Jump to content

சைக்கிளில் வேலைக்கு வர கோரிக்கை!

Recommended Posts

சைக்கிளில் வேலைக்கு வர கோரிக்கை!

சைக்கிளில் வேலைக்கு வர கோரிக்கை!

காற்று மாசுபாடு மற்றும் மேலும் பல காரணிகள் காரணமாக சைக்கிள் பாவனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, சைக்கிள் ஓட்டுவதற்காக ஒவ்வொரு வீதியிலும் ஒரு மருங்கை ஒதுக்குவதுடன், சுற்றாடல் அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சில ஊக்குவிப்பு சலுகைகளை வழங்குவதற்கான ஒழுங்குமுறை திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் உள்ள போது பயணிக்கும் ஒரு வாகனத்தில் கிலோமீட்டருக்கு 103.56 ரூபாவை அரசாங்கம் செலவிட வேண்டியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சைக்கிள் பாவனையினால் காற்று மாசுபாட்டை குறைத்தல், நேர விரயத்தை தடுத்தல் போன்று தொற்றாத பல நோய்களை கட்டுப்படுத்த காணப்படும் வாய்ப்புகள் காரணமாக சைக்கிள் பாவனையை ஊக்குவிப்பதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். .

இதன்படி சைக்கிளை பயன்படுத்துவதன் மூலம் ஒரு கிலோ மீற்றருக்கு 236.48 ரூபாவை மிச்சப்படுத்த முடியும் எனவும் அரசாங்கத்திற்கு 339.98 ரூபா இலாபம் கிடைக்கப்பெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எனவே, இத்திட்டத்தை ஏனைய அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்தின் உதவியை நாடவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த வருடத்திற்குள் வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டுமாயின் மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

சைக்கிளில் வேலைக்கு வர கோரிக்கை!

எரிபொருள் தட்டுப்பாடும் விலையேற்றமும் நல்ல ஞானோதயத்தை குடுக்குது.....😁

Link to comment
Share on other sites

அமைச்சர் அவர்கள் ஊருக்கு உபதேசம் செய்ய முன்னர், தான் சைக்கிளில் பயணம் செய்து காட்ட வேண்டும்.அது  நாட்டுக்கும், சுற்றாடலுக்கும் , அமைச்சரின் வண்டிக்கும்( தொப்பை)  நன்மை பயக்கும். ஸ்கன்டிநேவியன் நாடுகளில் பிரதமர் கூட சைக்கிளில் தான் பயணம் செய்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, zuma said:

ஸ்கன்டிநேவியன் நாடு அப்பிடி......கனடா நாட்டு அமைச்சர்கள் என்ன மாதிரி?😁

ஜேர்மன் உணவு வேளாண்மை அமைச்சர் பதவி ஏற்ற நாளிலையே சயிக்கிள் பயணம் தான் கண்டியளோ😂

எதுக்கும் சிறிலங்கா அரசு சயிக்கிள்ளை எல்லாம் போய் சேக்கஸ் காட்ட வேண்டாம்.சமமான சட்டங்களை ஒழுங்காய் அமுல்படுத்தினாலே   இப்போதைக்கு காணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18 minutes ago, குமாரசாமி said:

ஸ்கன்டிநேவியன் நாடு அப்பிடி......கனடா நாட்டு அமைச்சர்கள் என்ன மாதிரி?😁

ஜேர்மன் உணவு வேளாண்மை அமைச்சர் பதவி ஏற்ற நாளிலையே சயிக்கிள் பயணம் தான் கண்டியளோ😂

எதுக்கும் சிறிலங்கா அரசு சயிக்கிள்ளை எல்லாம் போய் சேக்கஸ் காட்ட வேண்டாம்.சமமான சட்டங்களை ஒழுங்காய் அமுல்படுத்தினாலே   இப்போதைக்கு காணும்

அவர்கள் இன்னும் சரியான முறையில் அன்பளிப்புகள் பெற கற்றுக் கொள்ளவில்லை அதனால சயிக்கிளை பாவிக்கினம்......மேலும் இங்கே சயிக்கிள் ஓட்டுபவர்களைப் பாருங்கள் நிஜமாகவே சயிக்கிள் ஓடுகிறவர்களாக இருக்கிறார்கள்......நம்மட அமைச்சரவையில் உள்ளவர்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள் ....உங்களுக்கு ஈவு இரக்கமே இல்லையா......!  🤔

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

.....நம்மட அமைச்சரவையில் உள்ளவர்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள் ....உங்களுக்கு ஈவு இரக்கமே இல்லையா......!  🤔

