Jump to content

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நன்னிச் சோழன் said:

அப்ப உக்ரேனா அது?

ஓ, அது உக்ரேன். தவறாகப் போட்டுட்டன். வீடியோவை முழுசாப் பாக்கேல. சைக்.

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி

🙏🙏

Link to comment
Share on other sites

  • Replies 477
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Ahasthiyan

இனி உலகில் நடக்கும் போர்களில் நிகழும் எந்தவொரு வினோதங்களும் எங்களை ஆச்சரியப் படுத்தாது ஏனென்றால் ஒரு போரில் நிகழக்கூடிய உச்சபட்ச கொடூரங்கள், இழப்புக்கள், அக்கிரமங்கள், அத்துமீறல்கள், அழிவுகள், வினோதங்

குமாரசாமி

உங்கள் இருவருக்கும் இதயபூர்வமான வணக்கம்.🤜 உங்களுக்கு என் மன ஆதங்கத்தை சொல்கின்றேன் கேளுங்கள். இன்று நடக்கும் உக்ரேன் சண்டைகளையும் எமது 40 வருட போராட்டத்தையும் ஒப்பிட்டு பார்க்கின்றேன். நான்

ரஞ்சித்

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.  ரஸ்ஸியா: ராணுவ ரீதியிலான உதவிகள் : புலிகளுக்கெதிரான யுத்தத்தில் இலங்கைக்கு  பெருமளவு உதவிகளை  ரஸ்ஸியா செ

  • கருத்துக்கள உறவுகள்+
2 minutes ago, Sasi_varnam said:

🙏🙏

 

உக்ரேனுக்கு அடிச்ச வெப்பமுக்க செலுத்தி (Thermobaric launcher) இதுதான். 

What is a thermobaric bomb? Fears Putin will use weapon which can destroy  cities block-by-block

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

On 27/2/2022 at 05:50, பாலபத்ர ஓணாண்டி said:

எந்த ஒரு யுத்தத்தின் பின்னாலும் 
அமெரிக்கா இல்லாமல் இருக்காது. 
இதுதான் இந்த நூற்றாண்டின் யதார்த்தம். 

இதிலும் அப்படியே.

உலகின் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு உலகையே ஆட்டிப் படைக்கவேண்டும் என்கிற ரத்த ருசிக்கு என்ன பெயர் இடுவது? 

வெறும் 11 நாடுகளின் சொந்த பாதுகாப்புக்காக என்ற கட்டியத்துடன் தொடங்கப்பட்ட நேட்டோ நாடகம்இ இன்றைக்கு உக்ரெய்ன் வாசலில் வந்து 
காட்சி நடத்துகிறது.

ரஷ்யா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவேண்டும் என்பதில் நியாயம் இருக்கிறதா?

ஆயினும் போர் என்பது இல்லாத உலகம் என்று விழைகின்ற  - எதையும் பேசித்தான் தீர்க்கவேண்டும் என்கிற மனப்பான்மை கொண்ட -  அஹிம்சை உள்ளங்களில்இ  ரஷ்யா போரில்இறங்கியிருக்கக்கூடாதென்றே படுகிறது. 

இது நல்ல விருப்பம் தான். இந்த விருப்பத்துக்கு சம்பந்தப்பட்ட  ரெண்டு தரப்பாரின் மனங்களும் ஒத்துழைக்கவேண்டும் இல்லையா?
 
ஆனால் யதார்த்தம் வேறு வேறு கேள்விகளை எழுப்புகிறது.

அமெரிக்க பிரிதானிய அவுஸ்த்திரேலியா ஜரோப்பா எல்லைகளில் வேறொரு நாடு  வந்து ராணுவ முகாம் அமைத்தால் அவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா? 

நாட்டின் நாலுமூலையிலும் வேட்டு வைக்க 
நேட்டோ வந்தபிறகும் - ரஷ்யா சும்மா பார்த்துக் கொண்டிருக்கவேண்டும்  என்பது எந்த ஊர் நியாயம்?

லட்சம் பேர் ஊரைவிட்டு ஓடுவதைவிடஇ செலென்ஸ்கியின் ஆதரவாளர்கள் நூறு பேர் 
ஆயுதம் ஏந்தி தெருவில் நிற்பதை 'உக்ரெய்ன் மக்களின் எழுச்சி' என்று காட்டும் அமெரிக்க சார்பு ஊடகங்களும்-
  
‘சரணாகதி அடையமாட்டோம் என்று உக்ரெய்ன் அதிபர் போர்முழக்கம்!’ என்று - ரஷ்யாவை வில்லனாக்கி செலென்ஸ்கியை ஹீரோவாக்க முயற்சிக்கும்  அமெரிக்க ஜனநாயகத்தின் பிரதிநிதிகளும் இதற்கெல்லாம் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் வாழும் ரஷ்ய இன மக்கள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்படுகையில் உரிமைகளை இழந்து கொடுமைகளுக்கு உள்ளாகையில் ரஷ்யா அவர்களைப் பாதுகாக்க செயல்படுவதில் தவறு இருப்பதாக நான் எண்ணவில்லை…

கடந்த மூன்று ஆண்டுகளில்ுக்ரெய்னில் கொல்லப்பட்ட பதினேழாயிரம் ரஷ்யர்களின் உயிருக்கு -  இவர்களின்  பஞ்சாயத்து  நியாயம் என்ன என்றும் விளக்க வேண்டும்.

பிறகு ரஷ்யாவை நோக்கி சுட்டுவிரல் நீட்டலாம்...

