Jump to content

கச்சத்தீவு புனித அந்தோனியார் உற்சவத்திற்கு இந்திய யாத்திரிகர்களுக்கு அனுமதி இல்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கச்சத்தீவு புனித அந்தோனியார் உற்சவத்திற்கு இந்திய யாத்திரிகர்களுக்கு அனுமதி இல்லை

January 26, 2022
spacer.png

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்திற்கு, இந்திய யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவித்துள்ளாா்.

இந்தியாவில் பரவிவரும் ஒமிக்ரோன் தொற்று மற்றும் அங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஆகியவற்றை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளாா்.

அந்தவகையில் இலங்கை சுகாதார அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட சுமார் 500 இலங்கை யாத்திரிகர்களுடன் இம்முறை உற்சவம் நடத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம் இம்முறை மார்ச் மாதம் 11 மற்றும் 12ம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
 

https://globaltamilnews.net/2022/172322

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அந்தவகையில் இலங்கை சுகாதார அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட சுமார் 500 இலங்கை யாத்திரிகர்களுடன் இம்முறை உற்சவம் நடத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது.

 250 இலங்கை யாத்திரிகர்களுடன்  250 இந்திய யாத்திரிகர்களுடன் இம்முறை உற்சவம் நடத்தினால் புனித அந்தோனியாரின் புனிதம் கெட்டுவிடுமா...??🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தோனியார் அப்படி சொல்லேலை, இவர்கள் சொல்கிறார்கள். அவருக்கு எல்லோரும் பிள்ளைகளே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

 250 இலங்கை யாத்திரிகர்களுடன்  250 இந்திய யாத்திரிகர்களுடன் இம்முறை உற்சவம் நடத்தினால் புனித அந்தோனியாரின் புனிதம் கெட்டுவிடுமா...??🤔

உது நடக்கிற காரியமா ? 250 என்பதை 25000 என்று தவறுதலாக வாசித்துவிடுவார்கள். 

🤣

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.