Jump to content

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையர்: 'குற்றவாளிகளை மன்னிக்க மாட்டேன்' - கொல்லப்பட்ட இலங்கையரின் மனைவி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • ஷுமைலா ஜாஃப்ரி மற்றும் ரஞ்சன் அருண் பிரசாத்
  • இஸ்லாமாபாத் மற்றும் கொழும்பு
9 மணி நேரங்களுக்கு முன்னர்
 

நிலுஷி

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பரில் வன்முறை கும்பலால் மத நிந்தனையாளராக சந்தேகிக்கப்பட்டு கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்தவின் மரணத்துக்கு காரணமானவர்களை மன்னிக்கப் போவதில்லை என்று அவரது மனைவி நிலுஷி திஸாநாயக்க தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரத்தில் பாகிஸ்தானில் இனவாத கும்பலால் தாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் மனைவிக்கு அவரது கணவரின் சம்பளத் தொகை மற்றும் நிவாரணத் தொகையை பாகிஸ்தான் அரசு அனுப்பி வைத்திருக்கிறது.

இந்த தகவலை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தமது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

பிரியந்த குமார கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி பாகிஸ்தானின் சியால்கோட்டில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் மத நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் ஆவேசமான ஒரு கும்பலால், அடித்துக் கொல்லப்பட்டார்.

பின்னர் அவரை கொலை செய்தவர்கள் சடலத்தை தீ வைத்து எரித்தனர்.

பிரியந்த 2012இல் ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் தர உத்தரவாத அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டார். பிறகு அவர் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார்.

இந்த நிலையில், பிரியந்த கொல்லப்பட்டதையடுத்து 1,00,000 டாலர் மதிப்புள்ள நிதியும் முதல் சம்பளமும் அவரது மனைவியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரதமர் இம்ரான் தெரிவித்தார்.

 

நிலுஷி

 

படக்குறிப்பு,

நிலுஷி

மேலும், ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸ் பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு பத்து வருட சம்பளத்தை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த 1,00,000 டாலர் தொகையானது, சியால்கோட் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வணிகர்களால் திரட்டப்பட்டது.

இது குறித்து பிபிசி இலங்கையிடம் பேசிய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கான கௌரவ தூதர் யாசின் ஸோயா, சியால்கோட்டின் தொழிலதிபர்களுடைய முயற்சிகளையும் அதைச் செயல்படுத்த அரசு வழங்கிய ஆதரவையும் பாராட்டினார். பிரியந்த குமாரவுடைய பிள்ளைகளுக்கு அல்லாமா இக்பால் உதவித்தொகை பெற்றுத்தர முயல்வதாக அவர் கூறினார். இந்தத் திட்டத்தின் கீழ், பாகிஸ்தானில் இலவச உயர்கல்வி பெற இலங்கை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ராஜ்கோ நிறுவனத்திற்கு பிரியந்த குமாரவின் பங்களிப்பு அபாரமானது என்று அவர் கூறினார்.

பிரியந்த 2012-இல் இணைந்தபோது, அந்நிறுவனத்தில் 250 ஊழியர்கள் இருந்தனர். ஆனால், அது பல ஆண்டுகளாக விரிவடைந்து, இப்போது சுமார் 1,000 பேர் தொழிற்சாலையில் பணியாற்றுகின்றனர்.

பிரியந்த குமாரவின் மற்றொரு சக ஊழியரான மாலிக் அட்னான் பிபிசியிடம் பேசியபோது, அவருடைய மனைவிக்கு முதல் சம்பளத்தை வழங்குவதற்காக குமாரவின் மனைவியை சியால்கோட்டுக்கு அழைக்க நிறுவனம் விரும்பியது. ஆனால், வெளியுறவுத் துறை அலுவலகத்தின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு கருதி அந்தத் திட்டத்தைக் கைவிட்டனர். இருப்பினும், கராச்சியில் இன்னும் பணிபுரியும் குமாரவின் சகோதரர் தொழிற்சாலைக்கு வந்தார்.

