Jump to content

ஐபிஎல் 2022 செய்திகள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பட்லர் அதிரடி சதம்: இறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான்

FTx08AAVUAAFug-

பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் நடப்பு தொடரின் "குவாலிஃபயர் - 2' ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று மோதின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ரஜத் படிதார் 58 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நிலையில் 19வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.

ராஜஸ்தான் அணியின் பட்லர் 60 பந்துகளில் 106 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் குஜராத் அணியுடன் ராஜஸ்தான் மோதவுள்ளது.
 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/27/butler-action-century-rajasthan-in-the-final-3852049.html

 • Like 2
Link to comment
Share on other sites

 • Replies 155
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2022: பெங்களூருவின் கனவு தகர்ந்தது... பட்லர் சதத்தால் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான்

 • அஷ்ஃபாக்
 • பிபிசி தமிழ்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஐபிஎல் 2022

பட மூலாதாரம்,BCCI/IPL

 

படக்குறிப்பு,

ஐபிஎல் 2022இல் பட்லரின் நான்காவது சதம் இது.

ஐபிஎல்லில் கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற ஆர்.சி.பியின் நீண்ட நாள் கனவு மீண்டும் தகர்க்கப்பட்டிருக்கிறது. ஜாஸ் பட்லரின் அபாரமான ஆட்டத்தால் பெங்களூருவை வீழ்த்தி 2008க்கு பிறகு 2வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 2வது குவாலிஃபயர் ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்றது. டாஸில் பெரும்பாலும் தோல்வியை தழுவி வந்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், இந்த முறை டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பொறுப்பான ஆட்டம் - சாதித்த படிதர்

விராட் கோலி 7 ரன்களில் ப்ரஷித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழக்க, 2வது விக்கெட்டுக்கு டூ பிளெசிஸ் உடன் ஜோடி சேர்ந்த ரஜத் படிதர் கடந்த ஆட்டத்தை போன்றே இந்த முறையும் நேர்த்தியாக ஆடினார். சிறப்பான ஷாட்களால் பவுண்டரியும் சிக்சருமாக பறக்கவிட்ட படிதர், 40 பந்துகளில் அரைசதம் விளாசினார். மறுமுனையில் டு பிளெசிஸ் 25, மேக்ஸ்வெல் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். படிதர் 42 பந்துகளில் 3 சிக்சர் 4 பவுண்டரிகள் விளாசி 58 ரன்களில் விடைபெற்றார். ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் சாதனையை படைத்திருக்கிறார் ரஜத் படிதர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் வெறும் 6 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றினார். அவரை தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து நடையை கட்ட பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 34 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ராஜஸ்தானின் பந்துவீச்சு தாக்குதல்

பெங்களூருவின் ரன் குவிப்பை துல்லியமான பந்துவீச்சின் மூலம் சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தது ராஜஸ்தானின் பந்துவீச்சுப் படை. குறிப்பாக ராஜஸ்தான் பவுலர் பிரசித் கிருஷ்ணா விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ஹசரங்கா என முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். அதே சமயம் மெக்காயும் தனது பங்குக்கு 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, முதல் ஓவரிலேயே 2 சிக்சர் 1 பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்து அதிரடியை தொடங்கியது. பவர் பிளே முடிவில் 67 ரன்கள் சேர்த்து போட்டியை தன் வசப்படுத்தியது ராஜஸ்தான் ராயல்ஸ். ஜெய்ஸ்வால் 21, சஞ்சு சாம்சன் 23 ரன்களில் ஆட்டமிழந்தாலும் களத்தில் தனது வேலையை கச்சிதமாக செய்து கொண்டிருந்தார் அதிரடி பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர்.

