Jump to content

ஐபிஎல் 2022 செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

வழமையில் தோற்றுப் போகும் இந்த அணி நாங்க போட்டி வைக்கலை என்றதும் வென்லுதே.

முதல் மூன்று போட்டிகளிலும் வெல்லவேண்டும் என்ற விரும்பிய அணிகள் வென்றுள்ளன! 

Link to comment
Share on other sites

  • Replies 155
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2022 - மில்லர், தெவாட்டியா அதிரடியில் லக்னோவை வீழ்த்தியது குஜராத்

ஐபிஎல் 2022 - மில்லர், தெவாட்டியா அதிரடியில் லக்னோவை வீழ்த்தியது குஜராத்

3வது விக்கெட்டுக்கு 57 ரன் சேர்த்த பாண்ட்யா, வேட் ஜோடி

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, மேத்யூ வேட் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தது.

மும்பை:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத்-லக்னோ அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. தீபக் ஹூடா 55 ரன், ஆயுஷ் பதோனி 54 ரன் எடுத்தனர்.

குஜராத் சார்பில் முகமது ஷமி 3 விக்கெட் எடுத்தார். வருண் ஆரோன் 2 விக்கெட், ரஷித் கான் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய விஜய் சங்கர் 4 ரன்னில் அவுட்டானார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 28 பந்தில் ஒரு சிகசர், 5 பவுண்டரி உள்பட 33 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ வேட் 30 ரன்னில் வெளியேறினார். 

குஜராத் அணி ஒரு கட்டத்தில் 78 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அடுத்து இறங்கிய டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா அதிரடியாக ஆடினர். மில்லர் 30 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு வெற்றிக்கு தேவையான  ரன்களை எடுத்து ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2022/03/28232603/3616866/Tamil-News-Gujarat-beat-Lucknow-in-IPL-2022.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வெற்றிகொண்டது ராஜஸ்தான் றோயல்ஸ்

(என்.வீ.ஏ.)

 

 

புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 61 ஓட்டங்களால் ராஜஸ்தான் றோயல்ஸ் வெற்றிகொண்டது.

41c1b3b5-10be-4146-b951-41d1dce9988e.jpg

இதன் மூலம் 15ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் முதலாவதாக துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை தக்கவைத்து வெற்றிபெற்ற முதலாவது அணி என்ற பெருமையை ராஜஸ்தான் றோயல்ஸ் பெற்றுக்கொண்டது.

இந்த வருடம் நடைபெற்ற முதல் நான்கு போட்டிகளில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய அணிகளே வெற்றிபெற்றிருந்தது.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் ட்ரென்ட் போல்ட், ப்ராசித் க்ரிஷ்ணா ஆகிய இருவரின் வேகப்பந்து வீச்சில் தடுமாறிப்போன சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணி, ஐபிஎல் வரலாற்றில் பவர்ப்ளேயில் மிகக் குறைந்த எண்ணிக்கையை (14 - 3 விக்.) பதிவுசெய்திருந்தது.

77bfe6f2-131e-4570-9880-8550272cd433.jpg

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 211 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நொக்கி பதிலுக்கு துடுப்பெடத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.

மத்திய வரிசை மற்றும் பின்வரிசை வீரர்கள் மூவரின் நிதானமான துடுப்பாட்டங்களின் உதவியுடனேயே இந்த மொத்த எண்ணிக்கையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பெற்றது.

ட்ரென்ட் போல்ட், ப்ராசித் க்ரிஷ்ணா, யுஸ்வேந்த்ர சஹால் ஆகியோரின் பந்துவீச்சுகளில் பெரும் தடுமாற்றம் அடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 16ஆவது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 78 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. இதில் ரொமாரியோ ஷெப்பர்ட் பெற்ற 24 ஓட்டங்களே அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது.

ea09e351-d1c6-4493-ae41-0d71931aea3d.jpg

ஆனால், அதன் பின்னர் அதிரடியில் இறங்கிய ஏய்டன் மார்க்ராம், வொஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 19 பந்துகளில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஓரளவு கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவினர். 

இதில் வொஷிங்டன் சுந்தர் மாத்திரம் 14 பந்துகளில் 5 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகள் அடங்கலாக 40 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கடைசி 26 பந்துகளில் 71 ஒட்டங்களை குவித்திருந்தது.

ஏய்டன் மார்க் ராம் 41 பந்துகளில் 5 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்களுடன் 57 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காதிருந்தார்.

68a09dfa-8c2c-4a4e-b92f-f50baf769a2a.jpg

ராஜஸ்தான் பந்துவீச்சில் யுஸ்வேந்த்ர சஹால் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ராசித் க்ரிஷ்ணா 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ட்ரென்ட் போல்ட் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 210 ஓட்டங்களைக் குவித்தது. இதில் மொத்தமாக 16 பவுண்ட்றிகளும் 14 சிக்ஸ்களும் அடங்கியிருந்தன. 

இதன் பிரகாரம் பவுண்ட்றிகளில் மாத்திரம் 148 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தன.

துடுப்பாட்டத்தில் முதல் 5 வீரர்களும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

ஜொஸ் பட்லர் (35), யஷஸ்வி ஜஸ்வால் (20) ஆகிய இருவரும் பவர்ப்ளேயில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். 7ஆவது ஓவரின் முதல் பந்தில் ஜஸ்வால் ஆட்டமிழந்த பின்னர் 9ஆவது ஓவரின் முதல் பந்தில் பட்லரும் ஆட்டமிழந்தார்.

186d13b2-f6c2-4340-9d38-bd3465465d75.jpg

இதனைத் தொடர்ந்து 3ஆவது விக்கெட்டில் ஜோடிசேர்ந்த அணித் தலைவர் சஞ்சு செம்சன், தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரும் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

செம்சன் 27 பந்துகளில் 5 சிக்ஸ்கள், 3 பவுண்ட்றிகளுடன் 55 ஓட்டங்களையும் படிக்கல் 29 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 41 ஓட்டங்களையும் குவித்தனர்.

