Jump to content

இந்தியாவில் நடைபெற இருக்கும் முதலாவது metaverse திருமணம்


Recommended Posts

தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ், ஜனகநந்தினி ஆகியோர் விரைவில் metaverse இல் தமது திருமணத்தை நடத்தவுள்ளனர்.

metaverse.jpg

metaverse என்பது முப்பரிமாண மாய உலகம். இங்கு ஒவ்வொருவரும் தமது அவதார் மூலம் சந்தித்துப் பேசிக்கொள்ள முடியும்.  Harry Potter பள்ளிக்கூட மண்டபத்தில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத் திருமணத்தில் சென்ற வருடம் இறந்து போன ஜனகநந்தினியின் தந்தை ஒரு அவதாராகப் பங்குகொள்கிறார்.

சுமார் 2500 பேர் தமது கணணியூடாக இந்தத் திருமணத்தில் பங்குகொள்ளவுள்ளனர். metaverse பற்றி தமது உறவினர்களுக்குப் புரிய வைக்கத்தான் மிகச் சிரமமாக இருந்ததாக ஜனகநந்தினி கூறுகிறார்.
சென்னை  Indian Institute of Technology இல் புரொஜெக்ட் மனேஜரான தினேஷ், உள்ளூர் start-up ஒன்றினூடாக blockchain மூலம் திருமண மண்டபத்தை உருவாக்கி வருகிறார்.

 

மூலச் செய்தி : https://www.courrierinternational.com/revue-de-presse/futur-un-couple-indien-va-se-marier-dans-le-metavers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு ஆரோக்கியமான நிகழ்வு எனலாம். காரணம்... செலவு குறைவு.. ஆக்கள் கூடி கூத்தடிச்சு நோய் பரப்புவதை தவிர்க்கலாம் (குறிப்பாக இன்றைய காலக் கட்டத்தில்).. வர முடியாதவர்களும் பங்கெடுக்கலாம்.. அதுபோக முக்கிய விடயம்.. இறந்து போன சொந்தங்களையும் அழைக்கலாம். அது நிறையப் பேருக்கு மனத் திருப்தியை அளிக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இருந்தாலும்… நாலு சொந்தங்கள், நேரில் வந்து கலந்துரையாடி செய்யும்….
கலியாணத்தைப் போல் வராது. 

கலியாணம் என்றாலே… நறுமண வாசனை, தனி கிக்கை கொடுக்கும்.
 இது ஏதோ… கடமைக்கு, செய்யும் கலியாணம் போல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞானம் முன்னேற முன்னேற இயற்கை அழிவுகளும் இனம் புரியா நோய்களும் பெருகிக்கொண்டே வருகின்றது.

கூரை ஏறிக் கோழி பிடிக்க இயலாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்!  :cool:

Link to comment
Share on other sites

13 hours ago, குமாரசாமி said:

விஞ்ஞானம் முன்னேற முன்னேற இயற்கை அழிவுகளும் இனம் புரியா நோய்களும் பெருகிக்கொண்டே வருகின்றது.

கூரை ஏறிக் கோழி பிடிக்க இயலாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்!  :cool:

Meta (facebook) நிறுவனம் உலகிலேயே மிக அதி வேகமுடைய சூபர் கணணி ஒன்றை உருவாக்கி வருகிறது. இக் கணணி அந் நிறுவனத்தின் மாய உலகை இயக்கப் போகிறது என்பது செய்தி.
https://www.sciencesetavenir.fr/high-tech/informatique/meta-presente-son-supercalculateur-surpuissant_160969

---

புலம்பெயர்ந்த தமிழர்களில் வயதானவர்களும் பெண்களும் ஒரு நாளில் பல மணி நேரங்கள் சண் ரிவி, விஜய் ரிவி ஆகியவற்றிற்கு முன்னால் பேய் அறைந்த மாதிரி உட்கார்ந்திருக்கிறார்கள். நாடகம் என்பது என்ன ? ஒருவித போலியாக உருவாக்கப்பட்ட குடும்பங்கள், கதாபாத்திரங்கள், சம்பவங்கள். இவை எந்த ஆக்கபூர்வமான அறிவியலான கருத்தாக்கத்தையோ அல்லது மனித மேம்பாட்டிற்கான அனுகூலங்களையோ கொண்டிருக்கவில்லை. மாறாக பல கோடி மக்களை இதனுள் மூழ்கவைத்து அவர்களின் வினைத்திறனை மழுங்கடிக்கச் செய்கிறது.  எனது குடும்பத்திலேயே இந்த நாடகங்களுக்குள் ஒரு நாள்கூட சஞ்சரிக்காமல் இருக்க முடியாதவர்கள் பலர் உள்ளனர். இந்தப் போலியான சம்பவங்களைப் பற்றி இன்னொருவருடன் நிஜமாக பக்கத்து வீட்டில் நடைபெற்ற சம்பவம்போல் உரையாடக் கேட்டுள்ளேன்.
இதுவும் ஒரு மாய உலகல்லவா ?

ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சமயங்கள் மூலமாக சொர்க்கலோகம் நரகலோகம் இந்திரலோகம் என்றெல்லாம் யாரும் பார்த்திராத மாய உலகங்களை மக்களை நம்பவைத்தனர்.

முருகன் மாங்காய்க்காக உலகத்தை மயிலின் முதுகில் ஏறி வலம் வந்தார் என்றும் சூரனனோடு சண்டை பிடித்தார் என்றும் சொல்லப்பட்ட கதைகளை நம்பி கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்து அந்த நிகழ்ச்சிகளைக் கண்முன்னே வரவைக்கிறோம் அல்லவா ? இதுவும் மாயைதான்.

Meta verse தொழில்நுட்பம்தான் புதிதே தவிர எல்லாம் பழையத்தான்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இது புதிய தகவல்......!  😁

இணைப்புக்கு நன்றி இணையவன் ........!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் இவைகள் எதுவும் புதுமையானதாக இருக்காது. கூடிய விரைவில் நாம் உடைகள் வாங்க காட்சி அறைகளுக்குப்போய் அங்கிருக்கும் அறைகளில் அளவு சரியா எனப் போட்டுப்பார்க்கத் தேவையில்லை வீட்டிலிருந்தவாறே அதே கடையிளுல்ல ஆடைகளை போட்டுப்பார்த்து காசைக்கட்டினால் வீட்டுக்குப் பொருள் வந்துவிடும் அளவுகளில் ஏதாவது திருத்தம் வேண்டுமானாலும் பிரச்சனை இல்லை அளவு எடுத்துத் திருத்தித்தரவார்கள்.