போலந்து, ரூமேனியா,கங்கேரி எல்லையில் ரஸ்யா படைகளை நிறுத்த  வேண்டும்.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இனி உலகில் நடக்கும் போர்களில் நிகழும் எந்தவொரு வினோதங்களும் எங்களை ஆச்சரியப் படுத்தாது ஏனென்றால் ஒரு போரில் நிகழக்கூடிய உச்சபட்ச கொடூரங்கள், இழப்புக்கள், அக்கிரமங்கள், அத்துமீறல்கள், அழிவுகள், வினோதங்கள் என அனைத்தையும் எங்கள் இனம் சந்தித்து விட்டது, இனிநாங்கள் புதிதாக பார்து வியந்து போக போர்க்கொடுமை என்று எதுவும் இல்லை.... 😏
உக்ரைன் ஜனாதிபதி யுத்தகளத்தில் நிற்கிறார்
பெருமையா பகிர்ந்து கொண்டிருக்கிறது உலகு. -
தன் தாய்நாட்டின் யுத்த களத்தில் நன்னை மட்டும் அல்லாமல் தன் தலைமுறையையே நிறுத்திய தலைவன் ஒருவன் இருந்தான் அறிவீர்களா நீங்கள் 😏
உக்ரைன் சிப்பாய் தன் தாய்நாட்டுக்காய் தன்னை தற்கொலைகுண்டுதாரி ஆக்கிக்கொண்டான், பெருமையாக பகிர்ந்து கொண்டு இருக்குறீர்கள். -
தன் இனத்தின் விடுதலைக்காக ஒரு தலைமுறையே தங்களை தற்கொலைகுண்டுதாரிகள் ஆக்கிக்கொண்டு அழிந்து போனது 😏 கரும்புலிகள் பற்றி அறிவீர்களா நீங்கள்.
உக்ரைன் பெண்மணி வீதியில் நின்று ரஷ்ய சிப்பாயுடன் வாய்வாக்குவாதம் செய்தாளாம் 😂சிங்கபெண் என ஊடகங்கள் காட்டின
அப்படியானால் எங்கள் பெண்கள் தனிபடை அமைத்து ஆயுதம் ஏந்தி களத்திலேயே போராடினார்களே... உக்ரைன் பெண்கள் சிங்கபெண்கள் என்றால் அவர்கள் யாரு 😂
உக்ரைன் இளைஞர்கள் வயதுவந்தவர்கள் அனைவரும் போரிற்கு செல்கிறார்களாம் பெரும்பகட்டாக பாரட்டும் இந்த உலகநாடுகள் தான் -
நாங்கள் வீட்டிற்கு ஒருவரை போராட அழைக்க கட்டாய ஆட்சேர்ப்பு என பழித்துத்தீர்த்தது.
உக்ரைன் சிப்பாய் தன் மகளை பிரிந்து செல்லும் காட்சிகளை இணையத்தில் பார்த்து விட்டு கண்ணீர் வடிக்கிறீர்கள் ஆனால்
போர்முடிந்து பத்துவருடங்கள் களிந்தும் காணாமல் ஆக்கப்பட்ட தன் மகளையும், மகனையும், தந்தையையும் தாயையும் கேட்டு எம் மக்கள் வீதிகளில் அழுதுபுலம்பி திரிவதை அறியவில்லையா எவரும்...
உக்ரைனில் இருந்து வரும் சிறிய காயங்களுடன் பிளாஸ்ரர் ஒட்டப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருத்தம் தெரிவிக்குறீர்கள், இன்றும் கூகுளில் ஈழப்போரைத் தேடிப்பாருங்கள்.
கைகால்கள் பிளந்தும், முகம் சிதைந்தும், உடல்உறுப்புகள் வெளியே நொங்கியபடியும், நிர்வாணமாக இறந்தபடியும், அரைகுறைகளைந்த ஆடைகளுடன் கற்பளிக்கப்பட்டு இறந்தபடியும், நெருப்பில் எரிந்தும் பாதி கருகியும் கருகாமலும், பிணக்குவியல்களையும் பாருங்கள்...
அதைவிடவா இவை உங்களை மனவேதனை படுத்துகின்றன,
அங்கே ரஷ்யாவால் அழித்தொழிக்கப்பட்ட இராணுவத்தளங்களில் கருகிக்கொண்டிருக்கும் உடல்கள் அன்று எமது உறவுகளை பூவும்பிஞ்சுமாக குண்டுமழை பொழிந்து அழித்த MI 27 ரக போர்விமானங்களின் விமானிகளின் உடல்களாக கூட இருக்கலாம் மறந்து விடவேண்டாம்...
- இந்துஷாந் இளங்கோ - FB
  • Like 7
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Sasi_varnam said:

இது ஒரு கேடு கெட்ட. படிப்பறிவு இல்லாத.. சுத்த அயோக்கியத்தனம்!!!

இந்த படிப்பறிவில்லாத வேலையை செய்தற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

இந்த படிப்பறிவில்லாத வேலையை செய்தற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.

 

அண்ணை,

சசி உங்களைச் சொல்லவில்லையென்று நினைக்கிறேன்.

ஆனால், இது 2014 இல் ரஷ்ஷியா உக்ரேனை ஆக்கிரமித்தபோது, ரஸ்ஸிய உக்ரேன் மீது பாவித்த தேர்மொபேரிக் எனும் எரிவாயுதத்தினால் தாக்கப்பட்டு உடல் கருகி இறந்த உக்ரேனிய வீரர் ஒருவரின் உடலை, அயோக்கியத்தனமாக இன்று நடக்கும்போரில் கொல்லப்பட்ட ரஸ்ஸிய வீரர் என்று காட்டுகிறார்கள் . இதைத்தான் சசி சொல்கிறார்.

அடுத்தது அண்ணை, ஆனந்தபுரத்தில் தீபனும் இன்னும் பல தளபதிகளும் கொல்லப்பட்டபோதும் இதனையே பாவித்தார்கள். ஆனால், அப்போது இதனை இலங்கைக்குக் கொடுத்தது உக்ரேன் அல்ல. ரஸ்ஸியா. உங்களுக்கு வேண்டுமென்றால், இறுதியுத்தகாலத்தில் எமது ராணுவ ஆய்வாளர்கள் பலர் எழுதிய ஆய்வுகளைப் பாருங்கள். இதனை வழங்கியது ரஸ்ஸியா என்றும், இதனால் வரும் அழிவு எப்படிப்பட்டதென்றும் விரிவாக எழுதியிருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

இந்த படிப்பறிவில்லாத வேலையை செய்தற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.

 

மன்னிக்க வேணும் கு.சா அண்ணா. அந்த கருத்து உங்களை நோக்கி எழுதப்பட்டதாக எடுக்க வேண்டாம்.
எனது கருத்தை திருப்பி நான் வாசிக்கும் அப்படியான பிரதிபலிப்பு இருக்கத்தான் செய்கிறது.

இருந்தாலும் தூர நோக்கு இல்லாமல் தவறான கருத்துக்களை உருவாக்குபவர்களை  நோக்கியே எனது கோபத்தை வைத்தேன். இருந்தாலும் உங்கள் மனதை வேதனை படுத்தியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 
எனது கருத்தையும் திருத்தி பதிவிடுகிறேன்.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரஞ்சித் said:
23 minutes ago, Sasi_varnam said:

 

 

உங்கள் இருவருக்கும் இதயபூர்வமான வணக்கம்.🤜

உங்களுக்கு என் மன ஆதங்கத்தை சொல்கின்றேன் கேளுங்கள்.

இன்று நடக்கும் உக்ரேன் சண்டைகளையும் எமது 40 வருட போராட்டத்தையும் ஒப்பிட்டு பார்க்கின்றேன். நான் ரஷ்ய சார்பானவன் அல்ல....அதே நேரம் அமெரிக்க சார்பானவனும் அல்ல. காரணம் இரு துருவங்களும் தம் நலன் மட்டும் கொண்டவை. இங்கே குமாரசாமி ஆகிய நான் என் இன நலன் மட்டுமே எனக்கு முக்கியம்.எனது நாடு உலகில் மிகச்சிறிய நாடு. இருப்பினும் ஈழ மக்கள் அழிவும்/இழப்புகளும் பெரும் நாடுகளுக்கு நிகராகவே இருக்கின்றது.எனது நாட்டு சனத்தொகைக்கு எமது இழப்புகள் பெரியது. பெரிய நாடுகளின் சனத்தொகைக்கும் பெரிய தொழில்நுட்ப சண்டைகளுக்கும் அவை சிறியதாகவே எனக்கு தென்படுகின்றது.

நிற்க.....

புலம்பெயர் தேசங்களில் வாழும் நாமும் வீதியோரங்களில் இன அழிவிற்கான ஊர்வலங்களை நடத்தினோம்.பல கண்டன ஊர்வலங்களை நடத்தினோம்.பல பேரணிகளை நடத்தினோம்.கவனயீர்ப்பு நிகழ்வுகளை நடத்தினோம்.மழை,வெய்யில்,குளிர் பாராது துண்டு பிரசுரங்களையும் நாட்டு நிலைமைகளையும் விளக்கினோம்.ஏன் கடைசி நேரத்தில் கூட ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு விட்டது.எம் இனத்தை காப்பாறுங்கள் என மன்றாடினோம்.