அவர்களைத் தொடர்ந்து ஷிம்ரன் ஹெட்மியர் 13 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகளுடன் 32 ஒட்டங்களையும் ரெயான் பராக் 9 பந்துகளில் 12 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்துவீச்சில் உம்ரன் மாலிக் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தங்கராசு நடராஜன் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
 

 

https://www.virakesari.lk/article/124973

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் கிரிக்கெட் - 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு

ஐபிஎல் கிரிக்கெட் - 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு
பவுண்டரி அடித்த ரூதர்போர்டு
 
மும்பை:
 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம், மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங் தேர்வு செய்தது.
 
அதன்படி, முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆண்ட்ரூ ரசல் 25 ரன்னும், உமேஷ் யாதவ் 18 ரன்னும் எடுத்தனர்.
 
பெங்களூரு அணி சார்பில் ஹசரங்கா டி சில்வா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட், ஹர்சல் பட்டேல் 2 விக்கெட், சிராஜ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
 
இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்கத்தில் பெங்களூரு அணியும் தடுமாறியது. கேப்டன் டூ பிளசிஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அனுஜ் ராவத் டக் அவுட்டானார். விராட் கோலி 12 ரன்னில் வெளியேறினார். டேவிட் வில்லி 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.
 
5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரூதர்போர்டு, ஷாபாஸ் அகமது பொறுப்புடன் விளையாடினர். ரூதர்போர்டு 28 ரன்னிலும், ஷாபாஸ் அகமது 27 ரன்னிலும் அவுட்டானார்.
 
இறுதியில், பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து, முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

தங்கராசு நடராஜன் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

நடராஜன் மீண்டும் விளையாடுவது சந்தோசம்.

கூடுதலான ஓட்டங்களை விட்டுக் கொடுத்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை சுப்பர் கிங்ஸை அதிர வைத்த லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அபார வெற்றி

(என்.வீ.ஏ.)

மும்பை ப்றேபோன் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற மிகவும் பரபரப்பான ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியின் கடைசிக் கட்டத்தில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸை அதிர வைத்த லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 6 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.

1edc0d4a-05ce-404f-b0d4-ac23c81e4d02.jpg

சென்னை சுப்பர் கிங்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 211 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணி, குவின்டன் டி கொக், எல்வின் லூயிஸ் ஆகிய இருவரின் அதிரடி அரைச் சதகங்களின் உதவியுடன் 19.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இதற்கு அமைய இதுவரை நடந்து முடிந்த ஏழு போட்டிகளில் 6இல் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய அணி வெற்றி பெற்றுள்ளது. 

அத்துடன் அறிமுக அணிகளில் ஒன்றான லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.

ஆரம்ப வீரர்களான கே. எல். ராகுல், குவின்டன் டி கொக் ஆகிய இருவரும் 62 பந்துகளில் 99 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த தொடக்கத்தை இட்டுக் கொடுத்தேன்.

4c6ab8ee-dcf9-4194-ae69-d08266cd580e.jpg

ராகுல் ட்ராவிட் (40) ஆட்டமிழந்த சொற்ப நேரத்தில் மனிஷ் பாண்டே (5) குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து குவின்டன் டி கொக் (61), தீபக் ஹுடா (13) ஆகியோரும் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து 16 பந்துகளில் வெற்றிக்கு மேலும் 40 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

எல்வின் லூயிஸ், அயுஷ் படோனி ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 13 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸின் வெற்றியை உறுதிசெய்தனர்.

ac75040c-9068-46d7-979a-1e511d578751.jpg

23 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட லூயிஸ் 6 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் படோனி 9 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ட்வேன் ப்ரிட்டோரியஸ் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 210 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப விக்கெட்டில் 28 ஓட்டங்களை ரொபின் உத்தப்பாவுடன் பகிர்ந்த ருத்துராஜ் கய்க்வாட் ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தார்.

e7c13974-3407-41ce-ada5-c4d2b08c2bc6.jpg

தொடர்ந்து உத்தப்பா (50), மொயீன் அலி (35) ஆகிய இருவரும் 30 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.

அவர்கள் இருவரும் 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்த பின்னர் 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ஷிவம் டுபே (49), அம்பாட்டி ராயுடு (27) ஆகிய இருவரும் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு மேலும் பலம் சேர்த்தனர்.

அணித் தலைவர் ரவிந்த்ர ஜடேஜா 17 ஓட்டங்களையும் எம்.எஸ். தோனி ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

6b47c06c-7375-4463-891e-3bf9f91a2a2a.jpg

லக்னோ சுப்பர் ஜயன்ட் பந்துவீச்சில் ரவி பிஷோனி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆவேஷ் கான் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அண்ட்றூ டய் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

 

https://www.virakesari.lk/article/125085

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

csk 210 ஓட்டங்கள்.....நான் அதுதான் வெல்லும் என்று நினைத்திருந்தேன்......ஆனால் அவர்கள் கடைசி ஓவர்களில் வழமைபோல் extra ஓட்டங்களைக் குடுக்கின்றார்கள்.....எனக்கே இது தெரியும்போது எதிரணிக்கு தெரியாமல் இருக்குமா லக்னோ இவர்களை நல்லா வச்சு செய்துவிட்டார்கள் .....நல்ல விளையாட்டு.....!  😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உமேஷ் யாதவ், ரசலின் சிறப்பான பங்களிப்பில் பஞ்சாப்பை வென்றது கொல்கத்தா

(என்.வீ.ஏ.) 

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (01) நடைபெற்ற ஐ.பி.எல். இருபது 20 கிரிக்கெட் போட்டியில் உமேஷ் யாதவின் 4 விக்கெட் குவியல், அண்ட்ரே ரசலின் அபார அரைச் சதம் ஆகியவற்றின் உதவியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்களால் இலகுவாக வெற்றி பெற்றது.

