Jump to content

தமிழீழ நடைமுறையரசின் அலுவல்சார் வலைத்தளங்களின் படிமங்கள் | Images of official websites of de-facto Tamil Eelam government


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

  • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

  • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

 

அன்பான தமிழீழ மக்களே, எமது தமிழீழ நடைமுறையரசு இற்றைக்கு 13 ஆண்டுகளுக்கு முன்னர், 2009 மேயில், பன்னாட்டு வல்லாதிக்க வலிமைகளின் உதவியுடன் சிங்கள சிறீலங்கா அரச படைகளால் பெரும் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையுடன் முற்றாக நந்திக்கடலிலோரத்தில் அழித்தொழிக்கப்பட்டது. அது நடைமுறையரசாக உயிர்ப்புடன் இருந்த காலத்தில் குடிமைக் கட்டுமானங்களை வியாபித்து ஒரு இறையாண்மையுடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட அரசு போன்று செயற்பட்டது. அவ்வாறு தொழிற்பட்ட போது தற்காலத்தில் ஒவ்வொரு நாடும் தனது குடிமைச் சிறகுகளுக்கென தனித்தனி வலைத்தளங்கள் வைத்திருப்பது போலவே தனக்கென தனது அதிகாரநிறைவு பெற்ற வலைத்தளங்களைத் தொடங்கி தொழிற்படுத்தியது. அவற்றில் தனது செயற்பாடுகளை பதிவேற்றி வெளிநாடுகளில் உள்ள தனது குடிமக்களோடான தொடர்பை பேணிக்கொண்டது. 

ஓரிரு வலைத்தளங்கள் 2002இற்கு முன்னரே தொடங்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலானவை 2002இல் அமைதி உடன்படிக்கை கைச்சாத்திப்பட்ட பின்னரிருந்து 2009 சனவரி வரை செயற்பட்டன. இவற்றில் பெரும்பாலனாவை 2008 டிசம்பரோடு முடங்கி அ முடக்கப்பட்டு விட்டன. எஞ்சியவையும் 2009 சனவரியோடு சரி. ஓரிரு வலைத்தளங்களின் (இவற்றில் ஒன்றை மட்டுமே என்னால் கண்டுபிடிக்க இயன்றது) ஓரிரு பக்கங்கள் மட்டும் அதியுயர் தகவல்களை பேணுவதற்காக வேறு பெயர்களுக்கு மாறி தற்போது வரை செயற்பட்டு வருகின்றன.

இவ்வாறு இருந்த வலைத்தளங்களுள் என்னால் கண்டுபிடிக்கப்பட்டு தோண்டியெடுக்கப்பட்டவற்றினது முகப்புகளை மட்டும் (பிற்காலத்தில் ஏலுமென்றால் ஒவ்வொரு பக்கத்தையும் திரைப்பிடிப்பு செய்து போடுகிறேன்) திரைப்பிடிப்பு செய்து ஆவணப்படுத்தும் நோக்கோடு இங்கு பதிவிடுகிறேன்.

எமது நடைமுறையரசின் அலுவல்சார் வலைத்தளங்களை கண்டு அதனது நடைமுறையரச வீரியத்தை அறியுங்கள்.

 

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"

 

 

 

இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ நடைமுறையரசின் அலுவல்சார் வலைத்தளமான 'www.eelam.com' இன் முகப்பின் தோற்றம்.

 

Eelam website's photo.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ விடுதலைப்புலிகளின்  சமாதானச் செயலகத்தின் அலுவல்சார் வலைத்தளமான 'www.ltteps.com' இன் தோற்றம்.

 

 

ltteps website.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

விடுதலைப் புலிகளின் தொலைபேசிச் செய்தித் தொகுப்பு வலைத்தளமான 'www.tamildailynews.com' இன் தோற்றம்.

 

Tamildailynews.jpg

tamileelamnews

bbc.co.uk/tamil/

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழத்தின் அரச சார்பற்ற கழகமான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அலுவல்சார் வலைத்தளமான 'www.troonline.org' இன் முகப்பின் தோற்றம்.

 

TRO website.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழத்தின் அரச சார்பற்ற நிறுவனமான பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனத்தின்  அலுவல்சார் வலைத்தளமான 'www.c4wdr.com' இன் முகப்பின் தோற்றம்.

 

 

CWRD website.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழத்தின் பொருளாதார முன்னேற்ற நிறுவனமான பொருண்மிய மதியுரையகத்தின் அலுவல்சார் வலைத்தளமான 'www.techonnet.org' இன் முகப்பின் தோற்றம்.

 

 

namao .jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழத்தின் அரச சார்பற்ற நிறுவகமான வன்னி தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் அலுவல்சார் வலைத்தளமான 'www.vanni.org' இன் முகப்பின் தோற்றம்.

