Jump to content

சபைக்குள் புகுந்து விளையாடுகிறது கொரோனா


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிதக்கின்றன.

 இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும்  ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இராஜாங்க அமைச்சர்களான ஜயந்த சமரவீர மற்றும் திலும் அமுனுகம மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள ஆகியோருக்கு, நேற்றும் நேற்று முன்தினமும் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

இதேவேளை, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதி துஷ்மந்த மற்றும் நாலக பண்டார கொட்டகொட ஆகியோர் கடந்த 22ஆம் திகதி தொற்றுக்குள்ளாகியிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கடந்த 24ஆம் திகதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்ஷனி குணவர்தன 23ஆம் திகதியும் தொற்றுக்குள்ளாகியிருந்தனர்.

அவர்களைத் தவிர, பொது பாதுகாப்பு அமைச்சரும் கட்சியின் உறுப்பினருமான ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகரவுக்கும் கடந்தவாரம் தொற்று கண்டறியப்பட்டிருந்தது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சியின் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பிக்கு கடந்தவாரம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilmirror Online || சபைக்குள் புகுந்து விளையாடுகிறது கொரோனா

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இரண்டுமூன்று நாளைக்கு முன்தான் கொரனோ இலங்கையில் அடங்கிட்டுது என்று கூவினார்கள்  இப்ப சபை ஏறி  துள்ளி விளையாடுது என்கிறாங்கள்  இவங்களுக்கு இதே வேலையாய் போயிட்டுது. .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

இரண்டுமூன்று நாளைக்கு முன்தான் கொரனோ இலங்கையில் அடங்கிட்டுது என்று கூவினார்கள்  இப்ப சபை ஏறி  துள்ளி விளையாடுது என்கிறாங்கள்  இவங்களுக்கு இதே வேலையாய் போயிட்டுது. .

உவங்கள் தான்…. புலியையே அடக்கியவர்களுக்கு,
கொரோனாவை அடக்கிறது, சின்ன விசயம் என்று பீத்தினவர்கள். 😂

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

உவங்கள் தான்…. புலியையே அடக்கியவர்களுக்கு,
கொரோனாவை அடக்கிறது, சின்ன விசயம் என்று பீத்தினவர்கள். 😂

கோத்தா கொரோனாவை அடக்கினதிலை கெட்டிக்காரன் எண்ட மாதிரி  இஞ்சையும் பெரிய பினாத்தல் நடந்தது ஞாபகமிருக்கோ?😜....அதை விட சர்வதேச சுகாதார கும்பலும் வெறிகுட்  சேட்டிகற் குடுத்தது எல்லோ😊

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

//சபைக்குள் புகுந்து விளையாடுகிறது கொரோனா//

விளையாடியும் "என்ற் ரிசல்ட்" என்ன.? கொரோனோ அதற்கும் மேலான வைரஸ்களை பார்த்து பயந்து விட்டுது என்டு தானே அர்த்தம்.😢

Link to comment
Share on other sites

விரைவில் ஏதாவது நல்ல செய்தி வருமா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

உவங்கள் தான்…. புலியையே அடக்கியவர்களுக்கு,
கொரோனாவை அடக்கிறது, சின்ன விசயம் என்று பீத்தினவர்கள். 😂

கொரோனா ஒருதரையும் கொண்டு போகேலை. இவங்கள் கொரோனாவை விட கொடூரமானவங்கள் எண்டபடியால் அது பயந்திட்டுது போலை

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பழந்தமிழர்கள், உள் முற்றம் வைத்த ஒய்யார வீடுகளில் வாழ்ந்தார்கள். வெளியில் சென்று வந்ததும், அண்டாவிலிருக்கும் நீரைச் சொம்பால் எடுத்துக் கால், கைகளைக் கழுவி விட்டே உள்ளே சென்றார்கள். கந்தலானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி என்ற கொள்கைகளைப் பின்பற்றினார்கள். அவைதான் மனித வாழ்வுக்கு எப்பொழுதும் வேண்டியவை என்பதை இந்தக் கொரோனா இப்போது உலகிற்கே மெய்ப்பித்திருக்கிறது.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

கோத்தா கொரோனாவை அடக்கினதிலை கெட்டிக்காரன் எண்ட மாதிரி  இஞ்சையும் பெரிய பினாத்தல் நடந்தது ஞாபகமிருக்கோ?😜....அதை விட சர்வதேச சுகாதார கும்பலும் வெறிகுட்  சேட்டிகற் குடுத்தது எல்லோ😊

கோத்தாவுக்கு…. கோஷ்டியாய் நின்று, வெள்ளை அடிச்ச ஆக்களை, நல்லாய் தெரியும்.
இப்ப இங்கை வந்தால்…. நாக்கைப் புடுங்கிற மாதிரி, கேள்வி கேட்பார்கள் என்று…
ஒளித்து விட்டார்கள் போலுள்ளது. 🤣

1 hour ago, வாதவூரான் said:

கொரோனா ஒருதரையும் கொண்டு போகேலை. இவங்கள் கொரோனாவை விட கொடூரமானவங்கள் எண்டபடியால் அது பயந்திட்டுது போலை

ஒருத்தனும்… மண்டையை போடாததை பார்க்க,
கொரோனாவும்  பயந்து விட்டது போலிருக்கு. 😜

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சாணக்கியன் said:

விரைவில் ஏதாவது நல்ல செய்தி வருமா?