பட்லர் சதத்தால் தகர்கப்பட்ட ஆர்.சி.பியின் கனவு

சிக்சரும் பவுண்டரியுமாக பறக்கவிட்ட பட்லர், 59 பந்துகளில் சதத்தையும் பதிவு செய்தார். நடப்பு தொடரில் இது அவருக்கு 4வது சதம். ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனையையும் சமன் செய்திருக்கிறார் பட்லர். சதம் அடித்த கையோடு ஹர்ஷல் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தை பட்லர் சிக்சருக்கு விளாச, ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

60 பந்துகளில் 6 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் விளாசிய ஜாஸ் பட்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கேப்டன்

தோல்விக்கு பின்னர் பேசிய பெங்களூரு கேப்டன் டு பிளெசிஸ், "முதல் செஷன் டெஸ்ட் கிரிக்கெட்டை போன்று இருந்தது. உண்மையில் அதிகமான பவுன்ஸ் இருந்தது. 180 ரன்கள் எடுக்க நினைத்தோம் என்றார். ஆர்.சி.பிக்கு இது ஒரு சிறப்பான சீஸன். மிகவும் வலிமையான ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடாவிட்டாலும் ஆர்.சி.பி அணியை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். எங்கு சென்று விளையாடினாலும் ஆர்.சி.பி.. ஆர்.சி.பி என்கிற முழக்கத்தை கேட்க முடிந்தது. மும்பை விளையாடியபோது கூட ஆர்.சி.பிக்கு ஆதரவாக ரசிகர்கள் முழக்கமிட்டது உணர்வுப்பூர்வமாக இருந்தது. எங்கள் ரசிகர்களுக்கு மிக்க நன்றி" எனக்கூறி விடைபெற்றார்.

 

ஜோஸ் பட்லர்

பட மூலாதாரம்,@JOSBUTTLER

 

படக்குறிப்பு,

ஜோஸ் பட்லர்

பின்னர் பேசிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், டாஸ் எங்களுக்கு சாதகமாக அமைந்தது. உண்மையில் அது முக்கிய பங்கு வகித்தது. 2வது இன்னிங்சில் ஆடுகளம் மாறியிருந்தது. ஜாஸ் பட்லர் போன்றதொரு சிறந்த பேட்ஸ்மேன் கிடைப்பதற்கு நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் என மகிழ்ச்சியுடன் கூறினார்.

14 ஆண்டுகளுக்கு பின்னர் இறுதிப்போட்டியில்...

ராஜஸ்தான் ராயல்ஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைவது இது 2வது முறை.. 2008ல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து மறைந்த ஷேன் வார்ன் தலைமையில் கோப்பையை உச்சிமுகர்ந்தது. அதற்கு பின்னர் 2013, 15,18ம் ஆண்டுகளில் பிளே ஆஃப் சுற்று வரை வந்த ராஜஸ்தானுக்கு வெற்றி கைகூடவில்லை. இப்போது மீண்டும் சஞ்சு சாம்சன் தலைமையில் இறுதிப்போட்டிக்குள் கால் பதித்துள்ள ராஜஸ்தான், பலம் வாய்ந்த குஜராத் டைடன்ஸை இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது.

குவாலிஃபயரின் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான், குஜராத்திடம் தோல்வியை தழுவியது கவனிக்கத்தக்கது.

புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்து பலம் வாய்ந்த அணிகளாக வலம் வரும் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஐபிஎல் இறுதி யுத்தம் ஞாயிற்றுக்கிழமை (மே 29) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெறுகிறது. கோப்பையை வெல்ல இரு அணிகளும் சம பலத்துடன் போராடும் என்பதால் ஆடுகளத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கலாம்.

https://www.bbc.com/tamil/sport-61615366

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஏமாற்றமளித்த ராஜஸ்தான்: குஜராத் அணிக்கு 131 ரன்கள் இலக்கு

Gujarat Titans vs Rajasthan Royal final ipl

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 131 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திர மோடி திடலில் நடைபெற்று வருகிறது. 

இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிவருகின்றன. 

