Jump to content

1945-க்குப் பிறகு... ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை நடத்த, ரஷ்யா திட்டமிட்டுள்ளது – பொரிஸ் ஜோன்சன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1945-க்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை ரஷ்யா திட்டமிட்டுள்ளது – பொரிஸ் ஜோன்சன்

1945-க்குப் பிறகு... ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை நடத்த, ரஷ்யா திட்டமிட்டுள்ளது – பொரிஸ் ஜோன்சன்.

1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய யுத்தத்தை ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தகவல்களை மேற்கோளிட்டு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

அதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிவதாகவும் சில திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி உக்ரைன் தலைநகர் கியூவ்வை சுற்றிவளைக்க ரஷ்யா தீர்மானித்துள்ளதாக உளவுத்துறை தகவலை மேற்கோளிட்டு அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மனித பேரழிவினால் ஏற்படும் விலையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.

169,000 முதல் 190,000 ரஷ்ய துருப்புக்கள் இப்போது உக்ரைனின் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் சமீபத்திய வாரங்களில் ரஷ்யா எந்த நேரத்திலும் படையெடுக்கத் தயாராகலாம் என்று எச்சரித்துள்ளன.

ஆனால் ரஷ்யா படையெடுப்பை தொடர்ந்தும் மறுத்துவருவதோடு துருப்புக்கள் பிராந்தியத்தில் இராணுவ பயிற்சிகளை நடத்தி வருவதாகக் கூறியுள்ளது.

https://athavannews.com/2022/1267937

Link to comment
Share on other sites

  • தமிழ் சிறி changed the title to 1945-க்குப் பிறகு... ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை நடத்த, ரஷ்யா திட்டமிட்டுள்ளது – பொரிஸ் ஜோன்சன்

கிட்லரும் நெப்போலியனும் விட்ட தவறை புட்டின் விடமால் விட்டால் ஆங்கிலத்துக்கு பதிலாக ரஸ்ய மொழி இன்னும் 50 வருடத்தில் உலகை ஆளும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

இதேவேளை மனித பேரழிவினால் ஏற்படும் விலையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.

அதைப்பற்றி உங்களுக்கென்ன கவலை?

இலங்கையில் தமிழனை கொல்லப் போறாங்கள் என்று உலகம் முழுவதும் வீதிவீதியாய் கிடந்து அழுதோமே?

செவிட்டு காதுகளுக்கு எதுவுமே கேக்கலையா?

உங்களுக்கென்ன ஆயுதம் வித்தா சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, London Ranjan said:

கிட்லரும் நெப்போலியனும் விட்ட தவறை புட்டின் விடமால் விட்டால் ஆங்கிலத்துக்கு பதிலாக ரஸ்ய மொழி இன்னும் 50 வருடத்தில் உலகை ஆளும்

என்ன ஆதாரம் ?

......................................................................................................................................................................................................................************************************************************************************************************************************************************************************************************************************** .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் நந்தன் அண்ணா சிலதுகளுக்கு சுய தணிக்கை செய்ய வேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

மன்னிக்கவும் நந்தன் அண்ணா சிலதுகளுக்கு சுய தணிக்கை செய்ய வேண்டியுள்ளது.

ஆனால், பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடுவதில்லையே.. 

ஒரு கண்ணால் மேற்கைப் பார்த்தால் இன்னொரு கண்ணால் கிழக்கையும் பார்க்க வேண்டும் என்பது அவர்களுக்குப் புரியாது. தமக்கு விரும்பியதை மட்டுமே அந்த "சிலதுகள்" பார்க்கும் பெருமாள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நேட்டோவை வலுவடையவே செய்யும்: பிரதமர் பொரிஸ்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நேட்டோவை வலுவடையவே செய்யும்: பிரதமர் பொரிஸ்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, நேட்டோவை வலுவிழக்கச் செய்வதற்குப் பதிலாக, வலுவடையவே செய்யும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

வருடாந்த பாதுகாப்பு மாநாட்டிற்காக உலகத் தலைவர்கள் சந்திக்கும் முனிச்சில் இருந்து பிரதமர் உரையாற்றினார். இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

‘1945ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை ரஷ்யா திட்டமிட்டு வருவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்துவதற்கான அனைத்து அறிகுறிகளும் உள்ளன. இதற்கான திட்டம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

உக்ரைன் தலைநகர் கியேவை சுற்றி வளைக்கும் படையெடுப்பை ரஷ்யா தொடங்க உள்ளதாக உளவுத்துறை தெரிவிக்கிறது.

எந்தவொரு மோதலும் இரத்தம் தோய்ந்த மற்றும் நீடித்ததாக இருக்கும். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இது பற்றி நியாயமற்ற முறையில் சிந்திக்கிறார் மற்றும் எதிர்வரும் பேரழிவைப் அவர் எண்ணிப் பார்க்கவில்லை.

பவுண்டுகள் மற்றும் டொலர்களில் வர்த்தகம் செய்வதை நிறுத்துவது உட்பட, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ரஷ்யாவிற்கு எதிராக முன்னர் பரிந்துரைக்கப்பட்டதை விட கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். இந்த நடவடிக்கையால் ரஷ்யா மிகவும் கடுமையாக பாதிக்கப்படும்

அதேவேளை, உக்ரைன் மீதான படையெடுப்பு, நேட்டோவை வலுவிழக்கச் செய்வதற்குப் பதிலாக, வலுவடைய செய்யும்.

புடின் இதன் விளைவாக நேட்டோவைப் கட்டுப்படுத்தப் பெறப் போகிறார் என்று நினைத்தால், அது முற்றிலும் தவறு. அவர் மேலும் நேட்டோ வளர வைக்கப் போகிறார்’ என கூறினார்.

ரஷ்யா மற்றும் அண்டை நாடான பெலாரஸ் ஆகிய இரு நாடுகளிலும் 169,000 முதல் 190,000 ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனின் எல்லையில் நிறுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க அரசாங்கத்தின் சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த எண்ணிக்கையில் கிழக்கு உக்ரைனில் உள்ள கிளர்ச்சியாளர்களும் அடங்குவர்.

உக்ரைன் மீது படையெடுக்கும் எந்த திட்டமும் இல்லையென ரஷ்யா கூறியுள்ளது. எனினும், ரஷ்யா, உக்ரைன் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.