Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

UK யில் 2000ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
Victim: Mylvaganam Nimalrajan
Victim: Mylvaganam Nimalrajan

NEWS - 24 FEBRUARY 2022 12:59

Man arrested by Met's War Crimes team as part of Sri Lankan murder investigation

The Met’s War Crimes team are appealing for information as part of an ongoing investigation into a murder committed in Sri Lanka more than 20 years ago.

Officers from the War Crimes Team - part of the Counter Terrorism Command – arrested a 48-year-old man at an address in Northamptonshire on Tuesday, 22 February as part of a proactive operation.

He was arrested on suspicion of offences under Section 51 of the International Criminal Court Act 2001. He was taken into custody, and has since been released under investigation.

The arrest relates to the murder of journalist Mylvaganam Nimalarajan who was killed in 2000.

Mr Nimalarajan’s family have been informed of this development, and they are being supported by specialist officers.

Enquiries continue, and officers are eager to hear from anyone who may have information that could assist the investigation - particularly members of the Sri Lankan community who emigrated to, and now reside in, the UK.

Commander Richard Smith, who leads the Met’s Counter Terrorism Command, said: “This is a significant update in what is a sensitive, complex investigation.

“There will still be people who may have information, particularly in relation to the murder of Mr Nimalarajan, and we would urge those people to come forward and help achieve justice for Mr Nimalarajan’s family.”

To provide information, email the War Crimes Team directly at SO15Mailbox.WarCrimesTeam@met.police.uk

+ The Met Police War Crimes Unit sits within the Met Police Counter Terrorism Command. It is committed to investigating and bringing to justice anyone who may fall under the UK’s jurisdiction and who is suspected of committing war crimes, crimes against humanity, genocide or torture anywhere in the world. This approach directly supports the UK Government’s ‘no safe haven’ policy.

Such investigations often require enquiries to be made overseas and evidence to be secured from abroad, so they can be very complex and lengthy.

All allegations of war crimes referred to the War Crimes Team are considered, assessed and dealt with in line with the War Crimes/Crimes Against Humanity referral guidelines, which are jointly agreed with the Crown Prosecution Service (CPS).

The War Crimes Team is part of the UK War Crimes Network, which is comprised of a number of key bodies, including the Foreign, Commonwealth and Development Office, Crown Prosecution Service and other government and non-government organisations, all working together to ensure the UK is not a safe haven for war criminals.

 

Subjects

Categories

Regions

Related media

Mylvaganam NIMALARAJAN
நிமலராஜன் கொலை சம்பந்தமாக மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் பின்வரும்  மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர் WarCrimesTeam@met.police.uk <SO15Mailbox.WarCrimesTeam@met.police.uk>
Edited by பெருமாள்
 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • பெருமாள் changed the title to UK யில் 2000ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது.
 • கருத்துக்கள உறவுகள்

அட பாவி…. நிர்மலராஜனை, 2000,ம் ஆண்டு ஊரில் கொலை செய்து விட்டு,
இவ்வளவு நாளும் இங்கிலாதில் பதுங்கி இருந்திருக்கிறானா. 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அட பாவி…. நிர்மலராஜனை, 2000,ம் ஆண்டு ஊரில் கொலை செய்து விட்டு,
இவ்வளவு நாளும் இங்கிலாதில் பதுங்கி இருந்திருக்கிறானா. 

டக்கி அங்கிளுக்கு கஸ்ர காலம்தான்..😆

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

டக்கி அங்கிளுக்கு கஸ்ர காலம்தான்..😆

டக்கிக்கு….. ஏழரை ஆரம்பிச்சிட்டுது போல் இருக்கு. 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

டக்கியே ஒரு டபிள் ஏழரை ........நீங்க வேற........!  😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

டக்கிக்கு….. ஏழரை ஆரம்பிச்சிட்டுது போல் இருக்கு. 🤣

May be an image of 1 person, beard, sitting and indoor

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எத்தனை நாளைக்குத்தான் மூடி மறைப்பர்....என்றாவது ஒரு நாள் வெளியில் வரத்தானே வேண்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சக ஊடகவியல் நண்பர் இந்த செய்தியை நமது தமிழ் ஊடகங்கள் ஏன் தங்களின் தளம்களில்  போடுகினம் இல்லை ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

இவரா அவர்?

