Jump to content

இந்த ஆண்டு இறுதிக்குள் டொலரின் பெறுமதி ரூ.300 ஆக உயரும்: ரணில் எச்சரிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடத்திற்குள் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 300 ரூபாவாக அதிகரிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் அபாயம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட முன்னாள் பிரதமர், தற்போது சந்தையில் டொலரின் உண்மையான பெறுமதி 250 ரூபாவிற்கும் அதிகமாக உள்ளதாக தெரிவித்தார்.

அவரது அறிக்கையில்,

பொருளாதாரம் இன்னும் சீரழிந்து வருகிறது. டொலர் பற்றாக்குறை தீர்க்கப்படவில்லை. ரூபாய் பற்றாக்குறை இன்னும் தீர்க்கப்படவில்லை. இன்று ரூபாயின் உண்மையான மதிப்பு டொலருக்கு ரூ.250 இதிலும் அதிகம்.. இதன் மூலம் ரூ. 275 வரையும் உயரும். அதோடு நிறுத்தவில்லை என்றால், அது ஆண்டு இறுதிக்குள் ரூ. 300 ஆக உயரும்.

நடுத்தர வர்க்கத்தினர் கஷ்டத்தை எதிர்கொள்கின்றனர், பலர் பொருளாதார ஏணியில் நடுத்தர வர்க்கத்திலிருந்து கீழே தள்ளப்பட்டுள்ளனர். கடினமாக வாழ்கிறார். விவசாயத் துறை அழிந்துவிட்டது. சிறு மற்றும் பெரிய வணிகர்கள் தங்கள் வேலையைச் செய்ய பொருட்களை வாங்க முடியவில்லை. இது குடிமக்கள் சந்திக்கும் பிரச்னை. ஜூன், ஜூலைக்குள் வெளிநாட்டுக் கடனை மீண்டும் செலுத்த வேண்டியிருக்கும். இந்த ஆண்டு திருப்பிச் செலுத்த மொத்தம் 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உள்ளன. சர்வதேச நாணய நிதியத்துடன் நாங்கள் இன்னும் நிலைமை குறித்து விவாதிக்கவில்லை
எனவே ஜூன், ஜூலை மாதங்களில் கடனை அடைக்க பணம் கண்டுபிடிக்க வேண்டும். புதிய சிக்கல்கள் தொடர்ந்து எழுகின்றன, இதனால்தான் வங்கி முறை கைவிடப்பட்டது.

எனவே பல சிக்கல்கள் உள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் விதியின்படி 4 வது பிரிவின் கீழ், ஒவ்வொரு உறுப்பு நாடும் ஆண்டுக்கு ஒரு முறை அதன் பொருளாதார நிலையை விவாதித்து அறிக்கை அளிக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியக் குழு கடந்த டிசம்பர் மாதம் இலங்கை வந்தடைந்தது. அடுத்த வாரம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிகிறோம்.

அரசாங்கத்திடம் அந்த அறிக்கை கிடைத்தவுடன் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும் அது தொடர்பில் விவாதம் நடத்த வேண்டும். அறிக்கையில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் விவாதிக்கப்பட வேண்டும். அதிலிருந்து இது குறித்தும் அடிப்படைக் கோட்பாடுகள் குறித்தும் ஒருமித்த கருத்துக்கு வர முடியுமா என்று பார்ப்போம். அது நமது கடமை.

நமது நாட்டில் ஒரே ஒரு தேசிய வளம் மட்டுமே உள்ளது. அந்த தேசிய வளம் இளைய தலைமுறை. அந்தக் குழுவைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அவர்கள் எதிர்காலத்தை உருவாக்க விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். அரசாங்கம் பாராளுமன்றத்தின் மீதான நம்பிக்கையை உடைத்துள்ளது.

