Jump to content

ஒரே மூதாதையரிலிருந்தே தமிழரும், சிங்களவரும் தோன்றினர்; தமிழர்கள் மூத்தவர்கள்: க.வி.விக்னேஸ்வரன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவரின் மூதாதையர்கள் இலங்கைக்கு வெளியில் இருந்து வரவில்லை. ஆரியர் வருகை என்பது கட்டுக்கதை. உள்நாட்டிலேயே ஆதியில் இருந்து வந்த மக்கள் தான் தமிழர்களதும் சிங்களவர்களதும் மூதாதையர்கள். இரு இனங்களும் ஒரே மூதாதையர்களின் வழித்தோன்றல்கள் என்பது வரலாற்று ரீதியாக தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்கள் வாழ்ந்து வந்த காலம் இற்றைக்கு
3000 வருடங்களில் இருந்து இற்றை வரையிலாகும். எமது மூதாதையர்களில் சிலர்
சிங்கள மக்களாக மாறியது சிங்களமொழி நடைமுறைக்கு வந்த கி.பி 6ம், 7ம்
நூற்றாண்டுகளிலாகும் என கூட்டிக்காட்டியுள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் எம்.பி.

6 தமிழ் கட்சிகளின் கூட்டு ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த அரசியல் கூட்டத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

இந்தியாவிற்கெதிரான கருத்துடைய எமது 24 கரட் கட்சி, அதன் தாய்க் கட்சியின்
யாப்பு இன்று வரையில் ஒற்றையாட்சியே எமக்கு வேண்டும் என்று கூறினாலுங்கூட,
தேர்தல் காலத்தில் சமஷ்டியே தமது குறிக்கோள் எனக் கூறி வருகின்றார்கள் என்றும தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆறு கட்சிகள் சேர்ந்து நடத்தும் இந்தக் கருத்தரங்கத்தில் பங்குபற்றுவதில்
மனமகிழ்வடைகின்றேன். சென்ற வாரம் ரைம்ஸ் ஒப் இந்தியா என்ற இந்தியப்
பத்திரிகையின் இலத்திரனியல் ஊடகத்திற்கு ஒருபேட்டி அளித்தேன். அங்கு நான்
கூறிய ஒரு விடயம் பத்திரிகைகளில் வெளிவரவில்லை. அதனை இப்பொழுது
உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

இதுகாறும் பிரிந்து நின்ற ஆறு கட்சிகளும் எவ்வாறு ஒருமித்து அந்தக் கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுத முடிந்தது என்று செவ்விகண்டவர் கேட்டார். அதற்கு நான், எமது அரசியல் குறிக்கோள்களைப் பொறுத்தவரையில் எமக்குள் அதிகம் வித்தியாசம் இல்லை
என்றேன். அவற்றை அடையும் மார்க்கம் பற்றியே எமக்குள் முரண்பாடுகள் உண்டு
என்றேன்.

அதை விளக்குமாறு கோரப்பட்ட போது, நான், எமது தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்துமே “ஒற்றையாட்சி வேண்டாம் சமஷ்டி ஆட்சி முறையே வேண்டும்” என்று தான் கோரி வருகின்றோம் என்றேன். எமது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஒரு படி மேலே போய் கூட்டு சமஷ்டியை எமது குறிக்கோளாகக் குறிப்பிட்டுள்ளோம் என்றேன்.

ஆகவே எமது குறிக்கோள் ஒன்றே; அதனை அடையும் விதத்தில் எமக்குள் வேற்றுமைகள், வித்தியாசங்கள், முரண்பாடுகள் உண்டு என்றேன். நான் அங்கு கூறியதை இங்குள்ள அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகின்றேன். ஏதோ காரணத்திற்காக செவ்வி கண்டவர் இக் கேள்வியையும் பதிலையும் தணிக்கை செய்துவிட்டார்.

ஆகவே முக்கியமான ஒரே குறிக்கோளை வைத்திருக்கும் எமது ஆறு கட்சிகளும்
இன்று இந்த கருத்தரங்கத்தை ஒருமித்து நடத்துவதில் வியப்பொன்றுமில்லை.
இந்தியாவிற்கெதிரான கருத்துடைய எமது 24 கரட் கட்சி, அதன் தாய்க் கட்சியின்
யாப்பு இன்று வரையில் ஒற்றையாட்சியே எமக்கு வேண்டும் என்று கூறினாலுங்கூட,
தேர்தல் காலத்தில் சமஷ்டியே தமது குறிக்கோள் எனக் கூறி வருகின்றார்கள்.

ஆகவே அவர்களும் கொள்கை ரீதியாக எங்களுடன் தான்! மலை உச்சியில்
இருந்து உண்மை உணர்ந்து அவதரணம் செய்து மக்களுடன் மக்களாக நின்று
சிந்தித்து எங்கள் எல்லோருடனும் ஒருங்கிணைந்து செயலாற்ற அக்கட்சி ஒத்துக்
கொண்டிருந்தால் எமதுமக்களின் அரசியல் பலம் இன்னும் மேலோங்கியிருக்கும்.
இப்பொழுதும் காலம் கடந்துவிடவில்லை என்று அவர்களுக்கு இந்த உரையின்
ஊடாக அன்புடன் எடுத்துக்கூறிவிட்டு இன்றைய தலையங்கத்திற்கு வருகின்றேன்.

“ஈழத் தமிழர் தீர்வில் நாடாளுமன்றத்தின் வகிபாகம்” என்பது தலையங்கம். எனவே
தமிழ்ஈழத் தமிழருக்கு அப்பாற் போய் இலங்கை எங்கிலும் வாழும் சகல தமிழ்
மக்களையும் உள்ளடக்கியே தலையங்கம் நிற்பதை நாங்கள் அவதானிக்க
வேண்டும். தமிழீழம் என்றால் இலங்கையின் வடக்கு கிழக்கையே அச் சொல்
குறிக்கும். ஈழம் என்றால் முழு இலங்கையையும் குறிக்கும். எனவே வடக்கு
கிழக்குத் தமிழ் மக்களுக்கு அப்பால் சென்று மலையகத் தமிழர்களையும்
வடக்கு கிழக்கு தவிர்ந்த கொழும்புத் தமிழர்களையும் உள்ளடக்கிய மற்றைய
மாகாணத் தமிழ் மக்களையும் ஒன்று சேர்த்தே மேற்படி தலையங்கம்
தரப்பட்டுள்ளது. அதாவது பொதுவாக இந்நாட்டின் தமிழ் மக்களின் தீர்வில்
பாராளுமன்றத்தின் வகிபாகம் என்னவாக இருக்கலாம் என்பதே கேள்வி.

அப்படித்தான் நான் இந்தத் தலையங்கத்தைப் புரிந்து கொண்டுள்ளேன். எனினும்
நான் பொதுவாகவும் தமிழீழத் தமிழர்கள் பற்றி சிறப்பாகவும் சிந்தித்துப் பேச
விழைகின்றேன்.

முழு நாட்டினதும் தமிழ் மக்களைப் பற்றிப் பார்க்கும் போது நாம் சுதந்திரம்
கிடைத்த காலத்திற்கு முன்பிருந்தே ஆராய வேண்டியுள்ளது. ஏனென்றால்
இலங்கைக்கான பாராளுமன்றம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றிய
சதிகள் சுதந்திரத்திற்கு முன்னரே தொடங்கிவிட்டன. அச்சதிகளே இன்று இந்த
ஒற்றையாட்சிக்கு உட்பட்ட பாராளுமன்றத்தை எமக்குத் தந்துள்ளன.

