Jump to content

ஐபிஎல் 2022 செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

KKR இன் தோல்விக்கு ஷேரேயஸ் ஐயரின் திமிரும் ஒரு காரணம். வெங்கடேஷ் ஐயர் ஒருமுறை இரண்டாவது ரன் க்கு ஓடாதபோது மைதானத்திலேயே அவரை திட்டினார். ஒடியிருந்தால் அப்போதே வெங்கடேஷ் அவுட்டாகியிருப்பார். அடுத்த பந்தில் வெங்கடேஷ் வேண்டுமென்றே அவுட்டானதுபோல் இருந்தது. அதைவிட நேர்காணலில் எதிரணி எவ்வளவு ரன்கள் அடித்தாலும் என்னாலும் அடிக்கமுடியுமென்றார். எமது அணியாலும் என்று சொல்லவில்லை. இப்போதுதான் தெரிகிறது ஏன் DC இவருக்கு மீண்டும் கேப்டன்சி கொடுக்கவில்லையென்று!!

Link to comment
Share on other sites

  • Replies 155
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: பெங்களூரு அணி அசத்தல் வெற்றி

RCB

பெங்களூரு அணி வீரர்கள்

ஐபிஎல் போட்டியின் 31வது ஆட்டம் மும்பை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அனுஜ் ராவத், டூ பிளஸ்ஸி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் சமீராவின் பந்தில் 4 ரன்களிலேயே ராவத் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து வந்த கோலியும் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றமளித்தார். அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் ரன் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். மேக்ஸ்வெல் 23 ரன்களும், ஷபாஸ் அகமது 26 ரன்களும் எடுத்தனர். எனினும் மறுபுறத்தில் அதிரடியாக ஆடிய டூ பெளஸ்ஸி 64 பந்துகளில் 96 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்களை எடுத்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய லக்னெள அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பல் ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

இருப்பினும், அதிரடியாக விளையாடிய க்ருணால் பாண்டியா 28 பந்துகளில் 42 ரன்களை விளாசினார். ஜோஷ் ஹேசல்வுட் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்ற, 20 ஓவர்கள் முடிவில் லக்னெள அணி 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.

 

https://www.dinamani.com/sports/2022/apr/19/hazlewood-cleans-up-lucknow-as-bengaluru-registers-victory-3829875.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தல விராட்கோலி "வந்தார் நின்றார் சென்றார்" முதலாவது ஒரு பந்தை சந்தித்து எதிர்பாராமல் கட்ச் குடுத்து ஆட்டமிழந்தார்......ராவத்தும் கோலியும் முதலாவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளிலேயே அவுடாகினர்.......டூ பிளஸ்சி செம அடி, சூப்பர்.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: பஞ்சாபை எளிதாக வென்ற டெல்லி

dc

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

மும்பையில் நடைபெற்ற 32வது ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.  எனினும் தில்லி அணியின் லலித் யாதவ் பந்தில் ஷிகர் தவான் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த பேர்ஸ்டோவ் (9), லியாம் லிவிங்ஸ்டன் (2), ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். 

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிதேஷ் சர்மா அதிரடியாக ஆடி 23 பந்துகளில் 32 ரன்களைச் சேர்த்தார். எனினும், தில்லி அணியின் சிறப்பான பந்துவீச்சால், ஷாருக்கான், ரபாடா, நாதன் எல்லீஸ், ராகுல் சஹார் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.  முடிவில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே எடுத்தது. தில்லி அணியில் குல்தீப், அக்சார் பட்டேல், லலித் யாதவ், கலீல் அஹமது ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களகாக ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர் ஆகியோர் களம்கண்டனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் டெல்லி அணி 10.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 20 பந்துகளை சந்தித்த ப்ரித்வி ஷா 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 30 பந்துகளில் 60 ரன்களுடனும், சர்பராஸ் கான் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 
 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/20/ipl-2022-delhi-demolish-punjab-win-by-9-wickets-3830276.html

 

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டத்தை முடித்துவைத்த தோனி: மும்பையை வீழ்த்தி சென்னை வெற்றி

Mumbai Indians vs Chennai Super Kings won

தோனி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் டி20 போட்டியின் 33 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று விளையாடின.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தின.

தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா, இஷாந்த் கிஷன் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து வந்த பிரேவிஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சூர்யகுமார் 21 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார். ஹிரித்திக் 25 ரன்களை சேர்த்தார்.

முடிவில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்தது.

இதனைத் தொடர்ந்து விளையாடிய சென்னை அணி, தொடக்கத்தில் தடுமாறினாலும், அடுத்தடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தின.

தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தாலும், அதனைத் தொடர்ந்து வந்த மிட்செல், ராபின் உத்தப்பாவுடன் கைக்கோர்த்தார்.

எனினும் சாம்ஸ் பந்தில் மிட்செல் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த அம்பத்தி ராயுடு அதிரடி காட்ட 35 பந்துகளில் 40 ரன்களை எடுத்தார். 

