Jump to content

புலம்பெயர் இலங்கையர்களின் வைப்புகளுக்கு உயர்வட்டி வீதம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் இலங்கையர்களின் வைப்புகளுக்கு உயர்வட்டி வீதம்!

January 21, 2022
spacer.png

2022 பெப்ரவரி 1முதல் நடைமுறைக்குவரும் வகையில் உரிமம் பெற்ற வங்கிகள், ஏனைய முறைசார் வழிகளூடாக ரூபாய்க் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்படுகின்ற போது பரிமாற்றல் ஒன்றுக்கு 1,000 ரூபாய் கொடுப்பனவு செய்வதன் மூலம் புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பணப் பரிமாற்றல் செலவினை மீள வழங்கவேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.

அத்துடன், புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டு நாணய மற்றும் ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட வைப்புகள் இரண்டுக்கும் உயர்வான வட்டி வீதங்களை அறிமுகப்படுத்தல் வேண்டும் என்றும் சபை தீர்மானித்துள்ளது.

தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் பேரண்ட பொருளாதார அபிவிருத்திகளை பரிசீலித்து, நேற்றுமுன்தினம் (19.01.22) நடைபெற்ற நாணய சபை கூட்டத்தில், பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் பல கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்ததாக, மத்திய வங்கி நேற்று (20.01.22) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி, நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை முறையே 50 அடிப்படை புள்ளிகளால் 5.5% மற்றும் 6.5% ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, நிலையான வைப்பு மற்றும் கடன் வசதி விகிதங்களை திருத்துவதற்கும், எரிபொருள் கொள்வனவுக்கான அத்தியாவசிய இறக்குமதி கட்டணங்களை உரிமம் பெற்ற வங்கிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட அனைத்து சுற்றுலா நிறுவனங்களுக்கும் இலங்கைக்கு வெளியில் வசிக்கும் நபர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு அந்நிய செலாவணியை மட்டுமே ஏற்றுக்கொள்ளுமாறும் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.

“உள்நாட்டுத் தொழிலாளர்களின் பணம் அனுப்பும் ஊக்கத் திட்டத்தின்” கீழ் வழங்கப்படும் அமெரிக்க டொலரொன்றுக்கு வழங்கப்படும் ரூ.2க்கு மேலதிகமாக தொழிலாளர் பணவலுப்பல்களுக்கு ஐக்கிய அமெரிக்க டொலரொன்றுக்கு ரூ.8ஐ ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 

 

https://globaltamilnews.net/2022/172104

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குசும்பன்… மொத்தக் காசையும், ஆட்டைய போட… பிளான் பண்ணுறான். 😁 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

இவ்வளவு பண வீக்கம் உள்ள இலங்கையில் நிலையான வைப்பு வீதம் வெறும் 5.5 வீதம் தானா ?

இது இளையோருக்கு வயதானவையளுக்கு 60 வயதுக்கு மேல் அதிகூடிய வட்டி வீதம் என்று எங்கோ வாசித்த  நினைவு .

2 hours ago, தமிழ் சிறி said:

குசும்பன்… மொத்தக் காசையும், ஆட்டைய போட… பிளான் பண்ணுறான். 😁 😂 🤣

அங்கு இருக்கும் தமிழர்கள்  இரண்டாம் குடிமக்கள் போல் ஆனால் தமிழரின் பணம் மட்டும் சிங்களத்துக்கு வேணும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

இவ்வளவு பண வீக்கம் உள்ள இலங்கையில் நிலையான வைப்பு வீதம் வெறும் 5.5 வீதம் தானா ?

 

2 hours ago, பெருமாள் said:

இது இளையோருக்கு வயதானவையளுக்கு 60 வயதுக்கு மேல் அதிகூடிய வட்டி வீதம் என்று எங்கோ வாசித்த  நினைவு .

அங்கு இருக்கும் தமிழர்கள்  இரண்டாம் குடிமக்கள் போல் ஆனால் தமிழரின் பணம் மட்டும் சிங்களத்துக்கு வேணும் .

https://www.nsb.lk/rates-tarriffs/rupee-deposit-rates/

Term deposits.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விட்டில் பூச்சிகள் விழுந்துவிடும் என்கிற  எதிர்பார்ப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

விட்டில் பூச்சிகள் விழுந்துவிடும் என்கிற  எதிர்பார்ப்பு!

90வீதம் அப்படித்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

விட்டில் பூச்சிகள் விழுந்துவிடும் என்கிற  எதிர்பார்ப்பு!

ஏற்கனவே வட்டிவீதம் கூட என்று பலர் போட்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே வட்டிவீதம் கூட என்று பலர் போட்டிருக்கிறார்கள்.

புதுமைக்கு எல்லாம் அப்படித்தான் இருக்கும். எல்லோரும் விழுந்தடித்து  வைப்பிலிட்டபின், சொல்லாமல் கொள்ளாமல் வட்டிவீதம் அதல பாதாளத்துக்கு இறங்கி விடும். பிறகு என்ன?  போட்ட பணத்தை மீள எடுக்கவும் முடியாது, வைப்பில் விடவும் முடியாது ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான், சிங்களவன் குடுமி சும்மா ஆடாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.