கடைசியில் என்ன நடந்தேறியது??????

ஆனால்.....

மேற்குலகமும் ஏனைய நாடுகளும்  உக்ரேனுக்கு சார்பாக வரிந்துகட்டிக்கொண்டு நிற்பது எரிச்சலை தருகின்றது.மனிதாபிமானத்தை போதிப்பவர்கள் உக்ரேனுக்காக பணத்தையும் ஆயுத உதவிகளையும் வாரி வழங்குகின்றார்கள்.மக்கள் அழிவுக்கு ஆயுதம் தரமாட்டோம் என சொன்னவர்கள் இன்று உக்ரேனுக்கு ஆயுதம் கொடுக்கின்றார்கள். உக்ரேன் அகதிகளுக்கென இட வசதிகளும் செய்து விட்டார்கள். போலந்து உக்ரேன் நாட்டு எல்லையில் நேரடி ஒளிபரப்பில் அகதிகளை வரவேற்கிறார்கள்.ரஷ்ய இராணுவத்தின் உயிர் இழப்புகளை வெற்றியாக கொண்டாடுகின்றார்கள்.ஆனால் உக்ரேனில் இருந்து வெளியேறும் ரஷ்ய அகதிகள் பற்றி ஏதாவது காட்டுகின்றார்களா?

நேட்டோ எனும் போர்வையில் இவர்கள் எத்தனை நாடுகளை சீரழித்திருப்பார்கள்? அதையே இன்று ரஷ்யா உக்ரேனில் செய்கின்றது. அதை எவ்வளவு காட்சிகளாக காட்டி நாடகமாடுகின்றார்கள். அது தான் எரிச்சலை தருகின்றது.

நூற்றாண்டு காலமாக மேற்குலகம் மூன்றாம் உலக நாடுகளுக்கு செய்த  அட்டூளியங்களை பார்க்கும் போது ரஷ்யா உக்ரேனுக்கு பாடம் படிப்பதெல்லாம் தூசுக்கு சமன்.

 பொறுமையுடன் வாசித்தமைக்கு நன்றி 🙏

  • Like 8
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா-உக்ரேன் யுத்தம் ஆரம்பித்து ஐந்தே ஐந்து நாட்களில் உலகமே போராட்டம் செய்கின்றதாம்.

ஆனால் வருடக்கணக்காக இன விடுதலைக்காக சுயநிர்ணய உரிமைக்காக போராடும் இனங்களுக்காக மக்களுக்காக ஒரு வினாடிகளாவது சிந்தித்தீர்களா கேவலம் கெட்டவர்களே....

Frieden für die Ukraine": Zehntausende demonstrieren in Berlin gegen den  Krieg

Edited by குமாரசாமி
எழுத்துப்பிழை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை நடந்து கொண்டிருக்கும் ஐநா மனித உரிமை கூட்டத் தொடரில்  உக்ரேன் பிரச்சனை முன்னணி வகிக்கும். ஆகையால் எமது இன மனித உரிமை மீண்டும் பெட்டிக்குள் அடைக்கப்படும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உங்கள் இருவருக்கும் இதயபூர்வமான வணக்கம்.🤜

உங்களுக்கு என் மன ஆதங்கத்தை சொல்கின்றேன் கேளுங்கள்.

இன்று நடக்கும் உக்ரேன் சண்டைகளையும் எமது 40 வருட போராட்டத்தையும் ஒப்பிட்டு பார்க்கின்றேன். நான் ரஷ்ய சார்பானவன் அல்ல....அதே நேரம் அமெரிக்க சார்பானவனும் அல்ல. காரணம் இரு துருவங்களும் தம் நலன் மட்டும் கொண்டவை. இங்கே குமாரசாமி ஆகிய நான் என் இன நலன் மட்டுமே எனக்கு முக்கியம்.எனது நாடு உலகில் மிகச்சிறிய நாடு. இருப்பினும் ஈழ மக்கள் அழிவும்/இழப்புகளும் பெரும் நாடுகளுக்கு நிகராகவே இருக்கின்றது.எனது நாட்டு சனத்தொகைக்கு எமது இழப்புகள் பெரியது. பெரிய நாடுகளின் சனத்தொகைக்கும் பெரிய தொழில்நுட்ப சண்டைகளுக்கும் அவை சிறியதாகவே எனக்கு தென்படுகின்றது.

நிற்க.....

புலம்பெயர் தேசங்களில் வாழும் நாமும் வீதியோரங்களில் இன அழிவிற்கான ஊர்வலங்களை நடத்தினோம்.பல கண்டன ஊர்வலங்களை நடத்தினோம்.பல பேரணிகளை நடத்தினோம்.கவனயீர்ப்பு நிகழ்வுகளை நடத்தினோம்.மழை,வெய்யில்,குளிர் பாராது துண்டு பிரசுரங்களையும் நாட்டு நிலைமைகளையும் விளக்கினோம்.ஏன் கடைசி நேரத்தில் கூட ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு விட்டது.எம் இனத்தை காப்பாறுங்கள் என மன்றாடினோம்.

கடைசியில் என்ன நடந்தேறியது??????

ஆனால்.....

மேற்குலகமும் ஏனைய நாடுகளும்  உக்ரேனுக்கு சார்பாக வரிந்துகட்டிக்கொண்டு நிற்பது எரிச்சலை தருகின்றது.மனிதாபிமானத்தை போதிப்பவர்கள் உக்ரேனுக்காக பணத்தையும் ஆயுத உதவிகளையும் வாரி வழங்குகின்றார்கள்.மக்கள் அழிவுக்கு ஆயுதம் தரமாட்டோம் என சொன்னவர்கள் இன்று உக்ரேனுக்கு ஆயுதம் கொடுக்கின்றார்கள். உக்ரேன் அகதிகளுக்கென இட வசதிகளும் செய்து விட்டார்கள். போலந்து உக்ரேன் நாட்டு எல்லையில் நேரடி ஒளிபரப்பில் அகதிகளை வரவேற்கிறார்கள்.ரஷ்ய இராணுவத்தின் உயிர் இழப்புகளை வெற்றியாக கொண்டாடுகின்றார்கள்.ஆனால் உக்ரேனில் இருந்து வெளியேறும் ரஷ்ய அகதிகள் பற்றி ஏதாவது காட்டுகின்றார்களா?

நேட்டோ எனும் போர்வையில் இவர்கள் எத்தனை நாடுகளை சீரழித்திருப்பார்கள்? அதையே இன்று ரஷ்யா உக்ரேனில் செய்கின்றது. அதை எவ்வளவு காட்சிகளாக காட்டி நாடகமாடுகின்றார்கள். அது தான் எரிச்சலை தருகின்றது.

நூற்றாண்டு காலமாக மேற்குலகம் மூன்றாம் உலக நாடுகளுக்கு செய்த  அட்டூளியங்களை பார்க்கும் போது ரஷ்யா உக்ரேனுக்கு பாடம் படிப்பதெல்லாம் தூசுக்கு சமன்.