இதைவிட இன்னுமொறு விடையம் திரைப்படம் பார்க்க சினிமாவுக்கோ ஓ டி டி பிளட்போமுக்கோ போகத்தேவையில்லை தமிழ் மெகாத்தொடர் உட்பட அனைத்திலும் நடிகர்கள் உங்கள் முன்னாலேயே வந்து நடிப்பார்கள் பக்கத்திலிருந்தே என்ன நடக்குது எனப்பார்க்குமாப்போல் இருக்கும் இப்போது ஆடை விடையத்தில் HM நிறுவனம் முதல் முயற்சி எடுத்திருக்கிறது. நிறைய நிறுவனங்கள் இதற்காகக் காணி வாங்கிவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

19 minutes ago, Elugnajiru said:

இனிமேல் இவைகள் எதுவும் புதுமையானதாக இருக்காது. கூடிய விரைவில் நாம் உடைகள் வாங்க காட்சி அறைகளுக்குப்போய் அங்கிருக்கும் அறைகளில் அளவு சரியா எனப் போட்டுப்பார்க்கத் தேவையில்லை வீட்டிலிருந்தவாறே அதே கடையிளுல்ல ஆடைகளை போட்டுப்பார்த்து காசைக்கட்டினால் வீட்டுக்குப் பொருள் வந்துவிடும் அளவுகளில் ஏதாவது திருத்தம் வேண்டுமானாலும் பிரச்சனை இல்லை அளவு எடுத்துத் திருத்தித்தரவார்கள்.

இதைவிட இன்னுமொறு விடையம் திரைப்படம் பார்க்க சினிமாவுக்கோ ஓ டி டி பிளட்போமுக்கோ போகத்தேவையில்லை தமிழ் மெகாத்தொடர் உட்பட அனைத்திலும் நடிகர்கள் உங்கள் முன்னாலேயே வந்து நடிப்பார்கள் பக்கத்திலிருந்தே என்ன நடக்குது எனப்பார்க்குமாப்போல் இருக்கும் இப்போது ஆடை விடையத்தில் HM நிறுவனம் முதல் முயற்சி எடுத்திருக்கிறது. நிறைய நிறுவனங்கள் இதற்காகக் காணி வாங்கிவிட்டார்கள்.

காணியின் விலை உண்மையான காணியை விட விலை அதிகம்.

அப்படியே தமிழீழத்தையும் உருவாக்கி விடுவமா ? 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவியலின் வளர்ச்சியை விரும்பியோ விரும்பாமலோ ஏற்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறோம்.
ஓடி விளையாட ஆசைப்படும் எனக்கு இந்த அறிவியல் வளர்ச்சி ஏதாவது வகையில் பயன்படுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, இணையவன் said:

காணியின் விலை உண்மையான காணியை விட விலை அதிகம்.

அப்படியே தமிழீழத்தையும் உருவாக்கி விடுவமா ? 😄

உருவாக்கலாம் 
அதற்கு முன்முயற்சியாக google mapபை பவிக்காமல் நாமே ஒரு  GPS map உருவாக்கி மாவீரர் துயிலுமில்லாம் போல் வடிவமைத்து உலகில் உள்ள அனைத்துச் சொந்தங்களையும் இணைத்து மிகப்பெரிய  மாவீரர் நினைவெழிர்ச்சி நாளைக்கொண்டாடினால் ஆரம்பப்புள்ளியாக இருக்கும்.

தவிர நாமே ஒரு மெற்றாவேஸஸ் கிரிப்டோ நாணயத்தை இறக்கினால் பலமடங்கு பலம் பெறலாம்.
பல நிறுவனங்கள் தனிப்பட்டவர்களது நாணயங்களை உருவாக்க ஆயத்தமாகி இருக்கின்றன ஆனால் சிக்கல் நம்பிக்கைத்தன்மையே. 

ஸ்பெயினில் சில கிராமங்கள் கைவிடப்பட்ட நிலையில் பாடசாலை நீவீழ்ச்சி பண்ணைகள் தெருக்கள் தேவாலயங்கள் உள்ளடங்கலாக விற்பனைக்குள்ளதாக ஓரிரு வருடங்களுக்குமுன்பு செய்தியில் அறிந்தேன் அவைகளை வாங்கினால் எமக்கான தற்காலிகமான ஐரோப்பிய சட்டதுட்டங்களுக்கு அமைவாகச் செயற்படும்விதமான தமிழ் கிராமங்களை உருவாக்கலாம்.

இதற்கான முதற்படியாக கிரிப்டோ நாணயங்களை உருவாக்கி அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் எதுவும் செய்யலாம். ஆனால் என்ன புலிகளது சொத்துக்களை ஆட்டையைப்போட்டு தலைவர் சொல்லட்டும் அதை நான் உங்களிட்டைத் தாறன் எனும் போக்கிலிகள் வாழும் எமது தமிழ் சமூகத்தில் நடக்கக்கூடிய விடையங்கள் இவை அல்ல.

Link to comment
Share on other sites

6 minutes ago, Elugnajiru said:

 

ஸ்பெயினில் சில கிராமங்கள் கைவிடப்பட்ட நிலையில் பாடசாலை நீவீழ்ச்சி பண்ணைகள் தெருக்கள் தேவாலயங்கள் உள்ளடங்கலாக விற்பனைக்குள்ளதாக ஓரிரு வருடங்களுக்குமுன்பு செய்தியில் அறிந்தேன் அவைகளை வாங்கினால் எமக்கான தற்காலிகமான ஐரோப்பிய சட்டதுட்டங்களுக்கு அமைவாகச் செயற்படும்விதமான தமிழ் கிராமங்களை உருவாக்கலாம்.

 

நிச்சயமாக.

நானும் முன்பு நினைப்பதுண்டு. ஒரு சதுர அடி நிலம் உலகில் எங்காவது தனி அரசு அமைப்பதற்கு அல்லது அப் பிரதேச சட்டத்துகு உட்பட்ட விதத்தில் ஒரு நுண் கிராமகாக உருவாக்கக் கூடியதாக இருந்தால் மீதியை உலகெங்கிலும் வாழும் தமிழர்களை இணைத்து மாபெரும் சக்தியாக உருவாக்க முடியும். ஏறத்தாள இப்போதுள்ள நாடு கடந்த அரசு போல். ஆனால் யாராவது செய்யப் போனால் 'புலிகளே' எதிரியாக வருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

உருவாக்கலாம் 
அதற்கு முன்முயற்சியாக google mapபை பவிக்காமல் நாமே ஒரு  GPS map உருவாக்கி மாவீரர் துயிலுமில்லாம் போல் வடிவமைத்து உலகில் உள்ள அனைத்துச் சொந்தங்களையும் இணைத்து மிகப்பெரிய  மாவீரர் நினைவெழிர்ச்சி நாளைக்கொண்டாடினால் ஆரம்பப்புள்ளியாக இருக்கும்.

தவிர நாமே ஒரு மெற்றாவேஸஸ் கிரிப்டோ நாணயத்தை இறக்கினால் பலமடங்கு பலம் பெறலாம்.
பல நிறுவனங்கள் தனிப்பட்டவர்களது நாணயங்களை உருவாக்க ஆயத்தமாகி இருக்கின்றன ஆனால் சிக்கல் நம்பிக்கைத்தன்மையே. 

