பிழம்பு பதியப்பட்டது January 28 Share பதியப்பட்டது January 28 எதிர்காலத்தில் ஏதாவது ஒரு காரணத்திற்காக நாடு மூடப்படும் பட்சத்தில், மாதச் சம்பளம் வாங்குபவர்கள் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அத்தகைய சூழ்நிலைக்கு நாடு தள்ளப்படாமல் இருக்க, மக்கள் தடுப்பூசி அளவை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எந்த வகையான வைரஸ் பரவுகிறது என்பது முக்கியம் அல்ல, ஆனால் மக்கள் ஆரோக்கியமாக இருப்பதுதான் முக்கியம் என்றார். இதேவேளை, நாட்டில் நேற்று மேலும் 942 கொரோனா தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இலங்கையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tamilmirror Online || மீண்டும் மூடப்படுமா நாடு? Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் satan Posted January 28 கருத்துக்கள உறவுகள் Share Posted January 28 ஒருபுறம் எல்லருக்கும் தடுப்பூசி செலுத்தியாயிற்று எனும் பாராட்டு, மறுபுறம் சிலருக்கு கொடுத்து விட்டு மற்றவர்களுக்கு அபராதம், மேலதிக வசூல் திட்டம், இன்னொருபுறம் நாட்டில் ஏற்படும் எல்லா நெருக்கடிக்கும் கொரோனா மேல் குற்றச்சாட்டு. எதை கொடுத்தாலும் சாதகமாக்கி பிழைத்துக்கொள்வான். Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் satan Posted January 29 கருத்துக்கள உறவுகள் Share Posted January 29 இன்னும் மூடேல்லையா 11 hours ago, பிழம்பு said: எதிர்காலத்தில் ஏதாவது ஒரு காரணத்திற்காக நாடு மூடப்படும் பட்சத்தில், மாதச் சம்பளம் வாங்குபவர்கள் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இனி என்ன காரணத்தை கண்டுபிடிக்கப்போறாங்கள் என்று தெரியவில்லையே? ஏதோ இப்ப மட்டும் நாடு திறந்திருக்கிறமாதிரி கதை விடுகிறார் சுகாதார பணிப்பாளர். ஆமா... இது எப்போ தொடங்கி இவரது அதிகாரத்தின் கீழ் வந்தது? வர வர யார் எதைப்பற்றி கருத்து சொல்வது என்கிற விவஸ்த்தையே இல்லாமற் போய் விட்டது நாட்டில் Quote Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.