உத்தப்பா 30 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதனையடுத்து வந்த ஷிவம் தூபே (13), ரவீந்திர ஜடேஜா (3), சொற்ப ரன்களில் வெளியேறினர். எனினும் பின்னர் களமிறங்கிய தோனி பெட்டோரியோஸ் உடன் அதிரடியாக விளையாடினார். எனினும் அவர் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பிராவோ களமிறங்கினார். இக்கட்டான சூழலில் தோனி தனது பாணியில் சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றார். 

நெருக்கடி ஓவர்: நிதானி தோனி

கடைசி ஓவரில் இரண்டாவது பந்தில், பிராவோ ஒரு ரன் எடுத்தார். இதனால் மறுமுனைக்கு வந்த தோனி 4-வது பந்தில் பவுண்டரியை விளாசினார். 5வது பந்தில் 2 ரன்கள் எடுக்க இறுதிப் பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. நெருக்கடியான சூழலிலும் நிதானமாக ஆடிய தோனி கடைசிப் பந்தை பவுண்டரிக்கு விளாசினார்.

இதன் மூலம் சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. மும்பை நடப்பு ஐபிஎல்-ல் 7வது முறையாக தோல்வியைத் தழுவியுள்ளது. 
 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/21/mumbai-indians-vs-chennai-super-kings-won-3831174.html

@MEERA, வயசாளி இன்றைய போட்டியை வென்று கொடுத்துவிட்டார்!

மும்பை இதுவரை எல்லாப் போட்டிகளிலும் தோற்றுள்ளது. அந்த வகையில் சிஎஸ்கே இன்று வெல்லவேண்டும் என்றுதான் விரும்பினேன்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன்

ஜீ தல எப்போதும் தல தான்..💪

ஆனால் பொலாட் தனது முட்டாள் தனத்தாலும் அகங்காரத்தினாலும்  ஆட்டமிழந்தார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தில்லி போராட்டம் வீண்: ராஜஸ்தான் ‘த்ரில்’ வெற்றி

FQ927N1agAA2FG4

படம்: டிவிட்டர் / ஐபிஎல்

தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 34ஆவது ஆட்டத்தில் தில்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 222 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 116(65 பந்துகள்), தேவ்தத் படிக்கல் 54, கேப்டன் சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 46 ரன்கள் குவித்தனர்.

இமாலய இலக்கை விரட்டிய தில்லி அணி கடைசி ஓவர் வரை வெற்றி பெற போராடியது. இருப்பினும், 207 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

தில்லி அணியில் அதிகபட்சமாக பண்ட் 44, லலித் யாதவ் 37, பிரித்வி ஷா 37, கடைசி ஓவரில் மூன்று சிக்ஸர்கள் விளாசிய பெளவெல் 36 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணியின் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/22/delhi-struggle-in-vain-rajasthan-thrill-victory-3831947.html

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீணாக போன ரஸ்ஸலின் அதிரடி; குஜராத் அசத்தல் வெற்றி

Russel

ரஸ்ஸல்

கொல்கத்தா - குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் நவி மும்பையில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹார்திக் பாண்டியா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

குஜராத் அணியிலிருந்து விஜய் சங்கர் நீக்கப்பட்ட நிலையில், கொல்கத்தா அணியில் டிம் செளதி, சாம் பில்லிங்ஸ், ரிங்கு சிங் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. 

ஆரோன் ஃபிஞ்ச், பேட் கம்மின்ஸ், ஷெல்டன் ஜாக்ஸன் ஆகியோர் நீக்கப்பட்டனர். தொடக்க வீரரான ஷுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழக்க 3ஆம் நிலை வீரராக பவர்பிளேயில் களமிறங்கி ஆச்சர்யப்படுத்தினார் கேப்டன் பாண்டியா. முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது குஜராத். 

10 ஓவர்கள் வரைக்கும் பாண்டியாவும் சஹாவும் நன்கு விளையாடி ஸ்கோரை 1 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் என உயர்த்தினார்கள். பிறகு சஹா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். 

16 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது குஜராத். இதனால் கடைசி 4 ஓவர்களில் அதிரடியாக விளையாடினால் 180-190 ரன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பாண்டியாவுடன் 50 ரன்கள் கூட்டணி அமைத்த மில்லர், பிறகு 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

செளதி வீசிய 18-வது ஓவரில் பாண்டியா 67 ரன்களுக்கும் ரஷித் கான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள். இதனால் நெருக்கடியை எதிர்கொண்டது குஜராத் அணி. கடைசி ஓவரை வீசிய ரஸ்ஸல் 5 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

கடைசி 17 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்ததால் குஜராத் அணியால் எதிர்பார்த்தபடி அதிக ரன்கள் எடுக்க முடியாமல் போனது. குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி சார்பாக ரஸ்ஸல் 4, செளதி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதையடுத்து, பேட்டிங் செய்த கொல்கத்தா அணி வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பில்லிங்ஸ் 4 ரன்களிலும் நரைன் 5 ரன்களிலும் வெளியேறினர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 15 பந்துகளை எதிர்கொண்டு 12 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார். இறுதியில், ரஸ்ஸல் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்த போட்டி சுவாரஸ்யமாக நகர்ந்தது. 

இருப்பினும், குஜராத் அணியில் சிறப்பான பந்துவீச்சால் ரஸ்ஸல் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இறுதியில், 8 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணியால் 148 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

குஜராத் அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ஷமி 20 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற குஜராத் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை மீண்டும் பெற்றுள்ளது. 

