபம் ஆறாது". 

உண்மையைச் சொல்லுங்கள், நீங்கள் எதற்காக வடக்கில் இப்போது செயற்படுகிறீர்கள், எல்லாமே ஒரு பாராளுமன்ற ஆசனத்திற்காகத்தானே?

"ஆம், அதற்காகத்தான். எனது எல்லா நடவடிக்கைகளும் எனது கையில் அதிகாரத்தினைக் கொண்டுவரும் நோக்கிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கையில் அதிகாரம் இல்லாமல் நான் எனது நடவடிக்கைகளை செய்வது முடியாத காரியம். ஆகவே வடக்கில் நான் முன்னெடுக்கும் பெளத்த மத நடவடிக்கைகளை எனது பாராளுமன்ற அதிகாரம் மூலம் தீவிரப்படுத்துவதே எனது அரசியல் இலட்சியம்".

Edited by ரஞ்சித்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ஈழப்பிரியன் said:

ரஞ்சித் இதை தொகுத்து எழுதியமைக்கு மிக்க நன்றி.

காலாகாலமாக காக்கைவன்னியனில் இருந்து இவன்வரை காட்டிக் கொடுப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
சில சமயங்களில்  வெற்றியும் அடைகிறார்கள்.

இவன் பேசுவதைக் கேட்கும்போது நீங்கள் பொறுமையினை இழந்துவிடுவீர்கள். இவனது எகத்தாளமும், தமிழ்மக்கள் மீதும், விடுதலைப் போராட்டம் மீதும் இவன் கொண்டிருக்கும் வெறுப்பும், காழ்ப்புணர்வும் இவனது வார்த்தைகளில் கொப்புளிக்கிறது. இவன்பற்றி எல்லோரும் அறியவேண்டும் என்பதனாலேயே பற்களைக் கடித்துக்கொண்டு இந்த கோடரிக் காம்பின் செவ்வியினைக் கேட்டேன். இவனைப் பேட்டிகண்ட சிங்கள தொகுப்பாளருக்கு தமிழ் மக்கள் மீதிருக்கும் கருணையோ அல்லது அவர்களின் அரசியல் தொடர்பான பிரக்ஞையோ இவனுக்குத் துளியளவும் இருக்கவில்லை. 

ஆனால், இவனின் பின்னால் ராணுவ புலநாய்வுத்துறையும், அரச தலைமைப் பீடமும் இருக்கிறது. மகிந்த, கோத்தாவுக்கு தான் நெருக்கமானவன் என்பதைக் கூற அவன் தயங்கவில்லையென்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

தமிழ் மக்கள் அவதானமாக இருக்கவேண்டிய கோடரிக் காம்புகளில் இவனும் ஒன்று.

Link to comment
Share on other sites

இவ்வளவு நாளும் உங்களுக்கு இந்த நபரைப் பற்றி தெரியாமல்  இருந்தது ஆச்சரியமாக இருக்கு ரஞ்சித். இவ் நபர் பற்றி யாழிலும் சில செய்திகள் உள்ளன. மாவீரர் வாரம், தலைவரின் பிறந்த நாள், மே 18 போன்ற நாட்களில் இந் நபர் யாழ்ப்பாணத்தில் செய்யும் அட்டகாசங்கள் பல. 

2009 இன் பின் நடந்த ஒரு பாராளுமன்ற தேர்தலிலோ அல்லது மாகாண சபைத் தேர்தலிலோ, தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஒரு கட்சி சார்பாக போட்டியிட முயன்று, முதலில் பேச்சளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு பின் அவரது சாதி காரணமாக நிராகரிக்கப்பட்டவர் என சிலர் சொல்வதை கேட்டுள்ளேன். அதன் பின்னர் தான் அங்கஜனுடன் சேர்ந்தாராம். 

தன்னை ஒரு ஒதுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்று முதலில் காட்டி பின்னர் ஒட்டுமொத்த தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்தி தமிழிலும் சிங்களத்திலும் பிரச்சாரம் செய்யும் நபர் இவர்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

உந்த ஊத்தை வாளி  தனது அலுவலகத்தை பகலிலேயே படுக்கையறையாக்கியவர்.

சொன்னதை செய்தாலும் ஆச்சரியம் இல்லை.

