Jump to content

ஐபிஎல் 2022 செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஹெட்மயர், சாஹல் அபாரம் - 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான்

ஹெட்மயர், சாஹல் அபாரம் - 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான்
விக்கெட் வீழ்த்திய போல்ட்டை பாராட்டும் சக வீரர்கள்
 

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தானின் சாஹல் 4 விக்கெட்டும், டிரண்ட் போல்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

 
மும்பை:
 
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 20-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
 
அதன்படி, முதலில் பேட் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. ஹெட்மயர் அதிரடியாக ஆடி 36 பந்தில் 50 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். படிக்கல்  29 ரன், அஸ்வின் 28 ரன்னில் அவுட்டானார்.
 
லக்னோ அணி சார்பில் ஹோல்டர், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
 
இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. முதல் பந்திலேயே கேப்டன் கே எல் ராகுல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்த பந்தில் கிருஷ்ணப்பா கவுதம் டக் அவுட்டானார். ஹோல்டர் 8 ரன்னிலும், தீபக் ஹூடா 25 ரன்னிலும், ஆயுஷ் பதோனி 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
 
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் குயிண்டன் டி காக் நிதானமாக ஆடினார். அவர் 39 ரன்னில் வெளியேறினார். குருணால் பாண்ட்யா 22 ரன்னிலும், சமீரா 13 ரன்னிலும் அவுட்டாகினர். 
 
கடைசி கட்டத்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் போராடினார். 4 சிக்சர் உள்பட 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
இறுதியில், லக்னோ அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும்.
 
ராஜஸ்தான் சார்பில் சாஹல் 4 விக்கெட்டும், டிரண்ட் போல்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 

https://www.maalaimalar.com/news/sports/2022/04/10233952/3661278/Tamil-News-RR-beat-LSG-in-IPL-2022.vpf

 



 
Link to comment
Share on other sites

  • Replies 155
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி!

spacer.png

 

15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (ஏப்ரல் 11) இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் குஜராத்தை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மத்தீவ் வேட்டும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். வேட் 19 ரன்னிலும், கில் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

சாய் சுதர்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், பொறுப்புடன் விளையாடிய ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்தார். அபினவ் மனோகர் 35 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களான கேப்டன் வில்லியம்சன், அபிஷேக் சர்மா இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 32 பந்துகளை சந்தித்த அபிஷேக் 6 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த திரிபாதி 17 ரன் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக ரிட்டெய்ட் முறையில் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார்.

பொறுப்புடன் ஆடிய கேப்டன் வில்லியம்சன் 46 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 57 ரன்கள் குவித்தார். இறுதியில் சன் ரைசர்ஸ் 19.1 ஓவரில் 168 ரன்கள் குவித்தது. இதன் மூலம் குஜராத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது.

நிகோலஸ் பூரன் 18 பந்துகளில் 34 ரன்களுடனும், மார்க்ரம் 8 பந்துகளில் 12 ரன்களுடனும் இறுதி வரை களத்தில் இருந்து ஹைதராபாத் வெற்றிக்கு வழிவகுத்தினர்.

இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றி, இரண்டு தோல்வியுடன் ஹைதராபாத் அணி எட்டாவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் தோல்வியடைந்தபோதிலும் நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு தோல்வியுடன் குஜராத் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இன்று (ஏப்ரல் 12) இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் 22ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

 

https://minnambalam.com/entertainment/2022/04/12/18/IPL-Hyderabad-wins-over-Gujarat

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: ஐபிஎல்: சென்னை, மும்பை அணிகள் ஏன் மூச்சுத் திணறுகின்றன?

spacer.png

ஆர்.அபிலாஷ் 

நான் இதை எழுதும்போது சென்னை, மும்பை அணிகள் இந்த வருட ஐபிஎல் பாயிண்ட்ஸ் டேபிளில் தரைமட்டத்தில் இருக்கின்றன. முதல் நான்கு போட்டிகளையும் இவ்வணிகள் அவலமான முறையில் இழந்தன. மும்பை அணி வேறெந்த அணியைவிடவும் அதிகமான முறை அணியின் சேர்க்கையை மாற்றி விட்டது. சென்னை அணி தனது வீரர்கள் மீது முடிந்தளவுக்கு நம்பிக்கை வைத்தாலும் பந்து வீச்சில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து பார்த்தது. வியூகங்களை மாற்ற முயற்சி செய்தது. ஆனால், பிச்சைக்காரன் தட்டில் அதே செல்லாக்காசு மாறாமல் விழுவதைப் போல தோல்வியே திரும்பத் திரும்பக் கிடைக்கிறது. ஐபிஎல் ஆரம்பித்தது முதலே அதிக முறைகள் கோப்பையை வென்றுள்ள இந்த இரு ராட்சஸ பலம் பொருந்திய அணிகளுக்கு என்னவாயிற்று இம்முறை? இந்த சரிவுக்கான காரணங்கள் என்ன?

முதன்மையான காரணம் இம்முறை நடந்த ஏலம் - இவ்வருடம் புதிய இரு அணிகள் உள்ளே வந்தார்கள். குஜராத் மற்றும் லக்னோ. ஆகையால் ஏலத்தின் போது ஏற்கனவே இருந்த அணிகளில் இருந்த வீரர்களில் முக்கியமானவர்கள் அந்த அணிகளுக்குச் சென்றார்கள். பழைய அணிகளும் வலுவான அணிகளில் இருந்து ஏலத்துக்கு அனுமதிக்கப்பட்ட வீரர்களை வாங்கி தம் அணியில் சேர்த்துக் கொண்டனர். வலுவான அணிகளாக, தொடரை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக உருவாக வேண்டும் எனும் நோக்கம் புதிய அணிகளின் நிர்வாகங்களுக்கும், ஏலத்தைத் திட்டமிட்ட ஐபிஎல் நிர்வாகத்துக்கும் இருந்துள்ளது. அதனால்தான், குறைந்தபட்சம் சில வீரர்களை மட்டும் ஓர் அணி ஏலத்தில் தக்க வைக்க முடியும் எனும் விதியைக் கொண்டு வந்தனர். மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற அணிகள் முக்கியமான வீரர்களை இழந்தனர்.

ஏலத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படாத - அதாவது அணியின் மையமான வீரர்களை இழக்காத - பெரிய அணி என்றால் அது கொல்கத்தா மட்டுமே. டெல்லியையும் ஓரளவுக்குக் குறிப்பிடலாம். மேலும், டேவிட் வார்னரை வாங்கியதைத் தவிர அவர்களுடைய ஏலக் கொள்முதல் நன்றாக இருந்தது. எப்போதும் போல வலுவான சர்வதேச பந்து வீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்கள், உள்ளூர் இளம் மட்டையாளர்கள் என ஒரு சிறப்பான ஸ்குவாடை டெல்லியினர் உருவாக்கினார்கள், ரிஷப் பந்த்தின் தலைமை வேறு உள்ளது. மாற்று அணிகளில் இருந்து வந்துள்ள அவர்களுடைய இளம் மட்டையாளர்கள் சாதிக்க வேண்டும் எனும் வெறியுடன் உள்ளார்கள்.