எதிர்காலத்திற்கான ஒரு திட்டத்தை நாம் வைத்திருக்க வேண்டும். நமக்கு ஒரு குறுகிய கால திட்டமும் தேவை, அதே போல் இதை முன்னோக்கி கொண்டு செல்ல நடுத்தர முதல் நீண்ட கால திட்டங்கள் தேவை. இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த உதவும் பொருளாதாரக் கட்டமைப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

10,15,20 வருடங்கள் எடுப்பது நமது கடமை. அதிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. ஓடினால் இந்த நாட்டு இளைஞர்கள் நம்மை சபிப்பார்கள். “நீங்கள் நாட்டின் எதிர்காலத்தை அழித்துவிட்டீர்கள், எங்கள் எதிர்காலத்தையும் அழித்துவிட்டீர்கள்.” என. எனவே பொதுமக்கள் எங்களிடம் ஒப்படைத்த அந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://pagetamil.com/2022/02/17/இந்த-ஆண்டு-இறுதிக்குள்-ட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ யாழில் புது நோட்டு  50 பவுனுக்கு போட்டி போட்டு 400 ரூபா கொடுக்கிறார்கள் சிங்களவர்களே இவர் என்னடா என்றால் 300 ல் நிக்கிறார் .

 மட்டக்களப்பு பாயிடம் 420 தானாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

ஐயோ யாழில் புது நோட்டு  50 பவுனுக்கு போட்டி போட்டு 400 ரூபா கொடுக்கிறார்கள் சிங்களவர்களே இவர் என்னடா என்றால் 300 ல் நிக்கிறார் .

 மட்டக்களப்பு பாயிடம் 420 தானாம் .

யாழ் நகரப் பகுதிகளில் டொலர் தனியாரிடம் 246-248 வரை போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஏராளன் said:

யாழ் நகரப் பகுதிகளில் டொலர் தனியாரிடம் 246-248 வரை போகுது.

ஏராளன், தனியாரிடம் ஐரோ என்ன விலை போகுது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஏராளன், தனியாரிடம் ஐரோ என்ன விலை போகுது. 

50€ என்றால் ஒரு விலை, 100€ என்றால் கொஞ்சம் கூட, 500€ இன்னும் கூடும். விசாரித்து சொல்றன் அண்ணை.
எவ்வளவு கூடினாலும் உள்நாட்டில் உள்ளோர் மகிழ்ச்சி கொள்ள முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

ஐயோ யாழில் புது நோட்டு  50 பவுனுக்கு போட்டி போட்டு 400 ரூபா கொடுக்கிறார்கள் சிங்களவர்களே இவர் என்னடா என்றால் 300 ல் நிக்கிறார் .

 மட்டக்களப்பு பாயிடம் 420 தானாம் .

புது நோட்டுக்கு 330 தான் கொடுக்கினமாம். எனி கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, nedukkalapoovan said:

புது நோட்டுக்கு 330 தான் கொடுக்கினமாம். எனி கூடும்.

ஒரு நோட்டு அமௌன்ட் குறைவு என்றால் அப்படித்தானாம் 10 ஆயிரம் பவுன் கொண்டுபோவது சட்டபடி சரியோ தெரியாது 10 கொண்டு போனால் உங்களிடம் ஆரம்பத்தில் 330 ல் ஆரம்பித்து 400களில் முடிப்பார்கள் என்கிறார்கள் அப்படி பார்த்தால்  10 ஆயிரத்துக்கு  4000000கிடைக்கும் அதயே இலங்கை தங்கமாக நகையாக அல்ல தனி தங்கமாக  மாற்றினால் கிட்டத்தட்ட 250லிருந்து 300க்குள் சேதாரம் ஒரு 30 லிருந்து 50 இழப்பு  ஏட்படும் அதாவது லண்டன் தங்க விலைக்கு நிகராக அதனால் 100 ரூபா  லாபம் என்று பார்த்தாலும் 10 ஆயிரத்துக்கு 3700 பவுன்ஸ் நிகரலாபமாக கையில் தேறும் இது என் கணக்கு வல்லவர்கள் இதில் குறைநிறை சொல்லலாம் .😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

50€ என்றால் ஒரு விலை, 100€ என்றால் கொஞ்சம் கூட, 500€ இன்னும் கூடும். விசாரித்து சொல்றன் அண்ணை.
எவ்வளவு கூடினாலும் உள்நாட்டில் உள்ளோர் மகிழ்ச்சி கொள்ள முடியாது.