சதிகள் பற்றி ஆராய முன் சுமார் மூன்று நிமிடங்களுக்கு இந்நாட்டின்
தமிழர்களைப் பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வையுடன் தொடங்கலாம் என்று
நினைக்கின்றேன். ஏன் என்றால் எம்முள் பலருக்கு இலங்கைத் தமிழரின் வரலாறு
பற்றி அதிகம் தெரியாது. சிங்கள மக்களைப் போல மகாவம்சக் கதைகளையே
அவர்கள் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கையின் தமிழ்பேசும் மக்களில் இலங்கைத் தமிழர்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் வாழ்ந்து வருகின்றார்கள். இங்குள்ள ஆதிவாசிகளான தமிழ்ப்பேசும் மக்களுடன் அந்தந்த காலகட்டத்தின் போது மேலதிகத் தமிழர்கள் இங்கு வந்து சேர்ந்துள்ளார்கள் என்பது தான் வரலாறு. நாம் பலதரப்பட்ட தமிழர்களின்
வாரிசுகள்!

பாண்டிய, பல்லவ, சோழ, சேர, ஆரிய சக்கரவர்த்திகள் போன்றோர் இங்கு வந்த போது அவர்கள் தம் மக்களையும் தம் நாட்டில் இருந்து கொண்டு வந்து இங்கு குடியேற்றினார்கள். கடைசியாக வந்தவர்களே பிரிட்டிஷார் இங்கு கொண்டு வந்த எமது மலையக சகோதர சகோதரிகள். மதத்தால் வித்தியாசமானவர்களாக இருந்தாலும், பெரும்பான்மை கிழக்கிலங்கை முஸ்லீம்களும் தென்னிந்தியாவின் குறிப்பிட்ட இடங்களில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்களே. அவர்களின் அழகு தமிழ்ப் பேச்சுவழக்கு அதனை
ருசுப்படுத்துகின்றது.

ஆதித்தமிழர்கள் குமரிக்கண்ட மக்களின் வழித்தோன்றல்கள் என்று கூறப்பட்டாலும்
3000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் இரும்புக் காலப் பண்பாடு இலங்கையில்
அறிமுகப்படுத்தப்பட்டது என்று சரித்திர ஆசிரியர்கள் இதுவரையில்
கணித்துள்ளார்கள். கீழடி அகழ்வுகள் எமது சரித்திர அறிவை மாற்றியது போல்
இந்து சமுத்திர ஆழ்கடல் ஆராய்ச்சிகள் குமரிக்கண்ட நாகரிகம் பற்றி ஒரு நாள்
பறைசாற்றுவன. அப்போது எமது சரித்திரப் பார்வை வேறுபடும். எனினும்
தற்போதைய சரித்திரக் கணிப்பைப் பார்ப்போம்.

தலைசிறந்த இந்திய வரலாற்றாசிரியரான விமலா பேக்லே அவர்கள் யாழ்
குடாநாட்டில் அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தமிழ் நாட்டின் தெற்கில் வாழும்
தமிழ் மக்களுடன் நெருங்கிய தொடர்புகளையும், ஒத்தியல்புகளையும்
கொண்டிருந்தார்கள் என்று கூறியுள்ளார.; கலாசார ரீதியாக புத்தளத்தில் இருக்கும்
பொம்பரிப்புக்கும் சுண்ணாகம்- கந்தரோடைக்கும் இடையில் நெருங்கிய
ஒற்றுமைகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஆதிச்சநல்லூரில் கண்டுபிடித்த அகழ்வுகளும் ஒரே மாதிரி காணப்பட்டுள்ளன. இதனைப் பேராசிரியர் சுதர்ஷன் செனவிரத்ன, பேராசிரியர் இந்திரபாலா போன்றவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

அந்த அகழ்வுகளுள் சவ அடக்க தாழிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தாழி
சவ அடக்க முறை மூன்று இடங்களிலும் பின்பற்றியமை தெரிய வந்துள்ளது.

மட்பாண்டத்தில் செய்யப்பட்ட பெரிய தாழிகளில் இறந்தவர் ஒருவருடைய
உடலையோ, சாம்பலையோ அவற்றில் இட்டு இறந்தவர் பாவித்த முக்கியமான
உபகரணங்களையும் அதனுள் போட்டு நிலத்தில் அடக்கம் செய்யும் முறையே
தாழி சவ அடக்கமுறை. வட கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் இத்
தாழிகள் பல அண்மைக் காலங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் ஆதிவாசிகள் வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்ற கருத்து
தற்போது கைவிடப்பட்டுள்ளது. விஜயனும் அவரின் 700 சகாக்களும் வட
இந்தியாவில் இருந்து வெளியேறி இங்கு வந்தார்கள் என்பதற்கு எந்தவித
சான்றுகளும் இந்திய மாநிலங்கள் எவற்றிலும் இல்லை. மகாவம்சத்தை எழுதிய
மகாநாம என்ற பிக்குவின் கற்பனையில் பிறந்தவர்களே மேற்படி விஜயனும்
அவனின் சகாக்களும். பௌத்த மத விருத்திக்காக எழுதப்பட்ட கற்பனைக்
கதையே மகாவம்சம்.

பல வருட காலமாக ஆதியில் இருந்து அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து
எமது தமிழ் மக்களும் சிங்களவர்களும் இந்நாட்டில் சமகாலத்தில் வாழ்ந்து
வந்துள்ளார்கள் என்ற பிழையான கருத்தை எம் மக்கள்
கொண்டிருந்திருக்கின்கிறார்கள்.

கி.பி 5ம் நூற்றாண்டில் அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன்னர் மகாவம்சம் என்ற
நூல் பாளிமொழியில் வெளிவந்த போது சிங்களவர் என்ற ஒரு இனமே அப்பொழுது
உருவாகவில்லை. சிங்களமொழி பாவனைக்கு வந்தது கி.பி 6ம் மற்றும் 7ம்
நூற்றாண்டு அளவில் தான். சிங்களமொழியின் முதல் இலக்கண நூலான “சிதத்
சங்கராவ” கி.பி 13வது நூற்றாண்டில்த்தான் வெளிவந்தது. 2000 வருடங்களுக்கு
முன்னர் சிங்களமொழி இருந்திருந்தால் ஏன் அவர்களின் இலக்கணநூல் 700
ஆண்டுகளுக்கு முன்னர் தான் வெளிவந்திருக்க வேண்டும்? சிங்களம் என்பது மிக
அண்மையமொழி. தமிழ், பாளி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளினதும் கிராமிய
பாரம்பரிய மொழிகளினதும் சேர்க்கையே சிங்களமொழி. வேண்டுமென்றே
சிங்களமொழியினதும் சிங்களவர்களினதும் வரலாறு திரிபுபடுத்தி கூறப்பட்டு
வந்துள்ளது.

வரலாற்று ரீதியாகவும் டிஎன்ஏ சோதனைகள் மூலமாகவும் தற்போது அறிந்து
கொள்ளப்பட ;டிருக்கும் வரலாற்று உண்மை என்னவென்றால் சிங்களவரின்
மூதாதையர்கள் இலங்கைக்கு வெளியில் இருந்து வரவில்லை. ஆரியர் வருகை
என்பது கட்டுக்கதை. உள்நாட்டிலேயே ஆதியில் இருந்து வந்த மக்கள் தான்
தமிழர்களதும் சிங்களவர்களதும் மூதாதையர்கள் என்பது இன்று சரித்திர
ஆசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இரு இனங்களும் ஒரே
மூதாதையர்களின் வழித்தோன்றல்கள் என்பது வரலாற்று ரீதியாக தற்போது
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்கள் வாழ்ந்து வந்த காலம் இற்றைக்கு
3000 வருடங்களில் இருந்து இற்றை வரையிலாகும். எமது மூதாதையர்களில் சிலர்
சிங்கள மக்களாக மாறியது சிங்களமொழி நடைமுறைக்கு வந்த கி.பி 6ம், 7ம்
நூற்றாண்டுகளிலாகும். பின்னர் வந்த இனம் இன்று பாராளுமன்றத்தில் முதன்மை
இனமாக மாறியுள்ளது.