லக்னோ, குஜராத் ஆகிய புதிய அணிகளுக்கும், ராஜஸ்தானுக்கும் இதையே சொல்லலாம். ஒன்றிரண்டு வெளிநாட்டு மட்டையாளர்களைத் தவிர்த்தால் (மே.இந்திய தீவுகளின் ஹிட்டர்கள்) இந்த அணிகள் தமது துவக்க, மத்திய வரிசை ரன்களுக்கு இந்திய வீரர்களை சார்ந்துள்ளன; பந்து வீச்சுக்கும், ஆல்ரவுண்டர்களாகவும் நிறைய சர்வதேச வீரர்கள், ஒவ்வோர் இடத்துக்கும் நிபுணர்களாக கருதப்படுபவர்கள், அனுபவஸ்தர்கள் இருக்கிறார்கள். பஞ்சாப் அணி நிர்வாகம் ஆல்ரவுண்டர்கள் விஷயத்தில் - குறிப்பாக ஓடியன் ஸ்மித்தை வாங்குவதில் - அதிக ஆர்வம் காட்டினார்கள். இருந்தாலும் அவர்களுடைய அணி சமநிலை சிறப்பாக இல்லை. அனுபவமிக்க திறமையான அணித்தலைவரும் இல்லை (மயங்க் அகர்வால்). இது அவர்களைத் தொடர்ந்து சற்றே தடுமாற வைக்கிறது.

அடுத்து பெங்களூரு அணிக்கு வருவோம் - தலைமைப் பொறுப்பிலிருந்து கோலி ஓய்வு பெற்ற பிறகு அந்த அணி நிர்வாகம் விழித்துக்கொண்டு சிறப்பாகத் திட்டமிட்டு ஏலத்தில் தமக்குத் தேவையான வீரர்களை எடுத்திருக்கிறது. கடந்த வருடமே அவர்களுடைய பந்து வீச்சு சிறப்பாக இருந்தது என்றாலும் இவ்வருடம் ஏ.பி. டிவில்லியர்ஸ் அணியில் இல்லை என்பதை உணர விடாதபடிக்கு அவர்கள் வலுவான மட்டையாளர்களை உள்ளே கொண்டு வந்தார்கள். குறிப்பாக தினேஷ் கார்த்திக்கை வாங்கியது, பந்து வீச்சில் ஹேசல்வுட், சாஹல், கரண் ஷர்மாவை தேர்வு செய்தது, டூ பிளஸியில் ஒரு நல்ல அணித்தலைவரை கண்டடைந்தது ஆகியன பெங்களூரை ஒரு வலுவான அணியாக்கியது. சஹல் ராஜஸ்தானுக்குப் போய் விட்டாலும் அந்த இடத்தில் ஹசரங்காவைச் சிறப்பாகப் பயன்படுத்தி உள்ளார்கள். தேவைப்பட்டால் இரண்டு கால் சுழலர்களை அணியில் சேர்க்கவும் சாத்தியமுண்டு. மிக முக்கியமாக சென்னை அணியில் இருந்து டூபிளஸியை வாங்கித் தலைவராக்கியது மிகச்சிறந்த முடிவு. ஏனென்றால் டூபிளஸி ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணியின் தலைவராகச் செயல்பட்ட அனுபவமிக்கவர், தலைமைத் திறனையும் நிரூபித்தவர். இங்கேதான் சென்னை அணி சொதப்பியது என்று சொல்லலாம்.

spacer.png

சென்னை செய்த தவறு

மகேந்திர சிங் தோனி அணித் தலைவராகத் தொடர்வார் என அவர்களுடைய நிர்வாகம் முரட்டுத்தனமாக நம்பியிருக்கக் கூடாது. என்னதான் கடந்த வருடமே அடுத்த தலைவர் என ஒரு மாற்று ஏற்பாடாக ஜடேஜாவை அவர்கள் தயாரித்திருந்தாலும் அது ஒரு சமயோசிதமான முடிவு அல்ல. ஏனென்றால், தோனி திடீரென தான் தலைமையில் இருந்து விலகுவதாக அறிவிக்க, அவரிடத்தில் வந்துள்ள ஜடேஜாவுக்குத் தலைமை அனுபவம் சுத்தமாக இல்லை. அவர் அணிக்குள் நன்றாகப் பேசியும் ஆளுமையாலும் தன்னை வெளிப்படுத்தும் திறன் பெற்றவரும் அல்ல. வரும் ஆண்டுகளில் அவர் அனுபவத்தால் மேம்படலாம் என்றாலும் தோனியைப் போன்ற ஒரு பெருந்தலைவர் விலகும்போது அவரிடத்தில் ஒரு எல்.கே.ஜி பையனை அமர்த்தினால் அது அணியின் நம்பிக்கையை, சமநிலையைக் குலைக்கும்.

நிர்வாகம் ஏலத்தில் எப்படியாவது டூபிளஸியை தக்க வைத்திருக்கலாம். ஆனால், அவரது வயது 37 என்பதால் அவரால் நீண்ட காலம் தலைவராக இருக்க இயலாது என சென்னை நினைத்திருந்தது என்றால் அது ஒரு தவறான பார்வையாகும். அடுத்த மூன்றாண்டுகள் அவர் தலைவராக ஆடினாலும் போதும், அதற்குள் ஒரு இளம் வீரரைத் துணைத்தலைவராக வைத்து வளர்த்தெடுக்கலாம் அல்லது நான்கு வருடங்களுக்கு முன்பே அஷ்வினை அணிக்குக் கொண்டுவந்து அடுத்த தலைவராக வளர்த்திருக்கலாம். தோனி தலைமையில் இருந்து விலகும்போது அஷ்வின் தயாராக இருந்திருப்பார். அஷ்வினின் தலைமைத் திறன் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டது - டி.என்.பி.எல் தொடரில் அவர் சிறப்பாக தலைமை தாங்கியதைப் பார்த்தோம். சென்னை அணியின் அசட்டையான அணுகுமுறை, கண்மூடித்தனமாக தோனியை நம்பியிருந்தது அவர்களை இந்த நிலைக்குத் தள்ளிவிட்டது.

அடுத்தது, அணி சேர்க்கை. சென்னை அணியில் நல்ல இடது கை சுழலர்களை வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் மெதுவான, தாழ்வான பவுன்ஸ் கொண்ட சென்னை ஆடுதளத்தில் அவர்களால் சோபிக்க முடியும். பவர் பிளேவில் தீபக் சஹரும் சர்வதேச பந்து வீச்சாளர்களும் ஒரு சில விக்கெட்டுகளை எடுத்து ரன்களைக் கட்டுப்படுத்தினாலும் மத்திய ஓவர்களை இந்த விரல் சுழலர்கள் பார்த்துக் கொள்வார்கள். சென்னை அணி வெற்றி மந்திரம் எதிரணியின் ரன்களைக் கட்டுப்படுத்தி, மட்டையாட்டத்தின் போது நிதானமாக ஆரம்பித்து மத்திய ஓவர்களில் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசுவது. அந்த ஸ்டைல் மும்பை, பூனே ஆடுதளங்களில் இம்முறை எடுபடவில்லை. ஏனென்றால் அங்கு தொடக்கத்தில் விக்கெட் எடுக்க வேகமிக்க வீச்சாளர்கள் வேண்டும். கால்சுழலர்களாலே இங்கு மத்திய ஓவர்களில் பவுன்ஸையும் சுழலையும் அதிகம் பெற்று விக்கெட்டுகளை எடுக்க முடியும். ஐபிஎல்லின் இந்த பருவத்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ள சுழலர்கள் யார்? சஹல், குல்தீப் போன்றோர் தானே. ராஜஸ்தான், குஜராத், லக்னோ என நன்றாக ஆடி வரும் அணிகளில் எல்லாம் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்துபவர்கள் கால்சுழலர்களே. அணிக்கு ஒரு கால்சுழலரையாவது வைத்திருக்கிறார்கள், ஆனால் சென்னை அணியில் ஒரு கால்சுழலர் கூட இல்லை.

