Jump to content

வடக்கு, கிழக்கு மக்கள் புதிய அரசியலமைப்பில் நாட்டம் காண்பிக்கவில்லை : மாறாக அபிவிருத்தியும் வாழ்வாதார வசதிகளுமே அவர்களது தேவைகளாகும் - மிலிந்த மொரகொட

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published by T. Saranya on 2022-01-24 16:27:32

(செய்திப்பிரிவு)

நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொள்ளும்போது அங்குள்ள மக்கள் அரசியலமைப்பில் நாட்டம் காண்பிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. மாறாக அபிவிருத்தியும் வாழ்வாதார வசதிகளுமே அவர்களின் தேவைகளாகக் காணப்படுகின்றன. எனவே அனைத்து அரசியல்கட்சிகளும் இதனை முன்னிறுத்தி செயற்படவேண்டியது அவசியமாகும் என்று இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டதிலிருந்து இந்தியாவுடனான நல்லுறவு தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்திவந்திருக்கின்றார் என்று தெரிவித்துள்ள அவர், இருநாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றுவதுடன் இருநாடுகளின் பொருளாதாரங்களுக்கு இடையிலான தொடர்பு மேலும் வலுவடையவேண்டும் என்பதே ஜனாதிபதியின் விருப்பம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழ்களில் ஒன்றான 'த இன்டியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு வழங்கியுள்ள விசேட நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அந்நேர்காணலில் உள்ளடங்கியுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

தற்போது இலங்கை இரண்டு பிரதான சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. வெளிநாட்டு நாணயமாற்று நெருக்கடி மற்றும் நிதி ரீதியான சவால் என்பனவே அவையாகும். கொரோனா வைரஸ் பரவல் இந்த நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையை ஓரளவிற்கு ஸ்திரப்படுத்துவதற்கு இந்தியா முயற்சிக்கின்ற போதிலும், நாம் இந்நெருக்கடிக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளை அடையாளங்கண்டு அவற்றை நிவர்த்திசெய்யவேண்டும்.

இவ்விடயத்தைக் கையாள்வதற்கு இந்தியா வழங்கிய உதவி என்று நோக்கும்போது, கடந்த டிசம்பர் மாதம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது 'நான்று அம்ச ஒத்துழைப்பு செயற்திட்டத்தை' நடைமுறைப்படுத்துவதற்கு இருதரப்பினருக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது. 

அதன்பிரகாரம் அண்மையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையில் நிகழ்நிலையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து உணவு மற்றும் மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை வழங்கும் அறிவிப்பு இந்தியாவினால் வெளியிடப்பட்டது. 

அதேபோன்று எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றி முன்னெடுத்துச்செல்வதற்கான ஒத்துழைப்பை வழங்கும் வகையில் அதற்காக 500 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்குவதாகவும் கடந்த புதன்கிழமை இந்தியாவினால் அறிவிக்கப்பட்டது. மேலும் பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையிலான கடனுதவி மூலம் நாட்டின் கையிருப்பை அதிகரிப்பதிலும் சுற்றுலாத்துறை உள்ளடங்கலாக நாட்டில் முதலீடுகளை உயர்த்துவதிலும் இந்தியா பங்களிப்புச்செய்திருக்கின்றது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டதிலிருந்து இந்தியாவுடனான நல்லுறவு தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்திவந்திருக்கின்றார். இருநாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றுவதுடன் இருநாடுகளின் பொருளாதாரங்களுக்கு இடையிலான தொடர்பு மேலும் வலுவடையவேண்டும் என்பதே ஜனாதிபதியின் விருப்பம் என்று கருதுகின்றேன். 

இருப்பினும் அவர் பதவியேற்றுக்கொண்டவுடன் கொரோனா வைரஸ் பரவல் பல்வேறு நெருக்கடிகளைத் தோற்றுவித்துவிட்டது. அதனைத்தொடர்ந்து இந்தியா இலங்கைக்குத் தடுப்பூசிகளை வழங்கியது. இந்தியாவினால் குறித்தவொரு கட்டத்திற்கு அப்பால் ஏற்றுமதி செய்யமுடியாமல்போகும் வரையில், எமக்கு ஆதரவளிக்கின்ற முதலாவது நாடாக இந்தியாவே இருந்துவருகின்றது.  

கேள்வி - இலங்கையைக் கடன்பொறிக்குள் சிக்கவைக்கும் வகையிலான சீனாவின் ஆதிக்கம் மற்றும் சர்ச்சைக்குரிய உரவிவகாரம் என்பன தொடர்பில் குற்றஞ்சாட்டி ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினரொருவர் அண்மையில் சீன ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். இவற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் இலங்கைக்குள் சீனாவிற்கு எதிரான நிலைப்பாடு தீவிரமடைந்துவருவதுபோல் தெரிகின்றதே?