எமக்கு சுதந்திரம் கிடைத்த காலத்தில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள்
பெரும்பான்மையினராக இருக்க மற்றைய மாகாணங்களில் சிங்களவர்கள்
பெரும்பான்மையினராக இருந்தார்கள். ஆகவே தமிழ்ப் பேசும் வட கிழக்கு
மாகாணம் ஒரு அலகாகவும் மற்றைய மாகாணங்கள் இன்னொரு அலகாகவும்
மொழிவாரியாகக் காணப்பட்டன. எனவே நாடு பிரித்தானியரால் அவ்வாறே
பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு மொழிவாரியாகப் பிரித்துப் பார்த்திருந்தால்
சமஷ்டி முறையிலான அரசியல் யாப்பு கட்டாயமாகத் தரப்பட்டிருக்கும். ஏனென்றால்
கண்டியர்கள் கூட சமஷ்டியையே விரும்பினார்கள். அவ்வாறு இலங்கைக்குச்
சமஷ்டி வராது செய்தவர்தான் இலங்கை தேசத்தின் தந்தை என்று சிங்கள
மக்களால் கொண்டாடப்பட்டுவரும் டி.எஸ்.சேனநாயக்க அவர்கள். அவரே
இலங்கையின் முதல் பிரதம மந்திரியானார்.

ஆனால் அவர் தனது திருகுதாளங்களை சுதந்திரம் கிடைக்க முன்னரே தொடங்கியிருந்தார். தமிழ் மக்களுக்கு எதிரான முதல் சதி அவராலும் பின்னர் ஆளுநர் நாயகமாக பதவி வகித்த சேர். ஒலிவர் குணதிலகவாலுமே தான் இயற்றப்பட்டது. அவர்கள்
இருவரும் எப்படியாவது இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாக ஆங்கிலேயர்களால்
பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற திடமான நினைப்பில் இருந்தார்கள்.

அதனால்தான் 1943ல் பிரித்தானியா கூடிய அதிகாரங்களை இலங்கைக்கு வழங்க
இருப்பதாக அறிவித்த பின் சேர் ஜவர் ஜெனிங்க்ஸ் என்ற அரசியல் யாப்பு சட்ட
நிபுணருடன் சேர்ந்து இலங்கையின் சிறுபான்மையினர் எவருடனும்
கலந்தாலோசியாது ஒரு ஒற்றையாட்சி அரசியல் யாப்பு வரைவை இலங்கைக்கெனத்
தயாரித்து பிரித்தானிய கொலனி ஆதிக்க அரசிற்கு அவசர அவசரமாக
கொண்டுபோய்ச் சேர்த்தார்கள்.

அப்படியிருந்தும் கொலனி அரசாங்கம் சிறுபான்மையினரை கலந்தாலோசியாது
தமக்கு தரப்பட்ட வரைபை ஏற்காது சோல்பரி பிரபுவின் தலைமையில் ஒரு
ஆணைக்குழுவை இங்கு அனுப்ப ஆயத்தமானார்கள். இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற
சேனநாயக்காவும் குணதிலகாவும் இரண்டாவது சதியில் இறங்கினார்கள். இலண்டன்
சென்று ஆணையாளர்களைச் சந்தித்து அவர்களைத் தம்பக்கம் ஈர்ப்பதே
அந்தச்சதி. ஆணையாளர்கள் இங்கு வருமுன் சேர் ஒலிவர் குணதிலக இலண்டன்
சென்று ஒலிவர் ஸ்டன்லி என்ற பிரித்தானிய மாநில செயலாளரைச் சந்தித்து
அவருக்கூடாக சோல்பரி பிரபுவைச் சந்தித்து தமது வரைவே இலங்கைக்குச்
சிறந்தது என்ற கருத்தை முன்கூட்டியே ஆணைக்குழுத் தலைவரின் மனத்தில்
ஆழப்பதியப் பண்ணினார்.

இவ்வளவையும் மறைமுகமாகச் செய்துவிட்டு இருவரும் மூன்றாவது சதியில்
இறங்கினார்கள். 22.12.1944ல் சோல்பரி ஆணைக்குழுவினர் இங்கு வந்தபோது
டி.எஸ். சேனநாயக்கா “இந்த ஆணைக்குழு எமக்கு வேண்டாம்” என்ற
ஸ்லோகத்தை எழுப்பி அதிகாரபூர்வமாக ஆணைக்குழுவை பகிஷ்கரித்தார். இதன்
காரணம் கண்டியர்களாலும் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க போன்றவர்களாலும்
தமிழர்களாலும் சமஷ்டி முறை பற்றி சமர்ப்பணங்கள் எழலாம் என்பதால்.
அவ்வாறான சமர்ப்பணங்களைத் தடுக்கவே இவ்வாறு செய்தார்.

ஆகவே கண்டியர்களும் பண்டாரநாயக்கவும் பொன்னம்பலமும் சமஷ்டியை
முன்வைக்க முன் பகிஷ்கரிப்பின் மூலமாக அவர்களின் வாய்களை
டி.எஸ்.சேனநாயக்க அடைத்துவிட்டார். இவ்வளவுக்கும் ஏற்கனவே தமது வரைவை
ஆணையாளர்கள் ஏற்கவேண்டும் என்பதற்கான பூர்வாங்க ஆயத்தங்களை
டி.எஸ்.சேனநாயக்கவும் சேர் ஒலிவரும் சேர்ந்து செய்த பின்னர் தான் பகிஷ்கரிப்பு
நடந்தது. சமஷ்டியை ஆதரிக்கவேண்டிய ஜி.ஜி.பொன்னம்பலம் தன்
கெட்டித்தனத்தை வெளிக்கொண்டு வருவதுபோல் 50 க்கு 50ஜ முன்வைத்தார்.
அவர் சமஷ்டியை முன்வைத்திருக்கலாம். ஆனால் அவரின் 50க்கு 50ஐ
ஆணைக்குழு நிராகரித்தது. ஒற்றையாட்சி முறையை ஆதரித்து தமது
அறிக்கையை அவர்கள் வெளியிட்டனர். சேனநாயக்க மீனுக்கு வாலையும்
பாம்புக்குத் தலையையும் காட்டி தனது காரியத்தைச் சாதித்துக் கொண்டார்.

சேர் ஐவோர் ஜெனிங்ஸ் ஒரு முக்கிய கருத்தை அப்போது வெளியிட்டிருந்தார்-
“சோல்பரி ஆணையாளர்களின் சிபார்சு என்று புதிய அரசியல் யாப்பு வரைவு
அழைக்கப்பட்டாலும் உண்மையில் திரு.சேனநாயக்காவின் வரைவே அது” என்றார்.
“செனட் சபை மட்டுந்தான் ஆணையாளர்களின் சிபார்சு” என்று கூறினர்.
(ஹலுகல்ல 2014 ல் எழுதிய நூலின் 177ம் பக்கத்தில் இவையாவும்
கூறப்பட்டுள்ளன. திரு.செல்வேந்திரா சபாரட்ணம் அவர்களால் விரைவில்
வெளியிடப்படப் போகும் நூலிலும் இவை முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளன.)