எதுக்கு ஒவ்வொருவராக கேட்டுக்கிட்டு, ஒரேயடியா பவுன், டொலர், யூரோ, தினான், யென், யின், றியால் எல்லாவற்றின் மதிப்பையும் போட்டு உங்கள் மதிப்பையும் ஏத்துறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

எதுக்கு ஒவ்வொருவராக கேட்டுக்கிட்டு, ஒரேயடியா பவுன், டொலர், யூரோ, தினான், யென், யின், றியால் எல்லாவற்றின் மதிப்பையும் போட்டு உங்கள் மதிப்பையும் ஏத்துறது!

நானும் நினைச்சன் டொலர், பவுண்ஸ், ஈயூரோ மூன்றையும் விசாரிப்பம் என்று! நீங்களும் சொல்லிப்போட்டியள்.
மற்ற காசுகளை தனியார் வாங்குவினமோ தெரியல, மூன்று பேருக்கும் கொஞ்சம் மதிப்பு.
லண்டன்ல இருந்து 328 க்கு அனுப்பினவங்க என்று நண்பர்கள் கதைச்சாங்க.
கனடியன் டொலரும் 200 மேல உண்டியல் போகுதாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2022 at 10:48, தமிழ் சிறி said:

ஏராளன், தனியாரிடம் ஐரோ என்ன விலை போகுது. 

1$=246 ரூ

1€=277 ரூ

1£=332 ரூ

இது தனியார் கடை ஒன்றில் இன்றைய பணப்பரிமாற்ற விலை.

புதன்கிழமைகளில் இன்னும் அதிகரிக்கலாம் சிறி அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

1$=246 ரூ

1€=277 ரூ

1£=332 ரூ

இது தனியார் கடை ஒன்றில் இன்றைய பணப்பரிமாற்ற விலை.

புதன்கிழமைகளில் இன்னும் அதிகரிக்கலாம் சிறி அண்ணா.

நன்றி ஏராளன்.
ஒரு ஐரோ 277 ரூபாய் என்பதை நம்ப முடியாமல் உள்ளது.
நான் ஜேர்மனிக்கு வந்த ஆரம்ப நாட்களில்… ஒரு மார்க், எட்டு ரூபாய் போனது.
அதாவது ஒரு ஐரோ = 16 இலங்கை ரூபாய். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

1$=246 ரூ

1€=277 ரூ

1£=332 ரூ

இது தனியார் கடை ஒன்றில் இன்றைய பணப்பரிமாற்ற விலை.

புதன்கிழமைகளில் இன்னும் அதிகரிக்கலாம் சிறி அண்ணா.

எனது மைத்துனர் சென்ற கிழமை டாலர் 247.50 படி யாழில் மாற்றியிருக்கிறார்.

3 minutes ago, தமிழ் சிறி said:

நன்றி ஏராளன்.
ஒரு ஐரோ 277 ரூபாய் என்பதை நம்ப முடியாமல் உள்ளது.
நான் ஜேர்மனிக்கு வந்த ஆரம்ப நாட்களில்… ஒரு மார்க், எட்டு ரூபாய் போனது.
அதாவது ஒரு ஐரோ = 16 இலங்கை ரூபாய். 

நான் வெளிநாடு புறப்படும் போது தோமஸ்குக் ரவலேர்ஸ் 1 டாலர் 9 ரூபா சொச்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

நன்றி ஏராளன்.
ஒரு ஐரோ 277 ரூபாய் என்பதை நம்ப முடியாமல் உள்ளது.
நான் ஜேர்மனிக்கு வந்த ஆரம்ப நாட்களில்… ஒரு மார்க், எட்டு ரூபாய் போனது.
அதாவது ஒரு ஐரோ = 16 இலங்கை ரூபாய். 

 

12 minutes ago, ஈழப்பிரியன் said:

எனது மைத்துனர் சென்ற கிழமை டாலர் 247.50 படி யாழில் மாற்றியிருக்கிறார்.