Andre Russell: power and placement, Punjab Kings vs Kolkata Knight Riders, IPL 2022, Wankhede Stadium, Mumbai, April 1, 2022

பஞ்சாப் கிங்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 138 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.

Rahul Chahar celebrates after dismissing Shreyas Iyer, Punjab Kings vs Kolkata Knight Riders, IPL 2022, Wankhede Stadium, Mumbai, April 1, 2022

சீரான இடைவெளியில் 4 விக்கெட்களை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஓட்டங்களை அதிரடியாக குவத்த வண்ணம் இருந்தது.

Andre Russell muscles one away, Punjab Kings vs Kolkata Knight Riders, IPL 2022, Wankhede Stadium, Mumbai, April 1, 2022

அஜின்கியா ரஹானே (12), வெங்கடேஷ் ஐயர் (3), அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் (26), நிட்டிஷ் ரானா (0) ஆகிய நால்வரும் ஆட்டமிழந்த போதிலும் கொல்கத்தா 7 ஓவர்கள் நிறைவில் 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

Umesh Yadav struck the first blow for Kolkata Knight Riders, Punjab Kings vs Kolkata Knight Riders, IPL 2022, Wankhede Stadium, Mumbai, April 1, 2022

இந் நிலையில் சாம் பில்லிங்ஸ், அண்ட்றே ரசல் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 45 பந்துகளில் 90 ஓட்டங்களைப் பகிர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸை வெற்றிபெறச் செய்தனர்.

Bhanuka Rajapaksa slammed 31 off 9, Punjab Kings vs Kolkata Knight Riders, IPL 2022, Wankhede Stadium, Mumbai, April 1, 2022

அண்ட்றே ரசல் 31 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 8 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களை விளாசினார். சாம் பில்லிங்ஸ் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

Shivam Mavi roars after snagging Bhanuka Rajapaksa, Punjab Kings vs Kolkata Knight Riders, IPL 2022, Wankhede Stadium, Mumbai, April 1, 2022

பந்துவீச்சில் ராகுல் சஹார் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 18.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது.

Tim Southee celebrates the wicket of Shikhar Dhawan, Punjab Kings vs Kolkata Knight Riders, IPL 2022, Wankhede Stadium, Mumbai, April 1, 2022

இலங்கை வீரர் பானுக்க ராஜபக்ச மாத்திரமே துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தி 31 ஓட்டங்களைப் பெற்றார். அவருக்கு அடுத்ததாக கெகிசோ ரபாடா 25 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றார்.

Raj Bawa was bowled by Sunil Narine for 11 off 13, Punjab Kings vs Kolkata Knight Riders, IPL 2022, Wankhede Stadium, Mumbai, April 1, 2022

பந்துவீச்சில் உமேஷ் யாதவ் ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 4 ஓவர்கள் பந்துவீசி 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

Sunil Narine celebrates a wicket in typical straight-faced fashion, Punjab Kings vs Kolkata Knight Riders, IPL 2022, Wankhede Stadium, Mumbai, April 1, 2022

இவர் ஆட்டநாயகன் விருதை தனதாக்கிக்கொண்டார்.

Kagiso Rabada frees his arms, Punjab Kings vs Kolkata Knight Riders, IPL 2022, Wankhede Stadium, Mumbai, April 1, 2022
 

 

https://www.virakesari.lk/article/125135

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜஸ்தானை வெற்றி பெறச்செய்த  பட்லரின் சதம், சஹாலின் சிறந்த பந்துவீச்சு

(என்.வீ.ஏ.)

மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (02) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 23 ஓட்டங்களால் ராஜஸ்தான் றோயல்ஸ் வெற்றிபெற்றது.

Jos Buttler brought up a 32-ball half-century, Mumbai Indians vs Rajasthan Royals, IPL 2022, Mumbai, April 2, 2022

ராஜஸ்தான றோயல்ஸ் 2 போட்டிகளில் 2ஆவது வெற்றியை ஈட்டிய அதேவேளை, மும்பை இண்டியன்ஸ் அடைந்த 2 ஆவது தொடர்சியான தோல்வி இதுவாகும்.

Tymal Mills brought out all his death-overs smarts, Mumbai Indians vs Rajasthan Royals, IPL 2022, Mumbai, April 2, 2022

அப் போட்டியில் மும்பை சார்பாக ஜஸ்ப்ரிட் பும்ரா துல்லியமாக பந்துவீசிய போதிலும் ஜொஸ் பட்லர் குவித்த சதம், யுஸ்வேந்த்ர சஹாலின் சிறப்பான பந்துவீச்சு என்பன ராஜஸ்தான் றோயல்ஸை வெற்றிபெறச் செய்தன.

முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 198 ஓட்டங்களைக் குவித்தது.

Jos Buttler hit a 66-ball century, the first overall at IPL 2022, Mumbai Indians vs Rajasthan Royals, IPL 2022, Mumbai, April 2, 2022

யஷஸ்வி ஜய்வால் (1), தேவ்தத் படிக்கல் (7) ஆகியோரை குறைந்த எண்ணிக்கைகளுக்கு இழந்த போதிலும் ஜொஸ் பட்லரும் அணித் தலைவர் சஞ்சு செம்சனும் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 82 ஓட்டங்கள் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு கைகொடுத்தன.

Yuzvendra Chahal was among the wickets again, Mumbai Indians vs Rajasthan Royals, IPL 2022, Mumbai, April 2, 2022

இந்த வருட ஐபிஎல் போட்டியில் முதலாவது சதத்தை ஜொஸ் பட்லர குவித்து அசத்தினார்.  68 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட பட்லர் 11 பவுண்ட்றிகள், 5 சிக்ஸ்களுடன் சரியாக 100 ஓட்டஙகளைக் குவித்தார்.