ஆருக்கு நல்ல செய்தி வரோணும்? 😎

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சபாநாயகருக்கு கொவிட் தொற்று ! பாராளுமன்றத்தில் இதுவரை 11 பேருக்கு கொவிட் தொற்று

Published on 2022-01-29 12:29:16

 
 

 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், பாராளுமன்றத்தில் இதுவரை 11 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

சபாநாயகருக்கு நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையின் பின்னர் அவருக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து சபாநாயகர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தப்படுவாரென தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சபாநாயகருடன் நெருங்கிப் பழகியவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கொவிட் தொற்றுக்குள்ளாகியிருந்தார்.

இவர்களைவிட அமைச்சர் சரத்வீரசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான நாலக பண்டார கொட்டேகொட, சரதி துஷயந்த மித்திரபால, சாணக்கியன் இராசமாணிக்கம், ரோஹிணி கவிரத்ன, அமரகீர்த்தி அத்துகோரள, கோகில குணவர்தன ஆகியோர் கொவிட் தொற்றுக்குள்ளாகினர்.

இதேவேளை, அமைச்சர்களான ஜயந்த சமரவீர மற்றும் திலும் அமுனுகம ஆகியோரும் கொவிட் தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சபாநாயகருக்கு கொவிட் தொற்று ! பாராளுமன்றத்தில் இதுவரை 11 பேருக்கு கொவிட் தொற்று | Virakesari.lk