பதில் - நான் அதனை அவ்வாறு நோக்கவில்லை. எமது (இலங்கையின்) சொத்துக்களில் சீனாவின் கடன்கள் வெறுமனே 10 சதவீதமானவையாகும். ஆகவே அது முக்கியமான, ஆனால் கட்டாயமற்றதோர் காரணியாகும். எமது சொத்துக்களில் பிரதானமானவை நாம் விநியோகித்த வெளிநாட்டு பிணைமுறிகள் ஊடாகத் திரட்டப்பட்ட வருமானங்களாகும். எனவே ஒரு திசையை மாத்திரம் சுட்டிக்காட்டுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை என்றே நான் கருதுகின்றேன். இது நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து பின்பற்றப்பட்டுவரும் கொள்கையாகும். ஆகவே பிறநாடுகள்மீது குற்றஞ்சாட்டுவதற்குப் பதிலாக, சுதந்திரமடைந்ததிலிருந்து நாம் என்ன செய்தோம் என்பதை சுயபரிசீலனை செய்து பார்ப்பது அவசியமாகும். 

கேள்வி - அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி இலங்கையின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். இது இருநாடுகளுக்கும் இடையில் முக்கியமானதோர் விடயமாக மாறிவருவதாக நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில் - அண்மையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளுக்காக விசேட நிபுணர் குழுவொன்றை நியமித்திருப்பதாகவும் அக்குழுவின் ஊடாகத் தயாரிக்கப்படும் வரைபு அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அவருக்கு அந்த வாய்ப்பை வழங்கவேண்டும் என்று கருதுகின்றேன். பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியவன் என்றவகையில் நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள பிரதேசங்களுக்கு விஜயம் செய்யும்போது அங்குள்ள மக்கள் அரசியலமைப்பில் நாட்டம் காண்பிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. மாறாக அபிவிருத்தியும் வாழ்வாதார வசதிகளுமே அவர்களின் தேவைகளாகக் காணப்படுகின்றன. 

எனவே அனைத்து அரசியல்கட்சிகளும் இதனை முன்னிறுத்தி செயற்படவேண்டியது அவசியமாகும். இதனை இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கமுடியும். முதலாவது அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதாகும். இரண்டாவது வடக்கு, கிழக்கு மாகாணங்களை எவ்வாறு அபிவிருத்திசெய்வது என்ற புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்வதாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். 

வடக்கு, கிழக்கு மக்கள் புதிய அரசியலமைப்பில் நாட்டம் காண்பிக்கவில்லை : மாறாக அபிவிருத்தியும் வாழ்வாதார வசதிகளுமே அவர்களது தேவைகளாகும் - மிலிந்த மொரகொட | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பிழம்பு said:

நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொள்ளும்போது அங்குள்ள மக்கள் அரசியலமைப்பில் நாட்டம் காண்பிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. மாறாக அபிவிருத்தியும் வாழ்வாதார வசதிகளுமே அவர்களின் தேவைகளாகக் காணப்படுகின்றன.

எங்களின் பொருளாதாரத்தை அடித்து, நொறுக்கி, வாழ்வாதாரத்தை சிதைத்ததன் நோக்கமே எங்களை பிச்சைக்காரர்களாக்கி உங்களிடம் மண்டியிட வைப்பதே, அதனை செவ்வனே செய்து முடித்தீர்கள். அதனால் உங்கள் கணிப்பு அவ்வாறுதான் இருக்கும். ஆனால் அதை அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் கூறவேண்டும். உங்கள் பார்வை உங்களின் திட்டமிட்ட எதிர்பார்ப்பு.

43 minutes ago, பிழம்பு said:

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட வலியுறுத்தியுள்ளார்.

இவர் ஏன் இந்த நேரம் இதை பேசுகிறார் என்பதே முக்கியம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்கள் மட்டும் ஏதோ கேட்டாங்க போல.. ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி வை.. 20 திருத்தம் கொண்டுவா.. புதிய அரசியலமைப்பை சிங்கள பெளத்த தேசமாகக் கட்டியமைன்னு.. சீனனுக்கு நாட்டை வில்லென்னு..