ஸ்பெயினில் சில கிராமங்கள் கைவிடப்பட்ட நிலையில் பாடசாலை நீவீழ்ச்சி பண்ணைகள் தெருக்கள் தேவாலயங்கள் உள்ளடங்கலாக விற்பனைக்குள்ளதாக ஓரிரு வருடங்களுக்குமுன்பு செய்தியில் அறிந்தேன் அவைகளை வாங்கினால் எமக்கான தற்காலிகமான ஐரோப்பிய சட்டதுட்டங்களுக்கு அமைவாகச் செயற்படும்விதமான தமிழ் கிராமங்களை உருவாக்கலாம்.

இதற்கான முதற்படியாக கிரிப்டோ நாணயங்களை உருவாக்கி அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் எதுவும் செய்யலாம். ஆனால் என்ன புலிகளது சொத்துக்களை ஆட்டையைப்போட்டு தலைவர் சொல்லட்டும் அதை நான் உங்களிட்டைத் தாறன் எனும் போக்கிலிகள் வாழும் எமது தமிழ் சமூகத்தில் நடக்கக்கூடிய விடையங்கள் இவை அல்ல.

ஸ்பெயின் இன் தற்போதைய  வரலாறு தெரிந்து  பேசுகிறீர்களா என்பது தேரியவில்லை?

(ஐரோப்பிய சட்டத்திற்கு  ஏற்ப நடந்த பார்சலோன் போராட்டத்தை  எப்படி  அடக்கி  வைத்திருக்கிறார்கள்?)

மற்றது  போக்கிலிகள் பற்றியது

எதையாவது  செய்ய வேண்டுமே  தவிர அதற்கு  நாமே காரணங்களை  சோடிக்கக்கூடாது

அவ்வாறு  சோடித்தால் எமக்கே அச்செயலில் நாட்டமில்லை  அல்லது சந்தேகம்  இருக்கிறது  என்று  தான்  அர்த்தமே தவிர செய்யமுடியாது  என்று   பொருள்  அல்ல.😭

Link to comment
Share on other sites

53 minutes ago, இணையவன் said:

நானும் முன்பு நினைப்பதுண்டு. ஒரு சதுர அடி நிலம் உலகில் எங்காவது தனி அரசு அமைப்பதற்கு அல்லது அப் பிரதேச சட்டத்துகு உட்பட்ட விதத்தில் ஒரு நுண் கிராமகாக உருவாக்கக் கூடியதாக இருந்தால் மீதியை உலகெங்கிலும் வாழும் தமிழர்களை இணைத்து மாபெரும் சக்தியாக உருவாக்க முடியும்.

வெண்ணை கையிலிருக்க நெய்க்கு உலகமெல்லாம் அலையும் அன்புக் கள உறவுகளே! எங்கள் நித்தியானந்த சுவாமிகளை மறந்ததென்ன.... எங்களுக்கு எந்தச் செலவுமின்றித் தனி நாடமைக்க இந்தச் சுவாமியை நாடினால் போதுமே.

நித்தியானந்தா சுவாமிகள் ஒரு தமிழரல்லவா அவர் தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஈக்குவடார் நாட்டின் அருகே உள்ள ஒரு தீவில் தனது பக்த பரிவாரங்களுடன் தங்கியுள்ளார், அதனருகில் உள்ள தீவை விலைக்கு வாங்கி தனி நாடு நிறுவவுள்ளதாக கருதப்படுகிறது.

Paramhamsa Nithyananda.jpg

Link to comment
Share on other sites

ஒரே ஒரு டவுட்டு இதில்.

இந்த சாந்தி முகூர்த்தம் / முதலிரவு எல்லாம் இப்படி மாயவுலகிலா நடக்கும்? ( நிழலி, நெல்லை காலமடா  நீ 18 வருடங்களுக்கு முன்னே கலியாணம் கட்டியது)🏃‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

ஒரே ஒரு டவுட்டு இதில்.

இந்த சாந்தி முகூர்த்தம் / முதலிரவு எல்லாம் இப்படி மாயவுலகிலா நடக்கும்? ( நிழலி, நெல்லை காலமடா  நீ 18 வருடங்களுக்கு முன்னே கலியாணம் கட்டியது)🏃‍♂️

நன்றி! உண்மைதான், என்றாலும் சிரி சிரியென்று சிரித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

ஒரே ஒரு டவுட்டு இதில்.

இந்த சாந்தி முகூர்த்தம் / முதலிரவு எல்லாம் இப்படி மாயவுலகிலா நடக்கும்? ( நிழலி, நெல்லை காலமடா  நீ 18 வருடங்களுக்கு முன்னே கலியாணம் கட்டியது)🏃‍♂️

என்ன கேள்வி இது குழந்தை பிள்ளைகள் மாதிரி.😂 இதுவரை நடந்தபடி தொடரும் 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தனிமனிதன் வாழ்விலும் அவனுக்கு இரண்டு ஊர்வலங்கள் என்று சொல்வார்கள்,

ஒன்று கல்யாண ஊர்வலம், இரண்டு இறுதி ஊர்வலம்.

அந்த இரண்டிலும் ஒன்றே ஒன்றை மட்டும்தான் அவன் நேரடியாக பார்க்கமுடியும். கல்யாணம் என்பதை பெரும்பாலானவர்கள் ஊரறிய சுற்றம் சூழ கொண்டாடுவதற்கு காரணமே அவனது இறுதிக்காலம்வரை மனசில் ஞாபகம் வைத்திருக்கபோகும் வாழ்வின் இனிமையான தருணம் அது.

அதனை விஞ்ஞானவழி மூலம் விருந்து வைத்து கொண்டாடினால் அறிவியல் ரீதியாக அவர்கள் திறமையை நிரூபிக்கலாம் ஆனால் ஆத்மார்த்தமான ரீதியாக வாழ்நாள் முழுவதும் அந்த வசந்தத்தை கொண்டாட முடியாது.

இவ்வகை திருமணங்கள் அறுசுவை உணவை திரையில் பார்ப்பது போலத்தான் தொட்டுரணவும் முடியாது சுவைக்கவும் முடியாது. 

12 hours ago, இணையவன் said:

முருகன் மாங்காய்க்காக உலகத்தை மயிலின் முதுகில் ஏறி வலம் வந்தார்

என்னது மாங்காயா?😮 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

ஒரே ஒரு டவுட்டு இதில்.

இந்த சாந்தி முகூர்த்தம் / முதலிரவு எல்லாம் இப்படி மாயவுலகிலா நடக்கும்? ( நிழலி, நெல்லை காலமடா  நீ 18 வருடங்களுக்கு முன்னே கலியாணம் கட்டியது)🏃‍♂️

ஆமாம்
இதில் மணமக்கள் மாத்திரமல்ல திருமணத்தில் கலந்து கொண்டவர்களும் கட்டாயம் சாந்தி முகூர்த்தத்தில் ஈடுபட வேண்டும்.

