Jump to content

ஒத்துழையாமையின் பிரதிபலிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒத்துழையாமையின் பிரதிபலிப்பு

லக்ஸ்மன்

கொவிட்-19 பெருந்தொ ற்றாகப் பரவியதற்கும், ஒவ்வொரு நாடும் இப்போதும் இன்னல்படுவதற்கும் ஒற்றுமையின்மையும் ஒத்துழையாமையுமே காரணமாகும். இதனை யாருக்கும் மறுத்துவிட முடியாது.  உலகின் அனைத்து நாடுகளிலும் படித்தவர்கள் முதல், பாமரர்கள் வரை வாழ்வாதாரத்தையே முன்னுரிமைக்குரிய விடயமாகக் கொள்ள வேண்டிய கட்டாயம் இதற்கு முக்கியமானதொரு காரணமாகும்.  

2022ஆம் வருடத்துக்கான நாடாளுமன்றக் கூட்டத்தொடரைத் தொடங்கி வைத்து, தனது அக்கிராசன உரையை நிகழ்த்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ‘நான் கொண்டது மாத்திரமே கொள்கை; அதுவே இலக்கு; வேறு யாருக்கும் கொள்கையில்லை; நோக்கமில்லை, இலக்கில்லை’  என்ற தோரணையிலேயே உரையாற்றியிருக்கிறார். 

இந்த உரையானது, பொதுஜன பெரமுன கூட்டணியில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள்  கூட ஒத்துழையாமை என்ற நிலைப்பாட்டில் இருக்கையிலேயே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அவரது உரை மீதான மறுநாள் விவாதம், வெறிச்சோடிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றமையை இதற்கு அடையாளமாகச் சொல்லலாம்.

image_10ec44a78a.jpg

“ஜனாதிபதியின் உரை, ‘யானை விழுங்கிய விளாம்பழம்’ போன்றது. அதில் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை. நாட்டின் இக்கட்டான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து, நாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைத்த ஜனாதிபதி, தனது கொள்கை அறிக்கையில் ஏன் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தார்  என்பதை தெளிவுபடுத்துவார்  என எதிர்பார்த்தால், அவர் தனது பழைய கதைகளையே மீண்டும் கூறியிருக்கிறார்” என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கருத்து வெளியிட்டுள்ளார்.

“இராணுவ சிந்தனையிலும், தான் வைத்திருந்த துப்பாக்கி முனைகளிலும் மட்டும்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சிந்தனை இருக்கிறது. இந்த நாடு நியாயமான அல்லது நீதியான பாதையில் செல்வதற்கு தயாரில்லை என்பதைத்தான் ஜனாதிபதியினுடைய உரை குறிப்பிட்டுள்ளது.  இந்த நாடு ஒரு சீரான பாதையில் நேர்த்தியாகச் செல்ல வேண்டுமென்றால் இந்த நாட்டினுடைய மிக முக்கியமான இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால்  முதலில் ஜனாதிபதி தன்னுடைய மனதை  மாற்ற வேண்டும். அப்போதுதான்  ஏனைய இனங்களும் மதிக்கப்படும். அவர்களுடைய சுதந்திரமும் பேணப்படும்” என்று என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதியின் உரை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “ஜனாதிபதியின் உரையில் நாட்டின் முக்கிய பிரச்சினைகள் பற்றிய பார்வை எதுவும் இருக்கவில்லை. முழுமையான உரையில் ஓரிடத்தில் நாட்டில் வெளிநாட்டு நாணயம் தொடர்பான பிரச்சினை இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டதைத் தவிர, பிரிதொரு விடயமும் இல்லை. நீண்டகாலமாக நாட்டில் இருக்கின்ற பிரச்சினையென ஒரு விடயத்தைக் குறிப்பிட்டு, அது கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த பல அரசாங்கங்களாலும் தீர்க்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி, அதன் மூலம் அந்தப் பிரச்சினையை இன்னொருவர் தோளில் சாட்டவே ஜனாதிபதி முயன்றுள்ளார். ஆனால், பிரச்சினையை அடையாளம் கண்ட அவர், தீர்வினை அடைவதற்கான வழிமுறைகளை முன்வைக்கத் தவறிவிட்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பலரும் தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொருவருடைய கருத்தும் பெரும் விமர்சனங்களையே வெளிப்படுத்தியிருக்கின்றன.