பிரியந்த குமாரவைக் கொலை செய்ய முயன்ற கும்பலை எதிர்த்து நின்றதற்காக மாலிக் அட்னானுக்கு பிரதமர் இம்ரான் கான் விருது வழங்கினார். அவர் தனது உடலை கேடயம் போல காத்து குச்சிகள் மற்றும் தடியடிகளில் இருந்து பிரியந்த சிக்காமல் பாதுகாத்தார்.

இலங்கை குடிமகனைக் கொன்றதற்காக குறைந்தது 26 சந்தேக நபர்கள் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கணவரை கொன்றவர்களை மன்னிக்க மாட்டேன் - மனைவி உருக்கம்

பாகிஸ்தான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதி உதவி குறித்து, பிரியந்த குமார தியவடனவின் மனைவி முதியன்சலாகே நிலுஷி திஸாநாயக்கவிடம் பிபிசி தமிழுக்காக ரஞ்சன் அருண் பிரசாத் பேசினார்.

தனது கணவர், தம்முடன் இருந்தவாறே தன்னையும், தனது குடும்பத்தையும் வழி நடத்துவார் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக நிலுஷி கூறினார்.

தனது பிள்ளைகளின் கல்வியை சரியான முறையில் தொடர்ந்தவாறு, அவர்களின் வாழ்க்கையை சிறப்புற செய்வதே தனது நோக்கம் என்றம் அவர் தெரிவித்தார்.

''எனது இலக்கை நோக்கி நான் செல்வேன். அதனையே எதிர்காலத்தில் முன்னெடுப்பேன்" என அவர் கூறினார்.

பாகிஸ்தான் அரசாங்கத்தினால், நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது குறித்து கேட்டபோது, அந்த நாடு உதவி செய்ததை எண்ணி மகிழ்கின்றேன் என்றார்.

 

பாகிஸ்தான்

கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ள நபர்களுக்கு மனதளவில் மன்னிப்பு வழங்கக்கூடிய மனநிலைமை உங்களிடம் உள்ளதா? என்று கேட்டோம்.

''குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி, அவர்களை சமூகமயப்படுத்தினால், இன்னும் பல பெண்களுக்கு கணவரை இழக்க வேண்டிய நிலைமையும், இன்னும் பல பிள்ளைகளுக்கு தமது தந்தையை இழக்க வேண்டிய நிலைமையும் ஏற்படும் அல்லவா? அவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நிலுஷி வலியுறுத்தினார்.

என் கணவர் இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், எம்மை போன்று, மேலும் பலர் பாதிக்கக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன." என அவர் தெரிவித்தார்.

நீங்கள் எதிர்காலத்தில் ஏதேனும் தொழில் செய்வதற்கான எண்ணம் உள்ளதா? என்றபோது, நான் எதிர்நோக்கியுள் சுகயீன நிலைமை காரணமாக, தொழில் செய்யக்கூடிய சூழ்நிலை இல்லை என அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அரசாங்கம் பணம் அனுப்பிய தகவல் தமக்கு வந்துள்ள அதே சமயம், அது இன்னும் தமது கைக்கு வந்து சேரவில்லை என்று நிலுஷி தெரிவித்தார்.

இலங்கையில் தொடர் விடுமுறை காணப்பட்டமையினால், வங்கிகள் மூடப்பட்டிருந்தன. அதனால், பாகிஸ்தான் அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட பணம், ஓரிரு தினங்களில் வங்கியில் வைப்பிலிடப்படும் என தனக்கு வங்கி தரப்பில் அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

 

பாகிஸ்தான்

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் மனைவிக்கு, பாகிஸ்தான் அரசாங்கம் 1,00,000 அமெரிக்க டாலர்கள் (இலங்கை ரூபா மதிப்பில் 2,02,53,740.00) நட்டஈடும், 1,667 அமெரிக்க டொலர் (இலங்கை ரூபா 3,37,629.85) முதல் மாத சம்பளமாகவும் வழங்கப்பட்டிருக்கிறது..

தனது கணவர் மன நிந்தனையில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை தான் முழுமையாகவே நிராகரிக்கிறார் நிலுஷி. எனது கணவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு கிடையாது என அவர் கூறுகின்றார்.

பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்திற்கு, இலங்கை அரசாங்கம் அண்மையில் ரூபா 25 லட்சத்தை வழங்கியது. தொழில் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.