சஞ்சு செம்சன் 30 ஓட்டங்களைப் பெற்றதுடன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிம்ரன் ஹெட்மியர் 14 பந்துகளில் 3 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்களுடன் 35 ஓட்டங்களை விளாசினார்.

மும்பை இண்டியன்ஸ் பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 4 ஓவர்கள் பந்துவீசி 17 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களையும் டைமல் மில்ஸ் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Jasprit Bumrah removed Yashasvi Jaiswal in the third over, Mumbai Indians vs Rajasthan Royals, IPL 2022, Mumbai, April 2, 2022

199 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

Ishan Kishan scored quickly at the top of the Mumbai innings, Mumbai Indians vs Rajasthan Royals, IPL 2022, Mumbai, April 2, 2022

அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (10), அன்மோல்ப்ரீத் சிங் (5) ஆகிய இருவரும் விரைவாக ஆட்டமிழந்தனர்.

ஆனால், இஷான் கிஷான், திலக் வர்மா ஆகிய இருவரும் அரைச் சதங்கள் பெற்றதுடன் 3ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து மும்பை இண்டியன்ஸுக்கு நம்பிக்கையைக் கொடுத்தனர். ஆனால், அந்த நம்பிக்கை நீடிக்கவில்லை.

Ishan Kishan and Tilak Varma put up a half-century stand for the third wicket, Mumbai Indians vs Rajasthan Royals, IPL 2022, Mumbai, April 2, 2022

இஷான் கிஷான் 54 ஓட்டங்களுடனும் திலக் வர்மா 61 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அவர்களுக்கு அடுத்ததாக  கீரன் பொலார்ட் 22 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றார்.

பந்துவீச்சில் யுஸ்வேந்த்ர சஹால் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நவ்தீப் சைனி 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
 

 

https://www.virakesari.lk/article/125188

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்ஹி கெப்பிட்டல்ஸை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்

(என்.வீ.ஏ.)

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையில் புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

Gujarat Titans' Rahmanullah Gurbaz and Rashid Khan chat with Delhi Capitals' Khaleel Ahmed after the game, Gujarat Titans vs Delhi Capitals, IPL 2022, Pune, April 2, 2022

ஷுப்மான் கில் குவித்த அபார சதமும் லொக்கி பெர்குசன் 4 விக்கெட் குவியலும் அறிமுக அணியான குஜராத்துக்கு 2 போட்டிகளில் 2ஆவது வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.

Rashid Khan belts out an appeal, Gujarat Titans vs Delhi Capitals, IPL 2022, Pune, April 2, 2022

இப் போட்டியில் ஷுப்மான் கில் குவித்த அபார அரைச் சதம் குஜராத்துக்கு வீண் போய்விடுமோ என எண்ணப்பட்ட வேளையில் இரண்டு தடவைகள் ஒரே ஒவரில் இரட்டை விக்கெட்களை வீழ்த்திய லொக்கி பேர்குசன் தனது அணி வெற்றிபெறுவதற்கு உதவினார்.

Twice in the match, Lockie Ferguson struck twice in an over, Gujarat Titans vs Delhi Capitals, IPL 2022, Pune, April 2, 2022

முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர்  ஷுப்மான் கில் அபாரமாக துடுப்பெடுத்தாடி 46 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்ட்றிகள், 4 சிக்ஸ்களுடன் 84 ஓட்டங்களைக் குவித்தார்.

Rovman Powell got a few big hits in, Gujarat Titans vs Delhi Capitals, IPL 2022, Pune, April 2, 2022

அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா 31 ஓட்டங்களைப் பெற்றார். இவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 65 ஓட்டங்களே குஜராத் இன்னிங்ஸில் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

Vijay Shankar runs out Lalit Yadav, Gujarat Titans vs Delhi Capitals, IPL 2022, Pune, April 2, 2022

ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் டேவிட் மில்லர் 20 ஓட்டங்களைப் பெற்று மூன்றாவது அதிகூடிய எண்ணிக்கையைப் பதிவுசெய்தார்.

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் பந்துவீச்சில் முஸ்தாபிஸுர் ரஹ்மான் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கலீல் அஹ்மத் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Lockie Ferguson snagged Prithvi Shaw and Mandeep Singh in the same over, Gujarat Titans vs Delhi Capitals, IPL 2022, Pune, April 2, 2022

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அதிரடி வேகத்தில் ஓட்டங்களைக் குவிக்க முயற்சித்தபோதிலும் மிக முக்கிய நேரங்களில் விக்கெட்களை இழந்ததால் தோல்வியைத் தழுவியது.

Hardik Pandya opened the bowling for Titans and struck with his first ball, Delhi Capitals vs Gujarat Titans, IPL 2022, Pune, April 2, 2022

5ஆவது ஓவரிலும் 15ஆவது ஓவரிலும் லொக்கி பேர்குசனின் பந்து வீச்சில் தலா 2 விக்கெட்களை இழந்தது டெல்ஹியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

Hardik Pandya sets off on a run, Gujarat Titans vs Delhi Capitals, IPL 2022, Pune, April 2, 2022

அணித் தலைவர் ரிஷாப் பன்ட் (43), லலித் யாதவ் (25) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 61 ஒட்டங்களை பகிர்ந்திராவிட்டால் டெல்ஹியின் நிலைமை மேலும் மோசமடைந்திருக்கும்.

இவர்கள் இருவரைவிட ரோவ்மன் பவல் மாத்திரமே 20 ஓட்டங்களை எட்டினார்.

பந்துவீச்சில் லொக்கி பெர்கசன் 4 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹம்மத் ஷமி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.
 

 

https://www.virakesari.lk/article/125193

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2022- ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 2022- ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 180 ரன்கள் அடித்திருந்தது

 
மும்பை:
 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ஜடேஜா பந்து வீச்சை தேர்வு செய்தார். 
 
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் துவக்க வீரர் கேப்டன் மயங்க் அகர்வால் 4  ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர் களமிறங்கிய பனுகா ராஜபக்சே 9 ரன்னில் வெளியேறினார். 
 