ஆனால், ஜனாதிபதியைப் பொறுத்தவரையில்,  இன்னமும் மூன்று வருடங்கள் பொறுத்திருங்கள்; நான் சொன்னதைச் செய்வேன் எனச் சொல்லலாம். அந்த வகையில், மாற்றம் எதுவும் இன்றி, தான் கொண்ட கோலத்தை நடத்தவே திட்டமிடுகிறார் என்பது வெளிப்படையாகின்றது.
பொறுப்புக்கூறல், அரசியலமைப்பு உருவாக்க முயற்சி, காணாமல் போனோர் பிரச்சினைக்குத் தீர்வு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தம், பசுமை விவசாயக் கொள்கை உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கியிருந்த இந்த உரையில், இலங்கையில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் குறித்து எந்த ஒரு கருத்தையும் முன்வைக்கவில்லை. பெரும் எதிர்பார்ப்பாக இருந்த வேறும் பல விடயங்கள் கணக்கிலெடுக்கப்படவில்லை என்பது பிரதானமான விமர்சனங்களாக இருக்கின்றன.

image_1deede386a.jpg

 

பொதுவான நாட்டின் செயற்பாடுகள் குறித்து, அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களுக்கு இடையில் ஒத்துழையாமை காணப்படுகிறது. ஒத்துழையாமை என்பதற்கு தலைமைக்கு ஒத்துழைக்காமை, தலைமை ஒத்துழைக்காமை, ஒருவருடன் ஒருவர் உடன்படாமை என்று பலவாறாகக் கொள்ளமுடியும்.

இங்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இந்தக் குழப்பம் இருப்பதை அறிய முடிகிறது. அதேநேரத்தில் சர்வாதிகாரப் போக்கான ஜனாதிபதியின் செயற்பாடு காரணமாக, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள், விலகியிருக்கும் அல்லது ஒதுங்கியிருக்கும் நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாகவே கொள்ள முடிகிறது.

இராஜாங்க அமைச்சராக இருந்த சுசில் பிரேமஜயந்தவின் பதவி பறிக்கப்பட்டமையானது, பல்வேறு விதமான பதிவுகளை விட்டுச் சென்றிருக்கிறது. அது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை ஓர் இறுக்கமான கட்டுப்பாடான நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. இதனைச் சர்வாதிகாரச் செயற்பாட்டு முறைமையாகவே கொள்ள முடியும்.

இவ்வாறிருக்கையில், நாடு சுதந்திரமடைந்த காலம் தொட்டு அதிகார ரீதியான போட்டிகளுக்குள் முண்டுப்பட்டு, அடக்குமுறை ரீதியான நெருக்கடிகளுக்குள் சிக்குண்டு, அகிம்சை, ஆயுதம், இராஜதந்திரம் எனத் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதற்கான ஒத்துழையாமை ஒன்றினை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ உருவாக்கி வருகிறார்.

ஆரம்பத்தில் வெளிநாடுகளின் அழுத்தங்களையும் புலம்பெயர் அமைப்புகளின் கருத்துகளையும் சட்டை செய்தாத அவர், இப்போது புலம்பெயர் அமைப்புகளை நாடி வருகிறார்.

இதற்கு நல்ல உதாரணம் அமெரிக்காவின் நியூயோர்க் சொன்றிருந்த வேளை, அவர் விடுத்த புலம்பெயர் தமிழர்களுக்கான அழைப்பு மற்றும் சில தினங்களுக்கு முன்னர் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட்டிடம் அங்குள்ள புலம்பெயர் தமிழர்களுடன் பேசுவதற்கு வாய்ப்பேற்படுத்தும்படி கோரியமை போன்றவற்றினைக் குறிப்பிட முடியும்.

முக்கியமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினைச் சந்திப்பதற்கான அழைப்பினை தாமாகவே விடுத்துவிட்டு, அதனை இரத்துச் செய்து இன்னமும் மீள அழைக்காதிருப்பது கூட, ஓர் ஒத்துழையாமையின் படிநிலையே.

இது ஏன் நடைபெறவில்லை என்பதற்கு காரணம் திரைமறைவானதாகவே இருக்கிறது. மிகவும் இராஜதந்திரமாக நகர்வதாகக் காட்டிக்கொள்ளும், வீண் முயற்சியாகவே இதனைக் கொள்ள முடியும்.

உள்ளே இருப்பவர்களை உதறித்தள்ளிவிடுதல் என்ற நிலைப்பாட்டுக்கு, நாட்டின் பொருளாதாரத்தினை நிமிர்த்துவது ஒன்றே நோக்கம் என்றே கொள்ள முடியும். இன்றொரு வகையில் தமிழர்களை ஏமாற்றும் மற்றொரு முயற்சியாகவும் சந்தேசிக்க முடிகிறது.