 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/23/gujarat-claims-top-spot-as-russel-cameo-ends-in-vain-3832273.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரு அதிர்ச்சி தோல்வி: 8 ஓவரில் இலக்கை எட்டிய ஹைதராபாத்!

FRCoEFLaUAAM3V3

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றது சன்ரைசா்ஸ் ஹைதராபாத்.

முதலில் ஆடிய பெங்களூரு அணி ஹைதராபாத் பௌலா்கள் ஜேன்ஸன், நடராஜனின் அபார பந்துவீச்சால் 68 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னா் ஆடிய ஹைதராபாத் அணி 72/1 ரன்களை எடுத்து வென்றது.

இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 36-ஆவது ஆட்டம் சனிக்கிழமை மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் பௌலிங்கை தோ்வு செய்தது.

சரிந்த பெங்களூரு அணி:

தொடக்க வரிசை பேட்டா்களான கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் 5, அனுஜ் ரவாத், விராட் கோலி 0 என வந்த வேகத்திலேயே மாா்கோ ஜேன்ஸன் பந்துவீச்சில் அவுட்டாகி நடையைக் கட்டினா். முதல் ஓவரிலேயே டூபிளெஸ்ஸிஸ், அனுஜ், கோலி வெளியேறினா்.

தினேஷ் காா்த்திக் ஏமாற்றம்:

கிளென் மேக்ஸ்வெல் 12, சுயாஷ் பிரபுதேசாய் 15 நிலைத்து ஆட முயன்றும் அவுட்டாகி வெளியேறினா். அவா்களுக்கு பின் ஸ்கோரை உயா்த்துவாா் என மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட தினேஷ் காா்த்திக் டக் அவுட்டானாா். ஷாபாஸ் அகமது 7, ஹா்ஷல் படேல் 4, ஹஸரங்கா 8, சிராஜ் 2 ரன்களுக்கும் வெளியேறினா்.

பெங்களூரு 68: 16.1 ஓவா்களில் 68 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பெங்களூரு.

ஜேன்ஸன், நடராஜன் 3 விக்கெட்:

ஹைதராபாத் தரப்பில் அற்புதமாக பந்துவீசிய மாா்கோ ஜேன்ஸன், நடராஜன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

8 ஓவா்களில் ஹைதராபாத் வெற்றி:

69 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹைதரபாத் அணியில் அபிஷேக் சா்மா அற்புதமாக ஆடி 1 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 28 பந்துகளில் 47 ரன்களை விளாசி அவுட்டானாா். கேப்டன் கேன் வில்லியம்ஸன் 16, ராகுல் திரிபாதி 7 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

8 ஓவா்களிலேயே 72/1 ரன்களுடன் பெங்களூருவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத்.

பெங்களூரு தரப்பில் ஹா்ஷல் படேல் 1 விக்கெட்டை வீழ்த்தினாா்.

இந்த வெற்றி மூலம் புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது ஹைதராபாத்.
 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/23/hyderabad-reach-the-target-in-8-overs-3832322.html

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்டாத வெற்றி; எட்டாவது தோல்வி

spacer.png

லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸுக்கு எதிரான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியைக் கூட எட்டாத மும்பைக்கு, இது தொடா்ந்து 8-ஆவது தோல்வியாகும்.

ஆட்டத்தில் முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அடுத்து மும்பையால் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களே எடுக்க முடிந்தது.

லக்னௌ தரப்பில் அட்டகாசமாக ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் நடப்பு சீசனில் 2-ஆவது சதத்தை பதிவு செய்தாா். இதே மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தான் அவா் முதல் சதத்தையும் அடித்திருந்தாா்.

இந்த ஆட்டத்தில் ராகுல் சதமடித்தாலும் இதர விக்கெட்டுகளை வரிசையாகச் சரித்து லக்னௌவை கட்டுப்படுத்தியது மும்பை. எனினும், அதன் இன்னிங்ஸில் ரோஹித் சா்மா, திலக் வா்மா தவிர இதர பேட்டா்கள் சோபிக்கத் தவறினா்.

டாஸ் வென்ற மும்பை ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. லக்னௌ இன்னிங்ஸில் முதல் விக்கெட்டாக குவின்டன் டி காக் 10 ரன்களுக்கு வீழ்ந்தாா். ராகுல் அதிரடியாக ஆடி ரன்கள் சோ்த்து வர, ஒன் டவுனாக வந்த மனீஷ் பாண்டே 22 ரன்களுக்கு வெளியேறினாா்.

தொடா்ந்து மாா்கஸ் ஸ்டாய்னிஸ் ரன்களின்றியும், கிருணால் பாண்டியா 1 ரன்னுடனும் பெவிலியன் திரும்பினா். தீபக் ஹூடா 10, ஆயுஷ் பதோனி 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் ராகுல் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 103, ஜேசன் ஹோல்டா் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலிங்கில் ரைலி மெரிடித், கைரன் பொல்லாா்டு ஆகியோா் தலா 2, டேனியல் சேம்ஸ், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய மும்பையில் கேப்டன் ரோஹித் சா்மா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39, திலக் வா்மா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38 ரன்கள் அடித்தனா். இஷான் கிஷண் 8, டெவால்ட் பிரெவிஸ் 3, சூா்யகுமாா் யாதவ் 7, கைரன் பொல்லாா்டு 19, டேனியல் சாம்ஸ் 3, ஜெயதேவ் உனத்கட் 1 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா்.

