Jump to content

உக்ரேன் தொடர்பான ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன் தொடர்பான ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா

(ஜெ.அனோஜன்)

உக்ரேனை நேட்டோவில் இருந்து தடைசெய்ய வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையினை புதனன்று அமெரிக்கா நிராகரித்ததுடன், கெய்வின் எல்லைகளுக்கு அருகே மொஸ்கோவின் இராணுவக் குவிப்பால் தூண்டப்பட்ட நெருக்கடிக்கு இராஜதந்திர தீர்வுக்கும் அழுத்தம் கொடுத்தது.

உக்ரேன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான மொஸ்கோவின் கோரிக்கைகளுக்கு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் ரஷ்யாவுக்கு முறையான பதிலைக் கொடுத்தார்.

US Rejects Russia's 'Bar Ukraine From NATO' Demand As Talks See New Life

இந் நிலையில் நேட்டோவுடன் ஒருங்கிணைந்து வழங்கப்பட்ட  பிளிங்கனின் பதிலை தனது நாடு ஆய்வு செய்யும் என்று ஒரு ரஷ்ய அமைச்சர் கூறினார்.

நேட்டோ இராணுவக் கூட்டணியின் விரிவாக்கம் மற்றும் அது தொடர்பான பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்த தனது கவலைகள் பற்றிய எழுத்துப்பூர்வ பட்டியலை ரஷ்யா வெளியிட்டுள்ளது.

உக்ரேனும் மற்றவர்களும் கூட்டணியில் சேரும் வாய்ப்பை நேட்டோ நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அவற்றில் இருந்தது.

அண்மைய வாரங்களில், உக்ரேன் எல்லையில் ரஷ்யா அதிக எண்ணிக்கையிலான வீரர்களை குவித்து வருகிறது - இது சாத்தியமான படையெடுப்புக்கான தயாரிப்பாக மேற்கத்திய நாடுகள் கருதுகின்றன. எனினும் இதனை ரஷ்யா மறுக்கிறது.

 

https://www.virakesari.lk/article/121396

 

Link to comment
Share on other sites

ரஸ்யாவின் டாங்கிகளை இலக்குவைப்பதற்காக விசேடமாக உருவாக்கப்பட்ட ஜவலின் ஏவுகணைகளை உக்ரைனிற்கு வழங்கியது அமெரிக்கா

 

 

 
உக்ரைனிற்கு அமெரிக்கா வழங்கியுள்ள டாங்கிஎதிர்ப்பு ஏவுகணைகள் உக்ரைனை சென்றடைந்துள்ளன-
புட்டினின் படைகள் உக்ரைன்மீது படையெடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தால் அவர்களிற்கு பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய அதிநவீன ஆயுதங்களை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகின்றது – இறுதியாக இந்த ஏவுகணைகளை வழங்கியுள்ளது.
50மில்லியன் டொலர் பெறுமதியான 300 ஜவலின் ஏவுகணைகளுடன் விமானமொன்று உக்ரைன் தலைநகரை சென்றடைந்துள்ளது-
 