அவங்க காஸும்.. அங்கரும்.. பாணும்.. பருப்பும் தான் கேட்கிறாய்ங்க. அது தெரியாமல்.. இவர் வடக்குக் கிழக்கு தமிழ் மக்களுக்கு நாடிச் சாத்திரம் சொல்லுறார். முதலில் சிங்கள மக்களிடம் அந்தச் சாத்திரத்தைப் பார்க்கவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பிழம்பு said:

Published by T. Saranya on 2022-01-24 16:27:32

(செய்திப்பிரிவு)

நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொள்ளும்போது அங்குள்ள மக்கள் அரசியலமைப்பில் நாட்டம் காண்பிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. மாறாக அபிவிருத்தியும் வாழ்வாதார வசதிகளுமே அவர்களின் தேவைகளாகக் காணப்படுகின்றன. எனவே அனைத்து அரசியல்கட்சிகளும் இதனை முன்னிறுத்தி செயற்படவேண்டியது அவசியமாகும் என்று இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டதிலிருந்து இந்தியாவுடனான நல்லுறவு தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்திவந்திருக்கின்றார் என்று தெரிவித்துள்ள அவர், இருநாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றுவதுடன் இருநாடுகளின் பொருளாதாரங்களுக்கு இடையிலான தொடர்பு மேலும் வலுவடையவேண்டும் என்பதே ஜனாதிபதியின் விருப்பம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழ்களில் ஒன்றான 'த இன்டியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு வழங்கியுள்ள விசேட நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அந்நேர்காணலில் உள்ளடங்கியுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

தற்போது இலங்கை இரண்டு பிரதான சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. வெளிநாட்டு நாணயமாற்று நெருக்கடி மற்றும் நிதி ரீதியான சவால் என்பனவே அவையாகும். கொரோனா வைரஸ் பரவல் இந்த நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையை ஓரளவிற்கு ஸ்திரப்படுத்துவதற்கு இந்தியா முயற்சிக்கின்ற போதிலும், நாம் இந்நெருக்கடிக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளை அடையாளங்கண்டு அவற்றை நிவர்த்திசெய்யவேண்டும்.

இவ்விடயத்தைக் கையாள்வதற்கு இந்தியா வழங்கிய உதவி என்று நோக்கும்போது, கடந்த டிசம்பர் மாதம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது 'நான்று அம்ச ஒத்துழைப்பு செயற்திட்டத்தை' நடைமுறைப்படுத்துவதற்கு இருதரப்பினருக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது. 

அதன்பிரகாரம் அண்மையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையில் நிகழ்நிலையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து உணவு மற்றும் மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை வழங்கும் அறிவிப்பு இந்தியாவினால் வெளியிடப்பட்டது. 

அதேபோன்று எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றி முன்னெடுத்துச்செல்வதற்கான ஒத்துழைப்பை வழங்கும் வகையில் அதற்காக 500 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்குவதாகவும் கடந்த புதன்கிழமை இந்தியாவினால் அறிவிக்கப்பட்டது. மேலும் பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையிலான கடனுதவி மூலம் நாட்டின் கையிருப்பை அதிகரிப்பதிலும் சுற்றுலாத்துறை உள்ளடங்கலாக நாட்டில் முதலீடுகளை உயர்த்துவதிலும் இந்தியா பங்களிப்புச்செய்திருக்கின்றது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டதிலிருந்து இந்தியாவுடனான நல்லுறவு தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்திவந்திருக்கின்றார். இருநாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றுவதுடன் இருநாடுகளின் பொருளாதாரங்களுக்கு இடையிலான தொடர்பு மேலும் வலுவடையவேண்டும் என்பதே ஜனாதிபதியின் விருப்பம் என்று கருதுகின்றேன். 

இருப்பினும் அவர் பதவியேற்றுக்கொண்டவுடன் கொரோனா வைரஸ் பரவல் பல்வேறு நெருக்கடிகளைத் தோற்றுவித்துவிட்டது. அதனைத்தொடர்ந்து இந்தியா இலங்கைக்குத் தடுப்பூசிகளை வழங்கியது. இந்தியாவினால் குறித்தவொரு கட்டத்திற்கு அப்பால் ஏற்றுமதி செய்யமுடியாமல்போகும் வரையில், எமக்கு ஆதரவளிக்கின்ற முதலாவது நாடாக இந்தியாவே இருந்துவருகின்றது.  

கேள்வி - இலங்கையைக் கடன்பொறிக்குள் சிக்கவைக்கும் வகையிலான சீனாவின் ஆதிக்கம் மற்றும் சர்ச்சைக்குரிய உரவிவகாரம் என்பன தொடர்பில் குற்றஞ்சாட்டி ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினரொருவர் அண்மையில் சீன ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். இவற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் இலங்கைக்குள் சீனாவிற்கு எதிரான நிலைப்பாடு தீவிரமடைந்துவருவதுபோல் தெரிகின்றதே?

