Jump to content

ஐபிஎல் 2022 செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

நாரோடு சேர்ந்து பூவும் நாறிடிச்சு .........ரொம்ப மோசமான மாட்ச் ........!  😴

திராவிட மொடல் ஆட்சி..👍

IMG-20220513-142411.jpg

இருந்தால் மட்டும் கிழிக்க போவதில்லை என்பது வேறு விடயம் தோழர்..😊

Link to comment
Share on other sites

  • Replies 155
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரு தோல்வி: பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது பஞ்சாப்

FSp_eacVIAAzDmJ

படம்: டிவிட்டர்/ஐபிஎல்

பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 60ஆவது போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் இன்று மோதின. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளெஸ்ஸி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டைவ் 66(29 பந்துகள்), லிவிங்க்ஸ்டன்70(42) ரன்கள் குவித்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தன. அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது பஞ்சாப் அணி.
 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/13/bangalore-lose-punjab-retain-play-off-3844050.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன்இந்த முறை போட்டி நடந்திருந்தால் எல்லோரும் ஆகக் குறைந்த புள்ளிகளையே எடுத்திருப்பார்கள்.

முன்னணி கழகங்கள் மண் கவ்வுகின்றன.

உடனுக்குடன் விளையாட்டு செய்திகளை எடுத்துவரும் கிருபனுக்கு நன்றிகள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஸல் அபார பந்துவீச்சு: கொல்கத்தா வெற்றி

FSvGG-UagAAlYDn

ரஸல்

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.

ஐபிஎல் தொடரின் 61ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடா்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதின. மகாராஷ்டிர கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தன. அதிகபட்சமாக ரசல் 49 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அபிஷேக் சர்மா 43 ரன்கள் எடுத்தார்.

ரசல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 

https://www.dinamani.com/sports/sports-news/2022/may/14/abhishek-action-in-vain-kolkata-win-3844609.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஹா அதிரடி: மீண்டும் சென்னையை வென்றது குஜராத்

IPL_2

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஐபிஎல் போட்டியின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ருதுராஜ் கான்வே இணை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் கான்வே 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி 17 பந்துகளில் 21 ரன்களை சேர்த்தார். சாய் கிஷோர் வீசிய பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய என். ஜெகதீசன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ருதுராஜ் அரை சதம் கடந்து 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  ஜெகதீசன் அதிரடியாக ஆட மறுமுனையில் களமிறங்கிய ஷிவம் துபே (0), தோனி (7) ஆகியோர் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர். 

ஜெகதிசன் 33 பந்துகளில் 39 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்களை சேர்த்தது.

குஜராத்

இதனைத் தொடர்ந்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் விர்திமான் சஹா, ஷுப்மான் கில் ஆகியோர்  ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதிரடியாக ஆடிய கில், மதீஷா வீசிய பந்தில் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த மேத்தீவ் வாடே 15 பந்துகளில் 20 ரன்களைச் சேர்த்தார். எனினும் மொயின் அலி வீசிய பந்தில் வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்த சஹா, அரை சதம் கடந்து ரன்களைக் குவித்தார். அவர் 57 பந்துகளில் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் 19.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை எடுத்து குஜராத் அணி வெற்றி பெற்றது.  
 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/15/chennai-super-kings-vs-gujarat-titans-won-by-7-wickets-3844959.html

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னேறிய ராஜஸ்தான்

ipl_3120824

லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது அந்த அணி.

ஆட்டத்தில் முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அடுத்து லக்னௌ 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களே எட்டியது.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராஜஸ்தானில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 41 ரன்கள் சோ்த்தாா். கேப்டன் சஞ்சு சாம்சன் 32, தேவ்தத் படிக்கல் 39 ரன்கள் அடிக்க, ஜோஸ் பட்லா் 2, ரியான் பராக் 19, ஜேம்ஸ் நீஷம் 14 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். ஓவா்கள் முடிவில் ரவிச்சந்திரன் அஸ்வின் 10, டிரென்ட் போல்ட் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்ௌ பௌலிங்கில் ரவி பிஷ்னோய் 2, அவேஷ் கான், ஜேசன் ஹோல்டா், ஆயுஷ் பதோனி ஆகியோா் தலா 1 விக்கெட் சரித்தனா்.

பின்னா் லக்னௌ இன்னிங்ஸில் தீபக் ஹூடா 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 59 ரன்கள் விளாசினாா். கிருணால் பாண்டியா 25, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 27 ரன்கள் சோ்க்க, டி காக் 7, கேப்டன் ராகுல் 10, ஆயுஷ் பதோனி 0, ஜேசன் ஹோல்டா் 1, துஷ்மந்தா சமீரா 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் மோசின் கான் 9, அவேஷ் கான் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் தரப்பில் டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஆபெட் மெக்காய் ஆகியோா் தலா 2, யுஜவேந்திர சஹல், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/16/முன்னேறிய-ராஜஸ்தான்-3845170.html

 

spacer.png

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப்பை வீழ்த்திய தில்லி அணி

FS5R7OnaMAAKM6b

தில்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

ஐபிஎல் தொடரின் 64 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. டெல்லி அணியில் டேவிட் வார்னர், சர்ஃபராஸ் கான் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். ஆனால் வார்னர் ரன் எதுவும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். 

அடுத்து வந்த மாா்ஷ், சர்ஃபராஸ் கானுடன் கூட்டணி அமைத்தார். இந்த ஜோடி பெஞ்சாப் அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டது. டெல்லி அணியின் ஸ்கோர் 51 ரன்களாக இருந்தபோது சர்ஃபராஸ் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த நிலையில் களம்கண்ட லலித் யாதவும் மிட்செல் மார்ஷுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இருப்பினும் யாதவ், 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 

மறுமுறையில் சிறப்பாக விளையாடிய மார்ஷ் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 48 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அக்‌ஷர் படேல் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் பௌலிங்கில் அா்ஷ்தீப் சிங், லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் ஜானி பேர்ஸ்டோ 15 பந்துகளில் 28 ரன்களும், ஷிகர் தவான் 16 பந்துகளில் 19 ரன்களும் எடுத்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து களமிறங்கிய பனுகா ராஜபட்ச, லிவிங்ஸ்டன், மயங்க் அகர்வால் ஆகியோர் நம்பிக்கை தரவில்லை. ஜிதேஷ் சர்மா மட்டும் அதிரடி காட்ட 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.