 பொறுமையுடன் வாசித்தமைக்கு நன்றி 🙏

வணக்கம் அண்ணா...
நீங்கள் சொல்லும் அதே மன ஆதங்கம் எங்களுக்கு மட்டும் இல்லாமலா போகும்?  

-28 கடும் குளிரில் தொடர்ந்து 2 மாதங்களுக்கு மேலாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை, ஒட்டாவா பாராளுமன்றம், டொரோண்டோ அமெரிக்க தூதுவராலயம், இலங்கை தூதுவராலயம், டி.வி, பத்திரிகை காரியாலயங்கள் 401 நெடுஞ்சாலை  இப்படி எல்லாம் அலைந்து திரிந்த நாட்களை மறக்க முடியுமா?
அவ்வளவு செய்தும் நீங்கள் சொல்லியது போல எங்களை இவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.  

உண்மை தான் !!!
இன்றுவரையிலும் சரியான காரணத்தை அறிந்தும் அறியாதவர்கள் போலவும், தெரிந்தும் தெரியாதவர்கள் போலவும்  இருக்கிறோமே ஒழிய  எப்படி இதை சரி செய்யலாம், இந்த நிலையில் இருந்து எப்படி மீள் எழுந்து வரலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு விட்டோம் என்றே நினைக்கிறேன்.
இன்று வரையிலும் எங்களின் வீரம், தியாகம் பற்றி எங்களுக்குள் பேசுகிறோமே தவிர எல்லோரும் ஒரு அணியாக திரள முடியாமல் ஒருவருக்கொருவர் சந்தேகக் கண்ணோடு, நீயா நானா போட்டியில் இருக்கிறோம்.

சரி; இதே உக்ரைன் நிகழ்ச்சியை உலகமே சேர்ந்து அணிதிரண்டு உதவும் பண்பை அவர்களுக்கே ஞாபகப்படுத்தி; ஏன் எமக்கு நடந்த அநியாயத்தை, எட்டா கனியாக இருக்கும் நியாயத்தை சுட்டிக்காட்டி அவர்களது மனக்கதவை மீண்டும் தட்டக்கூடாது? 

அதை நாங்கள் செய்யாமல் எங்கள் மனகிளர்ச்சியை தூண்டி, உணர்ச்சி பிழம்பாக்கி தவறான தகவலுடன் கவிதை எழுதி முகப்புத்தகம், வாட்ஸ்ஆப்பில் செய்தி போட்டு ஈழவிடுதலைக்கான "கடமையை" செய்யும் கூட்டமாகவே இருக்கிறோம்.

மேலும் தற்போதைய இந்நிலையில் எங்களுக்கான சாதக பாதகங்களை கதைக்கக்கூடிய வல்லுநர்கள் இருக்கிறார்கள் அதை அவர்கள் சொல்லட்டும். 

எம்மை பற்றி சர்வதேச ரீதியில் ஒரு திரைப்படம் எடுத்த மீரா மேத்தாவை, படத்தை பார்க்காமலே கருத்து சொல்லி கழுத்தறுத்து, இனி ஒருகாலமும் அவர்கள் எங்களை திரும்பியும் பார்க்காமல் இருக்கும்படி தேசிய உணர்வை காட்டிய  கூட்டம் நாங்கள்.  

இப்படி பல...சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த கோபத்தின் பிரதிபலிப்பு தான் என்னுடைய எழுத்து.

தவறு இருந்தால் மன்னித்தருள்க சாமியார்  

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

போலந்து, ரூமேனியா,கங்கேரி எல்லையில் ரஸ்யா படைகளை நிறுத்த  வேண்டும்.  

 

மிகவும் தவறான கருத்து ஓணாண்டியார் ... கொஞ்சம் தேடித்தான் பாருங்களேன் 

முடிந்தால் Netflix ~ Winter On Fire எனும் விவரணப்படம் (Documentary) ஒன்று உள்ளது தயவு செய்து முடிந்தால் பாருங்கள்.
அதன் பின்னர் உங்கள் புரிதலை எழுதுங்கள். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Sasi_varnam said:

வணக்கம் அண்ணா...
நீங்கள் சொல்லும் அதே மன ஆதங்கம் எங்களுக்கு மட்டும் இல்லாமலா போகும்?  

ஐயா! நூற்றுக்கு 90வீதமான புலம்பெயர் மக்கள் ஒரே கோட்டில் நிற்கின்றோம் என்பது யாவரும் அறிந்ததே. அதில் எங்களுக்குள் உக்ரேன் போன்ற சச்சரவுகள் வந்து போவதும் ஆரோக்கியமானதே.
 ஆனால் உள ரீதியாக என்னை நீங்களோ அல்லது ரஞ்சித்தோ நொந்து எவ்வித பலனுமில்லை.அதே போல் நானும் உங்களைப்போன்றவவர்களை நொந்தும் எவ்வித பலனுமில்லை.

காரணம் நாம் பிறந்த மண்ணில் இன்று கட்டிக்காத்து வழியமைக்க பலமான அத்திவாரம் இல்லை. எல்லாம் போலி அரசியல்.நாம் இங்கிருந்து கத்தி என்ன பலன்?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்கா சூழ்ச்சியால் உருவானதே உக்ரைன் நெருக்கடி!
-ச.அருணாசலம்
February 25, 2022
உக்ரைன் மீது ரஷ்யா படை போர் தொடுத்தது என்று மேற்கத்திய நாடுகளும், ஊடகங்களும் ரஷ்யாவை குற்றம் சாட்டுகின்றன! அப்படியானால், உக்ரைனில் உள்ள ஒரு பகுதி மக்கள் ரஷ்யாவை ஏன் வரவேற்கிறார்கள்? அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் விரித்த வலையில் எப்படி வீழ்ந்தது உக்ரைன்? அவர்களின் சூழ்ச்சி என்ன?
 
இந்தச் சூழலில், உக்ரைனின் இனப்படுகொலையைத் தடுக்கவே இந்த ராணுவ நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம் ; நாங்கள் ஒருபோதும் உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கப் போவதில்லை‘ என்று ரஷ்யா கூறியுள்ளது கவனிக்கத்தக்கது!
 
ஒரு வகையில்,இந்தச்சூழல் நமக்கு வங்க விடுதலையை நினைவூட்டுகிறது. ஏனெனில், அன்று வங்க தேச மக்களை பாக். ராணுவப்படுகொலையினின்றும் காப்பாற்ற இந்தியா முனைந்தது. இந்திய அரசை அன்று ஆக்கிரமிப்பாளர்கள் என்று பாக். குற்றஞ்சாட்டியது. இந்தியாவை பயமுறுத்த அன்று அமெரிக்கா கடற்படையை வங்காள விரிகுடாவிற்கு அனுப்பியது. இந்திய படைகள் கிழக்கு பாக்.கில் நுழைந்தவுடன் இந்தியாவிற்கு எதிரான பொருளாதாரத்தடைகளை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஏற்படுத்தியதை நாம் மறக்க இயலாது.
 