ஆகவே பாராளுமன்றத்தின் வகிபாகம் என்று நாங்கள் ஆராயும் போது அதன்
பின்னணியில் நடைபெற்ற பல திருகுதாளங்களை நாங்கள் மனதில் வைத்தே இக்
கருப்பொருளை நோக்கவேண்டும்.

பாராளுமன்றத்தின் வகிபாகம் பற்றிப் பார்க்கும் போது 1972ம் ஆண்டின் குடியரசு
அரசியல் யாப்பு பாராளுமன்றத்தில் இயற்றப்படும் வரையில் பாராளுமன்றமே தமிழ்
மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் முக்கிய பங்கு வகித்தது. இதற்கு இரண்டு
காரணங்கள் இருந்தன. 1948ம் ஆண்டின் அரசியல் யாப்பு தனது உறுப்புரை
29(2)ன் மூலமாக சிறுபான்மையினரின் உரித்துக்களை ஓரளவு பாதுகாக்க
எத்தனித்தது. ஆகவே சிங்கள பெரும்பான்மையினரின் ஆதிக்க நடவடிக்கைகளைப்
பாராளுமன்றத்தில் சுட்டிக் காட்டி பெரும்பான்மையினரை ஓரளவு பின்வாங்கச்
செய்யக் கூடியதாக இருந்தது. அப்படியிருந்தும் “சிங்களம் மட்டும்” சட்டம்
உறுப்புரை 29(2)ன் ஏற்பாடுகளுக்கு முரணாக பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது.
இது சிறுபான்மையினருக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தாலும் தொடர்ந்து
பாராளுமன்றமே தமிழ் மக்களின் உரித்துக்களுக்கான போராட்டத் தளமாக
தொடர்ந்து இருந்து வந்தது.

அடுத்த காரணம் 1972 வரையில் கூட பாராளுமன்றத்தில் ஆங்கில மொழியே
கோலோச்சி வந்தது. அதன் காரணத்தினால் சகல இன மக்களும் பெரும்பாலும்
ஆங்கில மொழியிலேயே பேசியதால் உடனுக்குடன் இரு தரப்பாரின் கருத்துக்களும்
மற்றையவர்களால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. கருத்துப் பரிமாற்றங்கள்
மூன்றாம் நபரான மொழி பெயர்ப்பாளர் உதவியின்றி நேரடியாக நடைபெற்றன.

1972ம் ஆண்டின் முதல் குடியரசு அரசியல் யாப்பு தமிழ் பாராளுமன்ற
உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. வெளிநடப்பு செய்தனர்.
அப்பொழுதிருந்து பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்களுக்கு பாராளுமன்றம் ஒரு
அரசியல் பேசும் தக்க புகலிடமாகத் தென்படவில்லை. சிங்கள ஆதிக்கம்
பெருகியது. அதே நேரம் காணி உச்ச வரம்புச் சட்டம், வீடுகள் உச்ச வரம்புச்
சட்டம் ஆகியன 1972ம் ஆண்டின் பின்னர் வெளிவந்து சமூகத்தில் பாரிய
தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆகவே 1972ன் பின்னர் தமிழ் பாராளுமன்ற
உறுப்பினர்களுக்கு பாராளுமன்றமானது வெறும் அரசியல் பேசும் அரங்கமாகவே
அமைந்தது. ஆனால் அவர்கள் பேச்சுக்கள் சிங்கள மக்களைப் போய்
அடையவில்லை. இதற்குக் காரணம் எமது பாராளுமன்றமானது
பெரும்பான்மையினரது அடாவடித்தனத்துக்குத் துணை போக சம்மதித்தமையே.
ஜனநாயக முறைமைகள் பேணப்படவில்லை. சிறுபான்மையினரின் கருத்துக்கள்
பொருட்படுத்தப்படவில்லை. அத்துடன் சிங்கள ஊடகங்கள் தமிழ்ப் பாராளுமன்ற
உறுப்பினர்களின் பேச்சுக்களைத் தமது ஊடகங்களில் வெளியிடப் பின்நின்றனர்.
அவர்களின் ஆங்கிலப் பேச்சுக்கள் கூட கொழும்பு ஊடகங்களில் வெளிவருவது
மிக அரிதாகவே இருந்தன. இதனால் தமிழ்ப்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களின்
கருத்துக்கள் சிங்கள மக்களைச் சென்றடையவில்லை. எவ்வளவு தான்
உண்மைகளைத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில்
எடுத்துரைத்தாலும் அவை சிங்கள மக்களைச் சென்றடையவில்லை என்பதே
உண்மை. தமிழர்கள் யாவரும் பயங்கரவாதிகளே என்ற எண்ணந்தான் சிங்கள
மக்களிடையே மேலோங்கியது. இதனால் தமிழ் மக்களின் உண்மை நிலை
பாராளுமன்றத்தினுள் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு முறை
சிங்கள ஊடகத்தின் கேள்விக்கு சிங்களத்தில் பதில் அளித்தேன். அப்போது அந்த
சிங்கள ஊடகவியாளர் உங்கள் உறுப்பினர்கள் இது பற்றி எதுவுமே
கூறவில்லையே என்றார். அப்போது நான் கூறினேன் “நாங்கள் தமிழிலும்
ஆங்கிலத்திலும் கூறிக்கொண்டு தான் இருக்கின்றோம். உங்களுக்குத்தான்
விளங்கவில்லை” என்றேன்.

ஆனால் 1972ன் முன்னர் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும்
ஆங்கிலத்தில் பேசியவை பொதுமக்களைப் போய் அடைந்தன. இன்றோ
ஆங்கிலத்தில் பேசினாலும் சிங்கள மக்களைச் சென்றடைவதில்லை. தமிழில்ப்
பேசினாலும் எமது கருத்துக்கள் சிங்களப் பெரும்பான்மை மக்களை
அடைவதில்லை.

இந்த கால கட்டத்தில்த் தான் தமிழ் இளைஞர்கள் அடுத்து என்ன செய்யலாம்
என்று சிந்திக்கத் தொடங்கினர். பாராளுமன்றத்தில் எத்தகைய அறிவுக் கூர்மைசார்
பேச்சுக்களை நிகழ்த்தினாலும் அவற்றால் பயன் ஏதும் புலப்படவில்லை என்று
கண்டு வன்முறையை விடுதலை ஆயுதமாக்கினர்.

2009ல் இளைஞர்களின் ஆயுதங்கள் மௌனிக்கப்படும் வரை தமிழ்ஈழத் தமிழ்
மக்களின் தீர்வு தொடர்பாக நாடாளுமன்றத்தின் வகிபாகம் மிகக் குறைந்தே
காணப்பட்டது. எனினும் தமிழ்ப் பிரதிநிதிகள் 22 பேர் அப்போது இருந்துங்கூட
அவர்களால் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் தீர்வு தொடர்பாக எதுவும் செய்ய
முடியவில்லை. காரணம் போர் நடந்துகொண்டிருந்தமையே.

2009ம் ஆண்டின் பின்னரான பாராளுமன்றத்தை எடுத்துப் பார்த்தோமானால்
பாராளுமன்ற தமிழ் சிங்கள உறுப்பினர்களுக்கிடையேயான இடைவெளி நீண்டு
கொண்டு செல்வதை அவதானிக்கலாம். மலையகத் தமிழர்கள் சிலர் சிங்களத்தில ;
பேசுவதை சிங்கள உறுப்பினர்கள் புரிந்து கொள்கின்றார்கள். ஆனால் தமிழில்
பேசுவோரின் பேச்சின் மொழிப் பெயர்ப்பைக்கூட கேட்கும் பொறுமை சிங்கள
உறுப்பினர்களுக்கு இல்லை என்றே சொல்லலாம்.