துவக்க வீச்சாளரான தீபக் சஹரின் காயத்தினாலான விலகலைப் பற்றி, அது பந்து வீச்சின் கூர்மையைக் குறைத்துள்ளதைப் பற்றி பலரும் பேசுகிறார்கள், ஆனால், ஒரு வீரர் இல்லாதபோது ஓர் அணி நிலைகுலைகிறதென்றால் அந்த அணியின் ஸ்குவாடில் குறையிருக்கிறது, போதுமான தெரிவுகள் அவர்களிடம் இல்லை எனப் பொருள். முகேஷ் சவுதிரி, துஷார் தேஷ்பாண்டே ஆகியோருக்கு போதுமான வேகமோ, அனுபவமோ இல்லை. ஹங்கர்கருக்கு இன்னும் ஏன் வாய்ப்பளிக்கவில்லை எனப் புரியவில்லை. பவர்பிளேயில் முதல் இரு வீச்சாளர்கள் வீசி முடித்ததும், அடுத்து வரும் ஓவர்களில் அணி முழுக்க ஆல்ரவுண்டர்களை சார்ந்திருப்பது மற்றொரு பலவீனம். நான்கு முழுநேர வீச்சாளர்கள், இரண்டு பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் என்பதே சரியான சேர்க்கையாக இருக்கும்.

மூன்றாவதாக, வயதான வீரர்கள். இவர்களுக்குக் காலம் போகப் போக ஆட்டநிலையைத் தக்க வைப்பது, உடற்தகுதியை உச்சத்தில் வைப்பது சிரமமாகும் (அம்பத்தி ராயுடு நல்ல உதாரணம்).

நான்காவதாக, இது ஜடேஜாவின் அணி அல்ல. தோனிக்கான ஓர் அணியை ஜடேஜா எப்படிக் கையாள முடியும்? அதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஜடேஜாவின் இலக்கை ஒட்டி ஒரு புதிய அணியை உருவாக்க வேண்டும்.

ஐந்தாவதாக, சென்னை அணி தனது முதல் நான்கு மட்டையாளர்களையே எப்போதும் நம்பியிருக்கும் அணியாக உள்ளது. தொடக்க வரிசையில் உள்ள ருத்துராஜ், மோயின் அலி, ராயுடு ஆகியோர் ரன் அடிக்காதது அவர்களுடைய பின்வரிசை மட்டையாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த அணியுடைய நம்பிக்கையைக் குலைக்கிறது.

ஆறாவதாக, சென்னையைத் தவிர பிற ஆடுதளங்களிலும் ஆடும்படியான அணியை அவர்கள் உருவாக்கவில்லை.

சுருக்கமாக, தலைமை மாற்றத்துக்கு தயாராகாதது, அணியில் போதுமான ஆழமோ தெரிவுகளோ இல்லாதபடி ஏலத்தில் சொதப்பியது சென்னை அணியின் திணறலுக்கு முக்கிய காரணமாகத் தெரிகிறது.

spacer.png

மும்பை சொதப்பிய கதை

மும்பை அணிக்கு வருவோம். முதலில், அவர்களுடைய ஸ்குவாடும் ஏதோ பாதி கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தைப் போல இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றிலேயே மும்பை அணி ஸ்குவாடு இவ்வளவு பலவீனமாகத் தெரிந்ததில்லை.

முதலில், நிர்வாகம் தவறாக ஏலத்தில் முதலீடு செய்தது அல்லது புது அணிகளின் வருகை இவர்களுடைய அணியின் வலிமையைக் குறைத்துள்ளது.

இரண்டாவதாக, டேனியல் சேம்ஸ், டிம் டேவிட், பிரெவிஸ் ஆகியோரின் தேர்வும் தவறானது. அவர்கள் இந்திய ஆடுதளங்களில் சிறப்பாக ஆடக் கூடியவர்கள் அல்ல. அப்படி இருக்க சீனியர் வீரர்கள் குறைவாக உள்ள நிலையில் அவர்கள் மோசமாக ஆடி, ரன் அடிக்கும் அழுத்தத்தை முழுக்க மத்திய வரிசை போட்டிருக்கக் கூடாது. அதே போல ஒன்றிரண்டு வாய்ப்புகளுக்குப் பிறகு அவர்களை நீக்குவதும் தவறு. இது மும்பையின் மத்திய வரிசையை தெகிலான தகர டப்பாவைப் போலாக்கி விட்டது. சத்தம் மட்டுமே வருகிறது, ரன்கள் இல்லை. திலக் வர்மா மட்டுமே ஒரே சிறப்பான தேர்வு.

மூன்றாவதாக, டிம் டேவிட், சாம்ஸ் ஆகியோருடன் வேகவீச்சாளரான மெரடித்தின் தேர்விலும் எனக்கு உடன்பாடில்லை. அவருக்கு நீளம், திசையில் போதுமான கட்டுப்பாடு இல்லை. இவர்களுக்காக செலவழித்த பணத்தை வலுவான இளம் இந்திய மட்டையாளர்களை எடுப்பதிலும் செலவிட்டிருக்க வேண்டும்.

நான்காவதாக, பொலார்டின் வயதும், உடற்தகுதி இன்மையும் அவரது பந்து வீச்சையும் மட்டையாட்டத்தையும் பாதிக்கிறது. ஆனால் அவரை நீக்கவும் துணிச்சல் இல்லை. அவர் அணியின் கழுத்தில் ஒரு கல்லைப் போல தொங்கிக் கொண்டிருக்கிறார்.

ஐந்தாவதாக, மத்திய ஓவர்களில் மார்கண்டே, முருகன் அஷ்வின் ஆகியோரை ரோஹித் ஷர்மா தொடர்ந்து ஆட வைத்திருக்க வேண்டும். முருகன் அஷ்வினுக்கு நான்கு ஓவர்களைக்கூட அவர் தொடர்ந்து வழங்காதது ஒரு முக்கிய தவறாகும். அதே போல, பொலார்டின் இடத்தில் பேபியன் ஆலன் நல்ல தேர்வாக இருந்திருப்பார். மெதுவான ஆடுதளங்களில் இவர்கள் அணியின் பந்து வீச்சை பலப்படுத்தி இருப்பார்கள்.

இப்போதைய நிலையில் ரோஹித் ஷர்மாவால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை. அவர் தொடர்ந்து சதங்கள் அடித்தால் மட்டுமே மட்டையாட்ட வரிசை ஓரளவுக்கு சமாளிக்கும். தொடக்கத்தில் ரோஹித் ஜொலித்தால், கீழ்மத்திய வரிசையில் டிம் டேவிடாலும் நன்றாக ஆட முடியும். ஆனால் அப்போதும் பந்து வீச்சு பிரச்சனையாகவே இருக்கும். அதனால் பந்து வீச்சிலும் பாரித்த மாற்றங்கள் தேவை.

இந்த முறை, பழம் பெருச்சாளி அணிகளின் கப்பல்களில் ஏகப்பட்ட ஓட்டைகள். புதிய அணிகளின் ஆதிக்கம் ஐபிஎல்லின் நீரோட்டத்தை மாற்றும் வகையில் இருக்கப் போகிறது!