எல்லோருக்குமே சாந்தி முகூர்த்தம் என்றால் அது சாதாரண நிகழ்வாக மாறிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

ஆமாம்
இதில் மணமக்கள் மாத்திரமல்ல திருமணத்தில் கலந்து கொண்டவர்களும் கட்டாயம் சாந்தி முகூர்த்தத்தில் ஈடுபட வேண்டும்.

எல்லோருக்குமே சாந்தி முகூர்த்தம் என்றால் அது சாதாரண நிகழ்வாக மாறிவிடும்.

எப்ப பார்......எங்களுக்கு அதிலைதான் கண் 😎

புதுமண தம்பதிகள் தாம்பத்தியத்தில் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?..! -  Seithipunal

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

ஆமாம்
இதில் மணமக்கள் மாத்திரமல்ல திருமணத்தில் கலந்து கொண்டவர்களும் கட்டாயம் சாந்தி முகூர்த்தத்தில் ஈடுபட வேண்டும்.

எல்லோருக்குமே சாந்தி முகூர்த்தம் என்றால் அது சாதாரண நிகழ்வாக மாறிவிடும்.

ம்.....இதிலையாவது அதை தப்பு தவறு இல்லாமல் சரியாக கொண்டாட வேணும்......கொஞ்சம் சறுக்கினாலும் ஒன்ஸ்மோர் கேட்கலாம் ........!   😂

Link to comment
Share on other sites

12 hours ago, ஈழப்பிரியன் said:

மணமக்கள் மாத்திரமல்ல திருமணத்தில் கலந்து கொண்டவர்களும் கட்டாயம் சாந்தி முகூர்த்தத்தில் ஈடுபட வேண்டும்.

ஈழப்பியரே உங்களுக்கு இந்த எண்ணங்கள் ஏற்படக் காரணம் என்னவென்று புரிந்துகொண்டேன். நீங்கள் ஒரு ஞானி. மந்திரங்கள் என்ற பெயரில் பார்ப்பணர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்கள் திருமண நிகழ்வுகளை அசிங்கப்படுத்தி வருவதை வெளிப்படுத்தும் ஒரு முயற்சி போல் தோன்றுகிறது.

இங்கு நான் படித்தறிந்ததை உங்களுக்கும் தெரிவிக்கிறேன் அவ்வளவே.

ண்மையில் ஒரு சமூகப் போர் நிகழ்ந் தது; அறிவீர்கள்! தி.மு.கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின், என்றோ பேசிய பேச்சை மீள்கொண்டுவந்து, “ஹிந்துக்களின் புனிதமான திருமணமுறையை அசிங்கப்படுத்தி, உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார்என்று குமுறினார்கள் சமூகத்தில் ஒரு சிலர். சுமந்தராமன் என்ற நடுநிலைஊடகரும், கஸ்தூரி என்ற மாதரசிநடிகையும் அவர்களுள் முதன்மை யானவர்கள்.

அவர்களை ஆதரித்தும்/மறுத்தும், பலர் களம் குதித்து வினையாற்றினர். குறிப்பாக, ஹிந்து மதம் சார்ந்த கட்சிகளும், சில சாதிக் கட்சித் தலைவர்களும், காங்கிரஸ் கட்சியின் அமெரிக்காய்நாராயணன் என்பாரும், அதிமுக-வின் நமது புரட்சித்தலைவி அம்மாஎன்ற நாளேடும், தன் பன்னாள் ஆராய்ச்சியுழைப்பால், உலகிலேயே ஜாதிக்கு DNA Strand Model கண்டுபிடித்த முதல் விஞ்ஞானியுமான, தமிழ்நாட்டு அரசின் சம்ஸ்கிருத வளர்ச்சித் துறை அமைச்சர், மாண்புமிகு மாபா பாண்டியராஜன் அவர்களும், மு.க.ஸ்டாலினுக்குக் கண்டனக் குரல் எழுப்பினர்.

ஸ்டாலின் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமானால், திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணியோடு உறவு அறுத்துக் கொள்ள வேண்டும்என்று முழங்கினார் அமெரிக்காய்.

ஹிந்து மதத்தை என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை இனி கிடையாது; ஸ்டாலின் பொது இடத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும்என்று முழங்கினார், ஸ்ரீலஸ்ரீ மாபா பாண்டியராஜன். இப்படி, எண்ணெய்த் துணியில் நெருப்பு பிடித்துக் கொண்டாற் போல், கருத்துக்களம் தீப்பற்றிக் கொண்டது.

இன்னும் சில நடுநிலையாளர்கள், “மு.க.ஸ்டாலினுக்குச் சம்ஸ்கிருத மொழி தெரியாததால், மந்திரங்களைத் தவறாகப் புரிந்து கொண்டார். இதோ பரம பவித்திரமான உள்ளர்த்தம் / வெளியர்த்தம்என்று கல்யாண மந்திரங்களுக்குப் பொருள் கூறவும் முனைந்தார்கள். ஆனால், ஆனால்.. போதாக் காலம், அவர்களே போற்றி வணங்கும் ஹிந்து மஹாகுரு ஒருவர் மூலமாகவே வந்து இடித்தது!

மு.க.ஸ்டாலின் சொன்ன பொருள் சரியேஎன்று 12ஆம் நூற்றாண்டு ஸ்ரீவைஷ்ணவ மஹாகுரு, ஸ்ரீ ராமானுஜருக்கே குரு, ஆளவந்தார் வாதிட்டார்! தன் சேக்காளிகளே தன்னைவிட்டு ஓடிவிட, தனியாக மாட்டிக் கொண்டு நிற்கும் வடிவேலு போல், ‘வேணாம்; அழுதுருவேன்என்று விழிபிதுங்கியது பக்தர்களின் கூட்டம்!

அப்படி என்ன தான் இருக்கு, அந்தக் கல்யாண மந்திரத்தில்? அப்படி என்ன தான் சொன்னார் அந்த மஹாகுரு? திராவிடத்தின் போலிப் பரப்புரைகளை நம்பாது, நாமே களமிறங்கி, ‘வரிக்கு வரிபார்த்து விடுவோமா? வாருங்கள்! தமிழ் சம்ஸ்கிருதம் இரு மொழிகளுமே அறிந்த Academician என்பதால், சாந்தோக்ய உபநிஷத் / சாம வேதம் அறிந்த என்னோடு, அஞ்சாது படகிலேறுங்கள்!:)

இன்று பெரும்பாலான ஹிந்து வீடுகளில், பிராமணப் (பார்ப்பனப்) புரோகிதர் சொல்லும் விவாஹ (கல்யாண) மந்திரங்கள், ருக் (ரிக்) வேதத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை. ஸூர்யா என்கிற ஒரு தேவப் பெண்ணுக்கு, ஒன்றன் பின் ஒன்றாக, பல தேவர்களுடன் கல்யாணம் நடத்தி வைத்த போது, சொல்லப்பட்டவை அவை! அதையே, இன்று எல்லா மணமக்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.