 

 

vanni tech.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழத்தின் அரச சார்பற்ற அமைப்பான Tamil Children's Endowment Funds இன் அலுவல்சார் வலைத்தளமான 'www.tcefund.org' இன் முகப்பின் தோற்றம்.

 

 

இக்கொழுவியினுள் நுழைந்தால் நீங்கள் முதலில் இவ்வாசலைத்தான் அடைவீர்கள். இங்கு உங்களுக்கு வேண்டிய மொழியை - ஆங்கிலம் அ தமிழ் - தெரிவுசெய்தால் உங்களை அது மேற்கொண்டு வலைத்தளத்தினுள் அழைத்துச் செல்லும்.

af.png

 

நீங்கள் ஆங்கிலத்தைத் தெரிவு செய்தால் சென்றடையும் இடம் இதுதான். 

afaswq.png

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் அலுவல்சார் வலைத்தளமான 'www.teedor.org' இன் முகப்பின் தோற்றம்.

 

 

casd.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ நடைமுறையரச நிதித்துறையின் ஆயத்தின் அலுவல்சார் வலைத்தளமான 'www.nithiththurai.com/aayam/' இன் முகப்பின் தோற்றம்.

 

(இதில் தமிழ், ஆங்கிலம், மற்றும் சிங்களம் என 3 விருத்தும் இருந்தது. அவற்றுள் சிங்களம் என்பதை நான் சொடுக்கியபோது 'Coming soon' என திரையில் விழுந்தது.)

 

aaya.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ நடைமுறையரச நீதித்துறையின் அலுவல்சார் வலைத்தளமான 'www.eelamjudicial.org' இன் முகப்பின் தோற்றம்.

 

 

(இதில் தமிழ் ஆங்கிலம் என இரு விருத்தும் இருந்தது)

 

 

Tamil Eelam jurisdication website.png

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ நடைமுறையரசின் அதிகாரநிறைவு வலைத்தளங்களின் படிமங்கள்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ நடைமுறையரச நிதித்துறையின் அலுவல்சார் வலைத்தளமான 'www.nithiththurai.com' இன் முகப்பின் தோற்றம்.

 

இந்த வலைத்தளத்தினுள் தான் குழந்தைகளுக்கான 46,000 தூய தமிழ்ப் பெயர்மொழிகள் இருந்தன.

 

nithi.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ நடைமுறையரசின் நாளேடுகள், ஆவணங்கள், புத்தகங்கள் போன்றவற்றை விற்பனை செய்யும்  வலைத்தளமான 'www.eelamstore.com' இன் முகப்பின் தோற்றம்.

 

 

f.png

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வெளிநாடுகளில் உள்ள தமிழீழத்திற்கு வர இயலாதோர் தமிழீழத்தை காண்பதற்காக அதனது அழகை எடுத்துக்காட்டும் விதமாக நிழற்படங்களைக் கொண்டிருந்த நடைமுறையரசின் வலைத்தளமான 'www.eelavision.com' இன் முகப்பின் தோற்றம்.

 

 

(இது தமிழில் பாமினி எழுத்துரு அமைப்பில் இருந்தது)

 

 

இதற்குள் தமிழீழத்தின் வனப்பையும் அதன் மக்களின் வாழ்வையும் காட்டிடும் ~1200 படிமங்கள் பதிவிடப்பட்டிருந்தன. அவை அத்தனையும் தற்போது அழிந்துவிட்டன!

 

acas.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ நடைமுறையரசின் வைப்பகமான தமிழீழ வைப்பகத்தின் அலுவல்சார் வலைத்தளமான 'www.bankoftamileelam.net' இன் முகப்பின் தோற்றம்.

 

 

(இதில் தமிழ் ஆங்கிலம் என இரு விருத்தும் இருந்தது)

 

 

first.png

 

 

இதில் உங்களுக்குத் தேவையான மொழியைச் சொடுக்கினால் இங்கு கொண்டு செல்லும்:

 

நான் தேர்ந்தெடுத்தது தமிழ். வலைத்தளம் பாமினி எழுத்துருவில் உள்ளதால் இவ்வாறு ஆகிவிட்டது.

 

asfa.png

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ நடைமுறையரசின் அலுவல்சார் வானொலிச் சேவையான  'புலிகளின் குரல்' மற்றும் அதன் பிற சேவைகள் ஆகியவற்றிற்கான அதிகாரநிறைவு வலைத்தளமான 'www.pulikalinkural.com' இன் முகப்பின் தோற்றம்.

 

 

pulikalin kural.jpg

 

இவ்வலைத்தளத்தின் உள்ளே மொத்தம் 4 வலைப்பக்கங்களுக்கான கொழுவிகள் இருந்தன.