 

 

https://minnambalam.com/entertainment/2022/04/12/13/IPL-2022-CSK-and-MI-at-low-profiles

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நம்ம உறவு ஒருவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்......!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CSK முதல் வெற்றி: உத்தப்பா - ஷிவம் துபே அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணியை தோற்கடித்தது

  • அஷ்ஃபாக்
  • பிபிசி
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

IPL

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல். 2022 தொடங்கியது முதல் 4 போட்டிகளில் தொடர் தோல்வி. பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் சொதப்பல்.. சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப்க்குள் நுழையுமா என்கிற ஐயம். ஜடேஜாவின் கேப்டன்சி குறித்து மிகப்பெரிய விவாதம். இவை அத்தனையையும் பெங்களுருவுக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் தவிடு பொடியாக்கியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

நவி மும்பையில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுருவுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 23 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது

ஏமாற்றிய ருத்துராஜ் - தடுமாறிய சி.எஸ்.கே

டாஸில் தோற்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. ருத்துராஜ் 17 ரன்களிலும், மொயின் அலி 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

வழக்கம்போல் இந்த முறையும் தோல்விதான் என ரசிகர்கள் எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில்தான் அந்த அதிரடி ஆக்ஷன் அரங்கேறியது.

ராபின் உத்தப்பாவும் ஷிவம் துபேவும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் 10 ஓவர்களில் 60 ரன்கள் மட்டுமே எடுத்து திணறிக் கொண்டிருந்த சி.எஸ்.கேவை இருவரும் சேர்ந்து தூக்கி நிறுத்தினர்.

தொடங்கிய அதிரடி

11 முதல் 15 ஓவர்களுக்கு இடையில் மட்டும் 73 ரன்கள் குவித்தது இந்த ஜோடி. உத்தப்பா 33 பந்துகளில் அரைசதம், துபே 30 பந்துகளில் அரைசதம் எடுத்தனர். ஆடுகளத்தில் நங்கூரமிட்ட இருவரும் மிடில் ஓவர்களில் கிடைத்த பந்துகளையெல்லாம் அடித்து நொறுக்கினர். உத்தப்பா 50 பந்துகளில் 9 சிக்சர், 4 பவுன்டரிகளுடன் 88 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஐபிஎல் போட்டிகளில் தனது உச்சபட்ச ஸ்கோரை இன்றைய ஆட்டத்தில் பதிவு செய்திருந்தார் உத்தப்பா

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

பந்துவீச்சை நாலாபுறமும் பிளந்து கட்டிய இந்த ஜோடி 165 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டுமே 156 ரன்கள். ஐபிஎல் வரலாற்றிலேயே 3வது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி எனும் சாதனையை படைத்துள்ளனர் உத்தப்பாவும் - துபேவும்

46 பந்துகளை எதிர்கொண்டு அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 8 சிக்சர், 5 பவுன்டரிகளுடன் 95 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் சேர்த்தது

நம்பிக்கை அளித்த தீக்ஷனா

217 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.

 

சி.எஸ்.கே. ரசிகர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கோப்புப் படம்: சி.எஸ்.கே. ரசிகர்

கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த தொடக்க ஆட்டக்காரர்களான டு பிளெசிஸையும் இளம் வீரர் அனுஜ் ராவத்தையும் தனது துல்லியமான பந்துவீச்சின் மூலம் வீழ்த்தினார் மஹீஷ் தீக்ஷனா. விராட் கோலி 1 ரன்னில் முகேஷ் சவுத்ரி பந்துவீச்சில் துபேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கடந்த போட்டிகளில் பவர் பிளேயில் விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய சி.எஸ்.கே இந்த முறை 3 விக்கெட்களை சாய்த்திருந்தது.

மேக்ஸ்வெல் 2 சிக்சர் 2 பவுன்டரிகள் விளாசி சென்னை அணியை அச்சுறுத்தத் தொடங்கிய சமயத்தில் கேப்டன் ஜடேஜாவின் சுழலில் சிக்கினார்.

வெற்றிக்கு போராடிய பெங்களூரு

பெங்களூரு அணி தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் ஷாபாஷூம் பிரபு தேசாயும் ஜோடி சேர்ந்து ரன் குவிக்கத் தொடங்கினர். 5வது விக்கெட்டிற்கு 50 ரன்களையும் தாண்டி விளையாடிக் கொண்டிருந்தது இந்த ஜோடி. இருவரையும் தீக்ஷனா பவுல்டாக்கி கச்சிதமாக வேலையை முடித்தார்.

6 ரன்கள் எடுத்திருந்தபோது தினேஷ் கார்த்திக்கின் கேட்சை சென்னை வீரர் முகேஷ் நழுவ விட. அதற்காக சி.எஸ்.கே கொடுத்த விலையோ 28 ரன்கள்..

கடைசி வரை ஆட்டத்தை கொண்டு செல்ல தீவிரம் காட்டிய தினேஷ் கார்த்திக், பிராவோ பந்துவீச்சில் கேப்டன் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து 34 ரன்களில் விடைபெற்றார். நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய ஆட்டங்களில் நாட் அவுட் பேட்ஸ்மேனாகவே திகழ்ந்த தினேஷ் கார்த்திக் சி.எஸ்.கேவிடம் முதல் முறையாக விக்கெட்டை பறிகொடுத்திருக்கிறார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. ஆட்டநாயகனாக ஷிவம் துபே தேர்வு செய்யப்பட்டார்

200வது ஐபிஎல் போட்டியில் விளையாடிய சி.எஸ்.கே, நடப்பு தொடரில் பலமிக்க அணியாக திகழும் பெங்களூரை சாய்த்து முதல் வெற்றியை ருசித்திருக்கிறது. சிறப்பான ஆட்டத்தின் மூலம் விமர்சனங்களுக்கு ஓரளவு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. பேட்டிங்கில் அதிரடி காட்டியிருந்தாலும் ருத்துராஜ் கெய்க்வாட்டின் நிலை தொடர்ந்து கவலையளிக்கிறது. பந்துவீச்சில் தீக்ஷனா நம்பிக்கை அளிக்கிறார். தொடக்கத்தில் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசில முக்கிய கேட்ச்களை நழுவவிட்டதன் விளைவாக சி.எஸ்.கே கணிசமான ரன்களை காணிக்கை அளிக்க வேண்டியிருந்தது. இதனை எதிர்வரும் போட்டிகளில் சரி செய்வது அந்த அணிக்கு மிகவும் அவசியம். 4 தோல்விகளுக்குப் பிறகு வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ள சி.எஸ்.கே நடப்பு ஐபிஎல்லில் பலம் மிக்க அணியாக உருவெடுக்குமா, பிளே ஆஃப்புக்குள் நுழையுமா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு இனி வரும் ஆட்டங்களில்தான் விடை தெரியும்.

https://www.bbc.com/tamil/sport-61089793

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுக்கு பறந்த அந்தப் பந்தை ஜடேஜா எல்லையில் நின்று பிடித்த விதம் மிக அழகு.......இப்பதான் கப்டனின் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிகின்றது.......!  😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

ஆறுக்கு பறந்த அந்தப் பந்தை ஜடேஜா எல்லையில் நின்று பிடித்த விதம் மிக அழகு.......இப்பதான் கப்டனின் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிகின்றது.......!  😂 

அது ஆறுக்கு போகவேண்டிய பந்துதான்! போயிருந்தால்  ஆட்டமே மாறியிருக்கும். CSK வென்றது ஒரே கடுப்பா இருக்கு!!😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Eppothum Thamizhan said:

அது ஆறுக்கு போகவேண்டிய பந்துதான்! போயிருந்தால்  ஆட்டமே மாறியிருக்கும். CSK வென்றது ஒரே கடுப்பா இருக்கு!!😡