தாகூர் வீசிய பந்தில் ஜிதேஷ் சர்மா டேவிட் வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இறுதியாக ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங் அவுட் ஆகாமல் இருக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் தில்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/16/delhi-team-defeated-punjab-3845599.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயகோ .....அன்று அடி வாங்கி அலறி ஓடிய அணியெல்லாம் இன்று அழகழகாய் விளையாடுது......  சென்னையும்  மும்பையும் வெண்ணெயாய் கரைந்தோடுதே.......! 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டேவிட் செய்த தவறு: 3 ரன்களில் ஹைதராபாத் 'த்ரில்' வெற்றி

Ishan_KIshan_PTI05_17_2022_000262A

இஷான் கிஷன்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் பேட்டிங் செய்த ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது.

முன்னெப்போதும் இல்லாத தொடக்கம்:

கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் மும்பைக்கு நல்ல தொடக்கத்தையே தந்தனர். சிக்ஸரும், பவுண்டரியும் பறந்ததால், நல்ல நிலையிலேயே ரன் ரேட் இருந்தது. பவர்பிளே முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, ரன் ரேட்டில் சற்று மந்த நிலை இருந்தது. இந்த நிலையில், உம்ரான் மாலிக் 9-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் ரோஹித் பவுண்டரி அடிக்க, கிஷன் சிக்ஸரை பறக்கவிட மும்பை 17 ரன்கள் விளாசியது.

இதனால், 10 ஓவர்கள் முடிவில் மும்பை விக்கெட் இழப்பின்றி 89 ரன்கள் சேர்த்து நல்ல நிலையை அடைந்தது.

மீண்டும் வாஷிங்டன் சுழலிலேயே சிக்கிய ரோஹித்:

அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, வாஷிங்டன் சுந்தர் சுழலில் ஆட்டமிழந்தார். உம்ரான் மாலிக் வீசிய அடுத்த ஓவரில் கிஷன் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மிரட்டல் மாலிக்:

மீண்டும் 15-வது ஓவரை வீச வந்த மாலிக் திலக் வர்மா (8), டேனியல் சாம்ஸ் (15) விக்கெட்டை வீழ்த்தி மிரட்டினார். இதனால், ஹைதராபாத் பக்கம் வெற்றிக் காற்று வீசியது.

ட்விஸ்ட் வைத்த டேவிட்:

ஆனால், டிம் டேவிட் வேறு ஒரு கதை வைத்திருந்தார். நடராஜன் வீசிய 16-வது ஓவரில் டேவிட் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். புவுனேஸ்வர் குமாரும் 17-வது ஓவரில் 9 ரன்களை கொடுத்தார். இதனால், கடைசி 3 ஓவரில் மும்பை வெற்றிக்கு 45 ரன்கள் தேவைப்பட்டன.

நடராஜன் மீண்டும் 18-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் நடராஜனால் யார்க்கர் பந்தை சரியாக வீச முடியவில்லை. விளைவு, ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 4 சிக்ஸரை பறக்கவிட்டார் டிம் டேவிட். 13 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே என்ற நிலையை உருவாக்கி வெற்றிக்கான காற்றை மும்பை பக்கம் திருப்பினார் டேவிட்.

ட்விஸ்டுக்கே ட்விஸ்ட் வைத்த டேவிட்:

ஆனால், இந்த முறையும் டேவிட் வேறு ஒரு கதை வைத்திருந்தார். நடராஜன் ஓவரின் கடைசி பந்தில் ரன் எடுக்க முடியாத இடத்தில் ஒரு ரன் எடுக்க முயன்று தானே தனது ரன் அவுட்டுக்கு காரணமாகிவிட்டார் டேவிட். அவர் 18 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார்.

19-வது ஓவரை மெய்டனாக வீச முடியுமா?

மும்பை வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டன. முதல் பந்தில் ரன் ஏதும் இல்லை, 2-வது பந்தில் சஞ்சய் யாதவ் விக்கெட்டை வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். அடுத்து ஜாஸ்பிரித் பும்ரா களமிறங்கினார். யார்க்கர் பந்தை சிறப்பாக செயல்படுத்திய புவனேஷ்வர் ரன் கொடுக்கவில்லை. கடைசி ஓவரில் ரமண்தீப் சிங் ஸ்டிரைக்குக்கு வர வேண்டும் என்பதால், கடைசிப் பந்தில் ரன் எடுக்கவில்லை. இதனால், அந்த ஓவர் மெய்டன் ஓவராக அமைந்தது.

சிக்ஸர் அடித்தும் பயனில்லை:

கடைசி ஓவரை ஃபரூக்கியிடம் ஒப்படைத்தார் வில்லியம்சன். அவரும் சிறப்பாகப் பந்துவீசி கட்டுப்படுத்தினார். ஒரு பவுண்டரி, கடைசிப் பந்தில் ஒரு சிக்ஸர் கொடுத்தாலும் மும்பை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம், 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது.  
 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/17/srh-beat-mi-by-3-runs-3846198.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிங்கு சிங் போராட்டம் வீண்: லக்னெள த்ரில் வெற்றி

ipl

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

ஐபிஎல்-இன் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற லக்னௌ கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கினர். இந்த இணை தொடக்கம் முதலே அதிரடி காட்டி விளையாடியது. பவர் பிளே முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு, சற்று ரன் ரேட்டில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில், டிம் சௌதி வீசிய 10-வது ஓவரில் ராகுல் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரடி காட்டினார். இதன்பிறகு, சீரான வேகத்தில் ரன் உயர்ந்தது. டி காக் 36-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். 

அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே ராகுலும் 41-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களைத் தாண்டிய இந்த இணை 15 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 122 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு, டி காக் ருத்ரதாண்டவ நிலைக்குச் சென்று விளையாட லக்னௌ ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. வருண் சக்ரவர்த்தி வீசிய 16-வது ஓவரில் டி காக் 2 சிக்ஸர், 1 பவுண்டரி விளாச லக்னௌவுக்கு 18 ரன்கள் கிடைத்தன. இதன்பிறகு, ஆண்ட்ரே ரஸல் வீசிய 18-வது ஓவரில் டி காக் மீண்டும் சிக்ஸரும், பவுண்டரியும் விளாச அந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தன. அதே ஓவரில் டி காக்கும் 59-வது பந்தில் சதத்தை எட்டினார். இதன்பிறகு, டிம் சௌதி 19-வது ஓவரை வீசினார். 