டக்கியார் மடித்து கட்டிய வேட்டியின் பின் இவர் உதிர்ந்து விழுந்தவர் ஆனால் தமிழ் ஊடகங்கள் என்பவை பொய்யுக்கு தமிழ் தேசியம் பாடியுள்ளன .

அவரேதான் ஆனால் ஆதாரம் ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நிமலராஜன் கொலை தொடர்பான முக்கிய சந்தேகநபர் ஒருவர் லண்டனில் கைது!

February 24, 2022
 

 

ஊடகவியலாளர்  நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்    லண்டனில் மெற் காவற்துறையால் கைது!

ஊடகவியலாளர் ம. நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்   ஒருவர்  லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக யுத்தக் கு்றங்களை விசாரிக்கும் பெருநகர காவற்துறைப் பிரிவு தெரிவித்துள்ளது. 

கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி இரவு 8 மணியளவில் ஊடகவியலாளர் மயில்வாகனம்  நிமலராஜன் வீட்டில் செய்தி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை சுட்டு படுகொலை செய்யப்பட்டார். குறித்த படுகொலையின் பிரதான சந்தேகநபர் என  அடையாளம் காணப்பட்ட ஒருவர்,  காவல்துறையினா் மேற்கொண்ட விசாரணைகளின் இனம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் வழக்கு விசாரணைக்கு சமூகம் அளிக்காது தலைமறைவானார்.

இந்த நிலையில் இலங்கையில் இடம்பெற்ற கொலை விசாரணையின் ஒரு பகுதியாக Met’s War Crimes குழுவால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

20 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற இந்தக்  கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக Met’s War Crimes Team பொதுமக்களிடம் தகவல் கோரியுள்ளது.

போர்க்குற்றக் குழுவின் அதிகாரிகள் – பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்  ஒரு பகுதியாக  பெப்ரவரி 22 செவ்வாய்க்கிழமை  அன்று நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள முகவரியில் 48 வயதுடைய ஒருவரைக் கைது செய்ததாக மெற் காவற்துறை தெரிவித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டம் 2001 இன் பிரிவு 51 இன் கீழ் குற்றங்கள் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் காவலில் வைக்கப்பட்டார், பின்னர் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

2000ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய  இந்தக் கைது குறித்து, நிமலராஜனின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அவர்களுக்கு சிறப்பு அதிகாரிகள் ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் தொடர்கின்றன, மேலும் விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களைக் கொண்டிருக்கும் எவரிடமிருந்தும் தகவல்களை பேற்றுக்கொள்ள  அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர் – குறிப்பாக இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்து இப்போது வசிக்கும் இலங்கை சமூகத்தினரிடம் இருந்து இந்த தகவல்களை எதிர்பார்ப்பதாக,  Met இன் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டளைக்கு தலைமை தாங்கும் கமாண்டர் ரிச்சர்ட் ஸ்மித் கூறியுள்ளார்.

“குறிப்பாக திரு நிமலராஜனின் கொலை தொடர்பாக இன்னும் சிலருக்கு தகவல்கள் இருக்கலாம், மேலும் நிமலராஜனின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க முன்வருமாறு அந்த மக்களை தாங்கள் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தகவலை வழங்க, போர் குற்றங்கள் குழுவிற்கு நேரடியாக SO15Mailbox.WarCrimesTeam@met.police.uk என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பமுடியும்.

+ Met Police War Crimes Unit ஆனது Met Police பயங்கரவாத எதிர்ப்புக் கட்டளைப்பிரிவின் ஒரு பகுதியாகும். பிரித்தானியாவின்  அதிகார வரம்பிற்குள் வரக்கூடிய மற்றும் உலகில் எங்கும் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை அல்லது சித்திரவதை செய்ததாக சந்தேகிக்கப்படும் எவரையும் விசாரித்து நீதிக்கு கொண்டு வருவதற்கு இது உறுதிபூண்டுள்ளது. இந்த அணுகுமுறை UK அரசாங்கத்தின் ‘பாதுகாப்பான புகலிடமில்லை’ கொள்கையை நேரடியாக ஆதரிக்கிறது.

