Jump to content

நாடே இருளில் மூழ்கும் - மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published by T Yuwaraj on 2022-01-27 18:38:39

 
 

 

(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாளொன்றுக்கு 4 மணித்தியால மின் துண்டிப்பை நாட்டு மக்கள் எதிர்கொள்வதை தவிர்ப்பதற்கு தற்போது முதற் கொண்டே  நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் அல்லது இரண்டு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். அவ்வாறு செய்யாவிட்டால் முழு நாடும் இருளில் மூழ்கும் நிலை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Scheduled power cuts likely from tomorrow - NY Press News

 நீர் மூலமான மின்சார உற்பத்தி தற்போது 25 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.  மின்சாரத்தை தொடர்சியாக விநியோகித்து வருவதால் மின் உற்பத்தி நிலையங்களின் அருகிலுள்ள நீர்த்தேக்கங்களில் குறைவடைந்து, நாட்டில் மின்சார விநியோகம்  பாரியளவில் தடைபடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.   

இது குறித்து இலங்கை மின்சார பொறியிலாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளதாவது,

"மின்சார உற்பத்தி நிலையங்களின் அருகாமையிலுள்ள நீர்த் தேங்கங்களிலுள்ள நீர் மட்டம் தற்போது 60 வீதமாக காணப்படுகிறது. இந்த நீர் மட்டத்தின் அளவு 40 வீதத்திற்கு  சென்றதன் பின்னர், மின்சார உற்பத்தியை நிறுத்தும் நிலை ஏற்படும்.

எரிபொருள்களை கொள்வனவு செய்வதற்கு டொலர் இல்லாததன் காரணமாக , அவசர கொள்வனவின் அடிப்படையில் தனியார் டீசல் நிலையங்களிலிருந்து கூடிய விலைக்கு மின்சார விநியோகத்தை பெற்றுக்கொள்வதற்கும் முடியாத நிலைமை தோன்றியுள்ளதனால் நாளொன்றுக்கு  ஒரு மணித்தியாலம் அல்லது இரண்டு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு நடவடிக்கையை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் தான்தோன்றித்தனமாக   தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால், எதிர்வரும் 3 அல்லது 4 வாரங்களின் பின்னர் 4 அல்லது 5 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை மேற்கொள்ள நேரிடம். இதனால் முழு நாடும்  இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும் " என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடே இருளில் மூழ்கும் - மின்சார பொறியியலாளர்கள் சங்கம்  எச்சரிக்கை | Virakesari.lk

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.