முதல் பந்தை ராகுல் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். அடுத்து ஸ்டிரைக்குக்கு வந்த டி காக் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து விளாசினார். இதனால், அந்த ஓவரில் லக்னௌவுக்கு 27 ரன்கள் கிடைத்தன. கடைசி ஓவரை ரஸல் மீண்டும் வீசினார். அதிரடி மனநிலையில் இருந்த டி காக் கடைசி ஓவரிலும் தொடர்ந்து 4 பவுண்டரி விளாசினார். இதனால், அந்த ஓவரிலும் லக்னௌவுக்கு 19 ரன்கள் கிடைத்தன. இறுதிவரை விக்கெட்டை பறிகொடுக்காமல் டி காக், ராகுல் இணை புதிய சாதனையைப் படைத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னௌ அணி விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் குவித்துள்ளது. டி காக் 70 பந்துகளில் 140 ரன்களும், ராகுல் 51 பந்துகளில் 68 ரன்களும் எடுத்தனர். டி காக் பவுண்டரி மற்றும் சிக்ஸரிலேயே 100 ரன்கள் எடுத்துள்ளார். 

கடின இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. வெங்கடேஷ் ஐயர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற தொடர்ந்து அபிஜித் தோமரும் 4 ரன்களில் ஏமாற்றம் அளித்தார். இந்த நிலையில் களமிறங்கிய ராணா, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் அணியியை சரிவிலிருந்து மீட்டனர். அதிரடியாக விளையாடிய ராணா 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த பில்லிங்ஸ் ஸ்ரேயஸ் ஐயருக்கு ஒத்துழைப்பு அளித்தார். 29 பந்துகளில் அசைதம் கடந்த ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ரஸல் 5 ரன்களில் வெளியேறினார். இதன்பின்னர் வந்த ரிங்கு சிங், நரேன் ஜோடி கடைசிகட்டத்தில் அதிரடியில் கலக்கினர். 

ரிங்கு சிங் 40(15பந்துகள்) ரன்களில் ஆட்டமிழந்ததும் கொல்கத்தா அணியின் வெற்றி கனவு தகர்ந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.  

 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/18/ipl2022-lucknow-beat-kolkata-in-final-over-thriller-3846645.html

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு பார்க்க விறுவிறுப்பாக இருந்தது.......ஆரம்பத்திலேயே ராகுலின் கேட்ச் ஒன்று தவறியது அவர்களுக்கு நல்ல சந்தர்ப்பமாய் அமைந்து விட்டது........!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'கிங் இஸ் பேக்': கோலி அதிரடியால் வென்றது பெங்களூரு

Royal Challengers Bangalore vs Gujarat Titans

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதனைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். சுப்மான் கில் ஒரு ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வேட் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். 

சஹா பெரிய இன்னிங்ஸை ஆடுவதற்கான அடித்தளத்தை அமைத்தார். ஆனால், அவர் 31 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தார்.  19-வது ஓவரில் பவுண்டரி அடித்த பாண்டியா 41-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். மில்லர் 34 ரன்களுக்கும், தெவாடியா 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.  பாண்டியா 47 பந்துகளில் 62 ரன்களும், ரஷித் கான் 6 பந்துகளில் 19 ரன்களும் எடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி, டூபிளெஸ்ஸி ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விராட் கோலி அரை சதம் கடந்த நிலையில், டூபிளெஸ்ஸி ரஷித் கான் வீசிய பந்தில் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதனைத் தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல்லும் கோலியுடன் அதிரடி காட்டினார். இதனிடையே அணியின் ரன்கள் பட்டியலை உயர்த்திய விராட் கோலி 54 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 2 சிக்ஸர்கள்,  8 பவுண்டரிகளை விளாசினார். அதனைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். 

மேக்ஸ் வெல் ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் சேர்த்தார். இதனால் 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்து பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளே ஆப் சுற்றை பெங்களூரு அணி தக்க வைத்துள்ளது.
 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/19/royal-challengers-bangalore-vs-gujarat-titans-3847335.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிளே ஆஃபில் ராஜஸ்தான்

ipl114014

சென்னை சூப்பா் கிங்ஸுக்கு எதிரான வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ரவுண்ட் ராபின் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்த அந்த அணி, பட்டியலில் 2-ஆம் இடம் பிடித்து பிளே ஆஃபுக்குள் நுழைந்தது. சென்னை, தோல்வியுடன் சீசனை நிறைவு செய்து வெளியேறியது.

ஆட்டத்தில் முதலில் சென்னை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்று பேட் செய்த சென்னையில் ருதுராஜ் கெய்க்வாட் 2 ரன்களுக்கும், உடன் வந்த டெவன் கான்வே 16 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனா். ஒன் டவுனாக வந்த மொயீன் அலி ராஜஸ்தான் பௌலிங்கை சிதறடித்தாா்.

மறுபுறம், நாராயண் ஜெகதீசன் 1, அம்பட்டி ராயுடு 3, கேப்டன் தோனி 26 ரன்கள் சோ்த்து வெளியேறினா். கடைசி விக்கெட்டாக மொயீன் அலி 13 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 93 ரன்களுக்கு வீழ்ந்தாா்.

ஓவா்கள் முடிவில் மிட்செல் சேன்ட்னா் 1, சிமா்ஜீத் சிங் 3 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் பௌலிங்கில் யுஜவேந்திர சஹல், ஆபெட் மெக்காய் ஆகியோா் தலா 2, டிரென்ட் போல்ட், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து ராஜஸ்தான் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 59 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டாா். ஜோஸ் பட்லா் 2, கேப்டன் சஞ்சு சாம்சன் 15, தேவ்தத் படிக்கல் 3, ஷிம்ரன் ஹெட்மயா் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

இறுதியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 40, ரியான் பராக் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். சென்னை பௌலிங்கில் பிரசாந்த் சோலங்கி 2, சிமா்ஜீத் சிங், மிட்செல் சேன்ட்னா், மொயீன் அலி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
https://www.dinamani.com/sports/ipl/2022/may/21/rajasthan-in-the-playoffs-3848290.html

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்.எஸ்.தோனிக்கு ஐபிஎல் 2022தான் கடைசி சீசனா? - 'சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அடுத்த சீசனிலும் நான்தான் கேப்டன்'

  • அஷ்ஃபாக்
  • பிபிசி தமிழ்
47 நிமிடங்களுக்கு முன்னர்
 

எம்.எஸ்.தோனி

பட மூலாதாரம்,BCCI/IPL

 

படக்குறிப்பு,

எம்.எஸ்.தோனி

சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக 2023 ஐபிஎல் சீசனிலும் தொடர்வேன் என பேசியிருக்கிறார் எம்.எஸ்.தோனி

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான தோல்விகளோடு வெளியேறினாலும் அடுத்த ஆண்டிலும் கேப்டனாக தொடர்வேன் என தோனி அறிவித்திருப்பது பேசு பொருளாகி வருகிறது

ராஜஸ்தானுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தின்போது பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி, "சென்னையில் விளையாடாமலேயே ரசிகர்களுக்கு நன்றி சொல்வது நியாயமானது அல்ல. அடுத்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் அனைத்து இடங்களுக்கும் சென்று விளையாடலாம் என நம்புகிறேன். அப்படி நடந்தால் வெவ்வேறு இடங்களில் விளையாடி ரசிகர்களுக்கும் நன்றி சொன்னதாக ஆகிவிடும். இது எனது கடைசி ஆண்டாக இருக்குமா, இல்லையா என்பது ஒரு பெரிய கேள்வி. ஆனால் அடுத்த ஆண்டு ஒரு சிறந்த கம்-பேக்கை வழங்க நான் கடுமையாக உழைப்பேன்,'' என பேசியிருக்கிறார் எம்.எஸ்.தோனி.

இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறுவாரா எனும் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், அடுத்த ஆண்டுடன் தோனி ஓய்வு பெறுவாரா எனும் கேள்வியும் அவரது பேச்சின் மூலம் எழுந்திருக்கிறது.

இந்த நிலையில், சி.எஸ்.கே நிர்வாகத்திடம், எம்.எஸ்.தோனி, அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் நான் விளையாடுவேன், கேப்டனாக அணியை வழிநடத்துவேன் என உறுதி அளித்திருப்பதாக இ.எஸ்.பி.என் இணையதளம் தெரிவித்துள்ளது.

 

எம்.எஸ்.தோனி

பட மூலாதாரம்,BBCI/IPL

 

படக்குறிப்பு,

எம்.எஸ்.தோனி

நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு, தனது கேப்டன்சி பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கினார் தோனி. ஆனால் ஜடேஜா தலைமையிலான சி.எஸ்.கே அவ்வளவாக சோபிக்கவில்லை. இதனால் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் தோனி.

2020, 2021 சீசன்களில் தோனி ரன் சேர்க்க தடுமாறியிருந்தாலும் இந்த முறை கணிசமான ரன்களை குவித்திருக்கிறார். 14 போட்டிகளில் 232 ரன்கள் விளாசியதோடு சராசரியாக 33.14 வைத்திருக்கிறார்.

2022 ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரும் சோதனையாக முடிந்திருக்கிறது. புள்ளிப்பட்டியிலில் 9ஆவது இடத்தை பிடித்தது மட்டுமின்றி, ஐபிஎல் வரலாற்றில் 2வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெளியேறியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

முன்னதாக 2020ம் ஆண்டிலும் சென்னை அணி தொடர் தோல்விகளை எதிர்கொண்டது. பல விமர்சனங்களை சந்தித்த சி.எஸ்.கே, 2021ல் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மிகச்சிறந்த கம்பேக்கை கொடுத்தது. தற்போது மீண்டும் சறுக்கியுள்ள சி.எஸ்கே அடுத்த ஆண்டில் ரசிகர்கள் எதிர்பார்க்கும்படியான வெற்றியை ஈட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

https://www.bbc.com/tamil/sport-61533751

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறியது டெல்லி; தப்பியது பெங்களூா்

FTTLBMNaQAAKyTA

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான சனிக்கிழமை ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

தோல்வி கண்ட டெல்லி, பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. வெற்றியுடன் சீசனை நிறைவு செய்த மும்பை, பெங்களூா் பிளே ஆஃபுக்குத் தகுதிபெற உதவியது. தற்போது குவாலிஃபயா் 1-இல் குஜராத் - ராஜஸ்தானும் (மே 24), எலிமினேட்டரில் லக்னௌ - பெங்களூரும் (மே 25) மோதுகின்றன.

சனிக்கிழமை ஆட்டத்தில் முதலில் டெல்லி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுக்க, மும்பை 19.1 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சோ்த்து வென்றது.

டாஸ் வென்ற மும்பை பௌலிங்கை தோ்வு செய்ய, டெல்லி பேட்டிங்கில் டேவிட் வாா்னா் 5, மிட்செல் மாா்ஷ் 0 ரன்னிற்கு வீழ்ந்தனா். பிருத்வி ஷா 24, சா்ஃப்ராஸ் கான் 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். கேப்டன் ரிஷப் பந்த் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39, அதிரடி காட்டிய பவெல் 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 43 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

இறுதியாக ஷா்துல் தாக்குா் 4 ரன்களுக்கு நடையைக் கட்ட, ஓவா்கள் முடிவில் அக்ஸா் படேல் 19, குல்தீப் யாதவ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலிங்கில் பும்ரா 3, ரமன்தீப் சிங் 2, டேனியல் சாம்ஸ், மயங்க் மாா்கண்டே ஆகியோா் தலா 1 விக்கெட் சரித்தனா்.

பின்னா் மும்பை இன்னிங்ஸில் இஷான் கிஷண் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 48 ரன்கள் விளாசி நல்ல தொடக்கம் அளித்தாா். டெவால்ட் பிரிவிஸ் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 37, டிம் டேவிட் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 34 ரன்கள் சோ்த்து உதவினா். கேப்டன் ரோஹித் சா்மா 2, திலக் வா்மா 21 ரன்கள் அடித்தனா். முடிவில் ரமன்தீப் சிங் 13, டேனியல் சாம்ஸ் 0 ரன்னுடன் அணியை வெற்றி பெறச் செய்தனா். டெல்லி பௌலிங்கில் அன்ரிஹ் நோா்கியா, ஷா்துல் தாக்குா் ஆகியோா் தலா 2, குல்தீப் யாதவ் 1 விக்கெட் கைப்பற்றினா்.
 

https://www.dinamani.com/sports/sports-news/2022/may/21/delhi-miss-out-on-play-offs-mumbai-win-3848709.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: ரிஷப் பந்த் செய்த 'பெரிய' தவறு - பிளே ஆஃப்க்குள் நுழைந்த ஆர்சிபி

  • அஷ்ஃபாக்
  • பிபிசி தமிழ்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கிரிக்கெட் - ஐ.பி.எல்

பட மூலாதாரம்,BCCI/IPL

ரிஷப் பந்த் ஏன் அந்த தவறை செய்தார்? சக வீரர்களுக்கும் இதில் பங்குள்ளதா? ஜெயிக்க வேண்டிய போட்டியை இப்படியா கோட்டை விடுவது? தோல்விக்கு பந்த்தான் முழு பொறுப்பு என சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள், வர்ணனையாளர்கள், முன்னாள் வீரர்களின் விமர்சனங்களை பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது.