இதையடுத்து ஷிகர் தவான்-லிவிங்ஸ்டன் ஜோடி, சென்னை அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக கையாண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டது. லிவிங்ஸ்டன், 60 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.  தவான் 33 ரன்கள் எடுத்தார். ஜிதேஷ் சர்மா 26 ரன்னுடன் வெளியேறினார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.
 
சென்னை அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டான், பிரிட்டோரியஸ் தலா 2  விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது. 
 
துவக்க வீரர்கள் ராபின் உத்தப்பா 13 ரன்னுக்கும், ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ரன் எடுத்த நிலையிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதிபட்சமாக சிவம் துபே 57 ரன்கள் குவித்தார். சென்னை அணி 18 ஓவர்கள் முடிவில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
 
சென்னை அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளதால் ரசிகர்கள் வேதனையடைந்தனர்.


 

https://www.maalaimalar.com/news/topnews/2022/04/03234525/3638849/IPL-2022-Chennai-Super-Kings-suffer-a-hat-trick-defeat.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: ஹைதராபாத் அணியை வீழ்த்திய லக்னோ!

 

spacer.png

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12ஆவது லீக் ஆட்டம் மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று (ஏப்ரல் 4) இரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் ஹைதராபாத் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் தொக்கத்தில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. லக்னோ அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல், ஹைதராபாத் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் சேர்த்தார். அதேசமயம் மறுமுனையில் குயின்டன் டி காக், எவின் லெவிஸ் தலா ஒரு ரன், மணீஷ் பாண்டே 11 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து கே.எல்.ராகுலுடன் தீபக் ஹூடா இணைய, அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இருவரும் அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்தனர்.

தீபக் ஹூடா 51 ரன்களிலும், கே.எல்.ராகுல் 68 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர், குருணால் பாண்டியா 6 ரன்னில் வெளியேறினார். 19 ரன்கள் எடுத்த ஆயுஷ் பதோனி, ஆட்டத்தின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆக, லக்னோ அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்தது. ஜேசன் ஹோல்டர் 8 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

சன் ரைசர்ஸ் தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெப்பர்டு, நடராஜன் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர். இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய அணியின் கேப்டன் வில்லியம்சன் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அபிஷேக் சர்மா - ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தனர்.

அபிஷேக் சர்மா 13 ரன்களில் வெளியேற ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 44 ரன்கள் குவித்து க்ருனால் பாண்டியா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மார்க்ரம் 12 ரன்களில் க்ருனால் சுழலில் சிக்கினார். அதன் பிறகு வாஷிங்டன் சுந்தர் - நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக விளையாடி வந்த பூரன் 34 ரன்களில் அவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதற்கு அடுத்த பந்தில் அப்துல் சமத் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது . இதனால் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

லக்னோ அணியில் சிறப்பாக பந்துவீசிய ஆவேஷ் கான் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இன்று (ஏப்ரல் 5) இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் 13ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல் அணியும், ராயல் சேலஞ்ச் பெங்களூரு அணியும் மோதுகின்றன. ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி ஒன்றில் தோல்வியும் ஒன்றில் வெற்றியும் பெற்றுள்ளது.
 

https://minnambalam.com/entertainment/2022/04/05/12/IPL-Lucknow-wins-Hyderabad

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் கிரிக்கெட்- 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்- 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி
பெங்களூரு அணி வீரர்கள்
 

ராஜஸ்தான் அணியின் பட்லரும், ஹெட்மயரும் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி 83 ரன்கள் சேர்த்தனர்.

 
மும்பை:
 
ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
 
அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய படிக்கல், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லருடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
 
இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் படிக்கல் 37 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். 
 
அவரை தொடர்ந்து ஹெட்மயர் இறங்கி, பட்லருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். பட்லர் அரை சதமடித்து அசத்தினார்
 
இறுதியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது. பட்லர் 70 ரன்னுடனும், ஹெட்மயர் 42 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
 
இதைத் தொடர்ந்து 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கி விளையாடிய பெங்களூரு அணி  19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173  ரன்கள் எடுத்தது.  அதிகபட்சமாக அந்த அணியின் சபாஸ் அகமது 45 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் 44 அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார். 
 
இதையடுத்து அந்த அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெ
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்மின்ஸ் அதிரடி - 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

கம்மின்ஸ் அதிரடி - 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி
பேட் கம்மின்ஸ்
 
 

முதலில் விளையாடிய மும்பை அணி சூர்யகுமார், பொல்லார்டு சிறப்பான ஆட்டத்தால் 161 ரன்களை எடுத்திருந்தது.

 
மும்பை:
 
ஐபிஎல் தொடரின் 14வது லீக் ஆட்டம் புனேவில் இன்று நடைபெற்றது.  இதில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணி முதலில் பேட் செய்தது. 
 
கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இஷான் கிஷண் 15 ரன்னிலும், பிரிவிஸ் 29 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் மும்பை அணி 55 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. 
 
அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா பொறுப்புடன் ஆடினர். சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் அரை சதமடித்து அசத்தினார். அவர் 52 ரன்னில் அவுட்டானார். 
 
இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்துள்ளது. திலக் வர்மா 38 ரன்னுடனும், பொல்லார்டு 5 பந்தில் 3 சிக்சருடன் 22 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 
 
இதனை தொடர்ந்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர் ரகானே 7 ரன்னுடன் வெளியேற, மற்றொரு துவக்க வீரர் வெங்கடேஷ் அய்யர் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 
 
கேப்டன் சிரேயாஸ் அய்யர், ஷியாம் பில்லிங்ஸ், நிதிஷ் ரானா, ரஸ்ஸல் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். வெங்கடேஷ் அய்யருடன் ஜோடி சேர்ந்த பேட் கம்மின்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப் படுத்தினார். 15 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 போர்களை அடித்த அவர் 56 ரன்களை குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
 
கொல்கத்தா அணி 16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது.
 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்மின்ஸ் சா .....என்ன ஒரு நாய்பேய் அடி ......!  👍

நன்றி கிருபன்......!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: குவின்டன் டி காக் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல்: குவின்டன் டி காக் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
குவின்டன் டி காக்

மும்பை

 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 15-வது லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்  அணியும், ரி‌ஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீசுவதாக அறிவித்தது.  அதன்படி முதலில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா தொடக்கம் முதலே பவர்பிளே ஓவர்களை சிறப்பாக பயன்படுத்தி ரன்களை குவித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். பின்னர் கிருஷ்ணப்பா கெளதம் பந்துவீச்சில் பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். அவர் 34 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். 

அவரை தொடர்ந்து பவல் 3 ரன்களிலும் வார்னர் 4 ரன்களிலும் வெளியேற டெல்லி அணி தடுமாற தொடங்கியது.  அதன்பிறகு அணியின் கேப்டன் பண்ட் உடன் சர்ப்ராஸ் கான் ஜோடி சேர்ந்தார். 50 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்த இந்த ஜோடி டெல்லி அணியை சரிவில் இருந்து மீட்டனர். பண்ட் 39 ரன்களுடனும் சர்ப்ராஸ் கான் 36 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன்  டி காக் - கேப்டன் கே எல் ராகுல் களமிறங்கினர்.

அதிரடியாக தொடங்கிய குவின்டன் டி காக்   36 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.  கே எல் ராகுல் 24 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டி காக் 52 பந்துகளில் 80 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். தீபக் ஹூடா 11 ரன் அடித்திருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த குணால் பாண்ட்யா, ஆயுஷ் படோனி ஜோடி லக்னோ அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. 19.4 ஓவர் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. 

குணால் பாண்ட்யா 19 ரன்களுடனும், படோனி 10 ரன்னுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர். இதையடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

 

 

https://www.maalaimalar.com/news/topnews/2022/04/07234534/3650231/IPL2022-Lucknow-win-by-Quinton-de-Gock-action.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லக்னோ தோற்கும் என்றுதான் நான் நினைத்தேன் ஆனால் அடித்து வென்று விட்டார்கள்.......அரை இறுதி வரை வருவார்கள் போல் உள்ளது.......!   👍

நன்றி கிருபன்......!  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2 பந்தில் 12 ரன் தேவை: அடுத்தடுத்து சிக்சர் விளாசிய தெவாட்டியா - குஜராத் திரில் வெற்றி

spacer.png

பஞ்சாப் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி திரில் வெற்றி பெற்றது.
பதிவு: ஏப்ரல் 08,  2022
 
மும்பை,
 
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி முதலில் பேட்டிங் செய்ய பஞ்சாப் அணி களமிறங்கியது.
 
தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் - ஷிகர் தவான் களமிறங்கினர். கேப்டன் மயங்க் அகர்வால் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிரணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் ரஷீத் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
 
அதை தொடர்ந்து ஜானி பேரிஸ்டோவ் களமிறங்கினார். 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவர் பெர்குசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.அதன் பின் களத்தில் இருந்த ஷிகர் தவானுடன் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தார்.
 
லிவிங்ஸ்டன் தனது பாணியில் அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். அவர் குஜராத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். நிதானமாக விளையாடிய தவான் 35 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக விளையாடி வந்த லிவிங்ஸ்டன் அரைசதம் கடந்து அசத்தினார்.
 
அதே நேரத்தில் மறுமுனையில் ஜிதேஷ் சர்மா மற்றும் ஒடின் ஸ்மித், நல்கண்டே பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அதை தொடர்ந்து லிவிங்ஸ்டன் 64 ரன்களில் வெளியேற பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.
 
இருப்பினும் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராகுல் சாஹர் - அர்தீப் அதிரடி காட்டினர். அவர்கள் சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டனர்.
 
இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் ரஷீத் கான் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.
 
தொடக்க வீரர்களாக சுப்மன் கில் - வேட் களமிறங்கினர். கில் அதிரடியாக ஆட்டத்தை தொடங்க வேட் 6 ரன்களில் வெளியேறினார். இதை தொடர்ந்து தமிழக வீரர் சாய் சுதர்சன் முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கினார்.
 
அவரும் கில் உடன் இணைந்து பவுண்டரிகளை விரட்டினார். சிறப்பாக விளையாடிய கில் 29 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ராகுல் சஹர் வீசிய 15-வது ஓவரில் சாய் சுதர்சன் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
 
பின்னர் கில் உடன் அணியின் கேப்டன் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இருவரும் பஞ்சாப் அணியின் அசத்தலான பந்துவீச்சை எதிர்கொண்டு வந்தனர். கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 32 ரன்கள் தேவை என்ற நிலையில் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது.
 
ரபாடா வீசிய அந்த ஓவரில் பாண்டியா இரண்டு பவுண்டரிகளை விரட்ட கில் 96 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் டேவிட் மில்லர் களமிறங்கினார். இறுதி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது.
 
ஓவரின் முதல்பந்தில் பாண்டியா ரன் அவுட்டானார். அதை தொடர்ந்து திவாட்டியா களமிறங்கி 2-வது பந்தில் 1 ரன்கள் எடுத்தார்.
மில்லர் ஒரு பவுண்டரி விரட்ட பின்னர் 1 ரன்கள் எடுத்தார். கடைசி இரண்டு பந்துகளில் 12 ரன்கள் என்ற பரபரப்பான கட்டத்துக்கு ஆட்டம் சென்றது.
 
கடைசி 2 பந்துகளையும் எதிர்கொண்ட திவாட்டியா 2 பந்துகளையும் சிக்சருக்கு விளாசி அணியை வெற்றி பெற செய்தார்.
 