இத்தகைய விசாரணைகள் பெரும்பாலும் வெளிநாட்டில் விசாரணைகள் செய்யப்பட வேண்டும் மற்றும் வெளிநாட்டிலிருந்து ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும், எனவே அவை மிகவும் சிக்கலானதாகவும் நீண்டதாகவும் இருக்கும்.

போர்க் குற்றங்கள் குழுவிடம் குறிப்பிடப்பட்ட அனைத்து போர்க் குற்றச் சாட்டுகளும் போர்க்குற்றங்கள்/மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் பரிந்துரை வழிகாட்டுதல்களின்படி பரிசீலிக்கப்பட்டு, மதிப்பிடப்பட்டு கையாளப்படுகின்றன.

போர்க் குற்றங்கள் குழு என்பது UK போர்க் குற்ற வலையமைப்பின் ஒரு பகுதியாகும், இதில் வெளிநாட்டு, கொமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம், கிரவுன் ப்ராசிகியூஷன் சேர்விஸ் மற்றும் பிற அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் உட்பட பல முக்கிய அமைப்புகளை உள்ளடக்கியது. போர்க் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக பிரித்தானியா ஒருபோதும் இருப்பதில்லை.

இதேவேளை யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது  ஊர்காவற்துறை நாரந்தனை எனும் இடத்தில் குழு ஒன்று வழி மறித்து துப்பாக்கியால் சுட்டும்,  வாளினால் வெட்டியும் , இரும்பு கம்பிகள், பொல்லுகளாலும் தாக்குதல்கள் மேற்கொண்டது.

அத் தாக்குதலில் யாழ்.பல்கலைகழக ஊழியர் ஏரம்பு பேரம்பலம் மற்றும்  ரெலோ அமைப்பின் ஆதரவாளரான யோகசிங்கம் கமல்ஸ்ரோன் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். 
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா , எம்.கே.சிவாஜிலிங்கம் , மற்றும் ரவிராஜ் உள்ளிட்ட 18 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் அடிப்படையில்  2016ஆம் ஆண்டு டிசெம்பர் 7ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி ம. இளஞ்செழியன்   மூவரை குற்றவாளிகளாக இனம் கண்டு தீர்பளித்தார். இவர்களும் தலைமறைவாகினர்.

இந்த மூவருக்கும்  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், வெளிவிவாகார அமைச்சு, நீதி அமைச்சு, சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் காவல்துறை மா அதிபர் திணைக்களம் ஆகிய இணைந்து இந்தக் குற்றவாளிகள் இருவரையும் நாடு கடத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கட்டளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://globaltamilnews.net/2022/173398

 

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்    லண்டன்  பெருநகர பொலிசாரால் கைது!

நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்    லண்டன்  பெருநகர பொலிசாரால் கைது!

ஊடகவியலாளர் ம. நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்   ஒருவர்  லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக யுத்தக் குற்றங்களை விசாரிக்கும் பெருநகர பொலிஸ்  பிரிவு (Met’s War Crimes team) தெரிவித்துள்ளது.

கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி இரவு 8 மணியளவில், ஊடகவியலாளர் மயில்வாகனம்  நிமலராஜன்,  வீட்டில் செய்தி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்தப் படுகொலையின் பிரதான சந்தேகநபர் என  அடையாளம் காணப்பட்ட ஒருவர்,  பொலிசார்  மேற்கொண்ட விசாரணைகளில் இனம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் வழக்கு விசாரணைக்கு சமூகம் அளிக்காது வெளிநாட்டில் தலைமறைவானார்.

இந்த நிலையில் இலங்கையில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான கொலை விசாரணையின் ஒரு பகுதியாக பெருநகர காவற்துறையின் யுத்த குற்றம் தொடர்பான விசாரணைப் பிரிவும் (Met’s War CrimesTeam), பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு (Counter Terrorism Command) அகியன இணைந்து 48 வயதான  இவரை இநகிலாந்தின் Northamptonshire பகுதியில் கடந்த 22 ஆம் திகதி (22.02.22) கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் 2001 – 51 ஆவது பிரிகு சட்டத்தின் கீழ் கைதான இவர் விசாரணையின் கீள் விடுவிக்கப்பட்டுள்ளார்

இதேவேளை 20 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற இந்தக்  கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக Met’s War Crimes Team,  பொதுமக்களிடம் தகவல்களைக் கோரியுள்ளது.