'இந்த நேரத்தில்தான் நாம் காமன் சென்ஸை பயன்படுத்த வேண்டும்' என ரிஷப் பன்டின் தவறை சுட்டிக்காட்டும் விதமாக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

ரிஷப் பந்த் என்ன செய்தார்?

மும்பை வான்கடே மைதானத்தில் பிளே ஆஃப்க்குள் நுழையப்போகும் 4வது அணியை நிர்ணயிப்பதற்கான லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டது டெல்லி கேப்பிடல்ஸ். இந்த போட்டியில் மும்பையை வீழ்த்தினால் டெல்லி பிளே ஆஃப்க்குள் நுழையும். ஒருவேளை வெற்றியை நழுவ விட்டால் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள பெங்களுருவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கும்.

இப்படியொரு வாழ்வா சாவா நிலைமையில்தான் மும்பையுடன் விளையாடியது டெல்லி அணி. முதலில் பேட் செய்த டெல்லி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது.

 

கிரிக்கெட் - ஐ.பி.எல்

பட மூலாதாரம்,BCCI/IPL

160 ரன்கள் எடுத்தால் வெற்று எனும் இலக்குடன் களமிறங்கியது மும்பை. இஷான் கிஷன் 48 ரன்களிலும் டெவால்ட் பிரிவிஸ் 37 ரன்களிலும் விடைபெற்றனர். 33 பந்துகளில் மும்பை வெற்றிபெற 65 ரன்கள் தேவைப்பட்டன. இந்த சமயத்தில்தான் டெல்லி அணி அந்த தவறை செய்தது. மும்பை வீரர் டிம் டேவிட் எதிர்கொண்ட முதல் பந்தே பேட்டின் எட்ஜில் பட்டு கீப்பர் ரிஷப் பந்த் வசம் பிடிபட்டது. ஆனால் நடுவர் தபான் ஷர்மா அவுட் கொடுக்கவில்லை.

விக்கெட் கீப்பராக செயல்பட்ட கேப்டன் ரிஷப் பந்த்தும் சக வீரர்களும் ரிவியூ எடுக்காமல் இதனை விட்டு விட்டனர். இதில் என்ன ஆச்சரியம் என்றால், டெல்லி வசம் 2 ரிவியூக்கள் மீதம் இருந்தன. உண்மையில் டிம் டேவிட் முதல் பந்திலேயே டக் அவுட். ரிபிளேயில் பந்து எட்ஜில் பட்டது அப்பட்டமாக தெரிந்தது. ஆனால் டெல்லி அணி ரிவியூ எடுக்கத் தவறியதால் தற்போது பிளே ஆஃப் வாய்ப்பையே இழந்து நிற்கிறது. காரணம் டெல்லி வசம் இருந்த போட்டியை வெறும் 11 பந்துகளில் பிடுங்கிவிட்டார் டிம் டேவிட். 4 சிக்சர், 2 பவுண்டரிகள் என அவர் விளாசிய 34 ரன்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டது. மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பெங்களூருவை பிளே ஆஃப் சுற்றுக்குள் அனுப்பி வைத்திருக்கிறது.

 

கிரிக்கெட் - ஐ.பி.எல்

பட மூலாதாரம்,BCCI/IPL

ஆர்.சி.பிக்கு ஆதரவாக முழக்கம்

பெங்களூரு பிளே ஆஃப்க்குள் நுழைவது முற்றிலும் மும்பையின் கையில் இருந்ததால் வான்கடேவில் பெங்களூரு ரசிகர்களும் திரண்டிருந்தனர். மும்பை அணி பேட்டிங்கின்போது ஆர்.சி.பிக்கு ஆதரவாக முழக்கங்களையும் எழுப்பினர். மும்பை அணியின் வெற்றியை விராட் கோலி உள்பட பெங்களூரு வீரர்களும் தங்கள் முகாம்களில் கொண்டாடியுள்ளனர்.

 

கிரிக்கெட் - ஐ.பி.எல்

பட மூலாதாரம்,BCCI/IPL

கடந்த ஆண்டு குவாலிஃபயர் ஆட்டத்திலும் ரிஷப் பந்த் செய்த ஒரு தவறால் அந்த அணி வெற்றியை கோட்டைவிட்டது. கடைசி ஓவரில் ரபாடாவுக்கு பதில் டாம் கரனுக்கு ரிஷப் பந்த் ஓவர் வழங்கியதை போன்றே, இந்த முறையும் டிம் டேவிட்டிற்கு ரிவியூ எடுக்காமல் பந்த் செயல்பட்டிருப்பதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் விமர்சித்துள்ளார்.

'ஏதோ நடந்துவிட்டது என்பதை உணர்ந்தேன். ஆனால் நெருங்கிய வட்டாரத்தில் இருந்த அனைவருக்கும் பந்து பேட்டில் பட்டதா என உறுதியாக தெரியவில்லை. நாம் ரிவியூ செய்ய வேண்டுமா என்று நான் சக வீரர்களிடம் கேட்டேன். ஆனால் இறுதியில் ரிவியூ செய்ய வேண்டாம் என முடிவு செய்தோம்' என போட்டி முடிந்த பிறகு ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் டெல்லி கேப்டன் ரிஷப் பந்த்.

நடப்பு தொடரில் டெல்லி அணி சிறப்பாக செயல்பட்டாலும் சிறிய தவறுகளால் பெரிய வாய்ப்புகளை இழந்திருப்பது ரசிகர்களையும் அதிருப்தி அடையச் செய்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/sport-61541754

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2022 - ஹைதராபாத்தை வீழ்த்தியது பஞ்சாப்

ஐபிஎல் 2022ன் இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் - ஹைதராபாத் அணிகள் மோதின. வான்கடேவில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி ப்ரியம் கார்க்கும், அபிஷேக்கும் தொடக்கம் தந்தனர். ஆனால் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரிலேயே ப்ரியம் கார்க் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ராகுல் திரிபாதி களமிறங்கினார். பஞ்சாப் அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொள்ள ஆரம்பித்த அபிஷேக்கும், திரிபாதியும் தங்களது ஆட்டத்தில் போகப்போக வேகத்தை கூட்டினர்.அந்த சமயத்தில் ஸ்வீப் அடிக்க முயன்ற திரிபாதி 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Pbks

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்க்ரம் அபிஷேக்குடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய அபிஷேக் லிவிங்ஸ்டோனின் அருமையான கேட்ச்சால் 43 ரன்களுக்கு  வெளியேறினார்.