அடுத்து தமிழ்ப் பேசும் உறுப்பினர்களின் தொகை குறைந்து வருகின்றது.
அரசாங்கம் தமிழ்ப் பேசும் உறுப்பினர்களின் கருத்துக்களைப்
பொருட்படுத்துவதில்லை. ஆங்கிலம் கூட பல சிங்கள உறுப்பினர்களுக்கு
புரிவதில்லை. ஆகவே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தைப் பொறுத்த
வரையில் பாராளுமன்றத்தின் வகிபாகம் குறைந்து கொண்டே செல்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரின் ஆர்ப்பாட்டங்கள், காணி அபகரிப்பை
எதிர்க்கும் கிராமத்தவரின் எதிர்ப்புப் போராட்டங்கள், மீனவர்களின் போராட்டங்கள்,
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடைபவனி போன்றன மக்கள்
தாங்களே களத்தில் முன் நின்று போராட வேண்டிய அத்தியாவசியத்தை
அவரகளுக்கு உணர்த்தியுள்ளன.

மக்கட் தலைவர்களும் இதையுணர்ந்து பாராளுமன்றத்தில் இருந்து கொண்டே
சர்வதேச ரீதியாக எவ்வாறு தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச்
செல்லலாம் என்பது பற்றி சிந்தித்து செயலாற்றி வருகின்றார்கள்.

பாராளுமன்றத்தின் வகிபாகத்தை ஆராயும் போது ஒன்றை நாம் நினைவில்
வைத்துக் கொள்ள வேண்டும். நாம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பது
ஒற்றையாட்சியின் கீழ்; நாம் கோருவது சமஷ்டி அல்லது இணைப்பாட்சியையே!
ஒற்றையாட்சி முறையைக் கைப்பற்றிக் கொண்டவர்கள் ஒரு போதும் அதன்
இறுக்கத்தைத் தளரவிட முன்வரமாட்டார்கள். சமஷ்டி என்பது அந்த இறுக்கப்
பிடியைத் தளரச் செய்வது. பாராளுமன்றத்தில் 2/3 பங்கு சிங்களப் பிரதிநிதித்துவம்
இருக்கும் போது சிங்கள மக்களின் அழுங்குப் பிடிக்குப் பாதிப்பு ஏற்படும் வண்ணம்
எதனையும் செய்ய சிங்களப் பிரதிநிதிகள் எவரும் முன்வரமாட்டார்கள். இதை நாம்
புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு உதாரணம் கூறுகின்றேன். பேரூந்தில் பயணம் செய்யும் போது
பெண்களுக்கென்று சில ஆசனங்கள் அவற்றில் ஒதுக்கப்பட்டுள்ளதை நாம்
அறிவோம். அந்த ஆசனங்களில் ஆண்கள் உட்கார்ந்திருக்கின்றார்கள் என்று
வைத்துக் கொள்வோம். கேட்டால் “இப்பொழுது தானே ஆண்களுக்கும்
பெண்களுக்கும் சமஉரிமை தந்தாகிவிட்டதே. பின் எதற்கு உங்களுக்கு
பிரத்தியேக ஆசனங்கள்” என்று கூறி இருக்கைகளைத் தர மறுக்கின்றார்கள்
ஆண்கள். வாகன சாரதி, கண்டக்டர் யாவருமே ஆண்கள். அவர்களும் சம உரிமை
பற்றிக் கூறி எந்த நடவடிக்கைகளையும் எடுக்க மறுக்கின்றார்கள். ஆகவே
அங்குள்ள பெரும்பான்மையினரான ஆண்களிடம் பேசிப் பயனில்லை. வேறு
வழிமுறைகளையே பெண்கள் கையாள வேண்டும்.

நான் என்ன கூற வருகின்றேன் என்றால் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரமும்
பலமும் கொண்டவர்கள் இணைப்பாட்சிக்கு ஒத்துக் கொள்ளமாட்டார்கள். ஆகவே
தான் சர்வதேச கருத்துப் பரிமாற்றங்களின் மூலம் நெருக்குதல்களை
ஒற்றையாட்சியின் மீது ஏற்படுத்த வேண்டிய காலகட்டம் தற்போது
உருவாகியுள்ளது. இதை உணர்ந்து தான் முதலமைச்சர் என்ற எனது பதவியைப்
பயன்படுத்தி இங்கு வந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை
அலுவலர்களுக்கும் எமது நிலை பற்றிய விரிவான விபரங்களையும் புள்ளி
விபரங்களையும் என் பதவியின் போது தந்துதவினேன். அப்போதைய செயலாளர்
நாயகம் ஹ{செயின் அவர்கள் எமது ஆவணங்களைப் பரிசீலித்ததின் பலனாக
எமக்கு சாதகமான கருத்துக்களை அக்காலகட்டத்தில் எடுத்தியம்பினார்.

சர்வதேச ரீதியாக நாங்கள் எமது அரசியல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு
பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒரு சார்பான ஏதுவாக அமைகின்றது. அன்றாடப்
பிரச்சனைகளை பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து அவற்றைத்
தீர்க்க முடியும். ஆனால் தமிழீழத் தமிழர்களின் அரசியல் தீர்வில்
பாராளுமன்றத்தின் வகிபாகம் தற்போது மிகவும் வேதனைக்குரிய அவல
நிலையையே அடைந்துள்ளது.

அத்துடன் இன்னுமொரு விடயம் ஆராயப்பட வேண்டியுள்ளது. வெளிநாடொன்றுடன்
13வது திருத்தச்சட்டம் பற்றிப் பேசி எமது ஆறு கட்சிகளும் துரோகம்
இழைத்துவிட்டன என்று ஒரு சாரார் குற்றம் சாட்டி வருகின்றார்கள். அவர்கள்
அவ்வாறு கூறுவதற்குக் காரணம் அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு தமிழ்
மக்கள் கோரிக்கைகளுக்கு இடமளிக்கும் என்று அரசாங்க அமைச்சர் ஒருவர்
கூறியமையே. இவர்களின் அரசியல் அப்பாவித்தனம் இதில் இருந்து
புலப்படுகின்றது. புதிய அரசியல் யாப்பானது அதிகார மையத்தை மாகாணத்தில்
இருந்து மாவட்டத்திற்கு மாற்ற இருக்கின்றது. மாவட்டங்களுக்கு அதிகாரப்
பரவலாக்கத்தை உண்டுபண்ணி “பார்த்தீர்களா! உங்கள் கிராமங்கள்,மாவட்டங்கள்
இனித் தம்மைத்தாமே ஆளப் போகின்றன” என்று கூறப் போகின்றார்கள்.