கடந்த எட்டு வருட காலமாக நேட்டோவின் கிழக்கு நோக்கிய ஆபத்தான விரிவாக்கத்தை செய்து வந்தது அமெரிக்கா!, மேற்கு ஐரோப்பிய–ரஷ்ய பொருளாதார கூட்டுறவையும் , வணிகத்தையும் மேம்படுத்த ரஷ்யா எடுத்த சமரச முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையானது அமெரிக்கா! உக்ரைனில் ரஷ்ய மொழிபேசும் மக்கள் படும் அடக்குமுறைகளையும், ,வேதனைகளையும் பொதுவெளிக்கு கொண்டு வரும் போதோ அதை “பொய்யான பரப்புரை” என்று அமெரிக்க புறம் தள்ளியது. இன்றோ, ரஷ்யாவை போர் தொடுக்கும் வில்லனாக சித்தரித்து உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறது.
 
தற்போது, ரஷ்யா நாட்டின் பாதுகாப்பை கேலிகூத்தாக்கும் விதமாக மேற்கத்திய நாட்டைச்சேர்ந்த அன்னிய துருப்புக்கள், ஏவுகணைகள் இன்று உக்ரைனில் குவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் மொத்த மக்கள் தொகையான 4.41 கோடியில் ரஷ்ய மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை 1.8 கோடியாகும் ; இவர்கள் வாழும் டானெட்ஸ்க் மற்றும் லுகானஸ்க் பகுதி எல்லைகளில் கிட்டத்தட்ட 1,25,000 போர்வீர்களை உக்ரைன் அரசு குவித்துள்ளது . மேலும், ரஷ்ய மொழி பேசும் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் பல வருடங்களாக மறுக்கப்பட்டு அடக்குமுறைக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டனர். இப்பகுதிவாழ் மக்களுக்கு ‘தனி அந்தஸ்து‘ Special Status வழங்கி, அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று 2014ம் ஆண்டே மின்ஸ்க் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
 
ஆனால், இன்றுவரை எட்டு ஆண்டுகள் கழிந்தும் அவை நிறைவேற்றப்படவில்லை, உக்ரைன் ஆட்சியாளர்களும் ‘பன்டேராஸ்‘ என்றழைக்கப்படும் உக்ரைன் பாசிஸ்ட்களும் அம்மக்களை அழித்தொழிப்பதில் குறியாக உள்ளனர்; இதை கண்டிக்க முயலாத அமெரிக்கா இவர்களை பயன்படுத்தி ரஷ்யாவை பலவீனப்படுத்தலாம் என்ற நப்பாசையில் அவர்களுக்கு உதவ போர்தந்திர நிபுணர்களையும் , ராணுவ தளவாடங்களையும், பண உதவிகளையும் அளித்து வருகிறது.
 
1.8 கோடி ரஷ்ய மொழி பேசும் மக்களில் சுமார் 6 லட்சம் மக்கள் ரஷ்ய குடியுரிமை பெற்றவர்கள் என்பதை கவனத்தில் கொண்டால் , டான்பாஸ் பகுதிகளான டானெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் குடியரசுகளை ரஷ்யா அங்கீகரித்ததன் காரணம் விளங்கும்! கடந்த எட்டு வருடங்களாக மின்ஸ்க் ஒப்பந்தத்தை அமுலுக்கு கொண்டுவர போராடி எந்த பலனும் கிடைக்காத போது அம்மக்கள் பிரிவினை நோக்கி நகர்ந்ததில் வியப்பில்லை. அதனால் தான் ரஷ்ய தலையீடை ஆதரிக்கின்றனர்.
 
ஆனால், அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் இதைப்பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் நேட்டோவை விரிவு படுத்துவதிலும் ரஷ்யாவை அச்சுறுத்தி மண்டியிட வைப்பதையே குறிக்கோளாக கொண்டு காய்களை நகர்த்தினர் .
சோவியத்யூனியன் சிதையுண்டதோடு, வார்சா உடன்படிக்கையும் காலாவதி ஆகிவிட்டது.
ஆனால், இன்றுவரை நேட்டோ ( North Atlantic Treaty Organisation) கூட்டமைப்பு மட்டும் இன்றும் தொடர்வது ஏன்? என்ற வினா உலகெங்கிலும் குறிப்பாக ஐரோப்பாவில் எழுப்பபடுகிறது, இதற்கு பதிலளிக்க அமெரிக்காவிற்கோ, பிரிட்டனுக்கோ நேர்மையில்லை!
ஆனால், இன்று நேட்டோ கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் – முந்தைய சோவியத் குடியரசு நாடுகள்– தன் வளையத்திற்குள் கொண்டு வருகிறது, அதற்கு இடையூறாக இருக்கும் ஆட்சியாளர்களை கவிழ்பதிலும் குறியாக உள்ளது. இத்தகைய போக்கு ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பில் பெரும் ஓட்டையை ஏற்படுத்தியுள்ளது.
 
அனைத்து ஐரோப்பிய நாடுகளின்– ரஷ்யா உட்பட அனைவரின்– நலன்களை கவனத்தில் கொண்டு பாதுகாப்பு சமனை ஏற்படுத்தாமல் ஒருதலை பட்சமாக ரஷ்யாவிற்கெதிரான ஒரு கட்டமைப்பை அமெரிக்கா ஏற்படுத்துகிறது. அது மட்டுமின்றி முழு ஐரோப்பா கண்டத்தையும் பாதுகாப்பு மற்றும் சந்தை கட்டமைப்புகளில் உட்படுத்தி தனது ஆதிக்கமே அங்கு (ஐரோப்பாவில்)நிலைக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலையாகும் .
ஐரோப்பா சுதந்திரமாக செயல்படுவதையோ, தங்கள் தலைவிதியை தாங்களே நிர்ணயித்துக் கொள்வதையோ அமெரிக்கா விரும்பவில்லை என்பது வெளிப்படையான உண்மை! . பைடன் ஆட்சிக்கு வந்த பின்னர், ‘அமெரிக்க தலைமை‘ என்பது தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதன் அர்த்தம் ஐரோப்பா எரிசக்தி தேவையில் தன்னிறைவு அடைவதை தடுப்பதும், ராணுவ கட்டமைப்புகளை பலப்படுத்தும் போர்வையில் அமெரிக்காவின் ராணுவ தளவாட விற்பனை சந்தையாக ஐரோப்பாவை மாற்றுவதும் தான்.
 