பிறகு மார்க்ரமும், பூரனும் ஜோடி சேர்ந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பூரன் 5 ரன்களில் நடையை கட்டினார். அவரைத் தொடர்ந்து மார்க்ரமும் ரன்களில் வெளியேற ஹைதராபாத் அனியின் ரன் வேகம் குறைந்தது.

இந்த சமயத்தில் ரபாடா வீசிய 18ஆவது ஓவரில் 19 ரன்கள் ஹைதராபாத் அணிக்கு கிடைத்தது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

Brar

இறுதிக்கட்டத்தில் வாஷிங்டன் சுந்தரும், ஷெப்பர்டும் சற்று அதிரடி காட்டினார். ஆனால் கடைசி ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணிக்கு ஷிகர் தவானும், பேர்ஸ்டோவும் தொடக்கம் தந்தனர். பேர்ஸ்டோ ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டார். 

15 பந்துகளில் 23 ரன்களை எடுத்த அவர் ஃபரூக்கி ஓவரில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்ததாக களமிறங்கிய ஷாருக்கானும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

தவானும் அதிரடி காட்ட பஞ்சாப் பவர் ப்ளே முடிவில் 62 ரன்களை எடுத்தது.  தொடர்ந்து அதிரடியாக விளையாட முயன்ற ஷாருக் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

அவரைத் தொடர்ந்து மயாங்க் அகர்வாலும், தவானும் ஜோடி சேர்ந்தனர்.  ஆனால் மயாங்க் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 
மயாங்க்குக்கு அடுத்ததாக களமிறங்கிய லிவிங்ஸ்டோன்  தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து அசத்தினார்.  

தொடர்ந்து ஆடிய அவர் உம்ரான் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து அதகளம் செய்தார். இதனால் அந்த அணி 12 ஓவர் களிலேயே 100 ரன்களைக் கடந்தது. 

Srh

சிறப்பாக விளையாடிவந்த தவான் 39 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த ஜிதேஷும் அதிரடி காட்ட பஞ்சாப்பின் சேஸிங் எளிதானது. ஆனால் எதிர்பார்க்காத சமயத்தில் ஜிதேஷ் 19 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து மான்கட் லிவிங்ஸ்டோனுடன் இணைந்தார். 

இந்த ஜோடியும் ஹைதராபாத் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டது. குறிப்பாக லிவிங்ஸ்டோன் தனது அதிரடியை குறைக்காமல் ஹைதராபாத் ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கினார். மேலும் அவர் அவர் இந்த ஐபிஎல்லில் 1000ஆவது சிக்ஸையும் அடித்தார்.

தொடர்ந்து அதிரடியாக ஆடி அவர் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.

 

https://www.siragukal.com/ஐபிஎல்-2022-ஹைதராபாத்தை-வீழ்த்தியது-பஞ்சாப்-19562.html

 

 

 

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2022: ப்ளே ஆப்க்குத் தேர்வான அணிகளும் அதன் போட்டி விவரங்களும்

ipl

ஐபிஎல் 2022 தொடரில் குஜராத், ராஜஸ்தான், லக்னௌ, பெங்களூர் ஆகிய அணிகள் ப்ளே ஆப்க்குத் தேர்வாகியுள்ளன. 

நேற்றைய போட்டியில் தில்லி அணியை மும்பை அணி வெற்றிப் பெற்றதால் பெங்களூர் அணி ப்ளே ஆப்க்குத் தேர்வானது. ப்ளே ஆப் போட்டிகள் நடை பெறும் இடம், நாள் மற்றும் அதன் போட்டி விவரங்கள்: 

  • குவாலிஃபையர் 1: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ். மே24  செவ்வாய்க் கிழமை, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெறவிருக்கிறது. 
  • எலிமினேட்டர் : லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.  மே -25 புதன் கிழமை, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெறவிருக்கிறது. 
  • குவாலிஃபையர் 2: குவாலிபயர் 1 இல் தோல்வி அடைந்த அணி எலிமினேட்டரில் வெற்றிப் பெற்ற அணியுடன் மே 27 வெள்ளிக் கிழமை அஹமதாபாத்தில் விளையாடும். 
  • குவாலிபயர் 1 மற்றும் 2 இல் வெற்றிப்பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் மே-29 நாளன்று ஞாயிற்றுக்கிழமை நடைப்பெறவிருக்கிறது. 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/22/ipl-2022-play-off-teams-and-matchs-details-3848879.html

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் இறுதிச்சுற்றுகள் இன்று ஆரம்பம் - ஜெயிக்கப் போவது யாரு?

spacer.png

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்று, ஒவ்வோர் அணியும் 14 போட்டிகளில் விளையாடின.

புதுமுகமான குஜராத் டைட்டன்ஸ் 10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ், மற்றொரு புதுமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தலா 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்தன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்தன. முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

டெல்லி கேப்பிட்டல்ஸ் ஐந்தாவது இடத்தையும் (7 வெற்றி, 7 தோல்வி), பஞ்சாப் கிங்ஸ் ஆறாவது இடத்தையும் (7 வெற்றி 7 தோல்வி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏழாவது இடத்தையும் (6 வெற்றி, 8 தோல்வி), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எட்டாவது இடத்தையும் (6 வெற்றி, 8 தோல்வி) பிடித்தன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் 4 வெற்றி, 10 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று முறையே ஒன்பதாவது, பத்தாவது இடத்துக்குத் தள்ளப்பட்டன.

இந்த நிலையில் பிளே ஆப் சுற்று இன்று (மே 24) தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் - சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி லக்னோ - பெங்களூரு மோதும் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் ‘குவாலிபையர் 2’ போட்டியில் மோதும்.

எலிமினேட்டர் நாளை (மே 25) கொல்கத்தாவில் நடைபெறும். இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். ‘குவாலிபையர் 2’ ஆட்டம் 27ஆம் தேதியும், இறுதிப்போட்டி 29ஆம் தேதியும் அகமதாபாத்தில் நடக்கிறது.

இன்று நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு நுழைவது குஜராத்தா, ராஜஸ்தானா? இரு அணி வீரர்களும் வெற்றிக்காக போராடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

 

https://minnambalam.com/entertainment/2022/05/24/7/IPL-final-rounds-starts-today

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜஸ்தானை மிரட்டிய மில்லர்...இறுதி போட்டியில் குஜராத்

Miller

டேவிட் மில்லர்

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், யஷ் தயல் பந்தில் ஆட்டமிழந்தார்.

 இதன்பிறகு, பட்லர் நிதானம் காட்ட கேப்டன் சஞ்சு சாம்சன் முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பி அதிரடி காட்டத் தொடங்கினார். 