முகேஷ் சவுத்திரி அந்த இரு பந்துகளையும் பிடித்திருந்தால் ஆட்டம் எப்பவோ முடிந்திருக்கும் 😂

Edited by MEERA
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Eppothum Thamizhan said:

அது ஆறுக்கு போகவேண்டிய பந்துதான்! போயிருந்தால்  ஆட்டமே மாறியிருக்கும். CSK வென்றது ஒரே கடுப்பா இருக்கு!!😡

 

35 minutes ago, MEERA said:

முகேஷ் சவுத்திரி அந்த இரு பந்துகளையும் பிடித்திருந்தால் ஆட்டம் எப்பவோ முடிந்திருக்கும் 😂

ஒரு கோடியில் இரு மலர்கள் ஒன்று இறைவன் தாளை சேரும் ஒன்று (மாலையாகி) தோளை சேரும்..........!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் : மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி

பதிவு: ஏப்ரல் 13,  2022 
ஐபிஎல் : மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி
Image Courtesy : IPL

12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது

மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள்  மோதின   .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை  தேர்வு செய்தது .அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக தவான் ,மயங்க் அகர்வால் களமிறங்கினார் .தொடக்கம் முதல் மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர்.

அதிரடியாக விளையாடிய இருவரும் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் சேர்த்தது .சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர் .மயங்க் அகர்வால் 52 ரன்களிலும் ,தவான் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

கடைசி நேரத்தில் ஜிதேஷ் சர்மா ,ஷாருக்கான் அதிரடி காட்ட, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு  198 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 199 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 28 ரன்களிலும்,இஷான் கிஷன் 3 ரன்களிலும் , ஆட்டமிழந்தனர் .

பின்னர் வந்த திலக் வர்மா ,டெவால்ட் பிரீவிஸ் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர் ராகுல் சஹர் வீசிய ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பறக்க விட்டு  வாணவேடிக்கை காட்டினார் டெவால்ட் பிரீவிஸ்.

தொடர்ந்து விளையாடியாய அவர் 25 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.பின்னர் திலக் வர்மா 36 ரன்களிலும் ,பொல்லார்ட் 10 ரன்களிலும் (ரன் அவுட் ) ஆட்டமிழந்தனர் .

மறுபுறம் நிலைத்து  ஆடிய சூர்யகுமார்  யாதவ் அதிரடியாக விளையாடி 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் 

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9  விக்கெட் இழப்பிற்கு 186  ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது .

இதனால் 12  ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது 

 

https://www.dailythanthi.com/News/TopNews/2022/04/13234230/IPL-Punjab-beat-Mumbai-to-win.vpf

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் : ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி

பதிவு: ஏப்ரல் 14,  2022 23:37 PM
ஐபிஎல் : ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி
Image Courtesy : IPL

37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது

மும்பை,

15-வது சீசன் ஐபிஎல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 24-வது லீக் போட்டி மும்பையில் உள்ள டி.ஒய் பட்டேல் மைதானத்தில் நடைபெற்றது 

இன்று நடைபெற்ற போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின 

 டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது .அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் மேத்யூ வேட் (ரன் அவுட் ), 12 ரன்களிலும்  விஜய் ஷங்கர் 2 ரன்களிலும் ,சுப்மன் கில் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.பின்னர் வந்த ஹார்திக் பாண்டியா ,அபினவ் மனோகர் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தனர். 

சிறப்பாக விளையாடிய அபினவ் மனோகர் 43 ரன்களிலில் ஆட்டமிழந்தார் .  கடைசி நேரத்தில் மில்லர் ,ஹார்திக் பாண்டியா இருவரும் பந்துகளை ,பவுண்டரி  சிக்சருக்கு பறக்கவிட்டனர் .

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் 4 இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது . சிறப்பாக விளையாடிய ஹார்திக் பாண்டியா 52 பந்துகளில் 87 ரன்களும் ,  டேவிட் மில்லர்  14 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.

இதனை தொடர்ந்து 193 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக  படிக்கல் , ஜோஸ் பட்லர் களமிறங்கினர் .படிக்கல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் . 

தொடக்கத்தில் விக்கெட் இழந்தாலும் ஜோஸ் பட்லர் அதிரடி குறையவில்லை . குஜராத் அணியின் பந்துவீச்சை அவர் துவம்சம்  செய்தார்.  அதிரடியாக விளையாடி  23 பந்துகளில் அரை சதம் அடித்த பட்லர், 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.அதன்பிறகு வந்த வீர்ரகள் நிலைத்து  நின்று ஆடாததால் ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது .

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 155  ரன்கள் எடுத்தது .இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது 

 

https://www.dailythanthi.com/Sports/Cricket/2022/04/14233715/IPL-Gujarat-beat-Rajasthan-by-a-huge-margin.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் : கொல்கத்தா அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி

பதிவு: ஏப்ரல் 15,  2022 23:36 PM
ஐபிஎல் : கொல்கத்தா அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி
Image Courtesy : IPL

7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

மும்பை,

இன்றைய ஐ.பி.எல். போட்டியில் 25-வது லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின 

 டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் பின்ச் 7 ரன்களிலும் ,வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .பின்னர் வந்த சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் ,நிதிஷ் நிலைத்து நின்று ஆடினர். அணியின் ஸ்கோர் 70 ஆக இருந்தபோது ஷ்ரேயாஸ் அய்யர் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த ஷெல்டன் ஜாக்சன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராணா 32 பந்துகளில் அரை சதம் அடித்தார்.தொடர்ந்து விளையாடிய அவர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார் . கடைசி நேரத்தில் ஆண்ட்ரே ரசல் அதிரடி காட்டினார் .அவர் 25 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175  ரன்கள் எடுத்தது.

176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா ரன்களிலும் ,கேன் வில்லியம்சன் ரன்களிலும்  ஆட்டமிழந்தனர் .தொடர்ந்து ராகுல் திரிபாதி ,ஐடன் மார்க்ரம் சிறப்பாக விளையாடினர் .

மார்க்ரம் நிதான ஆட்டத்தை தொடர ,திரிபாதி பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்கவிட்டார் .அதிரடியாக விளையாடிய அவர் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார் தொடர்ந்து விளையாடிய அவர் 71 ரன்களில் ஆட்டமிழந்தார் .

மறுபுறம் மார்க்ரம் நிதானத்தை விட்டு ,அதிரடியாக விளையாட தொடங்கினார் . சிறப்பாக விளையாடி 31 பந்துகளில்  அவர் அரைசதம் அடித்தார் .

இறுதியில் 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. 

https://www.dailythanthi.com/Sports/Cricket/2022/04/15233610/IPL-Hyderabad-beat-Kolkata-to-win.vpf

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: மும்பை அணிக்கு 6ஆவது தோல்வி

mi

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜயண்ட்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஐபிஎல் தொடரின் 26ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னெள சூப்பர் ஜயண்ட்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற மும்பை அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.  லக்னெள அணியின் குயிண்டன் டி காக் 13 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்தார். இதனால் முதல் 6 ஓவர்களில் லக்னெள, 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்தது. 10 ஓவர்களில் ஸ்கோர் 94 ஆக உயர்ந்தது. 

மில்ஸ் வீசிய 13-வது ஓவரில் ராகுல், மனிஷ் பாண்டே தலா 2 பவுண்டரிகளை அடித்தார்கள். பாண்டே, 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 33 பந்துகளில் அரை சதமெடுத்த ராகுல், அதன்பிறகு அதிரடியாக விளையாடினார். ஆலன் வீசிய 15-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரின் முடிவில் லக்னெள அணி 150 ரன்களை எட்டியது. கடைசி ஐந்து ஓவர்களில் உனாட்கட்டும் பும்ராவும் நன்றாகப் பந்துவீசி ரன்கள் குவிக்கும் வேகத்தைக் கட்டுப்படுத்தினார்கள். 