முதலில் டாஸ் வென்ற ராஜ்ஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான யாஷஸ்வி ஜெஸ்வால், ஜாஸ் பட்லர் ஆகியோர் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். 

தயாள் வீசிய பந்தை ஜெய்ஸ்வால் தூக்கியடிக்க சாய் கிஷோரிடம் பந்து சிக்கியது. இதனால் ஜெய்ஸ்வால் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் 11 பந்துகளில் 14 ரன்களை மட்டுமே எடுத்தார். 

அதிரடியாக ஆடிவந்த ஜாஸ் பட்லர் 35 பந்துகளில் 39 ரன்களை குவித்தார். எனினும் அவர் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

தொடர்ந்து வந்த படிக்கல் (2), ஹிட்மயர் (11), அஸ்வின் (6), போல்ட் (11) ஆகியோர் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். இதனால் அணியின் ரன் விகிதம் மந்தநிலையிலேயே இருந்தது.

முடிவில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது. நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் இரண்டாவது குறைந்தபட்ச ரன் குவிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.   
 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/29/gujarat-titans-vs-rajasthan-royal-final-ipl-3852929.html

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் கோப்பையை வென்றது குஜராத் டைட்டன்ஸ்!

20220529184L

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திர மோடி திடலில் நடைபெற்றது. 

இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான யாஷஸ்வி ஜெஸ்வால், ஜாஸ் பட்லர் ஆகியோர் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். 

தயாள் வீசிய பந்தை ஜெய்ஸ்வால் தூக்கியடிக்க சாய் கிஷோரிடம் பந்து சிக்கியது. இதனால் ஜெய்ஸ்வால் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் 11 பந்துகளில் 14 ரன்களை மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். 

அதிரடியாக ஆடிவந்த ஜாஸ் பட்லர் 35 பந்துகளில் 39 ரன்களை குவித்தார். எனினும் அவர் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

தொடர்ந்து வந்த படிக்கல் (2), ஹிட்மயர் (11), அஸ்வின் (6), போல்ட் (11) ஆகியோர் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். இதனால் அணியின் ரன் விகிதம் மந்தநிலையிலேயே இருந்தது.

முடிவில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இந்நிலையில், 131 ரன்களை இலக்காக வைத்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் விருத்திமான் சஹா ஆகியோர் களமிறங்கினர். ராஜஸ்தானின் அபாரமான பந்துவீச்சால் சஹா 5 ரன்னிலும் மேத்யூவ் வேட் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் அணியின் கேப்டன் ஹார்த்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில்லின் நிதான ஆட்டத்தில் ரன்கள் அதிகரித்தன. 

இறுதியில் 18.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 133 ரன்களைக் குவித்து குஜராத் அணி கோப்பையை வென்றது. சுப்மன் கில் 45 ரன்களிலும் டேவிட் மில்லர் 32 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் பந்துவீச்சாளர் சஹால் 4 ஓவர்கள் வீசி 20 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

மேலும், ஐபிஎல்-லில் இந்தாண்டு புதிதாக அறிமுகமான குஜராத் அணி அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியிருக்கிறது. 
 

 

https://www.dinamani.com/sports/ipl/2022/may/29/gujarat-titans-won-the-trophy-3853118.html

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2022: மகுடம் சூடியது குஜராத் டைட்டன்ஸ் - கோப்பையை தட்டிப்பறித்த ஹர்திக் படை

 • அஷ்ஃபாக்
 • பிபிசி தமிழ்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி

பட மூலாதாரம்,BCCI / IPL

நரேந்திர மோதி மைதானத்தில் நிரம்பி வழிந்த ரசிகர் கூட்டத்திற்குள் சிக்சரை பறக்கவிட்டார் சுப்மன் கில்.

அதுதான் இறுதி யுத்தத்தின் வின்னிங் ஷாட்டாக அமைந்தது. நடப்பு ஐபிஎல்லின் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்று சாதித்திருக்கிறது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்.