இறுதியில் பஞ்சாப் அணியை 6 விக்கெட்கள்  வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி திரில் வெற்றி பெற்றது.
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சன்ரைசர்ஸின் சகலதுறை ஆட்டத்தில் சரிந்தது சென்னை சுப்பர் கிங்ஸ்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை டி.வை. பட்டில் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (09) நடைபெற்ற பகல் - இரவு இண்டியன் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அமோக வெற்றியீட்டியது.

MS Dhoni and Ravindra Jadeja have a lot to ponder over after Chennai Super Kings lost a fourth straight game, Chennai Super Kings vs Sunrisers Hyderabad, IPL 2022, DY Patil Stadium, April 9, 2022

இதன் மூலம் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் இந்த வருடம் நான்காவது போட்டியிலும் தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளது. மறுபுறத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலாவது வெற்றியை பதிவுசெய்தது.

Ruturaj Gaikwad reacts as the match gets away from Super Kings, Chennai Super Kings vs Sunrisers Hyderabad, IPL 2022, DY Patil Stadium, April 9, 2022

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சகல துறைகளிலும் பிரகாசித்து இந்த வெற்றியை ஈட்டியது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது.

Abhishek Sharma launches the ball to the square-leg boundary, Chennai Super Kings vs Sunrisers Hyderabad, IPL 2022, DY Patil Stadium, April 9, 2022

துடுப்பாட்டத்தில் மொயின் அலி (48), அம்பாட்டி ராயுடு (27), அணித் தலைவர் ரவிந்த்ர ஜடேஜா (23 ஆ.இ.) ஆகிய மூவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

Kane Williamson went slow, but steady enough, for the most part, Chennai Super Kings vs Sunrisers Hyderabad, IPL 2022, DY Patil Stadium, April 9, 2022

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சில் வொஷிங்டன் சுந்தர் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தங்கராசு நடராஜன் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Ravindra Jadeja helped Super Kings end their innings with some momentum, Chennai Super Kings vs Sunrisers Hyderabad, IPL 2022, DY Patil Stadium, April 9, 2022

155 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 17.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 155 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.

Ruturaj Gaikwad loses his stumps to T Natarajan, Chennai Super Kings vs Sunrisers Hyderabad, IPL 2022, DY Patil Stadium, April 9, 2022

அபிஷேக் ஷர்மாவும் அணித் தலைவர் கேன் வில்லியம்சனும் 89 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். வில்லியம்சன் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் ராகுல் த்ரிபாதியுடன் 2ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்த அபிஷேக் ஷர்மா 75 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

த்ரிபாதி 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

Washington Sundar had Robin Uthappa caught by Aiden Markram at long-on, Chennai Super Kings vs Sunrisers Hyderabad, IPL 2022, DY Patil Stadium, April 9, 2022

இப் போட்டியில் முதல் தடவையாக இணைத்துக்கொள்ளப்பட்ட இலங்கையின் மஹீஷ் தீக்ஷன 4 ஓவர்கள் பந்துவீசி 31 ஓட்டங்களைக் கொடுத்து விக்கெட் எதனையும் வீழ்த்தவில்லை. முக்கேஷ் சௌதரி 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ட்வேன் ப்ரவோ 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/125576

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: தொடரும் மும்பையின் தோல்வி - பெங்களூருவின் வெற்றி!

spacer.png

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேவில் நேற்று (ஏப்ரல் 9) இரவு 7.30 மணிக்கு நடந்த 18ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் நான்காவது போட்டியில் விளையாடிய மும்பை அணி தோல்வியைச் சந்தித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்றாவது வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர்.

இருவரும் தலா 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பெர்விஸ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய திலக் வர்மா (0), போல்லார்டு (0), ராமந்தீர்ப் சிங் (6 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

ஆனால், மறுமுனையில் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 37 பந்துகளில் 6 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் உட்பட 68 ரன்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளசிஸ் மற்றும் அனுஜ் ராவத் களமிறங்கினர். டூபிளசிஸ் 16 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த விராட் கோலியுடன் இணைந்து ராவத் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 47 பந்துகளை சந்தித்த ராவத் 6 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 66 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பொறுப்புடன் ஆடிய விராட் கோலி 36 பந்துகளில் 48 ரன்கள் குவித்து வெளியேறினார்.

இறுதியில் பெங்களூரு 18.3 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 152 ரன்களை எடுத்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 2 பந்துகளில் 7 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 2 பந்துகளில் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நான்கு போட்டிகளில் ஆடி நான்கிலும் தோல்வியை தழுவிய மும்பை புள்ளிப்பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது.

இன்று (ஏப்ரல் 10) இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 3.30 மணிக்குத் தொடங்கும் 19ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் 20ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும் லக்னோ அணியும் மோதுகின்றன.

 

https://minnambalam.com/entertainment/2022/04/10/20/IPL-bengaluru-wins-mumbai

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிஎஸ்கே சொதப்பல் தொடருமா? ஜடேஜாவின் வியூகங்கள் பலிக்குமா? - ஓர் அலசல்

  • அஷ்ஃபாக்
  • பிபிசி தமிழ்
9 ஏப்ரல் 2022
புதுப்பிக்கப்பட்டது 10 ஏப்ரல் 2022
 

ஐபிஎல் சிஎஸ்கே

பட மூலாதாரம்,@CHENNAIIPL

ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியைத் தழுவுவது இது 2வது முறை. 2010ல் தோனி தலைமையில் விளையாடிய சென்னை அணி தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. ஆனால் கேப்டன் தோனியின் வியூகத்தால் அந்த தொடரில் இறுதிப்போட்டி வரை சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் முறையாக கோப்பையையும் வென்று ஆச்சரியப்படுத்தியது.

2010க்குப் பிறகு தற்போது மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து 4வது தோல்வியை பதிவு செய்திருக்கிறது. நடப்பு சாம்பியன் சி.எஸ்.கேவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்துள்ளது சன் ரைசர்ஸ் ஐதராபாத்.