எனினும் மில்ஸ் வீசிய 19-வது ஓவரில் 22 ரன்கள் கிடைத்தன. ராகுல், 56 பந்துகளில் சதமடித்து அசத்தினார். தீபக் ஹூடா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி ஓவரை வீசிய உனாட்கட் நான்கு ரன்கள் மட்டுமே கொடுத்து ஸ்கோர் 200 ரன்களைத் தாண்டாமல் பார்த்துக்கொண்டார். லக்னெள அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. ராகுல் 60 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

அடுத்து களமிறங்கிய மும்பை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் லக்னெள சூப்பர் ஜயண்ட்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 37, டெவால்ட் ப்ரீவிஸ் 31, திலக் வர்மா 26, கெய்ரன் பொல்லார்ட் 25 ரன்கள் எடுத்தனர்.  லக்னெள அணியில் சிறப்பாக பந்துவீசிய ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள 6 ஆட்டங்களிலும் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது. 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/16/ipl-2022-lucknow-beat-mumbai-by-18-runs-3828002.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்காவது வெற்றியை பதிவு செய்தது பெங்களூரு!

glen_maxvell101755

தினேஷ் காா்த்திக் 66, மேக்ஸ்வெல் 55 ஆகியோரின் அபார ஆட்டத்தால் டில்லி கேபிடல்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு.

இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 27-ஆவது ஆட்டம் மும்பையில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற டில்லி பௌலிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு தரப்பில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 8, அனுஜ் ரவாத் 0 என சொற்ப ரன்களுடன் திரும்பினா்.

மேக்ஸ்வெல், தினேஷ் காா்த்திக் அதிரடி அரைசதம்:

ரன்களை விளாசுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட விராட் கோலியும் 12 ரன்களுக்கு அவுட்டானாா். அதன்பின் ஆட வந்த கிளென் மேக்ஸ்வெல் அபாரமாக ஆடி 2 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 55 ரன்களை விளாசி அவுட்டானாா்.

சுயாஷ் பிரபுதேசாய் 6 ரன்களுடன் வெளியேற, தினேஷ் காா்த்திக்-ஷாபாஸ் அகமது இணை அதிரடியாக ஆடியது. தினேஷ் காா்த்திக் தலா 5 சிக்ஸா், பவுண்டரியுடன் 34 பந்துகளில் 66 ரன்களையும், ஷாபாஸ் அகமது 32 ரன்களையும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனா்.

வங்கதேச பௌலா் முஸ்தபிஸூா் ரஹ்மான் வீசிய 18-ஆவது ஓவரில் 4 பவுண்டரி, 2 சிக்ஸா்கள் என மொத்தம் 30 ரன்களை விளாசினாா்.

பெங்களூரு 189/5: இந்நிலையில், நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் பெங்களூரு அணி 189/5 ரன்களைக் குவித்தது.

டில்லி தரப்பில் சா்துல், கலீல், அக்ஸா், குல்தீப் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

டில்லி 173/7: 190 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய டில்லி அணி தரப்பில் டேவிட் வாா்னா் மட்டுமே அதிரடியாக ஆடி 5 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 38 பந்துகளில் 66 ரன்களை விளாசினாா். கேப்டன் ரிஷப் பந்த் 34 ரன்களை எடுத்து வெளியேறிய நிலையில் மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.

முடிவில் 20 ஓவா்களில் 173/7 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி கண்டது டில்லி.

பெங்களூரு தரப்பில் ஹேஸல்வுட் 3, சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

16 ரன்கள் வித்தியாசத்தில் டில்லியை வீழ்த்திய பெங்களூரு அணிக்கு இது 4-ஆவது வெற்றியாகும்.

 

https://www.dinamani.com/sports/sports-news/2022/apr/16/bangalore-recorded-their-fourth-win-3828173.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லிவிங்ஸ்டன் அரைசதம் வீண்: பஞ்சாபை எளிதில் வீழ்த்திய சன்ரைசர்ஸ்

sunr

பஞ்சாப் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
ஐபிஎல் தொடரின் 28ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. மும்பையின் டி ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் கேப்டன் மயங் அகர்வால் காயம் காரணமாக இன்றைய போட்டியில் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக ஷிகர் தவான் கேப்டன் பொறுப்பை கவனிக்கிறார். 
பஞ்சாப் கிங்ஸ் அணியில் லியாம் லிவிங்ஸ்டன், ஷாரூக்கான் ஆகியோரைத் தவிர யாரும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. அதிரடியாக விளையாடிய லிவிங்ஸ்டன் 33 பந்துகளில் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷாரூக்கான் தன் பங்கிற்கு 26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 4, புவனேஷ்குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் வில்லியம்சன் 9 ரன்கள் எடுத்திருந்தபோது ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ராகுல் திரிபாதி களம்கண்டார். திரிபாதி 22 பந்துகளில் 34 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து அபிஷேக் ஷர்மாவும் 31 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 
அடுத்து வந்த எய்டன் மார்க்கரம், நிக்கோலஸ் பூரன் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மார்க்கரம் 41(27), பூரன்35(30) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/17/ipl2022-hyderabad-beat-punjab-by-7-wickets-3828510.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த 18 வது ஓவர் சென்னை அணியின் வெற்றி வாய்ப்பை அப்படியே விழுங்கி விட்டது.......!  😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மில்லர், ராஷித் கான் அதிரடி : சென்னையை வெற்றிகொண்டது குஜராத்

(என்.வீ.ஏ.)

சென்னை சுப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையில் புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் ஞாயிறன்று கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்களால் குஜராத் டைட்டன்ஸ் வெற்றிபெற்றது.

Bat down, and arms and mouth wide open: David Miller makes his ground, Gujarat Titans vs Chennai Super Kings, IPL 2022, Pune, April 17, 2022

இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று குஜராத் டைட்டன்ஸ் முதலிடத்தில் இருக்கிறது.

David Miller is lifted by Lockie Ferguson after a tight win, unbeaten 94 off 54 balls, Gujarat Titans vs Chennai Super Kings, IPL 2022, Pune, April 17, 2022

வழமையான அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா, உபாதை காரணமாக இந்தப் போட்டியில் விளையாடாததுடன் அவருக்கு பதிலாக ராஷித் கான் அணித் தலைவராக செயற்பட்டார். சகலதுறைகளிலும் பிரகாசித்துவரும் பாண்டியா இல்லாதது குஜராத் டைட்டன்ஸுக்கு பெரிய பாதிப்பாக அமையும் என கருதப்பட்டது.

This Rashid Khan back foot drive says eat your heart out Babar Azam, Gujarat Titans vs Chennai Super Kings, IPL 2022, Pune, April 17, 2022

ஆனால், டேவிட் மில்லர், ராஷித் கான் ஆகியோரது அதிரடி துடுப்பாட்டங்கள் போட்டியில் குஜராத்துக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.

Dwayne Bravo reacts to a poor piece of fielding, Gujarat Titans vs Chennai Super Kings, IPL 2022, Pune, April 17, 2022

170 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

David Miller produced another one of his special IPL rearguards, Gujarat Titans vs Chennai Super Kings, IPL 2022, Pune, April 17, 2022

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆரம்ப வீரர் ஷுப்மான் கில் (0), விஜெய் ஷங்கர் (0) ஆகிய இருவரும் முதல் 2 ஓவர்களில் ஆட்டமிழந்தமை குஜராத் டைட்டன்ஸுக்கு பேரிடியாக அமைந்தது.