தாலி என்பது தமிழ்ச் சொல்; தாலம் = பனை ஓலையைக் (இழை) குறிக்கும். பனை, தமிழ் நிலத்தின் மங்கலம் ஆதலால், திருமண நிகழ்வின் ஒருநாள் மட்டும், அதை மணமக்கள் இருவருக்குமே அணிவிப்பது மங்கல வழக்காக இருந்தது. (காண்க: அகநானூறு 136, விற்றூற்று மூது எயினனார் எழுதிய மைப்பு அறப் புழுக்கின்என்று தொடங்கும் திருமணப் பாடல்; மழை பட்டன்ன, மணல் மலி பந்தர், “இழை அணி சிறப்பின்” – பெயர் வியர்ப்பு ஆற்றி, தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்”);

தாலிப் பனையோலை, நாட்பட நாட்படக் கிழிந்து விடும். அதற்கென்று எந்த sentiment-உம் இல்லை! வெறுமனே ஒருநாள் மங்கலம் அது! ஆண்களுக்கும், ஐம்படைத் தாலி உண்டு! வைதீக பிராமணீயம், தென்னகக் குடிகளில் கலந்தபோது, இந்த ஒருநாள் தாலி வழக்கத்தைத் திருடி, அதற்குச் சுமங்கலி sentiment பூசி, புதிதாய் மாங்கல்யம் தந்துஅநேனாமந்திரம் உருவாக்கி, பனைத் தாலியைத் தங்கத்தில் ஆக்கி, அதையும் பெண்ணுக்கு மட்டுமே ஆக்கி, பெண்ணை வாழ்நாள் சுமைதாங்கி ஆக்கியது!

மாங்கல்யம் தந்து = தாலிக் கயிற்றினை

அநேனா மம ஜீவன ஹேதுனா = நான் பல நாள் வாழ வேண்டி

கண்டே பத்நாமி = (உன்கழுத்தில் கட்டுகிறேன்

சுபகேத்வம் ஜீவசரதஸ் சதம் = சுமங்கலியேஉன்னால்என் ஆயுள்100 பலம் ஆகவேண்டும்!

நன்கு உற்றுப் பாருங்கள்! ஆணாகிய நான் வாழஎன்று தான் இருக்கும்; ‘நாம் வாழஎன்பதே இருக்காது! பெண்ணாகிய உன்னால், ஆணாகிய நான் சுகப்படவே, இந்தக் கல்யாணம்! அதுவே வைதீகம்!

மேற்படி கல்யாண ஸ்லோகம் எந்த வேதத்திலும் இருக்காது; ஏனென்றால் அது வேதச் சடங்கே இல்லை; தென்னகத்தில் திருடப்பட்ட சடங்கியல்! உங்களை, வைதீக மதத்துக்குக் கவரவேண்டி, பின்னாள் ஒட்டுவேலை! தென்னக மக்களுக்கு, தாலி கட்டுதலே முக்கியமான சடங்காய்ப் பட்டாலும், வைதீகத் திருமணத்தில் அதற்கு மதிப்பே இல்லை! அக்னி வலமும், சப்த பதியும் தான் வேதப் பிரதானம்! இன்றும், The Hindu Marriage Act – 1955 சட்டப்படி, Section 7 சொல்வது:  “A Hindu marriage can be duly performed in accordance with ceremonies that include the Saptapadi, i.e. taking of seven steps jointly before the sacred fire. If Saptapadi is included in the rites and ceremonies, then the marriage becomes complete and binding when the seventh step is taken”.

கல்யாண மந்திரங்களில், தாலி முக்கியமல்ல, வேதமே முக்கியம் என்று பார்த்தோம் அல்லவா? அந்த வேத மந்திரத்துக்குப் பொருள் அசிங்கமானதா? என்றும் பார்த்து விடுவோம். இதோ, மந்திரங்கள்! சம்ஸ்கிருத பாஷையில் அப்படியே கொடுத்துள்ளேன்; அம்மொழி அறியாதோர், நம்முடைய தமிழில் வாசித்துக் கொள்ளவும்.

ருக் வேதம், 10ஆம் மண்டலம், 7ஆம் அனுவாகம், 85ஆம் சூக்தம்.

சோம பிரதமோ விவிதேகந்தர்வோ விவித உத்தரஹ;

திரிதீயோ அக்னிஇஷ்டேபதிஸ்தூரி யஸ்தே மனுஷ்யஜாஹ்!

சோமோ ததாத்கந்தர்வாயகந்தர்வோ ததாத் அக்னயே;

ரயிம்  புத்ராம் ஸ்சாதாத் அக்னிர்மஹ்யமதோ இமாம்!

மேற்படி மந்திரத்தைத் தான், “நீங்கோ தப்பா புரிஞ்சுண்டேள்! மந்திரத்தில் வருவது, பெண்ணைக் காப்பவன்என்ற பொருளில் தான்; கணவன் காப்பதற்கு முன்பே, தேவதைகள் 3 பேர் பெண்ணைக் காக்கிறார்கள்என்றெல்லாம் தங்களுக்கே சம்ஸ்கிருதம் தெரியாவிட்டாலும், சமாளி-fication செய்கிறார்கள். ஆனால், அந்த மந்திரத்தில் வருகிறதே, ‘விவித / இஷ்டஎன்னும் சொல்? அதன் அர்த்தம்என்ன? என்று வினவுங்கள், ஓடி விடுவர்.

சோமபிரதமோ விவிதே இஷ்டே = சோமன்முதலில்பலவிதமாக அவளை அனுபவிக்கிறான்

கந்தர்வோஉத்தரஹ விவித இஷ்டே = கந்தர்வன்அடுத்துபலவிதமாக அவளை அனுபவிக்கிறான்

அக்னிதிரிதீயோ இஷ்டே = அக்னிமூன்றாவதாகஅவளை அனுபவிக்கிறான்

மனுஷ்யஜாஹ்பதி ஸ்தூரி யஸ்தே = மனிதன்இவளின் ஆண்டையாகஇறுதியாக இழுக்கப்படுகிறான்!

அருஞ்சொற்பொருள்:

சோம = சோம தேவன் (சந்திரன் அல்லது சோமபான வஸ்து தேவன்)

பிரதமோ = முதலில்

விவித = பல விதமாக

இஷ்டே = இஷ்டப் படுதல்

கந்தர்வ = கந்தர்வ தேவன்

உத்தரஹ = அடுத்ததாக

விவித = பல விதமாக

இஷ்டே = இஷ்டப் படுதல்

அக்னி = அக்னி தேவன்

திரிதீயோ = மூன்றாவதாக

இஷ்டே = இஷ்டப் படுதல்

மனுஷ்ய அஜா = மனிதனாகப் பிறந்தவன்

பதி = ஆண்டை / Master / Lord

ஸ்தூரி = இழுக்கப்பட்டு

யஸ்தே = இப்படியாக!

