Jump to content

ஐ.எஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.எஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு!

ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

சிரியாவில்  அமெரிக்க ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் புதன்கிழமை இரவு சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலின்போது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“எனது உத்தரவின் பேரில், அமெரிக்க மக்களை பாதுகாக்கவும், உலகை பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கும், வடமேற்கு சிரியாவில் அமெரிக்க ராணுவப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டன.

இந்த நடவடிக்கையின்போது அமெரிக்க படை வீரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பத்திரமாக திரும்பியுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

http://www.samakalam.com/ஐ-எஸ்-அமைப்பின்-தலைவர்-கொ/

Link to comment
Share on other sites

ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இதே தலைப்பில் செய்தி வருகின்றது.

அமெரிக்காவில் சடுதியாக சரிந்து வரும் தம் மீதான ஆதரவை கட்டுப்படுத்த பைடன் இப்படி ஸ்டண்ட் அடிக்க வேண்டி இருக்கு. இவரது துணை சனாதிபதி கமலா அக்கா மீதான மக்கள் ஆதரவும் மிக மோசமாக சரிந்து கொண்டு போகின்றது. வரலாற்றில் ஒரு துணை சனாதிபதி மீது இந்தளவுக்கு ஆதரவு குறைந்தது கிடையாது என்கின்றனர்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நிழலி said:

டிரம்ப் பற்றி என்னத்தை சொன்னாலும், அந்தாள் இருந்த காலத்தில் இப்பிடியான ஸ்டண்ட் ஒன்றும் செய்யவும் இல்லை புதிய போர் எதையும் ஆரம்பித்ததும் இல்லை.  சொல்லப்போனால் அதிக நாடுகளுடனான சுமூக நேச உறவையே பேணினார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
14 minutes ago, Sabesh said:

டிரம்ப் பற்றி என்னத்தை சொன்னாலும், அந்தாள் இருந்த காலத்தில் இப்பிடியான ஸ்டண்ட் ஒன்றும் செய்யவும் இல்லை புதிய போர் எதையும் ஆரம்பித்ததும் இல்லை.  சொல்லப்போனால் அதிக நாடுகளுடனான சுமூக நேச உறவையே பேணினார்

இல்லை ஐயனே,
ஐஸ்ஐஸ் தலைவனை நாய்போலக் கொண்டேன் என்ற கூற்று யாருடையது?
சீனாவுடன் முறுகியது யார்?
வடகொரியாவிற்கு மிரட்டல் விட்டது யார்?
இந்தியாவிடம் மருந்து கேட்டு மிரட்டியது யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sabesh said:

டிரம்ப் பற்றி என்னத்தை சொன்னாலும், அந்தாள் இருந்த காலத்தில் இப்பிடியான ஸ்டண்ட் ஒன்றும் செய்யவும் இல்லை புதிய போர் எதையும் ஆரம்பித்ததும் இல்லை.  சொல்லப்போனால் அதிக நாடுகளுடனான சுமூக நேச உறவையே பேணினார்

அமெரிக்கா போற போக்கை பார்த்தால் 2024 ல்லை சிங்கன் ரம்ப் தான் வருவார் போலை கிடக்கு  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்கா போற போக்கை பார்த்தால் 2024 ல்லை சிங்கன் ரம்ப் தான் வருவார் போலை கிடக்கு  😁

எனக்கும் அதே டவுட்டா  தான் இருக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.