2000ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய  இந்தக் கைது குறித்து, நிமலராஜனின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அவர்களுக்கு விசேட விசாரணைப்பிரிவின் அதிகாரிகள் ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

விசாரணைகள் தொடர்கின்றன, மேலும் விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களைக் கொண்டிருக்கும் எவரிடமிருந்தும் தகவல்களை பேற்றுக்கொள்ள  அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர் – குறிப்பாக இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்து இப்போது வசிக்கும் இலங்கை சமூகத்தினரிடம் இருந்து இந்த தகவல்களை எதிர்பார்ப்பதாக,  Met இன் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டளை பிரிவிற்கு தலைமை தாங்கும் கொமாண்டர் ரிச்சர்ட் ஸ்மித் (Commander Richard Smith) கூறியுள்ளார்.

“குறிப்பாக  நிமலராஜனின் கொலை தொடர்பாக இன்னும் சிலருக்கு தகவல்கள் இருக்கலாம், மேலும் நிமலராஜனின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க முன்வருமாறு அந்த மக்களை தாங்கள் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தகவலை வழங்க, போர் குற்றங்கள் குழுவிற்கு நேரடியாக SO15Mailbox.WarCrimesTeam@met.police.uk என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பமுடியும்.

+ Met Police War Crimes Unit ஆனது Met Police பயங்கரவாத எதிர்ப்புக் கட்டளைப்பிரிவின் ஒரு பகுதியாகும். பிரித்தானியாவின்  அதிகார வரம்பிற்குள் வரக்கூடிய மற்றும் உலகில் எங்கும் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை அல்லது சித்திரவதை செய்ததாக சந்தேகிக்கப்படும் எவரையும் விசாரித்து நீதிக்கு கொண்டு வருவதற்கு இது உறுதிபூண்டுள்ளது. இந்த அணுகுமுறை யுத்தக் குற்றவாளிகளுக்கு ‘பாதுகாப்பான புகலிடமில்லை’ என்ற பிரித்தானிய அரசாங்கத்தின் கொள்கையை நேரடியாக ஆதரிக்கிறது.

இத்தகைய விசாரணைகள் பெரும்பாலும் வெளிநாட்டில் விசாரணைகள் செய்யப்பட வேண்டும் அத்துடன் வெளிநாட்டிலிருந்து ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும், எனவே அவை மிகவும் சிக்கலானதாகவும் நீண்டதாகவும் இருக்கும்.

குறிப்பிடப்பட்ட அனைத்து போர்க் குற்றச் சாட்டுகளும் போர்க்குற்றங்கள்/மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் பரிந்துரை வழிகாட்டுதல்களின்படி பரிசீலிக்கப்பட்டு, மதிப்பிடப்பட்டு போர்க் குற்றங்கள் குழுவினால் கையாளப்படுகின்றன.

போர்க் குற்றங்கள் குழு என்பது பிரித்தானிய போர்க் குற்ற வலையமைப்பின் ஒரு பகுதியாகும், இதில் வெளிநாட்டு, கொமன்வெல்த் மேம்பாட்டு அலுவலகம், முடிக்குரிய சட்டவாக்க சேசை, பிற அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் உட்பட பல முக்கிய அமைப்புகளை உள்ளடக்கியது. போர்க் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக பிரித்தானியா ஒருபோதும் இருப்பதில்லை இந்தக் கைது உறுதிப்படுத்துவதாகவும் குறிப்படப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது  ஊர்காவற்துறை நாரந்தனை எனும் இடத்தில் குழு ஒன்று வழி மறித்து துப்பாக்கியால் சுட்டும்,  வாளினால் வெட்டியும் , இரும்பு கம்பிகள், பொல்லுகளாலும் தாக்குதல்கள் மேற்கொண்டது.