😏

அந்த….  அருவருப்பான, காணொளியை முன்பு வாட்சப்பில் ஒருவர் அனுப்பியிருந்தார்.
பார்த்த மறுணமே… அழித்து விட்டேன். அந்த அளவு கேவலமாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

2021ஆம் ஆண்டு பெப்ரவரிக்கு கிட்டவாக அந்த ஐநாவிற்கான(!?) ஒரு போராட்டத்தின்போது சில தமிழ்ப்பெண்களை ஒருங்கிணைத்து சாலையோரத்தில் பந்தலிட்டு வெளிநாடுகளில் நடந்த அந்த போராட்டத்தை திசை திருப்புவதற்காக ஒரு நாடகம் ஆடியவன் இந்த ஊத்தைவாளி என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

  • இந்தக் கயவன் தொடர்பாக இதற்குள் பாருங்கள்:

https://www.youtube.com/c/ArunSiddharth-JaffnaCivilSocietyCenter/videos

 

https://www.youtube.com/results?search_query=அருண்+சித்தார்த்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இவ்வளவு நாளும் உங்களுக்கு இந்த நபரைப் பற்றி தெரியாமல்  இருந்தது ஆச்சரியமாக இருக்கு ரஞ்சித். இவ் நபர் பற்றி யாழிலும் சில செய்திகள் உள்ளன. மாவீரர் வாரம், தலைவரின் பிறந்த நாள், மே 18 போன்ற நாட்களில் இந் நபர் யாழ்ப்பாணத்தில் செய்யும் அட்டகாசங்கள் பல. 

2009 இன் பின் நடந்த ஒரு பாராளுமன்ற தேர்தலிலோ அல்லது மாகாண சபைத் தேர்தலிலோ, தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஒரு கட்சி சார்பாக போட்டியிட முயன்று, முதலில் பேச்சளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு பின் அவரது சாதி காரணமாக நிராகரிக்கப்பட்டவர் என சிலர் சொல்வதை கேட்டுள்ளேன். அதன் பின்னர் தான் அங்கஜனுடன் சேர்ந்தாராம். 

தன்னை ஒரு ஒதுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்று முதலில் காட்டி பின்னர் ஒட்டுமொத்த தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்தி தமிழிலும் சிங்களத்திலும் பிரச்சாரம் செய்யும் நபர் இவர்.

இவன்பற்றி செய்திகளில் பார்த்திருக்கிறேன். பின்புலம் தெரிந்திருக்கவில்லை. சிரச தொலைக்காட்சியில் தோன்றுமளவிற்கு இவனை வளர்த்துவிட்டிருக்கிறார்கள். அவனது செவ்வியைக் கண்டவுடன் அதுபற்றி எழுத எண்ணினேன். தமிழர்கள் ஒதுக்கவேண்டிய நாசகாரி இவன். 

Link to comment
Share on other sites

ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளனுக்கப்பால்  ஒரு சிங்களவனுக்கு தமிழன் என்ற இனம் மீது இருக்கும் பார்வை கூட இவனிடம் இல்லாதது இவனது பிறப்பை  சந்தேகிக்க  வைக்கிறது ்  

இரண்டு முக்கிய  கேள்விகளை எதிர்பார்த்தேன் 1,இவ்வளவு  பற்றும் பாசமும் உள்ள நீங்கள் 2009ஆண்டு மட்டும் ஏன் பார்வையாளனாய் மாத்திரம் இருந்தீர்கள் புலிக்கு எதிராக ஆயுத த்தை  புலியின் எந்த குணம் உங்களுக்கு பயத்தை காட்டியது.                   2, உங்களது எத்தினையாவது மனைவியின் அப்பாவை புலிகள் கடத்தினார்கள்.                                   3.           இந்த இரண்டு கேள்வியும் கேட்டிருந்தால் பேட்டி மகுடம் சூடி இருக்கும் 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

இவ்வளவு நாளும் உங்களுக்கு இந்த நபரைப் பற்றி தெரியாமல்  இருந்தது ஆச்சரியமாக இருக்கு ரஞ்சித். இவ் நபர் பற்றி யாழிலும் சில செய்திகள் உள்ளன. மாவீரர் வாரம், தலைவரின் பிறந்த நாள், மே 18 போன்ற நாட்களில் இந் நபர் யாழ்ப்பாணத்தில் செய்யும் அட்டகாசங்கள் பல. 