ரஷ்யாவின் நார்டுஸ்ட்ரீம் 2 இயற்கை எரிவாயு குழாய் கட்டமைப்பை அழித்துவிட்டு, விலை கூடுதலான அமெரிக்க திரவ எரிவாயுவின் -Liquified Natural Gas- மீதான சார்புத்தன்மையை நிலைநிறுத்தி, கொள்ளை லாபம் அடிக்க அமெரிக்கா முனைவது அனைவரும் அறிந்ததே! இந்த சூட்சும்ம் ரஷ்ய அதிபர் விளாதமிர் புடீனுக்கு நன்கு தெரியும்!
இதன்விளைவாகத்தான் உக்ரைன் நாட்டையும், மக்களையும் பலிகடாவாக்கி, ரஷ்யாவை போர்குழிக்குள் தள்ளுவதன் மூலம் ரஷ்யாவை பலவீனப்படுத்தி ஐரோப்பாவின் ஒரே தலைவனாக,ஆபத்பாந்தவனாக தன்னை நிலைநிறுத்த அமெரிக்கா முயல்கிறது.இந்த கூக்குரல்கள்,முன்னேற்பாடுகள் அனைத்தும் அதை நோக்கியே நகருகின்றன.
பொருளாதாரத் தடைகள் மூலம் ரஷ்யாவை சீர்குலைப்பதும், ஐரோப்பிய சந்தையை தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதும் அமெரிக்க நோக்கம் . இதற்கு உக்ரைன் ஒரு பகடைக்காய் ஆகவும் ,ரஷ்ய மொழி பேசும் மக்கள் பலிகடாக்களாகவும் உக்ரைன் ஆட்சியாளர்களும் பன்டேராஸ் கும்பலும் அமெரிக்க கைக்கூலிகளாக இயக்கப்படுகின்றனர்.
இதற்கு ஆதரவாக கட்டவிழ்த்து விடப்படும் பிரச்சாரக் கூச்சலில் ஒன்றுதான் ரஷ்யாவை ஆக்கிரமிப்பாளராக சித்தரிப்பதாகும் .இரண்டாம் உலகப்போருக்குப்பின் நாடுகளின் எல்லைகளை ரஷ்யாதான் முதலில் மீறுகிறது என்று கூச்சலிடும் இந்த மேதாவிகள் யுகஸ்லோவியா சிதைக்கப்பட்டு துண்டாடப்பட்ட போது எங்கிருந்தனர் ? அப்பொழுது யுகஸ்லாவாவிய தேச எல்லைகள் மாற்றப்பட வில்லையா,மீறப்படவில்லையா?
செர்பியா, குரோஷியா,போஸ்னியா என்ற பல கூறுகளாக சிதைக்கப்பட்ட பின்பும், எவர் பேச்சையும் கேட்காமல் செர்பியாவிலிருந்து கொசோவோ பிரித்தெடுக்கப்பட்டதே! அப்பொழுது இந்த கேள்வி கேட்கப்படவில்லை. ஏனெனில், இதை முன்னின்று செய்ததே அமெரிக்காதான்!
 
இன்று ரஷ்ய மொழி பேசும் மக்கள் பகுதிகளை (டானெட்ஸ்க், லுகான்ஸ்க்) ரஷ்யா அங்கீகாரம் செய்தவுடன் , ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து முடக்க முனைகிறது. உலக நாடுகளை தன்பக்கம் இழுக்க தன் அனைத்து வலிமைகளையும்–படை,பண,ஊடக மற்றும் பிரச்சார– கட்டவிழ்த்து விட்டுள்ளது. இத்தகைய முயற்சிக்கு ஐ.நா சபையும் அமெரிக்காவுக்கு துணைபோகிறது.
 
கோணங்களும் பார்வைகளும்!
ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டுமா என்ற கேள்வி எழும் இந்நேரத்தில் இதற்கு மாற்று என்ன? என்ற கேள்வியும் எழுகிறது.
இந்திய அரசின் அறிக்கையில் ரஷ்ய நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை, ஐ. நா ஓட்டெடுப்பிலும் இந்தியா கலந்து கொள்ளவில்லை. ரஷ்யாவிற்கும், நேட்டோ அணிக்கும் இடையிலான வேறுபாடுகளை “உண்மையான மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்கப்பட வேண்டும் ” என்று இந்தியா நம்புகிறது என்றுள்ளது. பிரதமர் மோடியும் இதையே வலியுறுத்தி உள்ளார்!
 
சீன நாடோ, உக்ரைன் விவகாரம் பல கோணங்கள உள்ளடக்கியது, சரித்திர கூறுகளை உள்ளடக்கிய இவ்விவகாரத்தில் ரஷ்யாவின் நியாயமான பாதுகாப்பு கவலைகளை சீனா புரிந்து கொண்டுள்ளது. இன்றைய நடவடிக்கை மேற்கத்திய நாடுகளின் இடையறாத தாக்கத்தின் எதிர்வினையே என்று கூறியுள்ளது. ரஷ்யாவை எந்த இடத்திலும் கண்டனம் செய்யாத சீனா பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டது.
 
இந்தியாவும் சீனாவும் எதிரும் புதிருமாக இருந்தாலும் இந்த விஷயத்தில் ஏறத்தாழ ஒரே மாதிரி நிலையை எடுத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.
போதும் இந்தக் கொடுமைகள்! போரை நிறுத்த தீர்வு என்ன?
உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்கிறதா? அமெரிக்கா ஆபத்பாந்தனா?
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை என்ன விளைவை ஏற்படுத்தும் என்று இப்பொழுது நம்மால் கணிக்க முடியாவிட்டாலும் இதனுடைய தீர்வு என்பது ஒரு நியாயமான, நேர்மையான நீடிக்க கூடிய தீர்வாக ஐரோப்பாவில் அமைய வேண்டுமெனில், அதற்கு ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் நலன்களை பாதிக்காத அணுகுமுறையே தீர்வாகும்!
 
ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மாக்ரோன் ” ஐரோப்பாவின் சுதந்திரம் மற்றும் சுயாதீனம் என்பது ரஷ்ய நலன்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் . நேட்டோ என்பது மூளைச்சாவு (Brain Dead) அடைந்த ஒரு அமைப்பு. ஐரோப்பா ஒரு சுயாதீனமான சார்பற்ற அரசியல் அதிகாரமாக உருவெடுக்க வேண்டுமெனில், அது தனது தலைவிதியை தானே நிர்ணயிக்க வேண்டும், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்க வேண்டும். முந்தைய சோவியத் நாடுகளின் கவலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் ” என்று ஆணித்தரமாக கூறுகிறார் . பழைய பஞ்சாங்க பனிப்போர் (Cold War) மனநிலை இனி உதவாது என்பதை இதைவிட தெளிவாக யாரால் கூறவியலும்?
 
கட்டுரையாளர்;ச.அருணாசலம்
fb
 
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒரு படமே போதும் ஆயிரம் கதைகள் சொல்ல.....

Bild

Hypocrisy of the west..

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

தற்போது, ரஷ்யா நாட்டின் பாதுகாப்பை கேலிகூத்தாக்கும் விதமாக மேற்கத்திய நாட்டைச்சேர்ந்த அன்னிய துருப்புக்கள், ஏவுகணைகள் இன்று உக்ரைனில் குவிக்கப்பட்டுள்ளது.

இது உண்மை அல்ல நான் அறிந்தவரையில், தேடிய வரையில், இன்று வரைக்கும் அந்நிய துருப்புகள் உக்ரைனில் குவிக்கப்படவில்லை. அவர்கள் யுத்தத்தை அவர்கள் தான் செய்கிறார்கள். பெருமளவு ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருக்கும் உக்ரேனியர்கள் தங்கள் நாட்டு யுத்தத்தில் பங்கு கொள்ள விருப்பமாக உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகு போரை நிறுத்த முயற்சிக்கவில்லை,போரை தீவிரமாக்கும் முயற்சியிலே ஈடுபடுகிறது.
உக்கிரேனுக்கு ஆயுத உதவிகளை கொடுத்து இரஸியாவின் போர் உபகரணங்களை ஆய்வு செய்கிறது, போரை நிறுத்த இரஸ்சியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் அல்லது, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்கிரேனை இணைத்தால் போர் முடிவுக்கு வரலாம். 