ஓவா்கள் முடிவில் ரித்திக் ஷோகீன், ஜஸ்பிரீத் பும்ரா ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ பௌலிங்கில் கிருணால் பாண்டியா 3, மோசின் கான், ஜேசன் ஹோல்டா், ரவி பிஷ்னோய், ஆயுஷ் பதோனி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/25/எட்டாத-வெற்றி-எட்டாவது-தோல்வி-3833106.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராயுடு அதிரடி வீண்: 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

Rayudu

அதிரடியாக விளையாடிய ராயுடு

ஐபிஎல் தொடரின் 38ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. பஞ்சாப் அணியில் கேப்டன் மயங் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர்.

ஆனால் மயங் அகர்வால் சோபிக்கவில்லை. அவர் 21 பந்துகளில் 18 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அடுத்து ராஜபக்ச களமிறங்கினார். தவான், ராஜபக்ச இருவரும் சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர். இந்த ஜோடி மட்டும் 110 ரன்கள் எடுத்தது. ஆனால் ராஜபக்ச 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பின்னர் களம்கண்ட லிவிங்ஸ்டன் அதிரடியாக ஆடினார். அவர் 7 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 187 ரன்களை எடுத்தது.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரரான உத்தப்பா 1 ரன் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து இறங்கிய சாண்ட்னர், ஷிவம் டுபே சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அம்பதி ராயுடு அதிரடியாக விளையாடி அரை சதமடித்தார். அவருடன் 4வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்த நிலையில் கெய்க்வாட் 30 ரன்னில் வெளியேறினார்.

பின்னர், களமிறங்கிய ஜடேஜா, ராயுடுவுடன் நிலைத்து நின்று ஆடினார். அதிரடியாக ஆடிய ராயுடு 39 பந்தில் 6 சிக்சர், 7 பவுண்டரியுடன் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதனால் கடைசி ஓவரில் சென்னை வெற்றி பெற 27 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில், சென்னை அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 

 

https://www.dinamani.com/sports/2022/apr/25/punjab-beat-chennai-by-11-runs-3833584.html

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை ஓவருக்கு நாலு வைட் போல், பீல்டிங்கும் சொல்லும்படியாக இல்லை.....கடைசியில இரண்டு ஓவருக்கு 35 ரன்ஸ் அடிக்கிறதும் சிரமம்தான் ..........!   😴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராயல் சேலஞ்சர்ஸை வீழ்த்தியது ராயல்ஸ்

Prasidh_Krishna_Kohli_Out_PTI04_26_2022_000258A

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.

145 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூருவுக்கு தொடக்கம் மாற்றியும் சிறப்பாக அமையவில்லை. விராட் கோலி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார்.

இதன்பிறகு, டு பிளெஸ்ஸி ஆட்டத்தை சற்று கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பவர் பிளே முடிவுந்தவுடன், குல்தீப் சென் அறிமுகப்படுத்தப்பட்டார். அடுத்தடுத்த பந்தில் டு பிளெஸ்ஸி மற்றும் கிளென் மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்தி குல்தீப் சென் அசத்தினார்.

இந்த சரிவிலிருந்து மீள்வதற்குள் ரஜத் படிதார், சூர்யாஷ் பிரபுதேசாய் ஆகியோரும் ஆட்டமிழந்தனர். பெங்களூருவின் நம்பிக்கை நாயகனான தினேஷ் கார்த்திக்கும் 6 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.

Chahal_Karthik_Run_Out_PTI04_26_2022_000

இதன்பிறகு ஆட்டத்தை முற்றிலும் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 19.3 ஓவர்களில் 115 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பெங்களூரு.

இதன்மூலம், 29 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் சென் 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/26/rajasthan-royals-beat-royal-challengers-bangalore-by-29-runs-3833985.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோலி எல்லாம் இனி 3 வது 4 வது ஆக இறங்கினால்தான் சரிவரும்......!

அஸ்வின் இப்ப எல்லாம் கொஞ்சம் பேட்டிங் நல்லா செய்கிறார் போல் இருக்கு.....போலிங் சொல்லி வேல இல்ல ......சூப்பர் .....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்: நம்பமுடியாத வெற்றியைப் பெற்றுத் தந்த ரஷித் கான்

Rashid Khan 2 sixes in last 2 balls brings unbelievable win for GT

சஹா

ராகுல் தெவாட்டியா மற்றும் ரஷித் கானின் கடைசி நேர அதிரடியால் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஹார்திக் பாண்டியா முதலில் ஹைதராபாத்தை பேட்டிங் செய்ய அழைத்தார். முதல் பேட்டிங் செய்த ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது.