2009 இன் பின் நடந்த ஒரு பாராளுமன்ற தேர்தலிலோ அல்லது மாகாண சபைத் தேர்தலிலோ, தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஒரு கட்சி சார்பாக போட்டியிட முயன்று, முதலில் பேச்சளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு பின் அவரது சாதி காரணமாக நிராகரிக்கப்பட்டவர் என சிலர் சொல்வதை கேட்டுள்ளேன். அதன் பின்னர் தான் அங்கஜனுடன் சேர்ந்தாராம். 

தன்னை ஒரு ஒதுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்று முதலில் காட்டி பின்னர் ஒட்டுமொத்த தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்தி தமிழிலும் சிங்களத்திலும் பிரச்சாரம் செய்யும் நபர் இவர்.

இவரது கோபத்தின் பின்னாலிருக்கும் நியாயமான காரணம் புரிந்துகொள்ளத்தக்கதே.

ஆனால் சாதிப் பாகுபாடுதான் இவரது கோபத்திற்கு பின்னாலிருக்கும் உண்மையான  காரணமென்றால் அதற்கெதிராகத்தானே இவரது போராட்டம் இருந்திருக்க வேண்டும். 

ஆனால்  இவரது செய்கை தேசியம், சைவ சமயம், தமிழ் இனத்திற்கெதிரானதாக இருக்கிறது . அப்படியென்றால் இவரது செய்கைகள் அனைத்தும் இவரது சுயநலமான சிந்தனையின்பாற்பட்டதே. 

அற்பன். 

 

Edited by Kapithan
  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருண், பாடசாலை முடிந்து அம்மாவின் முந்தனையை பிடித்துகொண்டு நீங்கள் சிறுவனாக இருந்தபோது கொட்டாஞேனை ‍மட்டக்குளி பஸ்ஸில் பயணித்த காலம் நினைவில் வந்து போகின்றது.   
சிங்களவன் கூட இவ்வளவு துவேசமாக இருக்க மாட்டான். 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு மன நோயாளி என்பதை முகத்தை பார்த்த உடனேயே ஊகிக்க முடியும். இவர் மனத்தில் பல வருடங்களாக வளர்தெடுத்த இனவெறி, காழ்ப்புணர்வு, பழிவாங்கும் வக்கிர உணர்வு, சுய சிந்தனையற்ற பேச்சு, சுயலாபத்திற்கு ஒட்டு மொத்த மக்களையும் கண்மூடித்தனமா பழிவாங்க துடிக்கும் ஆவல் அனைத்தும் இவரிடம் இருக்கிறது. 

இவை போன்ற குணங்கள் சாதாரண மனிதனொருவனுக்கு இருக்காது. இவரை சுதந்திரமாக உலவ விடுவது முழுத் தமிழினத்துக்கே ஆபத்து. மொத்தத்தில் இவர் சிங்கள இனவெறி ஆட்சியாளருக்கு கிடைத்த வரப்பிரசாதம். இவரின் உடனடித்தேவை மன நல மருத்துவ உதவியும் சரியான உளவியல் கவனிப்பும்.

இவர்போல சிங்கள மக்கள் மத்தியிலும் பலர் இருப்பார்கள். அவர்களை நாங்கள் சிங்களவர்களுகெதிராக திருப்பிவிடுவது தான் இவர் போன்ற மன நோயாளிப் பயங்கரவாதிகளை பயன்படுத்தும் இனவெறியர்களுக்கு நாங்கள் வழங்கும் சரியான பதில்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்னொரு மக்கள்  சமூகத்தை அதன்  பண்பாட்டு வழிமுறைகளை மதிக்காதவன்

அதனை அழிப்பேன்  என்று கர்ச்சிப்பவன்

தான்  தாழ்த்தப்படுவதாக ஓலமிடுவது ??????

நான்  அடிக்கடி  சொல்வது தான்

சாதி என்பது  இவர்  போன்றவர்களின் கையில் போவதைவிட இப்ப இருப்பதே  பரவாயில்லை

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.