வட கிழக்கு இணைப்பு, மாகாண அரசாங்கம் அல்லது அரசாங்கங்கள் என்பவற்றைத்
தாண்டி மத்தியின் கைப்பொம்மைகளாக மாவட்டங்களை ஆக்கவிருக்கின்றார்கள்.
எம்மைக் குறை கூறுவோர் இலவு காத்த கிளிகளாக மாறப் போகின்றார்கள். புதிய
அரசியல்யாப்பு எமது மாகாணசபை முறைமையை அடியோடு அழித்து இந்தியாவின்
தலையீட்டையும் அண்டவிடாமல் செய்துவிடும். இதை உணர்ந்து எம்மைக்
குறைகூறுவோர் விழித்துக் கொள்ள வேண்டும். பதின்மூன்றுக்குப் பதில் மாவட்ட
அரசாங்கமே வரவிருக்கின்றது. மாவட்டங்கள் மத்தியின் அதிகாரத்தினுள்
சிறைப்பட்டிருப்பன. நாங்கள் எங்கள் மக்களுக்கு உணர்வூட்டுவதிலும் பார்க்க அவர்களுக்கு அறிவூட்ட வேண்டும். எமது அரசியல் போராட்டங்களுக்கு மக்களின் நேரடி நடவடிக்கைகளே வலுச் சேர்க்கக்கூடும். இனிவருங்காலத்தில் பாராளுமன்றத்தில் பேசுவதால் விளையும் நன்மை மிகக் குறைவே. ஆனால் மக்களுக்குப் பிழையான அரசியல் அறிவைப் புகட்டக்கூடாது. ஆகவே பாராளுமன்றம் தமிழீழத் தமிழர்களுக்கு எந்தக்காலத்திலும் ஒரு தீர்வைத் தராது ஆட்சியில் உள்ளவர்களுக்கு நெருக்குதல்களை
நாம் உருவாக்காவிட்டால்’ என்றார்.

https://pagetamil.com/2022/02/16/ஒரே-மூதாதையரிலிருந்தே-தம/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says "2500 ලංකා TAGE லெங்கை 3c REVEWNE om VJAYA CEYLON सम குவேனியிடம் விஜயன் அடைக்கலம் கோருதல் விஜயன் வருகை பத்றி இலங்கை அரக வெளியிட்டு பிறகு வாபஸ் பெற்றுக்கொண்ட தபால் தலை"

அவங்களே தங்கடை வரலாறு இப்படித்தான் என்கிறார்கள் இந்த முத்திரையை திருப்பி எடுத்தவர்கள் அவசர அவசரமாய் அது வேறு கதை . இப்ப ஒன்பது உண்மையை சொல்லி ஒரு பொய்யை வரலாற்றுக்குள் செருக அவசரப்டுகிறார் போல் உள்ளது இந்தியாவில் எங்கும் விஜயன் அவனது கூட்டாளிகளும் தண்டனை பெற்று கப்பல்களில் கிளம்பியதுக்கு ஆதாரம் இல்லையாம் ?முதலில் இந்தியா என்ற சொல்லே பிரிட்டிஸ் அரசு போகும்போது உருவாக்கிய ஒன்று  அடுத்து விக்கியர்  எப்போதில் இருந்து தொல்லியல் ஆய்வாளராக மாறியவர் ?

சிங்கள மாகாவம்சத்தில் இடையிடையே செருகல்கள் செய்துகொண்டு தாங்கள் இந்தநாட்டு குடிமக்கள் என்று நிறுவுவதில் சிங்களம் முனைப்பாக உள்ளது அதற்கு விக்கியரும் ஒத்து பரப்புரை செய்வது போல் உள்ளது . செருகல்களில் சில சுவராசியமானதுகள் குவேனி ராவணனின்  மகள் என்கிறார்கள் பின்பு குவேனியை காட்டுக்குள் பிள்ளைகளுடன் கலைத்துவிட்டு தமிழ்நாட்டு பாண்டிய மன்னனிடம் நண்பர்களுக்கும் 700 பெண்களை இலங்கை கொண்டுவந்து மணமுடித்தார்கள் என்கிறார்கள் அந்த 700 பேரும் எந்த  மொழி பேசுபவர்கள் என்று குறிப்பிடவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

அப்ப இனி என்ன செய்யலாம்??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த சொல்ல நம்மவர்களின் சிந்தனையை? நாங்கள் ஆண்டாண்டா உழைத்து சாப்பிடவில்லை கடன் வாங்கியே சாப்பிடோம் என்று அவன் உண்மையை உரைக்க, இல்லையில்லை அவர்கள் காடு வெட்டி களனி ஆக்குபவர்கள் என்று நாம் சான்றிதழ் வழங்க, அவன் தனது இலங்கை  வருகையை முத்திரை அடித்து பறை சாற்றி பின் பின்வாங்க, நாம் ஒரு தாய் வழிவந்தவர்கள் என்று நாம்  சொந்தம் கொண்டாட, என் இனம் அழிக்கப்படுகிறது அதிலிருந்து மீள வேண்டும் என்று ஒருவன் போராட, இல்லை இல்லை நாம் வந்தேறு குடிகள் என்று எக்காளம் போடுபவனுக்கு பக்க வாத்தியம் போட, எம்மினத்தை நாமே குழிதோண்டி புதைக்க, உணர்வே இல்லாத எமக்கு விடுதலை எதற்கு? தமிழன்தானே தன்னை மறுதலிக்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரு பரம்பரை இனி அப்படித்தான் வரும்...அதுவும் கொழும்பில் இருந்து..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

இவரு பரம்பரை இனி அப்படித்தான் வரும்...அதுவும் கொழும்பில் இருந்து..

தாங்கள் படித்தவர்கள் என்பவர்களிடம் ஒருகாலமும் பதவியும் அதிகாரமும் கொடுக்க கூடாது என்பதற்கு இந்த விக்கியரின் அறிக்கை சிறந்த உதாரணம் 9 உண்மையை எழுதி ஒரு மகா மோசமான பொய்யை இங்கு விதைக்கிறார் நானும் சுமத்திரனுக்கு காவடி எடுத்தது போல் இவருக்கும் பந்தம் பிடித்தேன் ஆனால் எனக்கு வரும் ஆத்திரத்துக்கு இவரை பிடித்துக்கொண்டு போய் பிரேமானதாவுடன் ஜெயிலில் போடணும் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூடி இந்தியாவுக்கு கூழ் காய்ச்செக்கை கலந்திட்டுது போலுள்ளது. ஏன் சிங்களவருக்காக வக்காலத்து வாங்குகிறோம் என்று கூடி ஆராஞ்சிருக்கினம், அல்லது மெத்தபடிச்சு குழம்பிப்போனாரோ? சிங்களவனின் தலையில் ஐஸ் வைச்சு சாதிக்கபோறாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, satan said:

கூடி இந்தியாவுக்கு கூழ் காய்ச்செக்கை கலந்திட்டுது போலுள்ளது. ஏன் சிங்களவருக்காக வக்காலத்து வாங்குகிறோம் என்று கூடி ஆராஞ்சிருக்கினம், அல்லது மெத்தபடிச்சு குழம்பிப்போனாரோ? சிங்களவனின் தலையில் ஐஸ் வைச்சு சாதிக்கபோறாரோ?

தன்  இனத்தை மட்டும் நேசிப்பவனிடம் அதிகாரமும் பதவியும் கொடுக்கப்படணும் அதையே சிங்களவர்கள் செய்தார்கள் நாங்கள் நாலு பட்டம் பெற்றுவிட்டான் படித்தவர்கள்  எனும் குரங்கு கூட்டத்திடம் பதவியும் அதிகாரமும் கொடுத்து நாடு நாடாய் அகதியாய் அலைகின்றம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வேட்பாளர்கள் ஏழைகள் தேர்தல் செலவுகளுக்கு எமக்கு கை கொடுங்கள் -  விக்னேஸ்வரன் வேண்டுகோள் - Today Jaffna News - Jaffna Breaking News 24x7

இந்த ஆளில், கொஞ்சமாவது  இனப்பற்று இருக்கும் என நினைத்தேன்.
பார்த்தால்... அந்தாளும், மற்றதுகளைப்  போல்.. கிறுக்குப் பிடிச்ச ஆளாய் இருக்கு.
தமிழனுக்கு வந்து வாய்க்கிறதெல்லாம், பைத்தியம் முத்தினதுகளாய் இருக்கு. 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

தன்  இனத்தை மட்டும் நேசிப்பவனிடம் அதிகாரமும் பதவியும் கொடுக்கப்படணும் அதையே சிங்களவர்கள் செய்தார்கள் நாங்கள் நாலு பட்டம் பெற்றுவிட்டான் படித்தவர்கள்  எனும் குரங்கு கூட்டத்திடம் பதவியும் அதிகாரமும் கொடுத்து நாடு நாடாய் அகதியாய் அலைகின்றம் .