  1. புலிகளின் குரல்
  2. தமிழீழவானொலி
  3. புலிகளின் குரல் சிங்களச் சேவை
  4. Voice Of Tigers
     

 

1)

pulikalin kural.png

 

 

2)

thamiziiza vaanoli.jpg

 

 

3)

pulikalin kural singkalam.png

 

 

4)

voice of tigers.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ நடைமுறையரசின் அதிகாரநிறைவு வலைத்தளங்களின் படிமங்கள் | Tamil Eelam de-facto state's official websites' images
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ நடைமுறையரசின் அலுவல்சார் வலைத்தளங்களில் ஒன்றான www.eelamweb.com இன் முகப்பின் தோற்றம்

 

 

eelamweb.jpg

 

 

 

2002:

இல் ஒரு கணினியில் பிடிக்கப்பட்ட நிகழ்படத்தின் திரைப்பிடிப்புகள். அக்காலத்தில் இது இப்படித்தான் கணினியில் தெரியும்.

 

eelam web.jpg

 

eelam web 2.jpg

hotspring.o

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பல்வேறு செய்தித்தளங்களிற்கான கொழுவிகளையும் தன்-வெளியீடு செய்திகளையும் கொண்ட தமிழீழ நடைமுறையரசின் அலுவல்சார் ஆங்கில செய்தி வலைத்தளமான www.tamileelamnews.com இன் முகப்பின் தோற்றம்

 

 

tamileelamnews.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ நடைமுறையரசின் தமிழீழ விளையாட்டுத்துறையின் அலுவல்சார் வலைத்தளமான www.eelamsports.com இன் முகப்பின் தோற்றம்

 

 

(இதில் தமிழ் ஆங்கிலம் என இரு விருத்தும் இருந்தது)

 

www.eelamsports.com.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ நடைமுறையரசின் கலை-பண்பாட்டு-அரசியல்-சமூக ஏடான எரிமலையின் அலுவல்சார் வலைத்தளமான www.erimalai.com இன் முகப்பின் தோற்றம்

 

erimalai.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ நடைமுறையரசின் செய்தி ஊடகங்களில் ஒன்றாக புலம்பெயர்நாடுகளில் தொழிற்பட்ட IBC Tamil வானொலியின் அலுவல்சார் வலைத்தளமான www.ibctamil.co.uk இன் முகப்பின் தோற்றம்

 

 

www.ibctamil.co.uk.png

 

 

1997 இல் தொடங்கப்பட்ட இது (நாடக ஆசிரியர் ஏ.சி. தாசீயஸ் அவர்களால்) 1998ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து 2009 மே 18 வரை தவிபு இன் வெளிநாட்டுக் கட்டமைப்பிற்கு உட்பட தேசிய ஊடகமாக பரிணமித்து தொழிற்பட்டது. ஆனால் இது 2008இலியே வேறு யாரோ ஒருவருக்கு விற்கப்பட்டுவிட்டதாகவும் ஒரு செய்தி அடிபடுகிறது.

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ நடைமுறையரசின் அதிகாரநிறைவு வலைத்தளங்களின் படிமங்கள் | De-facto of Tamil Eelam government official websites' images
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ நடைமுறையரசின் நாளேடான ஈழநாதத்தின் அலுவல்சார் வலைத்தளமான www.eezhanatham.com இன் முகப்பின் தோற்றம்

 

www.eezhanatham.com

 

 

 

 

 

 

 

 

அதன் மட்டக்களப்புப் பதிப்பான 'ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு' இன் அலுவல்சார் வலைத்தளமான www.battieezhanatham.com இன் முகப்பின் தோற்றம் 

 

www.battieezhanatham.com

 

 

மேலுள்ள மட்டக்களப்பு ஈழநாதத்தின் மட்டக்களப்பு பதிப்பின் அண்மையாக்கப்பட்ட பாதி வெட்டப்பட்ட திரைப்பிடிப்பு:

www.battieezhanatham.com_ - Copy.png

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ நடைமுறையரசின் அலுவல்சார் வலைத்தளங்களின் படிமங்கள் | De-facto of Tamil Eelam government official websites' images
  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ நடைமுறையரசின் அலுவல்சார் நாளேடான விடுதலைப்புலிகளின் அலுவல்சார் வலைத்தளமான www.viduthalaipulikal.com இன் முகப்பின் தோற்றம்

 

large.viduthalaippulikal.jpg.ea2de0b7229

Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ நடைமுறையரசின் அலுவல்சார் வலைத்தளங்களின் படிமங்கள் | Official websites of de-facto of Tamil Eelam government images
  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ நடைமுறையரசின் அலுவல்சார் வலைத்தளங்களின் படிமங்கள் | Images of official websites of de-facto Tamil Eelam government


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.