கும்பல் வன்முறைக்கு வழிவகுத்தது எது?

பாகிஸ்தானில் முகம்மது நபியின் பெயர் கொண்ட சுவரொட்டிகளை பிரியந்த கிழித்ததாக தியவதனகே ஒரு வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து வன்முறைகள் தொடங்கியதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்தது.

 

பாகிஸ்தான்

பட மூலாதாரம்,AFP

அந்த நேரத்தில் பிரியந்தவை காப்பாற்றும் முயற்சியில் அந்த இடத்திற்கு விரைந்த சக ஊழியர் ஒருவர், தியவதனகே கட்டடம் சுத்தம் செய்யப்படவிருந்ததால் சுவரொட்டிகளை மட்டுமே அகற்றியதாக பாகிஸ்தானின் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறினார்.

ஆனால், அந்த சக ஊழியரின் முயற்சி வீணடைந்தது போல பிரியந்தவை வன்முறை கும்பல் தாக்கி கொலை செய்து அவரது சடலத்தை எரித்தது. பிரியந்தவின் மனைவியும் தனது கணவருக்கு எதிரான அவதூறு குற்றச்சாட்டை மறுத்தார்."என் கணவர் தொழிற்சாலையில் சுவரொட்டிகளைக் கிழித்ததாகக் கூறப்படும் செய்திகளை நான் முற்றாக நிராகரிக்கிறேன். அவர் ஒரு அப்பாவி மனிதர்" என்று அவர் பிபிசியிடம் கூறினார்."பாகிஸ்தானின் வாழ்க்கை நிலைமைகளை அவர் மிகவும் அறிந்திருந்தார். அது ஒரு முஸ்லிம் நாடு. அவர் அங்கு என்ன செய்யக்கூடாது என்பதை அவர் அறிந்திருந்தார், அதனால்தான் அவர் பதினோரு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார்," என்கிறார் நிலுஷி.

ஒரு வெள்ளிக்கிழமையன்று நடந்த கொடூரமான கொலையின் தீவிரம் - பாகிஸ்தானையே உலுக்கியது. பலரும் இதுபோன்ற வன்முறை கும்பல் செயல்களைக் கண்டித்து போராட்டங்களிலும் அமைதிக் கூட்டங்களையும் நடத்தினார்கள்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

பிரதமர் இம்ரான் கான், "இது ஒரு பயங்கரமான கும்பல் தாக்குதல்" என கண்டித்ததோடு, "சட்டத்தின் முழுக்கடுமையுடன் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்" என்று உறுதியளித்தார்.

என்ன குற்றம்?நிந்தனை என்பது ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது கடவுளைப் பற்றி அவமதிக்கும் வகையில் பேசுவதாக வரையறுக்கப்படுகிறது. பாகிஸ்தானில், இஸ்லாத்தை அவமதிக்கும் எவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம்.நாட்டின் மத நிந்தனைச் சட்டம், மதக் கூட்டத்திற்கு இடையூறு விளைவிப்பது, சவக்குழுகளில் அத்துமீறி நுழைவது, மத நம்பிக்கைகளை அவமதிப்பது அல்லது வழிபாட்டுக்குரிய இடத்தையோ வழிபாட்டுக்குரிய பொருளையோ வேண்டுமென்றே அழிப்பது அல்லது அசுத்தப்படுத்துவது ஆகியவற்றைத் தடை செய்கிறது.இஸ்லாமியர்களுக்கு எதிராக இழிவான கருத்துக்களை கூறுவது கூட இந்த சட்டப்படி குற்றமாகும் - 1982இல், முஸ்லிம்களின் புனித நூலான குர் ஆனை "வேண்டுமென்றே" இழிவுபடுத்தியதற்காக ஆயுள் தண்டனை விதிக்கும் பிரிவு சேர்க்கப்பட்டது.1986ஆம் ஆண்டில், முகம்மது நபிக்கு எதிரான கருத்து வெளியிடுவோரைத் தண்டிக்க இந்த சட்டத்தில் தனியாக ஒரு பிரிவு சேர்க்கப்பட்டது. அதன்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு "மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை" பரிந்துரைக்கப்பட்டது.பாகிஸ்தானில், குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால் கூட அது குறித்து தீர விசாரிக்காமல் போராட்டங்கள் மற்றும் கும்பல் வன்முறையைத் தூண்டும் செயல்பாடுகள் தூண்டப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களில் அதிகமாக அங்கு வாழும் சிறுபான்மையினரே இலக்காகிறார்கள் என்று மனித உரிமை விமர்சகர்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-60062096

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாஹாஹா ஹா..ஹா..