ஆரம்பத்தில் தமிழரின் வரலாறு கதைக்கப்போய் விக்கினேஸ்வரன் ஒரு இனவாதி, இனவாதத்தை தூண்டுகிறார் என்று சரத் வீரசேகர தொடங்கி சிங்கள இனவாதிகளெல்லாம் விக்கினேஸ்வரனுக்கு எதிராக கூக்குரலிட்டு, அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅறிக்கைகளும்,  கண்டனங்களும், கூச்சல்களும் வந்தன. அதனால ஆடுற மாட்டை ஆடி கறக்கணும், பாடுற மாட்டை பாடி கறக்கணும் என்று நினைத்து சொன்னாரோ என்னவோ? அவருடைய செவ்வியிலேயே எமது ஆற்றாமை எப்படி முதுகில் குத்தப்பட்டோம் என்பதை விளக்கியிருக்கிறார். ஆனால் சிங்களத்துக்கு வக்காலத்து வாங்க பிரித்தானியாவுக்கு போன எங்களின் மெத்தபடிச்ச கூட்டம் அதே சிங்களவனால்  எங்களுக்கு குழி பறிக்கப்படுவதை உணரவில்லை. சிங்களவன் மோடையன், நாங்கள்  தான் படித்தவர்கள், நாலும் தெரிந்தவர்கள் என்கிற மமதையில் இருக்க, எப்படி இறுக்கினான் ஆப்பு. இன்று நேற்றல்ல இது ஆழ வேரூன்றிய மரம். கேடப்பாரற்று வளர்த்துவிட்டார்கள். மெதுவாக உலுப்பி உலுப்பித்தான் அகற்ற வேண்டும். பாப்போம் இவரின் தந்திரம் பலிக்குமா என்று? அதற்கு அவன் தடுமாற விடாமல் முட்டு கொடுத்து தாங்கிப்பிடிக்கவும், நம்மை விழுத்தவும்  நம்ம பச்சோந்திகளும், முஸ்லீம்களும் இருக்கிறார்கள். யாரை நோவது?                           

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாப்போம் சிங்களம் இதற்கு எப்படி பிரதிபலிக்குது என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

பாப்போம் சிங்களம் இதற்கு எப்படி பிரதிபலிக்குது என்று.

வழக்கம்போல் பிக்குகள் இனவாதிகள் சவுண்டு விடுவினம் தங்கள் இனமே விக்கியரால் அழிந்தது போல் வழமைபோல் விக்கியர் சொன்ன பொய்யை உண்மையாக்க ஓடித்திரிவினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/2/2022 at 11:15, பெருமாள் said:

1972ம் ஆண்டின் முதல் குடியரசு அரசியல் யாப்பு தமிழ் பாராளுமன்ற
உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. வெளிநடப்பு செய்தனர்.
அப்பொழுதிருந்து பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்களுக்கு பாராளுமன்றம் ஒரு
அரசியல் பேசும் தக்க புகலிடமாகத் தென்படவில்லை. சிங்கள ஆதிக்கம்
பெருகியது. அதே நேரம் காணி உச்ச வரம்புச் சட்டம், வீடுகள் உச்ச வரம்புச்
சட்டம் ஆகியன 1972ம் ஆண்டின் பின்னர் வெளிவந்து சமூகத்தில் பாரிய
தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆகவே 1972ன் பின்னர் தமிழ் பாராளுமன்ற
உறுப்பினர்களுக்கு பாராளுமன்றமானது வெறும் அரசியல் பேசும் அரங்கமாகவே

அமைந்தது. ஆனால் அவர்கள் பேச்சுக்கள் சிங்கள மக்களைப் போய்
அடையவில்லை. இதற்குக் காரணம் எமது பாராளுமன்றமானது
பெரும்பான்மையினரது அடாவடித்தனத்துக்குத் துணை போக சம்மதித்தமையே.
ஜனநாயக முறைமைகள் பேணப்படவில்லை
. சிறுபான்மையினரின் கருத்துக்கள்
பொருட்படுத்தப்படவில்லை. அத்துடன் சிங்கள ஊடகங்கள் தமிழ்ப் பாராளுமன்ற
உறுப்பினர்களின் பேச்சுக்களைத் தமது ஊடகங்களில் வெளியிடப் பின்நின்றனர்.

நமது தலைமைகள் வேறு வழியை தெரிந்தெடுக்கவில்லை, சர்வதேசம் என்கிற கதவை பலவந்தமாக திறந்து வைத்தவர்கள் புலிகள். இருந்தாலும் இது காலந்தாழ்த்திய நிகழ்வாகியது. காரணம் இலங்கையில் இனப்பிரச்சனையே இல்லை, இருப்பது எல்லாம் பயங்கரவாதம் என்பது பூதாகரமாக பிரச்சாரம் செய்யப்பட்டது. இலங்கையில் நடந்த இனக்கலவரங்கள் சர்வதேசத்தை சென்றடையவில்லை, கொண்டு சேர்க்கப்படவில்லை, இனக்கலவரங்கள் நடந்ததற்கான எந்த தரவும் சர்வதேசத்திடம் முறையிடப்படவில்லை. சர்வதேச அளவில் பயங்கரவாதத்தால் அச்சுறுத்தப்பட்ட நாடுகள் இலங்கையின் வலையில் சிக்கி நமக்கு புதைகுழியை ஏற்படுத்தியது. நாமும் அதற்கு ஏற்ப பிரச்சாரம் செய்ய (கதிர்காமர் நீலனின் பங்கும் உண்டு. ) சிங்களத்துக்கு பழம் நழுவி பாலில் விழுந்த கதையாயிற்று. பாருங்கள் அன்று கதிர்காமர் சர்வதேசத்தில் செய்த சந்திப்புகள் (பாதிக்கப்பட்ட தமிழரால் சர்வதேசத்துக்கு கொண்டு போகப்பட்ட செய்தி இலங்கையில் இருப்பது பயங்கரவாதமே) இலங்கையின் கூற்றுக்கு வலுச்  சேர்த்தன.  யாரை நோவது? நம்ம தலைவர்களுக்கு பாராளுமன்றம் அரட்டை அரங்கமாக மாறியது, மக்களை ஏமாற்ற தொடங்கினர்.

