Jump to content

நேர்மையாளர்களை தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு பெருமையும் இல்லை – கமல்ஹாசன் ஆவேசம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

கோவையில்… ஒரு வாக்குக்கு, 40,000 ரூபாய் வரை இரு திராவிட கட்சிகளாலும் கொடுக்கப்  பட்டுள்ளதாக ஜூனியர் விகடன் தெரிவிக்கின்றது. நான்கு பேர் உள்ள குடும்பத்தில்… ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாயை கடந்த தேர்தல் மூலம் சம்பாதித்து விட்டார்களாம்.

 தி.மு.க.    13 கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, பணத்தை வாரி இறைத்து…
கேலிக் கூத்தான தேர்தலை நடத்தி விட்டு… அதில் பெருமைப் பட வெட்கமில்லை.

கொள்ளை கொடுத்த காசுக்கு மேல் அடிக்கவேண்டி வருமே ?

Link to comment
Share on other sites

21 hours ago, குமாரசாமி said:

யூ மீன்......↓↓↓↓↓↓↓😄

VHDFJT.png

சும்மா எல்லாம் படம்காட்டக் கூடாது கண்டியளோ, 

தாத்தாவுக்கு முடி இல்லை

மகனுக்குத் தாடி இல்லை

பேரனுக்கு எல்லாம் இருக்கிறதே.🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, zuma said:

சனநாயக விழுமியங்கள் உயர்வாக உள்ள நாட்டில் இருந்து  அதனை சுகித்து கொண்டு, எப்படி நான் சொல்லுவேன் பணத்துக்காக வாக்கு செலுத்துவது சரியென்று. நான் சொல்லவந்தது  யாதெனில் இந்திய( தமிழ்நாடு ) அரசியலில் இருப்பவர்கள் அனைவரும் யோக்கியவர்கள் அல்ல என்பதே.

இந்திய/தமிழ்நாட்டு அரசியலில் எவரும் யோக்கியர்கள் இல்லை என்று தெரிந்த பின்னரும் சீமானை மட்டும் தாங்களும் தாங்கள் சார்ந்தோரும் குத்தி முறிவதன் காரணங்கள் என்னவோ?

Link to comment
Share on other sites

பல வருடங்களின் முன்னர் திருவாளர் கமலஹாசன் அவர்கள் அரசியலுக்கு வருவதை பற்றியோ அரசியல்வாதிகள் பற்றியோ பேசியவரல்ல, அப்படியிருந்தும் சில சஞ்சிகைகள் பத்திரிகைகள் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று அடிக்கடி கேட்பதுண்டு.

முடிவாக ஒருமுறை சொன்னார் என்றைக்காவது துப்பாக்கி ஏந்தி அனைவரையும் சுட வேண்டும் என்று ஒரு மனநிலை வந்தால் நான் அரசியலுக்கு வருவேன் என்று.

சினிமாவில் மட்டுமே நடிப்பேன் சினிமாவில் கதாநாயகனாக நீங்கள் நடிக்கமுடியாத வயதில் என்ன செய்வீர்கள் என்று விடாபிடியாக கேட்க, அப்போது என் கதை முடிந்திருக்கும் என்றும் சொன்னார்.

அரசில் இருப்பவர்களும் அரசியலில் இருப்பவர்களும் நேர்மையில்லாதவர்கள் என்பதே அவர் மறைமுகமாக சொல்ல வந்த கருத்து.

இன்று அதே கமலஹாசன் தனது விஸ்வரூபம் படத்தை வெளியிடவிடாமல் பண்ணி, தமிழ்நாட்டைவிட்டே வெளியேறுவேன் என்று அவர் வாயாலேயே கண்ணீர் விட்டபடி  காணொலிகள் வெளியிட வைக்கும் அளவிற்கு அன்றைய ஜெயலலிதா அரசு அசிங்கபடுத்தியதால்,

இயல்பாகவே தன்னை சினிமாவில்கூட யாரும்  போடா வாடா என்று மரியாதைகுறைவாய்  அழைப்பதை பெரும்பாலும் காட்சியாக வைக்காத கமலஹாசன் தனது நிஜ வாழ்க்கையின் தன்னை கேவலபடுத்தி அழவைத்த அரசியல்வாதிகளை பழி தீர்க்கவே அரசியலில் குதித்தார், அதற்காக மக்களை தனக்கு துணைக்கழைத்துக்கொண்டார்.

அந்த கோபத்தின் வெளிப்பாடாய் ஜெயலலிதா இறந்தபோது எந்த அனுதாப அறிக்கையும் விடாதவர் கமல்ஹாசன், பின்னர் அனைத்து தரப்பினராலும் அது ஒரு விமர்சனமாக பார்க்கப்பட்டபின்னர் டிவிட்டரில் ஒரே வரியில் ‘சார்ந்தோருக்கு அனுதாபங்கள்’ என்று ஒரே வரியில் முடித்துக்கொண்டார். 

ஆளும் வர்க்கத்துடன் ஏற்ப்பட்ட  தகராறின் முன்னர் அரசியலும் அரசியல்வாதிகளும் நேர்மையற்றவர்கள் என்று ஊடகங்களில் மறைமுகமாக சாடிய கமலஹாசன், 

இன்று திடீரென்று அரசியலில் குதித்து அரசியல்வாதியாகி நானும் எனது கட்சியும் நேர்மையானவர்கள் என்றால் அன்று அவர் வாயால் அரசியல்வாதிகள் பற்றி சொன்ன கருத்துக்கள் இன்று இவர் கட்சிக்கும் இவருக்கும் பொருந்தாதா? 