ஆனால் மேற்குலகு இந்த போரை மறைமுகமாக ஆதரிக்கின்றது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு  (மேற்குலகுக்கு) சந்தோசம். 

உக்கிரேன் அழிவின் விளிம்பில் உள்ளது, இந்த போரை உடனடியாக நிறுத்தாவிட்டால் உக்கிரேன் அப்பாவி பொது மக்களின் உயிரும் அவர்களது சுதந்திரமும் இந்த போரில் பலியாகப்போகிறது.

இரஸ்சியாவின் நிலை அதை விட மோசம், பொருளாதார அடிப்படையில் இலங்கையை விட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உலக பொருளாதாரமும் பெரிய பாதிப்பினை எதிர்கொள்ளும், அவுஸ்திரேலியாவில் உள்ள மிகப்பெரிய வங்கியான கொமன் வெல்த் வங்கி தனது சீன வங்கியில் இட்டிருந்த முதலீட்டினை பெருமளவில் குறைத்துள்ளது, நாடுகளின் உலகலாவிய சொத்து முடக்கம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாகவிருக்கலாம், ஆனால் வேறு சாக்கு போக்கு கூறி தமது முதலீடுகளை உலகலாவிய அளவில் மட்டு படுத்துகிறார்கள்.

உக்கிரேன் தனது இறுதித்தருணத்தில் நிற்கின்றது, எமது மக்கள் எப்போதும் பாதிக்கப்படும் மக்கள் பக்கமே இருப்பார்கள், அதனால்தான் இரஸ்சியாவையும் ஆதரிக்கிறார்கள் (மேற்குலகின் நியாமற்ற நடவடிக்கையால்), ஆனால் இப்போது எமது மக்கள் அனைவரும் ஒன்றாக அழிவின் விளிம்பில் உள்ள உக்கிரேனையே ஆதரிப்பார்கள், இவ்விடயத்தில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது,

  • Like 5
Link to comment
Share on other sites

TweetSee new TweetsConversationDefence of Ukraine@DefenceU“President Zelenskyy announced creation of a new unit named "International Legion".We already have thousands requests from foreigners, who want to join the resistance to the 🇷🇺 occupiers and protect the world security from Putin regime"-Hanna Maliar - Deputy Minister of Defence

 
 
 
 
 
 
IVrAYLGj_bigger.jpg
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2022 at 08:11, கிருபன் said:

நாங்கள் தாராளவாத ஜனநாயகத்திலும், மனிதவுரிமைகளிலும் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனாலும் ஒரு பேரரசைக் கட்டியெழுப்பி தமது பழைய மதிப்பை திரும்பவும் எடுத்துக்கொள்ள சர்வாதிகாரியாக செயற்படும் ரஷ்ய அதிபர் புட்டின் மீது பேரபிமானமும் கொண்டவர்கள். அவர் தன்னை கட்டுக்கடங்காத ஒரு பெருவீரனாகக் காட்ட எத்தனை பேரைப் பலிகொண்டாலும், கொல்லப்படும் மக்கள்மீது எதுவித அனுதாபமும் எமக்கு வராது.

நூறு வீதம் உண்மையை சொன்னீர்கள்
மேற்குலக நாடுகளில் குடியேறிய மேற்குலகின் சுதந்திரங்களை அனுபவித்து வரும் ஈழத்து மனித உரிமை புரட்ச்சியாளர்கள் ரஷ்யா சர்வாதிகாரி புரினுக்கு தீவிர ஆதரவு கொடுத்து வருகிறார்கள். புரின் மீது உள்ள கவர்ச்சியினால் ரஷ்யா படைகளுடன் சேர்ந்து இவர்களும் உகிரைனை தாக்குவதற்கு போருக்கு புறப்பட்டுவிடுவார்களோ  என்று தான்  கவலையாக உள்ளது 😭

 

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விளங்க நினைப்பவன் said:

நூறு வீதம் உண்மையை சொன்னீர்கள்
மேற்குலக நாடுகளில் குடியேறிய மேற்குலகின் சுதந்திரங்களை அனுபவித்து வரும் ஈழத்து மனித உரிமை புரட்ச்சியாளர்கள் ரஷ்யா சர்வாதிகாரி புரினுக்கு தீவிர ஆதரவு கொடுத்து வருகிறார்கள். புரின் மீது உள்ள கவர்ச்சியினால் ரஷ்யா படைகளுடன் சேர்ந்து இவர்களும் உகிரைனை தாக்குவதற்கு போருக்கு புறப்பட்டுவிடுவார்களோ  என்று தான்  கவலையாக உள்ளது 😭

 

நான் நினைக்கின்றேன் இங்கே யாரும் புட்டினுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என.....
மாறாக...... உலகில் எத்தனையோ மனித அழிவுகளும் சண்டைகளும்  ஆக்கிரப்புகளும் வந்த போது கிளர்ந்தெழாத சமூகங்கள் ஏன் பத்து நாட்களே ஆகாத உக்ரேன் சண்டைக்கு மட்டும்  புத்துணர்ச்சியுடன்  நடு வீதிக்கு வந்துள்ளது என்பதேயாகும்? இங்கே ஊடகங்களின் வலிமை என்ன? அரசியலின்   பங்களிப்பு என்ன?

என்னைப்போன்றவர்களின்  பல ஆதங்கங்கள் ரஷ்ய ஆதராவாக தெரிந்தால் விளங்கிக்கொள்பவர்களில் தவறு இருக்கின்றது. சரி செய்து கொள்ளவும்.:cool:

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

உக்கிரேனுக்கு ஆயுத உதவிகளை கொடுத்து இரஸியாவின் போர் உபகரணங்களை ஆய்வு செய்கிறது, போரை நிறுத்த இரஸ்சியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் அல்லது, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்கிரேனை இணைத்தால் போர் முடிவுக்கு வரலாம். 

ரசியா நேரடியாக சண்டையில் இறங்கியதால் என்னென்ன புதிய ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள் அவர்களது பலம் என்ன?இவைகளை அறியத்தான் அமெரிக்காவும் மேற்கும் இந்தப்பாடு.

ரசியாவில் 9 வீதமாக இருந்த வட்டிவீதம் 20க்கு போட்டுது என்கிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and big cat

ஒரு சாதாரண  உக்ரைன் அரசுக்கு... மரியாதை கொடுத்து,
பேச்சு வார்த்தைக்கு அழைத்தால்... புதுப் பணக்காரனுக்கு வரும் திமிர் போல, 
உக்ரேனியர்கள் நடந்து கொள்கிறார்கள். 

