Jump to content

புளிய மரமும் பொற்க்காலமும்.!


Recommended Posts

large.c344a8fa-f5e1-41dc-874f-18aaa052722a.jpg.394bdd74e5841e53f8602b3e9cefdeda.jpg

புளிய மரமும் பொற்க்காலமும்.!

*************************

முற்பது வருடம் கழித்து

என் மண்ணுக்கு 

போனபோது-என்னை

யாருக்கும் தெரியவில்லை.

 

சொந்த மண்ணிலே

என்னை

சுற்றுலா பயணியாக..

எந்த நாடு ,எந்த ஊர்

எங்கு போகவேண்டும்

இங்கு.. 

யாரைத்தெரியுமென

ஏதேதோ கேள்விகள் 

என்னைச்சுற்றி

குவிந்தன..

 

ஊர்ப்பற்றோடு உறுதியாக 

வாழ்ந்து..

மறைந்துபோன எம்

தாய்,தந்தையைக்கூட 

தெரிய வாய்ப்பில்லை.

ஏனென்றால்..

அந்த ஊரில் வசித்திராத

புது முகங்கள்.

 

அங்கு ஓடித்திரியும் 

பிள்ளைகளை பார்க்கிறேன்

அவர்களும் மூண்றாவது

தலைமுறையினர்

அவர்களை எனக்கோ

என்னை அவர்களுக்கோ

தெரியவோ,புரியவோ

முடியவில்லை.

 

ஆனால்..

எங்களை அணைத்து

பாசம் காட்டிய

ஒரு பாட்டி 

வீட்டுக்கருகாமையில்

புடாரியம்மன் 

கோயிலுக்கு- முன்

இன்றும் இருக்கிறாள்.

 

எம் சொந்தமென்று 

சொல்ல இந்த

மூதாதையர்களைத்தவிர 

வேறு யாருமில்லை.

 

அவளின்.. 

காலடியில் இருந்து

நாங்கள் வாழ்ந்த-அந்த 

பொற்க்காலங்களை

எண்ணியெண்ணி

இருவரும் மெளன.. 

மொழியில் பேசுகின்றோம்.

 

இவளின் நிழலில் வளர்ந்து

கிளித்தட்டு,கிட்டிப்புள்ளு

கால் பந்து 

கொடியெடுத்தோடிய

தோழர்,தோழிகளை 

நினைத்துப்பார்க்கிறேன்.

 

இதே ஆலயவீதியில் 

அண்ணாவி பொன்னுத்துரை

அண்ணரின் 

பண்டாரவன்னியன்

அவர் போட்ட மேடையில்

அன்றே கிறுக்கிய.

எங்கள் கவிதைகள்

திடீர் நாடகங்களென

இளைஞர்,யுவதிகள் கூடிய

ஆனந்தமான பொழுதுகள்

அந்த குறுப்புத்தனங்கள்

எத்தனை எத்தனை.

 

எல்லாம் கனவாக வந்து 

போகிறது

ஆச்சியின் அருகில்

தலை சாய்ந்தபடியே

கண்கள் சத்தமின்றி 

அழுகின்றன.

 

போய்வா மகனே-என 

அம்மா,ஐயாவின் 

குரல் போல் ஒரு

அசரீதி கேட்கிறது.

…………….

எழுந்து நடக்கிறேன்.

அந்த அழியா 

நினைவுகளுடன்.

 மீண்டும் ஒருமுறை

அகதியாகவே

விமானம் ஏறுவதற்கு!

அன்புடன் -பசுவூர்க்கோபி.

 • Like 7
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆம்......எமது நினைவுகளில் நாம் இளமையாகத்தான் இருக்கின்றோம்......ஊர் சென்று மூன்றாம் தலைமுறையினரைப் பார்க்கும் போதுதான் முதுமையின் நிதர்சனம் தெரிகின்றது.......!   😇

நல்ல கவிதை நன்றி கோபி .......!

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நம்மை அறியாமலே காலம் விரைவாக சென்று விட்ட்து. தொலைத்தவைகள் ஏராளம். தேடியும் பெற முடியாதவை . அவை நம் நினைவுகளில் மட்டுமே வாழ்கிறது. அது ஒருபொற்காலம்.  
 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நாமெல்லாம் அந்நியர்தான் அங்கே. 

 • Like 1
Link to comment
Share on other sites

16 hours ago, suvy said:

ஆம்......எமது நினைவுகளில் நாம் இளமையாகத்தான் இருக்கின்றோம்......ஊர் சென்று மூன்றாம் தலைமுறையினரைப் பார்க்கும் போதுதான் முதுமையின் நிதர்சனம் தெரிகின்றது.......!   😇

நல்ல கவிதை நன்றி கோபி .......!

பேரன்புடன் நன்றிகள் அன்ணா

16 hours ago, நிலாமதி said:

நம்மை அறியாமலே காலம் விரைவாக சென்று விட்ட்து. தொலைத்தவைகள் ஏராளம். தேடியும் பெற முடியாதவை . அவை நம் நினைவுகளில் மட்டுமே வாழ்கிறது. அது ஒருபொற்காலம்.  
 

பேரன்புடன் நன்றிகள் அக்கா

16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாமெல்லாம் அந்நியர்தான் அங்கே. 