196 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத்துக்கு ரித்திமான் சஹா அதிரடி தொடக்கத்தைத் தந்தார். ஷுப்மன் கில் அவருக்கு நல்ல ஒத்துழைப்பைத் தந்தார். சஹா அதிரடியால் குஜராத் அணி பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, 8-வது ஓவரில் உம்ரான் மாலிக் அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த ஐபிஎல் முழுவதும் மிரட்டல் வேகத்தில் பந்துவீசி வரும் உம்ரான் மாலிக் இந்த ஆட்டத்திலும் வேகத்துக்குப் பஞ்சம் இல்லாமல் மிரட்டினார்.

இதற்குப் பலனாக முதலில் ஷுப்மன் கில் (22) போல்டானார். அடுத்து களமிறங்கிய குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியாவை முதல் பந்திலேயே மிரட்டினார். அடுத்த ஓவரில் அவரது விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். மறுமுனையில் அதிரடி காட்டி வந்த சஹா 28-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். 

உம்ரான் மாலிக்குக்கு ஓய்வளிக்கப்பட்டதையடுத்து சஹா சற்று அதிரடி காட்டி ஹைதராபாத்துக்கு நெருக்கடியளித்தார். பின்னர் 14-வது ஓவரில் மாலிக் மீண்டும் கொண்டுவரப்பட்டார். சிறப்பாக விளையாடி வந்த சஹாவை 153 கி.மீ. வேகத்தில் யார்க்கர் வீசி போல்டாக்கினார் மாலிக். சஹா 38 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார்.

எடுத்த விக்கெட் போதாதென்று தனது கடைசி ஓவரில் முதலில் டேவிட் மில்லரை (17) போல்டாக்கி ஹைதராபாத்துக்கு திருப்புமுனை ஏற்படுத்தினார். மேலும் கடைசி பந்தில் அபினவ் மனோகரையும் போல்டாக்கி அசத்தினார் உம்ரான் மாலிக்.

4 ஓவரில் 25 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மாலிக்.

இந்த நிலையில், குஜராத் வெற்றிக்கு கடைசி 4 ஓவரில் 56 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் ராகுல் தெவாட்டியா மற்றும் ரஷித் கான் இருந்தனர்.

 நடராஜன் மற்றும் புவனேஷ்வர் குமார் ஓரளவு சிறப்பாக வீசியதால் கடைசி 2 ஓவரில் குஜராத் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டன. 19-வது ஓவரில் நடராஜன் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 13 ரன்கள் கொடுத்ததால், கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டன. 

மார்கோ யான்சென் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தை தெவாட்டியா சிக்ஸரை பறக்கவிட்டார். 3-வது பந்தை ரஷித் கான் சிக்ஸருக்கு அனுப்பினார். 4-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காததால், கடைசி இரண்டு பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டன. ரஷித் கான் கடைசி இரண்டு பந்துகளில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு குஜராத்துக்கு நம்பமுடியாத வெற்றியை பெற்றுத் தந்தார்.

கடைசி ஓவரில் 25 ரன்கள் விளாசிய குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தெவாட்டியா 21 பந்துகளில் 40 ரன்களும், ரஷித் கான் 11 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.

ஹைதராபாத் தரப்பில் 5 விக்கெட்டுகளையும் உம்ரான் மாலிக் மட்டுமே வீழ்த்தினார். மற்ற பந்துவீச்சாளர்கள் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/27/rashid-khan-2-sixes-in-last-2-balls-brings-unbelievable-win-for-gt-3834574.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி ஓவர் ரசீத்கான் சூப்பர் அடி ......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவெல் கடைசி நேரத்தில் அதிரடி: டெல்லி அபார வெற்றி

Kuldeep_Pant_PTI04_28_2022_000196A

பந்துவீச்சின்போது ஷ்ரேயஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் குல்தீப் மற்றும் பந்த்

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.

147 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் டெல்லி தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். உமேஷ் யாதவ் முதல் பந்திலேயே பிரித்வி ஷா விக்கெட்டை வீழ்த்தி மிரட்டல் தொடக்கத்தைத் தந்தார். ஹர்ஷித் ராணா வீசிய 2-வது ஓவரில் மிட்செல் மார்ஷ் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, டேவிட் வார்னர் மற்றும் லலித் யாதவ் பாட்னர்ஷிப் அமைத்தனர். வார்னர் அதிரடியால் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் குறைவாகவே இருந்தது.

இந்த நிலையில், 10-வது ஓவரை வீசிய உமேஷ் யாதவ் வார்னர் விக்கெட்டை வீழ்த்தினார். வார்னர் 26 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்த ஓவரில் சுனில் நரைன், லலித் யாதவ் விக்கெட்டை வீழ்த்தினார். மீண்டும் பந்துவீசிய உமேஷ் யாதவ், டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் விக்கெட்டை வீழ்த்தினார்.

3 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்ததால் டெல்லி அணி நெருக்கடிக்குள்ளானது. ஆனால், அக்சர் படேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ரோவ்மன் பவெல் அவருக்கு ஒத்துழைப்பு தந்தார். இந்த பாட்னர்ஷிப் கொல்கத்தாவுக்கு மீண்டும் நெருக்கடியளித்தது. 