சாம்சன் அதிரடியால் ராஜஸ்தான் ரன் ரேட் ஓவருக்கு 9-ஐ தாண்டியது.

 பவர் பிளே முடிவில் ராஜஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து சிறப்பான இன்னிங்ஸை விளையாடி வந்த சாம்சன் 47 ரன்கள் எடுத்திருந்தபோது சாய் கிஷோர் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் அதிரடிக்கு நேரம் எடுத்துக்கொள்ள, பட்லரும் அதிரடி காட்டத் தொடங்காததால் ரன் ரேட்டில் சரிவு ஏற்பட்டது.

சாய் கிஷோர் வீசிய 14-வது ஓவரில் படிக்கல் 1 சிக்ஸர், 2 பவுண்டரி விளாச ரன் ரேட் சற்று உயர்ந்தது. அடுத்த ஓவரிலேயே அவர் ஹார்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழக்கும்போது பட்லர் 31 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தார்.

படிக்கல் விக்கெட்டுக்கு பிறகு பட்லர் ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கினார். 15 ஓவர் முடிவில் ராஜஸ்தான் 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. யஷ் தயல் வீசிய 17-வது ஓவரில் பட்லர் 4 பவுண்டரி விளாச 18 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். 

அந்த ஓவரில் பட்லர் அரைசதத்தையும் எட்டினார். அல்சாரி ஜோசஃப் வீசிய 18-வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார் பட்லர். அடுத்து முகமது ஷமி வீசிய 19-வது ஓவரிலும் 1 சிக்ஸர், 1 பவுண்டரி விளாசினார் பட்லர்.

 தயல் வீசிய 20-வது ஓவரில் 1 சிக்ஸர் பறக்கவிட்ட பட்லர் கடைசி பந்தில் 2-வது ரன் எடுக்க முயன்று ஆட்டமிழந்தார். அவர் 56 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார்.

ஆனால், கடைசி பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது. இதனால், கடைசி பந்தை எதிர்கொள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினார். அதுவும் வைடாக வீசப்பட்டது. அந்த பந்தில் ரியான் பராக் ரன் அவுட் ஆனார். இதனால், டிரென்ட் போல்ட் களமிறங்கினார். கடைசி பந்தில் அஸ்வின் 2 ரன்கள் எடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் முகமது ஷமி, யஷ் தயல், சாய் கிஷோர், ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதையடுத்து, களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் சஹா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். ஆனால், பின்னர் வந்த வேட் கில்லுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கில் 35 ரன்களில் ரன் அவுட் ஆக வேட் 35 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய பாண்டியா, மில்லர் ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் வீசிய பந்தை நான்கா புறமும் சிதறடித்தனர். இறுதியாக, மூன்று பந்துகள் மிச்சமிருக்க இலக்கை எட்டி இறுதி போட்டிக்கு குஜராத் அணி தகுதி பெற்றுள்ளது.

குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக மில்லர் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/24/miller-blasts-rajasthan-as-gujarat-reaches-final-3850096.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் விளையாட்டு.......குஜராத் கடைசி ஓவரில் முதல் மூன்று பந்துகளும் மில்லரின் அடியில் மூன்று சிக்ஸர் அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது......!  👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூா் முன்னேற்றம்; லக்னௌ வெளியேற்றம்

spacer.png

கொல்கத்தா: ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டா் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை வெளியேற்றியது.

இதையடுத்து, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவதற்காக ‘குவாலிஃபயா் 2’-இல் ராஜஸ்தான் ராயல்ஸுடன் வெள்ளிக்கிழமை மோதுகிறது பெங்களூா்.

இந்த எலிமினேட்டரில் முதலில் பெங்களூா் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுக்க, லக்னௌ 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களே சோ்த்தது.

பெங்களூா் இன்னிங்ஸில் ரஜத் பட்டிதாா் அசத்தலாக ஆடி ரன்கள் குவிக்க, பின்னா் லக்னௌ தரப்பில் கேப்டன் கே.எல்.ராகுல் கடுமையாகப் போராடியும் பலன் கிடைக்காமல் போனது.

முன்னதாக மோசமான வானிலை காரணமாக இந்த ஆட்டம் 40 நிமிஷங்கள் தாமதமாகத் தொடங்கியது. ஆனாலும், ஓவா்கள் குறைக்கப்படவில்லை. டாஸ் வென்ற லக்னௌ பௌலிங்கை தோ்வு செய்தது.

பெங்களூா் பேட்டிங்கில் கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானாா். ரஜத் பட்டிதாரின் அதிரடியில் பெங்களூா் ஸ்கோா் மளமளவென உயா்ந்தது. விராட் கோலி 25, கிளென் மேக்ஸ்வெல் 9, மஹிபால் லோம்ரோா் 14 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா்.

கடைசியாக பட்டிதாருடன் இணைந்தாா் தினேஷ் காா்த்திக். பட்டிதாா் அளித்த கேட்ச் வாய்ப்புகளை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தவறவிட்ட லக்னௌ, அதற்கான பலனை அனுபவித்தது.

ஓவா்கள் முடிவில் பட்டிதாா் 12 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 112, தினேஷ் காா்த்திக் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 37 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ பௌலிங்கில் மோசின் கான், கிருணால் பாண்டியா, அவேஷ் கான், ரவி பிஷ்னோய் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் லக்னௌ இன்னிங்ஸில் கேப்டன் ராகுல் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 79 ரன்கள் அடிக்க, தீபக் ஹூடா 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 45 ரன்கள் சோ்த்தாா். மனன் வோரா 19, குவின்டன் டி காக் 6, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 9, கிருணால் பாண்டியா 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

ஓவா்கள் முடிவில் எவின் லீவிஸ் 2, துஷ்மந்தா சமீரா 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூா் பௌலிங்கில் ஜோஷ் ஹேஸில்வுட் 3, முகமது சிராஜ், வனிந்து ஹசரங்கா, ஹா்ஷல் படேல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/26/lucknow-super-giants-vs-royal-challengers-bangalore-3850687.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2022: ஏலம் போகாத வீரரின் அதிரடி ஆட்டம் - எலிமினேட்டரில் லக்னோவை வென்றது ஆர்.சி.பி

  • அஷ்ஃபாக்
  • பிபிசி தமிழ்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பட மூலாதாரம்,BCCI/IPL

ஐபிஎல்லில் ஏலம் போகாத ஒரு வீரர் தொடரின் நடுவில் அணியில் சேர்க்கப்பட்டு முக்கியமான ஆட்டத்தில் சதம் விளாசி வெற்றியை தேடித் தந்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

ஆம்... கோலி, டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல் என ஆர்.சி.பியின் டாப் பேட்ஸ்மேன்களால் முடியாததை தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் செய்து முடித்திருக்கிறார் பெங்களூரு வீரர் ரஜத் படிதார். அவரது பெரிய பங்களிப்பால் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளது ஆர்.சி.பி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான ஐபிஎல் எலிமினேட்டர் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

மழை காரணமாக 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கிய ஆட்டத்தில், டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூரு கேப்டன் டு பிளெசிஸ் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க, நிதானமாக விளையாடிய விராட் கோலி 25 ரன்களில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 9, மஹிபால் 14 ரன்களில் விடைபெற்றனர்.

