Jump to content

தமிழர் தாயக் கடற்கரையில் இரவோடு இரவாக பதிக்கப்படும் பாரிய மர்ம குழாய்கள்


Recommended Posts

 

தமிழர் தாயக் கடற்கரையில் இரவோடு இரவாக பதிக்கப்படும் பாரிய மர்ம குழாய்கள்!! களத்தில் இருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் புன்னைக்குடா கடற்கரைப் பிரதேசத்தில் பாரிய இரும்புக் குழாய்கள் கொண்டுவரப்பட்டு நிலத்தினுள் பதிக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எதற்காக அந்தக் குழாய்கள் கடற்கரையில் பதிக்கப்பட்டு வருகின்றன என்ற அந்தப் பிரதேச வாழ் மக்களின் கேள்விக்கு சரியான பதில் இதுவரை அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

பதிலைத் தேடுகின்ற ஒரு முயற்சியில் நாம் இறங்கிய போது, பல அதிர்ச்சிகரமான உண்மைகள் எமக்கு கிடைக்கப்பெற்றன.

தமிழ் மக்களின் வாழ்வியல் மாத்திரமல்ல, அவர்களது எதிர்கால இருப்பையே கேள்விக்குள்ளாக்கக்கூடிய பல சந்தேகங்களையும், கேள்விகளையும், எச்சரிக்கைகளையும் சுமந்து வருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

https://ibctamil.com/article/secrets-behind-the-iron-pipes-laying-in-the-beach-1642443375?fbclid=IwAR3aHTI4Ou0a2LH5XY3GWgvLT0DA9aqP4KaDv2pA0yVXKHEwIU352tFUlhY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

தமிழ் மக்களின் வாழ்வியல் மாத்திரமல்ல, அவர்களது எதிர்கால இருப்பையே கேள்விக்குள்ளாக்கக்கூடிய பல சந்தேகங்களையும், கேள்விகளையும், எச்சரிக்கைகளையும் சுமந்து வருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

இந்த ஐபிசி கூட்டத்துக்கு குசும்பு கூடி போயிட்டுது என்னவென்று சொன்னால்தானே நாங்களும் அதிர்ச்சி அடையலாம் இங்கு எழுதாமல் யுடியூப்பில் வாயால் வடை சுடுகினம் சாய நூல் தொழில்சாலை அதுவும் பேர் சொல்லமுடியாத அரசியல்வாதி இவர்களுக்கு மட்டும் சொல்கிறாராரம் மற்ற அரசியல்வாதிகள் காசு வாங்கிட்டினம் போல் உள்ளது .😀

Link to comment
Share on other sites

ஒரு பின்னூட்டம்

நாட்டில் ஐந்து தொழினுட்ப பூங்காக்கள் நிறுவப்படவுள்ளன.
அதில் மட்டக்களப்புக்கும் ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை பெரிய விடயம்.
01.மட்டக்களப்பு மாவட்ட தொழினுட்ப பூங்கா. ( TECHNO PARK)
02. குருணாகல் மாவட்ட தொழினுட்ப பூங்கா. ( TECHNO PARK)
03. காலி மாவட்ட தொழினுட்ப பூங்கா. ( TECHNO PARK)
04. கண்டி மாவட்ட தொழினுட்ப பூங்கா ( TECHNO PARK)
05. அனுராதபுர மாவட்ட தொழினுட்ப பூங்கா. ( TECHNO PARK)
குறித்த தொழினுட்ப பூங்காத் திட்டத்தில் முழுக்க முழுக்க தற்போதைய அதிக இலாபமீட்டும் ஏற்றுமதித் தொழிலான ஆடைத் தொழிற்சாலைகளே அதிகம் நிறுவப்படவுள்ளன.
அத்தோடு நூல்களை இறக்குமதி செய்து துணி தயாரிக்கும் தொழிற்சாலைகளும் வரலாம்.
நாட்டின் சுற்றுச்சூழல் அதிகாரசபையின் அனுமதிகளுடன்தான் நாட்டில் எந்தத் தொழிற்சாலையும் அமைக்கப்படும்.
நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் இங்குள்ள சூழலியலாளர்கள், புத்திஜீவிகள் கண்டுகொள்ளாமல் இருக்கப்போவதில்லை.
கடல் வளத்தைப் பாதிக்க கூடிய வகையில் தொழிற்சாலை ஒன்று அமைக்க யாரும் அனுமதிக்கமாட்டார்கள்.
குறித்த தொழிற்சாலைத் திட்டம் நீங்கள் கற்பனையில் கூறுவது போல தென்பகுதிக்குச் சென்று எதிர்ப்பு காரணமாக இங்கு வரவில்லை.
இப்போதுதான் புதிதாக ஆரம்பிக்கப்படுகிறது.
மட்டக்களப்பில் தற்போது ஒரு ஆடைத்தொழிற்சாலை உள்ளது.
மட்டக்களப்பில் சுமார் 4000 குடும்பங்கள் அந்த ஆடைத் தொழிற்சாலையால் சீவிக்கின்றனர்.
அதற்கான மூலப்பொருட்கள் அனைத்தும் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டு உற்பத்திகள் யாவும் வெளிநாடுகளுக்கே ஏற்றுமதியாகின்றன.
தற்போதைய நிலையில் காகித ஆலையை புனரமைப்பு, அரசி ஆலையைப் புனரமைப்புகளை விட நாட்டுக்கு இலாபம் தரக்கூடிய உற்பத்திகளுக்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டும்.
காகித உற்பத்தியை விட கொள்வனவு செய்வது இலாபமாக உள்ளதாம்.
புன்னைக்குடாவில் சிங்கள மக்கள் நீண்ட காலமாக வாழ்கின்றனர்.
புதிதாக குடியேற்றப்படவில்லை.
அதுபோக அந்தப பகுதி காணிகள் தொடர்பான இன்னுமொரு பிரச்சனையும் உண்டு.
ஊடகவியலாளரான நீங்கள் விரும்பினால் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்.
மறுபக்கத்தையும் சொல்கிறேன்.
முடிந்தால் அதைச் செய்தியாக்குங்கள்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.