பதில் - நான் அதனை அவ்வாறு நோக்கவில்லை. எமது (இலங்கையின்) சொத்துக்களில் சீனாவின் கடன்கள் வெறுமனே 10 சதவீதமானவையாகும். ஆகவே அது முக்கியமான, ஆனால் கட்டாயமற்றதோர் காரணியாகும். எமது சொத்துக்களில் பிரதானமானவை நாம் விநியோகித்த வெளிநாட்டு பிணைமுறிகள் ஊடாகத் திரட்டப்பட்ட வருமானங்களாகும். எனவே ஒரு திசையை மாத்திரம் சுட்டிக்காட்டுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை என்றே நான் கருதுகின்றேன். இது நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து பின்பற்றப்பட்டுவரும் கொள்கையாகும். ஆகவே பிறநாடுகள்மீது குற்றஞ்சாட்டுவதற்குப் பதிலாக, சுதந்திரமடைந்ததிலிருந்து நாம் என்ன செய்தோம் என்பதை சுயபரிசீலனை செய்து பார்ப்பது அவசியமாகும். 

கேள்வி - அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி இலங்கையின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். இது இருநாடுகளுக்கும் இடையில் முக்கியமானதோர் விடயமாக மாறிவருவதாக நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில் - அண்மையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளுக்காக விசேட நிபுணர் குழுவொன்றை நியமித்திருப்பதாகவும் அக்குழுவின் ஊடாகத் தயாரிக்கப்படும் வரைபு அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அவருக்கு அந்த வாய்ப்பை வழங்கவேண்டும் என்று கருதுகின்றேன். பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியவன் என்றவகையில் நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள பிரதேசங்களுக்கு விஜயம் செய்யும்போது அங்குள்ள மக்கள் அரசியலமைப்பில் நாட்டம் காண்பிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. மாறாக அபிவிருத்தியும் வாழ்வாதார வசதிகளுமே அவர்களின் தேவைகளாகக் காணப்படுகின்றன. 

எனவே அனைத்து அரசியல்கட்சிகளும் இதனை முன்னிறுத்தி செயற்படவேண்டியது அவசியமாகும். இதனை இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கமுடியும். முதலாவது அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதாகும். இரண்டாவது வடக்கு, கிழக்கு மாகாணங்களை எவ்வாறு அபிவிருத்திசெய்வது என்ற புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்வதாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். 

வடக்கு, கிழக்கு மக்கள் புதிய அரசியலமைப்பில் நாட்டம் காண்பிக்கவில்லை : மாறாக அபிவிருத்தியும் வாழ்வாதார வசதிகளுமே அவர்களது தேவைகளாகும் - மிலிந்த மொரகொட | Virakesari.lk

என்னவோ இவை தமிழ் மக்களின்ரை மனசுக்கை போய்ப் பார்த்தவை தானே. அவ்வளவுநம்பிக்கை உள்ள ஆக்கள் ஒரு சர்வசன வாக்கெடுப்பு தமிழ் மக்களிடையேநடத்தி அதைநிரூபிக்கலாம் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனை மனித உரிமை மீறலையும் செய்து, உலகமே பாத்திருக்க  போர் செய்து, மக்களை கொன்று குவித்து போட்டு, நான் மனித மீட்பே  செய்தேன், பொதுமக்கள் யாரும் அதில்  இறக்கவில்லை என அடம்பிடிக்குது. எங்கே ஒருக்கா வந்துதானே பாப்போம் எண்டால்; நீங்கள் ஒண்டும் வரவேண்டாம், அது எனது இறையாண்மைக்கு கேடு,  அது நான் விசாரிச்சு தண்டிப்பேன் என்குது. யாரும் இறக்காத இடத்தில் நீ என்ன விசாரணை செய்யப்போறாய்? யாருக்கு தண்டனை கொடுக்கப்போறாய் என்று கேட்க யாருமில்லை. தனது  நீதிமன்றமே குற்றவாளியாக கண்டு தண்டனை கொடுத்தவர்களை, விடுவித்து பதவி குடுக்குது.   இயற்கைக்கு மாறான குணம் கொண்டது, தான் சொல்வதும், செய்வதும் சரி எனும் அடாவடி கொண்டதை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. மாறாக அவர்களை அனுசரித்து போகிறார்கள். இத்தனைக்கும் இது எதற்கும் அடுத்தவரை எதிர்பார்த்திருக்கும் ஒரு நாடு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.