உண்மை சிங்களமக்கள் இனவாதிகளாலும் அரசியல் வாதிகளாலும் ஏமாற்றப்பட்டு பொய்யான கதைகளும் வரலாறுகளும் ஆழமாக ஊட்டப்பட்டிருந்தன தமிழர் வந்தேறுகுடிகள் நமது நாடை சுரண்டிக்கொண்டு இந்தியாவுக்கு போய் விடுவார்கள் இதை மக்கள் கேள்வியின்றி யோசனையின்றி முழுமையாக நம்பினார்கள் அவர்களது வரலாற்றுப்புத்தகங்கள் சமயபோதனைகள் அவற்றை உண்மையாக்கின ஏன் படைக்கு இளைஞரை சேர்க்கும்போது காற்சடை போட்ட ஒரு சில பொடியாளே சண்டை பிடிக்கிறார்கள் எங்களின் ஆமியை கண்டவுடன் பயந்தோடுகிறார்கள் என்று பச்சைப்பொய் சொல்லியே படையை திரட்டினர் ஒரு சில பொடிகளை எதிர்த்துபோராட ஏன் இவ்வளவு தொகை இராணுவம் என்பதை அவர்களுக்கு கேட்க தோன்றவில்லையா? 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
அல்லது தம்மைப்போலவே ஏமாற்றப்பட்டு பல தொகையினர் படைக்கு  
 சேர்க்கப்பட்டதை அவர்கள் அறிந்திருக்கவில்லையா? எது எப்படியிருந்தாலும் அறிவிக்கப்பட்ட பெருந்தொகை சம்பளம், வறுமை, ஏற்றப்பட்ட உணர்ச்சி வார்த்தைகள் அவர்களை போராட வற்புறுத்தின. மக்களுக்கு சொல்லப்பட்டது; புலிகள் தமிழ் மக்களை துன்புறுத்துகிறார்கள், அவர்களை  புலிகளிடம் இருந்து  மீட்கவே போர் செய்கிறோம். தமது அநீதிக்கெதிராக போராடுகிறார்கள் என்கிற உண்மை மறைக்கப்பட்டது. போர் முடிவடைந்தபின் ஒவ்வொரு புத்தசங்கத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் பத்தாயிரம் கொடுத்து தான் மீட்ட இடங்களை புலிகளின் பதுங்குகுழிகள் அவர்களின் அரசியல் அலுவலகங்கள் இன்ன பிறவற்றை பார்ப்பதற்கு வடக்கிற்கு அனுப்பி வைக்கபட்டார்கள். அங்கே இன்னொரு செய்தியும் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதாவது சங்கமித்தை வெள்ளரசங்கிளையோடு வந்திறங்கிய இடம் பெரிய அளவில் கட்டபட்டு பெரிய புத்த தலமாக காட்ச்சியளித்தது. அவர்களுக்கு விருந்தளிக்க சிங்கள ஹோட்டல்களும் இருந்தன, அவர்கள் தங்குவதற்கு இராணுவத்தினரால் தங்குமிட வசதிகள் தமிழரின் வீடுகளே பயன்படுத்தப்பட்டன. அத்தனையும் வெளிநாடுகளில் இருந்து பெற்ற கடனே! இராணுவத்துக்கு சம்பளம் ஆனால் சேர்க்கும்போது சொல்லப்பட்ட சம்பளம் வழங்கப்படவில்லை. தமிழர் மீது பொருளாதாரத்தடை காரணம், புலிகளிடம் இருந்து பிரித்து தன் பக்கம் மக்களை ஈர்ப்பதற்காக. சிங்கள மக்களுக்கு சொல்லப்பட்ட செய்தி புலிகள் உங்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தடை விதிக்கிறார்கள் அவர்களை அழித்தபின் எல்லாப்பிரச்சனையும் தீர்ந்துவிடும் நாம் செழிப்பாக வாழலாம் என்று பொய்  கூறி எல்லோரின் ஆதரவையும் பெற்றார்கள். வடக்கிற்கு பயணம் செய்த சிங்கள குடும்பம் ஒன்று சொன்னது; மாத்தையா தமிழ் மக்களை புலிகளிடம் இருந்து காப்பாற்றி விட்டார் அவர்களுக்கு இனி பிரச்சனையில்லை, ஆமிதான் இப்போ அங்கு கடைகளை நடத்துகிறது இன்னும் சில நாளில் அது தமிழர்களிடம் கையளிக்கப்பட்டுவிடும் என்றார்கள். உண்மையை எடுத்து சொன்ன பத்திரிகையாளர் பட்டப்பகலில் எல்லோர் முன்னிலையில் உண்மைக்காக படுகொலை செய்யப்பட்டார். உண்மையை சொன்ன ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டார்.  இதனால் யாரும் உண்மையை பேச விடாமல் அச்சுறுத்தப்பட்டார்கள். நயவஞ்சகமாக எல்லாளனை கொன்ற  துட்ட கைமுனு எவ்வாறு தன் தீய செயலை மறைக்க தூபி கட்டி தன்னை தியாகியாக காட்டினானோ அதே போல் இந்த இரண்டாம் துட்ட கைமுனு வெற்றித்தூபிகளாலும், பயணங்களாலும் புத்த விகாரைகளாலும் தங்கள் கொடூரங்களை மறைத்தார்கள். எப்படி சிங்களமக்களை அச்சுறுத்தி, ஏமாற்றி தங்களை இனங்காணாமல் வைத்திருக்கிறார்களோ அவ்வாறே எம்மக்களின் கல்வி, கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, பொருளாதாரம் என்பவற்றை அழித்து, அடிமைகளாக்கி எம்மை தம்மிடம் கையேந்த வைத்து, எமது இளைஞர் போதை வாள் என்று சமூக சிந்தனையில்லாமல் அலைய, தான் பல பக்கத்தாலும் எதிர்ப்பின்றி நிலங்களை அபகரித்து  ஒரே நாடு ஒரே சட்டம் என்கிற போர்வையில் ஒற்றையாட்சி. தமிழர் முட்டாள் சமூமாக்கப்படுகிறது.  அதற்காகவே அறிவற்ற, ஆமா போடும் அரைகுறைகளுக்கு அரசியல் அதிகாரம் கொடுத்து ஒரு படிப்பறிவற்ற, சிந்திக்கும் திறனற்ற சமுதாயம் உருவாக்கப்படுகிறது. இதற்கு எமது முன் சிந்தனையில்லாத அரசியல் தலைவர்களே முழுக்காரணம். நாம் செய்ய வேண்டியது; சாதாரண சிங்கள மக்களுக்கு உண்மையான வரலாற்றை ஆதாரத்தோடு தெரிவிப்பது. இப்போ இருக்கும் முகநூல் வழியாகவே செய்ய முடியும். இது தகுந்த காலம்.  சிங்களம் தெரிந்தவர்கள் நட்பு உடையவர்கள் அவர்களிடம் கொண்டு சேர்க்கலாம்.
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

வழக்கம்போல் பிக்குகள் இனவாதிகள் சவுண்டு விடுவினம் தங்கள் இனமே விக்கியரால் அழிந்தது போல் வழமைபோல் விக்கியர் சொன்ன பொய்யை உண்மையாக்க ஓடித்திரிவினம் .

யார் விக்கினேஸ்வரன் ஐயாவை இனவாதியாக சித்திரித்தார்களோ, அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அது மவுனமாக இருந்து அமைதிகாக்கும், வரலாற்றை புரட்டியவர்கள் அவர்கள், அவர்களுக்கு  உண்மை தெரியும், இது ஐயா வைக்கும் பொறி என்பதும் புரியும். அது அவ்வளவு இலகுவில் பொறியில் வந்து மாட்டாது. எதற்கும் பொறுத்திருந்து பாப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

யார் விக்கினேஸ்வரன் ஐயாவை இனவாதியாக சித்திரித்தார்களோ, அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அது மவுனமாக இருந்து அமைதிகாக்கும், வரலாற்றை புரட்டியவர்கள் அவர்கள், அவர்களுக்கு  உண்மை தெரியும், இது ஐயா வைக்கும் பொறி என்பதும் புரியும். அது அவ்வளவு இலகுவில் பொறியில் வந்து மாட்டாது. எதற்கும் பொறுத்திருந்து பாப்போம்!

நானும் உங்களைப்போலத்தான் சரி பார்ப்பம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.