அவை யார் என்பதுதான் பிரச்சனை. சைக்கிளைப் பார்த்து சிலர் குசியாகலாம். 🤣

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

ஸ்கன்டிநேவியன் நாடு அப்பிடி......கனடா நாட்டு அமைச்சர்கள் என்ன மாதிரி?😁

நான் அறிந்தவரை யாரும் வேலைக்கு சைக்கிளில் போவதில்லை , பொழுது போக்குக்கு ஓடுவார்கள்.
ஆனால் எங்கட ஐயாத்துரை யோகாசனத்தில் வின்னர், அவருடைய மயில் நிலை ( Peacock Pose) உலக பிரசித்தி பெற்றது, நீண்ட தூர ஓட்டத்திலும் ஈடுபாடு உடையவர்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

உங்கடை கொய்யாத்துரை குத்துச்சண்டையிலையும் வல்லவர் எண்டு உலகத்துக்கே தெரியும். தேப்பன்ரை அரசியல் செல்வாக்கு இவருக்கு இருந்தாலும் விளையாட்டு வீரர் எண்ட பெருமை உலகத்திலை வேறை எந்த அரசியல்வாதிக்கும் இல்லை. அதை விட எனக்கு  பிடித்த அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும்போது  வராத கரிசனை, தடை செய்யப்பட்ட எரிகுண்டுகளை அதே மக்கள் மீது ஏவி அழித்த போது வராத கரிசனை, அது ஏது காசில்லை என்றவுடன் மக்களின் ஆரோக்கியத்தில் அப்படி ஒரு கரிசனை ஏற்படுகிறது?  கவுரவமாய் மூடி மறைத்துவிட்டேன் ஓட்டையை என்று நினைப்பார். உரப்பற்றாக்குறைக்கு ஒரு விளக்கம், பொருளாதாரம் விழும்போது ஒரு விளக்கம். பாருங்கள் எப்படியெல்லாம் சந்தர்ப்பத்தை சாதகமாக்கி தம்மை நிஞாயப்படுத்துவதையும், அதையும் சிலர் பாராட்டுவதையும். இப்படித்தான் ஐ. நாவிலும் பாராட்டு பெறுகிறார்களோ? இதற்கு எதற்கு சொகுசு ரயில் இறக்குமதி அதுவும் கடனில்? கண்காட்சிக்காயிருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். முதலில் இதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஒராளுக்கு பின்னும் முன்னுமா ஐந்து பத்து என்ற வாகனப்பவனி. அதைமுதல் நிறுத்துங்கோ.

நான் வேலை செய்யுமிடத்திற்கு  ஈருரளியிற் சென்றால் அதற்குக் கொடுப்பனவு உள்ளது. 0 - 5 இலிருந்து தொடங்கித் தூரம் கூடக் கொடுப்பணவும் கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MY3 தலைமையிலான ஆட்சியில் நடந்த தேர்தலில் கெத்தாகா Range Rover இல் வந்து வாக்களித்து ஆட்சியை பிடித்து சனாதிபதியாகி இப்போது மக்களை சைக்கிளிலை மிதிக்கட்டாம்.. ஆனால் தாங்கள் தற்போதும் ஆடம்பர வாகனங்களில் பவனி.

நல்லாட்சிக் காலத்தில் 12/13 ஆயிரங்கள் விற்ற சைக்கிள் இன்று 28/29 ஆயிரங்கள். சூப்பர்👌👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

காற்று மாசுபாடு மற்றும் மேலும் பல காரணிகள் காரணமாக சைக்கிள் பாவனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இவர் சீனாவிலிருந்து சைக்கிள் இறக்குமதி செய்ய போகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

நல்ல விடயம். முதலில் இதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஒராளுக்கு பின்னும் முன்னுமா ஐந்து பத்து என்ற வாகனப்பவனி. அதைமுதல் நிறுத்துங்கோ.

சொறிலங்கா போன்ற நாடுகளில் முன்னாள் குற்றவாளிகளே தற்போதைய அமைச்சர்கள் அவர்களால் சைக்கிளில் பராளுமன்றமோ  ஓய்வு நேர சைக்கிள் ஓட்டமோ முடியாது ஏனென்றால் அவர்களை போட்டு தள்ள வீதிகளில் எதிரிகள் எப்பவுமே காத்து கொண்டு இருப்பார்கள் அதுதான் முன்னுக்கு ஐந்து பின்னுக்கு ஐந்து என்று மக்களின் வரிப்பணத்தை சில்வழிப்பார்கள் .........................ஆனால் அதைப்பார்த்து நம்ம அரசியல்வாதியும் 10 க்கு மேற்பட்ட முன்னாள் புனர்வாழ்வு அங்கவீனர் போராளிகளை தனக்கு குண்டு வைக்க வந்தவர்கள் என்று பொய்யான கதையை சொல்லி அவர்களை சிறையில் தள்ளி தனக்கு இராணுவ பாதுகாப்பு தேடிக்கொண்ட வடிவேல் கதைகளும் உண்டு .😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

இதற்கு எதற்கு சொகுசு ரயில் இறக்குமதி அதுவும் கடனில்? கண்காட்சிக்காயிருக்கும்!