அந்தவகையில் அவர்களுடைய ஒழுங்கிலேயே, தமிழ் மக்களின் அரசியல் தரப்பும் ஒத்துழையாமை நிலைப்பாட்டினை பிரதிபலித்திருக்கிறது. அதன் ஒரு படிதான் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கான 13ஐ அமல்படுத்தக் கோரும் ஆவணக் கையளிப்பாகும்.

மின்சாரம் துண்டிக்கப்படுமா, துண்டிக்கப்படாதா என்று தெரியாத நிலையில் இருக்கும் மக்கள் அரசியல்வாதிகளின் இறுமாப்பு மோதல்களுக்குள் சிக்கமாட்டார்கள் என்றாலும், பெருந்தேசியச் சிங்களப் போக்கு இனவாதமானது இலங்கையில் எழுந்தே நிற்கிறது.

இந்த நிலைப்பாட்டுக்கு  சிறுபான்மைத் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினை தெரியாத ஒன்றல்ல. தெரிந்தும் தெரியாமலிருக்கின்ற ஒத்துழையாமைதான் காரணம்.

இந்த ஒத்துழையாமையின் பிரதிபலிப்பாக நாட்டில் உருவாகி வருகின்ற வீணான பிரச்சினைகளை ஜனாதிபதி எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்பதுதான் மில்லியன் கேள்வி.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  கையாளும் வஞ்சகத் தனமான இராஜதந்திர முறைமை, நாட்டில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்கிற மாயத்தனம் ஒத்துழையாமையின் முழு வெளிப்படையாகும். இந்த ஒத்துழையாமையானது இன்னமும் பல தசாப்தங்களுக்கு இலங்கை நாட்டை மீட்கமுடியாத நிலையை நோக்கியே நகர்த்தும்.

 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஒத்துழையாமையின்-பிரதிபலிப்பு/91-289809

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இப்போது வெளிநாட்டிலே கொரோனா அழிவு அதை கொடர்ந்து ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரப்பு போர் இவற்றினால் ஏற்பட்ட பாதிப்பினால் ரெயில் நிலையத்தில் நிற்கும் போது பெண்களும் ஒரு டொலர் தரமுடியுமா என்று கையை பிடித்து கேட்கிற மாதிரி கேட்கின்றனர்.
    • இது க‌ருத்து க‌ணிப்பு கிடையாது க‌ருத்து தினிப்பு 6.60 கோடி வாக்காள‌ர் இருக்கும் த‌மிழ் நாட்டில் சும்மா ஒரு சில‌ தொகுதியில் போய் ம‌க்க‌ளை ச‌ந்திச்சு விட்டு இவ‌ர்க‌ள் க‌ண்ட‌ மேனிக்கு த‌ந்தி தொலைக் காட்சி அடிச்சு விடும்.......................இந்த‌ க‌ருத்து தினிப்பு யூன் 4ம் திக‌தி தெரியும்  எவ‌ள‌வு பொய்யான‌து என்று ம‌க்க‌ளை குழ‌ப்பி த‌ங்க‌ளுக்கு பிடிச்ச‌ க‌ட்சிக‌ளுக்கு ஆதார‌வாய் போடுவ‌து தான் இவ‌ர்க‌ளின் வேலை வேண்டின‌ காசுக்கு ந‌ல்லா கூவ‌த்தானே வேணும் அதை இவ‌ர்க‌ள் ந‌ல்லா செய்யின‌ம்................... இந்த‌ க‌ருத்து க‌ணிப்பு எல்லா தேர்த‌லும் பொய்த்து போன‌து இதை தெரியாம‌ நீங்க‌ள் ச‌ந்தோஷ‌ ப‌டுவ‌தை பார்க்க‌ சிரிப்பு வ‌ருது😁 இவ‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌ட‌ந்த‌ தேர்த‌ல்க‌ளில்  வெளியிட்ட‌ க‌ருத்து க‌ணிப்புக‌ளில் ஏதாவ‌து ஒன்று ச‌ரி வ‌ந்த‌தை உங்க‌ளால் காட்ட‌ முடியுமா........................ இள‌ம்த‌லைமுறை பிள்ளைக‌ள் க‌ழுவி க‌ழுவி ஊத்துதுக‌ள் இந்த‌ க‌ருத்து க‌ணிப்பை பார்த்து😂😁🤣....................................
    • இலங்கைக்கு பயணிக்கும் ரிக்கற் விலை அனேகமாக இருமடங்காகிவிட்டது ஆனாலும் மேற்குலக நாட்டு துரைமார்கள் இந்த வருடம் ஓகஸ்ட்டில் சுற்றுலா பயனம் செய்து  இலங்கையை  மேலும் வெற்றியடைய திட்டமிட்டிருக்கின்றார்கள்.
    • ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற   நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.
    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.