இதுவரை புடின் காட்டியது வெறும் "ரயல்"தான். 
சிங்கத்தை... நேட்டோவை வைத்து, தொடர்ந்து சீண்டினால்... 
கதையை, சுத்தமாக முடித்து விடுவார். 😜 😛 😂

செந்தூர் தமிழ்

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நம்முடைய ஈழத்து அரை அம்பிகள் தமிழகத்து முழுஅம்பிகளை விட ஒரு படி மேலே சென்று உக்ரேன் பிரச்சனையில் அமெரிக்காவை கதாநாயனாக்கி ரசியாவை வில்லனாகச் சித்தரிக்க படாத பாடு படுகிறார்கள்.
அடே முட்டாள் அம்பிகளா! வில்லனே அமெரிக்கா தான்‌ரா!
அமெரிக்க கோதுமையையும் எரிவாயுவையும் விட ரசிய கோதுமையும் எரிவாயுவும் மலிவானவை.அமெரிக்க கோதுமையும் எரிவாயுவையும் வாங்க வைக்க வேண்டும் என்ற நிர்பந்ததை உருவாக்க வேண்டும் என்றால் ரசியாவை போர் செய்ய வைத்துப் பொருளாதார தடை விதிக்க வேண்டும்.இந்தப் பொருளாதார தடையால் பாதிக்கப்படப் போவது ரசியாவோ ரசிய மக்களோ அல்ல.அம்பிகளான நீங்கள் உட்டபட உலக மக்கள் தான்.எரிவாயவும் கோதுமையும் விலையேற அனைத்து உற்பத்திப் பொருட்களுக்கான விலைகளும் ஏற்றப்படும்.ரசியாவால் தான் இந்த விலையேற்றம் நடந்ததாக நீங்கள் நம்ப வைக்கப்படுவீர்கள்.அதாவது சதாம் ஹு சைன் அணுவாயுதம் வைத்திருக்கிறார் என்று கூறி அவரையும் அழித்து ஈராக்கையும் நாசப்படுத்தியை நீங்கள் நம்பியைதைப் போல...
அடுத்து உக்ரேனிய அரசுத்தலைவர் ஒன்றும் மாகா உத்தமர் கிடையாது.அவர் ஒரு அப்படமான இனவாதி நியோ நாசி என்று கூறச் சொல்லலாம்.ரசிய மொழி பேசும் டன்பாஸ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஈழத்தில் கோத்தபாய செய்ததைப் போல ஈவிரக்க மின்றி ஒடுக்கியவர்.18 ஆயிரம் மக்களைப் படுகொலை செய்தவர்.
இந்த மக்களுக்கு உரிமைகளை வழங்கப்பட வேண்டும் என்பதை ‌ஜேர்மன் பிரான்ஸ் நாடுகளின் மத்தியஸ்துவத் தோடு செய்யப்பட்ட உடபடிக்கைளை துாக்கி வீசியவர்.
நம்முடைய கோத்தபாய அண்ணாச்சி சீனாவை கொண்டு வந்து நெடுந்தீவு பிரதேசத்தில் காலுான்ற வைக்க முயற்சி செய்ததைப் போல் உக்ரேன்அரசுத்தலைவர் விலாதிமீர் செலோன்கி உலக பொலிசுக்காரரரை இந்தப் பிரதேசத்தில் காலான்ற வைத்து ரசியாவை அச்சுறுத்தி டன்பாஸ் மக்களின் உரிமைப் போராட்டத்தை முற்றாக நசுக்க திட்டமிட்டவர்.அம்பிகளா ரசியா ஒன்றும் இப்போது கெம்யுனிச நாடில்லலை. அது 10 பெரு முதலாளித்துவ குடும்பங்களால் மறைமுகமாக ஆளுமை செய்யப்படுகிற ஒரு முதலாளித்துவ நாடு.
ஆனால் இந்தியாவைப் போல நம்பவைத்து கழுத்தறுக்கும் நாடில்லை.
கடந்த 3 நாள் போரில் 193 பொதுமக்கள கொல்லப்பட்டிருப்பதாக உக்ரேன் அரசு அதிகார பூர்வமாக அறிவித்திருக்கிறது.
உங்கள் பெரியண்ணனமார் லிபியா சிரியா ஈராக் ஈழம் முதலான நாடுகளில் நடத்திய ஒரு நாள் போரில்
எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.எத்தனை குழந்தைகள் அதில் அடங்கியருந்தார்கள் என்பதை ஒரு கணம் மீட்டுப் பார்த்தீர்கள் என்றால் போர் வெறியர்கள் யார் என்பது உங்களுக்குப் புரியும்.
கொரோனா நெருக்கடிக்குள் பொருளாதார இழப்பை நீங்கள் சந்தித்திருக்கும் நேரத்தில் உங்கள் வருமானத்தைக் கூட்டாமல் பொருட்களின் விலையைக் கூட்டினால் வேலை நிறுத்தம் போராட்டம் ஆர்பாட்டம் என்று துள்ளிக் குதிப்பீர்கள். போரைத் திணித்து விலையைக் கூட்டினால் நிங்கள் நீதி நியாயம் பேசி மனித உரிமைகள் என்றெல்லாம் பேசி அதில் முடங்கிப்போய்விடுவீர்கள்.இது தான்டா அம்பிகளே நீங்கள் நம்புகிற முதலாளித்துவ ஜனநாயகம்.
 

சிவா சின்னப்பொடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:
அடுத்து உக்ரேனிய அரசுத்தலைவர் ஒன்றும் மாகா உத்தமர் கிடையாது.அவர் ஒரு அப்படமான இனவாதி நியோ நாசி என்று கூறச் சொல்லலாம்.ரசிய மொழி பேசும் டன்பாஸ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஈழத்தில் கோத்தபாய செய்ததைப் போல ஈவிரக்க மின்றி ஒடுக்கியவர்.18 ஆயிரம் மக்களைப் படுகொலை செய்தவர்.
இந்த மக்களுக்கு உரிமைகளை வழங்கப்பட வேண்டும் என்பதை ‌ஜேர்மன் பிரான்ஸ் நாடுகளின் மத்தியஸ்துவத் தோடு செய்யப்பட்ட உடபடிக்கைளை துாக்கி வீசியவர்.

சிவா சின்னப்பொடி ஐயா இந்தக் குறிப்பில் ரஷ்யாவின் சர்வாதிகாரி பூட்டினது ரஷ்யப்படையினரால் கொல்லப்படும் உக்கிரேனியப் பொதுமக்கள் மீது ஒரு சொல் அனுதாபமும் காட்டவில்லை. உக்கிரேனியர்கள் அனைவரும் நியோநாஜிகள் என்று பூட்டின் சொல்லுவதை முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கின்றார் போலிருக்கின்றது. 

மேலே மேற்கோளில் உள்ளவை உண்மையென்று நம்ப பாட்டாளிவர்க்கத்தின் சோஷலிஸ ஆட்சி ரஷ்யாவில் நிலவுவதாகவும், அதை கட்டிக் காக்கும் பூட்டின் மீது பேரபிமானம் உள்ள ஒருவராலும்தான் முடியும். 

மேற்கத்தைய “ஜனநாயகம்” வெள்ளைத்தோலும் நீலவிழியினருக்கும் சார்பானது. முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தின் மூலம் உலக நாடுகளின் வளங்களை சூறையாடுபவர்களுக்கு ஆதரவானது. ஆனால் ரஷ்யாவும் பூட்டினும் அதே முதலாளித்துவ வர்க்கத்தைத்தான் சேர்ந்தவர்கள்.   எனினும் மக்களுக்கு பேச்சுச் சுதந்திரம், ஆர்ப்பாட்டம் செய்யும் சுதந்திரம் கொடுக்காமல் ஒடுக்கி வைத்திருக்கின்றனர். அதையேதான் உக்கிரேனை முழுமையாக ஆக்கிரமித்தபின்னர் உக்கிரேனிய மக்களுக்கும் செய்யப்போகின்றனர். 

 

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்/ஊடகங்களின் உண்மைத்தன்மை

Bild

Bild

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.