Jump to content

செவ்வாய்ப் பரப்பிருந்து.....


karu

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

செவ்வாய்ப் பரப்பிருந்து தெரியும் எம் பூமி - View of our Earth from Mars
மனிதா உன்னைத்தான்!
வானப்பரப்பினிலெம் மண்ணோர் சிறுபுள்ளி
காணவும் கூடாக் கடுகு. - எதற்காக
உன்னையே எண்ணி உள்ளம் கலங்குகிறாய்.
செவ்வாய்ப் பரப்பிருந்து, சிற்றொளியைக் காலுகிற
பூமியை நோக்குகையில் புழுதிமணியாக,
தோற்றமளிக்கிறது தோற்றமற்றும் போகிறது.
உன்னை நீ எண்ணிப்பார் உலகத்தில் எத்தனைபேர்
சாதியென்றும் சமயமென்றும் தம்வாழ்வை வீணாக்கி
நீதியறியா நீசர்களாய்த் தம்முள்ளே
மோதியழிகின்றார், மூடர்களாய்ச் சாகின்றார்.
எம்மினிய சந்ததியே எண்ணிப்பார் இத்துயரை.
மண்ணில் எதற்காக வாழ்வைக் கெடுக்கின்றோம்.
தூசினும் தூசாய் தூலமற்ற சூனியத்தில்
ஞாலம் உதித்ததில் நாம் பிறந்து வாடுகிறோம்.
ஆசை பலகோடி அத்தனையும் தீராமல்
காசு போருள் தேடி கணக்கற்ற வேதனைகள்
பட்டுத் தவித்துப் பதறுகிறோம் ஆதலினால்
விட்டுவிட முடியா விபரீத எண்ணங்கள்
நெஞ்சை நிரப்பாது நிம்மதியை நீதேடு.
கொஞ்சம் அமைதிபெறு குவலயத்திலே நீயோர்
புழுதிமணி அஃதைப் புரிந்துகொள் எப்போதும்.
 
 
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, karu said:

No photo description available.

செவ்வாய்ப் பரப்பிருந்து தெரியும் எம் பூமி - View of our Earth from Mars
மனிதா உன்னைத்தான்!
வானப்பரப்பினிலெம் மண்ணோர் சிறுபுள்ளி
காணவும் கூடாக் கடுகு. - எதற்காக
உன்னையே எண்ணி உள்ளம் கலங்குகிறாய்.
செவ்வாய்ப் பரப்பிருந்து, சிற்றொளியைக் காலுகிற
பூமியை நோக்குகையில் புழுதிமணியாக,
தோற்றமளிக்கிறது தோற்றமற்றும் போகிறது.
உன்னை நீ எண்ணிப்பார் உலகத்தில் எத்தனைபேர்
சாதியென்றும் சமயமென்றும் தம்வாழ்வை வீணாக்கி
நீதியறியா நீசர்களாய்த் தம்முள்ளே
மோதியழிகின்றார், மூடர்களாய்ச் சாகின்றார்.
எம்மினிய சந்ததியே எண்ணிப்பார் இத்துயரை.
மண்ணில் எதற்காக வாழ்வைக் கெடுக்கின்றோம்.
தூசினும் தூசாய் தூலமற்ற சூனியத்தில்
ஞாலம் உதித்ததில் நாம் பிறந்து வாடுகிறோம்.
ஆசை பலகோடி அத்தனையும் தீராமல்
காசு போருள் தேடி கணக்கற்ற வேதனைகள்
பட்டுத் தவித்துப் பதறுகிறோம் ஆதலினால்
விட்டுவிட முடியா விபரீத எண்ணங்கள்
நெஞ்சை நிரப்பாது நிம்மதியை நீதேடு.
கொஞ்சம் அமைதிபெறு குவலயத்திலே நீயோர்
புழுதிமணி அஃதைப் புரிந்துகொள் எப்போதும்.
 
 
 
 
 
 
 
 

அருமை ..செவ்வாயை தோஷம் என்டு நினைத்தும் பலர் கலங்குகினம் 👍பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தோழர் தமிழ்த்தேசியன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.