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அதே தான். இது, ஜேர்மனியில் காருக்கு விளைவிக்கும் சேதம் பல மில்லியனை தாண்டும். இதற்கென்று காப்புறுதி கூட உள்ளது. 
  • உதுதானே இஞ்சை ஜேர்மனியிலை  கார் மோட்டருக்குள்ளை உள்ளட்டு வயர்களை கடிச்சு நாசமறுக்கிறது? Marder.
  • ஆனால் பாருங்கோ….. தமிழ் நாட்டு “டாஸ்மார்க்”  சரக்கு நம்பிக்கையானது. உடனை உயிர் போற அளவுக்கு, அவ்வளவு பாதகம் இல்லை. சத்து டானிக் மாதிரி…. உற்சாகம் தருமாம்.
  • எரிபொருள் விநியோகம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட பொய்யான தகவல்களே நெருக்கடிக்குக் காரணம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (நா.தனுஜா)     எரிபொருள் தட்டுப்பாடானது உணவுற்பத்தி மற்றும் விநியோகம் உள்ளடங்கலாக பொருளாதாரத்தின் அனைத்துக் கூறுகள்மீதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எரிபொருள் விநியோகம் தொடர்பில் உண்மையான தகவல்களை வெளியிடுவதைவிடுத்து அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய பொய்யான நம்பிக்கை பாரிய பின்விளைவுகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் கடுமையாச் சாடியுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் மிகக்குறுகிய காலத்தில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்குரிய திட்டங்கள், எரிபொருள் நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான செயற்திட்டம் என்பன பற்றிய உண்மையானதும், சரியானதுமான தகவல்களை உரிய காலப்பகுதியில் மக்களுக்கு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கும் அச்சங்கம், தற்போதைய சூழ்நிலையில் பாரதூரத்தன்மையையும் அதன் விளைவாக நாட்டின் சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கக்கூடியவகையில் ஏற்படத்தக்க பின்விளைவுகளையும் புரிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது. எரிபொருள் விநியோகம் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய தவறான தகவல்கள் மற்றும் அதனால் மக்களின் வாழ்க்கைமீது ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்பில் கடுமையான விசனத்தை வெளிப்படுத்தி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:  தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் காரணமாக குறிப்பாக எரிபொருள் உள்ளிட்ட பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு என்பன குறித்தும் அவை பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை, நாட்டு நிர்வாகம், வணிக செயற்பாடுகள் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை ஆகியவற்றின்மீது ஏற்பாடுத்தியுள்ள தாக்கம் குறித்தும் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம். இது நாட்டின் சட்டத்தின் ஆட்சியையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. அரசாங்கம் கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் தொடர்பில் பல்வேறுபட்ட அறிவிப்புக்களை வெளியிட்டுவந்துள்ளது. இருப்பினும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் நேற்று முன்தினம் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் மூலம் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய தவறான நம்பிக்கையினால் அவர்கள் இருளுக்குள் வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற விடயம் வெளிப்பட்டுள்ளது. அடுத்த தடவை நாட்டிற்கு அவசியமான எரிபொருள் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ள திகதி அறியப்படாதவொன்றாக இருக்கின்றது. அதுமாத்திரமன்றி ஏற்கனவே கையிருப்பிலிருந்த நிதி ஏன் உரியவாறு கையாளப்படவில்லை என்பதற்கான சரியான விளக்கமெதுவும் வழங்கப்படவில்லை.  அரசாங்கத்தின் அறிவிப்புக்களால் ஏற்பட்ட விளைவுகள் இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் நிலவுகின்ற குழப்பநிலையையும் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் உருவாகியிருக்கும் அவநம்பிக்கையையும் காண்பிக்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கும் எரிபொருள் விநியோகத்துடன் தொடர்புடைய தற்போதைய நிலை குறித்து அரசாங்கம் உண்மையானதும், சரியானதுமான தகவல்களை உரிய நேரத்தில் வழங்கத்தவறியமை குறித்து நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்.  பெற்றோல், டீசல் மற்றம் மண்ணெண்ணெய் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கவேண்டிய நிர்ப்பந்தம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் சுமார் 24 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் எரிபொருள் நிரப்பு நிலைங்களில் காத்திருக்க வேண்டியிருப்பது பாரிய நேரவிரயத்தைத் தோற்றுவித்துள்ளது. அதுமாத்திரமன்றி இந்த எரிபொருளுக்கான நீண்ட வரிசைகள் சமூகங்களுக்கு இடையில் அமைதியின்மையையும் வன்முறைகளையும் மக்கள் - பொலிஸாருக்கு இடையிலான முரண்பாடுகளையும் தோற்றுவித்துள்ளன. எரிபொருள் வரிசைகளில் காத்திருந்த பலர் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியிருப்பதுடன், கறுப்புச்சந்தையில் எரிபொருள் மிக உயர்வான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அதிகாரிகளால் மிகக்குறைந்தளவிலான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு இம்மாதம் முதல் வாரத்தில் எரிவாயுக் கொள்கலன்கள் கப்பல் மூலம் நாட்டை வந்தடையும் என்று கூறப்பட்டிருந்த போதிலும், வீதிகளில் எரிவாயு சிலிண்டர்களுடன் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்கமுடிகின்றது.  எரிபொருள் தட்டுப்பாடானது உணவுற்பத்தி மற்றும் விநியோகம் உள்ளடங்கலாக பொருளாதாரத்தின் அனைத்துக் கூறுகள்மீதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானதாக இருக்கின்ற இலங்கையின் ஏற்றுமதிகள்மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் நீதி நிர்வாக செயற்பாட்டின்மீது எதிர்மறைத்தாக்கத்தைத் தோற்றுவித்துள்ளது. மேலும் அனைத்து மக்களுக்கும் நியாயமானதும், சமமானதுமான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கம் தவறியிருக்கின்றது.  இவ்வாறானதொரு பின்னணியில் மிகக்குறுகிய காலத்தில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்குரிய திட்டங்கள், எரிபொருள் நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான செயற்திட்டம் என்பன பற்றிய உண்மையானதும், சரியானதுமான தகவல்களை உரிய காலப்பகுதியில் மக்களுக்கு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை, அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து அனைவருக்கும் நியாயமானதும் சமமானதுமான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதையும், பொதுப்போக்குவரத்து சேவை பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை வெளியிடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.  அதுமாத்திரமன்றி தற்போதைய சூழ்நிலையில் பாரதூரத்தன்மையையும், அதன் விளைவாக நாட்டின் சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கக்கூடியவகையில் ஏற்படத்தக்க பின்விளைவுகளையும் புரிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி, அரசாங்கம், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினரிடம் கேட்டுக்கொள்கின்றோம். அத்தோடு அரசாங்கத்தின்மீதான தேசிய மற்றும் சர்வதேச நம்பிக்கையை மீள உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறும் வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.      https://www.virakesari.lk/article/130281
  • உரிமைக்காக எழு தமிழா! Posted on June 27, 2022 by மாலதி  73 0 உரிமைக்காக எழு தமிழா!தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழம் விடுதலை அடையும் வரை எழுவோம் என்ற முழக்கத்தோடு இன்று(27.06.2022) பெல்ஜியம்-புறுக்செல் நகர ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் கொட்டும் மழையிலும் மக்கள் ஒன்றுகூடி இனவெழுச்சியுடன் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. தமிழீழ மக்கள் மீது சிறீலங்கா இனவெறி அரசினால் நடத்தப்பட்டது ஒரு இன அழிப்பு என்பதை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொள்வதோடு, அதற்கான அனைத்துலக சுயாதீன விசாரணை ஒன்றினை வலியுறுத்த வேண்டியும், தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்றும், தமிழீழத் தாயக நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவத்தை உடனடியாக வெளியேற வேண்டும் என்ற தமது உணர்வினை உரக்கச் சொன்னார்கள்.     உரிமைக்காக எழு தமிழா! – குறியீடு (kuriyeedu.com)
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.