உனக்கு வந்தால் இரத்தம், எனக்கு வந்தால் தக்காளிச் சட்னி...? 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை கொன்றதற்காக இத்தனை தொகை உதவி, எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் நீதி கேட்டு குழு விரைவு,   ஒரு காரணமுமில்லாமல்  இனத்தையே அழித்தவர்கள். அது எப்பிடி நமக்கு ஆதரவாக நீதி கேட்டால் அவர்களை வசைபாடும் இவர்கள், மற்றவரிடம் நீதி கோருகிறார்கள், அவர்களும் பணிகிறார்கள்?

Link to comment
Share on other sites

5 hours ago, satan said:

நமக்கு ஆதரவாக நீதி கேட்டால் அவர்களை வசைபாடும் இவர்கள், மற்றவரிடம் நீதி கோருகிறார்கள், அவர்களும் பணிகிறார்கள்?

இனம் இனத்தைச் சேருது. வேறொன்றும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா  ஆமா

கொலைகளே  நடக்காத

அவலங்களே இல்லாத 

அநியாயங்களே புரியாத நாட்டில்  இனத்தில் பிறந்துள்ளார்கள்??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஆமா  ஆமா

கொலைகளே  நடக்காத

அவலங்களே இல்லாத 

அநியாயங்களே புரியாத நாட்டில்  இனத்தில் பிறந்துள்ளார்கள்??

 

என்னநீங்கள் அபே கோத்தா மாத்தையா சொக்கத்தங்கம் அபே சிங்கள மினிசு தர்மத்தின் வழிநடப்பதுநீங்கள் அபாண்டமா பழி சுமத்தாதையுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, satan said:

ஒருவரை கொன்றதற்காக இத்தனை தொகை உதவி, எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் நீதி கேட்டு குழு விரைவு,   ஒரு காரணமுமில்லாமல்  இனத்தையே அழித்தவர்கள். அது எப்பிடி நமக்கு ஆதரவாக நீதி கேட்டால் அவர்களை வசைபாடும் இவர்கள், மற்றவரிடம் நீதி கோருகிறார்கள், அவர்களும் பணிகிறார்கள்?

என்ன சொல்ல வாறீங்கள் கணவனை அநியாயமாய்  இழந்த இப் பெண்ணுக்கு உதவிகள் ஏதும்  கிடைத்திருக்க  கூடாது என்றா?...உங்களுக்கும் ,துவேசம் பிடித்த சிங்களவனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல வந்ததேதென்றால்; அந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் கிடைக்க வேண்டுமென்பதில் இங்கு யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஆனா பாகிஸ்தானில் கொல்லப்பட்ட ஒரு தனி மனிதனுக்கு நிவாரணமும், நீதியும் வேண்டி போராடும்போது தன் நாட்டில், தன்னால் காரணமின்றி இந்த நாட்டில் தமிழனாக பிறந்த குற்றத்திற்காக விதவைகளாக, அனாதைகளாக, ஏதிலிகளாக ஆக்கப்பட்ட மக்களுக்கு அதை வழங்கிவிட்டு பின் தனது நீதிக்காக போராடுவது தானே நிஞாயம், தர்மம். அதையே யாம் சுட்டிக்காட்டினோம் தாயே! இதில் ஏது குறை கண்டீர்கள் தாங்கள்? தன் நாட்டில் நீதி விசாரணை செய்ய யாரையும் அனுமதிக்காத இவர்கள், பாகிஸ்தானுக்கு தன் விசாரணை குழுவை அனுப்புவது எப்படி நிஞாயம்? அதை பாகிஸ்தானும் தடையின்றி அனுமதித்திருக்கிறது? அது ஏன் சிங்களவனுக்கு ஒரு நீதி? தமிழனுக்கு ஒரு நீதி என்று கேட்டெழுதினேன் தாயே!  இதனால் இலங்கையின் இறையாண்மைக்கு ஏதும் கேடு விளைந்ததோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

கணவனை அநியாயமாய்  இழந்த இப் பெண்ணுக்கு உதவிகள் ஏதும்  கிடைத்திருக்க  கூடாது என்றா?.