Dwayne Bravo brings out the No. 1 dance, Gujarat Titans vs Chennai Super Kings, IPL 2022, Pune, April 17, 2022

அபிநவ் மனோஹரும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியாமல் 12 ஓட்டங்களுடன் வெளியேறினார். (16 - 3 விக்.)

The old firm: Ravindra Jadeja and MS Dhoni plotting away, Gujarat Titans vs Chennai Super Kings, IPL 2022, Pune, April 17, 2022

சாதிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கபப்பட்ட ஆரம்ப வீரர் ரிதிமான் சஹா (11), ராகுல் தெவாட்டியா (6) ஆகியோரும் ஆட்டம் இழக்க (87 - 5  விக்.)   குஜராத் டைட்டன்ஸ் மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

Ravindra Jadeja strikes a blow, Gujarat Titans vs Chennai Super Kings, IPL 2022, Pune, April 17, 2022

ஆனால், டேவிட் மில்லர், ராஷித் கான் ஆகிய இருவரும் துணிச்சலை வரவழைத்து ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி அணியை வெற்றி அடையச் செய்து சென்னைக்கு 5ஆவது தோல்வியைக் கொடுத்தனர்.

Ruturaj Gaikwad has a free swing, Gujarat Titans vs Chennai Super Kings, IPL 2022, Pune, April 17, 2022

போட்டியின் 18ஆவது ஓவரில் கிறிஸ் ஜோர்டன் வீசிய ஓவரில் குவிக்கப்பட்ட 25 ஓட்டங்களே ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

Lockie Ferguson and Yash Dayal celebrate the wicket of Ruturaj Gaikwad, Gujarat Titans vs Chennai Super Kings, IPL 2022, Pune, April 17, 2022

டேவிட் மில்லர் 51 பந்துகளில் 8 பவுண்டறிகள்,  6 சிக்ஸ்கள் அடங்கலாக 94 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். ராஷித் கான் 21 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 40 ஓட்டங்களைக் குவித்தார். இவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பந்துவீச்சில் ட்வேன் ப்ராவோ 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Ambati Rayudu goes down the ground, Gujarat Titans vs Chennai Super Kings, IPL 2022, Pune, April 17, 2022

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் ரொபின் உத்தப்பா (3), மொயீன் அலி (1) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க சென்னை சுப்பர் கிங்ஸ் 6ஆவது ஓவரில் 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து ருத்துராஜ் கய்க்வாட், அம்பாட்டி ராயுடு ஆகிய இருவரும் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து சென்னை சுப்பர் கிங்ஸை நல்ல நிலையில் இட்டனர்.

Ruturaj Gaikwad clips the ball away, Gujarat Titans vs Chennai Super Kings, IPL 2022, Pune, April 17, 2022

அம்பாட்டி ராயுடு 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மொத்த எண்ணிக்கை 131 ஓட்டங்களாக இருந்தபோது ருட்டுராஜ் கய்க்வாடும் நடையைக் கட்டினார்.

48 பந்துகளை எதிர்கொண்ட ருட்டுராஜ் கய்க்வாட் 5 சிக்ஸ்கள், 5 பவுண்டறிகளுடன் 73 ஓட்டங்களைக் குவித்தார்.

ஷிவம் டுபே 19 ஓட்டங்களுடன் கடைசிப் பந்தில் ரன் அவுட் ஆனார். அணித் தலைவர் ரவிந்த்ர ஜடேஜா 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

Chennai Super Kings fans thronged to the Pune stadium, Gujarat Titans vs Chennai Super Kings, IPL 2022, Pune, April 17, 2022

 

 

https://www.virakesari.lk/article/125878

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் அணியில் 12 பேர் விளையாடினால் எப்படி வெல்வது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

ஓர் அணியில் 12 பேர் விளையாடினால் எப்படி வெல்வது?

 சிஎஸ்கேயில் பத்துப்பேர் விளையாடுவதால்தான் தோல்விகள் தொடர்ந்து வருகின்றன! வயசாளி விலகி வழியை விட்டால் 11 பேர் விளையாடலாம்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

 சிஎஸ்கேயில் பத்துப்பேர் விளையாடுவதால்தான் தோல்விகள் தொடர்ந்து வருகின்றன! வயசாளி விலகி வழியை விட்டால் 11 பேர் விளையாடலாம்😜

அங்கு மட்டையாளர்கள் எல்லோருமே வயசாளிகள் & அனுபசாலிகள்.

பந்துவீச்சாளர்கள் அனுபவமற்ற இளைஞர்கள். 

இதுதான் அணியில் பாரிய இடைவெளியை ஏற்படுத்துகிறது.

நீங்கள் எதிர்பார்ப்பது போல் தோனி இந்தவருடத்துடன் விலகுவார். ஆனால் அணிக் கட்டமைப்பு அத்துடன் சிதறிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட.....சும்மா நொட்டிக்கொண்டிருந்த ராசீத்கான் அந்த 18வது ஓவரில் ஏதோ உரு வந்ததுபோல் விளையாடி ஆட்டத்தையும் திசை மாற்றி குஜராத்துக்கு நம்பிக்கையையும் குடுத்து அவுட்டாகி போனார்......எதிர்பார்க்கவே இல்லை......!  😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2022 - CSK Vs GT: வெற்றியை கோட்டைவிட்ட சி.எஸ்.கே - தோல்விக்கு யார் காரணம்?

  • அஷ்ஃபாக்
  • பிபிசி தமிழ்
9 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சென்னை அணி

பட மூலாதாரம்,BCCI/IPL

கிறிஸ் ஜோர்டன் வீசிய அந்த ஒரு ஓவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. டேவிட் மில்லரின் வெறித்தனமான ஆட்டம் ரஷீத் கானுக்கும் தொற்றிக் கொண்டது. 18வது ஓவரை கிறிஸ் ஜோர்டன் வீசினார். முதல் 2 பந்துகள் சிக்சருக்கு பறந்தன. 3வது பந்து பவுண்டரி; 4வது பந்து சிக்சர். அந்த ஓவரில் மட்டும் 25 ரன்களை வாரி வழங்கியிருந்தது சி.எஸ்.கே.

தனி ஆளாய் போராடிக் கொண்டிருந்த மில்லருக்கு மினி ஹெலிகாப்டர் ஷாட்கள் மூலம் 21 பந்துகளில் 40 ரன்கள் விளாசி ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து பெற்ற கேப்டன் பொறுப்பை கச்சிதமாக முடித்துக் கொடுத்திருக்கிறார் ரஷூத் கான். 51 பந்துகளில் மில்லர் விளாசிய 91 ரன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் வெற்றிப் பயணத்திற்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது.

கடைசி ஓவர் வரை போராடிய குஜராத் அணி சி.எஸ்.கேவை வீழ்த்தி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

ஸ்பார்க்குடன் விளையாடிய ருத்து

புனேவில் நடைபெற்ற 29வது ஐபிஎல் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விளையாடாததால் அவருக்கு பதிலாக ரஷீத் கான் குஜ்ராத் அணியை வழிநடத்தினார்.