Javelin_with_checkout_equipment-300x224.
File written by Adobe Photoshop? 5.2
Javelin-1200x729-1-300x182.jpg download-27.jpg download-26.jpg download-25.jpg
எவ்ஜிஎம் – 148 ஜவலின் என்பது டாங்கிகளை அழிப்பதற்காக கேர்வ்போல் தாக்குதலை இணைத்து உருவாக்கப்பட்ட ஏவுகணை
அதாவது இது இலக்குகளின் மீது மேலே இருந்து இறங்கி தாக்ககூடியது
ஜவலின் ஏவுகணைகள் ஒவ்வொன்றினதும் பெறுமதி 175.000 அமெரிக்க டொலர்கள்- 1990இல் உருவாக்கப்பட்ட ஜவலின்கள் 1996 முதல் பயன்பாட்டில் உள்ளன.
இரண்டாவது ஈராக் யுத்தத்தின் போது ரஸ்யாவில் தயாரிக்கப்பட்ட ரி-72 டாங்கிகளிற்கு எதிராக இதனை அமெரிக்க படையினர் பயன்படுத்தியிருந்தனர் – அவ்வேளை ஜவலின்கள் மிகச்சிறப்பாக செயற்பட்டுள்ளன.
ரஸ்யா தற்போதும் ரி72 டாங்கிகளை பயன்படுத்துகின்றது- உக்ரைன் எல்லையில் அந்த டாங்கிகளை ரஸ்யா பெருமளவில் குவித்துள்ளது.சதாமின் காலத்தின் பின்னர் இவை பல மாற்றங்களிற்கு உட்பட்டிருந்தாலும் இந்த வகை டாங்கிகள் ஏவுகணைகளை எதிர்கொள்ளும் திறன் குறைந்தவையாகவே காணப்படுகின்றன என்ற கருத்து நிலவுகின்றது.
ஜவலின்கள் அகச்சிவப்பு அமைப்புகளை பயன்படுத்தி தங்கள் இலக்குகளை குறிவைக்கின்றன.
இதன் காரணமாகபடையினர் டிரிகெரை அழுத்திய பின்னர் தொடர்ந்தும் இலக்கினை குறிவைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டியதில்லை.
ஏவுகணை ஏவப்பட்டவுடன் அது சிறிய மின்னூட்டத்தை பயன்படுத்தி வெளியேறுகின்றது-இதன் காரணமாக முக்கிய ரொக்கட் வெடிப்பதற்கு முன்னர் அதனை வரையறுக்கப்பட்ட இடத்திற்குள் ஏவலாம்.
ஜவலின்கள் மேல்நோக்கி 490 அடி சென்று பி;ன்னர் இலக்கை நோக்கி கீழே இறங்கிவருகின்றன.இதனை கேர்வ்போல் சொட் என்கின்றனர்.
ரஸ்யாவின் ரி72 டாங்கிகளில் 850மில்லிமீற்றர் கவசம் பொருத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.ஜவலினால் 800 மில்லிமீற்றர் வரையே உள்ளே ஊடுருவ முடியும்.எனினும் ரஸ்ய டாங்கிகளின் கவசம் மெல்லியது என்பதால் ஜவலினால் அதனை இலகுவாக உடைத்துக்கொண்டு செல்ல முடியும்.
புட்டினின் ஜெனரல்கள் பொதுவாக இது குறித்து கவலை கொண்டுள்ளனர்-
கடந்த நவம்பர் மாதம் ஜவலினை முறியடிப்பதற்கான வித்தியாசமான குடைபோன்ற அமைப்புடன் டாங்கிகள் உக்ரைன் எல்லையில் காணப்பட்டன.
இந்த கவசம் பயனளிக்க கூடியதா என்பது இன்னமும் உறுதியாகவில்லை.மேலும் இதன் இயங்கும் திறன் மற்றும் சுடும்திறனில் என்னை தாக்கம் இதனால் ஏற்படும் என்பதும் தெளிவாக தெரியவில்லை.
எனினும் கடந்த சில வாரங்களாக உக்ரைன் எல்லையில் காணப்பட்ட இந்த டாங்கிகள் இந்த வகை கவசம் பொருத்தப்பட்டவையாக காணப்படவில்லை இதனால் அவற்றின் பலவீனம் தொடர்ந்து நீடிக்கின்றதுஎன கருத முடியும்.
ஜவலின்களை இரண்டரை மைல் தூரத்திற்கு மரபுவழி ஆயுதங்களை போல பயன்படுத்தலாம் – இதன் அர்த்தம் என்னவென்றால் அவற்றை கட்டிடங்களை தகர்ப்பதற்கும் பதுங்குழிகள் சுரங்கப்பாதைகளிற்குள் உள்ள படையினரை தாக்குவதற்கும் பயன்படுத்தலாம்.
குறைந்த உயரத்தில்பறக்கும் ஹெலிக்கொப்டர்களை தாக்குவதற்கும் அவற்றை பயன்படுத்தலாம்.
இவை சிறியவை பாரம் குறைந்தவை என்பதால் தோளில் சுமந்துசெல்ல முடியும்

Thinakkural.lk

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.