அதுவும்ஓட இப்ப எண்ணெய் இல்லையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, zuma said:

அமைச்சர் அவர்கள் ஊருக்கு உபதேசம் செய்ய முன்னர், தான் சைக்கிளில் பயணம் செய்து காட்ட வேண்டும்.

அங்கேதான் பிரச்சினையே. அமைச்சர் தனது வாகனங்களும் இல்லாமல், மெய்ப்பாதுகாவலர் பரிவாரங்களும் இல்லாமல் தனியே சைக்கிளில் போனார் என்றால், இப்போது இருக்கிற அரச எதிர்ப்புணர்வினால் உந்தப்பட்ட ஊர்ச்சனம் அவருக்கு சாத்துமெண்டதும் அவருக்குத் தெரியும்.

பரிவாரங்கள் சகிதம், வாகனத்தில் போகும்போது ஜனாதிபதிக்கே கூக்காட்டிக் கேலிசெய்யும் சனம், அமைச்சர் தனியே மாட்டுப்பட்டால் சும்மா விடுமா? 

உபதேசம் எல்லாம் ஊருக்குத்தான்.

அண்மையில சிங்கள நண்பர் ஒருவர் எழுதியதைப் பார்த்தேன். நாட்டுச் சனம் இருவேளை மட்டும் உண்ணவேண்டும் என்றும், ஒரு மரக்கறி போதும் என்றும் சொல்லிவிட்டு, ராஜபக்ஷேக்கள் ஒவ்வொரு நேரச் சாப்பாட்டிற்கும் குறைந்தது 15 வகை கறிகளைச் சப்பிடுகிறார்களாம். இது எப்படியிருக்கு? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

அண்மையில சிங்கள நண்பர் ஒருவர் எழுதியதைப் பார்த்தேன். நாட்டுச் சனம் இருவேளை மட்டும் உண்ணவேண்டும் என்றும், ஒரு மரக்கறி போதும் என்றும் சொல்லிவிட்டு, ராஜபக்ஷேக்கள் ஒவ்வொரு நேரச் சாப்பாட்டிற்கும் குறைந்தது 15 வகை கறிகளைச் சப்பிடுகிறார்களாம். இது எப்படியிருக்கு? 

அடுத்தடுத்த தேர்தல்களில் ஜேவிபி கூடுதலான ஆசனங்களை எடுக்கும் என்கிறார்கள்.

இருபெரும் கட்களிலும் மிகுந்த வெறுப்பில் இருப்பதாக சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

15 minutes ago, ஈழப்பிரியன் said:

அடுத்தடுத்த தேர்தல்களில் ஜேவிபி கூடுதலான ஆசனங்களை எடுக்கும் என்கிறார்கள்.

இருபெரும் கட்களிலும் மிகுந்த வெறுப்பில் இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆச்சரியம் ஏதும் இல்லை. ஜே.வி.பி கிழக்கில் கூட தீவிரமாக வேலை செய்வதாக கேள்விப்பட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

ஆச்சரியம் ஏதும் இல்லை. ஜே.வி.பி கிழக்கில் கூட தீவிரமாக வேலை செய்வதாக கேள்விப்பட்டேன்.

எப்படி என்ன தான் வேலை செய்தாலும்

தமிழ் பிரச்சனைக்கு ஆணித்தரமான தீர்வு என்று ஒன்றுமில்லை.

Link to comment
Share on other sites

3 minutes ago, ஈழப்பிரியன் said:

எப்படி என்ன தான் வேலை செய்தாலும்

தமிழ் பிரச்சனைக்கு ஆணித்தரமான தீர்வு என்று ஒன்றுமில்லை.

தமிழருக்கு தீர்வு கொடுக்கக்கூடாது என்பதில் எல்லா சிங்கள கட்சிகளும் ஒரே முடிவில் தான் உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

தமிழருக்கு தீர்வு கொடுக்கக்கூடாது என்பதில் எல்லா சிங்கள கட்சிகளும் ஒரே முடிவில் தான் உள்ளார்கள்.

👍👍👍🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

ஆச்சரியம் ஏதும் இல்லை. ஜே.வி.பி கிழக்கில் கூட தீவிரமாக வேலை செய்வதாக கேள்விப்பட்டேன்.

எல்லாம் அரச கட்டில் ஏறும்வரை, அதற்கப்புறம் எல்லா பேயும் ஒன்றுதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.