அகமதாபாத்தில் உள்ள மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோதி மைதானத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களின் ஆரவார வெள்ளத்தின் நடுவே விறுவிறுப்புடன் நடைபெற்றது ஐபிஎல் இறுதி ஆட்டம். முன்னதாக, 2 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்ற ஐபிஎல் நிறைவு விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ரன்வீர் சிங் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். டாஸில் அதிக முறை தோற்ற கேப்டன் என பெயர் எடுத்திருந்தாலும் இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தார்.

குஜராத் பந்துவீச்சில் சுருண்டது ராஜஸ்தான்

தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஷ்வாலும் பட்லரும் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஷ்வால் அதிரடி காட்ட, பட்லர் பொறுமையுடன் ஆடினார். 16 பந்துகளில் 2 சிக்சர், 1 பவுன்டரியுடன் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாய் கிஷோர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 14, படிக்கல் 2 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். 4 சதம், 4 அரைசதம் என தொடர் முழுவதும் தனது பேட்டால் மிரட்டிய பட்லரால் கூட இந்த முறை முடியவில்லை. 39 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் கீப்பர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட்டை பறிகொடுத்த வேகத்தில் தனது ஹெல்மெட்டை தூக்கி எறிந்து அதிருப்தியை வெளிப்படுத்தினார் பட்லர். குஜராத்தின் துல்லியமான பந்துவீச்சுக்கு ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களால் களத்தில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பார்னர்ஷிப்பும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அமையவில்லை.

 

குஜராத் டைட்டன்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

கடைசி 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் மட்டுமே ராஜஸ்தானால் எடுக்க முடிந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 130 ரன்களை மட்டுமே சேர்த்தது ராஜஸ்தான். கோப்பையை வெல்ல குஜராத்திற்கு 131 ரன்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் குஜராத்தின் அபாரமான பந்துவீச்சு திறன்.

4 ஓவர்களை வீசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ஹெட்மயர் என 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் ரஷீத் கான், யாஷ் டயல், ஷமி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

நிதானம் காட்டிய கில்

131 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கியது குஜராத். முதல் ஓவரில் விக்கெட் எடுப்பதில் நேர்த்தியான டிரென்ட் போல்ட் தனது 4வது பந்தை சுப்மன் கில்லுக்கு வீச, அவர் கொடுத்த நல்ல கேட்சை தவறவிட்டார் சஹல். இருப்பினும் 2வது ஓவரில் பிரஷித் கிருஷ்னா சாஹாவின் விக்கெட்டை வீழ்த்த ஆட்டம் சூடுபிடித்தது. மேத்யூ வேடும் 8 ரன்களில் ஆட்டமிழந்ததால் களத்தில் விறுவிறுப்பு கூடியது.

கில்லுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார் கேப்டன் ஹர்திக் பாண்டியா. 1 சிக்சர் 3 பவுன்டரியுடன் 34 ரன்களில் ஹர்திக் விடைபெற, டேவிட் மில்லர் வழக்கம்போல அதிரடியாக விளையாடி 32 ரன்கள் சேர்த்தார். களத்தில் நங்கூரமிட்ட சுப்மன் கில் 1 சிக்சர் 3 பவுன்டரிகளுடன் 45 ரன்கள் சேர்த்தார். மிக்காய் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தை கில் சிக்சருக்கு விரட்ட, 7 விக்கெட் வித்தியாசத்தில் இறுதி யுத்தத்தில் வெற்றிபெற்றது குஜராத் டைடன்ஸ்.

 

கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

கம்பேக் கொடுத்த ஹர்திக்

நடப்பு ஐபிஎல்லில் அறிமுகமாகி 9 அணிகளுடன் மல்லுக்கட்டி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை உச்சி முகர்ந்திருக்கிறது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ். ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் தக்க வைக்காத நிலையில், புதிய அணியான குஜராத் டைட்டன்ஸுக்கு கேப்டனாகி கோப்பையையும் வென்று கொடுத்து சிறப்பான கம்பேக்கை கொடுத்திருக்கிறார்.

ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வெல்லும் 3வது கேப்டன் எனும் பெருமையை பெற்றுள்ளார் ஹர்திக் பான்டியா. தோனி, கவுதம் கம்பீர், ரோஹித் சர்மாவுக்கு அடுத்து கேப்டனாக கோப்பையை வெல்லும் 4வது இந்தியராகவும் ஹர்திக் பாண்டியா வலம் வருகிறார். ராஜஸ்தான், மும்பைக்கு அடுத்தபடியாக புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் குஜராத் டைடன்ஸும் இடம்பெற்றுள்ளது.

தோல்விக்கு பின்னர் பேசிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை வெல்ல மிகவும் உரித்தான அணி என கூறினார். "இந்த சீசன் சிறப்பாக இருந்தது. கடந்த 2,3 சீசன்களில் பலரும் மிகுந்த சிரமப்பட்டனர். இப்போது நல்ல கிரிக்கெட் விளையாடி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்களை வழங்கியுள்ளோம். உண்மையில் எனது அணியை நினைத்து பெருமை கொள்கிறேன்" என்றார்.

 

ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம்,BCCI/IPL

பின்னர் பேசிய குஜராத் கேப்டன் பாண்டியா, "உலகின் எந்த அணிக்கும் இதுவே சரியான உதாரணம். நீங்கள் ஒரு குழுவாக விளையாடி, நல்ல வீரர்களுடன் சிறந்த ஒரு யூனிட்டை உருவாக்கினால், அதிசயங்கள் நிகழலாம்" என்றார். மேலும், "5 இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலியாக என்னை எண்ணுகிறேன். உற்சாகமாக இருக்கிறது. அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளும்படி, முதல் ஆண்டு சாம்பியன்ஷிப்பை வென்றது சிறப்பாக உள்ளது" என பேசினார்

இறுதிப்போட்டியில் வென்ற குஜராத் அணிக்கு ஐபிஎல் கோப்பையுடன் பரிசுத்தொகையாக 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் இதனை வழங்க ஹர்திக் பாண்டியா பெற்றுக்கொண்டார். 2வது இடத்தை பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 12.5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/sport-61628880

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1653852787484651-0.png
 
இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் தோற்றதற்கு ஒரு முக்கிய காரணம் ஆடுதளம், சூழலை தவறாக கணித்து, 190-200 அடிக்கும் நோக்கில் முதல் 7-15 ஓவர்களில் ஆடியது தான். 
 
இதற்கு தலைவர் சஞ்சு தான் பொறுப்பேற்க வேண்டும். அவர் பட்லருடன் இணைந்து 15வது ஓவர் வரை சராசரியாக ஓவருக்கு 7-8 ரன்கள் அடித்திருந்தால் போதும். 110-115 வந்திருப்பார்கள். அங்கிருந்து 165-170 அடிப்பது சாத்தியமாகி இருக்கும். அது இந்த ஆடுதளத்தில் ஒரு நல்ல ஸ்கோரே. பின்னர் குஜராத் அணியினர் பேசும் போது 150க்குள் ராஜஸ்தானைக் கட்டுப்படுத்தவே விரும்பினோம், போனஸாக 130க்கு விழுந்து விட்டார்கள் என்றனர். இது அவர்கள் ஆட்டச்சூழலை சரியாக கணித்தார்கள். ஆனால் ராஜஸ்தானோ 190 வேண்டும் என தவறாக எதிர்பார்த்தார்கள் என்பதைக் காட்டுகிறது. இந்த தேவையற்ற எதிர்பார்ப்பே அவர்கள் மீது அழுத்தத்தை உண்டு பண்ணியதே சஞ்சு, பட்லர், ஹெட்மெயரின் விக்கெட்டுகள் விழக் காரணமாகியது. 
 