சென்னை அணி வீரர் உத்தப்பா 3 ரன்னிலும் மொயின் அலி 1 ரன்னிலும் விடைபெற்றனர். பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறி வந்த ருத்துராஜ் கெய்க்வாட் இந்த முறை அதிரடி காட்டினார். அவருடன் ஜோடி சேர்ந்த ராயுடுவும் கணிசமான ரன்களை குவிக்க 3வது விக்கெட்டிற்கு சி.எஸ்.கே 92 ரன்கள் விளாசியது. ராயுடு 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ருத்துராஜ் 48 பந்துகளில் 73 ரன்களுக்கு விடைபெற்றார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

கடைசி 5 ஓவர்களில் சிறப்பாக பந்துவீசிய குஜராத் அணி, சி.எஸ்.கேவின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியது. கடைசி ஓவரில் மட்டும் ஜடேஜா - துபே இணை 2 சிக்சர் 1 பவுன்டரி விளாச சென்னை அணி 169 ரன்கள் சேர்த்தது

170 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது குஜராத் டைடன்ஸ்.

பந்துவீச்சில் மிரட்டிய தீக்ஷனா, சவுத்ரி

சவுத்ரி வீசிய முதல் ஓவரில் ஷுப்மன் கில் டக் அவுட் ஆனார். தீக்ஷனா வீசிய 2வது ஓவரில் விஜய் சங்கர் டக் அவுட் ஆனார். பவர் பிளேயில் விக்கெட் எடுப்பதில் சிரமப்பட்ட சென்னை அணி இந்த முறை துல்லியமாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்களை கைப்பற்றியது. 13வது ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்து திணறிக் கொண்டிருந்தது குஜராத். சென்னை அணியின் வெற்றி மெல்ல மெல்ல உறுதியாகிக் கொண்டிருந்த சமயத்தில்தான், அதை தலைகீழாக புறப்பட்டிப் போடத் தொடங்கினார் டேவிட் மில்லர்

டேவிட் மில்லரின் அதிரடி ஆட்டம்

தனி ஆளாக ரன் குவிக்கத் தொடங்கிய மில்லர் சிக்சரும் பவுன்டரியுமாக விளாசி 28 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்தார். மில்லரை கட்டுப்படுத்த சி.எஸ்.கேவும் ஏதேதோ முயன்று பார்த்தது. ஆனால் ரன் மழை நின்றபாடில்லை.

 

ஐபிஎல் 2022 - CSK Vs GT: வெற்றியை கோட்டைவிட்ட சி.எஸ்.கே - தோல்விக்கு யார் காரணம்?

பட மூலாதாரம்,BCCI/IPL

குஜராத் வெற்றி பெற கடைசி 6 ஓவர்களில் 71 ரன்கள் தேவைப்பட்டன. மில்லருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரஷீத் கான் தொடக்கத்தில் சிங்கில்ஸ் மட்டுமே எடுத்து தடுமாறினாலும், கிறிஸ் ஜோர்டன் வீசிய 18வது ஓவரை குறி வைத்து பொலந்து கட்டினார். 21 பந்துகளில் 3 சிக்சர் 2 பவுன்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்து ஆட்டமிழந்தார் ரஷீத் கான்

வெற்றியை நழுவவிட்ட சி.எஸ்.கே

ஆட்டம் விறுவிறுப்பாக கடைசி ஓவர் வரை நகர்ந்தது. 6 பந்துகளில் குஜராத்தின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டன. வேறு வழியின்றி கிறிஸ் ஜோர்டன் கடைசி ஓவரை வீச முதல் 2 பந்துகள் டாட் பாலாக மாறின. ஆடுகளத்தில் பரபரப்பு நிலவியது. 3வது பந்தில் சிக்சர். 4வதாக போடப்பட்ட புல்டாஸ் பந்து கேட்சாக மாறியது. ஆனால் அது நோ பால். 5வது பந்தில் 2 ரன்கள் ஓடி ரன் அவுட்டில் இருந்து நூலிழையில் தப்பித்தது குஜராத். இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்து சென்னை அணிக்கு ஷாக் கொடுத்தது குஜராத் டைடன்ஸ்.

தனி ஆளாக போராடி 6 சிக்சர், 8 பவுன்டரிகளுடன் 94 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட டேவிட் மில்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மில்லரின் அதிரடி ஆட்டத்தால் சி.எஸ்.கேவின் வெற்றிக்கனவு தகர்க்கப்பட்டது.

மோசமான பந்துவீச்சால் தோல்வி

 

ஐபிஎல் 2022 - CSK Vs GT: வெற்றியை கோட்டைவிட்ட சி.எஸ்.கே - தோல்விக்கு யார் காரணம்?

பட மூலாதாரம்,BCCI/IPL

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை வாரி வழங்கிய சென்னை அணி வீரர்களில் இன்றைய ஆட்டத்தின் மூலம் கிறிஸ் ஜோர்டன் 2வது இடத்தை பிடித்திருக்கிறார். 4 ஓவர்கள் வீசி 58 ரன்களை வாரி வழங்கியிருக்கிறார் கிறிஸ் ஜோர்டன்.

போட்டியை வெல்ல வேண்டிய நிலையில் இருந்த சென்னை அணி, கடைசி ஓவர்களில் அதிக ரன்களை வழங்கியதே தோல்விக்கு முதன்மை காரணமாக பார்க்கப்படுகிறது. பேட்டிங்கின்போது டெத் ஓவர்களை ஜடேஜாவும் துபேவும் சரியாக பயன்படுத்தவில்லை. பேட்டிங்கில் கணிசமான ரன்களை குவித்திருந்தாலும் பந்துவீச்சில் எதிரணியை கட்டுப்படுத்த முடியாதது சி.எஸ்.கேவின் வெற்றியை கை நழுவுச் செய்திருக்கிறது. வெல்ல வேண்டிய போட்டியை கோட்டை விட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், இனி வரும் ஆட்டங்களில் வெற்றிக் கணக்கை தொடர்ந்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியும்.

https://www.bbc.com/tamil/sport-61137305

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைகொடுத்த சஹாலின் ஹாட்ரிக்: கொல்கத்தாவை வென்றது ராஜஸ்தான்

PTI04_18_2022_000243B

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர்.

அதிரடியாக ஆடிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ஜோஸ் பட்லர் 103 ரன்களும் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தாவின் பந்துவீச்சாளர்களான பேட் கம்மின்ஸ், ரஸ்ஸல் தலா ஒரு விக்கெட்டையும்  சுனில் நரேன்  2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பின்னர், 218 ரன்கள் என்கிற பெரிய இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுனில் நரேன் ரன் அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஆரோன் பிஞ்ச் 58 ரன்களிலும் ஷ்ரேயஸ் ஐயர் 85 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

பின்,  16 ஆவது ஓவர் வீசிய சஹால் ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததுடன் அதே ஓவரில் 4 விக்கெட்களைக் கைப்பற்றி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

கடைசி வரை நம்பிக்கை அளித்த  உமேஷ் யாதவ் ராஜஸ்தான் பந்துவீச்சிற்கு அழுத்தம் கொடுத்தாலும் 2 பந்துகள் மீதமிருக்க 21 ரன்களில் இறுதி விக்கெட்டாக  அவுட் ஆனார்.

இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.4 ஓவரில் 210 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால்,   7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. 

சஹால் 5 விக்கெட்களையும், ஓபேட் மெக்காய் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/19/sahals-hat-trick-rajasthan-beat-kolkata-3829304.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஹாலின் 16வது ஓவர் எக்ஸலண்ட் . 4 விக்கட் அத்துடன் ஹாட்ரிக் கூட .....!   👏

தொடர்ந்து இணைப்பதற்கு நன்றி கிருபன்.......!  🌹

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.