Jump to content

பார்த்தவுடன் முடிவுக்கு வராதே.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_5686.jpeg.fa2329b4efe650d1a9abc4a8030296e7.jpeg

பார்த்தவுடன் முடிவுக்கு வராதே.!

*************************

கடலின் நடுவே

மிதக்கின்ற ஊரை-ஒரு

கதையாசிரியன்

காணப்போனான்

கோடை வெய்யிலில் 

எரிந்து கிடந்ததாம்.

உணவின்றி கால்நடை 

இறந்துகிடந்ததாம்

வயலெல்லாம் வெடித்து 

பிளந்து கிடந்ததாம்

வளரும் மரம்செடி 

விறகாய் தெரிந்ததாம்

 

காய்ந்த பூமியென 

கதையே எழுதினான்

கானாதோரை நம்பவே 

வைத்தான் -அது

பாலைவனமென 

பரிந்துரை செய்தான்-தான்

பட்டதுன்பமென 

பலதும் சொன்னான்

புத்தகம் விற்று 

புகழுமடைந்தான்.

 

ஆறுமாதம் 

கழித்தொருவன் 

அந்த ஊருக்கே

அவனும் போனான்

 

பச்சைப்பசேலென மூலிகை

இருந்ததாம்-மரங்கள்

பார்க்குமிடமெல்லாம் 

கனியுடன் நின்றதாம்

ஆவினம் மாவினம் 

துள்ளித்திரிந்ததாம்

அணைகள் நிரம்பி 

நீரெங்கும் பாய்ந்ததாம்.

பறவையினங்கள் 

பாடித்திரிந்ததாம்

பனை தென்னையங்கு 

ஆடிமகிழ்ந்ததாம்

அழகோ அழகு 

அத்தனையழகு

புத்தகம் எழுதி விற்பனை 

செய்தான்.

இரண்டு புத்தகமும் 

எனக்கு கிடைத்தது

இரவும் பகலும் நான் 

வாழ்ந்த மண்ணது

வசந்த காலமும்

வரண்டகாலமும்

வந்துபோவதே

எமக்கு மகிழ்சி.

எதையும்..

ஒருதரம் பார்த்து

உதவாதென்று

உறுதியாய் சொல்ல 

முனையாதீர்கள்.

 -பசுவூர்க்கோபி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பசுவூர்க்கோபி said:

large.IMG_5686.jpeg.fa2329b4efe650d1a9abc4a8030296e7.jpeg

பார்த்தவுடன் முடிவுக்கு வராதே.!

*************************

கடலின் நடுவே

மிதக்கின்ற ஊரை-ஒரு

கதையாசிரியன்

காணப்போனான்

கோடை வெய்யிலில் 

எரிந்து கிடந்ததாம்.

உணவின்றி கால்நடை 

இறந்துகிடந்ததாம்

வயலெல்லாம் வெடித்து 

பிளந்து கிடந்ததாம்

வளரும் மரம்செடி 

விறகாய் தெரிந்ததாம்

 

காய்ந்த பூமியென 

கதையே எழுதினான்

கானாதோரை நம்பவே 

வைத்தான் -அது

பாலைவனமென 

பரிந்துரை செய்தான்-தான்

பட்டதுன்பமென 

பலதும் சொன்னான்

புத்தகம் விற்று 

புகழுமடைந்தான்.

 

ஆறுமாதம் 

கழித்தொருவன் 

அந்த ஊருக்கே

அவனும் போனான்

 

பச்சைப்பசேலென மூலிகை

இருந்ததாம்-மரங்கள்

பார்க்குமிடமெல்லாம் 

கனியுடன் நின்றதாம்

ஆவினம் மாவினம் 

துள்ளித்திரிந்ததாம்

அணைகள் நிரம்பி 

நீரெங்கும் பாய்ந்ததாம்.

பறவையினங்கள் 

பாடித்திரிந்ததாம்

பனை தென்னையங்கு 

ஆடிமகிழ்ந்ததாம்

அழகோ அழகு 

அத்தனையழகு

புத்தகம் எழுதி விற்பனை 

செய்தான்.

இரண்டு புத்தகமும் 

எனக்கு கிடைத்தது

இரவும் பகலும் நான் 

வாழ்ந்த மண்ணது

வசந்த காலமும்

வரண்டகாலமும்

வந்துபோவதே

எமக்கு மகிழ்சி.

எதையும்..

ஒருதரம் பார்த்து

உதவாதென்று

உறுதியாய் சொல்ல 

முனையாதீர்கள்.

 -பசுவூர்க்கோபி.

தத்துவார்த்த கவிதை அருமை தோழர் பகிர்விற்கு நன்றிகள்.💐

Link to comment
Share on other sites

18 hours ago, பசுவூர்க்கோபி said:

எதையும்..

ஒருதரம் பார்த்து

உதவாதென்று

உறுதியாய் சொல்ல 

முனையாதீர்கள்.

வஞ்சகர்கள் உலகை ஏமாற்ற, ஒருதரம்தான் பார்த்தோம் எங்கள் மண்மீட்புப் போராட்டத்தின் பின்னடைவை. இருந்தும் அப்படியான போராட்டம் இனி உதவாதென்று எங்கள் கள உறவுகளில் சிலர்கூடி உறுதியாகச் சொல்ல முனைகின்றனரே.!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தத்துவார்த்த கவிதை அருமை தோழர் பகிர்விற்கு நன்றிகள்.💐

புரட்சிகரத்  தோழருக்கு உளமார்ந்தநன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

வஞ்சகர்கள் உலகை ஏமாற்ற, ஒருதரம்தான் பார்த்தோம் எங்கள் மண்மீட்புப் போராட்டத்தின் பின்னடைவை. இருந்தும் அப்படியான போராட்டம் இனி உதவாதென்று எங்கள் கள உறவுகளில் சிலர்கூடி உறுதியாகச் சொல்ல முனைகின்றனரே.!!

நெஞ்சார்ந்த நன்றிகள் பாஞ் அண்ணா
எல்லாவற்றுக்கும் இரண்டுபக்கம் இருப்பது போல இந்த வலியை அவர்களும் உணரும் காலம் வரும்.சிலர் சொல்வது போல் .இது எம்மினத்துக்கு முடிவில்லை எனத்தான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/1/2022 at 15:39, பசுவூர்க்கோபி said:

எதையும்..

ஒருதரம் பார்த்து

உதவாதென்று

உறுதியாய் சொல்ல 

முனையாதீர்கள்.

நன்று!

உண்மைதான்  மாறும் காலநிலை மாறாததுதானே. பாராட்டுகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nochchi said:

நன்று!

உண்மைதான்  மாறும் காலநிலை மாறாததுதானே. பாராட்டுகள்!

  நொச்சி  அவர்களுக்கு நெஞ்சார்ந்த  நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அருமை.இரவும்பகலும் போல , வரவும் செலவும் போல காலமும் மாறி மாறி வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை சிறப்பு.....தத்துவம் அதைவிட சிறப்பு........!  👏

நன்றி கோபி......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/1/2022 at 16:17, நிலாமதி said:

கவிதை அருமை.இரவும்பகலும் போல , வரவும் செலவும் போல காலமும் மாறி மாறி வரும்.

நன்றிகள் நிலாமதி அக்கா

On 26/1/2022 at 18:59, suvy said:

கவிதை சிறப்பு.....தத்துவம் அதைவிட சிறப்பு........!  👏

நன்றி கோபி......!   

நன்றிகள் சுவி அண்ணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.