 

அத் தாக்குதலில் யாழ்.பல்கலைகழக ஊழியர் ஏரம்பு பேரம்பலம் மற்றும்  ரெலோ அமைப்பின் ஆதரவாளரான யோகசிங்கம் கமல்ஸ்ரோன் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா , எம்.கே.சிவாஜிலிங்கம் , மற்றும் ரவிராஜ் உள்ளிட்ட 18 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் அடிப்படையில்  2016ஆம் ஆண்டு டிசெம்பர் 7ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி ம. இளஞ்செழியன்   மூவரை குற்றவாளிகளாக இனம் கண்டு தீர்பளித்தார். தலைமறைவாகிய இவர்களில் சிலருக்கும் நிமலராஜனின் கொலையுடன் தொடர்பிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த மூவருக்கும்  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், வெளிவிவாகார அமைச்சு, நீதி அமைச்சு, சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் காவல்துறை மா அதிபர் திணைக்களம் ஆகிய இணைந்து இந்தக் குற்றவாளிகள் இருவரையும் நாடு கடத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கட்டளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1268938

Link to comment
Share on other sites

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இந்த பெல்ஜியம் டீம் golden generation இல்லை old generation. கிழட்டு பரதேசிகளை செலக்ட் பண்ணி களமிறக்கும்  Martinez இதோட வீட்டை போக வேண்டியதுதான். Completely disjointed team. 
  • இன்று இடம்பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் மொரோக்கோ அணி பெல்ஜியம் அணியை 2-0 கோல் கணக்கில் வெற்றியீட்டியது. முடிவு: பெல்ஜியம்  0 - 2  மொரோக்கோ மொரோக்கோ வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு மாத்திரம் ஒரு புள்ளி கிடைக்கும்!
  • வட, கிழக்கில் உணர்வபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு : அஞ்சலிக்காக திரண்ட மக்கள் கூட்டம் ! 27 Nov, 2022 | 08:17 PM வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன. இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டனர். வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும், விடுதலைக்கான பயணத்தில் உயர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு இன்றையதினம் வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது. இன்று மாலை 6.05 மணியளவில், மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி, ஒரு நிமிட மௌனவணக்கத்தை அடுத்து, 6.07 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்படுமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்ததன் பிரகாரம் மாவீரர்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், யாழ்.மாவட்டத்தில் தீவகம் சாட்டி, கோப்பாய்,, கொடிகாமம், உடுத்துறை, ஆகிய மாவீரர் துயிலும் இல்லங்களிலும், வல்வெட்டித்துறை தீருவில் திடல், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில், கனகபுரம் விசுவமடு, முழங்காவில் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும், மன்னார் மாவட்டத்தில், ஆட்காட்டிவெளி, பண்டிவிரிச்சான் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளியவளை, அலம்பில், ஆலங்குளம், வன்னிவிளாங்குளம், தேராவில் உள்ளிட்ட மாவீரர் துயிலுமில்லங்களிலும், வவுனியாவில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்திலும் வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில், மாவடிமுன்மாரி, தரவை, வாகரை கண்டலடி ஆகிய மாவீர துயிலும் இல்லங்களிலும், தாண்டியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக பகுதியிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெறுகின்றதுடன் , அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிகுடியாறு துயிலுமில்லத்திலும், திருகோணமலையில் ஆழங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. மாவீரர் தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (27) உயிரிழந்த தமது உற்றார், உறவினர், நண்பர்களை நினைவு கூர்ந்து தமிழர் பிரதேசங்களில் பலத்த பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் நினைவேந்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டு மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. நந்திக்கடலில் மாவீரர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செய்தார் ரவிகரன் உயிர்நீத்த மாவீரர்களுக்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (27)  நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.   யாழ். கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக சிவாஜிலிங்கம் அஞ்சலி யாழ். கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் சுடரேற்றி , மலரஞ்சலி செலுத்தினர்.  