இப்போது வரிக்கு வரிவிளங்குகிறது அல்லவா? இஷ்டம், விவிதம், ஸ்தூரி என்பதையெல்லாம் நைசாகமறைத்து, குத்துமதிப்பாக ஒரு பொருள் சொல்லிக் கொள்வார்கள், தங்கள் வசதிக்கு; ஆனால் குத்துக்கு என்ன மதிப்பு? இவர்களுக்கு விழும் குத்து தான் மதிப்பு. பதி என்றால் கணவன் மட்டுமே அல்ல, காப்பாளன் என்றும் பொருளாச்சே என்றெல்லாம் பிதற்றுவார்கள். பதிக்கு ஒரே பொருள் தான் = ஆண்டை! (Lord, Master); பெண்ணுக்கு ஆண்டை யார்? அவளை ஆள்பவன்; கணவனோ அல்லது தேவனோ யாரானாலும்; அவ்வளவே!

நமக்குப் புரிகிறது இவர்களின் கஷ்டம்’! பாவம், எவ்வளவு தான் முட்டுக் கொடுக்க முடியும்? அந்நாளில் அசிங்கமாக எழுதி வைத்து விட்டார்கள்; ஆனால் இன்று அதைத் தூக்கி எறியவும் முடியாது! வேதமே, வைதீக தர்மத்துக்குப் பிரதானம். அதை எப்படித் தூக்கி எறிவது? ஸோமன், மித்ரன், அஸ்வின், சவித்ரு..  தங்களின் பழைய கடவுள்களையே தூக்கி எறிந்த கூட்டம், வேதத்தை மட்டும் தூக்கி எறியவே எறியாது! ஏனெனில், வேதமே = ஜாதிக்குப் பிரதானம்!

பகவான் முக்கியமா, ஜாதி முக்கியமா? என்றால், ஜாதியே முக்கியம்! ஹிந்து ஞான மரபில் மட்டும் தானே,பகவானை நம்பாதவன் கூட ஆஸ்திகன்; வேதத்தை மறுப்பனே நாஸ்திகன் என்று சொல்லி வைத்துள்ளார்கள்? அதான், தங்கள் ஜாதி வாழ வேண்டி, தங்களின் பழைய பகவான்களைப் பலி கொடுத்து, ஆதிகுடிகளின் நடுகல் தொன்மங்களான முருகன் திருமால் கொற்றவையை, புது பகவான்களாக ஆக்கிக் கொண்டார்கள்! பகவான் யாராயினும் பரவாயில்லை; ஆனால் பகவானுக்கு வழிசொல்லும் அதிகாரம் = நம் ஜாதிக்கே! இஃதே வைதீகம்!

சேச்சே! இதெல்லாம் திராவிடவாதம்; பொய்ப் பித்தலாட்டம் என்று நம்மை மறுக்கலாம்; ஆனால், அந்தோ பரிதாபம், அவர்களின் மஹா ஆசார்ய புருஷர்களே, இந்த ஸ்லோகங்களுக்கு அர்த்தம்எழுதி வைத்துவிட்டுப் போயுள்ளார்கள். குருவை எப்படி மறுப்பது? அபச்சாரம் அல்லவா! சாயனர், கல்யாண மந்திரங்களுக்கு எழுதிய உரையைப் படத்தில் பாருங்கள்! ஸ்ரீ சாயனர் = திராவிட இயக்கமா என்ன?:)

உண்மை என்னவென்றால், பெண்ணை = ருதுப் பொருளாக / போகப் பொருளாக மட்டுமே பார்த்த அசிங்கம்!:(

அதை நான் என் வாயால் சொல்லக் கூச்சமாக உள்ளதால், இதோ இச் சுட்டியில் அறிந்து கொள்க! திராவிடச் சுட்டி அல்ல; பகவத் கீதா சுட்டி தான்!

Woman & Her 4 Serial Husbands = https://www.bhagavadgitausa.com/woman_and_four_serial_husbands.htm

ஒரு கதை சொல்கிறேன், கேட்கிறீர்களா? சுவையான கதை தான்!:)

தென்கலை வைணவத்தில் ஓர் கலகக் குரல் எழுப்பிய இராமானுசர்! அவரின் குரு, யமுனைத்துறைவன் என்கிற ஆளவந்தார்! அவர் கல்வி பயின்று வந்த காலத்தே, அரசவையிலிருந்து ஒர் ஓலை வந்தது. அதில், அரசவைக்கு வந்து, ஆக்கியாழ்வான் என்ற பண்டிதனை வாதில் வெல்ல வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. சென்றார்!

அவைக்கு வந்திருந்த அரசி, அங்கு சிறுபிள்ளையாக அமர்ந்திருந்த யமுனைத்துறைவன் என்கிற ஆளவந்தார் அழகிலே/ முகவொளியிலே (தேஜஸ்) மயங்கி, “இப்பையன் நிச்சயம் வெல்வான்என்று அரசனிடம் கூறினாள். ஆனால் அரசனோ, “இவன் சிறுபிள்ளை; மிகுந்த பண்டிதரான ஆக்கியாழ்வானிடம் தோற்றுவிடுவான்; இல்லையேல், நாட்டில் பாதியை ஆளவந்தாருக்குத் தருகிறேன்எனக் கூறினான். பதிலுக்கு அரசியும், “இவன் தோற்றால், அந்தப்புரத்திலே சேடியாய்ச் சேவைசெய்வேன்என்று விளையாட்டாகச் சூள் வைத்தாள்!

சொற்போர் தொடங்கியது! ஆக்கியாழ்வான் கேட்ட அத்தனை வினாக்களுக்கும் விடை பகன்ற ஆளவந்தார், பதிலுக்குத் தாமும் 3 கூற்றுகளைக் கூறுவதாகவும், அவற்றை ஆக்கியாழ்வான் மறுக்க வேண்டும் என்றும் கூறினார். “1. உமது தாய் மலடி அல்லள், 2. இந்த அரசன் தர்மவான், 3. இந்த அரசி பத்தினிப் பதிவிரதைஎன்று 3 கூற்றுகளைக் கூறி, அவற்றை மறுக்கச் சொன்னார்.

கதி கலங்கி விட்டான் ஆக்கியாழ்வான்! அரசியைப் பத்தினி அல்ல என்று எப்படி மறுப்பது? “சரி, உங்களால் மறுக்க முடியுமோ?” என்று ஆளவந்தாரையே கேட்க, அவர் பின்வருமாறு மறுத்தார்.

ஆக்கியாழ்வான் தன் தாய்க்கு ஒரே மகன். ஒரே பிள்ளை பெற்றவள், சாஸ்திரப் படி மலடியே. அக்குழந்தைக்குத் துர்மரணம் நேர்ந்தால், அவளைத் தாயென்று கொண்டாட வேறு பிள்ளைகள் இல்லாததால் சாஸ்திரம், அவளை மலடி என்று சொல்லிற்று. எனவே, உனது தாய் மலடியே!