இவ்வருடம் ஐ.பி.எல் போட்டிகளில் நிறைய அணிகள் செய்த தவறு ஆழமாக மட்டையாடி 17வது ஓவரில் 2-3 விக்கெட்டுகளுக்கு மேல் எதிரணிக்கு கொடுக்காமல் இருப்பதே. பெரும்பாலான அணிகள் 12-16வது ஓவருக்குள் தேவையில்லாமல் 20 ரன் ஓவர்களை நாடி 3-4 விக்கெட்டுகளை சராசரியாக இழந்து பல வெல்ல வேண்டிய போட்டிகளை இழந்தன. அத்தவறை குறைவாக செய்த அணி குஜராத் மட்டுமே. இறுதி ஓவர் வரை மில்லர், ஹர்த்திக், திவாட்டியா போன்றவர்கள் பொறுமையாக, தன்னம்பிக்கையுடன் நின்றாடி வென்றளித்தார்கள். இன்று அவர்கள் முதலில் மட்டையாடி இருந்தாலும் அதைச் செய்திருப்பார்கள். 
 
கடைசியில் முன் யோசனை, திட்டமிடல், ஆட்டச்சூழலை கணித்தாடிய குஜராத்தே வென்றது. அவசரக் குடுக்கை அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் - பட்லர் கைவிட்ட நிலையில் - தோற்றது. இதில் பிற அணிகளுக்கு ஒரு முக்கிய பாடம் உள்ளது: 20 ஓவர்களை ஆடுவது 1-6 இல் வரும் மட்டையாளர்களின் பணி. அவர்கள் 3, 4 ஜோடிகளாக தம்மைப் பிரித்துக் கொண்டு 20 ஓவர்களும் ஆட வேண்டும். ஒரு ஓவரில் 8-10 ரன்கள் வந்தால் போதும் என கடைசி இரு பந்துகளில் ஒற்றை ரன்களுக்கு ஓட வேண்டும். இறுதி 5 ஓவர்களில் 50-60 ரன்களுக்கு மேலும் அடிக்க முடியும்.  சற்று சிரமமான ஆடுதளங்களில் இதுவே சரியான அணுகுமுறை. தட்டையான ஆடுதளங்களில் இதே பாணியில் ஆடினால் கடைசி 5 ஓவர்களில் 80 கூட அடிக்கலாம். 220 இலக்கு கிடைக்கும். ராஜஸ்தான், பேங்களூர், தில்லி போன்ற பல அணிகள் இத்தவறை செய்து, batting deep பண்ணாமல் சொதப்பினார்கள், கடைசி சில ஓவர்களை பந்து வீச்சாளர்களை ஆட விட்டார்கள். குஜராத்தைத் தவிர.
 
அதனாலே குஜராத் இக்கோப்பைக்கு ஒரே தகுதியான அணி! மற்ற அணிகள் இதை 10 ஓவர் போட்டியாகக் கருதி ராட்டினம் சுற்ற, குஜராத் 20 ஓவர்களையும் கணிசமாகப் பயன்படுத்தியது. அது தான் வித்தியாசம்!
 
என்னதான் ராஜஸ்தான், சன் ரைசர்ஸ், பெங்களூர்  போன்ற அணிகளிடம் வலுவான பந்து வீச்சு இருந்தாலும் அவர்களால் கோப்பையை அடிக்க முடியவில்லை. குஜராத்திடமும் நல்ல பந்து வீச்சு இருந்தது. ஆனால் அது போதாது. அதிரடியாளர்கள் வாலை சுருட்டிக் கொண்டு ஆழமாக, நீடித்து ஆட வேண்டும். ஹர்த்திக்கே அப்படி பொறுப்பெடுத்து ஆடிக் காட்டினார். ஒரு மாரத்தான் ஆட்டம் போல் சளைக்காமல் பொறுமையாக ஓடினார்கள், வென்றார்கள்!
 
Link to comment
Share on other sites


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.