கமலின் அரசியலிலும் அறிக்கையிலும் எந்த இடத்தில் நேர்மையிருகிறது? இன்றும்கூட அவரின் மக்கள் நீதி மய்ய்யம் எனும் கட்சி அதிமுகவின் வாக்குகளை பிரிக்க ஆரம்பிக்கப்பட்ட திமுகவின் மறைமுக அங்கம் என்றே ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பேசி கொள்கிறார்கள்.

அதனால்தான் திமுக பற்றி அதிக அளவில் அவர் விமர்சனங்கள் வைப்பதில்லையென்றும் ஸ்டாலின் முதல்வரானதும் வாழ்த்து சொன்னார், அதேபோல் கமலஹாசன் உடல்நிலை பாதிக்கப்பட்டபோதும், அவரின் பிறந்தநாளின்போதும் ஸ்டாலின் கமலுடன் சுகம் விசாரித்ததும் வாழ்த்து சொல்வதும் நடந்தது என்றும் பேசி கொள்கிறார்கள்.

நேர்மையைபற்றி நாங்கள் பிறருக்கு போதிக்கும்போது எங்களின் நேர்மையை பிறர் பாத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த சகலகலா வல்லவன் கவனிக்காமல் சாதாரணமாக கடந்து போகிறார்.

  • Like 1
Link to comment
Share on other sites

26 minutes ago, குமாரசாமி said:

இந்திய/தமிழ்நாட்டு அரசியலில் எவரும் யோக்கியர்கள் இல்லை என்று தெரிந்த பின்னரும் சீமானை மட்டும் தாங்களும் தாங்கள் சார்ந்தோரும் குத்தி முறிவதன் காரணங்கள் என்னவோ?

பலகாரணங்கள் உண்டு.

1. சீமானை பல்லக்கில் தூக்க ஒரு கூட்டம் யாழ் களத்தில்  திரிகின்றார்கள் , அவர்களை கடுப்பு ஏத்த.
2. ஆமைக்கறி சாப்பிட்டது,ஆமை ஓட்டை படகாக பயன்படுத்தி கடலில் பயணம் செய்தது, ஆஸ்திரேலியாவின் அரிசி கப்பல், தலைவரிடம்  துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்றது, ஏகே 74 துப்பாக்கி என புதுப்புது கதைகளை வடிவமைத்து  எமது போராட்டத்தை விற்று வயிறு வளர்ப்பது .
3. நாம் தமிழர்கள் என்று கூறிக்கொண்டே தனது சோம்பிகளிடம் சுயசாதி வெறியை தூண்டி விடுவது.
4. தனது 45 வயதுவரைகடவுள் மறுப்பு பேசிவிட்டு, ஏழு கழுதை வயதில் புத்தி வந்துவிட்டது போல் தற்போது  வயிற்றுப் பிழைப்பிற்காக முப்பாட்டன் முருகன் என்று காவடி தூக்கி மதவாத சக்திகளுக்கு துணை போவது.
5.பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து அரசியல் செய்வது .
6. தனது ஓனர்களான பாஜக மற்றும் அதிமுகவை பெரும்பாலும் விமர்சனம் செய்யாமல், கடந்த 9 வருடங்களாக ஆட்சியிலயே இல்லாத திமுக, காங்கிரஸ் கட்சிகளை மட்டுமே கடுமையாக விமர்சனம் செய்தது.
7. தலைவரை  கைது செய்துதமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து தூக்கில் போடவேண்டும் என்று
தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா அவர்களை ஈழத்தாய் என்று கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அழைத்தது.
8. தமிழர்களுக்காகவே வாழ்ந்த தந்தை பெரியாரை வந்தேறி என்று தூற்றி விட்டு, கைபர் கணவாய் வழியாக பஞ்சம் பிழைக்க வந்த பார்ப்பானை பச்சைத் தமிழர் என்று  புகழ்வது.
9.ஈழத்து விதவை பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று கூறிவிட்டு பணக்கார பெண்ணை பார்த்தவுடன் தனது கொள்கையை மாற்றிக்கொண்டு தனது மகள் வயது பெண்ணான கயல்விழியை திருமணம் செய்தது.
10.சாதித் தமிழனுக்கு ஒரு பிரச்சினை என்றால் குய்யோ முய்யோவென கத்துவது, சேரித்தமிழனுக்கு ஒரு பிரச்சினை என்றால் நவதுவாரங்களை பொத்திக்கொள்வது.

என்று இன்னும் பல காரணங்கள் உண்டு.

  • Like 1
Link to comment
Share on other sites

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகினார் பழ.கருப்பையா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள

On 25/2/2022 at 01:02, zuma said:

கேள்வி  அதெல்ல???

இதையே ஈழத்தமிழருக்கு மற்றய  கட்சிகள் ஆயிரக்கணக்கில்  செய்திருக்கு.

அவை சார்ந்து  நவதுவாரங்களையும்  நான்  உட்பட  பொத்திக்கொண்டிருக்க.....

நீங்கள்  அவர்களுக்கு  பொத்திக்கொண்டு

இவருக்கு திறந்து  விடுவது  தான்  ஏன்  என்ற கேள்வி???

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.