பேரன்புடன் நன்றிகள் சுமேரியர்

16 hours ago, nunavilan said:

கவிதைக்கு நன்றி, கோபி. 

பேரன்புடன் நன்றிகள் நுனாவிலன் அவர்களே

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2022 at 17:08, பசுவூர்க்கோபி said:

அந்த அழியா 

நினைவுகளுடன்.

 மீண்டும் ஒருமுறை

அகதியாகவே

விமானம் ஏறுவதற்கு!

சொந்த நாட்டிலும் அந்நியர்! புலம்பெயர் நாட்டிலும் அந்நியர்!

இதே அனுபவம் எனக்கும் ஏற்பட்டது..

மண்ணில் ஒரு சொந்தம் என்று சொல்ல ஒரு மரம் நட்டால் என்னவென்று யோசிப்பதுண்டு.!

 • Like 1
Link to comment
Share on other sites

12 hours ago, கிருபன் said:

சொந்த நாட்டிலும் அந்நியர்! புலம்பெயர் நாட்டிலும் அந்நியர்!

இதே அனுபவம் எனக்கும் ஏற்பட்டது..

மண்ணில் ஒரு சொந்தம் என்று சொல்ல ஒரு மரம் நட்டால் என்னவென்று யோசிப்பதுண்டு.!

உளமார்ந்த  நன்றிகள் கிருபன்  அண்ணா..
விருப்புக்குறியிட்ட  புங்கையூரன் அவர்களுக்கும் பாலபத்திர ஓணான் அவர்களுக்கும் மகிழ்வுடம் நன்றிகள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2022 at 22:38, பசுவூர்க்கோபி said:

large.c344a8fa-f5e1-41dc-874f-18aaa052722a.jpg.394bdd74e5841e53f8602b3e9cefdeda.jpg

புளிய மரமும் பொற்க்காலமும்.!

*************************

முற்பது வருடம் கழித்து

என் மண்ணுக்கு 

போனபோது-என்னை

யாருக்கும் தெரியவில்லை.

 

சொந்த மண்ணிலே

என்னை

சுற்றுலா பயணியாக..

எந்த நாடு ,எந்த ஊர்

எங்கு போகவேண்டும்

இங்கு.. 

யாரைத்தெரியுமென

ஏதேதோ கேள்விகள் 

என்னைச்சுற்றி

குவிந்தன..

 

ஊர்ப்பற்றோடு உறுதியாக 

வாழ்ந்து..

மறைந்துபோன எம்

தாய்,தந்தையைக்கூட 

தெரிய வாய்ப்பில்லை.

ஏனென்றால்..

அந்த ஊரில் வசித்திராத

புது முகங்கள்.

 

அங்கு ஓடித்திரியும் 

பிள்ளைகளை பார்க்கிறேன்

அவர்களும் மூண்றாவது

தலைமுறையினர்

அவர்களை எனக்கோ

என்னை அவர்களுக்கோ

தெரியவோ,புரியவோ

முடியவில்லை.

 

ஆனால்..

எங்களை அணைத்து

பாசம் காட்டிய

ஒரு பாட்டி 

வீட்டுக்கருகாமையில்

புடாரியம்மன் 

கோயிலுக்கு- முன்

இன்றும் இருக்கிறாள்.

 

எம் சொந்தமென்று 

சொல்ல இந்த

மூதாதையர்களைத்தவிர 

வேறு யாருமில்லை.

 

அவளின்.. 

காலடியில் இருந்து

நாங்கள் வாழ்ந்த-அந்த 

பொற்க்காலங்களை

எண்ணியெண்ணி

இருவரும் மெளன.. 

மொழியில் பேசுகின்றோம்.

 

இவளின் நிழலில் வளர்ந்து

கிளித்தட்டு,கிட்டிப்புள்ளு

கால் பந்து 

கொடியெடுத்தோடிய

தோழர்,தோழிகளை 

நினைத்துப்பார்க்கிறேன்.

 

இதே ஆலயவீதியில் 

அண்ணாவி பொன்னுத்துரை

அண்ணரின் 

பண்டாரவன்னியன்

அவர் போட்ட மேடையில்

அன்றே கிறுக்கிய.

எங்கள் கவிதைகள்

திடீர் நாடகங்களென

இளைஞர்,யுவதிகள் கூடிய

ஆனந்தமான பொழுதுகள்

அந்த குறுப்புத்தனங்கள்

எத்தனை எத்தனை.

 

எல்லாம் கனவாக வந்து 

போகிறது

ஆச்சியின் அருகில்

தலை சாய்ந்தபடியே

கண்கள் சத்தமின்றி 

அழுகின்றன.

 

போய்வா மகனே-என 

அம்மா,ஐயாவின் 

குரல் போல் ஒரு

அசரீதி கேட்கிறது.

…………….

எழுந்து நடக்கிறேன்.

அந்த அழியா 

நினைவுகளுடன்.

 மீண்டும் ஒருமுறை

அகதியாகவே

விமானம் ஏறுவதற்கு!

அன்புடன் -பசுவூர்க்கோபி.

மலரும் நினைவுகளை கவிதையாக வடித்து பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழர்.💐

 • Like 1
Link to comment
Share on other sites

On 4/2/2022 at 15:02, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மலரும் நினைவுகளை கவிதையாக வடித்து பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழர்.💐

நெஞ்சார்ந்த நன்றிகள் தோழரே.

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.