கோப்பாய் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்தது அழிக்கப்பட்டு , தற்போது இராணுவத்தினரின் 51 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  மாவீரர்களை நினைவு கூர்ந்து அன்னதான நிகழ்வு இதேவேளை, யாழ். அளவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள நரசிங்க வைரவர் ஆலயத்தில் இன்றைய தினம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவீரர் இறுதி நாளில் அன்னதான நிகழ்வு இடம் பெற்றது. உயிரிழந்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதுடன் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வினை  முன்னாள் வலி வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பிரபாகரன் ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது. முதல் மாவீரர் லெப். சங்கருக்கு அஞ்சலி முதல் மாவீரர் லெப். சங்கருக்கு அவரது பூர்வீக இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வல்வெட்டித்துறை கப்பல் மலையில் உள்ள அவரது வீட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாவீரர் பண்டிதரின் தாயார் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். அதன் போது வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். மாவீரர் கப்டன் பண்டிதரின் பூர்வீக இல்லத்தில் அஞ்சலி மாவீரர் கப்டன் பண்டிதரின் பூர்வீக இல்லத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. வல்வெட்டித்துறை கம்பர்மலையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில், மாவீரர் பண்டிதரின் தாயார் சுடரேற்றினார். அச்சுவேலி பகுதியில் 1985 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி ஏற்பட்ட மோதலில் கப்டன் ப.இரவீந்திரன் (பண்டிதர்) மரணமடைந்திருந்தார். மாவீரா் மில்லருக்கு அஞ்சலி  மாவீரா் நாளான இன்று முதல் கரும்புலி மாவீரா் மில்லரின் நினைவாக நெல்லியடி மகா வித்தியாலத்தின் முன்பாக நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.  வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அவருடைய குழுவினா் இந்த நினைவேந்தலை ஒழுங்கமைப்பு செய்திருந்தனா்.  இதன்போது மாவீரா்கள் நினைவாக ஈகை சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. திருகோணமலை சம்பூர் ஆலங்குளத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி மாவீரர் தின நாளான இன்று (27) திருகோணமலை, சம்பூர் ஆலங்குளம் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக அக வணக்கத்துடன் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.  இதில் பெரும்பாலான உறவுகள் ஈகைச் சுடரேற்றி அஞ்சலிகளை செலுத்தினர். புலனாய்வாளர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியில் பெருந்திரளானவர்கள் இதனை அனுஷ்டித்தனர். இதில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். பலர் வீடுகளிலும் மாலை 6.00 மணிக்கு விளக்கேற்றி அஞ்சலிசெலுத்தினர்   வவுனியா நகரசபை மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி வவுனியா நகரசபை மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாட்டின் போது பொலிஸார் வருகைதந்து விபரங்களை திட்டியுள்ளனர். இதனையடுத்து மாவீரர்களை நினைவுகூறும் திருவுருவப்படத்தில் விடுதலைப்புலிகளை நினைவுகூறுவதாக உள்ளதென தெரிவித்து குறித்த உருவப்படத்தினையும் அங்கிருந்து எடுத்து சென்றனர். எனினும் குறித்த உருவப்படத்திற்கு ஏற்பாட்டாளர்கள் கறுப்பு நிற வர்ணம் தீட்டி மீண்டும் வைத்து அஞ்சலி செலுத்தினர். யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மாலை 6.05 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் இடம்பெற்றது. இதன்போது மாவீரர்கள் நினைவாக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பண்டிதரின் தாயார் ஈகைச்சுடரை ஏற்றிவைத்தார். முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்நாள் நினைவேந்தல் முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் பொலிசார் மற்றும், இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. சரியாக மாலை 06.05மணிக்கு மாவீரர் நினைவொலி ஒலிக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், ஏனைய சுடர்களும் மாவீரர்களின் உறவுகளால் ஏற்றப்பட்டு மலர்தூவி, கண்ணீர்சிந்தி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. அந்தவகையில் பிரதான சுடரினை மூன்று மாவீரர்களது சகோதரியான உடுப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த மொறிஸ் வேணன் அக்கினேஸ் என்பவர் ஏற்றினார். முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணியினை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள நிலையில், மீள் குடியேற்றப்பட்ட காலத்திலிருந்து மாவீரர் துயிலுமில்ல வளாகத்திற்கு முன்பாக வீதியோரமாகவே உறவுகளால் மாவீரர்களுக்கு அஞ்சலி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இந் நிலையில் இராணுவத்தினரின் பலத்த கண்காணிப்பிற்கு மத்தியில் ஒருவித அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே உறவுகளால் அஞ்சலி செலுத்தவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது. மேலும் இந்த மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் முன்னாள் வடமாகாசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மாவீரர்களது உறவுகள், பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு- தரவை மற்றும் தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லங்களில் அஞ்சலி மட்டக்களப்பு தாண்டியடி மற்றும் தரவை மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. சரியாக மாலை 06.05மணிக்கு மாவீரர் நினைவொலி ஒலிக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், ஏனைய சுடர்களும் மாவீரர்களின் உறவுகளால் ஏற்றப்பட்டு மலர்தூவி, கண்ணீர்சிந்தி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. மட்டக்களப்பு- தரவை     அம்பாறை கஞ்சிக்குடியாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்கள் திரண்டு அஞ்சலி   அம்பாறை