அரசன் தர்மவானாக இருந்தாலும், குடிமக்கள் செய்யும் பாவங்கள், சாஸ்திரப் படி அரசனையே சேரும். எனவே, இந்த அரசன் முழுக்க முழுக்கத் தர்மவான் அல்லன்!

ஒவ்வொரு கல்யாண வைபவத்திலும், சாஸ்திரப்படிச் சொல்லும் வேத மந்திரங்களில், சோம பிரதமோ என்ற ஸ்லோகம் முதன்மையானது! மணமகளாகிய இவளை, சோமன், கந்தர்வன் மற்றும் அக்னி ஆகிய மூன்று தேவர்கள் இஷ்டமாக அனுபவித்த பின்னரே, நான்காவதாக அவர்களிடமிருந்து மணமகன் பெற்று அனுபவிக்கிறான் என்று சாஸ்திர நிர்ணயம் இருக்கிறது! எனவே, இந்த அரசி எப்படிப் பத்தினி ஆவாள்?”

இப்படி, சாஸ்திரப்படி வாதம் செய்தால், மறுக்க முடியுமே?” என்று சொன்னதும், அவரின் சாஸ்திர ஞானத்தை மெச்சித் தோல்வியை ஒப்புக் கொண்டான் ஆக்கியாழ்வான்! சாஸ்திரம் என்பதால், அரசனும் அரசியும் கோபம் கொள்ளவில்லை; மாறாக, அவரின் ஞானத்தை மெச்சி, நீர் எம்மை ஆள வந்தீரோ? என்று கண்ணீர் வடித்தாள். அன்றிலிருந்து, ஆளவந்தார் எனும் பெயரும் அவருக்கு வழங்கலாயிற்று!

எப்படி இருக்கு கதை?:) திராவிடம் எழுதிய கதை அல்ல! சாட்சாத், ‘குரு பரம்பரா பிரபாவம்என்று வைணவ உலகம் கொண்டாடும் புனித நூலில் உள்ளது, இக் கதை!

இதில், ஜகத்குருவான ஆளவந்தாரே, கல்யாண மந்திரங்களுக்கு என்ன பொருள் சொல்கிறார் பாருங்கள்! ஆனால், இன்று குருவையே மீறலாமோ.. பொய்யாகப் பொருள் ஜோடிக்கும் சுமந்தராமன், கஸ்தூரி, அமெரிக்காய் நாராயணன் & மாபியா பாண்டியராஜன்? குருவை மீறின ஆசார்ய பாபம்வந்து சேராதோ? குருவை விடவா, இந்த Half Baked மண்டையர்கள் பெரியவர்கள்.. சாஸ்திர நுட்பத்தில்?:)

அறிக: இவர்களுக்குச் சாஸ்திரம் ஒன்றும் தெரியாது! ஆனால், அறியாமலேயே உள்ளூற மதப் பாசம்/ மத வெறி! இந்தக் காலத்துக்கு, அந்தக் கால மந்திரம் அசிங்கமாய் உள்ளது; அதனால் கூச்சத்தால் நெளிந்து, மாற்றிப் பொருள் சொல்லத் துடிக்கிறார்கள் அவ்வளவே! அசிங்கம் தான்! ஆனால் அசிங்கத்தை, அசிங்கம் என்று சொல்லாதே, அழகு என்று சொல்!என்பது இவர்களின் எதிர்பார்ப்பு. The Emperor & The New Clothes கதையில் வருவது போல், மன்னர் ஆடையில்லாமல் வந்தாலும், ஆகா என்ன அழகான உடுப்பு, என்று சொல்ல வேண்டுமாம்!

சரி, இன்னும் ஒரேயொரு ஸ்லோகத்தைப் பார்த்துவிட்டு, கல்யாணக் கச்சேரியை முடித்துக் கொள்ளலாமா?:)

என்ன சொல்கிறார்கள், இந்தப் போலிப்பொருள் மதவெறியர்கள்? சோமன், கந்தர்வன், அக்னி 3 பேரும் பெண்ணை வெவ்வேறு பருவகாலங்களில் பாதுகாக்கிறார்கள் என்பது தானே இவர்களின் திரிபு வாதம்? ஏன், ஆணைப் பாதுகாக்கமாட்டார்களாமா, இந்தத் தேவர்கள்?:) Hormone-களால் உடல் சூடு ஏற்படும் மூன்றாம் பருவகாலத்தில், பெண்ணைப் பாதுகாக்கவே இந்த மந்திரம் என்கிறார்களே? எனில், சூட்டைக் குறைக்க அக்னியிடமா முறையிடுவது? குளிர்ச்சியான சோமனிடம் (சந்திரன்) தானே முறையிட வேண்டும் மூன்றாம் பருவத்தில்?:) இவர்களின் பொய்ம்மை, இவர்களின் குட்டையே உடைத்துவிடும்! பொய்யைப் பொருந்தச் சொல்வதென்பதே தெரியாதே, புராணக்காராளுக்கு!

ஒரு வளரும் பெண்ணுக்கு, அவள் தந்தையே கதாநாயகன்! அப்பா தராத பாதுகாப்பா, சோமன் தந்து விடுவான்? அம்மா-அப்பா பெற்று வளர்க்கப் படும் பாடுகளை, சற்றேனும் மதித்து, அவர்களையும் மந்திரத்தில் வாழ்த்தலாமே? 1. சோமன், 2. கந்தர்வன், 3. அக்னி, 4. அப்பா, 5. கணவன் என்று வரிசை இருந்தாலும், சரி ஏதோ பாதுகாப்பு மந்திரம் என்று நம்பித் தொலைக்கலாம்! பெண்ணின் அப்பாவை விலக்கிவிட்டு, வேறு 3 ஆண்களும், பிறகு கணவனும் என்றால், இவர்களின் அசிங்கம் இடிக்கிறது அல்லவா? Logic உடைகிறது அல்லவா?

பெண்ணை, தேவர்கள் வெறுமனே பாதுகாக்கிறார்கள் எனில், அடுத்தடுத்த ஸ்லோகங்கள், “இவளை விட்டுவிட்டு, வேறு யாராவது பெண்ணை இச்சைப்படுத்திக் கொள்!என்று சொல்வானேன்? அசிங்கம் தானே?

உதீர்ஷ்வாதோ விஸ்வவாசோநம ஸேடா மஹேத்வா!

அந்யாம் இச்ச ப்ரபர்வ்யம்சம் ஜாயாம் பத்ராஸ் ச்ருஜ! (ருக் வேதம் 10-85)

ஹே விஸ்வவாசு எனும் கந்தர்வனே, எழுந்திரு! வணங்குகிறேன், இவளை விட்டுவிடு! வேறு யாராவது பெண்ணை இச்சைப் படுத்திப் பிடித்துக் கொள்! நான் கல்யாணம் செய்யப் போவதால், இவளை என்னிடமே விட்டுவிடு!