இந்த நிலையில், அக்சர் படேல் 24 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். ஆனால், பாவெல் சரியான ஓவரைக் குறிவைத்து கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார். வெங்கடேஷ் ஐயர் மற்றும் டிம் சௌதி ஓவரில் பாவெல் சிக்ஸரை பறக்கவிட்டதால், கடைசி 2 ஓவரில் டெல்லி வெற்றிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன.

யாரும் எதிர்பார்த்திராத வகையில் ஷ்ரேயஸ் ஐயர் 19-வது ஓவரை வீசினார். முதல் 4 பந்துகளில் ஷர்துல் தாக்குரால் ரன் எடுக்க முடியவில்லை. இதனால், சற்று விறுவிறுப்பு அதிகரித்தது. 5-வது பந்தில் 1 ரன் எடுக்க, கடைசி பந்தில் பாவெல் சிக்ஸரை பறக்கவிட்டு வெற்றியை உறுதி செய்தார்.

19 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாவெல் 16 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.
 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/28/rovman-powell-finishes-for-dc-against-kkr-3835296.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோஷின், க்ருணல், சமீரவின் அபார பந்துவீச்சு : பஞ்சாப்பை வெற்றிகொண்டது லக்னோ

(என்.வீ.ஏ.)

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓட்டங்களால் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் வெற்றிபெற்றது. 

Ravi Bishnoi removed Shikhar Dhawan for 6, Lucknow Super Giants vs Punjab Kings, IPL 2022, Pune, April 29, 2022

மோஷின் கான், க்ருணல் பாண்டியா, துஷ்மன்த சமீர ஆகிய மூவரது சிறந்த பந்துவீச்சு ஆற்றல்களின் உதவியுடன் சுமாரான மொத்த எண்ணிக்கையான 153 ஓட்டங்களை லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் தக்கவைத்து வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் ப்ளே ஓவ் சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பை லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.

Dushmantha Chameera is ecstatic after picking the wicket of Mayank Agarwal, Lucknow Super Giants vs Punjab Kings, IPL 2022, Pune, April 29, 2022

154 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுபபெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டகளை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

மயன்க் அகர்வால், ஷிக்கர் தவான் ஆகிய இருவரும் வேகமாக 35 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

 5 ஆவது ஓவரில் மயன்க் அகர்வால் 25 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

Mohsin Khan got rid of Liam Livingstone for 18, Lucknow Super Giants vs Punjab Kings, IPL 2022, Pune, April 29, 2022

 பவர் ப்ளே முடிவில் பஞ்சாப் கிங்ஸ் ஒரு விக்கெட்டை இழந்து 46 ஓட்டங்களுடன் பலமான நிலையில் இருந்தது.

அதுவரை மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஷிக்கர் தவான் (5), தொடர்ந்து பானுக்க ராஜபக்ஷ (9) ஆகிய இருவரும் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து ஜோடியான ஜொனி பெயார்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டன் ஆகிய இருவரும் அணியைக் கட்டி எழுப்ப எடுத்த முயற்சியை மொத்த எண்ணிக்கை 88 ஓட்டங்களாக இருந்தபோது மோஷின் கான் முடிவுக்கு கொண்டுவந்தார்.

Deepak Hooda played a crucial hand in the middle overs but his dismissal triggered a collapse, Lucknow Super Giants vs Punjab Kings, IPL 2022, Pune, April 29, 2022

லிவிங்ஸ்டன் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஜிட்டேஷ் ஷர்மா (2) சொற்ப நேரத்தில் களம் விட்டகன்றார்.

தொடர்ந்து பெயார்ஸ்டோவ் (32), கெகிசோ ரபாடா (2), ராகுல் சஹார் (4) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

ரிஷி தவான் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் மோஷின் கான் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் க்ருணல் பாண்டியா 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது.

Dushmantha Chameera picked up the big wickets of Mayank Agarwal and Jonny Bairstow, Lucknow Super Giants vs Punjab Kings, IPL 2022, Pune, April 29, 2022

இரண்டாவது ஓவரில் அணித் தலைவர் கே.எல். ராகுலின் (6) விக்கெட்டை லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் இழந்தபோதிலும் குவின்டன் டி கொக் (46). தீப்பக் ஹுடா (34) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தனர்.

ஆனால், 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டி கொக், ஹூடா, க்ருணல் பாண்டியா (7), அயுஷ் படோனி (4), மார்க்ஸ் ஸ்டொய்னிஸ் (1), ஜேசன் ஹோல்டர் (11) ஆகியோரின் விக்கெட்களை இழந்த லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் சிறு சவாலை எதிர்கொண்டது.

எனினும் துஷ்மன்த சமீர (2 சிக்ஸ்களுடன் 17), மோஷின் கான் (13 ஆ.இ) ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தமது அணி 150 ஓட்டங்களைக் கடக்க உதவினர். அவேஷ் கான் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் கெகிசோ ரபாடா 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ராகுல் சஹார் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
 

 

https://www.virakesari.lk/article/126616

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிஎஸ்கே அணிக்கு மீண்டும் கேப்டன் ஆன தோனி - ரவீந்திர ஜடேஜாவுக்கு என்ன ஆச்சு?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஐபிஎல் சிஎஸ்கே ரவீந்திர ஜடேஜா எம்.எஸ். தோனி

பட மூலாதாரம்,BCCI/IPL

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். ஆட்டத்தில் கவனம் செலுத்துவதில் ஆர்வமாக இருப்பதாக அவர் கூறியதையடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பு எம்.எஸ் தோனியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு, சிஎஸ்கே அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளிவந்துள்ளது.