நான் வெளிநாடு புறப்படும் போது தோமஸ்குக் ரவலேர்ஸ் 1 டாலர் 9 ரூபா சொச்சம்.

https://www.cbsl.gov.lk/en/rates-and-indicators/exchange-rates/daily-buy-and-sell-exchange-rates

இந்த இணைப்பில் மத்திய வங்கியின் விலை விபரங்கள் இருக்கு.

Euro

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-02-21 225.1880 234.7525
2022-02-18 225.4014 234.9703
2022-02-17 226.6952 235.2686
2022-02-15 224.2805 232.8288

British Pound

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-02-21 268.9856 277.4663
2022-02-18 268.8712 277.3499
2022-02-17 268.4526 276.9256
2022-02-15 267.4014 275.8578

United States Dollar

 
Date Buy Rate (LKR) Sell Rate (LKR)
2022-02-21 198.5008 202.9992
2022-02-18 198.5008 202.9992
2022-02-17 198.5008 202.9992
2022-02-15 198.5008 202.9992
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

நன்றி ஏராளன்.
ஒரு ஐரோ 277 ரூபாய் என்பதை நம்ப முடியாமல் உள்ளது.
நான் ஜேர்மனிக்கு வந்த ஆரம்ப நாட்களில்… ஒரு மார்க், எட்டு ரூபாய் போனது.
அதாவது ஒரு ஐரோ = 16 இலங்கை ரூபாய். 

நீங்கள் ஜெர்மனிக்கு போன ஆரம்பத்தில் யூரோ என்று அழைக்கப்பட்டிருக்கவில்லை என நினைக்கிறன். அப்போ  மார்க் என்றா அழைக்கப்பட்டது? பெயர் புதுசா இருக்கு! 

நன்றி எனக்கும் சொன்னா நானும் சந்தோஷப்படுவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்க சன் ரீவிக்கு கொண்டாட்டமா கிடக்கு ..

IMG-20220221-220605.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2022 at 00:46, satan said:

நீங்கள் ஜெர்மனிக்கு போன ஆரம்பத்தில் யூரோ என்று அழைக்கப்பட்டிருக்கவில்லை என நினைக்கிறன். அப்போ  மார்க் என்றா அழைக்கப்பட்டது? பெயர் புதுசா இருக்கு! 

நன்றி எனக்கும் சொன்னா நானும் சந்தோஷப்படுவேன்.

5,10,20,50,100,200,500,1000 DM Geldscheine 1980,1991 - 2 Sätze - Pick 30 -  44 - Reproduktion ***: Amazon.de: Spielzeug | Geldscheine, Geld,  Reproduktion

2002´ம் ஆண்டிலிருந்து... ஐரோப்பிய நாடுகள், 
தமது பழைய நாணய முறையிலிருந்து, ஐரோவுக்கு மாறின.
ஜேர்மனி.... டொச்ச மார்க் என்றும், பிரான்ஸ்.... பிராங்க் என்றும் இருந்து வந்தது.
மற்றைய ஐரோப்பிய நாடுகளின்... பழைய நாணயத்தின் பெயர் மறந்து விட்டது.  

அண்ணளவாக இரண்டு மார்க், ஒரு  ஐரோவிற்கு  சமம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.... நன்றி! சொல்வதில் கஞ்சத்தனம் பண்ணமாட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு கூடினாலும் இன்னமும் பட்டினி சாவு வரவில்லை அது வரைக்கும் சந்தோசமாக இருங்கள் இலங்கை அரசாங்கம் பிச்சை எடுத்துவந்தாவது மக்களை காப்பாற்றும். ஆனால் நாம் இலங்கை என்று நோக்கி ஈழத்தை மறந்து விடுகிறோம்.

என்னதான் விலை வாசி உயர்ந்தாலும் தமிழர் கைகளில் காசு உலாவுகிறது இப்பவும் புதிய கட்டடங்கள் கட்டுகிறார்கள், காணிகளையும் வாங்கி கொண்டு இருக்கிறார்கள் சிலர் விற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.