விளாசிய படிதார்

விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய படிதார் எதிரணி பந்துவீச்சை சிக்சரும் பவுன்டருமாக பறக்கவிட்டார். 28 பந்துகளில் அரைசதம் விளாசியதோடு களத்தில் நங்கூரமிட்டு பவுலர்களை கடுமையாக சோதித்தார் படிதார்.

16வது ஓவரில் படிதாரின் கேட்சை பிடிக்க தீபக் ஹூடா தவறியதால் அதற்காக லக்னோ அணி அதிக விலையை கொடுக்க நேரிட்டது. குறிப்பாக, அந்த கேட்ச் ஆட்டத்தின் போக்கையே மாற்றியிருக்கக் கூடும். கேட்சை கோட்டைவிட்டதன் விளைவு கடைசி 5 ஓவர்களில் மட்டும் 84 ரன்கள் விளாசியது பெங்களூரு அணி. ஷேவாக் பாணியில் சிக்சருடன் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார் படிதார்.

நடப்பு தொடரில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் எனும் பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

படிதாருடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும் தனது பங்குக்கு அதிரடி காட்ட பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்தது.

படிதார் 54 பந்துகளில் 7 சிக்சர் 12 பவுன்டர்களுடன் 112 ரன்களும் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 37 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்

இந்த ஜோடி 41 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்தது கவனிக்கத்தக்கது.

 

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

வென்ற பெங்களூரு அணி

208 எடுத்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் களமிறங்கியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.

முதல் ஓவரின் 5வது பந்தில் சிக்சர் விளாசி அச்சுறுத்திய டி காக்கை அடுத்த பந்தே ஆட்டமிழக்கச் செய்தார் பெங்களூரு பவுலர் முகமது சிராஜ். அடுத்து வந்த மனன் வோஹ்ரா 19 ரன்களில் ஆட்டமிழக்க, ராகுலுடன் இணைந்து பொறுப்புடன் விளையாடினார் தீபக் ஹூடா. அணியை சரிவில் இருந்து மீட்க போராடிய இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தது. 4 சிக்சர் விளாசி களத்தில் மிரட்டிக் கொண்டிருந்த தீபக் ஜூடா ஹசரங்கா சுழலில் சிக்கி வெளியேறினார்.

விக்கெட்டுகள் சரிந்தாலும் வெற்றியை எட்டிப்பிடிக்க கே.எல்.ராகுல் கடுமையாக முனைப்பு காட்டினார். 58 பந்துகளில் 5 சிக்சர் 3 பவுன்டரிகளுடன் 79 ரன்கள் சேர்த்திருந்தபோது ஹேசில்வுட் பந்தில் ஷாபாசிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அத்துடன் LSGயின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியதோடு தொடரில் இருந்து வெளியேறியது லக்னோ அணி.

14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று குவாலிஃபயர் ஆட்டத்திற்கு தகுதி பெற்று அசத்திய ஆர்.சி.பி, வெள்ளிக்கிழமை நடைபெறும் குவாலிஃபயர் 2வது ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.

https://www.bbc.com/tamil/sport-61588708

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: இறுதிப்போட்டிக்குள் நுழையப்போவது யார்?

spacer.png

2022 ஐபிஎல் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச் சுற்றில் ராஜஸ்தான் - பெங்களூரு அணிகள் இன்று (மே 27) மோதுகின்றன.

15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்துக்கு வந்துவிட்டது. இன்னும் இரண்டு ஆட்டங்களில் புதிய சாம்பியன் யார் என்பது தெரிந்துவிடும். ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே இறுதிச்சுற்றை எட்டி விட்டது. இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணி எது என்பதை நிர்ணயிக்கும் இரண்டாவது தகுதிச் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (மே 27) இரவு மோதுகின்றன.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலாவது தகுதிச்சுற்றில் குஜராத்திடம் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆனாலும் புள்ளிப்பட்டியலில் டாப்-2 இடத்துக்குள் வந்ததால் இன்னொரு வாய்ப்பு கிட்டியுள்ளது.

2008ஆம் ஆண்டு அறிமுக ஐபிஎல் கோப்பையை ராஜஸ்தான் கைப்பற்றியது. அதன்பிறகு அந்த அணி இறுதிச்சுற்றைகூட எட்டியதில்லை. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் முனைப்புடன் வியூகங்களை தீட்டியுள்ளது.

அதே சமயம் லீக் சுற்று முடிவில் 8 வெற்றி, 6 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்த பெங்களூரு அணி வெளியேற்றுதல் சுற்றில் 14 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் ரஜத் படிதாரின் அட்டகாசமான சதம் பிரமிப்பை ஏற்படுத்தியது. அதேபோல் கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 37 ரன்கள் விளாசி அசத்தினார். இதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்த தயாராக இருக்கிறது.

பெங்களூரு அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ஆனால், மூன்று முறை இறுதிப்போட்டிக்கு வந்து தோல்வியடைந்துள்ளது. இந்த நீண்ட கால சோகத்தை தணிக்க பெங்களூரு அணிக்கு இது அருமையான சந்தர்ப்பமாகும். இவ்விரு அணிகளும் லீக் சுற்றில் இரண்டு முறை சந்தித்துள்ளது. ஒரு ஆட்டத்தில் பெங்களூரு நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தான் 29 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி கண்டன. ஏறக்குறைய இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள குஜராத் அணியுடன் மே 29 (ஞாயிற்றுக்கிழமை) மோதும்.
 

 

https://minnambalam.com/entertainment/2022/05/27/14/IPL-who-is-entering-finals

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஞ்சு வென்றால் மகிழ்ச்சி.ஆனால் அங்கால கோலி கப்ரின் இல்லாதபடியால் அவங்களுக்கும் அதிர்ஸ்ரம் அடிக்கலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.