அதில், "ரவீந்திர ஜடேஜா தனது விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பதவியை துறக்க முடிவு செய்துள்ளார், மேலும் சிஎஸ்கேயை வழிநடத்த எம்எஸ் தோனிக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜடேஜா தனது விளையாட்டில் கவனம் செலுத்த அனுமதிக்கும் வகையில் சிஎஸ்கே அணியை வழிநடத்த எம்எஸ் தோனி ஒப்புக்கொண்டுள்ளார்," என்று கூறப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ஐபிஎல் 15ஆம் சீசன் தொடக்கத்தில் எம்.எஸ் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அப்போது ரவீந்திர ஜடேஜா அணியின் கேப்டன் ஆக பொறுப்பேற்றார். ஆனால், ரவீந்திர ஜடேஜா அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து, இந்திய ஆல்-ரவுண்டர் ஆக அறியப்பட்ட அவர் பேட்டிங் அல்லது பந்து வீச்சு என எதிலும் பரிணமிக்கவில்லை.

33 வயதாகும் ஜடேஜா எட்டு போட்டிகளில் 112 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக அவர் எடுத்தது 26 ரன்கள் மட்டுமே.

இருப்பை தக்க வைக்க போராடிய ஜடேஜா

 

ஐபிஎல் ரவீந்திர ஜடேஜா எம்.எஸ். தோனி

ஐபிஎல் 2022 சீசனில் ஜடேஜாவின் பந்துவீச்சைப் பொறுத்தவரை, அவர் 8.19 என ஏமாற்றம் தரும் வகையில் 213 ரன்களை விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.

கடந்த சீசனில் நான்காவது முறையாக பட்டத்தை வென்ற போதிலும், ஐபிஎல் 2022 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒன்பதாவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது, ரவீந்திர ஜடேஜாவின் தலைமையின் கீழ் எட்டு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றது.சமீபத்தில் விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை அணியின் வளர்ச்சிக்காக ஒப்படைப்பதாகக் கூறி பதவி விலகினார். அதுபோலவே தமது கேப்டன் பதவியை ஜடேஜா ஒப்படைத்திருப்பதாக நம்பப்படுகிறது.

எம்.எஸ். தோனி 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்து சிஎஸ்கே அணியை வழிநடத்தினார். இந்த 13 ஆண்டுகளில், நான்கு ஐபிஎல் வெற்றிகள் மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் டிராஃபி வெற்றிகளை தோனியின் தலைமை சிஎஸ்கேவுக்காக பெற்றுத் தந்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

Twitter பதிவை கடந்து செல்ல, 4

Twitter பதிவின் முடிவு, 4

தோனி மீண்டும் சிஎஸ்கே தலைமை பொறுப்பை ஏற்றிருப்பதற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவும் வரவேற்பும் காணப்படுகிறது. பலரும் சமூக ஊடகங்களில் தோனியின் வருகையை பாராட்டியும் ரவீந்திர ஜடேஜாவின் விலகலை விமர்சித்தும் இடுகைகளைப் பகிர்ந்து வருகிறார்கள். தோனியின் தலைமை பிரவேசத்தால் இந்த சீசனில் சிஎஸ்கேவை பிளேஆஃபுக்கு தகுதி பெற முயற்சிப்பார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/sport-61284409

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மில்லர், தெவாட்டியா அதிரடி: பெங்களூருவை வீழ்த்தியது குஜராத்

ipl1

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டான்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் மஹிபால் லோம்ரோர் புதிதாக சேர்க்கப்பட்டார். குஜராத் அணியில் யஷ் தயால் மற்றும் அபினவ் மனோகர் ஆகியோருக்குப் பதில் பிரதீப் சங்வான் மற்றும் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளனர். 

பெங்களூர் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் டு பிளெஸ்ஸி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர், ஜோடி சேர்ந்த கோலி, ராஜத் பட்டிடர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய பட்டிடர் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டமிழந்தார். நடப்பு தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, தனது முதல் அரை சதத்தை பூர்த்தி செய்து 58 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.

பின்னர், வந்த மாக்ஸ்வெலும் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டு 33 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு பெங்களூர் அணி 170 ரன்களை எடுத்தது. குஜராத் அணி சார்பாக பிரதீப் சங்வான், 19 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து குஜராத் அணியில் சாஹா, சுப்மன் கில் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர்.

இருவரும் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஆனால் சாஹா 29 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கில்லும் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சாய் சுதர்சன் தன்பங்கிற்கு 20 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்த நிலையில் ராகுல் தெவாட்டியாவும், மில்லரும் இணைந்தனர்.  இந்த ஜோடி பெங்களூருவின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டது.

இதனால் குஜராத் அணி 19.3 பந்துகளில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மில்லர் 39, ராகுல் தெவாட்டியா 43 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
 

https://www.dinamani.com/sports/ipl/2022/apr/30/ipl2022-miller-tewatia-guide-gujarat-to-6-wicket-win-3836500.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூர்யகுமார் அரைசதம்: முதல் வெற்றியை ருசித்த மும்பை!