கஞ்சிக்குடியாறு மாவீரர் துயிலுமில்லத்தில் பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டு மாவீரர் நாள் நினைவேந்தல்களை மிகவும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுத்தனர். மாலை 06.05மணிக்கு மாவீரர் நினைவொலி ஒலிக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், ஏனைய சுடர்களும் மாவீரர்களின் உறவுகளால் ஏற்றப்பட்டு மலர்தூவி, கண்ணீர்சிந்தி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்நாள் நினைவேந்தல் முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் பொலிசார் மற்றும், இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. சரியாக மாலை 06.05மணிக்கு மாவீரர் நினைவொலி ஒலிக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், ஏனைய சுடர்களும் மாவீரர்களின் உறவுகளால் ஏற்றப்பட்டு மலர்தூவி, கண்ணீர்சிந்தி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. அந்தவகையில் பிரதான சுடரினை மூன்று மாவீரர்களது சகோதரியான உடுப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த மொறிஸ் வேணன் அக்கினேஸ் என்பவர் ஏற்றினார். முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணியினை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள நிலையில், மீள் குடியேற்றப்பட்ட காலத்திலிருந்து மாவீரர் துயிலுமில்ல வளாகத்திற்கு முன்பாக வீதியோரமாகவே உறவுகளால் மாவீரர்களுக்கு அஞ்சலி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இந் நிலையில் இராணுவத்தினரின் பலத்த கண்காணிப்பிற்கு மத்தியில் ஒருவித அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே உறவுகளால் அஞ்சலி செலுத்தவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது. மேலும் இந்த மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் முன்னாள் வடமாகாசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மாவீரர்களது உறவுகள், பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் நல்லூரில், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன் இடம்பெற்ற மாவீரர் நாள் அஞ்சலி யாழ்ப்பாணம் நல்லூரில், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில், மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் ,சகோதரர்கள்,  உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த மறவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணம் - எள்ளாங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி யாழ்ப்பாணம் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  துயிலும் இல்லத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  பிரதான ஈகை சுடரினை மேஜா் சோதியாவின் (சோதியா படையணி)  தாயாா் ஏற்றிவைத்தாா்.  அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் , சகோதரர்கள்,  உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த ஏனையவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.  யாழ். - கோப்பாயில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  துயிலும் இல்லத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  அதில் மாவீரர்களின் பெற்றோர்கள் ,சகோதரர்கள்,  உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த மறவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  துயிலும் இல்லத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  அதில் மாவீரர்களின் பெற்றோர்கள் ,சகோதரர்கள்,  உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த மறவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். யாழ். சாட்டி துயிலும் இல்லத்தில் உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில்,மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  அதில் மாவீரர்களின் பெற்றோர்கள் ,சகோதரர்கள்,  உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த மறவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மன்னாரில் மாவீரர் தின நினைவேந்தல் முன்னெடுப்பு மாவீரர் தினத்தையொட்டி மன்னாரில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு மாவீரர்  நினைவு தினம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை நினைவு கூரப்பட்டுள்ளது.   தமிழர் தாயகத்திற்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் வகையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருடா வருடம் நினைவு கூரப்பட்டு வருகிறது. அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி  மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு .இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. ஆட்காட்டி வெளி  மாவீரர் துயிலும் இல்லத்தில் பெருந்திரளான மக்கள் தற்போது ஒன்று திரண்டு   உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.  கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி   கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில்,மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  மாவீரர்களின் பெற்றோர்கள் ,சகோதரர்கள்,  உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த மறவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.     https://www.virakesari.lk/article/141428
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.