உதீர்ஷ்வாத பதிவதீஹ்யேஷா விஸ்வவாசும்நம சாகீர்பிரிடே!

அந்யாம் இச்ச பித்ரசதம்வ்யக்தாம்  தே பாகோஜனுஷா தஸ்ய வித்தி! (ருக் வேதம் 10-85)

இவள் உடம்பில் வசிக்கும், விஸ்வவாசு எனும் கந்தர்வனே, எங்கள் கட்டிலை விட்டு எழுந்திருடா! உன்னை வணங்குகிறேன், இவளை விட்டுவிடு! திருமணம் ஆகாமல், தகப்பன் வீட்டிலேயே இருக்கும் வேறு யாராவது பெண்ணை இச்சைப்படுத்திப் பிடித்துக்கொள்! எங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதல்லவா? இனி, இவளை விட்டுவிடு!

சோம பிரதமோ மந்திரங்களுக்கு, பெண்ணின் பருவகாலங்களில் பாதுகாக்கிறான் என்று பொய் சொன்னவர்கள், இந்த மந்திரங்களுக்கு என்ன சொல்ல முடியும்? நேரடியாக இருக்கிறதே, இவளை விட்டுவிடு, என்று? அசிங்கத்துக்கு, ஓரளவு தான் முட்டுக் கொடுக்க முடியும்! சாக்கடையில், எத்தனை மல்லிப்பூ தான் கொட்டி, தீ மணத்தைக் குறைக்க முடியும்? இனியும் வேண்டாம், இந்த அவலம்!

எப்படி, உங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்கள் வைக்கத் துவங்கி விட்டீர்களோ,

போலவே, தமிழ் / தன்மானத் திருமண முறைக்கு மாறி விடுங்கள்!

தமிழ்த் திருமணம் செய்வது எப்படி? – மொழிஞாயிறு பாவாணரின் நூலில் காணுங்கள்!

அதையும் தன்மானத் (சுயமரியாதை) திருமணமாய்ச் செய்வது எப்படி? – பெரியாரின் நூலில் காணுங்கள்!

திருமணம் என்பது, நாம் காலமெல்லாம் அன்பு செலுத்தி வாழும் மானம்! அந்த மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்! அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது!

வள்ளுவமாம் திருக்குறள் ஓதி,

இயற்கை போற்றி,

மங்கல விளக்கு சூழ, மாலை தவழ,

சான்றோர் வாழ்த்தளிக்க,

அதையும் நமக்குப் புரியும் மொழியிலே வாழ்த்தளிக்க,

இருவருமே மணவுறுதிமொழி ஏற்க,

மாலை மாற்றி,

தாலியோடோ (அ) தாலி இல்லாமலோ,

தாலியோடு எனின், பெண்ணுக்கு மட்டுமில்லாமல், ஆணுக்கும் ஏதோவோர் அடையாளம் அளித்துச் சமன்மை பேணி,

மகிழ் திகழ் இல்லறம் போற்றுவோம்!

அதான், தன்மானத் திருமணத்துக்கு (சுயமரியாதைத் திருமணத்துக்கு), சட்ட இசைவு (அங்கீகாரம்) பெற்றுத் தந்து விட்டார்களே நம் பேரறிஞர் அண்ணாவும், பெரியாரும்? இன்னும் தயக்கம் ஏன்?

இத்தனையும் தரவு காட்டிச் சொன்னது எதற்காக? பார்ப்பனீயம், தங்களின் பொய்யை ஒப்புக் கொள்வார்கள் என்பதற்காகவா? அல்ல! தரவுகளால், பார்ப்பனீயம் திருந்தியதாய் வரலாறே இல்லை! நம்மை நாமே திருத்திக் கொள்வது தான் ஒரே வழி! இது இடைவிடாத போர்!

எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்

பரவிக் கொண்டே இருக்க வேண்டும்

மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்

நாம் எழுதா விட்டால் பார்ப்பான் எழுதி விடுவான் (பொய்வரலாற்றை!

நாம் மாற்றா விட்டால் பார்ப்பான் மாற்றி விடுவான் Sentiment பீடித்த நம்மவரை!

நம்மவர்களை, நாம் மாற்றுவோம்! நீங்கள், உங்க சொந்தக்காரத் திருமணங்களுக்குச் செல்லும் போதெல்லாம்.. உங்கள் பக்கத்தில் அமர்ந்துள்ள இளம் நண்பரிடம் / தோழியிடம் பேச்சு கொடுங்கள்;

ஐயர் என்ன சொல்கிறார் தெரிகிறதா? என்று கேட்டு, இந்த ஸோம பிரதமோஊழலைச் சொல்லுங்கள், சற்று மென்மையாக!:) மணமக்களின் பெற்றோரைத் துன்புறுத்த வேண்டாம், பாவம் அவர்களுக்கே ஆயிரம் அல்லல் இருக்கும். சிரித்த முகத்துடன், அருகில் அமர்ந்திருக்கும் நட்பு/ சொந்தத்திடம் பேச்சுக் கொடுங்கள், இளவட்டப் பெண்கள்/ ஆண்களிடம்; ஓர் இளைஞர் மாறினால், ஒரு சமுதாயமே மாறிவிடும்!

யாரோயாரோடிஉன்னோட புருசன்?

ஸோமன்கந்தர்வன்அக்கினியா புருசன்?:)

வேண்டாம்வேண்டாம்டிபெற்றோரே காவலன்

காதல்காதல் தான்காதலிக்குப் புருசன்!

காதல் ஒருவனைக் கைப்பிடித்தே, நம் காரியம் யாவினும் கைக்கொடுத்து, “மானத் தமிழ்மாண்புடன் வாழ்வமடி!

கண்ணபிரான் ரவிசங்கர் (கரச)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்த வருணன், வாயுபகவான், அக்நி எல்லோரும் மணமகளுடன் பின்னிப்பிணைந்து அவளை அனுபவிப்பதுபோல் மணமகனுக்குள்ளும் பின்னிப் பிணைந்திருக்கின்றார்களே ஒருவேளை இவர்களெல்லாம் ஓரினசேர்கையாளராகவும் இருப்பார்களோ......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையோட கதையாக ஒரு முக்கியமான விடையம் இப்போது கிரிப்டோ நாணயத்தில் Shibnobi, (shinja) எனும் நாணையம் Shib inu க்கு ஈடாக முன்னேறும் வாய்ப்புள்ளது அதிக பட்சமாக மூன்று பூசியங்களைத் தாண்டினாலே போட்ட பணத்துக்கு பலமடங்கு காசைப்பார்க்கலாம் அதாவது இப்போ பதின்மூன்று பூச்சியங்களுக்கு அப்பால் நிற்கிறது (0.000000000000015) வாங்கிப்போட்டால் ஓரளவு இலாபம் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.