இல்லை! அனிஞாயமாக இவர்களால் கொலை செய்யப்பட்ட கணவர்களின் பெண்களுக்கும் இவர்களினால் நீதியும், நஷ்ட ஈடும் கிடைக்க வேண்டும் என்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, satan said:

நான் சொல்ல வந்ததேதென்றால்; அந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் கிடைக்க வேண்டுமென்பதில் இங்கு யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஆனா பாகிஸ்தானில் கொல்லப்பட்ட ஒரு தனி மனிதனுக்கு நிவாரணமும், நீதியும் வேண்டி போராடும்போது தன் நாட்டில், தன்னால் காரணமின்றி இந்த நாட்டில் தமிழனாக பிறந்த குற்றத்திற்காக விதவைகளாக, அனாதைகளாக, ஏதிலிகளாக ஆக்கப்பட்ட மக்களுக்கு அதை வழங்கிவிட்டு பின் தனது நீதிக்காக போராடுவது தானே நிஞாயம், தர்மம். அதையே யாம் சுட்டிக்காட்டினோம் தாயே! இதில் ஏது குறை கண்டீர்கள் தாங்கள்? தன் நாட்டில் நீதி விசாரணை செய்ய யாரையும் அனுமதிக்காத இவர்கள், பாகிஸ்தானுக்கு தன் விசாரணை குழுவை அனுப்புவது எப்படி நிஞாயம்? அதை பாகிஸ்தானும் தடையின்றி அனுமதித்திருக்கிறது? அது ஏன் சிங்களவனுக்கு ஒரு நீதி? தமிழனுக்கு ஒரு நீதி என்று கேட்டெழுதினேன் தாயே!  இதனால் இலங்கையின் இறையாண்மைக்கு ஏதும் கேடு விளைந்ததோ?

இதில் இலங்கை அரசு எங்கே போராடியது?...யுத்தத்தால் பாதிக்கப்படட மக்களையும், ஆமியில் சேராத சாதாரண சிங்கள குடுப்பத்தையும் ஒப்பிட்டு எழுதுகிறீர்களே! கொஞ்சசமாவது யோசிக்க மாட்டீர்களா? ...நாளைக்கு அரபு நாட்டில் வேலை செய்யும் தமிழனுக்கு ஏதாவது நடந்தால் அதற்கும் இப்படித்தான் ஏதாவது சொல்வீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா தாயே! வக்காலத்து வாங்க முதல்  என்ன நடக்கிறது என ஆராய்ந்து  எழுதுங்கள். இலங்கையில் இருந்து ஒரு குழு, விசாரணையை ஆராய சென்றது, அதைவிட அவர்களின் நீதி விசாரணையை கண்காணிக்கிறது, அறிக்கை கேட்கிறது. இதற்கு முதல் தான் என்ன செய்தேன்? ஒரு அரசாக இருந்து தன்னால் வேண்டுமென்றே  அழித்த மக்களுக்கு என்பதை யோசிக்க தவறிவிட்டது.  இங்கு அரசாங்கம் இருபத்தைந்து லட்ஷம் கொடுத்துள்ளது, பாகிஸ்தான் கொடுத்த நஷ்ட ஈட்டைத்தவிர அதைவிட இறந்தவரின் உறவினருக்கு அவரின் பதவி அளிக்கப்பட்டுள்ளது பாகிஸ்தானில்  தன்னால் அழிக்கப்பட்ட உயிர்களுக்கு என்னகொடுத்தார்? அழிவை ஏற்படுத்தியவர்களுக்கு விடுதலை, பதவி உயர்வு. இது நிஞாயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, satan said:

அம்மா தாயே! வக்காலத்து வாங்க முதல்  என்ன நடக்கிறது என ஆராய்ந்து  எழுதுங்கள். இலங்கையில் இருந்து ஒரு குழு, விசாரணையை ஆராய சென்றது, அதைவிட அவர்களின் நீதி விசாரணையை கண்காணிக்கிறது, அறிக்கை கேட்கிறது. இதற்கு முதல் தான் என்ன செய்தேன்? ஒரு அரசாக இருந்து தன்னால் வேண்டுமென்றே  அழித்த மக்களுக்கு என்பதை யோசிக்க தவறிவிட்டது.  இங்கு அரசாங்கம் இருபத்தைந்து லட்ஷம் கொடுத்துள்ளது, பாகிஸ்தான் கொடுத்த நஷ்ட ஈட்டைத்தவிர அதைவிட இறந்தவரின் உறவினருக்கு அவரின் பதவி அளிக்கப்பட்டுள்ளது பாகிஸ்தானில்  தன்னால் அழிக்கப்பட்ட உயிர்களுக்கு என்னகொடுத்தார்? அழிவை ஏற்படுத்தியவர்களுக்கு விடுதலை, பதவி உயர்வு. இது நிஞாயமா?

வக்காலத்து வாங்க  வேண்டிய தேவை எனக்கில்லை ....எமது மக்களுக்கு நீதி வேண்டுமானால் பெற்றுக் கொடுங்கோ...அதற்காக ஆட்டுக்குள் , மாட்டை கொண்டு போய் செருகாதையுங்கோ 😫
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

வக்காலத்து வாங்க  வேண்டிய தேவை எனக்கில்லை ....எமது மக்களுக்கு நீதி வேண்டுமானால் பெற்றுக் கொடுங்கோ...அதற்காக ஆட்டுக்குள் , மாட்டை கொண்டு போய் செருகாதையுங்கோ 😫
 

நான் சொல்லேலை! எங்கே என்ன நடக்குதென்று தெரியவில்லை உங்களுக்கு.  நான் இங்கு ஒரே நாட்டு   மக்களுக்கு நிகழ்ந்த  அழிப்பும், இழப்பீடும், அதை வெவ்வேறு விதமாக கையாளும் முறையையும் பற்றி குறிப்பிட்டேன். நீங்கள் எதைப்பற்றி கதைக்கிறீர்கள்? இங்கே மாடும் ஆடும் எங்கே வந்தது? பதில் தெரியாவிடத்து அமைதியாக விலகிப்போவது அழகு,  தொடர்ந்து தவறுகளை மறைக்க வியாக்கியானம் செய்பவரோடு விவாதம் செய்வதில் பயனில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2022 at 06:02, ரதி said:

இதில் இலங்கை அரசு எங்கே போராடியது?...யுத்தத்தால் பாதிக்கப்படட மக்களையும், ஆமியில் சேராத சாதாரண சிங்கள குடுப்பத்தையும் ஒப்பிட்டு எழுதுகிறீர்களே! கொஞ்சசமாவது யோசிக்க மாட்டீர்களா? .

 

On 24/1/2022 at 07:45, satan said:

இலங்கையில் இருந்து ஒரு குழு, விசாரணையை ஆராய சென்றது, அதைவிட அவர்களின் நீதி விசாரணையை கண்காணிக்கிறது, அறிக்கை கேட்கிறது. இதற்கு முதல் தான் என்ன செய்தேன்? ஒரு அரசாக இருந்து தன்னால் வேண்டுமென்றே  அழித்த மக்களுக்கு என்பதை யோசிக்க தவறிவிட்டது.  இங்கு அரசாங்கம் இருபத்தைந்து லட்ஷம் கொடுத்துள்ளது, பாகிஸ்தான் கொடுத்த நஷ்ட ஈட்டைத்தவிர அதைவிட இறந்தவரின் உறவினருக்கு அவரின் பதவி அளிக்கப்பட்டுள்ளது பாகிஸ்தானில்  தன்னால் அழிக்கப்பட்ட உயிர்களுக்கு என்னகொடுத்தார்? அழிவை ஏற்படுத்தியவர்களுக்கு விடுதலை, பதவி உயர்வு. இது நிஞாயமா?

 

4 hours ago, ரதி said:

வக்காலத்து வாங்க  வேண்டிய தேவை எனக்கில்லை

அப்போ உண்மையை சொல்ல பயம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.