FRm9fTAakAEsnAJ

ராஜஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை அணி, இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 44ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. நவி மும்பையின் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

மறைந்த ஆஸி. கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவை கௌரவிக்கும் விதமாக ராஜஸ்தான் அணி 'SW23' என அச்சிடப்பட்ட சிறப்பு ஜெர்சி அணிந்து இன்று விளையாடியது.

ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பட்லர் 67 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 20வது ஓவரில் 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 51 ரன்கள் எடுத்தார்.

இந்த தொடரில் 8 ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியடைந்த மும்பை அணி முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது.
 

 

https://www.dinamani.com/sports/sports-news/2022/apr/30/suryakumar-fifties-mumbai-taste-first-win-3836789.html

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னௌ

ipl

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ஐபிஎல் தொடரின் 45ஆவது லீக் ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னெள அணி கேப்டன் கே. எல். ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். லக்னெள அணியில் வேகபந்து வீச்சாளர் அவேஷ் கானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு கிருஷ்ணப்பா கெளதம் சேர்க்கப்பட்டார். தில்லி அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. லக்னெளவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டி காக்கும் ராகுலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

23 ரன்கள் எடுத்திருந்த டி காக் ஆட்டமிழந்த போதும், பின்னர் ஜோடி சேர்ந்த ராகுல், ஹூடா தில்லி அணி பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். அரைசதம் எடுத்த ஹூடா தனது விக்கெட்டை பறிகொடுத்தாலும், ராகுல் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் ஆடினார். 51 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 20 ஓவர்கள் முடிவில், மூன்று விக்கெட் இழப்புக்கு லக்னெள அணி 195 ரன்களை எடுத்தது. தில்லி அணி சார்பாக ஷர்துல் தாக்கூர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடின இலக்கை நோக்கி தில்லி அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணியில் தொடக்கம் சரியாக அமையவில்லை. ப்ரித்வி ஷா 5, வார்னர் 3 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதன் பிறகு வந்த மிட்செல் மார்ஷ், கேப்டன் ரிஷப் பந்த் நல்ல பாட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் டெல்லி அணி சரிவிலிருந்து மீண்டது. அதிரடியாக ஆடிய மார்ஷ் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 30 பந்துகளை சந்தித்த ரிஷப் பந்த் 44 ரன்களில் வெளியேறினார். 

தொடர்ந்து களமிறங்கிய லலித் யாதவ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் களம்கண்ட ரோவ்மன் பவெல், அக்சர் படேல் டெல்லிக்கு மீண்டும் நம்பிக்கை அளித்தனர். இருப்பினும் இந்த ஜோடியை மோசின் கான் பிரித்தார். 21 பந்துகளில் 35 ரன்களுக்கு பவெல் பெவிலியன் திரும்பினார். இருப்பினும் கடைசி வரை போராடிய டெல்லி அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அக்சர் படேல் 42, குல்தீப் யாதவ் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

லக்னௌ அணியில் சிறப்பாக பந்துவீசிய மோசின் கான் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  
 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/01/ipl-2022-lucknow-beat-delhi-by-6-runs-3837053.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹைதராபாத் அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

20220501171L

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.

ஐபிஎல் போட்டியின் 46ஆவது ஆட்டம் புணேவில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதியது. முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். 

ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சை நான்கு புறமாக பறக்கவிட்டனர். இருப்பினும் அபாரமாக விளையாடிய ருதுராஜ் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். 57 பந்துகளில் 99 ரன்கள் எடுத்திருந்தபோது ருதுராஜ் விக்கெட்டை நடராஜன் வீழ்த்தினார்.

அடுத்து வந்த கேப்டன் தோனி 8 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தார். இவரது விக்கெட்டையும் நடராஜன் வீழ்த்தினார். சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. கான்வே 85(55 பந்துகள்), ஜடேஜா ஒரு ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

பின்னர், 203 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா , கேன் வில்லியம்சன் களமிறங்கினர். தொடக்கம் முதலே  இந்த இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைச் சேர்த்தது. இருப்பினும் முதல் விக்கெட்டாக அபிஷேக் சர்மா 39 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் பொறுமையாக விளையாடிய அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 47 ரன்களில் ஆட்டமிழந்ததும் ஹைதராபாத் அணி தடுமாறத் துவங்கியது. 

அடுத்த களமிறங்கிய பூரன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் சென்னை அணியின் பந்துவீச்சில் அதிம பவுண்டரிகளை அடிக்க முடியாமல் போனது.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 189 ரன்களை எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையிடம் தோல்வியைத் தழுவியது.

அதிரடியாக விளையாடிய நிகோலஸ் பூரன் 33 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி 66 ரன்கள்  எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சென்னை அணி தரப்பில் முகேஷ் சௌதரி 4 விக்கெட்களையும், மகிஷ் தீக்‌ஷானா 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே கொடுத்து அணியின் வெற்றிக்கு பங்காற்றினர்.
 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/01/chaudhary-bowls-chennai-super-kings-beat-hyderabad-3837086.html

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.