ஜொலித்த தமிழக பவுலர்கள்

நவி மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத், சென்னையை பேட்டிங் ஆட அழைத்தது. தொடக்கத்தில் அதிரடி காட்டினாலும் 25 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது சி.எஸ்.கே. வாஷிங்டன் சுந்தர் சுழலில் 15 ரன்களில் உத்தப்பா விடைபெற்றார்.

தொடரின் முதல் 3 போட்டிகளில் தடுமாறிய ருத்துராஜ் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 16 ரன்களில் நடராஜனின் துல்லியமான பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மொயின் அலி 2 ரன்களில் அரைசதத்தை நழுவ விட, அம்பத்தி ராயுடு, ஜடேஜா ஆகியோர் கணிசமான ரன்களை சேர்த்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எம்.எஸ். தோனி 3 ரன்களில் வெளியேறினார்.

சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஐதராபாத் அணி தரப்பில் தமிழக வீரர்களான நடராஜனும் வாஷிங்டன் சுந்தரும் தலா 2 விக்கெட்களை கைப்பற்றி கவனம் ஈர்த்தனர்.

குறிப்பாக இருவரின் பந்துவீச்சில்தான் சி.எஸ்.கேவின் தொடக்க ஆட்டக்காரர்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர். 155 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் 18வது ஓவரிலேயே 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

50 பந்துகளில் 3 சிக்சர் 5 பவுண்டரிகள் விளாசி 75 ரன்கள் சேர்த்து ஐதராபாத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

தொடரும் சி.எஸ்.கேவின் சொதப்பல்

ஐதராபாத்தின் முதல் விக்கெட்டை எடுக்க சென்னை பவுலர்கள் கடுமையாக திணறினர். பவர் பிளேயில் இந்த முறையும் சென்னை அணியால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. 154 ரன்கள் என்பது வலுவான இலக்கு அல்ல. கடந்த சீசனில் சிறப்பாக ஜொலித்த ருத்துராஜ் கெய்க்வாட், இந்த முறை நிலைத்து ஆட முடியாமல் தொடர்ந்து திணறுவது அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது.

டு பிளெசிஸ் இல்லாததும் ஒருவகையில் சென்னையை பாதித்து வருகிறது. முதல் 4 பேட்டர்கள் கணிசமான ரன்களை விளாசினால் மட்டுமே பெரிய ஸ்கோரை எட்ட முடியும். பந்துவீச்சில் எதிரணியின் விக்கெட்களை சென்னை அணி வேகமாக வீழ்த்த வேண்டும். பவர் பிளேயில் முக்கிய விக்கெட்களை வீழ்த்துவதில் தீபக் சஹர் வல்லவர்.

தற்போது அவரும் அணியில் இல்லாதது சென்னைக்கு கூடுதல் நெருக்கடியை அளித்துள்ளது. கடந்த போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய பிரிட்டோரியஸை இந்த போட்டியில் சி.எஸ்.கே. அணியில் சேர்க்காததும் பின்னடைவாக கருதப்படுகிறது.

சென்னை அணி எஞ்சிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே பிளே ஆப்க்குள் நுழைய முடியும். 2020ல் சென்னை அணி சந்தித்த மோசமான தோல்விகளை போன்று இந்த முறையும் நிகழாமல் தவிர்க்க கேப்டன் ஜடேஜாவின் வியூகங்கள் பலிக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

https://www.bbc.com/tamil/sport-61053998

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் : கொல்கத்தா அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி..!

பதிவு: ஏப்ரல் 10,  2022 19:44 PM
 

கிரிக்கெட்

ஐபிஎல் : கொல்கத்தா அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி..!
Image Courtesy : IPL

டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

.மும்பை ,

15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 19-வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின . 

இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி, டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்தது . தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா கொல்கத்தா அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் .

ஒருபுறம் டேவிட் வார்னரும் ,மறுபுறம் பிரித்வி ஷா வும் பந்துகளை பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டனர் .

இதனால் 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் எடுத்தது. .அதிரடியாக விளையாடிய  பிரித்வி ஷா 27 பந்துகளில் அரை சதம் அடித்தார் .தொடர்ந்து விளையாடிய அவர் 51 ரன்களில் ஆட்டமிழந்தார்  பின்னர் வந்த ரிஷாப் பண்ட் அதிரடியாக விளையாடி 27 ரன்களில் ஆட்டமிழந்தார் .

தொடர்ந்து களமிறங்கிய லலித் யாதவ் ,ரோவ்மேன் பவெல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் .

கடைசி நேரத்தில் ஷார்துல் தாக்குர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர்  அதிரடி காட்டினர். 

இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 215  ரன்கள் எடுத்தது .டெல்லி அணியில் அதிகபட்சமாக அதிரடியாக   விளையாடிய  டேவிட் வார்னர் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து 216 ரன்கள் இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியில்  தொடக்கத்தில் வெங்கடேஷ் அய்யர் மற்றும் ரஹானே ஆட்டமிழந்தனர் .

பின்னர் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் நிதிஸ் ராணா சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர் .நிதிஸ் ராணா அதிரடியாக  விளையாடிய 30 ரன்களில் ஆட்டமிழந்தார் .மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் அய்யர் அரை சதம் அடித்தார் .தொடர்ந்து விளையாடிய அவர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார் 

பின்னர் வந்த  வீரர்கள் நிலைத்து நின்று விளையாடாததால் ,கொல்கத்தா அணி 19.4 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுக்களை இழந்து ஆட்டமிழந்தது. 

இதனால் ,டெல்லி அணி  44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .டெல்லி அணியில் அதிபட்சமாக குலதீப் யாதவ் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் 

 

https://www.dailythanthi.com/Sports/Cricket/2022/04/10194426/IPL-Delhi-beat-Kolkata-by-a-huge-margin.vpf

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.